Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரத்தனபுரியில் தமிழர்கள் மீது சிங்களக் காடைகள் தாக்குதல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Ratnapura_02.jpg

இரத்தினபுரி குக்குகல என்ற தமிழர்கள் அதிகமாக வாழும் பெருந்தோட்டத்தில் சிங்கள இனத்தை சேர்ந்த காவலாளி ஒருவர் கொலை செய்யப்பட்டமையை அடுத்து தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெற்று வருகின்றன.

எரபத்த, குக்குல்கல 20 மற்றும் உடதேல ஆகிய தோட்டங்களில் உள்ள சுமார் 20 தமிழர்களின் வீடுகள் நேற்றும் நேற்று முன்தினமும் எரிக்கப்பட்டுள்ளன

கடந்த சனிக்கிழமையன்று காணாமல் போன சிங்கள காவலாளி, நேற்று முன்தினம் சடலமாக மீட்கப்பட்டார்.

இதனையடுத்து சிங்களவர்கள் குக்குல்கல தோட்டத்தில் உள்ள தமிழர்களின் வீடுகளை தாக்கியுள்ளனர்.

இதன் காரணமாக தமிழர்கள் இரவோடிரவாக தமது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதனையடுத்து தமிழர்களின் வீடுகளில் உள்ள உடமைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

- பாரிஸ்தமிழ் இணையம்.

-------------------------------

Tension in Ratnapaura following attack on Upcountry Tamils

[TamilNet, Wednesday, 15 September 2010, 08:18 GMT]

More than 100 Upcountry Tamil families were displaced after Sinhalese estate workers burnt their houses and properties in Kiribatgala rubber plantation in Nivithigala in Ratnapura district Monday night. The attack on Tamils comes following the killing of a Sinhala estate watcher who was found dead Monday after being abducted by unidentified persons Sunday night. Tension prevails between in the district following the outbreak of the violence. Tamils in the district complain that they have been increasingly targeted by Sinhala mobs in recent times.

Ratnapura

Two houses of upcountry Tamils were burnt down and several houses were looted by gangs led by the attackers.

Over 200 persons belonging to the Tamil families living in Dela division in the Kiribatgala estate has taken refuge in the neighbouring estates.

Tamils in the area have been subjected to threats for a long time.

Sinhala hoodlums in Rakwana town in the district have been targeting Tamil women who return home after work in garment factories, and rob them of their gold jewelry and other valuable articles. At least ten such incidents were reported throughout the past 4 years.

Three years ago, in February 2007, seven houses of Tamils were allegedly burnt down by a Sinhala mob.

Tamil passengers in a bus were severely assaulted by a group of Sinhalese in December 2006 in the Sinhala town of Nivitigala.

In April 2006, Sinhala attackers destroyed 84 housing units of Tamil plantation workers in Bambegama Estate in the district.

In mid 2006, Tamil workers in Depidin estate in Rakwana were intimidated and warned.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
srilanka.jpgஇரத்தினபுரி, நிவித்திகலைப் பொலிஸ் பிரிவிலுள்ள தோட்டம் ஒன்றில் தமிழர்களின் குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றும், அச்சம் காரணமாக தமிழ்க் குடும்பங்கள் இடம் பெயர்ந்து வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. நிவித்திகலையிலுள்ள தேல குக்குலகலைத் தோட்டத்தைச் சேர்ந்த பெரும்பான்மையினக் காவற்காரர் ஒருவர் கரவிட்ட திமியாவ என்னுமிடத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இந்தத் தோட்டத்தைச் சேர்ந்த இரண்டு வீடுகள் தீக்கிரைக்கப்பட்டன எனவும் பத்துக்கும் மேற்பட்ட வீடுகளிலிருந்து பொருள்கள் சூறையாடப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகிறது. குக்குலகல பகுதியிலுள்ள பெரும்பான்மையினத் தோட்டக்காவலர் ஒருவர் கடந்த சனிக்கிழமை காணாமல் போனதைத்தொடர்ந்து அவர் திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இந்தத் தோட்டத்திலுள்ள தமிழர்களின் வீடுகள் தாக்கப்பட்டுள்ளன. இதேவேளை குறித்த தோட்டத்தின் மேற்பிரிவில் இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற கைகலப்புச் சம்பவமொன்றில் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த ஒருவர் காயத்துக்கு உள்ளாகியுள்ளார். சம்பவத்தைத் தொடர்ந்தே தமிழர்களின் இரண்டு வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.இதனையடுத்து தோட்டங்களைச் சேர்ந்த 100 ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்தப் பகுதியிலிருந்து இடம் பெயர்ந்துள்ளன. இந்த நிலையில் பிரதேசத்தில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.http://www.tharavu.com/2010/09/blog-post_15.html

மே18 முடிந்ததும் .... இங்கு புலத்திலும் ... நமோ நமோக்கள், நம்பிக்கையே வாழ்கையானவர்கள், மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் ... எல்லாம் கற்பூரம் கொழுத்தி சத்தியம் பண்ணிச் சொன்னார்கள், இதற்கு சோடித்தவைகள், காட்டப்பட்ட உதாரணங்கள் அடுக்கடுக்கானவை, இடையில் உலகமயமாகும் பொருளாதாரத்தையும் சொருகினார்கள் ... இவை போன்றவைகள் இனி லங்காவில் நடைபெறவே மாட்டாது என்று!! ...

அப்புமாரே நீங்கள் மற்றவர்களை ஏமாற்றவில்லை!!! உங்களைத்தான் தொடர்ந்து ஏமாற்றுகிறீர்கள்!!!! :lol:

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனி தமிழனுக்கு விடிவு என்பது இலங்கையில் இல்லை இறந்தவர் போக மீதி இருப்போர் தப்பி இருப்பர், இருப்பினும் எரிப்புகள் தொடரும். :lol::lol::D

சிங்கள பயங்கரவாதிகளால் தமிழர் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகள் 1983 உடன் நின்றுவிடவில்லை. குறிப்பாக மலையக தமிழர் மீதான வன்முறைகள் அவ்வப்போது ஒவ்வொரு வருடமும் தொடர்கிறது.

இரத்தினபுரி, வேல்வத்தை, கினிகத்தேனை, புலத்சிங்கள, தற்போது குக்குலகலை என்று பல இடங்களிலும் சிறி சிறு காரணங்களைக் காட்டி ஏழை மலையக தமிழர்களின் வீடுகள் எரிக்கப்படுவதும், அவர்களிடமுள்ள சொத்துக்களை சூறையாடிச் செல்வதும், சிங்கள பயங்கரவாதிகளின் தொடர் செயலாக இருந்து வருகிறது. சிங்கள பயங்கரவாத அரசுகள், சிங்கள போலிஸ் பயங்கரவாதிகள் இவற்றைக் கண்டுகொள்வதில்லை.

மலையகத் தமிழரின் குருதிகளின் மீது நின்று ஒத்துழைப்பு அரசியல் நடத்தும், இந்திய பயங்கரவாதிகளின் அடிவருடிகளான ஆறுமுகம், ஸ்ரீ ரங்கா போன்றோர் இவற்றைக் கண்டுகொள்வதில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.