Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"யோகி, இரத்தினதுரையுடன் சரணடைந்த பிள்ளைகள் எங்கே?. மக்களைப் புலிகள், கேடயமாகப் பயன்படுத்தவில்லை" ஆணைக்குழு முன் மக்கள்!

Featured Replies

"யோகி, இரத்தினதுரையுடன் சரணடைந்த பிள்ளைகள் எங்கே?. மக்களைப் புலிகள், கேடயமாகப் பயன்படுத்தவில்லை" ஆணைக்குழு முன் மக்கள்!

iவிடுதலைப் புலிகளின் உறுப்பினர்களான புதுவை இரத்தினதுரை, யோகி போன்றவர்களோடு சேர்த்து 16 பஸ்களில் அனுப்பப்பட்ட முன்னாள் போராளிகளோடு இருந்த தனது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பதை அறியாமல் இருப்பதாக கண்டாவளை பிரதேச செயலகத்தில் இரண்டாவது நாளாக ஆணைக்குழுவின் சந்திப்பின் போது தாய் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமது சாட்சியத்தில் அப்பெண் மேலும் கூறியதாவது;

என்னுடையை மகள், அவருடைய கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளும் வட்டுவாகலில் ஐந்தாம் மாதம் வண. பிரான்சிஸ், றெஜினோல்ட் ஆகிய இருபாதிரியார்களின் வேண்டுகோளுக்கிணங்க இராணுவத்தினரிடம் சரணடைந்தார்கள்.

பின்னர் அவர்கள் அனைவரும் வட்டுவாகலில் இருந்து முல்லைத்தீவு வீதியால் பதினாறு பஸ்களில் ஏற்றிச் செல்லப்பட்டனர். இதை நான் நேரடியாகவும் பார்த்தேன். இன்று அவர்கள் எங்கேயென்று தெரியாது.

சகல தடுப்பு முகாம்கள் மற்றும் சிறைச்சாலைகளிலும் தேடிப்பார்த்தேன்.

எங்குமே இல்லையெனப் பதிலளிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினரோடு ஏற்றிவிட்ட பாதிரியார்களும் இன்று எங்கேயெனத் தெரியாதென அவர்களது குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர் என்றார்.

இதேவேளை, கிருஷ்ணபாலன் ஜெயபாரதி என்ற தாயொருவர் இடையில் கூறுகையில்;

தமக்கு மூன்று பிள்ளைகள் இருப்பதாகவும் குறித்த இரு பாதிரியார்களின் வேண்டுகோளுக்கிணங்க புதுவை இரத்தினதுரை, யோகி ஆகியோருடன் தன்னுடைய கணவரும் இராணுவத்திடம் சரணடைந்ததாகவும் அவரும் இப்போது எங்கிருக்கின்றார் எனத் தெரியாதெனவும் கூறினார்.

இதற்கு ஆணைக்குழு உறுப்பினர்கள் இருவரும் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களா என வினவினர்.

இதற்கு அவர் ஆம் என்று பதிலளித்ததைத் தொடர்ந்து இது தொடர்பாக தாம் கவனத்தில் கொள்வதாக ஆணைக்குழு தெரிவித்தது.

இது இவ்வாறிருக்க இலங்கை வரலாற்றில் காலத்திற்கு காலம் இடம்பெற்ற இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்டவர்களுடைய உணர்வுகளின் வெளிப்பாடே நடந்து முடிந்த ஆயுதப் போராட்டம் எனவும் இதில் இரு தரப்புகளுக்கும் இழப்புகள் உண்டு என்றும் எனவே எமது அடுத்த சந்ததியும் ஆயுதம் ஏந்தாத வகையில் தமிழ் மக்களுக்கான நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்றை ஏற்படுத்தவேண்டும் என கிளிநொச்சி மாவட்ட மக்கள் நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளிக்கையில் வலியுறுத்தினர்.

இது தொடர்பாக கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நேற்று சாட்சியமளித்தனர்.

ஒவ்வொரு காலப்பகுதியிலும் இன ரீதியிலான முரண்பாடுகளின் அடிப்படையில் தமிழ் சமூகத்தின் மீதான கலவரங்கள், வன்முறைச் சம்பவங்கள் நடந்தேறியிருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் தீர்வு தேடும் வகையில் தமிழ் மக்களின் போராட்டம் நடைபெற்றது.

எனினும் அந்தப் போராட்டம் இன்று முற்றுப்பெற்ற நிலையில் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வு எட்டப்படவேண்டும். மீள்குடியேற்றம் என்ற பெயரில் மக்கள் தமது சொந்த இடங்களில் கொண்டு சென்று விடப்படுகின்றனர்.

ஆயினும் முன்னர் போன்று சுமுகமான வாழ்க்கை முறைக்கு மக்கள் இன்றுவரை திரும்பியிருபக்கவில்லை. காணிப் பிரச்சினைகள், போரினால் இறந்துபோன, காணாமல்போன குடும்பங்களின் வாழ்வாதார நிலைமைகள் இன்று வரை கவனிக்கப்படாமல் இருக்கின்றன.

எனவே காணமல்போனோர், தடுத்து வைக்கப்பட்டோர் தொடர்பில் என்ன நிலைப்பாட்டை அரசு கொண்டுள்ளதென்பதைத் தெளிவுபடுத்தவேண்டும்.

எங்களுடைய பிள்ளைகள் இருக்கின்றார்களா? இல்லையா? என்பதையாவது கூறவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

ஆணைக்குழு முன் சாட்சியமளித்த அப்பாக்குட்டி ஐயம்பிள்ளை என்பவர் கூறுகையில்;

நாங்கள் 2009 ஆம் ஆண்டு மாசி மாதம் இராணுவத்தினரிடம் சரணடைந்த போது எங்களுடைய வீடுகளும் வாகனங்களும் முழுமையாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே பாதுகாப்பாக இருந்தது.

ஆனால் இப்போது வாகனங்கள் எங்கேயென்று தெரியாது. வீடு முற்றாகச் சேதமடைந்துள்ளது. இதற்கு யார் பொறுப்பாளிகள் என்பது தெளிவுபடுத்தப்பட்டு எமக்கான நஷ்ட ஈடுகள் கொடுக்கப்படவேண்டும் என்றார்.

தொடர்ந்து நீங்கள் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வரும்போது புலிகள் உங்களை மனிதக்கேடயங்களாகப் பயன்படுத்தினார்களா? என ஆணைக்குழு கேட்டதற்குப் புலிகள் மக்களைப் பின் நிறுத்திவிட்டு முன்னால் நின்று சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள் என்றார்.

சுதந்திரபுரம் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட போதும் அப்பகுதியில் தொடர்ந்தும் மக்கள் மீது ஷெல்வீச்சுத் தாக்குதல்கள் நடந்துகொண்டிருந்ததாகச் சொன்னார். அதனைத் தொடர்ந்து சுமார் 75 ஆயிரம் மக்கள் இராணுவத்தினரிடம் சரணடைந்தோம் என்றார்.

தொடர்ந்து தேவரூபன் சுசீலாதேவி என்பவர் சாட்சியமளிக்கையில்; 2009 ஆம் ஆண்டு 3 ஆம் மாதம் கட்டாய ஆட்சேர்ப்பு என்ற பெயரில் என்னுடைய 19 வயது மகனைப் புலிகள் பிடித்துச் சென்றனர். இரண்டு முறை அவர் புலிகளிடம் இருந்து தப்பி வந்து வீட்டில் நின்ற போதும் 3 ஆம் முறை பிடித்துச் சென்று ஆனந்தபுரம் சண்டையில் விட்டுவிட்டதாகக் கேள்விப்பட்டேன்.

இன்று என்னுடைய மகன் எங்கே இருக்கிறார், அவருக்கு என்ன ஆனது என்பது போன்ற தகவல்கள் எதுவுமே தெரியாத நிலையில் நான் இருக்கிறேன். என்னுடைய பிள்ளையை மீட்டுத் தாருங்கள் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை கடந்த காலத்தில் இத்தகைய அழிவுகள், அவலங்களுக்கு என்ன காரணம்? எதிர்காலத்தில் இவ்வாறான அழிவுகள், அவலங்கள் ஏற்படாத வகையில் எவ்வாறு தடுக்கலாம்? என ஆணைக்குழு மக்களிடம் வினவிய போது பதிலளித்த மக்கள்;

இனி ஒருபோதும் ஆயுத வழியிலான போராட்டத்திற்குத் தாம் தயார் இல்லை எனவும் எமது அடிப்படை வசதிகள் முதற்கொண்டு இனப்பிரச்சினை வரை சகலவற்றுக்குமான ஒரு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும்.

கடந்த காலத்தைப் போல் மக்களை அரசியல் பகடைக்காய்களாகப் பாவிக்காது பெருந்தன்மையோடு இவ்விடயத்தை எடுத்துக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தினார்கள்.

நன்றி

ஈழநேசன்

2ம் தரம் பிடித்து 3 தரம் பிடித்து கொண்டுபோய் விட இது என்ன கோழிச் சண்டையா?

இது கூட விளங்காமல் தமது பிள்ளைகளை நைக்கி சூவுடனும் ஜோர்டான் ஜேர்சியுடனும் பாடசாலைக்கு அனுப்பி விட்டு தாங்கள் தான் போராட்டத்தை முன்னின்று நடாத்துவதுவது மாதிரி கதை வேறு.

2ம் தரம் பிடித்து 3 தரம் பிடித்து கொண்டுபோய் விட இது என்ன கோழிச் சண்டையா?

நான் நினைத்தேன், இங்கு இந்த மாற்றுக்கருத்துமாமணி வந்தெழுதும் போது, அக்கும்பலைச் சார்ந்ததுகள் போலல்லாது, கொஞ்சம் அறிவானதாக இருக்குது எண்டு!!!??? ஆனால் வர வர புறுவ் பண்ணுது, இல்லை நானும் அந்தச் சாக்கடைகளில் ஒன்று தானென்று!!

... ஆரம்ப காலங்களில் சகோதர கொலைகள் தொடங்கி போது(இதை எல்லாமே முன்னின்று நடத்தின), சிலர் விடுதலைப் புலிகளுக்கு எதிராக பலமான விமர்சனங்களை வைத்தனர்!! ... ஆனால் இந்திய அமைதிப்படை காலங்களில் ஈ.பி.ஆர்.எல்.எப். ஈ.என்.டி.எல்.எப், புளொட் என்று செய்து விட்ட அட்டகாசங்களை பார்த்த அவர்களில் பலர் கூறினார்கள், ஏன் இவர்களையும் புலிகள் அழிக்காமல் விட்டு வைத்தார்களென்று!!

சில நாட்களுக்கு முன்னுக்கு, கேபியின் வலதுகரமும், டக்லஸின் நெருங்கிய கூட்டுமான பாண்டு007 சொன்னார் .... "யாழ்பாணத்திலை, டக்லஸ் என்னத்தை நல்லதைச் செய்தாலும், சனம் அவனை மதிக்குதில்லை" ... ஏன்???? ... செய்த/செய்து கொண்டிருக்கும் அரசியல்/கொலைகள்/கொள்ளைகள்/....!!!

அப்படி, இதுவரை காலமும் உங்கள் அரசியல்களும் புலி அழிப்பையே இலக்காக கொண்டிருப்பது போல் காட்டப்பட்டாலும், தமிழர் நலன் சார்ந்த அரசியல் எதுவும் இருக்கவில்லை!!! அது இன்று புலிகளின் அழிவின் பின் நிரூபனமாகி விட்டிருக்கிறது!!

இப்படியான எழுத்துக்கள் தான் உங்கள் இரத்ததில் ஊறியிருக்கிறது!! இதுவரை தமிழின அழிப்பிற்கு, சிங்களத்திற்கு தோள் கொடுத்த உங்கள் செயற்பாடுகள் தொடர்ந்து கொண்டேதானிக்கப்போகிறது!! ... அது புலிகளின் அழிவின் பின்பும் கூட மக்களை, உங்களிடன் நெருங்காதவாறு, நீங்களே செய்து கொண்டிருக்கிறீர்கள்!!

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் போனவர்கள் குறித்தும் இறுதிக்கட்ட யுத்தம் குறித்தும் துயர்மிக்க சாட்சியங்கள்‐பொஸ்பரஸ், கொத்துக் குண்டுகளுக்கு தினமும் 300 முதல் 600 பொதுமக்கள் பலி! புலிகள் வானத்தை நோக்கிச் சுட்டு எச்சரித்தார்கள் ‐ 20 September 10 01:43 am (BST)

ஜனாதிபதியினால் அமைக்கப்பட்டுள்ள படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு முன் சாட்சியமளிக்கும் நிகழ்வு இன்று மூன்றாவது நாளாக முல்லைத்தீவு நகரத்தில் இடம்பெற்றுகிறது. முதல் நாள் மற்றும் இரண்டாம் நாள் நடைபெற்ற சாட்சியமளிப்புக்களில் பெருந்துயர் மிக்க வார்த்தைகளும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. காணாமல்போன உறவுகள் குறித்தும் இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பிலும் துயர்மிக்க சம்பவங்கள் சாட்சிகளாக விபரிக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சியில் நேற்று 350 இற்கும் மேற்பட்டோர் தங்கள் உறவுகளைத் தரக்கோரி கண்ணீர் மல்கிக் கதறினர்! நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியம்:‐

எங்கள் உறவுகளை எங்களிடம் தாருங்கள் என்று கண்ணீரும் கம்பலையுமாக நேற் றுக் கிளிநொச்சியில் கரைச்சிப்பிரதேச சபை அலுவலகத்தில் நடைபெற்ற கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு முன் சாட்சியம் அளித்த 350 இற்கும் மேற் பட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அவர்களில் பலர் கைது செய்யப்பட்ட தமது உறவுகளின் புகைப்படங் களையும், உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களையும் கைகளில் ஏந்தியவாறு சாட்சியம் அளிக்க வந்திருந்தனர்.

போரின் இறுதிக்கட்டத்தில் புதுமாத்தளனில் கோரம் ‐ பொஸ்பரஸ், கொத்துக் குண்டுகளுக்கு தினமும் 300 முதல் 600 பொதுமக்கள் பலி! புலிகள் வானத்தை நோக்கிச் சுட்டு எச்சரித்தார்கள்.

போரின் இறுதிக்கட்டத்தில் புதுமாத்தளன் பகுதியில் புலிகள் மீது வீசுவதாக நினைத்து, அப்பாவி மக்கள் மீதும் இலங்கை இராணுவத் தினர் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகளையும் (கிளஸ்ரர்), பொஸ் பரஸ் குண்டுகளையும் வீசினர். அதன் மூலம் மக்களுக்கு பெரும் பாதிப்பு போரின் இறுதிக்கட்டத்தில் புதுமாத்தளவில் கோரம்., பொஸ்பரஸ், கொத்துக் குண்டுகளுக்கு தினமும் 300 முதல் 600 பொதுமக்கள் பலி! புலிகள் வானத்தை நோக்கிச் சுட்டு எங்களை எச்சரித்தனர் இரு தரப்பினராலும் மக்கள் பட்ட அவலங்களை விவரித்தார் சாட்சி.

போரின் இறுதிக்கட்டத்தில் புதுமாத்தளன் பகுதியில் புலிகள் மீது வீசுவதாக நினைத்து, அப்பாவி மக்கள் மீதும் இலங்கை இராணுவத் தினர் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகளையும் (கிளஸ்ரர்), பொஸ் பரஸ் குண்டுகளையும் வீசினர். அதன் மூலம் மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. நாளொன்றுக்கு 400 முதல் 600 பேர் வரையில் பலியாகினர், 1,000 பேர் வரையில் காயமடையவும் நேரிட்டது.

இதேவேளை, பாதுகாப்பு வலயத்தில் இருந்து படையினரின் கட்டுப்பாட் டுப் பகுதிக்குச் செல்ல முயற்சித்தபோது நாம் வெளியேறுவதைத் தடுப்பதற் காகப் புலிகள் பச்சை மட்டைகளால் அடித்தனர். அச்சுறுத்துவதற்காக வானத்தை நோக்கிச் சுட்டனர். இவ்வாறு போரின் இறுதிக்கட்டத்தில் இரண்டு தரப்புகளாலும் மக்கள் அனுபவித்த அவலங்களை பூநகரி வாசியான கமநல உத்தி யோகத்தர் ந.சுந்தரமூர்த்தி விவரித்தார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஜனாதிபதி ஆணைக்குழு தனது விசாரணைகளை பூநகரி பிரதேச செயலகத்தில் நேற்று நடத் தியது. அவ்வேளை ந. சுந்தரமூர்த்தி தமது சாட்சியத்தில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சரண டைந்த மற்றும் பிடிபட்ட போராளிகளை யும் ஏற்றி 16 பஸ்களில் கொண்டு சென்றார்கள்.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சரண டைந்த மற்றும் பிடிபட்ட போராளிகளை யும் ஏற்றி 16 பஸ்களில் கொண்டு சென் றார்கள். இன்றுவரை அவர்களின் கதி என்ன வென்று தெரியாது. இவ்வாறு முன்னாள் போராளி ஒருவரின் தாயார் நல்லிணக்க ஆணைக்குழுமுன் நேற்று சாட்சியம் அளிக் கும் போது., சரணடைந்த போராளிகள் அனைவரையும் படையினர் 16 பஸ்களில் ஏற்றிச் சென்றனர் அவர்களின் கதி தெரியவில்லை எனத் தாயார் ஒருவர் சாட்சியம்

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சரண டைந்த மற்றும் பிடிபட்ட போராளிகளை யும் ஏற்றி 16 பஸ்களில் கொண்டு சென் றார்கள். இன்றுவரை அவர்களின் கதி என்ன வென்று தெரியாது. இவ்வாறு முன்னாள் போராளி ஒருவரின் தாயார் நல்லிணக்க ஆணைக்குழுமுன் நேற்று சாட்சியம் அளிக் கும் போது தெரிவித்தார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லி ணக்கத்துக்கான ஆணைக்குழு கண்டா வளை பிரதேச செயலகத்தில் நேற்று நடத் திய அமர்வில் சாட்சியம் அளிக்கையி லேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து முதலில் சரணடைந்த போராளி ஒருவரே எமது பிள்ளைகளைக் காட்டிக்கொடுத்தார். எமது பிள்ளைகள் வலுக்கட்டாயமாகவே விடுதலைப்புலிகளினால் அழைத்துச்செல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து தப்பிவந்து இறுதி யுத்தத்தின்போது இராணுவப் பகுதிகளை நோக்கிச்சென்றபோது இராணுவத் தரப்புடன் நின்றிருந்த குறித்த போராளி எமது பிள்ளைகளை இராணுவத்துக்குக் காட்டிக்கொடுத்தார். இராணுவம் எமது பிள்ளைகளைப் பிடிக்கும் போது பணம் தந்தால் விட்டுவிடுவதாகக் கூறினார்கள். நாங்கள் இரண்டு லட்சம் ரூபாவைக் கட்டினோம். தாங்கள் எமது பிள்ளைகளை விசாரணையின் பின் மூன்று நாள்களில் விடுவதாகக் கூறி அழைத்துச் சென்றார்கள்.

இவ்வாறு அழைத்துச்செல்லப்பட்டவர்களும் சரணடைந்தவர்களும் ஒரு கூடாரம் போன்ற அறையில் வைக்கப்பட்டிருந்தார்கள். அதனுள் சென்று பார்க்க எமக்கு அனுமதி தரப்படவில்லை.

சரணடைபவர்களை மூன்று நாள்களில் விடுவிப்பதாக படையினர் அறிவித்ததை அடுத்து ஜோசப் பிரான்லின், ரெஜினோல்ட் ஆகிய பங்குத்தந்தையர் அவர்களிடம் பெற்ற உத்தரவாதத்தின் அடிப்படையில் போராளிகள் பலரும் கையளிக்கப்பட்டார்கள்.

அவ்வாறு கையளிக்கப்பட்டவர்கள் 16 பஸ்களில் ஏற்றிச் செல்லப்பட்டனர். இதுவரை அவர்களுடன் எந்தத் தொடர்பும் இல்லை. உயிருடன் இருக்கிறார்களா? இல்லையா? என்றுகூடத் தெரியாத நிலைமையில் நாங்கள் இருக்கிறோம்.

எமது சொத்துக்கள் யுத்தத்தில் அழிவடைந்தாலும் பரவாயில்லை. பிள்ளைகளை எம்மிடம் ஒப்படையுங்கள் அவர்களுடன் மரநிழலின் கீழாவது சந்தோசமாக வாழ்வோம் அவர்களை எவ்வளவு கஸ்டத்தின் மத்தியில் வளத்தோம் என்பது எமக்குத்தான் தெரியும். இந்த வயதிலும் (வயது 53) நாம் உழைத்துக் கஷ்டப்படுகிறோம். எமது பிள்ளைகள் இருந்திருந்தால் இந்த நிலைமை எமக்குத் தோன்றியிராது என்றார்.

எனது கணவன் எழிலனைத் தேடித் தாருங்கள் படையினரிடம் சரணடைவதை நான் கண்டேன் ஆணைக்குழுவிடம் அவரது மனைவி ஆனந்தி கோரிக்கை

விடுதலைப்புலிகளின் முன்னாள் திரு கோணமலை அரசியல்துறைப் பொறுப்பா ளர் எழிலனைத் தேடிப் பிடித்து ஒப்படைக் குமாறு அவரது மனைவி ஆனந்தி சசிதரன் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லி ணக்க ஆணைக்குழு முன் பிரசன்னமாகி கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று கிளிநொச்சியில் நடந்த ஆணைக் குவின் அமர்வில் சாட்சியம் அளிக்கையி லேயே மேற்கண்டவாறு அவர் கோரியுள்ளார்.

தமது கணவன் இலங்கை இராணுவத் தினரிடம் சரணடைவதை தான் நேரில் கண்டதாகவும் அதன் பின் அவர் குறித்து எவ்வித தகவலும் இல்லை என்றும் அவர் சாட்சியத்தில் குறிப்பிட்டார். அதேபோன்று இன்னும் பல நூறு போராளிகள் படையினரிடம் சரணடைந் தனர். அவர்களையும் தமது கணவரையும் தேடித்தருமாறு ஆனந்தி குழுவிடம் தெரி வித்தார்.

சரணடைந்த எனது மகள் குடும்பம் காணாமல் போயுள்ளது! ‐ ஆணைக்குழு முன் தாய் சாட்சியம்.

ஜனாதிபதியினால் அமைக்கப்பட்டுள்ள படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு முன் நேற்று இரண்டாவது நாளாக கிளி நொச்சியில் மக்கள் சாட்சியம் அளித்துள்ள னர். ஆணைக்குழு முன்னிலையில் சாட்சி யம் அளித்த பெரும் எண்ணிக்கையிலான பெண்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள தனது பிள்ளைகள் விடுதலை செய்யப்பட வேண் டும் என்றும் காணாமல் போயுள்ளவர்களை கண்டுபிடித்துத்தரவேண்டும் என்றும் கோரினார்.

இங்கு சாட்சியமளித்த 58 வயதான கந்த சாமி பொன்னம்மா என்ற தாய் இறுதிப் போரின்போது இராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினராகிய தனது மரு மகனும் தனது மகளும் அவர்களது இரண்டு குழந்தைகளும் காணாமல் போயுள்ளதாக கூறினார்.

அத்துடன் மல்லாவி பல நோக்கு கூட்டுற வுச்சங்கத்தில் பணியாற்றிய தனது மகன் ஒருவர் 2006ஆம் ஆண்டு வவுனியாவுக்கு சென்றிருந்தபோது காணாமல் போனதாக வும் அந்தத்தாய் தெரிவித்தார்.போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான நட வடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என கண்டா வளையைச் சேர்ந்த காசிப்பிள்ளை பாலேஸ் வரன் என்பவர் ஆணைக்குழுவினரிடம் வலியுறுத்தியுள்ளார்.

பார்வை இழந்துள்ள இவர் போரினால் பாதிக்கப்பட்டு உடல் வலுவிழந்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் புனர்வாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளார். படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு இன்று முல்லைத்தீவு நகருக்குச் சென்று அந்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்களின் சாட்சியங்களை பதிவுசெய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் போராளிகளுடன் 16 பஸ்களில் ஏற்றப்பட்ட எனது பிள்ளைகளின் கதி என்ன புதுவை இரத்தினதுரை, யோகியும் உடனிருந்ததாக நல்லணிக்க ஆணைக்குழு முன் தாயொருவர் சாட்சியம்

முன்னாள் போராளிகள் 16 பஸ்களில் ஏற்றிச் செல்லப்பட்டபோது என்னுடைய பிள்ளைகளும் அதில் இருந்தனர். அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் இருப்பதாகக் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்பாக தாய் ஒருவர் சாட்சியமளிக்கையில் தெரிவித்தார்.

கண்டாவளை பிரதேச செயலகத்தில் இரண்டாவது நாளாக ஆணைக்குழுவின் சந்திப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றபோது, விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களான புதுவை இரத்தினதுரை, யோகி போன்றவர்களோடு சேர்த்து 16 பஸ்களில் அனுப்பப்பட்ட முன்னாள் போராளிகளோடு இருந்த தனது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பதை அறியாமல் இருப்பதாக அத்தாய் கூறினார்.

என்னுடையை மகள், அவருடைய கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளும் வட்டுவாகலில் ஐந்தாம் மாதம் வண. பிரான்சிஸ், றெஜினோல்ட் ஆகிய இருபாதிரியார்களின் வேண்டுகோளுக்கிணங்க இராணுவத்தினரிடம் சரணடைந்தார்கள்.பின்னர் அவர்கள் அனைவரும் வட்டுவாகலில் இருந்து முல்லைத்தீவு வீதியால் பதினாறு பஸ்களில் ஏற்றிச் செல்லப்பட்டனர். இதை நான் நேரடியாகவும் பார்த்தேன். இன்று அவர்கள் எங்கேயென்று தெரியாது. சகல தடுப்பு முகாம்கள் மற்றும் சிறைச்சாலைகளிலும் தேடிப்பார்த்தேன்.

எங்குமே இல்லையெனப் பதிலளிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினரோடு ஏற்றிவிட்ட பாதிரியார்களும் இன்று எங்கேயெனத் தெரியாதென அவர்களது குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர் என்றார்.இதேவேளை, கிருஷ்ணபாலன் ஜெயபாரதி என்ற தாயொருவர் இடையில் கூறுகையில்;

தமக்கு மூன்று பிள்ளைகள் இருப்பதாகவும் குறித்த இரு பாதிரியார்களின் வேண்டுகோளுக்கிணங்க புதுவை இரத்தினதுரை, யோகி ஆகியோருடன் தன்னுடைய கணவரும் இராணுவத்திடம் சரணடைந்ததாகவும் அவரும் இப்போது எங்கிருக்கின்றார் எனத் தெரியாதெனவும் கூறினார். இதற்கு ஆணைக்குழு உறுப்பினர்கள் இருவரும் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களா என வினவினர். இதற்கு அவர் ஆம் என்று பதிலளித்ததைத் தொடர்ந்து இது தொடர்பாக தாம் கவனத்தில் கொள்வதாக ஆணைக்குழு தெரிவித்தது.

இது இவ்வாறிருக்க இலங்கை வரலாற்றில் காலத்திற்கு காலம் இடம்பெற்ற இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்டவர்களுடைய உணர்வுகளின் வெளிப்பாடே நடந்து முடிந்த ஆயுதப் போராட்டம் எனவும் இதில் இரு தரப்புகளுக்கும் இழப்புகள் உண்டு என்றும் எனவே எமது அடுத்த சந்ததியும் ஆயுதம் ஏந்தாத வகையில் தமிழ் மக்களுக்கான நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்றை ஏற்படுத்தவேண்டும் என கிளிநொச்சி மாவட்ட மக்கள் நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளிக்கையில் வலியுறுத்தினர்.

இது தொடர்பாக கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நேற்று சாட்சியமளித்தனர்.ஒவ்வொரு காலப்பகுதியிலும் இன ரீதியிலான முரண்பாடுகளின் அடிப்படையில் தமிழ் சமூகத்தின் மீதான கலவரங்கள், வன்முறைச் சம்பவங்கள் நடந்தேறியிருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் தீர்வு தேடும் வகையில் தமிழ் மக்களின் போராட்டம் நடைபெற்றது. எனினும் அந்தப் போராட்டம் இன்று முற்றுப்பெற்ற நிலையில் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வு எட்டப்படவேண்டும். மீள்குடியேற்றம் என்ற பெயரில் மக்கள் தமது சொந்த இடங்களில் கொண்டு சென்று விடப்படுகின்றனர். ஆயினும் முன்னர் போன்று சுமுகமான வாழ்க்கை முறைக்கு மக்கள் இன்றுவரை திரும்பியிருபக்கவில்லை. காணிப் பிரச்சினைகள், போரினால் இறந்துபோன, காணாமல்போன குடும்பங்களின் வாழ்வாதார நிலைமைகள் இன்று வரை கவனிக்கப்படாமல் இருக்கின்றன. எனவே காணமல்போனோர், தடுத்து வைக்கப்பட்டோர் தொடர்பில் என்ன நிலைப்பாட்டை அரசு கொண்டுள்ளதென்பதைத் தெளிவுபடுத்தவேண்டும்.

எங்களுடைய பிள்ளைகள் இருக்கின்றார்களா? இல்லையா? என்பதையாவது கூறவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

ஆணைக்குழு முன் சாட்சியமளித்த அப்பாக்குட்டி ஐயம்பிள்ளை என்பவர் கூறுகையில்; நாங்கள் 2009 ஆம் ஆண்டு மாசி மாதம் இராணுவத்தினரிடம் சரணடைந்த போது எங்களுடைய வீடுகளும் வாகனங்களும் முழுமையாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே பாதுகாப்பாக இருந்தது. ஆனால் இப்போது வாகனங்கள் எங்கேயென்று தெரியாது. வீடு முற்றாகச் சேதமடைந்துள்ளது. இதற்கு யார் பொறுப்பாளிகள் என்பது தெளிவுபடுத்தப்பட்டு எமக்கான நஷ்ட ஈடுகள் கொடுக்கப்படவேண்டும் என்றார்.

தொடர்ந்து நீங்கள் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வரும்போது புலிகள் உங்களை மனிதக்கேடயங்களாகப் பயன்படுத்தினார்களா? என ஆணைக்குழு கேட்டதற்குப் புலிகள் மக்களைப் பின் நிறுத்திவிட்டு முன்னால் நின்று சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள் என்றார்.

சுதந்திரபுரம் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட போதும் அப்பகுதியில் தொடர்ந்தும் மக்கள் மீது ஷெல்வீச்சுத் தாக்குதல்கள் நடந்துகொண்டிருந்ததாகச் சொன்னார். அதனைத் தொடர்ந்து சுமார் 75 ஆயிரம் மக்கள் இராணுவத்தினரிடம் சரணடைந்தோம் என்றார்.

தொடர்ந்து தேவரூபன் சுசீலாதேவி என்பவர் சாட்சியமளிக்கையில்; 2009 ஆம் ஆண்டு 3 ஆம் மாதம் கட்டாய ஆட்சேர்ப்பு என்ற பெயரில் என்னுடைய 19 வயது மகனைப் புலிகள் பிடித்துச் சென்றனர். இரண்டு முறை அவர் புலிகளிடம் இருந்து தப்பி வந்து வீட்டில் நின்ற போதும் 3 ஆம் முறை பிடித்துச் சென்று ஆனந்தபுரம் சண்டையில் விட்டுவிட்டதாகக் கேள்விப்பட்டேன். இன்று என்னுடைய மகன் எங்கே இருக்கிறார், அவருக்கு என்ன ஆனது என்பது போன்ற தகவல்கள் எதுவுமே தெரியாத நிலையில் நான் இருக்கிறேன். என்னுடைய பிள்ளையை மீட்டுத் தாருங்கள் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை கடந்த காலத்தில் இத்தகைய அழிவுகள், அவலங்களுக்கு என்ன காரணம்? எதிர்காலத்தில் இவ்வாறான அழிவுகள், அவலங்கள் ஏற்படாத வகையில் எவ்வாறு தடுக்கலாம்? என ஆணைக்குழு மக்களிடம் வினவிய போது பதிலளித்த மக்கள்;

இனி ஒருபோதும் ஆயுத வழியிலான போராட்டத்திற்குத் தாம் தயார் இல்லை எனவும் எமது அடிப்படை வசதிகள் முதற்கொண்டு இனப்பிரச்சினை வரை சகலவற்றுக்குமான ஒரு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும். கடந்த காலத்தைப் போல் மக்களை அரசியல் பகடைக்காய்களாகப் பாவிக்காது பெருந்தன்மையோடு இவ்விடயத்தை எடுத்துக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தினார்கள்.

இந்தச் சந்திப்பில் காணாமல்போனோர், தடுத்து வைக்கப்பட்டோர் மற்றும் விதவைகள் தொடர்பான விடயங்களை, மீள்குடியேற்றம் தொடர்பான சமகால நிலைமைகள் தொடர்பாக மக்களுடைய கடிதங்களை ஆணைக்குழு பெற்றுக்கொண்டது.

கிளிநொச்சியில் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகளின் போது அதிகளவிலான பெண்கள் தமது பிள்ளைகள் விடுவிக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை :

கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளை பிரதேச செயலகத்தில் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு நேற்று இரண்டாவது நாளாக விசாரணைகளை நடத்தியது.

ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த பெரும் எண்ணிக்கையிலான பெண்கள், தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது பிள்ளைகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் காணாமல் போயுள்ளவர்களைக் கண்டு பிடித்துத் தர வேண்டும் என்றும் கோரினர்.

இங்கு சாட்சியமளித்த 58 வயதான கந்தசாமி பொன்னம்மா என்பவர் தெரிவிக்கையில், இறுதிப் போரின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினராகிய தனது மருமகனும் தனது மகளும் அவர்களது இரண்டு குழந்தைகளும் காணாமல் போயுள்ளதாக கூறியுள்ளார்.

அத்துடன் மல்லாவி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் பணியாற்றிய தனது மகன் ஒருவர், 2006 ஆம் ஆண்டில் வவுனியாவுக்குச் சென்றிருந்தபோது காணாமல் போனதாகவும் அந்த தாய் தெரிவித்தார்.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என கண்டாவளையைச் சேர்ந்த காசிப்பிள்ளை பாலேஸ்வரன் என்பவர் ஆணைக்குழுவினரிடம் வலியுறுத்தியுள்ளார்.

பார்வையிழந்துள்ள இவர், போரினால் பாதிக்கப்பட்டு உடல் வலுவிழந்தவர்களுக்கு முன்னுமை அடிப்படையில் புனர் வாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு இன்று முல்லைத்தீவு நகருக்குச் சென்று அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களின் சாட்சியங்களைப் பதிவு செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யழ் தினசரிப் பத்திரிகைகளின் ஆதாரத்துடன் தொகுக்கப்பட்டவை:‐ புகைப்படங்கள் ஒளயண்யன்:‐

http://globaltamilnews.net/tamil_news1.php?nid=30038&cat=1

Over 500 testify final days of Sri Lankan offensive

Colombo: Civilians who survived the final days of last year s fighting between Sri Lankan troops and the vanquished Tamil rebels testified Sunday about conditions in their shrinking patch of land as government troops closed in.

The testimony was given before a government‐appointed reconciliation commission probing events surrounding the final eight years of the conflict in northern Sri Lanka, which stretched from 1983 to 2009.

The final days of the conflict drew significant international outrage, with many observers saying the Sri Lankan government was not doing enough to shield civilians from the fighting as it pursued eventually successful efforts to stamp out the Tamil rebels.

Parents looking for their children, wives looking for their husbands and families affected by the fierce fighting between government troops and Tamil rebels testified before the commission, which met in Poonkeryn, Kilinochchi, 320 km north of the capital.

More than 40 to 45 pregnant mothers and babies died as they were in a queue to collect nutritional food when they were hit by shells and aerial strikes, agricultural officer Nadarajaha Sundaramoorthy told the commission, although he did not say who was responsible for the shelling.

He said the incident occurred in Puthumathalan, 370 km north‐east of the capital, where the Tamil rebels and civilians were cornered in the final days of the conflict.

He said his daughter was injured when a bullet went through her throat.

Another woman testified about her son, a former rebel who surrendered through a Catholic priest to the Army during the final stages of the conflict in May last year. She said she does not know his whereabouts.

V Kandasamy, another villager blinded during the war said people should never have this happen to them again.

Some the civilians, mostly women, came with photographs of missing persons and requested that the commission help them in their search.

The seven‐member commission was appointed by President Mahinda Rajapaksa two months ago. This was the first hearing in former rebel‐held areas.

They are looking for the reasons a 2002 Norwegian‐brokered ceasefire failed and into the events surrounding the final days of the conflict. They are also charged with making recommendations on reconciliation.

sify news

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.