Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கருணாநிதியின் தமிழ் ரத்தம் எங்கே? பகீர் கேள்வி கேட்ட பஞ்சாபி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருணாநிதியின் தமிழ் ரத்தம் எங்கே? பகீர் கேள்வி கேட்ட பஞ்சாபி

"என் இளமை விடியும் முன்னரே முடியும் என்று யாருக்குத் தெரியும்" வலி மிகுந்த இந்தக் கவிதை வரிகளுக்குச் சொந்தக்காரர் பேரறிவாளன்!

ராஜீவ்காந்தி கொலையாளிகளுக்கு "பேட்டரி" வாங்கிக் கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட தூக்கு தண்டனைக் கைதி!

19-வது வயதில் "ஐந்து நிமிட விசாரணை" க்காகக் காவல் துறையால் அழைத்துச் செல்லப்பட்டவர்.

இப்போது 39 வயதில் மரணத்தின் விளிம்பில் ஊசலாடிக்கொண்டு இருக்கிறார். அவர் சிறைக்கு சென்று 20 ஆண்டுகள் முடிந்துவிட்டதை நினைவுபடுத்தும் நிகழ்ச்சி கடந்த வாரம் சென்னையில் நடந்தது.

தியாகு தலைமையில் நடந்த இந்த விழாவில் "மரண தண்டனைக்கு எதிரான சமூக நீதிப் போராளிகள்" அனைவரும் ஆஜர். ஆனாலும் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தவர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஜக்மோகன் சிங்!

பத்திரிகையாளரும், மனித உரிமை அக்கறையாளருமான ஜக்மோகன் சிங் தமிழர் குறித்தும், தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் புள்ளி விவரங்களோடு பேசிய ஆச்சர்யப் பேச்சுகள் இங்கே அப்படியே...

உலகமே ஊமையாகி நிற்க...ஈழத்தில் ஒட்டுமொத்தத் தமிழர்களையும் கொன்று குவித்தார்கள். இன்னும் சில நாடுகள் நேரடியாகவே இலங்கைக்குப் போர் உதவி செய்தன. கொடுமையிலும் கொடுமையாக, அத்தனையையும் நாமும் வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். இனிமேலாவது, அடுத்தவனின் வேதனைகளை வேடிக்கை பார்ப்பதை விட்டுவிட்டு மனித உரிமைக்காக ஒன்றுசேர்ந்து குரல் கொடுக்க வேண்டும். இன்று தமிழகத்தின் முதல்வராக கருணாநிதி இருக்கிறார். விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டபோது, 2007 நவம்பர் 2-ம் நாள் கருணாநிதி தன் கவிதையில், இலங்கையிலே கொல்லப்பட்டிருக்கிற அந்த வீரன் ஒரு தமிழன். அங்கே பாய்கிற ரத்தம் என் தமிழர்களின் ரத்தம்" என்று எழுதியிருந்தார். இப்படி ஒரு கவிதை எழுதிய அவரைப் பாராட்டி ஒரு கடிதம் எழுதினேன். ஆனால், இன்று என் கவலை எல்லாம் "அந்த தமிழ் ரத்தம் இப்போது அவருக்கு எங்கே போனது?" என்பதுபற்றித்தான்! இந்த விழாவைத் தலைமையேற்று நடத்தும் தோழர் தியாகு உட்பட மரணக் கொட்டடியில் இருந்த 25 கைதிகளுக்கு 1974-ல் கருணாநிதிதான் தண்டனைக் குறைப்பு வழங்கினார். தமிழக முதலமைச்சரை நான் கேட்டுகொள்கிறேன்..."இனி தமிழ்நாட்டில் எவருக்கும் மரண தண்டனை அறிவிக்கப்படாது" என்று இப்போதே அறிவிக்க வேண்டும். தமிழ்நாடு சட்டமன்றம் மரண தண்டனைக்கு எதிரான ஒரு தீர்மானத்தை இயற்றி... மத்திய அரசுக்கும், குடியரசுத் தலைவருக்கும் அனுப்பிவைக்க வேண்டும்!

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை இன்று நாடே போற்றுகிறது. அவர் ஜனாதிபதியாக இருந்தபோது "கருணை தொடர்பான கோப்புகள், பல அரசியல் கைதிகள் தொடர்பான கோப்புகள்" உள்துறை அமைச்சகத்தில் இருந்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கு நகர மறுத்துவிட்டன.

காரணம் தெரியுமா? குடியரசுத் தலைவர் அரசுக்கு எழுதிய ஒரு கடிதத்தில், "மரண தண்டனையை மறு திறனாய்வு செய்யுமாறு" கேட்டுக்கொண்டு இருந்தார். "நான் இந்த மரண தண்டனையை எதிர்க்கிறேன்" என்று அவர் திட்டவட்டமாகச் சொல்லவில்லைதான். ஆனால் மனிதாபிமான அடிப்படையிலேயே அவர் இதுபோல் கேட்டுகொண்டார்.

இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் நூற்றுக்கணக்கானவர்கள் தூக்கு மர நிழலில் துன்புறுகிறார்கள். ஒரு மனிதனை, இன்னொரு மனிதன் கொலை செய்வது எவ்வளவு கொடூரமானதோ...அதேபோல்தான் அரசு ஒரு தனி மனிதனைத் தூக்கில் போடுவதும் தவறானது, அநீதியானது.

மரண தண்டனை என்பது என்ன?

கொலைக்குக் கொலை என்ற பழிக்குப் பழி வாங்கும் காட்டுமிராண்டித்தனம்தானே!.

உலகில் 133 நாடுகள் முரண தண்டனையை ஒழித்துவிட்டன. இந்தியாவைக் காட்டிலும் குற்றங்களின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கிற பிலிப்பைன்ஸ் நாட்டிலும்கூட இந்தக் கொலை தண்டனையை அண்மையில் ஒழித்துவிட்டார்கள்.

ஆனால், "காந்தியம்" பேசும் நாம்தான் இன்னமும் மரண தண்டனையைப் பொத்திப் பாதுகாத்து வருகிறோம்" என்றார் ஜக்மோகன் சிங் உணர்ச்சிப் பிழம்பாக!

த. கதிரவன்

சூனியர் விகடன்

தமிழ்செல்வன் மரணத்திற்கு "கையறு நிலைப்பாடல்" எழுதிய கருணாநிதியை பாராட்டி ஜக்மோகன் சிங் எழுதிய கடிதம்

Elegy to Tamilchelvan a great act of courage - Jagmohan Singh

http://worldsikhnews.com/7%20November%202007/Elegy%20to%20Tamilchelvan%20a%20great%20act%20of%20courage.htm

2009-ம் ஆண்டு போர் நிறைவிற்கு ஒரு மாதத்திற்கு முன்பு சார்லஸ் ஆன்டனிக்கு ஜக்மோகன் சிங் எழுதிய கடிதம்

Whose Responsibility is it to protect?

http://worldsikhnews.com/22%20April%202009/Whose%20Responsibility%20is%20it%20to%20protect.htm

தமிழாக்கம்

சார்லஸ் அந்தோணிக்கு உணர்வுள்ள சீக்கியரின் கடிதம்

உங்களது வாழ்வுரிமை, அடையாளம் மற்றும் விடுதலைக்கான போராட்டத்துக்கு எனது ஆதரவை தயவு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள்.நீங்களும் உங்களது மக்களும் உயிர் வாழ எப்படிப்பட்ட போராட்டத்தில் தற்போது இருக்கிறீர்கள் என்பதை பஞ்சாபில் நடந்த போராட்டங்களை அருகில் இருந்து கவனித்தவன் என்ற முறையில் நான் நன்கறிவேன்.

ஊடகங்களில், உங்கள் தந்தை வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒரு நாள் நண்பர், மற்றொரு நாள் எதிரி. சில நாட்கள் அவர் பாதுகாக்கப்பட்டவர். இன்று அவர் கைவிடப்பட்டவர். சிலருக்கு அவர் தீவிரவாதி. பலருக்கு அவர் ரட்சகர். அவர் எப்படிப்பட்டவர் என்பதை வரலாறு தீர்மானிக்கட்டும் என்று விடுவதே நல்லது.நான் போர்க் குணம் மிக்க இனத்தைச் சேர்ந்தவன். போராட்ட குணத்துக்கு பெயர் பெற்றவர்கள் சீக்கியர்கள். பஞ்சாபில் உள்ள பெரும்பாலான அரசியல் தலைவர்கள் தங்களது வாயைத் திறக்கவில்லை என்றாலும், அச்சமின்றி அறிக்கை வெளியிடவில்லை என்றாலும், தமிழீழ விடுதலைப் போராட்ட வீரர்களின் துணிச்சல், உறுதி, போர்த் திறன் ஆகியவற்றை அங்குள்ள பலர் பாராட்டுகின்றனர். இதை நீங்கள் நம்பியே ஆக வேண்டும். சமீப காலமாக உங்கள் போராட்டம் சந்தித்து வரும் வீழ்ச்சி பற்றிய செய்தியைக் கேட்டு பெரும்பாலான சீக்கியர்கள் கவலை கொண்டுள்ளனர்.

போர் பகுதியில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற சில மணி நேரங்கள் மட்டுமே அளித்த நிலையில், உங்கள் மக்களும், வீரர்களும் இலங்கை ராணுவத்தின் விஷ வாயு குண்டு வீச்சுக்கும், ரசாயன குண்டு வீச்சுக்கும் ஆளாகியுள்ள நிலையில் உங்களுக்கு எனது ஆதரவை தெரிவித்து நான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.இலங்கையில் தமிழீழ மக்கள் படும் துன்பத்தால் மனம் நொந்து இந்தக் கடிதம் எழுதுகிறேன். துன்பப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் புகைப்படங்களைப் பார்த்து மலைகளே அசைய வேண்டும். ஆனால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. உங்கள் வலிகளையும் துன்பங்களையும் கண்டு கொள்ளாமல் மொத்த உலகமும் இயங்கி வருகிறது. அதற்கு 24 மணி நேர டி.வி. சேனல்களுக்கு நன்றி கூற வேண்டும்!.

தமிழீழ தாயகத்தை விட்டும், தமிழீழ வீரர்களை விட்டும் ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் வெளியேறுவதைக் கண்டு எனது இதயம் அழுகிறது. இதை எழுதும் போது எனது உள் மன உணர்வுகளை வெளிப்படுத்த இது ஒரு வழி மட்டுமே என்ற குற்ற உணர்வே மிஞ்சுகிறது. இருந்தபோதிலும் ஒரு சீக்கியனாக என்னால் செய்ய முடிந்தது உங்களது போராட்டத்தில் உங்களுடன் சேர்ந்து கொள்வது மட்டுமே. எனது பிரார்த்தனையும், எனது வாழ்த்துக்களும் உங்களுக்கு உண்டு.

உலகில் உள்ள மற்ற அமைப்புகள் போன்று தமிழீழத்திற்கும் வரலாற்று ஆவணங்கள் இருந்தபோதும், இலங்கையில் துன்பப்படும் பல்லாயிரம் மக்களின் துயரை, வலியைத் துடைக்க பன்னாட்டு சமூகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தியா எப்படி சீக்கியர்கள், காஷ்மீரிகள், வடகிழக்கு மாநில மக்களின் போராட்டங்களை அழித்ததோ, அதே போல் இலங்கை அரசு உங்களது போராட்டத்தை பகல் நேரக் கொலை மற்றும் பேரழிவின் மூலம் நசுக்கி வருகிறது.

ஐரோப்பிய நாடுகளின் தலைநகரங்களில் வீதிகளில் இறங்கி போராடி இருக்கும் பேச்சுகளைத் தொடங்க வைத்த புலம் பெயர் தமிழர்களின் போராட்டம் இதயத்தை வருடுவதாக உள்ளது. குறிப்பாக நார்வே தலைமையிடம் கூர்மையாக வாதாடிய புலம் பெயர் தமிழர்களால் இம்.ஆஸ்லோவில் எம் மலம் பிரதமரின் அலுவலகத்தை நார்வே வாழ் புலம் பெயர் தமிழர்கள் முற்றுகையிட்டு, அரசாங்கத்துடன் வாக்குவாதம் செய்தனர். அப்போது, சர்வதேச வளர்ச்சிக்கான நார்வே அமைச்சர் எரிக் சோல்ஹைம், ‘என்னால் நார்வே தமிழர்களது உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால் என்னால் மாயவித்தை புரிய முடியாது’ என்றார். இதை செய்திகளில் நான் படித்தேன். நார்வே அரசின் என்ஆர்கே பத்திரிகை நிருபர்கள் இது குறித்து கேள்வி கேட்ட போது, ‘என்னால் அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றிடம் மீண்டும் ஒருமுறை பேச இலங்கையில் போரை நிறுத்த ஏதாவது செய்ய முடியுமா என்று பார்க்க வேண்டும்’ என்றார்.தமிழ் எழுத்தாளர் கே.பி.அறிவானந்தம் எரிக்கின் இந்த பதில் குறித்து அளித்த பதில்:‘மாய வித்தைகள் புரிய சோல்ஹைமால் முடியாமல் இருக்கலாம். ஆனால் குறைந்தபட்சம் அவர் தவறுகள் செய்வதில் இருந்து தள்ளி நின்றிருக்கலாம். முடிந்தவற்றை செய்வது மட்டுமே ராஜதந்திரம் என்பதாக இருக்கலாம்.

ஆனால் முடியாததையும் நடத்திக் காட்டுவதுதான் விடுதலைப் போராட்டம்’. இந்த பதில் மிகச் சரியானது. ஒரு காவியம் போன்றது.துணிவுக்கும், மனித உரிமை போற்றுதலுக்கும் ஸ்காண்டிநேவிய நாடுகள் பெயர் பெற்றவை. அதனால் தான் சமாதான பேச்சுக்கு நார்வேயை உங்கள் தலைமை தேர்ந்தெடுத்திருக்கும்.‘முக்கியமான கருத்தை நார்வே உணர்ந்து கொள்ளத் தவறிவிட்டது. சமாதான பேச்சில் நடுநிலை வகித்ததால், புலிகள் ஆயுதங்களை கீழே போடுமாறு கோரிக்கை விடும் இணைத் தலைமை நாடுகளுடன் சேர்வதில் நியாயம் இல்லை. கொழும்பின் இனப்படுகொலை கரங்களுக்குள் வன்னி மக்களை செல்லுமாறு கூறுவது பெரும் கவலை அளிக்கிறது. அவர்களுடைய செயல்முறைத் தோல்விகளால், பன்னாட்டு அமைதித் தூதுவர் என்ற மதிப்பை நார்வே குறைத்துக் கொண்டுள்ளது.

சுதந்திரமாகவும், வல்லரசுகளின் புவிசார் அரசியல் குறிக்கோளில் இருந்து விலகியும், உலக மனித குலத்துக்கு உண்மையாக நடந்து கொள்ள விரும்பியும் வருவதற்கு நார்வேக்கு இன்னும் நேரம் உள்ளது’ என்று நார்வேயின் தலையில் ஆணி அடித்தது போல் அறிவானந்தம் கூறியிருக்கிறார்.தொடர்ந்து துன்பப்படும் தமிழீழ மக்களானவர்கள், இந்தியா மற்றும் உலக நாடுகளின் வெளிப்படையானதும், மவுனமானதுமான ஆதரவால் சிங்களப் பேரினவாத ராணுவத்திடம் சிக்கிக் கொண்டுள்ளனர்.இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள ஈழத் தமிழர்களின் சகோதரர்களின் அபயக் குரல்கள் புறக்கணிக்கப்படுகின்றன. 13 தமிழ் சகோதரிகள் உங்களுக்காக சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கின்றனர். இந்தியா முழுவதும் தேர்தல் களேபரத்தில் உள்ள நேரத்தில் அவர்களைப் பற்றி இந்த ஊடகங்கள் கண்டு கொள்கின்றனவா?தமிழ்நாட்டில் உள்ள தலைவர்கள் பொய்யாகவும் ஏமாற்றும் விதமாகவும் குரல் கொடுக்கின்றனர்.

அவர்கள் நேர்மையாக உங்களை ஆதரிக்கிறார்களா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் உங்களுக்கு அவர்களைப் பற்றி நன்கு தெரியும்.தமிழ் தலைவர்களைப் போன்று இந்தியத் தலைவர்களும் உங்களுடனும் உங்களுடைய லட்சியத்துடனும் தங்கள் சாணக்கியத் தனத்தை காட்டி வருவதாக நான் கருதுகிறேன். இந்தியா உங்கள் நண்பனா, எதிரியா என உலகத்தால் தெளிவாக புரிந்து கொள்ள முடியாது. அந்த வகையில் இந்தியா இரட்டை வேடம் போடுகிறது. இலங்கை ராணுவத்துக்கு பயிற்சியும் ஆயுதமும் கொடுப்பதைத் தொடர்ந்து கொண்டே ஒன்றும் தெரியாதது போல் மென்மையாக நடந்து கொள்கிறது.

நான் பாதுகாப்பு ஆய்வாளர் கிடையாது. ஆனால், நார்வே தலைமையிலான அமைதிப் பேச்சு துவங்கியபோதே உங்கள் மக்களின் போராட்டத்துக்கு பெரிய அடி விழுந்து விட்டது. சீக்கியர்கள், காஷ்மீரிகள், நாகா, மிசோ மக்களின் போராட்டத்திலும் இந்தியா இந்த முறையையே கடைபிடித்தது. 9/11 சம்பவத்துக்குப் பிறகு உலகின் புவிசார் அரசியல் மாற்றமும் உங்கள் போராட்டத்தின் தன்மையை மாற்றிவிட்டது. இதுவும் கூட நார்வேயின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படக் காரணமாக இருக்கலாம்.கடந்த ஆண்டு இதே நேரம் கொசோவா என்ற புதிய நாடு பிறந்தது. அதற்கு ஓராண்டு முன்பு கிழக்குத் தைமூர் விடுதலை அடைந்தது. 2009-ல் தமிழீழம் விடுதலை பெறும் என்று நினைத்தேன்.

இந்த ஆண்டு அது நடைபெறாது போல் இருந்தாலும் எனக்கு இன்னும் நம்பிக்கை உள்ளது.உங்களுடைய போராட்டம் கடைசிக் கட்டத்தை அடைந்துவிட்டது என்று உலக அளவில் ஒரு தோற்றம் உள்ளது. கள நிலைமைகள் குறித்த உண்மைகள் தெளிவாகத் தெரியாத நிலையில் இருந்தாலும் உங்கள் போராட்டம் கடைசிக் கட்டத்தை அடைந்து விட்டதாக நான் நினைக்கவில்லை. உங்கள் போராட்டம் தொடர வேண்டும். உங்கள் சுதந்திரக் கொடியை தொடர்ந்து நீங்கள் தூக்கிப் பிடிக்க வேண்டும்.அமெரிக்க குடியுரிமை பெற்ற கோத்தபய ராஜபட்ச, பச்சை அட்டைதாரர் பொன்சேகா ஆகியோரின் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்காக வழக்குத் தொடருவதில் முன்னாள் அமெரிக்க அரசு வழக்கறிஞர் புரூஸ் ஃபெய்ன் வெற்றி பெற்றுள்ளார் என்று நம்புகிறேன்.

நியூயார்க்கில் உள்ள இனப்படுகொலை தடுப்பு அமைப்பு உலகில் உள்ள 8 நாடுகளில் இனப்படுகொலை நடைபெறுகிறது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில் இலங்கையும் ஒன்று. உங்களது தாயகத்தில் இனப்படுகொலை நடக்கிறது என்பதை உலகிற்கு அறிவித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று நாம் நம்புவோம்.ஒரு நாட்டின் மக்களை காப்பாற்றுவதில் யாருக்கு பொறுப்பு உள்ளது என்ற ஒரு தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு சபைக் கூட்டதில் எழுப்ப மெக்ஸிகோ தூதர் கிளாட் ஹெலன் முயற்சி செய்தார்.தெற்காசியாவின் புவியியலையே மாற்றும் வல்லமை கொண்டவரின் மகன் சார்லஸ் அவர்களே, நீங்கள் உங்கள் போராட்டத்தை தொடர்வீர்கள் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.நான் உங்களுக்கு கூறுவது இதுதான், கொசோவா விடுதலை அடைந்ததும் நான் கூறியதும் இதுதான்.

சீக்கியர்களின் 10-வது குரு, குரு கோபிந்த் சிங் அவர்களின் வாக்குதான் அது.‘யாரும் உங்களுக்கு விடுதலையை தட்டில் வைத்துக் கொடுக்க மாட்டார்கள்; அதைப் பெற்றவர்கள், தங்களுடையை சொந்த முயற்சி, துணிவு, உறுதி, வலிமையாலேயே பெற்றார்கள்’ என்பது தான் அந்த வாசகம்.விரைவில் அல்லது காலம் தாழ்த்தியோ நீங்கள் அதை அடைவீர்கள்.இந்த தலைமுறையிலேயே நீங்களும் உங்கள் மக்களும் விடுதலையை அடைவீர்கள் என வாழ்த்துகிறேன். எல்லாம் வல்ல இறைவன் தமிழ் மக்களுக்கு ஆசி வழங்கட்டும். அவர்களது துன்பத்தை நிறுத்தட்டும். இந்த உலகில் சுதந்திர மக்களாக அவர்கள் தலை நிமிர்ந்து நிற்கட்டும்.

உண்மையுள்ள,

ஜக்மோகன் சிங்

sbigideas@gmail.com

(Jagmohan Singh is a social, religious, health and political activist based in Ludhiana, Panjab. He may be contacted at jsbigideas@gmail.com )

முத்தமிழ்வேந்தன்

சென்னை

  • கருத்துக்கள உறவுகள்

என்னையா இது.. பட்டரி வாங்கிக் குடுத்தால் மரணதண்டனையா? :) இந்தத் தீர்ப்பில் அநீதிமன்றத்தின் ராஜீவ் வழிபாடுதான் தெரியுது..! :lol:

கனடாவில் மரணதண்டனை வழங்கப்படுவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால், "காந்தியம்" பேசும் நாம்தான் இன்னமும் மரண தண்டனையைப் பொத்திப் பாதுகாத்து வருகிறோம்" என்றார் ஜக்மோகன் சிங் உணர்ச்சிப் பிழம்பாக!

காந்தியத்தை யார் இந்தியாவில் பின் தொடர்கிறார்கள்? முசோலினி வம்சம் ஆட்சி செய்யும் போது இந்திய மக்கள் காந்தியத்தை எதிர்பார்ப்பது அவர்களது அறிவீனம். :lol::)

  • கருத்துக்கள உறவுகள்

காந்தியத்தை யார் இந்தியாவில் பின் தொடர்கிறார்கள்? முசோலினி வம்சம் ஆட்சி செய்யும் போது இந்திய மக்கள் காந்தியத்தை எதிர்பார்ப்பது அவர்களது அறிவீனம். :lol::)

42-17178709.jpg

நல்லது ... நானும் வெளிநாட்டு ஓட்டல் சப்ளையரை ரூட்டு விடலாம் என இருக்கேன் ... :D

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

42-17178709.jpg

நல்லது ... நானும் வெளிநாட்டு ஓட்டல் சப்ளையரை ரூட்டு விடலாம் என இருக்கேன் ... :o

பிறகென்ன.. நீங்களும் ஒருகாலத்தில் பிரதமர்தான்..! :) ஆனால் என்ன.. கவ்வ வைத்தாலும் வைத்துவிடுவார்கள் கவனம்..! :D:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.