Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புத்தி ஒன்றுதான் தமிழரின் உரிமை மீட்பாயுதம்.

Featured Replies

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக ஆரோக்கியமான நடவடிக்கைகளை எடுக்கும் பொறுப்பு அரசைவிட தமிழ் இனத்திற்கே அதிகம் உண்டு எனலாம்.

ஏனெனில் அரசாங்கத்தைப் பொறுத்தவரை இனப்பிரச்சினைக்கான தீர்வைத் தட்டிக் கழிப்பதே அதன் உள்நோக்கமாக இருக்கிறது. இனப்பிரச்சினைத் தீர்வில் அரசுக்கு முறுக் கேற்றும் உத்திகளை கையாளும் பொறுப்பை தமிழ்த் தரப்பினர் எடுக்காதவரை இன விவகாரம் தொடர்பில் எதுவுமே நடக்கமாட்டாது என்பது தெரிந்த உண்மை.

அப்படியானால் இலங்கை அரசுக்கு வெளி நாட்டு அழுத்தம் தேவை என்பதை நாம் ஏற்றுத் தான் ஆகவேண்டும். குறிப்பாக இந்திய மத்திய அரசு இனப்பிரச் சினைக்குத் தீர்வுகாணுமாறு அழுத்தம் கொடுக்கக்கூடிய களநிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

இலங்கையின் அரசியல் எல்லைக்குள் சீனா வின் ஊடுருவலை எந்தவகையிலும் இந்தியா விரும்பப் போவதில்லை. வன்னிப் போரில் விடுதலைப்புலிகளைத் தோற்கடிப்பதற்கு உதவிய இந்தியா, சீனாவை இலங்கை அரசு ஆதரிக்கும் என்பதை உணர்ந்திருக்குமாயின் அந்த உதவியை செய்திருக்காதென்பதும் நிஜம். எனவே இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற விடயத்திலும் நாம் மிக புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும். இங்கு புத்திசாலித்தனம் என்பது இலங்கை அரசிடம் நாம் ஏமாந்து போய்விடக் கூடாது என்பதில் காட்டப்படும் அதீத கவனமாக இருக்கும்.

அதாவது இலங்கை மீதான ஐ.நா சபை விசாரணைகளை நடத்துவதற்கு நிபுணர்கள் குழுவை நியமித்த உடனேயே, இலங்கை அரசு யுத்தம் தொடர்பான உள்ளக விசாரணைகளை ஆரம்பித்தது. இந்த விசாரணைக் குழுவின் நோக்கம் என்ன என்பது தெரிந்த விடயம். அதேநேரம் இந்த விசாரணைக் குழுவையும் எங்களுக்குச் சாதகமாக பயன்படுத்த வேண்டும்.

இதற்காக போரில் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் துயரங்களை, அனுபவங்களை, ஆற்றாமைகளை, விசாரணைக் குழுவிடம் எடுத்துக் கூறலாம். மாறாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் விசாரணைக்குழு முன் சாட்சியம் அளிப்பாராயின், அந்த விசாரணைக் குழுவை தமிழ்த் தரப்பு ஒட்டுமொத்தமாக ஏற்றுக் கொள்வதாக அரசு பிரசாரம் செய்யும். இந்தப் பிரசாரம் ஐ.நா. சபை நியமித்த நிபுணர்கள் குழுவின் செயற்பாட்டுக்குக் குந்தகமாக அமையலாம்.

எனவே, ஒருபுறம் உள்ளக விசாரணை, மறு புறம் ஐ.நா. சபையின் நடவடிக்கையை ஊக்குவித்தல், இதனிடையே இனப்பிரச்சினையை தீர்க்குமாறு இந்திய மத்திய அரசினூடாக இலங்கை அரசுக்கு அழுத்தம் என்ற நிகழ்ச்சி நிரலின்படி தமிழ்த் தரப்பு செயலாற்ற வேண்டும். புத்திமான் பலவான் என்ற கதையை ஒருகணம் சிந்தியுங்கள்; செயற்படுங்கள்; எல்லாம் வெற்றி தரும்.

[ வலம்புரி ] - [ Sep 23, 2010 04:00 GMT ]

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் அரசியல் எல்லைக்குள் சீனா வின் ஊடுருவலை எந்தவகையிலும் இந்தியா விரும்பப் போவதில்லை. வன்னிப் போரில் விடுதலைப்புலிகளைத் தோற்கடிப்பதற்கு உதவிய இந்தியா, சீனாவை இலங்கை அரசு ஆதரிக்கும் என்பதை உணர்ந்திருக்குமாயின் அந்த உதவியை செய்திருக்காதென்பதும் நிஜம். எனவே இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற விடயத்திலும் நாம் மிக புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும். இங்கு புத்திசாலித்தனம் என்பது இலங்கை அரசிடம் நாம் ஏமாந்து போய்விடக் கூடாது என்பதில் காட்டப்படும் அதீத கவனமாக இருக்கும்.

இதெல்லாம் ரொம்ப ஓவர்... போர் தொடங்கும் போதே... இந்திய கூட்டமைப்பு அரசிற்கு தெரியும் ... தமிழர்களை ஓசிக்கும் கட்டிங்குக்கும் சினிமா கூத்தாடிகளுக்கும் இங்கு தமிழர் நாட்டில் அடிமைபடுத்தி வைத்திருப்பதினை போலவே அங்கும் செய்து.... அவர்களை அடிமை படுத்தி அவர்க்ளது நிலத்தில் நாம் காலூன்றி நமது பாதுகாப்பினை உறுதி செய்துவிடலாம் என... இப்ப கோடி கோடியாக தமிழர்க்காக என கொட்டி சிங்களவரிடம் கொடுப்பதும்...

Asin%200004.jpg

சினிமா சிலுக்கு டிப்பான் டான்ஸ் நிகழ்சிகளும் இதையே உறுதி செய்கின்றன....

எனவே கிடைப்பது வரை லாபம் என கருதி கொடுப்பதை வாங்கி கொண்டு... நாலு வெள்ளை தோல் டான்சை பார்த்தமா கைத்தட்டியமா என்று போகவேண்டும்... இந்திய கூட்டமைப்புக்கு இஞ்சி மரபா கொடுக்க தயாராகவேண்டும் வஞ்த்தினை யும் ஓர்மத்தினையும் நெஞ்சில் நிறுத்ததல் வேண்டும்.. நன்றி விசுவாசம் தேவையில்லை..

red-fox-sleeping.jpg

நரிக்கும்.. நரியாக மாறவேண்டும்

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.