Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடு கடந்த தமிழீழ அரசுக்கு பிரதமர்!

Featured Replies

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களால் மேலைநாடுகளில் இருந்து தேர்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு அமைக்கப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான பிரதமராக விஸ்வநாதன் உருத்திரகுமாரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் உள்நாட்டுப் போரில் விடுதலைப்புலிகள் தோல்வியடைந்ததை அடுத்து வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்களால், இலங்கையில் தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தைக் கொண்டு நடத்துவதற்கென உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு மேலை நாடுகளில் உள்ள தமிழர்கள் மத்தியில் தேர்தல்களை நடத்தி இந்த நாடுகடந்த தமிழீழத்துக்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்தது.

இந்த பிரதிநிதிகள் அமெரிக்காவில் ஐ நாவுக்கு அருகே உள்ள பிளாஸா ஹோட்டலில் கூடி ஒரு நாடாளுமன்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறும் அந்த அமைப்பின் அறிக்கை ஒன்று அந்த நாடாளுமன்றத்துக்கான சபாநாயகராக கனடாவைச் சேர்ந்த பொன். பால்ராஜ் என்பவரும், துணை சபாநாயகராக சுவிற்சர்லாந்தைச் சேர்ந்த சுகன்யா புத்திரசிகாமணி என்பவரும் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் அறிவித்துள்ளது.

இருந்த போதிலும், இதுவரை எந்தவொரு தனியான நாடோ அல்லது ஐக்கிய நாடுகள் மன்றம் போன்ற அமைப்புக்களோ இந்த நாடாளுமன்றத்தை அங்கீகரித்ததாக தெரியவில்லை.

இது ஒரு சட்டவிரோதமான அமைப்பு என்று இதனை இலங்கை அரசாங்கம் முன்னர் அறிவித்திருந்தது.

இலங்கையிலுள்ள தமிழர்களுக்காக இந்த அமைப்பு போராடுவதாக கூறுகின்ற போதிலும், இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு இந்த அமைப்பு பற்றி பெரிதாக தெரிந்திருக்கவில்லை என்று இலங்கை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

http://www.bbc.co.uk/tamil/news/story/2010/10/101002_ruthra.shtml

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த தமிழீழ அரசுக்கு பிரதமராய் தெரிவு செய்யப்பட்ட உருத்திரகுமாருக்கு வாழ்த்துகள்

  • தொடங்கியவர்

சவால்கள் பலவற்றை உடைத்தெறிந்து தடைகளை தாண்டி சுதந்திர தமிழீழத்துக்கான இலக்குநோக்கிய வெற்றிப் பாதையில் காலடி எடுத்து வைத்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசு......

[ சனிக்கிழமை, 02 ஒக்ரோபர் 2010, 04:19.54 பி.ப | இன்போ தமிழ் ]

புதிய பிரதமராக உருத்திரகுமாரன்:

"கூட்டுச் சதிகள்" "நம்பிக்கைத் துரோகங்கள்" "அவதூறுகள்" "வன்மப் பிரச்சாரங்கள்" "அச்சுறுத்தல்கள்" "கொலை மிரட்டல்கள்" என சவால்கள் பலவற்றை உடைத்தெறிந்து தடைகளை தாண்டி சுதந்திர தமிழீழத்துக்கான இலக்குநோக்கிய வெற்றிப் பாதையில் காலடி எடுத்து வைத்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசு......

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது பிரதம அமைச்சராக விஸ்வநாதன் உருத்திரகுமாரன் நாடாளுமன்றத்தினால் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான பிரதிநிதிகள் செப்ரம்பர் 29ம் நாள் தொடக்கம் ஒக்ரோபர் 1ம் நாள்வரையான மூன்று தினங்கள் கூடி அவ்வரசுக்கான அரசியலமைப்பினை அங்கீகரித்ததுடன் தமக்கான பிரதம அமைச்சரையும் தெரிவுசெய்தனர்.

இதனைத்தொடர்ந்து அமைச்சரவையினை உருவாக்கும் செயற்பாடுகள் தொடர்ந்தன.

நியூயோர்க் நகரில் ஐக்கிய நாடுகள்சபைக்கு அருகாமையிலுள்ள பிளாசா ஹோட்டலில் ஒன்றுகூடியுள்ள பிரதிநிதிகளுடன் பரீஸ், இலண்டன் மாநகரங்களில் உள்ள பிரதிநிதிகளும் தொலைக்காட்சி தொடர்பாடல் மூலம் இணைந்தனர்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உரமாகிப்போன உயிர்களுக்கு மௌனாஞ்சலி செலுத்துவதுடன் அமர்வுகள் ஆரம்பமாகியது.

ஐக்கிய அமெரிக்க நாட்டு முன்னைநாள் சட்டமா அதிபர் றாம்ஸி கிளார்க், மலேசிய பினாங் மாநில பிரதிமுதலமைச்சர் பேராசிரியர் இராமசாமி, மனித உரிமைகள் மற்றும் முரண்பாடுகள் தீர்வு ஆகியவற்றிற்கான சர்வதேச விற்பன்னரும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், ஐக்கியநாடுகள் சபை ஆகியவற்றிற்கான ஆலோசகரும் கொலம்பியா பல்கலைக்கழக மனித உரிமைகளுக்கான கற்கைமையத்தின் வருகைதரும் கல்விமானுமான பேராசிரியர் எல்.பிலிப், அமெரிக்க பல்கலைக்கழகத்தின் வாசிங்டன் சட்டக்கல்லூரி UNROW மனிதஉரிமைகள் சார்ந்த சட்டமுறைநிவாரண நிறுவகத்தின் நிறைவேற்றுபணிப்பாளர் அலி பெய்டவுன் ஆகியோரின் உரைகளுடன் அமர்வு ஆரம்பமாகியது.

http://www.infotamil.ch/ta/view.php?2e3YOECca42ld4Ke4b42EQ6ce2be0AO2cd4Kco6200aUoMSYde23AYJJ0cd2qgmAd0

  • தொடங்கியவர்

இலங்கை அரசுக்கு தற்பொழுது ஏற்பட்டுள்ள சவால் யாதெனில், இலங்கையில் விடுதலைப்புலிகளின் கொள்கைகளைச் சார்ந்திருந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை மேலும் உடைப்பதுடன், பலமாக தளமமைத்திருக்கும் ஈழப்போராட்டத்தின் கட்டமைப்பு வலையத்தைக் கொண்டுள்ள புலம்பெயர் நாடுகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசேயாகும்.

இருப்பினும் நாடுகடந்த தமிழீழ அரசை உடைப்பதற்கான பொறிமுறைகளை இலங்கை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றதென்பதை கவனத்திற்கொள்ள வேண்டியுள்ளது. கடந்த September 29 – Oktober 01 வரை நடைபெற்ற நாடுகடந்த தமிழீழத்தின் செயலமர்வுக் கூட்டத்தில், செயலவைத் தெரிவுகள் இடம்பெற்றபோது சர்ச்சைகள் எழுந்ததாகவும் கூட்டத்தில் இருந்த அங்கத்தவர்கள் சிலர் வெளிநடப்புச் செய்ததாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. இதனை முதன்முதல் செய்தியாக்கி கரிசனையுடன் வெளியிட்ட ஊடகம் இலங்கையின் சிங்கள நாளேடான ‘திவயின’வாகும். இதிலிருந்து விளங்கிக்கொள்ள கூடியது யாதெனில்:

* நாடுகடந்த தமிழீழ அரசின் உடைவில் இலங்கை அரசு கொண்டுள்ள கரிசனை

* கூட்டம் நடந்து முடிந்த மறுநிமிடமே இலங்கை அரசின் நாளேட்டிற்கு செய்தி சொல்லப்பட்டமை

* நாடுகடந்த தமிழீழ அரசினுள் இலங்கை அரசு உட்புகுந்துவிட்டது என்ற உண்மை

நிறுவனமயப் படுத்தத் தொடங்கும் இந்த அமைப்பை எப்படியாவது பிளவுபடுத்த வேண்டுமென இலங்கை அரசு மேற்கொள்ளுகின்ற செயற்திட்டத்திற்கு தமிழ்மக்களின் ஒற்றுமையீனம் பலமாக அமைகிறது.

நாடுகடந்த தமிழீழ தெரிவுக்கு வாக்களித்ததோடு மட்டும் புலம்பெயர்வாழ் தமிழ் மக்களின் கடமைகள் நிறைவு பெற்றதென அசண்டையீனமாக இருப்பது பெரும் பின்னடைவைத்தரும். நாடுகடந்த தமிழீழ அரசிற்கெதிராக பிளவையேற்படுத்த முயலும் சக்திகளை இனம்கண்டு அவர்களுக்கெதிரான ஜனநாயக நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் காலத்தின் தேவையாகும். இல்லையேல் இன்னுமொரு முள்ளிவாய்க்கால் நிலைக்கு நாமே வித்திட்டவர்களாவோம்.

வந்த ஒரு மின்னஞ்சலில் இருந்து ( ஒரு பகுதி மட்டுமே பிரசுரிக்கப்பட்டது )

ஆக்கம்: கனக கடாட்சம்

trincokadatcham@yahoo.com

Edited by akootha

  • தொடங்கியவர்

அன்பின் ஜெயானந்த மூர்த்தி அவர்களே ,

தாங்கள் கொடுத்ததாக கூறப்படும் பேட்டி தமிழ் ஊடகங்கள் சிலவற்றில் , அதுவும் ஏற்கனவே சில தனிமந்தர்களின் கைக்குள் இருந்து தமிழரின் ஒற்றுமையை குலைக்கும் குரலையே கொடுத்துவரும் ஊடகங்களில் வெளிவந்து உள்ளது .

ஒரு நாடு கடந்த அரசு என்ற முயற்சியில் வேட்பாளராக முன்வந்த நீங்கள் மன சுத்தியுடன் இதய பூர்வமாக தமிழ் மக்களுக்காக போட்டி இடவில்லை என்பதை உங்கள் குரல் வெளிகாட்டி நிற்கிறது ! ஒன்றில் முதலிலேயே ஒதுங்கி இருக்க வேண்டும் இல்லை நீங்கள் மக்களுக்கு விநியோகித்த தேர்தல் வாவ்குருதிக்கு ஏற்ப நடந்து இருக்கவேண்டும். லண்டன் ஏற்கனவே இருந்த பிரபல்யம் காரணமாக நீங்கள் அதிக வாக்கு பற்று இருந்தமை ஒன்றும் வியப்பல்ல ஆனால் அதையே பெரிதாக நினைத்து , நாடு கடந்த அரசை உடைப்பதற்காக உள்ளே நுழைந்த நோக்கத்திற்காக பயன்படுதியதாகவே , உங்களுக்கு வாக்களித்த நான் இன்று உணர்கிறேன்.

அதற்காக என்னை ஏதோப் உருதிரகுமரனின் வாரிசு என்று நினைத்து விடாதீர். நாளை தமிழ் தேசியத்தை கைவிட்டால் யாவருக்கும் ஒரே நிலைமையே. இன்று அவர் தேசிய கொடியின் கீழ் பல தமிழர் அல்லாத மனித உரிமையாளருடன் இணைந்து அந்த அமைப்பை முன்னெடுப்பதை நாங்கள் வாழ்த்தி நிற்கிறோம் . நீங்கள் , ஒன்றுமே செயாமல் , மக்களை கூட சந்திக்க மறுத்து , மேடைகளில் மட்டும் வீர வசனம் பேசும் இலங்கை அரசியல் மரபை இங்கே பின்பற்ற வேண்டாம். பதவி ஆசை வேண்டாம் என்றால் என் உங்களுக்கு தமிழீழ அரசு மேல் இவ்வளவு கடுப்பு ? பேசாமல் பதவி வேண்டாம் , ஆனால் நாங்கள் பின்னால் நின்று உரம் கொடுக்கிறோம் என்றும் , மக்களை சந்தித்து அவர்கள் கருத்து இது என்று உறுதியாக , ஒரு அரசை பலபடுத்தி அல்லவா இருக்கவேண்டும் ?

உங்களை நாங்கள் தெரிவு செய்த பிறகு , ஒதுங்கி இருப்பது பிற்போக்குத்தனம் . அன்றே போட்டி இடாமல் இருந்து இருக்கலாம். வெளியில் நின்று தமிழீழ அரசை அழிக்க பாடுபட்டு இருக்கலாம். உள்ளே நுழைந்து நீங்கள் நடத்திய தாக்குதல் ஒன்றும் புதிது அல்ல. தமிழர்கள் பல காலமாக கண்டதுதான் . தமிழ் அறிவு உள்ளவர் மட்டும் , தேசிய போராட்டத்தில் உழைத்தவர் மட்டும் இங்கே போராட முடியாது. இது அனன்யா மண்ணில் உள்ள அமைப்பு . ஆங்கில அறிவு திறமை , பிரஞ்சு , ஜேர்மன் மொழி திறமை என்பனவும் வேண்டும். உருத்திர குமாரன் பின்னால் நிற்கும் கல்வி அறிவு கூடயவரின் பலம் நிச்சயம் வேண்டும் . நான் லண்டன் ஊர்வலங்களில் பிடிக்க தடை போட்ட அதே புலிக்கொடியை ஒருவன் நியூ யோர்க் இல் ஏற்ற உலகம் பார்த்து கொண்டு இருக்கிறது என்றால் , அவன் எவ்வளவு பலத்துடன் செயற்படுகிறான் என்பது உண்மை . நாங்கள் அப்படி பட்டவனை பார்த்து மெச்ச வேண்டும் .

புலத்தில் புலிகளுக்காக உழைத்த பலர் ஒழித்து வாழ வேண்டிய நிலையில் , உலகின் முன்னால் நிமிர்ந்து நிற்கும் அந்த அமைப்புதான் முதுகெலும்பு . அந்த தலைவர்கள் தம்மால் முட்யாததை தமிழீழ அரசு செய்கிறதே என்று வாழ்த்த வேண்டும் . உங்களை முடிக்கி விட கூடாது . தாயகத்தில் தேசியம் கதைக்க முடியாது என்று ஓடி வந்த பிறகு , உங்கள் பலம் அங்கே ஒடுக்கப்பட்டு விட்டது. இனி நீங்கள் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்ற அளவில் குரல் கொடுக்க முடியாத நிலமை இருந்த பொது , இந்த தமிழீழ அரசு ஒரு சிறந்த வாய்ப்பு. பயன்படுத்தி , உங்களை இணைத்து கொள்ளுங்கள். இல்லை ஓடி ஒழிவதே உங்கள் வழி என்றால் , இன்று உங்களுக்கு இலங்கையின் பாராளுமன்ற உருபினரகா இருந்த அந்த பலம் எப்படி தொலைந்து போனதோ , அதே போல் புலத்திலும் ஒன்றும் இல்லாமல் வெறும் வங்காளம் போகும் நபராக முத்திரை குத்த படக்கூடும்.

நாங்கள் இளையோர் வெறும் வார்த்தைகளில் அரசியல் செய்பவரை நம்ப தயாராக இல்லை. செயல் வடிவம் வேண்டும் . இது உருக்குலைக்கும் நேரம் அல்ல , உறவாக்கும் நேரம் . இங்கே கருத்து முரண்பட்டு இல்லை . தமிழ்தேசியத்தை விட வேறு ஒரு கொள்கையும் இல்லை . தமிழீழ கோடி தவிர ஒரு கொடியும் இல்லை . தலைவனை தவிர ஒரு தலைவனும் இல்லை . பழைய வெளி நடப்பு அரசியலில் நீங்கள் இழந்த்ததே அதிகம் . தாய் மண்ணில் உங்கள் பலம் இல்லை . ஓடி வந்து விட்டீர்கள் . பின் புலம் பெயர் மண்ணில் பழைய பாராளுமன்ற உறுப்பினர் என்ற மதிப்பு. அதுவும் இனி கரைந்து விடும் . இனி தமிழீழ அரசில் இருந்து உங்கள் வெளி நடப்பு உங்களை ஒரு மூலையில் இருத்தி விடும் . அதன் பின் நீங்கள் மேடை ஏற அழைப்பு வராது . வந்தாலும் பலர் உங்கள் வாய் அரசியல் வாதி என்று பட்டம் சூட்டி விடுவர்.

அதனால் உங்கள் அறிவுக்கும் தகுதிக்கும் தகுந்த ஒரு பகுதியை தமிழீழ அரசில் பெற்று கொண்டு தமிழீழ பயணத்தை விரிவாக்குங்கள். உங்கள் பின்னால் இயக்கம் சக்திகளுக்கும் எடுத்து கூறுங்கள். தேசிய தலைவரின் தெரிவு உருத்திரகுமாரன் என்றால் அங்கே நிச்சயம் எதோ ஒன்று இல்லாமல் இல்லை. தலைவர் நன்றாக ஆராய்ந்து எடுத்த முடிவு . இன்று எங்களை சட்டத்தால் முடக்கி வைத்துள்ள வேளையில் அப்படிபட்டவர்கள் முன்னெடுக்கட்டும் . யாராவது தவறு செய்தால் நாங்கள் விடமாட்டோம் ! அதை அவர்களும் அறிவர் ! அதனால் இனியும் ஒதுங்கி ஓடும் அரசியல் செயாமல் , மக்களை சந்தியுங்கள் ! எங்கே எப்போது என்று கூறுங்கள் ! நாங்கள் வருகிறோம் உங்களை சந்திக்க ! உங்களோடு விவாதிக்க ! உங்கள் பிரச்சினை என்ன என்று கேட்டறிந்து உங்களுக்கு உதவ மக்கள் காத்திருக்கிறோம் ! இங்கே மக்களுக்கு பிரச்சினை இல்லை !

உங்களை போன்றவர்களின் பிரச்சினை தான் எங்கள் பிரச்சினை ! இங்கே ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் பிரச்சினையை மக்கள் தீர்க்கவேண்டிய நிலைமை !

வந்த ஒரு மின்னஞ்சலில் இருந்து

ஆக்கம்: ராஜ் சுதன்

  • தொடங்கியவர்

1. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது பாராளுமன்ற அமர்வை நிறைவு செய்த பிரதிநிதிகளுக்கு கனடா நாட்டில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

2. இந்த மாபெரும் பொதுக்கூட்டம் ஐப்பசி மாதம் 2ம் திகதி சனிக்கிழமை கலாநிதி ராம் சிவலிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

3. கலாநிதி ராம் சிவலிங்கம் தனது தலைமை உரையில் " முள்ளிவாய்க்கால் முடிவிற்குப் பிறகு, நாம் என்னசெய்யப் போகிறோம்? எமது அடுத்த நகர்வுகளை எப்படி முன்னெடுப்பது? என எண்ணிய வேளை, எம் தேவையை அறிந்தது தேடிவந்த கருத்தான் இந்தத் தேசியத் தலைவரின் சிந்தனையிலான நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.

4. மண்டபம் நிறைந்த மக்களின் பொதுக்கூட்டத்தில் கணணி ஊடாக உரையாற்றிய எமது மதிப்புக்குரிய முதலாவது பிரதம மந்திரியும், பிரபல வழக்கறிஞருமான உருத்திரகுமாரன் விசுவநாதன் தனது உரையில்:

அமெரிக்க பல்கலைக்கழக மனித உரிமை அமைப்பும், ஐக்கிய நாடுகள் சபையிலும், அமெரிக்க ராஜாங்க திணைக்களத்திலும் கடமையாற்றிய கொலம்பியா பல்கலைக்கழகப் பேராசிரியர் டேவிட் பிலிப்பும், அமெரிக்க சட்டமா அதிபர் ராம்சி கிளாக்கும் எமது இரண்டாவது அமர்வில் கலந்துகொண்டமை சர்வதேசத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்குக் கிடைத்த அங்கீகாரத்தின் அறிகுறியாகும்.

5. வெளி நாட்டிலிருந்து வந்த வாழ்த்துச் செய்திகள், குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து வந்த வாழ்த்துச் செய்திகள், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மீது அந்த நாட்டின் தலைவர்களும் மக்களும் எமக்குத் தரும் அளவில்லா அன்பையும், அக்கறையுடனான ஆதரவையும் எமக்கு எடுத்துக்காட்டுகிறது.

6. எமது அமைச்சரவைத் தேர்வு திறமை, விசுவாசம், கண்ணியம் என்ற அடிப்படையிலும், நாடுகடந்த அரசாங்கம் என்ற அடிப்படையிலும்தான் அமையும். இத்தேர்வு அமைப்பு ரீதியாகவோ அல்லது நாடுவாரியாகவோ அமையாது என்பதையும் உறுதியாகக் கூறுகிறேன் என்றார் உருத்திரகுமாரன் விசுவநாதன்.

7. இந்த மண்டபம் நிறைந்த மக்களின் பொதுக்கூட்டம். பேராசிரியர்கள் பீற்றர் சாக். சிறீகந்தராஜா, செல்வநாதன், டாக்டர் வசந்தன், டாக்டர் ஜெயலிங்கம் போன்றோரின் வருகையும், அவர்களின் சிந்தனை நிரம்பிய சிறப்புரைகளும் மக்களின் மனதைக் கவர்ந்தது மட்டுமல்ல அவர்களை மேலும் உற்சாகமடைய வைத்தது.

8. அர்த்தமுள்ள தேசியப் பாடல்களுடனான நடன நிகழ்வுகளும், பல நாட்டுப் பிரதிநிதிகளின் உணர்ச்சி பூர்வமான சொற்பொழிவுகளும் இவ்விழாவை மேலும் சிறப்படைய வைத்தது.

9. நாடுகடந்த தமிழீழ அரசங்கத்தின் உப அவைத் தலைவரும், சுவிஸ் நாட்டைச் சேர்ந்தவருமான சுகன்யா ஆறுமுகத்தின் நன்றி உரையுடன் இக்கூட்டம் இனிதே முடிவுபெற்றது.

  • தொடங்கியவர்

TRANSNATIONAL GOVERNMENT OF TAMIL EELAM becomes alive!

Obstacles YES, Obstructions NEVER, Discussions YES, Disputes NEVER- Subramaniam Masilamany

We have achieved something very significant. 20 countries and 3 billion people got together and severed our head off, but the chicken kept running around, it did not die. That was then in May 2009. This is now, the chicken got it head back within 15 months that shows to the world that we are a race of people who never ever give up. Few Tamils are like the trouble makes in a stadium booing at the players but the players do not pay any attention. We must also remember not to pay attention, but must invite them to participate and make their contribution. These people are Tamils, not any one else. Here is my challenge to those who are against the Tamils to come forward and offer a better solution to our dilemma.

We Tamils must become magnanimous and support every effort that is made to free our people. Lets accept TGTE as the government and others like GTF in the UK and Tamil Congress in Canada and others to form the opposition to this government. If you think you have a better solution offer to the people. They can run an election and prove to us that they got more votes than TGTE then we will support you. Be a true opposition but don't be an obstruction. As it is, others have to organize their own election and show us that they got something better. BUT stop bickering and exposing your weakness, only a weak man talks from his easy chair. Come out, go on the media, there are several ways and expose and express yourself, instead of hatching conspiracies and coups. So any one who is not with TGTE can prove to us that you have a better solution, if you don't have one please come join us, but don't spoil the pride and esteem of your future generation.

I asked a friend of mine to help me to purchase a computer to be sent to Sri Lanka for Our Tamil people, My Tamil people, His Tamil people and I told him it will go through TNA, our only elected legal representatives he said I don't want to do it. Because he is against TNA, then who else do we have in Sri Lanka? This man is an anti-Tamil. Why? he does not know his identity, he has no identity, he is neither Singhalese nor Canadian. He is a non descript. He is drifting like ship without a captain, a sail, a rudder and a compass.

We also must learn to accept the views of people.He is good, she is okay, so and so is bad are discriminatory attitudes. Look at it this way, if you think you are right, then I cannot be wrong, because in my own way I am right and you are wrong. Accepted? So stop judging people and see the goodness in them. We are all very intelligent and capable in our own way. Instead of looking for smartness look for what way someone is smart. I am smart in helping people, you are smart in math, she is smart is raising a family. When we look at people from their smartness we accept every one. This is something Tamils have to learn. I asked a Tamil surgeon, are you are smart surgeon? no my mother wanted me to be surgeon. It is like asking acorn to be a red wood instead of an oak.( Acorn is the seed of an Oak)

I had my reservation about TGTE, but they have done a marvelous job, it is a good beginning, now every Tamil must participate and make sure it is improved, the officers stay within their mandate and there is no abuse of the system. Democracy works when all participate.

I showed this constitution to several of my non Tamil friends and they were amazed to see that we were able to formulate a constitution.

IT IS A WIN FOR ALL TAMILS ALL OVER THE WORLD.

Subramaniam Masilmany

info@worldclasstamil.com

www.worldclasstamil.com

  • தொடங்கியவர்

நாடுகடந்த தமிழீழ அரசுக்கு ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு அமெரிக்க தமிழ்ச்சங்கம் ஆகியன வாழ்த்து தெரிவிப்பு!

நாடுகடந்த தமிழீழ அரசை வாழ்த்துவதுடன் ஐக்கிய நாடுகள் சபையுடனும் மேற்கத்தைய நாடுகளுடன் இராசதந்திர தொடர்புகளை ஆரம்பிக்குமாறு இலங்கை தமிழ்ச்சங்கம்(அமெரிக்கா) வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளது.

தமிழர் பிரதேசங்களில் இராணுவமயப்படுத்தலை இல்லாமல்செய்தல்,

வடக்கு கிழக்கு தமிழர் பிரதேசங்களில் அபிவிருத்திகளை மேற்கொள்ளல்,

சிறையைிலுள்ள விடுதலைப்புலி போராளிகளை விடுவிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளல் போன்ற விடயங்ளில் கவனம் எடுக்குமாறு கேட்டுள்ளது.

இதேவேளை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விஸ்வநாதன் ருத்ரகுமாரனுக்கு ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு தமது வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்கிறது. வெள்ளிக்கிழமை அன்று ருத்ரகுமாரனுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்வாழ்த்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"மிக முக்கியமான மற்றும் சவாலான பொறுப்பான இப்பதவியில் சிறப்பாக செயலாற்றுவதற்கு எமது வாழ்த்துக்கள்" என்று அமெரிக்கத் தமிழர்கள் வாழ்த்துகிறார்கள். "இந்த நிகழ்வு ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும்" என்று தெரிவித்துள்ள அமெரிக்கத் தமிழர்கள், "எதிர்காலத்தில் தமிழர்களாகிய எமக்காக எதிர்காலம் எதை வைத்திருக்கும் என்பது எவருக்கும் தெரியாது, ஆனால் நவீன தமிழ் வரலாற்றில் ஒரு முக்கியமான புள்ளியாக இருப்பதை இது நிரூபிக்கும்" என்றும் நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை அரசாங்கத்திலுள்ள குறைபாடுகளை முழு உலகுமே அறிகிறது. அவர்களது கைகளில் தமிழர்களின் இரத்தக்கறை உள்ளது. அவர்கள் தங்களது சொந்த அரசியலமைப்பைத் திணிக்கிறார்கள். அவர்கள் தமிழர்களைக் கொடுமைப்படுத்துகிறார்கள். ஜனநாயகத்துக்கு விரோதமான நடவடிக்கைகள் அனைத்தையுமே இவர்கள் முன்னெடுக்கிறார்கள். உலகத்தையே இலங்கை அரசு அச்சுறுத்துகிறது.

இவ்வாறிருக்கையில் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒரு அமைப்பு இருப்பது சிறந்தது என்று நாம் நினைக்கிறோம் எனக் குறிப்பிட்ட அமெரிக்க தமிழர்களின் பேச்சாளர் அதற்குரிய அமைப்பே நாடு கடந்த தமிழீழ அரசாகும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் குறிக்கோள்களையும் அந்தக் கடிதம் குறிப்பிட்டுக் காட்டியுள்ளது.

ருத்ரகுமாரன் செய்யவேண்டியவை ஏராளம் உள்ளன. ஆனால் அவற்றை அவர் செவ்வனவே செய்வார் எனவும் ஒபாமாவுக்கான அமைப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது. அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குறிக்கோள்கள் ஆவன:

*இலங்கையின் வடக்கிழக்கிலுள்ள தமிழர்களுக்கான சுதந்திர நாட்டைப் பெறுவது

*கிழக்குத் தீமோர், எரித்ரியா, மொன்ரெனெகுரோ மற்றும் தென் சூடான் போன்ற புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சில தனிநாடுகளுடன் ஆலோசித்து அவை போன்ற பொதுவான விளைவை உண்டுபண்ணல்.

*அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் மற்றும் உலகின் எந்தப் பாகத்திலுமுள்ள அதிகாரபூர்வ மற்றும் பகுதி அதிகாரபூர்வ அமைப்புகளின் அங்கீகாரத்தை வேண்டுதல்.

*சிங்களவர்களை எமது தமிழர்களின் பூர்வீக நிலத்தில் குடியேற்றி எமக்குரிய பாரம்பரியத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதற்கு எதிராகக் குரல்கொடுத்தல்.

இக்கடிதத்தின் நகல்கள் அமெரிக்க ராஜாங்க துணைச் செயலாளர் ரொபேர்ட் பிளேக், இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் பற்றீசியா ஏ. புட்டெனிஸ் இந்திய பிரதமர் டாக்டர். மன்மோகன் சிங், தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி, அ.இ.அ.தி.மு.க செயலாளர் டாக்டர் ஜெயலலிதா ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இக்கடிதத்தின் முழுவடிவத்தையும் வாசிக்க www.Tamilsforobama.com/Letters/Letter_to_Rudrakumaran10810.html என்ற இணையத்துக்குச் செல்லவும்.

ஒபாமாவுக்கான தமிழர்கள் என்ற அமைப்பு அமெரிக்கத் தமிழர்களின் அரசியல் ரீதியில் செயற்படுகின்ற ஒரு அமைப்பாகும். இலங்கை அரசாங்கத்திடமிருந்து தமிழர்களுக்கென அரசியல் ரீதியான தனிநாடு உள்ளடங்கலாக ஒரு இறுதியான தீர்வு அவசியம் என்று ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு நம்புகிறது.

இவ்வமைப்பைத் தொடர்பு கொள்ள (617) 765-4394 என்ற இலக்கத்தில் தொடர்பு கொண்டு பேசவும் அல்லது ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பின் தொடர்பாடல் பணிப்பாளருக்கு செய்தி அனுப்பவும்.

============================================================

Re: Congratulation on your Election

October 7, 2010

Dear Prime Minister Rudrakumaran,

We would like to congratulate you on your election as the first prime minister of the Transnational Government of Tamil Eelam. We wish you well in what will probably be a vital and challenging responsibility.

We would like to mention a few goals which we hope the TGTE will remember. These include:

Ultimately gain independent state for the Tamil northeast in Sri Lanka.

Consult and perhaps make common cause with some newly independent nations such as East Timor, Eritrea, Montenegro, and whatever southern Sudan becomes.

Seek recognition from the US state department and official and semi-official bodies anywhere in the world.

Raise a voice against the cultural damage being done to our Tamil homeland by the aggressive resettlement of our lands by the Singhalese.

Thank you.

Sincerely,

Tamils for Obama

Copies: US Undersecretary of State Robert Blake, US Ambassador to Sri Lanka Patricia A. Butenis, Prime Minister of India Dr. Manmohan Singh, Chief Minister of Tamil Nadu Dr. M. Karunanidhi, AIADMK general secretary Dr.J.Jayalalitha

  • தொடங்கியவர்

தாயக நோக்கு (CMR 101.FM Canada )

பிரதி சபாநாயகர் பொன் பாலராஜனுடனான நேர்காணல்:

http://www.thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=5084

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.