Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நக்கீரன்: மக்கள் பத்திரிக்கையா? மஞ்சள் பத்திரிக்கையா?

Featured Replies

குமுதம் ரிப்போர்ட்டர் மற்றும் ஜூனியர் விகடனின் அதிவேக வளர்ச்சியினால் தளர்ந்து போன நக்கீரன் தன்னுடை ரேட்டிங்கை பலப்படுத்தும் விதத்தில் அதனுடைய சமீபத்திய போக்கு மிகவும் மோசமாக போய்விட்டது. வாராவாரம் கடைகளில் மற்றும் சாலைகளில் ஒட்டப்படும் விளம்பர போஸ்டர்களை நீங்கள் பார்த்திருப்பீர்களேயானால் அதனுடைய தன்மை புரியும். முழுக்க முழுக்க ஆபாசம் நிறைந்த செய்திகளை பச்சையாக படம்போட்டு விளம்பரப்படுத்துகிறது.

பேனர்களில் ஒட்டப்படும் கள்ளக்காதல் மற்றும் செக்ஸ் சம்பந்தப்பட்ட செய்திகளினால் மக்கள் ஈர்க்கப்பட்டு அந்த பத்திரிக்கையை வாங்கிப் பார்த்தால் அது முழுக்க முழுக்க இவர்களின் குளிர்சாதன அறையில் எழுதப்பட்ட கற்பனைகளாக இருக்கும். அல்லது இப்படியெல்லாம் அங்கே நடக்கிறது, இங்கே நடக்கிறது என தங்களின் பேனாவிற்குள்ளே காம மையை ஊற்றி முழுக்க முழுக்க ஆபாசக் குப்பைகளை சரோஜாதேவி மஞ்சல் பத்திரிகைக்கு ஈடாக எழுதி வருகிறது நக்கீரன்.

ஜனநாயகத்தின் முக்கியத்தூண்களில் ஒன்றான பத்திரிகை துறையை தன் சுயலாபத்திற்காக முழுக்க முழுக்க ஆபாசம் கலந்து விருந்து படைக்கும் நக்கீரன் சில நேரங்களில் வேறுவிதமான டெக்னிக்குகளையும் கையாளுவது உண்டு. ஏதாவது ஒரு மதத்தை சம்பந்தப்படுத்தி அப்படி இப்படி என எழுதி பரபரப்பை உண்டாக்கி காசு பார்க்கும் வேலையை தொடர்ந்து செய்துவந்தது. உதாரணமாக வீரப்பன் உயிரோடு இருக்கும் போது அவனை சந்திக்க செல்வதாகச் சொல்லிக் கொண்டு அந்த கதையை மெஹா சீரியல் ரேஞ்சுக்கு இழு இழு என இழுத்து கடைசி வரை காசு பார்த்தது.

வீரப்பனை பார்க்கப் போகும் வழியில் புலி வந்தது, பூனை வந்தது என புரூடா கதைகளை எழுதி கல்லாக் கட்டியது. ராஜ்குமார் கடத்தப்பட்ட விவகாரத்தில் நிறைய உள்குத்துகள் இருப்பதாக வீரப்பனிடம் ஏடாகூடமாக சிக்கிய நெற்றிக்கண் ஆசிரியர் பாயும்புலி பலவாறு போட்டுக்கொடுக்கவே இனி இங்கே கோபால் வரவே கூடாது என சீறிப்பாந்தான் வீரப்பன். அதன் பிறகு பேராசிரியர் கல்யாணி மற்றும் நெடுமாறன் உள்ளிட்டவர்கள் ராஜ்குமாரை மீட்டு வந்தது வேறு கதை. மீட்கப்பட்டு சென்னைக்கு வந்த ராஜ்குமார் கோபாலை ஏன் சந்திக்காமல் போனார் என்று அன்றைக்கு எழுந்த கேள்விகளுக்கு இன்றைக்கு வரை விடையே இல்லை.

இந்த நிலையில் சமீபத்தில் பலான வழக்கில் சிக்கிய ஹைடெக் சாமியார் நித்யாவின் வீடியோக்களின் டிரைலரை தன் தளத்திலே ஓடவிட்டு முழுபடத்தை பார்க்க வேண்டுமானால் உடனே ஆன்லைன் சந்தாதாரர் ஆகுங்கள் என பச்சையாக விளம்பரம் செய்து ஒரே நாளில் 30 லட்சம் ரூபாய்க்கும் மேல் சந்தா தொகையை அள்ளிய ஒரே பத்திரிகை நக்கீரன் தான். நாட்கள் ஆக ஆக நித்யானந்தாவின் விசயம் சாயம் போன கதையாக மாறி வர, உடனே பரபரப்பை உண்டாக்கும் விதத்தில் " நான் தான் நபிகள் நாயகம்" என தலைப்பிட்டு ஒரு கட்டுரையை எழுதியது. அதற்கு என்ன ஆதாரம் என கேட்ட போது நித்யானந்தா அப்படித்தான் சில நேரங்களில் கூறிக்கொள்வாராம் என யாரோ சொன்னதாக யாரோ கேட்டதாக தன்னுடைய கற்பனையை மெய்படுத்தப் பார்த்தது நக்கீரன்.

நக்கீரனின் போக்கு மோசமாவதை உணர்ந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஒரு மாபெரும் முற்றுகையை நடத்தி நக்கிரனுக்கு இறுதி எச்சரிக்கை கொடுத்தது. இதனால் ததஜ மீது கடும் கோபத்தில் இருந்த நக்கீரன், சென்றவாரம் யாரோ சொன்னதாக ஒரு பேட்டியை வெளியிட்டது. அதிலே ததஜவின் நிறுவனத்தலைவர் பி.ஜெயினுலாபிதீன் தான் முன்னர் நடந்த எல்லா கலவரங்களுக்கும் காரணம் எனவும், அவருக்கு மதவெறியைத் தூண்டுவது தான் வேலை என்றும் வழக்கம் போல தன் வேலையைக் காட்டியது நக்கீரன்.

இதற்கு மறுப்பு வெளியிடச் சொல்லி ததஜ கேட்டுக்கொள்ள பழைய காட்டத்தில் எதையுமே கண்டு கொள்ளாத நக்கீரனை கண்டித்து இன்று 04/10/2010 திங்கட்கிழமை தமிழகம் முழுவதும் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் என்றும், சென்னையில் ஜானிஜஹான் கான் சாலையில் அமைந்திருக்கும் நக்கீரன் அலுவலகம் முற்றுகை என்றும் அறிவித்து எல்லா இடங்களிலும் ஜனநாயக ரீதியில் ஆர்ப்பாட்டம் மற்றும் முற்றுகை நடந்து முடிந்தது. எந்த இடங்களிலும் போக்குவரத்துக்கோ, பொதுமக்களுக்கோ எவ்வித இடையூறும் இன்றி போராட்டங்கள் நடந்தது.

சென்னையில் நக்கீரன் அலுவலகம் முற்றுகை மீர்சாகிப்பேட்டை மார்க்கெட் அருகே மாலை 4 மணிக்கு துவங்கியது. மாலை 5.30 மணியளவில் அனைவரும் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டு திருவல்லிக்கேணி மாவட்டச்செயலாளர் முகம்மது யூசுப் கண்டன உரையாற்றினார்.

நன்றி :http://www.newindianews.com/view.php?2edRfm4c3dc036QAY3e4a4UC0AKca00avJOYA2cd42Amlv3a2ecAc4664de2eYOMo604bc3cYDR7d0

படங்கள் பார்வையிட

http://www.thedipaar.com/news/news.php?id=19227

  • கருத்துக்கள உறவுகள்

இழவு வீட்டில் சுண்டல் விற்பவர்கள்..

Che-Guevara-Rebellious14jun03.gif

அநீதிகளுக்கு எதிராக உன் உள்ளம் கொதித்தால் நீயும் என் தோழனே..- சேகுவரா

நிகர பொருளாதார தத்துவத்திற்க்காக போராடிய தோழர் சேகுவராவின் பிறந்த நாள் அன்று அவரது மூத்த மகள் அலைடா சேகுவரா ஒர் அறிக்கையை வெளியிட்டார்..

"என் தந்தையின் பெயரையும் படத்தையும் வணிக முத்திரையாக்காதீர்கள். பிரிட்டானிகா வோட்காவிற்கும் ஃபிஸ்ஸி பானத்திற்கும் ஸ்விஸ் கைபேசிக்கும் என் தந்தையின் படத்தை விளம்பரச்சின்னமாகப் பயன்படுத்துவது அவரை அவமதிக்கும் செயலாகும்.“நிகரமைப் பொருளியலுக்காகப் போராடியவரை மிகைத்துய்ப்பு வாதத்திற்குப் பயன்படுத்துவது முரண்பட்ட செயல். எங்களுக்குப்பணம் தேவை இல்லை. மரியாதைதான் தேவை”.

சேகுவேராவின் புகழ், வணிக நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்படுவதை அருவருத்தார் அவர் மகள்.

உற்சாக நிகழ்வோ இழவோ லாப நோக்குதான் முதலாளித்துவ நோக்கமாகும்.. இதில் மனிதம் நேர்மை என்று ஒரு வரைமுறையும் இல்லை.. தமிழ்நாட்டு தர்மங்களை பற்றித்தான் நாம் கூறவருகிறோம்.தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களை வணிகச் சின்னமாகத் தமிழ் நாட்டு இதழ்கள் பயன்படுத்துவதை நாம் பார்க்கிறோம். அட்டையில் அவர் படம் போட்டால் அமோக விற்பனை. அவர் பற்றிக்கட்டுரை வெளியிட்டால் கடைகளில் இதழ்கள் தீர்ந்து விடுகின்றன.

இந்தப்பின்னணியில் தான் அவர் பற்றிக் கட்டுக்கதைகள் எழுதத் தொடங்கினர் எழுத்தாளர்களும் இந்திய உளவுத்துறை ஒட்டுண்ணிகளும்.

வாரம் ஒருமுறை வன்னிக்குச் சென்று பிரபாகரனுடன் பிஸ்கட்டும் தேநீரும் அருந்திவிட்டுத் திரும்பியவர்கள் போன்ற தோற்றத்தை இவர்கள் ஏற்படுத்துகிறார்கள். இவர்களைக் கேட்டுக்கொண்டு தான் பிரபாகரன் அரசியல் உத்திகள் வகுத்தது போலவும், பிரபாகரன் சொற்படிதான் இவர்கள் இங்கே இயங்கியது போலவும் எழுதிக் கவர்ச்சி காட்டுகிறார்கள்.

3340qrd.jpg

அதிலும் ரா உளவாளியான பாதிரியின் அட்டகாசம் எல்லைமீறி சென்று கொண்டுள்ளது.. பலர் நமக்கு எதற்கு வம்பு? பலர் பிரபாகரனுடன் ஒன்றாக தங்கினாராம்.. டிபன் சாப்பிட்டாராம் என்று சொல்லி சிலாகிப்பதை காண கூடியதாக உள்ளது..ஆனால் மறைமுகமாக ஈழ இழவுக்கு காரணமான பொந்தியாவிற்கு கொடிபிடிப்பதை பலரும் விமர்சனம் செய்ய மறுக்கின்றனர். இவருக்கு எழுத இடமளித்து ஆக்கமும் ஊக்கமும் கொடுப்பது ஆட்சியாளர்களின் எடுபிடி நக்கீரன் நாளேடு. கொலைஞருக்கு துதிபாடுவதே முழு நேரக்கொள்கையாக கொண்டு திரியும் கோபாலுக்கு மே மாதற்கு பிறகுதான் சுக்கிரதிசை ஆரம்பித்தது.. வாரம் இரண்டு முறை வரும் இப்பத்திரிக்கையில் ஒரு முறையாவது ஈழம் குறித்த செய்தி வெளிவரும்.. யாராவது ஒருவர் தன் ஈழ பயணத்தை சொல்லி சிலாகிப்பார். பத்திரிகையும் அமோக விற்பனை.. கல்லா கட்டியாகிவிட்டது..

30204jk.jpg

பார்த்தது விகடன் அதுவும் இவர்களை போலவே திருமாவை வைத்து தன் 'கடமையை' ஆரம்பித்துவிட்டது முள்ளுவேலி தொடர் ஆரம்பித்து இப்போது வேலுபிள்ளை அஞ்சலியில் நான் என ஆரம்பித்துவிட்டார்.. விடுதலை புலிகளை ஆதரிப்பது போல எழுதுவது.. அவர்கள் அப்படி செய்திருக்கலாம்.. இப்படி செய்திருக்கலாம் என்று கடந்த கால நிகழ்வுகளுக்கு ஆலோசனைகள் வழங்குவது. முடிவில் இந்தியத்தை ஆதரிப்பது.. விடுதலைபுலிகளை தூற்றுவது.. இந்தியா இல்லாமல் ஒரணுவும் அசையாது என்ற மாயபிம்பத்தை கட்டமைப்பது.. இதுவே இந்த இந்தியத்தின் மாமாக்கள் செய்துவரும்

வேலை.

இவர்களின் நிலை இப்படி என்றால்..மேனா மினுக்கி அரசியல் வியாதிகளின் நிலை மிக மோசமானது..

தமிழக அரசியலில் தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களை வணிகச் சின்னமாகப் பயன்படுத்துவது இன்னொருபக்க வேதனையாகும். பிரபாகரன் சொல்லியதால்தான் மக்களவைத் தேர்தலில் காங்கிரசை ஆதரித்தேன் என்று ஒரு தலைவர் கூறுகிறார். இன்னொருவரோ பிரபாகரன் கட்டளைக்கேற்ப என் அரசியலை வகுத்துக்கொண்டேன் என்கிறார்.

தமிழ்நாட்டில் அவனவன் எடுக்கும் மொள்ளமாறி அரசியல் சந்தர்ப்பவாத நிலைபாடுகளை ஞாயப்படுத்த பிரபாகரன் பெயரைப் பயன்படுத்துவதும், அவர் சொல்லித்தான் செய்தேன் என்பதும் அவர் பெயருக்குக் களங்கம் சேர்ப்பதாகும்.

இன்னொரு பக்க வேதனை..

339qf5w.jpg

தமிழக இளைஞர்களின் இன்றைய நிலை. பிரபாகரன் படம் போட்ட டீ சர்ட்டு வியாபாரம் அமோகம். நம் கேள்வி அப்படி பனியனை வாங்கி போட்டால் தான் நீங்கள் புரட்சியாளரோ? தமிழுணர்வாளர்கள் நடத்தும் கூட்டங்களுக்கு வரும் இளைஞர்கள் ஒன்று முத்து குமார் அல்லது சேகு அல்லது தமிழீழ தேசியதலைவர் பிரபாகரன் படம் போட்ட டீசர்ட்டுகளில் வருபவரே உணர்வாளர்கள்(?) வெறுமனே வருவரை ஏற இறங்க பார்ப்பதும் காண சகிக்கவில்லை..

பிரபாகரன் தற்காலத்தின் ஈடு இணையற்ற விடுதலைப் புரட்சியாளர். விடுதலை இயக்கத் தலைவர். போர் முறையில் தேர்ந்த திறனும், அரசியலில் ஆழ்ந்த அறிவும் பெற்றவர். அவருடைய ஆற்றல், அர்ப்பணிப்பு ஆகியவை தமிழ்நாட்டு மக்களிடையே அவர்க்குப் பெரும் புகழை ஈட்டித்தந்துள்ளன. தமிழகத் தமிழர்கள் அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய கல்வி நிறைய இருக்கிறது. தமிழ்நாட்டு விடுதலைக்கு, தமிழ்மொழி விடுதலைக்கு, சாதி ஒழிப்பிற்கு, பெண் விடுதலைக்கு, சமத்துவப் பொருளியல் வளர்ச்சிக்கு என அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை ஏராளம், ஏராளம்.

1131015_f520.jpg

போராடினாலும் அழிவோம் போராடவிட்டாலும் அழிவோம் போராடினால் பிழைத்து கொள்ள வாய்பிருக்கிறது - தமிழீழ தேசிய தலைவர்

ஊருக்கு ஒரு பொண்டாட்டியும் தெருவிற்கு ஒரு ஸ்டெப்னியும் வைத்து கொண்டு குடும்பப் பதவி அரசியல் கொடி கட்டிப் பறக்கும் இந்நாட்டில், குடும்பத்தையே போர்க்களத்தில் போராளிகளாக இறக்கிவிட்ட அவரது ஈகம் நாம் பின்பற்ற வேண்டிய அரியசெயல்.இப்படி பல சிறப்புகளை கொண்ட தலைமை இந்த இனத்திற்கு கிடைத்ததால் உலகம் முழுவதும் தமிழினம் என்ற ஒன்று உண்டு என உலகிற்கு தெரியவந்தது. அவ்வாறான ஒருவரை வியாபார சின்னமாக மாற்றுவது அறவே தவிர்க்க வேண்டிய செயல்.

தமிழ்நாட்டு மக்களுக்கு பீடித்திருக்கும் வியாதி..ரசனை உணர்வுகளில் மூழ்கி விடுகின்றனர். வீரத்தின் வர்ணனையையும் ரசிப்பது, சோகத்தின் வர்ணனையையும் ரசிப்பது என்ற நிலையில் இருக்கின்றனர்.ஆனால் என்ன ஆணி புடிங்கினீர்கள்?பதில் வராது..

“பிரபாகரனோடு பேசி விட்டு வந்தேன்”

“பிரபாகரன் எனக்குக் கட்டளை இட்டார்”

என்று ஒருவர் சொன்னால் அச் சொற்களில் கிறங்கி விடுகின்றனர்.

இனி தமிழ்நாட்டை சார்ந்த யாரையாவது சந்திக்க நேர்ந்தால் ஈழத்தவர் ..இந்த கேள்விகளை கேளுங்கள்: “பிரபாகரன் வீரதீர பெருமைகளைப் பேசுங்கள்; விடுதலைப்புலிகளின் வீர சாதனைகளைப் போற்றுங்கள். ஆனால் ஈழ விடுதலைக்கும், தமிழ்நாட்டு விடுதலைக்கும் நீங்கள் என்ன செய்து கொண்டுள்ளீர்கள்? உங்கள் வேலைத்திட்டம் என்ன? உங்கள் புரட்சிப்பணி என்ன?” இப்படிப்பட்ட வினாக்கள் தமிழ்நாட்டில் தமிழ்த் தேசிய அரசியலை செம்மைப்படுத்த உதவும். மேனாமினுக்கிகளின் மொள்ளமாறி அரசியலைத் தடுக்கும்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=67997

:lol: :lol: :)

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.