Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாவு – நோய் – தோல்வி – பிரச்சனை – வேதனையின் பெயரால் சாமியார்கள் மூலம் மூளைச்சலவை செய்யப்படும் மக்கள்

Featured Replies

நாங்கள் அனைவரும் பெரும்பாலும் கடவுள் நம்பிக்கை காணப்படாவிடினும் பிறப்பின் அடிப்படையில் ஏதோ மதத்துடன் அல்லது மதங்களுடன் மற்றும் சாமியார்களுடன் எங்கள் வாழ்க்கையில் இணைக்கப் பட்டுள்ளோம்.

ஒவ்வொரு சாமியார்களினதும் உண்மையான உள்நோக்கங்கள் எவை என்பதை நாம் கண்டறிவது கடினம். ஆயினும், மக்களை வசீகரிப்பதற்காகவும், அவர்களை தொடர்ச்சியாக தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருப்பதற்காகவும் வெவ்வேறு சாமியார்கள் வெவ்வேறு விதமான நுட்பங்களை கையாள்கின்றார்கள். இவற்றில் முக்கியமான ஒன்று மீண்டும் மீண்டும் தமது உரைகளில் – பிரச்சாரங்களில் சாவுநோய்தோல்விபிரச்சனைவேதனையின் பெயரால் மக்களை மூளைச்சலவை செய்வதாகும்.

‘மூளைச்சலவை எனும் உத்தியை அரசியல்வாதிகள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் பிரயோகம் செய்கின்றார்கள் சாமியார்களும் அதன் பயனை பெறுவதில் தவறேது உள்ளது?’ எனும் கேள்வி நமக்குள் எழக்கூடும். ‘மனித சமுதாயத்திற்கு நன்மை பயக்கக்கூடிய விடயங்கள் யாவை, தீமை பயக்கக்கூடிய விடயங்கள் யாவை’ என்பனபற்றியே நாம் அனைவரும் ஏகோபித்த குரலில் ஒரு பொதுப்பட்ட கருத்திற்கு வரமுடியாத நிலையில் சாமியார்களின் செயற்பாடுகள்பற்றி மட்டும் குற்றம் சுமத்துவது நியாயமானது அல்ல. ஆயினும், சாமியார்கள் எவ்வாறு மக்களை மூளைச்சலவை செய்கின்றார்கள் என ஆராய்ந்து பார்ப்பது நமக்கு பல்வேறு வகைகளில் பயன் தரக்கூடும்.

நான் ஓர் சாமியாராயின் எப்படி சாவு – நோய் – தோல்வி – பிரச்சனை – வேதனையின் பெயரால் உங்களை மூளைச்சலவை செய்யலாம்? ஓர் சுருக்கமான மாதிரி உரை:

இந்த உலகம் பொய்களினாலும், புரட்டுக்களினாலும் நிறைந்தது. நிரந்தரம் இல்லாத போலியான மாயையை நீங்கள் நிலையானது என நம்பி இருக்கின்றீர்கள். உங்கள் உயிரினை நிரந்தரமாக பாதுகாக்கும் வழிமுறையில் தேர்ச்சி பெற்றாலொழிய அல்லாதுவிடின் நீங்கள் உங்கள் வாழ்க்கையை வீண்விரயம் செய்து இழப்பீர்கள், ஓர் சிற்றெறும்பாக அழிந்து போவீர்கள்!

நீங்கள் மரணிக்கப்போகின்றீர்கள்; நிச்சயம் வெகுவிரைவில் மரணிக்கப்போகின்றீர்கள்! நீங்கள் மிகப்பெரிய செல்வந்தனாக இருக்கலாம், மெத்தப்படித்த புத்திஜீவியாக இருக்கலாம், அனைத்து அதிகாரங்களையும் ஒருமிக்கப்பெற்ற அரச அதிபராக இருக்கலாம். ஆனால் நீங்கள் மரணிக்கத்தான் போகின்றீர்கள்! மிக நிச்சயம் மரணம் உங்களுக்கு சம்பவிக்கத்தான் போகின்றது! ஒவ்வொரு நொடியும் மரணதேவதை உங்களை நோக்கி நெருங்குகின்றாள். மரணத்தில் இருந்து உங்களை பாதுகாக்க ஒரே ஒரு வழிமுறை மாத்திரமே உள்ளது. உங்கள் உயிரை நான் காட்டித் தருகின்ற ஞான வழிமுறை மூலம் அணுகுங்கள்.

இன்று நீங்கள் மகிழ்ச்சியாக காணப்படலாம். இன்று நீங்கள் வெற்றியாளனாக காணப்படலாம். இன்று நீங்கள் பூரண தேகசுகத்துடன் காணப்படலாம். ஆனால், உங்கள் மகிழ்ச்சி, உங்கள் வெற்றி, உங்கள் தேகசுகம் நீர்க்குமிழி போல் தற்காலிகமானவை. இவை தொடர்ந்து நிலைக்கப்போவது இல்லை. உங்கள் வாழ்க்கை நிலமை நாளையே தலைகீழாக மாறலாம். நாளை வாழ்க்கையில் நீங்கள் பெருந்தோல்வி அடையக்கூடும். நாளை நீங்கள் மீளமுடியாத பாரிய சிக்கலினுள் மாட்டுப்படக்கூடும். நாளை நீங்கள் எதிர்பாராத ஓர் விபத்தில் சிக்குண்டு பாரதூரமாக பாதிக்கப்படலாம், உடல் அங்கவீனம் அடையலாம். நாளை நீங்கள் கொடிய நோய் ஒன்றின் தாக்கத்திற்கு உட்பட்டு விரைவில் உங்கள் வாழும் நாட்களின் எண்ணிக்கையை வைத்தியர்கள் குறிக்கலாம்.

அன்பர்களே, நிதானமாக சற்று சிந்தித்து பாருங்கள்..! எமக்கு தேவையானது எது? நிரந்தர மகிழ்ச்சி எங்கே உள்ளது? நிரந்தர வெற்றி என்பது எது?

ஆனந்தம், வெற்றி எல்லாம் உங்கள் உள்ளே காணப்படுகின்றது. ஆனால் நாளும் பொழுதும் நீங்கள் எல்லாவற்றையும் வெளியில் தேடுகின்றீர்கள். உங்கள் வாழ்வின் பெரும்பகுதியை அலைச்சலிலேயே நீங்கள் செலவளித்து பெருந்துன்பங்களை அடைகின்றீர்கள், மற்றவர்களுக்கும் பலவித துன்பங்களை கொடுக்கின்றீர்கள், இறுதியில் உண்மையான ஆனந்தம் எதுவென உணராது நீங்கள் பரிதாபகரமாக மரணமும் அடைகின்றீர்கள்.

அன்பர்களே, மீண்டும் சற்று நிதானமாக சிந்தித்து பாருங்கள்..! நிரந்தரம் இல்லாத மகிழ்ச்சி எங்களுக்கு தேவைதானா? நிரந்தரம் இல்லாத வெற்றி நமக்கு தேவைதானா? உண்மையில் எங்கள் வாழ்விற்கு அவசியம் தேவையானது எது?

நிரந்தரம் இல்லாத அழியக்கூடிய மாயையை நீங்கள் உண்மை என்று நினைத்து ஏமாறாதீர்கள்! பல்வேறு அவலங்களில் இருந்து விடுபடுவதற்கு நான் காட்டித்தருகின்ற உயிர்ப்பயிற்சியை தொடர்ந்து செய்யுங்கள்! நீங்கள் பேரானந்தத்தில் திளைப்பீர்கள், உங்கள் வாழ்வும் பூரணத்துவம் பெறும்…!

நில் – சிந்தி – செயற்படு!

- கலைஞானந்தாஜி

தகவல் மூலம்: சாவு – நோய் – தோல்வி – பிரச்சனை – வேதனையின் பெயரால் சாமியார்கள் மூலம் மூளைச்சலவை செய்யப்படும் மக்கள்

எங்களை ஒருத்தரும் மூளைச்சலவை செய்ய முடியாது காணும் ,காரணம் எங்களுக்கு மூளையே இல்லையே.... :)

விபூதி,தங்கமோதிரம், லிங்கம் போன்ற பொருள்களை எடுப்பதை கண்களால் பார்த்தால்தான் நம்புவோம் ,பிறகு உங்கள் கால்களில் வீழ்ந்து ஆசிர்வாதம் பெறுவோம்...

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இவையால ஒரு பிரச்சனையும் இல்லை.நான் ஒவ்வொரு கணத்தையும் இன்பமாக வாழ நினைப்பவன்.கிட்டதட்ட அப்படிதான் வாழ்கிறேன்.

சித்துவேலைகள் சாமியார்கள் பிரயோகம் செய்யும் நுட்பங்களில் ஓர் வடிவம். துன்பங்களில் துவண்டுபோய் காணப்படும்போது வேதனையின் அகோரம் சாமியார்கள் காலடியில் பலர் தஞ்சம் அடைவதற்கு காரணமாய் காணப்படலாம் ஜில், சஜீவன். நன்றி.

வேதனையின் அகோரம் சாமியார்கள் காலடியில் பலர் தஞ்சம் அடைவதற்கு காரணமாய் காணப்படலாம் ஜில், சஜீவன். நன்றி.

புலத்தில் வாழும் பலர் வேதனைகள் இல்லாவிடிலும் காலில் விழுகிறார்கள்.....அவன் விழுகிறான் ஆகவே நானும் விழுவேன் என்ற கொள்கையில்தான் பலர் இருக்கினம்.....சாமிமாரை தெரிவு செய்வதும் ஒரு வித trend

  • தொடங்கியவர்

சிலருக்கு சாமியார்மாரை பின்பற்றும் எவராவது குறிப்பிட்ட சாமியாரின் படங்கள், டீவீடி, கசட்டுக்கள், கலண்டர்கள், இதர இத்தியாதிகளை கொடுத்து பிரச்சாரம் செய்து குறிப்பிட்ட சாமியார் பக்கம் இழுக்கக்கூடும். முதலில் குறிப்பிட்ட இத்தியாதிகள் இலவசமாக கிடைக்கும்போது அவற்றை பார்த்தவர்கள், பயன்படுத்தியவர்கள், சிறிதுகாலத்தில் அல்லது உடனடியாக தமது பூஜை அறையில் வைத்து அப்படியே காலப்போக்கில் கும்பிடத்தொடங்கி மொத்தமாய் காலில் விழுந்திருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் சாய்பாவை கும்பிடுபவர்களிடம் போய் அவரது சித்து வேலைகளை எல்லாம் பிபிசிக்காரன் படம் பிடித்துக் காட்டுகிறானே பிறகு ஏன் நீங்கள் அவரைக் கும்பிடுகிறீர்கள் எனக் கேட்டேன் அதற்கு அவர்கள் என்னிடம் திருப்பி கேட்டார்கள் தலைவர் இருக்கிறாரோ என?...நான் ஆம் என்டேன்...உடனே அவர்கள் சொன்னார்கள் ஏன் நீ தலைவர் செத்த வீடியோ பார்க்கவில்லையா என்டு கேட்டார்கள்...நான் சொன்னேன் அது கமரா ரிஸ்க் என உடனே அவர்கள் அது கமரா ரிஸ்க் என்டால் இதுவும் கமரா ரிஸ்க் தான் என்டார்கள் :icon_idea:

சகல நம்பிக்கைகளும் மூளைச்சலவையினால் ஏற்படுவதாக கூறமுடியாது ரதி. அதேசமயம், மறுபுறத்தில் - வழமையான பிரச்சார வழிமுறைகள் நீங்கலாக பெரும்பாலான சகல ஊடகங்களும் மக்களை மூளைச்சலவை செய்வதில் ஈடுபடுகின்றன எனும் கசப்பான உண்மையையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

Edited by கலைஞன்

தன்னம்பிக்கையை இன்மையே ஒருவரை சாமியார்களின் வலையில் வீழ்த்துகிறது. உண்மையான கடவுள் நம்பிக்கையுள்ளவரும் சாமியாரை தேடி போகமாட்டார்.

புலத்தில் இன்னும் பெரிதாக தொடங்காதது சாமியார் பிசினஸ்தான். நல்லா கல்லா கட்டும். நிறைய காசு பார்க்கலாம். மூலதனமில்லாத தொழில். அந்தளவுக்கு புலத்தில் சனம் மூட நம்பிக்கைகளில் மூழ்கி திளைத்திருக்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.