Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ்ப் பெண்களின் பரிதாப நிலை தொடர்கின்றது

Featured Replies

தமிழ்ப் பெண்களின் பரிதாப நிலை தொடர்கின்றது

அனலை நிதிஸ் ச. குமாரன்

சிறிலங்கா அரசாங்கம் தமிழர்களை புலிகளிடம் இருந்து விடுவித்து அவர்களுக்கு மறுவாழ்வு அளித்துள்ளதாக தம்பட்டம் அடித்து உலக நாடுகளிடம் இருந்து ஆதரவைப் பெற பல பிரயத்தனங்களை எடுக்கின்றது. பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்விலோ குறிப்பாக தமிழ் பெண்களின் வாழ்க்கையில் எந்தவொரு மாற்றத்தையும் காணவில்லை. மாறாக தமிழ் பெண்கள் போர்க் காலத்தில் எவ்வாறு துன்பங்களை அனுபவித்தார்களோ, அதைவிட பல மடங்கான பிரச்சினைகளை இன்று அனுபவிக்கின்றார்கள். இவைகள் அனைத்தையும் சிறிலங்கா இராணுவமும், அதனுடன் இயங்கும் கூட்டுக்குளுக்களுமே செய்கின்றன. கற்பலிப்புக்களும், கடத்தல்களும், கப்பம் பெறுவதுமாக நிகழ்வுகள் தொடர்கதையாக உள்ளது.

எப்போ தணியும் எங்கள் தாகம் என்று ஏங்கித்தவிர்த்த தமிழருக்கு, மே 2009-க்கு பிறகு சோதனைகள் பல மடங்காக அதிகரித்தது. பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்டாலும் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வாழ்ந்த வேலையில் பல லட்சம் மக்கள் நெஞ்சை நிமிர்த்தி நடந்தார்கள். கொடுமையிலும் கொடுமையான சம்பவங்களை கடந்தவருடத்தில் இருந்து தமிழ் மக்கள் அனுபவிக்கின்றார்கள். பல்லாயிரம் புலம்பெயர் தமிழர்கள் நாடு சென்று திரும்பி ஏதோ ஈழத்தில் சுமூக வாழ்வு திரும்பிவிட்டதாக கூறினாலும், நிலைமை படுமோசமாக உள்ளது என்பது தான் உண்மை.

வீட்டுக்குள் நடக்கும் கூத்துக்கள் வெளியில் தெரியாமலே பல சம்பவங்கள் நடைபெறுகின்றன. கலாச்சார சீரழிவான பல நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன என்பதை தாயகம் சென்று திரும்பும் பலர் கூறுகின்றார்கள். உற்றார் உறவினர்கள் வெளிநாடுகளில் இருந்து சம்பாதித்து அனுப்பும் பணத்தில் வாழ்க்கை நடத்தும் பலருக்கு பொருளாதார ரீதியில் பிரச்சனை இல்லையென்றாலும் இளைஞர்கள் மற்றும் யுவதிகள் தாராளமாகவே கலாச்சார சீர்கேடுகளில் ஈடுபடுகின்றார்கள். ஆயுத மோதல்கள் இல்லாத காரணத்தினால் பல இளைஞர்கள் நள்ளிரவு தாண்டியும் வீடு திரும்பாமல் களியாட்டங்களில் ஈடுபடுவதாக தகவல்கள் கூறுகின்றன. இவைகள் அனைத்திற்கும் சிறிலங்கா இராணுவத்தினரும், ஒட்டுக்குழுக்களும் ஒத்தாசை வழங்குவது மட்டுமின்றி உக்கிவித்தும் வருகின்றார்கள்.

புலிகளுக்கு பயம் இருந்தவேளையில் அடங்கி ஒதுங்கிருந்த பலர் இன்று சுதந்திரமாக கலாச்சார சீரழிவு சம்பவங்களை செய்கின்றார்கள். இதைத்தான் சிறிலங்காவின் அரசு தமிழர்களுக்கு புலிகளிடம் இருந்து விடுதலை பெற்றுத்தந்துவிட்டதாக தம்பட்டம் அடிக்கின்றது போலும்.

பெண்கள் பல இன்னல்களை சந்திக்கின்றார்கள்

கடந்த செப்டம்பர் மாதம் சிறிலங்கா அரசாங்கம் உத்தியோகபூர்வமாக ஒரு அறிவிப்பை அறிவித்தது. இவ்வறிவிப்பானது, பல தமிழர்களையும் மற்றும் பெண்கள் சார்பான அமைப்புக்களையும் வியப்புக்கு உள்ளாக்கியது. அதன் அறிவிப்பின் படி வடக்கிலும் கிழக்கிலும் 89 ஆயிரம் கணவர்மாரை இழந்த பெண்கள் வசிப்பதாக கூறியது. யுத்தம் நடைபெற்ற வேளையில் ஏதோ இருபதாயிரம் அல்லது முப்பதாயிரம் பெண்களே இப்படியாக இருக்கின்றார்கள் என்று பலர் கருதினார்கள். ஆனால், சிறிலங்காவின் இவ்வறிவிப்பு பலரை அச்சமடையச் செய்தது.

சிறிலங்காவின் மகளிர் விவகார பிரதியமைச்சர் ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லாஹ் இதுகுறித்து தெரிவிக்கையில், கிழக்கில் 49 ஆயிரம் பெண்களும் மற்றும் வடக்கில் 40 ஆயிரம் பெண்கள் கணவர்மாரை இழந்துள்ளனர் என கூறினார். இவர்களில் எட்டாயிரம் பேருக்கு குறைந்தது 3 குழந்தைகளாவது உள்ளதாக தெரிவித்த பிரதியமைச்சர் இவர்களுக்கான உதவி திட்டங்களுக்காக இந்தியாவின் உதவியை எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

ஏற்கனவே பல இன்னல்களை சந்திக்கும் கணவன்மாரை இழந்து குடும்பத்தை நடாத்தும் பெண்கள், சிறிலங்கா இராணுவம் மற்றும் அதனுடன் இயங்கும் ஒட்டுக்குழுக்களால் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம். குடும்பத்தை நடாத்த போராடும் இப்பெண்களுக்கு தாம் ஏதோ பொருளாதார உதவி அளிப்பதாக கூறி இவர்களை கலாச்சார சீரழிவான நிகழ்ச்சிகளை நடாத்த துன்புறுத்துவதுடன், பல நெருக்கடிகளையும் கொடுத்து சிங்கள மயமாக்கும் மகிந்தாவின் திட்டத்துக்கு இவர்களை பாவிக்கின்றார்கள்.

இராணுவத்தினர் பல பெண்களுடன் தகாத உறவுகளை வைத்து அவர்களினூடாக குழந்தைகளை பிரசவிக்கும் நிலைமை நடைபெறுகின்றது. பெற்ற குழந்தைகளையே குப்பைத் தொட்டிகளிலும் மற்றும் கிணற்றுக்குள்ளும் வீசிவிட்டு போகும் நிலை இன்று பரவலாக தமிழர் தாயகத்தில் நடைபெறுகின்றது என்பதை அறியும்பொழுது தமிழர்களின் கலாச்சார நிகழ்வுகள் எந்தளவில் இருக்கின்றதை உணரமுடியும்.

சிறிலங்கா இராணுவத்துடன் போட்டி போட்டுக்கொண்டு ஒட்டுக்குழுக்களாலும் பல கலாச்சார சீர்கேடான நிகழ்வுகளை செய்கின்றார்கள். குறிப்பாக கற்பளிப்புக்கள், போதைவஸ்துக்கு அடிமையாக்குதல் மற்றும் இழிவான படங்களை தயாரித்து சந்திக்குச் சந்தி வைத்து அவைகளை விற்று இளையோர்களை பாழாக்கும் செயலில் ஈடுபடுத்துகின்றார்கள். பல பெண்கள் தனியாக இருக்கும்போது நள்ளிரவில் வீடுகள் சென்று பெண்களை துன்புறுத்தும் நிகழ்வுகள் பரவலாக நடைபெறுகின்றன. இப்படியாக பல சம்பவங்கள் நடைபெறுகின்ற போதிலும் இவைகளில் பல இருட்டடிப்பு செய்யப்படுகின்றன.

பயிரைப் பாதுகாப்பதாக சொல்லுபவர்களே அழிக்கின்றார்கள்

தாம் ஏதோ தமிழர்களின் பாதுகாவலர்களாக இருப்பதாகக்கூறும் சிறிலங்கா அரச படையினர் பெண்களின் பாதுக்காப்பில் அச்சுறுத்தலாகவே இருக்கின்றார்கள். பயங்கரவாதிகள் மீண்டும் தலை தூக்க விடாமல் இருக்க ஒரே வழி இராணுவத்தினரின் அரண்களை பலப்படுத்த வேண்டும் என்ற தோரணையில் செயலாற்றும் சிறிலங்கா, பாதுகாப்புப் படையினரினாலேயே பல அட்டூழியங்கள் செய்யப்படுகின்றன என்பதை மூடிமறைக்க பார்க்கின்றது. மன்னிக்கவும்...பசில் ராஜபக்சாவின் வேண்டுதலின் பெயரிலேயே தமிழரின் கலாச்சார சீரழிவு நிகழ்ச்சிகளை பாதுகாப்புப் படையினர் என்று சொல்லும் இவ் அரச பயங்கரவாதிகள் செய்கின்றார்கள்.

தமிழர் தேசத்திலிருந்து வரும் செய்திகள் மனதை பிளக்கின்றனவையாக இருக்கின்றது. கடந்த மாதம் வன்னியில் பாடசாலை சென்றுவிட்டு பேரூந்தில் வீட்டிற்கு பயணம் செய்துகொண்டிருந்த மாணவியை பேரூந்தில் வைத்து இராணுவத்தினர் அங்க சேஷ்டை செய்துள்ளனர். முறிப்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த பேரூந்தில் மொத்தம் 4 பேரே அந்தவேளை பயணித்துள்ளனர். இதில் ஒரு இராணுவ சிப்பாயும் அடங்கும். மீதமுள்ள இரு இளைஞர்களும் அச்சத்தால் ஒதுங்கிக்கொண்டதால், பேரூந்தில் மாணவியின் நெஞ்சுப்பகுதியோடு அங்க சேஷ்டை செய்தது போதாது என்று அம் மாணவி அணிந்திருந்த அதற்கான உள்ளாடையையும் உருவி வெளியே எறிந்துள்ளான் சிங்கள இராணுவ சிப்பாய்.

மாணவியின் கதறலையும், நிலையையும் புரிந்துகொண்ட ஓட்டுனர், பேரூந்தை அருகில் உள்ள இராணுவ முகாமிற்கு ஓட்டிச்சென்று அங்குள்ள உயரதிகாரியிடம் முறையிட்டுள்ளார். சாட்சிகள் ஏதும் உண்டா என உயரதிகாரி கேட்க, அதில் பயணித்த இரு இளைஞர்களும், தாம் கண்டதைக் கூறியும், உங்களை துப்பாக்கியால் சுடுவேன் என அந்த அதிகாரி மிரட்டி, தாக்கியும் உள்ளார். இதனால் அவர்கள் அவ்விடத்தில் இருந்து அகன்றனர்.

இன்னுமொரு சம்பவம் சில வாரங்களின் முன்னர் யாழ். வேலணைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் வீட்டில் தனித்திருந்த சமயம் வீட்டிற்கு சென்ற சுமார் பத்துப் பேர் கொண்ட குழு குறித்த யுவதியை வீட்டிற்கு வெளியில் இழுத்து பலாத்காரத்திற்கு முயற்சித்துள்ளனர். இதன்போது அயலவர் ஒன்று கூடியதைத் தொடர்ந்து அந்தக் கும்பல் நாளையும் வருவோம் எனக் கூறிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். எனினும் யுவதியின் தமையன், அவரது மனைவி மற்றும் மைத்துனி ஆகியோர் உலக்கையால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர். இதேவேளை குறித்த யுவதி முன்னாள் போராளியாக கைதாகி கடந்த ஜனவரி மாதமே விடுவிக்கப்பட்டவராவார். இத்தோடு பெற்றோரை இழந்த 18 வயதான இவர் தற்போது தமையனாரின் வீட்டில் தங்கியிருந்தார். இச்சம்பவம் தொடர்பாக வேலணை காவல் நிலையத்திற்கு சென்று காவல்துறையினரிடம் முறைப்பாடு கொடுக்கச் சென்ற போதும் அவர்கள் உடனடியாக முறைப்பாட்டை எடுக்கவில்லை எனவும் தாமதித்து முறைப்பாடு எடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

மேலும் காவல்துறையினரே இச்சம்பவம் தொடர்பாக வெளியில் தெரிவிக்க வேண்டாம் எனவும் கூறியதாக பாதிக்கபட்ட பெண் கூறினார். இதனால் உளரீதியாக பாதிக்கப்பட்ட யுவதி அலரி விதை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ள நிலையில் காப்பாற்றப்பட்டு சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக சேர்க்கப்பட்டார். எனினும் இதுவரை எவரும் சந்தேகத்தின் பெயரில் கூட கைதுசெய்யப்படவில்லை.

இன்னுமொரு சம்பவம் அக்டோபர் 11-ஆம் நாள் இடம்பெற்றுள்ளது. யாழ். வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தில் புதுக்காட்டுச் சந்தியில் வைத்து சம்பவ தினம் மதியம் இரண்டு மணியளவில் வெள்ளை வானில் சென்றவர்களினால் இரண்டு மாணவிகள் கடத்தப்பட்டார்கள். செம்பியன்பற்றுக் கரையோரக் கிராமத்தைச் சேர்ந்த அருளானந்தம் ஜீவா (வயது 18), செபஸ்தியான்பிள்ளை ஜெனித்தா (வயது 13) ஆகிய மாணவிகளே கடத்தப்பட்டவர்கள் ஆவர். இவர்கள் தும்பளையில் உள்ள தமது உறவினர் ஒருவரது வீட்டுக்குச் சென்று விட்டு பேரூந்தில் திரும்பி வந்து, புதுக்காட்டுச் சந்தியில் இறங்கினர். வீட்டுக்குச் செல்வதற்கு அங்கு இன்னொரு பேரூந்திற்காக காத்திருந்தபோதே கடத்தல் இடம்பெற்றுள்ளது. இருவரும் செம்பியன் பற்று அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவிகள் என கூறப்பட்டுள்ளது. இப்படியாக தினமும் பல இன்னல்களை சந்திக்கின்றார்கள் பெண்கள்.

யுத்தம் இடம்பெற்ற வேளையில் எவ்வாறு வெள்ளை வான்களின் செயற்பாடு இருந்ததோ அதைப்போலவேதான் இப்பொழுதும் இருக்கின்றது. ஆனால், தட்டிக்கேட்க யாருமில்லாமல் இவர்களின் இம்சைகள் தொடர்ந்தவண்ணமுள்ளன. சர்வதேச சிறுவர் தினம் அக்டோபர் 10-ஆம் நாள் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றபோது யாழ் அரச அதிபர் கலந்து கொண்டு உரையாற்றுகையில் யாழ் வைத்தியசாலை தகவல்களின்படி சமீபத்தில் யாழ் மாவட்டத்தில் 77 சிறார்கள் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இவற்றிற்கு சமுதாயத்தில் பொறுப்பான பதவிகளில் இருப்பவர்களே காரணம் எனக் கூறினார்.

அரசாங்க உயரதிகாரிகள் தமது கருத்தை எடுத்துயம்பியும் சிறிலங்கா அரசு எந்தவிதமான சட்ட நடவடிக்கைகளையும் எடுத்ததாகக் தெரியவில்லை. அரச படையின் அடிமட்ட சிப்பாயிலிருந்து உயர் அதிகாரிகள் வரை தமிழ்ப் பெண்களுக்கு இழைக்கப்படும் இன்னல்களுக்கு காரணமானவர்களாக இருக்கின்றார்கள். அரசும் இவர்களின் நடவடிக்கையை கண்டும் காணாமல் இருக்கின்றது. மேலும் ஒருபடிமேல்ச் சென்று கூறுவோமாயின், ஜனாதிபதி மகிந்தாவின் சகோதரர் பசிலின் நேரடி ஆலோசனையின் பேரிலேயே தமிழ்ப் பெண்களுக்கு எதிரான பல சம்பவங்கள் ஏவிவிடப்படுகின்றன காரணம் தமிழர்களின் கலாச்சார இருப்பையே அழித்துவிட வேண்டுமென்று கங்கணம் கட்டி இவர்கள் செயல்படுகின்றார்கள்.

எது என்னவாயினும் தமிழர்களுக்கு என்றொரு அரசியல் தீர்வு எட்டாதுவரையும், சிங்கள இராணுவம் மற்றும் அதனுடன் சேர்ந்து இயங்கும் ஒட்டுக்குழுக்களும் வடக்குக் கிழக்கு பகுதிகளிலிருந்து துரத்தாதுவரை தமிழ் மக்களின் துயரம் தொடந்துகொண்டே செல்லும். பெண்கள் மற்றும் இளையோர்கள் பல துன்பங்களை சந்திப்பதை எவராலும் குறிப்பாக பலமிழந்து பரிதவிக்கும் தமிழினத்தினால் தடுக்க முடியாது. தமது இருப்பை தக்கவைத்துக்கொள்ள அறிந்தும் அறியாதவர்களாக காலத்தை கடத்தவேண்டிய துர்பாக்கிய நிலையில் இன்று தமிழினம் இருக்கின்றது. புலம்பெயர் தமிழர்கள் ஒன்றிணைந்து தமது இராஜதந்திர நடவடிக்கைகள் மூலமாக சிறிலங்கா அரசிற்கு அழுத்தம் கொடுப்பதன் மூலமாக இராணுவத்தையும் மற்றும் ஒட்டுக்குழுக்களையும் தமிழர்களின் தாயகத்திலிருந்து விலக்குவதனூடாகவும், தமிழர்களின் அரசியல் அபிலாசைகள் பூர்த்தியாகுவதனாலேயே தமிழ் பெண்களின் வாழ்வில் மறுமலர்ட்சி மலரும்.

இவ் ஆய்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல்: nithiskumaaran@yahoo.com

Edited by Newsbot

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.