Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பில் விசுவமடுவை சேர்ந்த கைதி உண்ணவிரதம்

Featured Replies

புதன்கிழமை, நவம்பர் 3, 2010

கொழும்பு சீ.ஆர்.பி. இல் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் கைதியான குணரட்ணம் மனோகரன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளதாக மக்கள் கண்காணிப்புக்குழுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குழுவின் ஏற்பாட்டாளர் மனோ கணேசன் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு விஸ்வமடுவை வசிப்பிடமாக கொண்டுள்ள இந்த கைதி சீ.ஆர்.பி சிறைச்சாலையின் ஜிஐ பிரிவில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளின் நிர்கதி நிலைமையை முன்நிறுத்தியே இந்த உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவரை தொடர்ந்து ஏனைய தமிழ் கைதிகளும் உண்ணாவிரதத்தில் ஈடுபடவிருப்பதாக தீர்மானித்துள்ளனர்.

நீண்டகாலமாக விசாரணைகளின்றியும், அரைகுறை விசாரணைகளுடனும் தமிழ் கைதிகள் கொழும்பு, கண்டி, அநுராதபுரம், மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், பதுளை ஆகிய சிறைச்சாலைகளிலும், பூசா தடுப்பு முகாமிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

வடகிழக்கையும், மலையகத்தையும் சார்ந்த இந்த கைதிகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் தங்களுக்கு மன்னிப்பு அல்லது பிணை அல்லது துரித கைதியிலான விசாரணைகள் நடத்துவற்கு விசேட நீதிமன்றம் அல்லது புனருத்தாபனம் ஆகிய ஏதாவதொரு நிவாரணத்தை பெற்றுத்தருமாறு அரசாங்கத்திற்கு கோரிக்கைவிடுத்தபோதும் நடைமுறையில் பயனேதும் ஏற்படவில்லை.

நீதி, சட்ட மறு சீரமைப்பு துறைக்கு தொடர்ச்சியாக பொறுப்பேற்கும் அமைச்சர்கள் இக்கைதிகளுக்கு வழங்கி வந்துள்ள உத்தரவாதங்கள் தொடர்ச்சியாக பொய்த்துவந்துள்ளன. விடுதலை லிகளின் நேரடி அங்கத்தவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளவர்களுக்கு தனது அரசியல் நோக்கங்களுக்கு இணங்க அரசாங்கம் வழங்குகின்ற அங்கீகாரம், நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அப்பாவி கைதிகளுக்கு வழங்கப்படுவதில்லை.

இந்நிலையில் இக்கைதிகள் விவகாரத்தில் மக்கள் கண்காணிப்புக்குழு உடனடி அக்கறை செலுத்த போவதாக குழுவினர் ஏற்பாட்டாளர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

My link

எனது உயிர் பிரிந்தால் எனது உடலை யாழ்ப்பாணம் மருத்துவ பீடத்திற்கு ஒப்படைக்க வேண்டும் - தமிழ் அரசியல் கைதியான குணரட்னம் மனோகரன்

பிணையிலாவது தன்னை விடுவிக்க வேண்டும் எனக் கோரி கடந்த மூன்று தினங்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மனோகரன் தனது போராட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

முல்லைத்தீவு 13 ஆம் கட்டை குமாரசுவாமிபுரம் விசுவமடு என்ற முகவரியை வசிப்பிடமாகக் கொண்ட இவர் 2008 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 26 ஆம்திகதி கைது செய்யப்பட்டார். இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். மனைவியும் பிள்ளைகளும் விசுவமடு 12 ஆம் கட்டை அகதிமுகாமில் தஞ்சமடைந்துள்ளனர்.

நீண்டகாலமாக விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளமையினால் எனது குடும்பத்தினர் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர். எனவே என்னை பிணையிலாவது விடுவிக்க வேண்டும். எனது கோரிக்கை நிறைவேறும் வகையில் போராட்டம் தொடரும். கோரிக்கை நிறைவேறாத நிலையில் எனது உயிர் பிரிந்தால் எனது உடலை யாழ். மருத்துவப் பீடத்திற்கு ஒப்படைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் என்று சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மனோகரன் தெரிவித்துள்ளார்.

http://www.nerudal.com/nerudal.21449.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.