Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2030 இல் சீனா

Featured Replies

.

இணைப்புக்கு நன்றி. அமெரிக்க இடைத்தேர்தல் விளம்பரம் போலுள்ளது :-)

அதிபர் ஒபாமாவின் ஜனநாயக கட்சி தோல்வியடைந்துள்ளது. எதிர்க்கட்சியான குடியரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது. ஒபாமாவின் பொருளாதார கொள்கைகளில், அமெரிக்கர்கள் அதிருப்தி அடைந்ததே தோல்விக்கு காரணம் என, கூறப்படுகிறது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=77147&view=findpost&p=619026

இல் எல்லாம் சீனா வளரும் என்று சொல்ல முடியாது காரணம் இன்னும் இன்றும் அமெரிக்காவே ஆராய்ச்சிக்கு அதிக பணத்தை செலவிடுகின்றது. அதிலிருந்து அதன் வளர்ச்சியும் தொடர்கதை ஆகியுள்ளது.

சீனாவிடம் கடன் படுத்தல் என்பது உண்மை. ஆனால் நான் திருப்பி தர மாட்டேன் என அமெரிக்க சொன்னால் என்னாவது?

Edited by akootha

  • தொடங்கியவர்

இணைப்புக்கு நன்றி. அமெரிக்க இடைத்தேர்தல் விளம்பரம் போலுள்ளது :-)

அதிபர் ஒபாமாவின் ஜனநாயக கட்சி தோல்வியடைந்துள்ளது. எதிர்க்கட்சியான குடியரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது. ஒபாமாவின் பொருளாதார கொள்கைகளில், அமெரிக்கர்கள் அதிருப்தி அடைந்ததே தோல்விக்கு காரணம் என, கூறப்படுகிறது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=77147&view=findpost&p=619026

இல் எல்லாம் சீனா வளரும் என்று சொல்ல முடியாது காரணம் இன்னும் இன்றும் அமெரிக்காவே ஆராய்ச்சிக்கு அதிக பணத்தை செலவிடுகின்றது. அதிலிருந்து அதன் வளர்ச்சியும் தொடர்கதை ஆகியுள்ளது.

சீனாவிடம் கடன் படுத்தல் என்பது உண்மை. ஆனால் நான் திருப்பி தர மாட்டேன் என அமெரிக்க சொன்னால் என்னாவது?

சீனாவும் பெருமளவு பணத்தை ஆய்வுக்கு செலவு செய்கிறது. சில அசுர அளவு ஆய்வுத் திட்டங்களிலும் இறங்கியுள்ளது உ+ம்: விண்வெளி, ஆழ்கடல் ஆய்வு.

இதில் இன்னொரு விஷயம் மேற்குலகம் பெரும் செலவில் செய்கின்ற ஆய்வின் முடிவுகளில் அநேகம் செல்வில்லாமல் சீனாவிற்குச் சென்றுவிடும். ஆனால் சீனாவின் ஆய்வுகள் வெளியே தெரியாது.

சீனா சம்பந்தமாக மேற்குலக பொருளாதார புள்ளி விபரங்கள் சரியானவையல்ல. உதாரணமாக சீனா, GDP இன் எத்தனை சதத்தை இராணுவத்திற்கு செலவு செய்கின்றது என்ற விபரம் அமெரிக்காவிற்குத் தெரியாது. அதோடு சீனாவை மட்டம் தட்டுகின்ற ஒரு தன்மையும் இவர்களின் வெளியீடுகளில் காணப்படும்.

சீனர்களின் வர்த்தக முகாமைத்துவம் மிகவும் சிறப்பானது. மேற்குலக கம்பனிகள் பல சீனப் பொருட்களினால் மூடு விழாக் கொண்டாடியுள்ளன.

இங்கு (அவுஸ்திரேலியாவில்) ஒரு தொழில் நுட்பப்பொருளை உற்பத்திசெய்து வெற்றிகரமாக விற்று வியாபாரத்தைத்தொடர முடியாது.

சிங்கப்பூரைச் சேர்ந்த (சீனர்களின்) தொலைத்தொடர்பு கம்பனி இங்கு வந்திறங்கியது. அதுவரை இராஜா போல் இயங்கிய பல பில்லியன் டொலர் அவுஸ்திரேலியக் கம்பனி இன்று CEO க்களை துரத்துவதும் புதிதாகச் சேர்ப்பதுமாக திண்டாட்டத்தில் உள்ளது. அதன் பங்கு விலை வீழ்ந்துவிட்டது.சீனக் கம்பனியின் வியாபாரம் முறைமை வர்த்தக நூல்களில் எழுதப்படலாம்.

இன்று மேற்கு கண்டு பிடிப்பதும் சீனா அதை உற்பத்தி செய்வதுமாக இருக்கிறது. மக்கள் சீனப் பொருட்களை ஓரளவு நம்பிக்கையுடன் வாங்கும் மனநிலையைப் பெற்றுள்ளார்கள். இன்னும் 20 வருடங்களில் சீனாவே கண்டுபிடித்து தயாரிக்கும் பொருட்களை மக்கள் நம்பிக்கையுடன் வாங்கும் சாத்தியம் நிறைய இருக்கின்றது. இது மேற்கின் இன்றுள்ள முண்ணனி நிலையை சீனாவுக்கும் கொடுக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

சீன முகாமைத்துவத்தில் வியாபாரப் போட்டித்தன்மைக்கு முக்கிய இடம் இருக்கும்..! மேற்குலக சி ஈ ஓக்கள் போட்டிக் கம்பனி ஆட்களுடன் தண்ணியடித்து போனசை வறுகி எடுத்து, உற்பத்திச் செலவை அதிகரித்து கம்பனியை திவால் நிலைமைக்குக் கொண்டுபோவார்கள்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் இசை

இன்று காலையில் இங்கு ஒரு வானொலிக்கு பிரான்சின் பழைய பிரதமர் நேரடிபேட்டி விவாதம் ஒன்றில் கலந்து கொண்டு சீனாவுக்காக நீண்ட அறிக்கை வாசித்தார். வந்த நேயர்கள் அவரை சீனாவின் மனித உரிமை மீறல்கள் குறித்து கேட்டு மடக்க முயன்றனர். அவர் கடைசியாக சொன்னார். நாமும் இதையே சொல்லி சொல்லி சீனாவை ஒதுக்கிவைத்தோம். ஆனால் இன்று சீனாவுடன் நாம்தேடிப்போய் ஒப்பந்தம் செய்யுமளவுக்கு சீனா வந்துள்ளது . இனியும் இப்படி ஒதுக்கிவைத்து நாம் நட்டமடையாது சேர்ந்து சென்று நண்பனாக அறிவுரை செய்வோம். இல்லாவிடில் சீனாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அதன் வளர்சியையும் இது பாதிக்காது. நாம் தான் மேலும் கீழ் நோக்கி போவோம். சீனா மட்டுமல்ல ஆசியர்களின் வளர்ச்சி அற்புதமானது என்றார்.

Edited by விசுகு

சீனாவின் இல்லை ஆசியாவின் அபிவிருத்தி எல்லாரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது உண்மை. வளரும் நாடுகளில், ஆசியா, ஆபிரிக்கா, தென் அமெரிக்க நாடுகளில், ஆசியாவே பாரிய முன்னேற்றம் கண்டுள்ளது.

சீனாவின் வளர்ச்சிக்கு அதன் சிக்கலில்லா அரசியல், பொருளாதார கொள்கை, திட்டமிட்ட அதன் பண மாற்று கொள்கை என குறிப்பிடலாம். அத்துடன் சீனாவின் ஒரு குடும்பத்துக்கு ஒரு பிள்ளை என்ற கொள்கையும் உதவியது. ஆனால் சீனா ஒரு கைத்தொழில் புரட்சியை தான் இன்று வரை பெரியளவில் செய்து வந்துள்ளது. இதன் மூலம் வளர்ந்த நாடுகள் தமது "சுற்றாடல் - சூழல் " பிரச்சனைகளை சீனாவிடம் கொடுத்துள்ளன.

இந்த இன்றைய இடத்தில் இருந்து தொடர்ந்து முன்னேறுவதே சீனாவுக்கு ஒரு சவாலாக இருக்கும். அதாவது இன்று சீனாவில் வீட்டு வருமானத்தில் நாற்பதினாயிரம் அமெரிக்க டாலர்கள் உள்ளவர்கள் நாற்பதினாயிரம் வீடுகளே என சொல்லப்படுகின்றது. ஆனால் வளர்ந்த நாடுகளில் நாற்பதினாயிரம் அமெரிக்க டாலர்கள் வீட்டு வருமானம் எல்லா வீடுகளிலும் இருக்கலாம். அந்த புள்ளியில் இருந்து அடுத்த புள்ளிக்கு செல்வது சீனாவின் சவாலை விட பலத்த சவாலானது.

சிறிலங்கா அரசு திட்டமிட்டு தமிழ்மக்களை நீண்டகால பொருளாதார வலுவற்ற மக்களாக மாற்றி வருகிறது

தமிழர் தாயகம் சிங்கள வணிகர்களின் அங்காடியாக மாறி வருகிறது. அங்கு வெளிநாட்டு பணத்தில் வணிகர்களுக்கு பெருமளவு இலாபமீட்டத்தக்க பாவனையாளர்களாக மக்கள் மாற்றப்பட்டு வருகிறார்கள். வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வணிகமுயற்சிகளோ, நீண்டகால நோக்கிலான முதலீட்டு வணிக முயற்சிகளோ தமிழர் தாயகத்தில் இடம்பெறுவதாக தெரியவில்லை. வெளிநாட்டு பணத்தை சிங்கள வணிகர்களுக்கு பெற்றுத்தரும் அங்காடியாக தமிழர் தாயகத்தை மாற்றுவதையே தனது நோக்காக கொண்டு சிறிலங்கா அரசு செயற்படுகிறது. இதற்காக தமிழ் மக்களை பொறுப்பற்ற சுகபோக பாவனையாளர்களாக மாற்றி வருகிறது.

பொருளாதார வளர்ச்சி, தேசிய போராட்ட உணர்வை மழுங்க செய்யும் என்ற எதிர்பார்ப்புடன் இந்தியா பொருளாதார திட்டங்களை முன்னெடுக்க முனைந்து வருகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்தியாவின் பாதுகாப்பையும், பொருளாதார வளர்ச்சிகான ஆதரவையும் எதிர்பார்ப்பதாக தெரிகிறது.

இந்த நிலையில் தமிழ்மக்களின் நீண்டகால பொருளாதார, பண்பாட்டு, சமுக நலன் கருதி, உலக தமிழர், மக்களின் பொருளாதார திட்டமிடலில் பங்குபற்ற வேண்டும். சிறிலங்கா, இந்திய நோக்கங்களை புரிந்து கொண்டு, எமது மக்களுக்கு உகந்த பொருளாதார முயற்சிகளை உருவாக்கவும், ஊக்குவிக்கவும், அவற்றிற்கு எமது நாடுகளில் உள்ள வணிகர்களின் பங்களிப்பு இடம்பெறவும் உலக தமிழர் திட்டமிட்டு உழைக்க வேண்டும்.

நாம் இந்த பொருளாதார கட்டமைப்பில் பங்குபெறாவிட்டால் அங்குள்ள தமிழர் சமுதாயம், தன்னில் வலுவற்ற, வெளிநாட்டு பணத்தில் சிறிய காலம் செல்வந்தர்களாக வாழ்ந்து, பிறகு நிலையான பொருளாதார அழிவை சந்திக்கும் நிலை உருவாகும்.

குறிப்பாக, பின்வரும் முயற்சிகள் பயனுள்ளவையாக அமையலாம்:

1. யாழ் பல்கலைக்கழத்துடன் இணைந்து பொருளாதார கட்டுமான திட்டமிடல்.

2. ஏற்றுமதி வணிக உற்பத்தி முயற்சிகளை திட்டமிடலும் ஊக்குவித்தலும்

3. வெளிநாடுகளில் சந்தைவாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில் ஏற்றுமதி தரக்கட்டுப்பாட்டு பயிற்சி நிறுவனம் அமைத்தல்

4. மருத்துவ, உடல்நல துறைகளில் பயிற்சி நிறுவனங்களை அமைக்கும் திட்டங்கள்.

The Mines and Minds Are in China

China has tens of thousands of experts working on the development of rare earths; the United States has only a handful. .One of the biggest challenges we face is our lack of technological expertise going forward. From about the 1950s to 1980s, the U.S. broke new ground in innovations with rare earths.

The only rare earth mine in the United States that is anywhere near becoming fully operational is The Mountain Pass mine in California. While we have the capability to mine and process the reserve there, starting a mine in and of itself will not completely solve our problems.

For example, we began to use europium as a phosphor for the red in color televisions. General Motors, simultaneously with Japan’s Hitachi, invented the neodymium-iron-boron magnet for use in their vehicles. The two companies fought over the patent, which ended up being split. The technology was eventually transferred to China and today there are no companies in the U.S. that manufacture these powerful magnets, which are critical to many high-tech applications. We also made significant contribution in utilizing rare earth elements as fluid cracking catalysts in the petroleum refining industry. And numerous energy and military applications were developed.

China realized the value in its rare earth resources early on. If you look at China’s rare earth industry, you will see that it has undergone a major transformation. China, which once focused on exporting rare earths in their raw forms, has shifted its end goal from production to innovation. In the 1970s, China was just exporting rare earth mineral concentrates. By the 1990s, it began producing magnets, phosphors and polishing powders. Now, it is making finished products like electric motors, batteries, LCDs, mobile phones and so on.

Through all the effort that the Chinese government has put into the industry, China has accrued tens of thousands of experts working on the research and development of rare earth elements. Meanwhile, the numbers of rare earths scientific experts in the United States has diminished and pales in comparison.

If we don't have the experts required to take the rare earth elements to their next levels, that is, going from oxides to metal compounds or creating magnets or other critical compounds, then there is nothing we can do other than to ship them back to China for further processing, which puts us back to square one.

There’s the old adage that two heads are better than one. If that’s the case, then tens of thousands of heads have to be better than the handful that we have in this country.

http://www.nytimes.com/roomfordebate/2010/11/08/can-the-us-compete-on-rare-earths/for-the-us-starting-a-rare-earth-mine-is-the-easy-part

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.