Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு கொழும்பில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு கொழும்பில்

சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு இலங்கையின் தலைநகர் கொழும்பில் ஜனவரி மாதம் 5 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை நடக்கவிருக்கிறது.

இலங்கையிலும், புலம்பெயர் நாடுகளிலும் உள்ள தமிழ் எழுத்தாளர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறப்படும் இந்த மாநாட்டில் கலை, இலக்கியம், கல்வி மற்றும் தொடர்பூடகங்கள் குறித்த விடயங்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக அதன் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

படைப்பாளிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் கலைஞர்கள் தங்களைத் தாங்களே வளர்த்துக்கொள்வதற்கான நோக்கத்துடன் நடத்தப்படுகின்ற ஒரு பயிற்சிப்பட்டறை போன்றதே இந்த மாநாடு என்று அதன் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான எழுத்தாளர் முருகபூபதி கூறியுள்ளார்.

ஆனால், இலங்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை அரசாங்கத்தினால் மனித உரிமை மீறல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டும் எழுத்தாளர்களின் குழு ஒன்று அப்படியான சூழ்நிலையில், இத்தகைய தமிழ் எழுத்தாளர் மாநாடு இலங்கையில் நடத்தப்படுவதால், அது இலங்கை அரசாங்கத்தின் பிரச்சாரங்களுக்கு சாதகமாக அமைந்து விடும் என்று கூறி இந்த மாநாட்டை எதிர்க்கிறார்கள்.

இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த நூற்றுக்கும் அதிகமான எழுத்தாளர்கள் இந்த மாநாட்டை எதிர்த்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்கள்.

அந்த அறிக்கையை வடித்தவர்களில் ஒருவரான எழுத்தாளர் மு. புஷ்பராஜன் அவர்கள் இது குறித்துக் கூறுகையில், சிறிய விடயங்களைக் கூட தமக்குச் சாதகமான பிரச்சாரங்களுக்கு பயன்படுத்திக்கொள்ள விளையும் இலங்கை அரசாங்கம், இந்த எழுத்தாளர் மாநாட்டை நிச்சயமாக பிரச்சாரத்துக்குப் பயன்படுத்திக்கொள்ள விளையும் என்று கூறுகிறார்.

ஆனால், இந்த மாநாட்டுக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது என்று கூறுகிறார் மாநாட்டின் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான எழுத்தாளர் லெ. முருகபூபதி. மாநாட்டில் கலந்து கொள்பவர்கள் தங்களது கருத்துக்களை சுதந்திரமாக அங்கு கூற முடியுமென்றும் அவர் கூறுகிறார்.

http://www.bbc.co.uk/tamil/news/story/2010/11/101105_writer.shtml

image001.jpg

என்ன முருகபூபதி ஐயா சொல்கிரீர்கள். இலங்கையில் வாய் திறக்கலாமோ? ஒம் ஒம் திறக்க்லாம் சாப்பிட மட்டும் இல்லையென்றால் அந்தொ கதிதான்.

டக்ள்ஸ்

சங்கரி

...

குழுவே அடங்கி இருக்கிறது. நீங்கள் மஹிந்தவுக்கு .......க்கா போறதுமல்லாமல் விளக்கம் வேறு கொடுக்கிறீர்கள்.

சர்வதேச தமிழர் மா நாடு வேறு தமிழர் வாழும் இடங்களில் வைக்க முடியாத??

Edited by சுனாமி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஸ்ரீ லங்காவில் தமிழர் ஐந்து இலட்சம் இனவெறி இராணுவத்தால் சூழப்பட்டு ஊரடங்கு சட்ட வாழ்க்கை வாழ்ந்தாலும், வசந்தம் நாறுகிறது என்பதை காட்டுவதற்காக இறக்கப்பட ஜால்ராக்கள் இவர்கள். கொழும்பில், அட்ரா அட்ரா நாக்கு முக்க கவிதை படித்து திளைப்பார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.