Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமராட்சி கிழக்குப் பகுதிக்குச் செல்லும் போக்குவரத்துக்குத் தடை!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

yarl.jpgயாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்குப் பகுதிக்குச் செல்லும் பிரதான பாதையான பருத்தித்துறை மருதங்கேணி வீதியில் இராணுவம் தடைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பகுதியில் சுமார் 6000 பேர் அண்மையில் மீளக் குடியேறியதாக அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இங்கு மீளக் குடியேறிய மக்களுக்கு அரசாங்கத்தால் எந்தவிதமான உதவிகளும் கிடைப்பதில்லை. முழுக்க முழுக்க அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவிகளிலேயே இவர்கள் தங்கியுள்ளனர். இந்நிலையிலேயே இந்தப்பகுதிக்குச் செல்லமுடியாதவாறு இராணுவம் தடைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீதி திறப்பு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இராணுவத்தின் உதவியோடு மிகுந்த பிரசாரத்துக்கு மத்தியில் இடம்பெற்றது. ஆனால் மக்கள் குடியேறியவுடன் அது மீண்டும் மூடப்பட்டுவிட்டது. இருந்தாலும் அரச அதிகாரிகளுக்கும்,அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகளுக்கும் இதில் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால் இப்போது அவர்களுக்கும் கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரதான பாதை மூடப்பட்டதன் விளைவாக அரச சார்பற்ற நிறுவனங்கள் தமது பணிகளை நிறுத்திக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இந்த இடத்துக்கான மாற்றுப் பாதையான புதுக்காடு சந்தி பாதை மிக தூரம் பயணம் செய்ய வேண்டிய ஒரு பாதையாகும்.

இதேவேளை மருதன்கேணி பாலமும் எந்த நேரத்திலும் உடைந்து விழக்கூடிய மிக மோசமான நிலையில் உள்ளது. இருந்தும் இதனூடாகத் தான் கட்டிடப் பொருள்களையும் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இராணுவம் இந்தப் பாலத்தை புனர்நிர்மாணம் செய்ய மறுத்துவருகின்றது. பாலத்துக்கான சகல புனரமைப்புப் பணிகளும் இடை நிறுத்தப்பட்டுள்ளன.

இங்குள்ள பாடசாலைகள் செயற்பட அனுமதியளிக்கப்பட்டுள்ள போதிலும் கட்டிடங்கள் கூரைகளின்றி மோசமான நிலையில்உள்ளதால் தொடர்நதும் மாணவர்கள் கல்வி கற்க மர நிழல்களையே நாட வேண்டியுள்ளது.

http://www.tharavu.com/2010/11/blog-post_4885.html

ராஜபக்ச அன்ட் கோ இங்கிருந்து மணலை கொள்ளையடித்து விற்பனை செய்து காசு சம்பாதிப்பதற்கு ஏதாவது இடையூறோ?

யாழ் வளங்கள் சுரண்டப்பட்டு கொள்ளையிட்டு வாழப் பழகிய சிங்கள பயங்கரவாதிகள் அவற்றை தெற்குக்கு கொண்டு செல்வது தொடர்கிறது.

வடக்கின் அபிவிருத்தி என்ற பெயரில் பெருமளவு பணம் தெற்கின் அபிவிருத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. பணத்தை சிங்கள பயங்கரவாத அரசிடம் வழங்கும் ஏமாளி நாடுகள் தொடர்ந்து ஏமாறி வருகின்றன.

கொழும்பில் நல்லாக இருந்த வீதிகள் உடைக்கப்பட்டு அவசர அவசரமாக நவீனப்படுத்தப் படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

கிழக்கில், வடக்கில் மிக மோசமான பல உள்வீதிகள் அப்படியே இருக்கின்றன. A9 வன்னியில் மிக மோசமாக உள்ளது.

வடக்கில் செய்யப்படும் சில வீதிகளும் அரைகுறையாகவே செய்யப்படுகிறதாம்.

வெளிநாட்டு அமைப்புக்கள் ஒரேயடியாக முழு உதவிப்பணத்தையும் வழங்குவதில்லை, பகுதி பகுதியாகத்தான். இந்த கட்டத்தை முடித்துவிட்டோம் அடுத்த கட்ட பணத்தை தாருங்கள் என கேட்டு தமது சொந்த வங்கி கணக்குகளை நிரப்புவதுதான் உண்மை நோக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.