Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட,கிழக்கு இணைப்பு

Featured Replies

வடக்கு, கிழக்கு மாகாணங்களை ஒன்றாக இணைப்பதற்கு ஏனைய அரசியல்க் கட்சிகள் விருப்பம் தெரிவித்தபோதிலும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இதனை எதிர்த்துள்ளதாக தமிழ்த் தேசிய விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இந்த அரங்கமானது ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட், தமிழ்த் தேசிய விடுதலை முன்னணி போன்ற 10 தமிழ்க் கட்சிகளை கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதன் காரணமாக இந்த விடயத்தின் ஒரு பொதுக்கருத்துக்கு வருவது அரங்கத்திற்கு கடினமாக இருக்குமெனவும் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

http://www.tamil.dailymirror.lk/index.php/2010-07-14-09-13-23/10686-2010-11-07-09-41-38.html

அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி அரசியல் உரிமையை பெற முயற்சிப்போம் - டக்ளஸ்

நாட்டின் இன்றைய அமைதிச் சூழலை பிரதேசங்களின் அபிவிருத்திக்காகப் பயன்படுத்தும் அதேவேளை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகளைப் பெற்றுக் கொள்ள தொடர்ந்தும் பாடுபடுவோம் என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ். நல்லூர் பிரதேச செயலகத்திற்கான புதிய கட்டிடத் திறப்பு நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் கூறுகையில், "எங்களது தேசிய பிரச்சினைக்கு நாமே தீர்வு காணும் அதேவேளை அரசு தருவதைவிட எமக்குத் தேவையானவற்றை அரசிடமிருந்து கேட்டுப் பெற்றுக்கொள்ளவும் வேண்டும். அத்துடன் முதலில் கிடைப்பவற்றைப் பெற்றுக் கொண்டு எமக்குத் தேவையானவற்றைப் பெற்றுக் கொள்வதற்காகப் பாடுபட வேண்டும்.

கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட ஆயுத வழிப் போராட்டங்கள் மூலம் எமது மக்கள் அழிவையும் இழப்பையும் சந்தித்தனர். எனவே எதிகாலங்களில் இருப்பவற்றைப் பாதுகாக்க அனைவரும் பாடுபடுவோம். இன்று பேச்சுக்கான நடமாட்டத்திற்கான சுதந்திரத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்படுத்தித் கொடுத்துள்ளார்.

அந்தவகையில் இந்த அருமையான அமைதிச் சூழலை எமது பிரதேசத்தின் அபிவிருத்திக்காகவும் வளமான எதிர்காலத்திற்காகவும் பயன்படுத்திக் கொள்ளும் அதேவேளை எமக்கு கிடைக்க வேண்டிய ஏனைய உரிமைகளை அரசுடன் பேசி பெற்றுக் கொள்வதற்கு தொடர்ந்தும் நாம் யாவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டியது முக்கிய கடப்பாடாகும்.

அத்துடன், எமது பிரதேசத்தின் அபிவிருத்தி மற்றும் முன்னேற்றம் தொடர்பாக பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் அதற்காக மக்களது ஒத்துழைப்பும் ஒத்தாசையுமே எமக்குத் தேவையாகவுள்ளது என்றார்.

http://www.tamil.dailymirror.lk/index.php/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/10695-2010-11-07-12-47-17.html

வடக்கு, கிழக்கு இணைப்பு என்பதைவிட போலிஸ், காணி அதிகாரங்கள் மிக முக்கியமானது.

  • தொடங்கியவர்

"வடக்கு, கிழக்கு இணைப்பு என்பதைவிட போலிஸ், காணி அதிகாரங்கள் மிக முக்கியமானது."

போலிஸ், காணி அதிகாரங்கள் அரசியல் அதிகாரங்களை கொண்டவர்கள் கையில்தான் இருக்கும். வடக்கையும் கிழக்கையும், தமிழர் தாயக பிரதேசங்கள், இணைத்தால் தான், அதிகாரம் தமிழர் கையில் இருக்கும்.

வடக்கு கிழக்கை இணைக்க வேண்டாம் என்று கூறவில்லை. இணைக்கபட்டால் தான் உண்மையான பலம் குறிப்பாக கிழக்கு தாயகத் தமிழருக்கு கிடைக்கும்.

எனினும் போலிஸ், காணி அதிகாரங்கள் மிக முக்கியமானது என்பது எனது கருத்து.

எமது பிற்போக்கு அரசியல்வாதிகள் இணைப்பைப் பேசி, போலிஸ், காணி அதிகாரங்களை மறந்துவிடக் கூடாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.