Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாட்டுக் காலம் மேலும் ஆறு மாதங்களால் ஜனாதிபதியால் நீடிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாட்டுக் காலம் மேலும் ஆறு மாதங்களால் ஜனாதிபதியால் நீடிப்பு!

ஞாயிற்றுக்கிழமை, 07 நவம்பர் 2010 16:21

தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாட்டுக் காலத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆறு மாத காலத்தால் நீடித்து உள்ளார். கடந்த 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் கடந்த வருடம் மே மாதம் வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்களை விசாரித்து அவருக்கு அறிக்கை சமர்ப்பிக்கவென எட்டுப் பேர் கொண்ட இவ்வாணைக் குழுவை ஜனாதிபதி கடந்த மே மாதம் 15 ஆம் திகதி நியமித்து இருந்தார்.

இதன் செயற்பாட்டுக் காலம் ஆறு மாதங்கள் என்றும் எதிர்வரும் 15 ஆம் திகதி அவருக்கு நிறைவான அறிக்கை ஒன்றை ஆணைக்குழு சமர்பிக்க வேண்டும் என்று ஜனாதிபதியால் முன்பு அறிவுறுத்தப்பட்டு இருந்தன. இந்நிலையில் ஆணைக்குழுவினர் இடைக்கால அறிக்கை ஒன்றை ஜனாதிபதிக்கு சமர்ப்பித்து உள்ளார்.

ஆணைக்குழுவின் செயற்பாட்டுக் காலத்தை ஜனாதிபதி இன்னும் ஆறு மாதங்களால் நீடித்து உள்ளார். இந்நீடிப்பை அடுத்து எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் சாட்சியங்களை செவிமடுக்க ஆணைக்குழு தீர்மானித்து உள்ளது.

tamilcnn.com

சிங்கள, இந்திய பயங்கரவாதிகளின் போர்குற்றங்களை உலகம் சில மாதங்களில் மறந்துவிடும் என்று போட்ட கணக்கு தப்பாகிவிட்டதா?

முன்னாள் சட்டமா அதிபர் சி.ஆர்.டி.சில்வா, பீரிஸ், அனைவரும் சிங்கள பேரினவாத வெறியர்கள்.

இன்று ஈழத் தமிழர் அனைவரும் சிங்கள பேரினவாத வெறியர்களைக் கொண்ட உந்த கண்துடைப்பு ஆணைக்குழு பற்றி துளியும் நம்பிக்கை அற்றவர்களாக இருக்கின்றனர்.

செயற்பாட்டுக் காலம் மேலும் ஆறு மாதங்களால் நீடிக்கப்பட்டுள்ள உந்த கண்துடைப்பு ஆணைக்குழுவையும், சிங்களவர் எவரையும் நம்ப ஈழத் தமிழர் தயாரில்லை.

சிங்கள போலீஸ், சிங்கள இராணுவம், சிங்கள அரசு, சிங்கள நீதித்துறை, சிங்கள ஊடகம் என எவரையும் சிறு துளியேனும் நம்ப ஈழத் தமிழர் தயாரில்லை. இது ஒன்று, இரண்டல்ல, 70 வருட அனுபவம். இன்னும் துல்லியமாக சொல்லப் போனால் ஆயிரக்கணக்கான வருட அனுபவம்.

மடையர்கள், சுயநலவாதிகள், விசமிகள் மட்டுமே சிங்கள ஆணைக்குழுவை நம்புவர்.

உண்மையான, நேர்மையான ஆணைக்குழுக்கள் ஒழுங்காக திட்டமிட்டு குறித்த கால அட்டவணைக்குள் தமது விசாரணையை முடிக்கும். தென் ஆபிரிக்காவின் கறுத்த இனத்தவருக்கு எதிரான ஆணைக்குழு மற்றும், கனடாவின் மூத்த குடிமக்களுக்கு (Native Canadians) இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிரான ஆணைக்குழு இவற்றுக்கு உதாரணம் ஆகும்.

சிங்ககளத்தின் நோக்கம் இழுத்தடிப்பு - இதன் மூலம் நீதி மறுக்கப்படுவது, மறைக்கப்படுவது.

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.