Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமல்போனோருக்கு மரணச்சான்றிதழ்.. அவசரமாக புதிய சட்டத்தைக் கொண்டு வருகிறது சிறிலங்கா அரசு:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல்போனோருக்கு மரணச்சான்றிதழ்.. அவசரமாக புதிய சட்டத்தைக் கொண்டு வருகிறது சிறிலங்கா அரசு:

[sunday, 2010-11-07 05:22:44]

காணாமல்போய் ஒரு ஆண்டுக்கு மேலாகியும் கண்டுபிடிக்கப்படாதவர்களை இறந்தவர்களாகக் கருதி மரணச்சான்றிதழ் வழங்குவதற்கு ஏற்றவகையில் சிறிலங்கா அரசாங்கம் புதிய சட்டம் ஒன்றை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றவுள்ளது. எதிர்வரும் செவ்வாய்கிழமை இந்தப் புதிய சட்டம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளது.

இதன்மூலம் காணாமல் போன ஒருவர் கண்டுபிடிக்கப்படாது போனால் ஒரு ஆண்டுப் பின்னர், அவர் மரணமாகி விட்டதாக இறப்புச்சான்றிதழைப் பெற முடியும். போரின் போது காணாமல்போன புலிகள் இயக்கத் தலைவர்கள், போராளிகளின் குடும்பங்களுக்கு இது உதவியாக இருக்கும் என்று சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது.

இறுதிப்போரின் போது படையினரிடம் சரணடைந்த புலிகள் இயக்கத் தலைவர்கள் போராளிகள் பலர் தற்போது எங்கே உள்ளனர் என்று தெரியாதுள்ளது. இவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு சிறிலங்கா அரசகின் அமைச்சர்களிடமும், நல்லிணக்க ஆணைக்குழுவிடமும் குடும்பத்தினர் முறையிட்டு வருகின்றனர்.

இந்த விவகாரம் சிறிலங்கா அரசாங்கத்துக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகின்ற நிலையிலேயே புதிய சட்டம் கொண்டு வரப்படுகிறது. இந்தச் சட்டத்தின் மூலம், படையினரிடம் சரணடைந்து காணாமற் போயுள்ள புலிகள் இயக்க தலைவர்கள் போராளிகளை இறந்து விட்டதாக கருதி மரணச்சான்றிதழைக் கொடுத்து, அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் வாயை அடைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் காணாமற் போயுள்ளவர்களின் பிரச்சினையை எந்த விசாரணகளும் இல்லாமல் முடிவுக்குக் கொண்டு வர சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்காகவே அவசர அவசரமாக இறப்புப் பதிவு பற்றிய புதிய சட்டத்தை அரசாங்கம் கொண்டு வருவதாகக் கருதப்படுகிறது.

seithy.com

மீண்டும், மீண்டும் சிறிலங்கா தவறை விடுவதாகவே தெரிகின்றது.

"இந்த விவகாரம் சிறிலங்கா அரசாங்கத்துக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகின்ற நிலையிலேயே புதிய சட்டம் கொண்டு வரப்படுகிறது. இந்தச் சட்டத்தின் மூலம், படையினரிடம் சரணடைந்து காணாமற் போயுள்ள புலிகள் இயக்க தலைவர்கள் போராளிகளை இறந்து விட்டதாக கருதி மரணச்சான்றிதழைக் கொடுத்து, அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் வாயை அடைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் காணாமற் போயுள்ளவர்களின் பிரச்சினையை எந்த விசாரணகளும் இல்லாமல் முடிவுக்குக் கொண்டு வர சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்காகவே அவசர அவசரமாக இறப்புப் பதிவு பற்றிய புதிய சட்டத்தை அரசாங்கம் கொண்டு வருவதாகக் கருதப்படுகிறது."

அப்படியானால் காவல்துறை எதற்கு?

இப்படி செய்வதன் மூலம் உண்மை, நீதி மறுக்கப்படுவதுடன் சிறிலங்கா உலகத்தில் மிக கேவலமான சட்ட அமைப்புக்களை கொண்ட ஒரு நாடாகின்றது.

Edited by akootha

இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் நன்மையடைவார்களா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.