Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் சிந்தனை முறை தேவைதானா? : சபா நாவலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் சிந்தனை முறை தேவைதானா? : சபா நாவலன்

இந்திய ஆதிக்க வர்க்கமும் அதன் இலங்கை அடிமைகளும் கூட்டிணைந்து நிகழ்த்திய வன்னிப் படுகொலைகள் புலிகள் என்ற அமைப்பிற்குக் கிடைத்த தோல்வி மட்டுமல்ல அதன் அதிகாரம் சார்ந்த கருத்தியலுக்கும் சிந்தனை முறைக்கும் கிடைத்த மாபெரும் தோல்வி. இன்னமும் செத்துப் போய்விடாத இந்தச் சிந்தனை முறையும், அரசியலும் இன்னும் எத்தனை மனித உயிர்களைப் பலியெடுக்கப் போகின்றன என்பதே இங்கு புதிய அச்சங்களைத் தோற்றுவிக்கின்றன.

இலங்கையில் துவம்சம் செய்யப்படும் சிறுபான்மைத் தேசிய இனங்கள் தமது விடுதலைக்கான போராட்டத்தை புதிய திசைவழி நோக்கித் திட்டமிடுவதற்கான ஆரம்பம் புலிகளின் சிந்தனை முறையையும், அதன் தொடர்ச்சியும் நிராகரிக்கப்படுவதிலிருந்தே உருவாக முடியும்.

பொதுவாக இலங்கையிலும் அதற்கு வெளியிலும் நான் கு வகையான சக்திகளை இனம்காண முடியும்.

1. புலிகளின் சிந்தனை முறையின் தொடர்ச்சியை ஏற்றுக்கொள்வோர்.

2. இலங்கை அரசு தமிழ்ப் பேசும் மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்டிருக்கும் உளவியல் யுத்ததின் அடிமைகள்.

3. புதிய போராட்ட வழிமுறை குறித்துச் சிந்திப்போர்.

4. சீரழிவு வாதிகளும் லும்பன்களும்.

சீரழிவு வாதிகளும் லும்பன்களும் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தைச் சீர்குலைப்பதில் அரசிற்கு மறைமுகமாகச் சேவையாற்றும் போக்கைக் கொண்டிருந்தாலும் அரசியலில் இவர்கள் தீர்மானகரமான சக்திகளாக இல்லை. தாமாகவே அழிந்துபோகும் நிலையிலுள்ல இவர்களிடம் குறிப்பான சிந்தனை எதுவும் இல்லை. போராட முயலும் ஒவ்வொருவரையும் அனைத்து வழிகளிலிலு அழிக்க முயல்வதற்கு தம்மை சமூகத்தின் புனிதமான அடியாட்களாகக் கட்டமைக்க் முனையும் இவர்கள் முற்றாக நிராகரிக்கப்பட வேண்டியவர்களே. இவர்களைப் புறக்கணிபது என்பதே இன்றைய சூழலில் இவர்களை எதிர்கொள்ளும் தந்திரோபாயமாக அமைய முடியும்.

தவிர முதல் இரு பகுதியினரும் அழிவை மறுபடி முன்னிறுத்தும் சக்திகளாக உருவாகும் வாய்ப்புக்களைத் தம்மகத்தே கொண்டிருக்கின்றனர். அதிகார வர்கத்தின் பொருளாதார நலன்கள் வரலாறு முழுவதும் பல ஆயிரக்கணக்கில் மனித உயிர்களைப் பலிகொண்டிருக்கின்றன. மத்திய கிழக்கில், ஆபிரிக்காவில், ஆசியாவில் என்று எங்கெல்லாம் தமது அதிகார நலன்களுக்காக அப்பாவிகளைக் கொன்று போட வேண்டுமோ அங்லாம் மனிதக் கொலைகளை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றன.

அதிகார வர்க்கத்தைச் சார்ந்த கருத்தியல் என்பது புலிகள் போன்ற போராட்டக் குழுக்களின் அரசியலாக வடிவமைக்கப்பட்டிருந்தது என்பது ஒரு புறம், மறுபுறத்தில் அதுவே இன்னுமொரு வடிவத்தில் உலக மக்களின் சிந்தனை முறையிலும் ஆதிக்கம் செலுத்துகின்றது என்பது துரதிர்ஷ்ட வசமானது. இது தான் மக்களை அழிக்கும் பாசிசமாக வளர்ச்சி பெறுகிறது. இவ்வாறு வளர்ச்சி பெற்ற பாசிசம் என்பது தான் தமிழ் பேசும் மக்களின் சிறீ லங்கா அரசிற்கு எதிரான நியாயமான போராட்டத்தையும் சீர் குலைத்துச் சிதைத்து விட்டிருக்கிறது.

அதிகாரம் சார்ந்த இந்தச் சிந்தனை முறை தகர்த்தெறியப்பட வேண்டும். உலகம் முழுவதும் அதிகார வர்க்கத்தால் ஒடுக்கப்படும் மக்களே பெரும்பான்மை. இந்தப் பெரும்பான்மை ஆளும் வர்க்கத்தின் சிந்தாந்தங்களால் சிதைக்கப்படுகின்றது. இவ்வாறான சித்தாந்தங்கள் ஒடுக்கப்படுகின்ற மக்களின் பெரும்பான்மையைச் சிதைத்து அதன் ஒருபகுதியை அதிகாரத்திற்குச் சார்பானதாக மாற்றிவிடுகிறது.

ஆசியாவின் ஒரு மூலையில் மக்கள் சாரிசாரியாகக் கொல்லப்பட்ட பின்னர், இனச் சுத்திகரிப்பு திட்டமிட்டு நடத்தப்படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் சர்வதேச அதிகாரவர்க்கம் தம்மை நிர்வாணமாக மக்கள் மத்தியில் அடையாளம் காட்டியிருக்கிறது.

இலங்கை, இந்திய, அமரிக்கா போன்ற சர்வதேச அதிகார வர்க்கத்தோடு மட்டும் தான் நாம் இன்னமும் நம்மை அடயாளப்படுத்திக் கொள்ளப் போகிறோமா இல்லை உலகெங்கும் அதிகார வர்க்கத்தை எதிர்த்து நிற்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் பகுதியினரோடு எம்மை அடயாளப்படுத்திக் கொள்ளப்போகிறோமா என்பது தான் இங்கு தொக்கி நிற்கும் பிரதாக கேள்வி.

அதிகாரவர்க்கத்தை நம்பியிருந்த புலிகளை அவ்வர்க்கம் கைகழுவி விட்டு, மனிதப் படுகொலைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பின்னரும் அதே ஆதிக்க வர்க்கத்தோடு மட்டும் தான் இனச்சுத்திகரிப்பிற்கு உட்படுத்தப் பட்டிருக்கும் தமிழ் பேசும் மக்கள் தம்மை அடையாள்ப்படுத்துவதென்பது கடைந்தெடுத்த முட்டாள்தனம் மட்டுமல்ல இன்னொரு தோல்வியின் ஆரம்பத்திற்கான அத்திவாரம்.

காரணமின்றி வலிந்து சிறைவைக்கப்பட்டிருந்த கால் மில்லியன் மக்களை விடுவிக்க வேண்டுமென்று எந்தச் சர்வதேச அமைப்புக்களும் கோரிக்கை விடவில்லை. ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச மன்னிப்புச் சபை போன்ற அமைப்புக்களெல்லாம் சிறை முகாம்களில் மனித உரிமை குறித்தும், அவற்றின் வசதிகள் குறித்தும் அவ்வப்போது அறிக்கை வெளியிட்டபடி அவ்வப்போது தமது இருப்பைப் பறைசாற்றிக்கொண்டன.

ஐ.நா தனது விசாரணக் குழு நாடகத்தை இன்னும் நிறுத்தவில்லை. இன்று, மண்ணோடு வாழ்ந்த வன்னி மக்கள் இன்று தெருவிலே அனாதைகளாகத் தூக்கிவீசப்பட்டுள்ளனர்.

இவர்களெல்லாம் இலங்கை அரசிற்கு மறைமுக அங்கீகாரம் மட்டும்தான் வழங்குகின்றனர். நீங்கள் மக்களைக் காரணமின்றிச் சிறை வைத்திருக்கலாம் ஆனால் மனித உரிமை மீறல்களின்றிப் பார்த்துக் கொள்ளுங்கள் என்கின்றனர். அறுபது வருட காலமாக திட்டமிட்டு நடத்தப்படும் இனச்சுத்திகரிப்பை “மனித உரிமைக்கு” மதிப்பளித்துத் தொடரச்சொல்கின்றனர்.

இலங்கையிலும் புலம் பெயர் நாடுகளில் புலிகள் களின் அதிகாரம் சார்ந்த சிந்தனை முறையே இன்னமும் ஆதிக்கம் செலுத்துகிறது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான முரண்பாட்டின் வெளிப்பாடாகத் தான் இந்திய அரசு இலங்கைக்கு ஆதரவு வழங்குகிறது என்றும் இதற்கு மாறாக இந்திய அரசிற்கு தமிழர்கள் ஆதரவு வழங்க வேண்டுமென்று அதிகார வர்க்கச் சிந்தனை முறைகுட்பட்ட இன்னொரு பகுதியினர் கோருகின்றனர்.

காஷ்மீரிலும், மேற்கு வங்கத்திலும், இன்னும் இந்தியா முழுவதும் எந்த மனிதப்பெறுமானக்களுக்கும் மதிப்பளிகாது மனிதப்படுகொலை நிகழ்த்தும் இந்திய அதிகாரம் உலக முதலாளித்துவத்தோடு தன்னை இணைத்துக் கொள்வதற்காக இலங்கையில் மட்டுமல்ல தனது சொந்த எல்லைக்குள்ளேயே மக்களைக் கொன்று குவிக்கிறது என்பதை உணர மறுக்கிறார்கள் இவர்கள்.

உலகம் முழுவதையும் தனது பொருளாதார ஆகிரமிப்பிற்குள் உட்படுத்துக் நோக்கோடு இரத்தம் தோய்ந்த வரலாற்றை இன்றுவரை எழுதிவைத்திருக்கும் பிரித்தானிய வாக்குக் கட்சிகளோடு இலங்கைப் பிரச்சனை பற்றி மணிக்கணக்கில் விலையுயர்ந்த உணவு விடுதிகளுள் பேச்சு நடத்தும் பிரித்தானிய தமிழ் fபோரம் போன்ற புலி சார் அமைப்புக்கள், பிரித்தானியாவின் அடக்குமுறைகளுக்கு எதிராக, பிரித்தானியாவிற்குள்ளேயே போராட்டம் நடத்தும் இலட்சக்கணக்கான இடது சாரிகளை இனம் கண்டுகொள்வதில்லை.

பாலிஸ்தீனய மக்களின் விடுதலைக்காகவும், ஈராக்கிய, ஆப்கானிஸ்தானிய ஆக்கிரமிப்புக்களுகெதிராகவும் நடத்திய வீரம்மிக்க எதிர்ப்பியக்கங்கள் பல தடவைகள் பிரித்தானிய அதிகாரத்தை அதிரவைத்திருக்கின்றன. ஐரோப்ப்பியப் போராடும் மக்கள் தமக்காக மட்டுமல்ல உலகம் முழுவதும் மனிதப்படுகொலைகள் நடைபெறும் போதெல்லாம் போராடி தமது அரசுகளுக்கு அழுத்தம் கொடுத்த வரலாறுகளை எம் கண்முன்னே காணலாம்.

இலங்கை இனப்படுகொலை குறித்து பிரச்சார அடிப்படையில் கூட இவர்கள் அணுகப்படவில்லை. மாறாக, மக்களின் எதிரிகளோடும், அதிகாரத்தோடும் கைகோர்த்துக் கொள்ள முனையும் புலிகளின் தோற்றுப்போன அதிகாரம் சார் சிந்தனை முறை இன்று மறுபடி மறுபடி தமிழ் பேசும் மக்களின் அரசியலாக முன்னிறுத்தப்படுகின்றது.

ஒடுக்கப்படுகின்ற, இனப்படுகொலைக்கும், இனச்சுத்திகரிப்பிற்கும் முகம்கொடுக்கும் தமிழ் பேசும் மக்கள் அதிகாரத்தின் பக்கமல்ல, மாறாக ஒடுக்கப்படுகின்ற ஏனைய மக்களின் பக்கத்தில் தான் என்ற செய்தி சொல்லப்பட வேண்டும்.

நமது சிந்தனை முறை மாற்றத்திற்கு உள்ளாக்கப்படவேண்டும். இந்தியாவிலும், இலங்கையிலும், உலகம் முழுவதும் பெரும்பான்மையான ஒடுக்கப்படும் மக்களை எமது பலத்திற்கு ஆதரவு சக்திகளாக இணைத்துக்கொள்வதன் ஊடாகவே தமிழ் பேசும் மக்களின் போராட்டத்திற்க்குப் புதிய உயிர்ப்பை வழங்க முடியும்.

http://inioru.com/?p=17897

  • கருத்துக்கள உறவுகள்

திட்டமிட்டு மறைக்கப்பட்ட பல விடயங்களோடு புலிகளை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தாத குறைக்கு வரையப்பட்டுள்ள கட்டுரை.

புலிகள் யார்...???!

இதைப் பற்றி கட்டுரையாளர் சிந்திக்க மாட்டார் போலும்..??!

விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் பிள்ளைகளாக பிரதிநிதிகளாக அகிம்சை வழியில் தமிழர்களின் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்ட போது அதை தட்டிக்கழித்த தரப்புகளிடம் அதே கோரிக்கையை முன் வைத்தார்கள். அதில் ஆயுத அடக்குமுறைகளை புலிகள் ஆயுதத்தால் எதிர்த்தார்கள்.

உண்மையில் விடுதலைப்புலிகளின் தோல்வி என்பது தமிழர்களின் குறிப்பாக தமிழீழத்தை முன்மொழிந்த தந்தை செல்வா போன்றவர்களினதும் அவர்களின் பின்னால் தோன்றி ஆயுதப் போராட்டம் மூலம் தமிழீழத்தை அடைய முடியும் என்று நம்பிய யோகேஸ்வரன் போன்றவர்களினதும்.. இரத்தத்தால் வீரத்திலகமிட்டு தமிழீழ முழக்கக் கோரிக்கையோடு எதிர்கட்சி தலைவர் வரிசையில் உட்கார்ந்து தமது குடும்பங்களை வாழ வைத்த அமிர்தலிங்களினதும் தோல்வியே ஆகும்.

அமிர்தலிங்கம் அன்று முழங்கினார் தன் முயற்சியால் வடக்கு கிழக்கு இணைகிறது என்று. ஆனால் அவர் முழங்கி இணைத்த வடக்குக் கிழக்கை ஒரு சிறு வழக்கை வைத்து சிங்களம் தகர்த்து எறிந்துவிட்டது. பிரதேசவாத தமிழ் ஒட்டுக்குழு முதலைகளிடம் அதனை கையளித்து ஆட்சியும் செய்து வருகிறது. இவர்கள் எல்லாம் அமிர்தலிங்கத்தை தந்தையாக வரையக்கூடிய புத்திரர்கள் ஆவர்.

அவர்களே இன்று புலிகளின் போராட்டம் மறைமுகமாகப் பெற்றுக் கொடுத்த மாகாண சபைகளுக்கு அதிகாரம் காணாது என்று கண்ணீர் விட்டபடி முத(லை)மைச்சர்களாக வீற்றிருக்கின்றனர். இன்னும் சிலர் வீற்றிருக்க விரும்புகின்றனர்.

புலிகளின் தமிழ் தேசியக் .. தமிழீழ தாயக் கோட்பாட்டை.. எந்த பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற உச்சரிப்போடு நடக்கும் வல்லாதிக்க சக்திகளின் இராணுவ ஆக்கிரம்பிப்பு வியூகங்களும் முறையடிக்க முடியாது.

இராணுவ ரீதியில் இந்தியா சீனா பாகிஸ்தான் என்று பல தடவைகள் போரில் பின்னடைவுகள் கண்ட போதும்.. நிலங்களை பறிகொடுத்த போதும்.. இன்னும் தன்னை பிராந்திய வல்லரசாக எண்ணச் செய்து கொண்டிருக்கிறது. இராணுவ ரீதியாக அமெரிக்கா வியட்நாம் சோமாலியா என்று பல களங்களில் தோற்கடிக்கப்பட்ட போதும்.. இன்னும் உலகில் தனது வல்லாதிக்கத்தை விரிவு படுத்துவதை அது கைவிட்டதாக இல்லை.

விடுதலைப்புலிகளின் சிந்தனை என்பது இந்தக் கட்டுரையாளரின் சிந்தனை வருவது போன்ற ஒன்றல்ல. விடுதலைப்புலிகள் ஆயுத வழியை விடுதலைக்கான பிரதான வழிமுறையாகக் கருதி இருக்கவில்லை. மாறாக ஆயுத வழியில் விடுதலைக்கான உணர்வை சிதைக்க முனைந்த எதிரிகளின் ஆக்கிரமிப்பை ஆயுத அடக்குமுறையை மட்டும் புலிகள் ஆயுத முனையில் எதிர்க்கொண்டனர். புலிகள் இறுதிவரை பேச்சுக்கள் மூலம் சமாதானத்தை அடைய முடியும் என்று நம்பினர். அதற்கு சிங்கள தேசம் பழைய சிங்கபாகு துட்டகைமுனு கொள்கைகளில் இருந்து வெளி வந்து புரிந்துணர்வோடும் விட்டுக்கொடுப்போடும் நடந்து கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவர்களிடம் இருந்தது. அதனை தேசிய தலைவர் கிட்டத்தட்ட ஒவ்வொரு மாவீரர் தின உரையிலும் முன்னிறுத்தத் தவறவில்லை.

புலிகளின் சிந்தனை என்பது தமிழ் மக்கள் அவர்களின் பாரம்பரிய நிலத்தில் அவர்களே அவர்களை ஆளும் உரிமை பெற்று வாழ்தலாக அமைய வேண்டும் என்று இருந்ததே தவிர ஆயுதங்களை எடுத்து மனிதர்களை கொல்வதல்ல. அப்படி நினைத்திருந்தால் சிங்கள தேசத்தை புலிகள் இன்றும் தாக்கிக் கொண்டு ஒரு கொரில்லா அமைப்பாக இருந்து கொண்டிருப்பர்.

இந்திய படைகளிடம் கூட சரணடைய மறுத்த புலிகள்.. ஏன் முள்ளிவாய்க்காலில் முடங்கினர் என்பதற்கு.. புலிகள் சர்வதேசம் என்பதன் பெயரால் வல்லாதிக்க சக்திகளை நம்பியதன் விளைவே அன்றி.. புலிகள் கொண்டிருந்த தமிழீழக் கோரிக்கையால் அது வரவில்லை. இதில் புலிகளின் சிந்தனை அவர்களை தோற்கடித்ததாக காட்டுவது என்பது.. தமிழ் மக்களின் விடுதலை உணர்வு அர்த்தமற்ற ஒன்றென்பதாப் போல் காட்டி இணக்க அரசியலுக்குள் அவர்களை தள்ளி சிறீலங்காவை சிங்களத் தீவாக்க இந்தக் கட்டுரைகள் முயல்வதாகவே கருத வேண்டி உள்ளது.

தமிழ் மக்களிடம் விடுதலை உணர்வு.. தமிழீழம் போன்ற சிந்தனைகள் இருக்க வேண்டின்.. விடுதலைப்புலிகளின் சிந்தனைகள் இருந்தாக வேண்டும். அவை இல்லாமல் அடக்கப்படும் மக்கள் குறித்து தமிழ் மக்களை சிந்திக்கத் தூண்டுவதும்.. வல்லாதிக்க சக்திகளின் கபடங்களை இராஜதந்திரங்களை புரிந்து கொண்டு செயற்படுவதும் சாத்தியமற்றதாகவே இருக்கும்.

தமிழ் மக்களிடம் விடுதலை உணர்வு இல்லையேல்.. புலிகளின் சிந்தனை இல்லையேல்... அவர்களை இந்த உலகில் யாருமே கணக்கெடுக்கமாட்டார்கள்.

இன்று.. கருணாவுக்கோ.. டக்கிளசுக்கோ.. கேபிக்கோ.. வரதராஜப்பெருமாளுக்கோ.. ஆனந்தசங்கரிக்கோ.. சிங்களம் பயப்பிடவில்லை. ஆனால் நாடு கடந்த தமிழீழ அரசை இட்டும்.. வெளிநாடுகளில் உள்ள விடுதலைப்புலி ஆதரவாளர்கள் குறித்தும் சிங்களம் மட்டுமல்ல.. இந்தியப் பேரரசு கூட அச்சம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் புலிகள் மீதான தடைக்கு கூறப்பட்ட செய்தி.. புலிகள் தமிழ்நாட்டில் மீளிணையக்கூடும் என்பதுதான்.

இந்தியாவில் 1991 இல் தடை கொண்டு வரப்பட்ட போது சொல்லப்பட்ட செய்தி.. ராஜீவ் பிரபாகரன் புலிகள். இன்று ராஜீவும் இல்லை பிரபாகரனும் இல்லை.. புலிகளும் இல்லை. ஆனால் தடை இருக்கிறது.. இது புலிகளின் கொள்கைக்கு சிந்தனைக்கு இடப்பட்ட தடையா.. அல்லது தமிழ் மக்களிடம் வேரூன்றி உள்ள தனிநாட்டு கொள்கைக்கு இடப்பட்டுள்ள தடையா..??!

விடுதலைப்புலிகளின் சிந்தனை என்பது தமிழீழக் கொள்கை.. தமிழ் தேசிய நிலைப்பாடு.. சுயநிர்ணய உரிமை.. தாயகக் கோட்பாடு உள்ள வரைக்கும் வாழும் வரும்.

அதேபோல்.. விடுதலைப்புலிகளின் சிந்தனை என்பது.. இராணுவ ரீதியில் கரும்புலிகள் வடிவில்.. உலக வல்லரசுகளை நிச்சயம் தூங்க விடப் போவதில்லை.

அமெரிக்கா ஈராக்கை ஆப்கானிஸ்தானை விட்டு ஓடவும்.. கரும்புலிகளின் தாக்குதல் வடிவமே ஒரு வழிகாட்டியாகவும் இருக்கப் போகிறது.

அமெரிக்கா பாகிஸ்தானில் நாளுக்கு 15 அப்பாவிகளை ஆளில்லா விமானம் மூலம் கொன்று கொண்டு அவர்களை தலிபான்கள் எனும் போது மெளனமாக இருப்பவர்கள்.. தலிபான்கள் அமெரிக்கர் ஒருவரை கொன்றுவிட்டால்.. பயங்கரவாதம் என்று கட்டுரை எழுதி மனித உரிமை பற்றியும் விளாசித்தள்ளுவார்கள். அந்த வகையில் அமைந்தததுதான் இந்தக் கட்டுரை. அங்கு தலிபான்களின் தோல்வி.. இங்கு புலிகளின் தோல்வி...????!

அத்தோடு.. இந்தக் கட்டுரையையும் கொஞ்சம் படியுங்கோ..

http://kundumani.blogspot.com/2009/07/blog-post_13.html

Edited by nedukkalapoovan

இந்திய ஆதிக்க வர்க்கமும் அதன் இலங்கை அடிமைகளும் கூட்டிணைந்து நிகழ்த்திய வன்னிப் படுகொலைகள் புலிகள் என்ற அமைப்பிற்குக் கிடைத்த தோல்வி மட்டுமல்ல அதன் அதிகாரம் சார்ந்த கருத்தியலுக்கும் சிந்தனை முறைக்கும் கிடைத்த மாபெரும் தோல்வி. இன்னமும் செத்துப் போய்விடாத இந்தச் சிந்தனை முறையும், அரசியலும் இன்னும் எத்தனை மனித உயிர்களைப் பலியெடுக்கப் போகின்றன என்பதே இங்கு புதிய அச்சங்களைத் தோற்றுவிக்கின்றன

அதிகாரம் சார்ந்த கருத்தியலுக்கும் சிந்தனை முறைக்கும் கிடைத்த தோல்வியை போரில் வாழ்விழந்த மக்கள் நன்கு புரிந்துள்ளனர். இவ்வாறான அதிகாரம் சார்ந்த சிந்தனை முறை கருத்தியல் ஒரு தேசிய எழுச்சியை தலமையை போராட்டத்தை பாதிக்கப்பட்ட மக்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. ஆனால் பாதிப்புக்கு வெளியில் பாதுகாப்பாக இருந்துகொண்டு இதே பாணியிலான சிந்தனை முறைக்கு உயிர் கொடுக்கும் நாடுகடந்த அரசுகள் போன்றனவற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் பாதிப்புக்குள்ளாவர்கள். அந்தவகையில் வர்க்க மேலாண்மை அதிகார அரசியல் அடயாளப்போட்டடிள் போன்ற அடிப்படையிலான நா கா அரசு போன்றவற்றுக்கெதிரான அதேநேரம் பாதிக்கப்பட்ட தாயக மக்களுடன் உறவைப்பேணவல்ல அமைப்புக்களின் உருவாக்கம் அவசியமாகின்றது. இனிமேல் எந்த ஒரு காரணத்துக்காகவும் மேலாண்மை அதிகார அரசியலுக்கும் அதுசார்ந்த தேசிய எழுச்சிக்கும் துணைபோகக் கூடாது. அது பனையால் விழ்ந்தவனை மாடேறி மிதிப்பதற்கு ஒப்பானதாக பாதிக்கப்பட்ட மக்களை மேலும் பாதிப்புக்குளாக்க வழிசமைக்கும்.

கட்டுரை ஆய்வாளருக்கு கள உறவு ஒன்று ஆழமான பதில் ஒன்றை வரைந்துள்ளார்.

ஆங்கிலத்தில் சொல்லப்படும் "Half glass empty or half glass full" என்பது போல நாம் தண்ணீர் கோப்பையில் அரைவாசி தண்ணீர் இல்லாததை கதைப்போம் இல்லை இருக்கும் அரைவாசி தண்ணீரை பற்றி கதைப்போம்.முற்று முழுதாக கோப்பையில் உள்ள விபரங்களை அலசும் பொழுதுதான் நாம் அடுத்த கட்டத்துக்கு செல்லலாம்.

இதற்கு நாடு கடந்த அரசின் சார்பாக அழகான பேட்டி ஒன்று பதிலளிகின்றது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=77469

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்பட்டமை தொடர்பாக நாம் பல்வேறு நாடுகளின் வெளிநாட்டமைச்சர்களுக்கு அறிவித்துள்ளோம். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சில உறுப்பினர்கள் தாம் வாழும் நாடுகளின் அரச தலைவர்களையும் அரசாங்க அதிகாரிகளையும் சந்தித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்பட்டமை குறித்தும் அதன் அரசியல் கொள்கைகளையும் எடுத்து விளக்கி வருகின்றனர்.

http://www.seithy.com/Audio/Rudrakumar_interview091110.mp3

இலங்கை, இந்திய, அமரிக்கா போன்ற சர்வதேச அதிகார வர்க்கத்தோடு மட்டும் தான் நாம் இன்னமும் நம்மை அடயாளப்படுத்திக் கொள்ளப் போகிறோமா இல்லை உலகெங்கும் அதிகார வர்க்கத்தை எதிர்த்து நிற்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் பகுதியினரோடு எம்மை அடயாளப்படுத்திக் கொள்ளப்போகிறோமா என்பது தான் இங்கு தொக்கி நிற்கும் பிரதாக கேள்வி.

இந்த பிரதான "கேள்விக்கும்" கடைசிப்பந்தியின் முடிவுரையும் ஆய்வாளர் ஒரு சோசலிசவாதி என்பதை தெளிவாக படம் பிடித்துக்காட்டுகின்றது.

a) இந்திய, அமரிக்கா போன்ற சர்வதேச அதிகார வர்க்கத்தோடு மட்டும் தான் நாம் இன்னமும் நம்மை அடயாளப்படுத்திக் கொள்ளப் போகிறோமா?

b) உலகெங்கும் அதிகார வர்க்கத்தை எதிர்த்து நிற்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் பகுதியினரோடு எம்மை அடயாளப்படுத்திக் கொள்ளப்போகிறோமா?

இதற்கு பெரும்பாலான தமிழ் மக்கள் தமது தெரிவு a) என்பது யதார்த்தமானது. அதே வேளையில் தேவையேற்படின் நாமும் "எம்மை உலகெங்கும் அதிகார வர்க்கத்தை எதிர்த்து நிற்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் பகுதியினரோடு எம்மை அடயாளப்படுத்திக் கொள்ளலாம்". காஸ்மீர், பாலஸ்தீனம் - இந்த இரண்டையும் தவிர்ப்பது நல்லது.

Edited by akootha

சுதி , தாளக்கட்டு , மாறாத அதே பழைய பல்லவி.... இடையிடையே சரணங்களில் கொஞ்சம் மக்கள் ஆதரவு தொனி ஏற்ற இறக்கங்களை தவிர கட்டுக்கோப்பு மாறாத அற்புதமான கீர்த்தனை... !

இதன் மூல பிரதியின் உரிமை உடயவருக்கு தான் வாழ்த்துக்கள் போய் சேர வேண்டும்... ஆக்கம் கெட்ட கூவைகளான பழைய சோத்துப்பாசல்களுக்கு இல்லை....

சோசலிச ,மாவோ சிந்தனை கொண்ட முற்போக்கு சக்திகள் முன் வரவேண்டும் என கட்டுரையாளர் விரும்புகிறார்....தமிழ்மக்களை மீட்பதற்க்கு......

புலத்திலிருந்து தமிழ்தேசியம் பேசுவதும் .....புலத்திலிருந்து சோசலிசம் பேசுவதும் எனது பொழுது போக்கு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலத்திலிருந்து தமிழ்தேசியம் பேசுவதும் .....புலத்திலிருந்து சோசலிசம் பேசுவதும் எனது பொழுது போக்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.