Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கை போன்று வடக்கிலும் குடியேற்றம் கூட்டமைப்பு கண்டன அறிக்கை

Featured Replies

வெள்ளிக்கிழமை, நவம்பர் 12, 2010

இலங்கையில் எங்கும் எவரும் வாழலாம் என்ற போர்வையில் யாழ்ப்பாணத்தில் சிங்களக் குடியேற்றம் திட்டமிட்ட முறையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தைப் போன்று தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த பிரதேசங்களில் அவர்கள் சிறுபான்மையினராக்கப்பட்டு அவர்களின் தனித்துவம் பறிபோகும் சூழல் ஏற்படுத்தப்படுகிறது.

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டி உள்ளது. யாழ்ப்பாணம் நாவற்குழியில் படையினரின் உதவியுடன் சிங்கள மக்கள் அத்துமீறிக் குடியேறிய சம்பவம் தொடர்பாக விடுத்த கண்டன அறிக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.

கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் இது தொடர்பாக விடுத்த அறிக்கை வருமாறு:

இலங்கையில் எங்கும் எவரும் வாழலாம் என்ற போர்வையில் யாழ்ப்பாணத்தில் சிங்களக் குடியேற்றம் திட்டமிட்ட முறையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அரச அதிபருக்கோ, அங்குள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கோ தெரியாமல் இரவோடிரவாக இராணுவம் இக்குடியேற்றங்களைத் தொடங்கியுள்ளது.

20 வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தவர்கள் என்ற காரணத்தைக் காட்டி ஏறத்தாழ 150க்கும் மேற்பட்ட சிங்கள மக்கள் திட்டமிட்ட வகையில் 06.10.2010 அன்று யாழ்ப்பாணம் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

அவர்கள் யாழ்ப்பாணம் போகும் முன்பே அவர்களுக்கான மலசலகூட வசதி எல்லாம் யாழ்ப்பாணம் ரயில்நிலையத்தில் செய்யப்பட்டிருந்தது. அவர்களும் நேரடியாக ரயில் நிலையத்துக்குச் சென்று அங்கே தங்கினார்கள். அவர்களை உடனடியாக அமைச்சர்கள் சந்தித்தனர். பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

கொழும்பில் இருந்து சமுர்த்தி அதிகாரிகள் சென்று அவர்களுக்கான நிவாரண வசதிகளைச் செய்து கொடுத்தார்கள். மொத்தத்தில் அரசு அவர்களை மிகக் கவனமாகப் பாராமரித்து வருகின்றது.

ஆனால் இவர்கள் எவருக்கும் யாழ்ப்பாணத்தில் ஒரு துண்டு நிலம் சொந்தமாகக் கிடையாது. இவர்கள் அந்த மண்ணைச் சார்ந்தவர்களுமல்லர். ஆனால் இவர்களை யாழ்ப்பாணத்தில் குடியேற்ற வேண்டுமென்பதில் அரசு தீவிரமாக உள்ளது.

இதன் முதற்படியாக ரயில் நிலையத்தில் இருந்த ஒரு பகுதியினர் 10ஆம் திகதி இரவு இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டு நாவற்குழி "அப்பன் குடியிருப்பு" என்ற பகுதியில் தற்காலிக வீடுகள் அமைத்துத் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதற்கு இராணுவப் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த இடத்தில் ஏற்கனவே குடியிருந்த தமிழ் மக்கள் இடம்பெயர்ந்து சென்று மீளக்குடியேற வந்த பொழுது இந்நிலம் வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமானது எனக் கூறி அரசால் மறுதலிக்கப்பட்டது. ஆனால் அந்த நிலத்தில் இன்று சிங்கள் மக்கள் குடியேற்றப்படுகின்றனர்.

ஏற்கனவே யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 90,000 மக்கள் அதியுயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் வலிகாமம் வடக்கில் இருந்து விரட்டப்பட்டு இன்னும் அகதி முகாம்களிலும், வாடகை வீடுகளிலும் தங்கியுள்ளனர். இவர்கள் கடந்த 20 வருடங்களாகத் தமது சொந்த இடங்களுக்குப் போக முடியவில்லை.

மேல்நீதிமன்றம் மீள்குடியேற அனுமதி அளித்தும் இராணுவம் அதனை இன்னும் அனுமதிக்கவில்லை. இவர்களில் ஒரு பகுதியினரைக் குடியேற அனுமதித்தாலும், இராணுவ முகாம் விஸ்தரிப்பு, பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு, அதற்கான பாதுகாப்பு என்ற பெயரில் ஒரு தொகுதி மக்கள் மீளக்குடியேற முடியாத நிலைமையே இன்றுள்ளது.

இந்நிலையில், 20 வருடம் அப்படி மீளக்குடியேற முடியாத நிலையில் உள்ள தமிழ் மக்களுக்கு அரசு என்ன கொழும்பிலா காணியும் வீடும் கொடுக்கப்போகின்றது?

1977,1981,1983 ஆம் ஆண்டுகளில் அடித்து விரட்டப்பட்ட எத்தனை தமிழ் மக்களின் சொத்துக்கள் தென் பகுதியில் மீளக்கொடுக்கப்பட்டன? உயிர்தப்பினால் போதுமென, எல்லாவற்றையும் விட்டு விட்டு தமிழ் மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்லவில்லையா?

தென் பகுதியில் தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பு இல்லையெனக் கூறி அவர்களை அரசு கப்பலில் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பவில்லையா? இன்று யாழ்ப்பாணத்திலும் அவர்களுக்கு பாதுகாப்பு இருக்கக் கூடாது என்பதற்காகவா இந்தச் சிங்கள குடியேற்றம்?

இவ்வாறான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தின் மூலம் குடிசன பரம்பல் விகிதாசாரத்தில் அரசு மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பதுடன், கிழக்கு மகாணத்தைப் போன்று தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த பிரதேசங்களிலே சிறுபான்மையாக்கப்பட்டு, அவர்களின் தனித்துவமும் பறிபோகும் சூழல் ஏற்படுத்தப்படுகின்றது.

இராணுவத்தின் துணையுடன் அரசு செய்யும் இந்த இன ஒழிப்பு நடவடிக்கைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிப்பதுடன், இந்நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் அரசைக் கோருகின்றது.

யாழ்ப்பாணத்தில் இன்னும் இடம்பெயர்ந்திருக்கும் 90,000 தமிழ் மக்களும் மீளக்குடியேற அனுமதிப்பட வேண்டும். அப்படி மீளக்குடியேற முடியாத மக்கள் இருப்பின், அவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் குடியிருக்க நிலம் வழங்க முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

இதனை விடுத்து அந்த மண்ணில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக வாழும் மக்களை அகதி முகாம்களில் வைத்துக் கொண்டு, வெளியில் இருந்து வரும் சிங்கள மக்களைக் குடியேற்றுவது நீதியானதுமல்ல; எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதுமல்ல.

இராணுவத்தின் துணையுடன் தமிழ் மக்களைப் பயமுறுத்தி இப்படியான சிங்களக் குடியேற்றங்களை அரசு முன்னெடுக்குமாயின் கோபமும் விரக்தியும்தான் உருவாகுமே தவிர இனங்களுக்கிடையில் நல்லுறவு ஏற்படாது.

சிங்கள முற்போக்குச் சிந்தனையாளர்கள் இதனை இலங்கை அரசுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். யுத்தத்துக்குப் பின் இலங்கை அரசு எடுக்கும் இவ்வாறான நடவடிக்கைகளை உலக நாடுகள் நிறுத்த முன் வரவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோருகின்றது.

இப்படி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

My link

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.