Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்க் குற்றவியல் நீதிமன்றங்கள்

Featured Replies

கம்போடிய நாட்டு போர்க் குற்ற விசாரணைகள்

பல மில்லியன் டாலர் செலவில் குற்றங்கள் நடந்து முப்பது வருடம் கழிந்த பின் நடக்கும் கம்போடிய நாட்டு போர்க் குற்ற விசாரணைகள் நெருக்கடி நிலையை எட்டி விட்டன இவ்வளவும் போதும் நிறுத்து என்று கம்போடியாப் பிரதமர் கூன் சென் ஐநா செயலாளர் நாயகத்தைக் கேட்டுள்ளார்.

பிரதமரே போர்க் குற்றங்களோடு தொடர்புடையவர். அவர் விசாரணைகளைத் தொடர வேண்டாம் என்று சொல்வதில் தனிப்பட்ட காரணம் இருந்தாலும் பழையதைத் தோண்டுவதால் நாட்டு மக்களின் ஒற்றுமை பாதிக்கப் படுவதாக அவர் சொல்லும் காரணத்தில் ஓரளவு நியாயம் உண்டு.

என்றாலும் அவர் சொல்லும் காரணத்திற்காக போர்க் குற்றவாளிகளை விசாரணையின்றித் தப்பிச் செல்ல விடமுடியாது இன அழிப்புப் படுகொலைகள் விசாரிக்கப்பட வேண்டும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் மானுடத்தின் எதிர்காலம் பற்றிய சிந்தனையாளர்கள் மிகவும் உறுதியாக இருக்கிறார்கள.;

கம்போடியப் பிரதமர் கேட்டார் என்பதற்காக ஐநா தீர்ப்பாயம் நடத்தும் போர்க் குற்றவியல் விசாரணைகளை நிறுத்த முடியாது அப்படி நிறுத்தினால் அது மிகவும் ஆபத்தான முன் மாதிரியாகி விடும் என்பதில் ஐயமில்லை விசாரணைகளை நிறுத்து என்பவர்கள் விசாரணையே வேண்டாம் என்று சொல்லலாம் அல்லவா?

போர்க் குற்றவியல் விசாரணைகள்

நவீன போர்க் குற்றவியல் விசாரணைகள் இரண்டாம் உலகப் போர் முடிவோடு தொடங்குகின்றன இந்த விசாரணைகளைப் போரில் வென்றவர்கள் போரில் தோல்வி கண்டவர்கள் மீது நடத்தும் விசாரணைகள் என்று வகைப்படுத்த வேண்டும். 1945ம் ஆண்டில் யேர்மனியின் நியூறெம்பேர்க் யப்பானின் தொக்கியோ ஆகிய நகரங்களில் விசாரணைகள் நடந்தன.

நவம்பர் 20.1945ல் நியூறெம்பேர்க் விசாரணைகள் தொடங்கின அவை 218 நாட்கள் நீடித்தன நீதி விசாரணைச் செலவுகள் அந்தக்காலத்துப் பெறுமதிமிக்க அமெரிக்க டாலர் நான்கு மில்லியனைத்தொட்டன. யூதப் படுகொலை உட்படப் பல்வேறு குற்றம் புரிந்த யேர்மன் படையினரும் அரசியல் தலைவர்களும் விசாரணைக்கு உட்பட்டுத் தண்டிக்கப்பட்டனர்.

எதிரிகள் மீது நான்கு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன

01) அமைதிக்கு எதிரான குற்றம் ஆக்கிரமிப்புப் போர்கள் மூலம் அமைதியைச் சீர்குலைத்தல்.

02) போர்குற்றங்கள் -போர் தொடர்பான சட்டங்கள் விதிமுறைகளை மீறுதல்

03)மனிதத்திற்கு எதிரான குற்றங்கள்- படுகொலைகள்இ அடிமைப்படுத்தல்,மக்களின் விருப்பத்திற்கு மாறாக இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றுதல்.

04) மேற்கூறிய மூன்று குற்றச் செயல்களைப் புரிவதற்கான பொது வேலைத்திட்டத்தை உருவாக்குதல், நடைமுறைப் படுத்துதல்.

குற்றவாளிகள் தாம் மேலிடத்து உத்தரவை அமுலாக்கினோம் நாமாகக் குற்றங்களைச் செய்யவில்லை என்ற வாதத்தை முன்வைத்தனர் அதை நீதி மன்றம் ஏற்க மறுத்தது. எல்லோரும் மேலிடத்துக் கட்டளையை நிறைவேற்றினோம் என்ற வாதத்தை ஏற்றுக் கொள்வதாயின் உண்மையான குற்றவாளியைக் காண்பது கடினமாகும் இறுதியில் ஒருவருமே குற்றம் செய்ய வில்லை என்ற நிலை உருவாகும்.

விசாரணைகளை வெற்றி பெற்ற நேச நாடுகளான அமெரிக்கா, பிரித்தானியா, சோவியத் ஒன்றியம் பிரான்சு ஆகியவற்றைச் சேர்ந்த நீதிபதிகள் நடத்தினர் தண்டனையின் தன்மை அவற்றின் நீதிப்பாரம்பரியத்திற்கு அமைவாக இருந்தன.

சோவியத் ஒன்றிய நீதிபதிகள் மேற்கு நாட்டு சட்ட நுணுக்கங்களுக்கு மதிப்பளிக்காமல் தம்முள் நிறுத்தப்பட்ட கைதிகளுக்குக் காலதாமதமின்றி;த் தூக்குத் தண்டனை விதித்தனர். பிரெஞ்சுநீதி பதிகள் ஏறத்தாழ அதேமனோநிலையில் இருந்தன. பிரெஞ்சுச் சட்டத்தின் படி தான்நிரபராதி என்பதைக் குற்றவாளிதான் நிரூபிக்க வேண்டும்.

குற்றவாளிகள் தரப்பில் ஜேர்மன் வழக்கறிஞர்கள் ஏற்பட்டிருந்தனர். உடல் கட்டமைப்பு, பொறி தட்டும் அனற்;பார்வை இளவயது, ஆகிய இலட்சணமுள்ள ஜேர்மன் வழக்கறிஞர்கள் தமது தரப்பினருக்காக வாதிட வந்திருந்தனர். இதை அவதானித்த அமெரிக்கர்கள் வழக்கு நடத்துனர்களாக அவர்களிலும் கூடிய உடற் கட்டமைப்பும் முறைத்துப் பார்க்கும் திறமையுள்ளவர்களை நியமித்தனர்.

நியூறெம்போர்க் குற்றவியல் விசாரணைகளின் சுவையான பகுதியாக வழக்கறிஞர்களின் மோதல் இடம்பெற்றது செப்ரம்பர் 30.1946ல் தீர்ப்புக்கள் வழங்கப்பட்டன அடுத்த மாதத்தின் 16.17 ம் நாட்களில் தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன பல ஆயிரம் பக்கங்கள் கொண்ட நியூறெம்பேர்க் விசாரணை மற்றும் தீர்ப்புப் பதிவேடுகள் இன்று படிப்பதற்குக் கடினமாக இருந்தாலும் ஆறறிவு படைத்த மனிதன் எந்த ஆழம் வீழ்வான் என்பதற்கு ஆதாரமாக இருக்கின்றன.

நியூறெம்பேர்க் போர்க் குற்றவியல் விசாரணைகள் யூத மக்களைத் திருப்திப் படுத்த வில்லை. பல ஆயிரம் பக்கங்கள் கொண்ட பதிவேடுகளில் ஆறு பக்கங்கள் மாத்திரம் யூத இனப் படுகொலை விவகாரத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்தன.

ஆறு மில்லியன் யூதர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் அதுதான் விசாரணையின் கருப் பொருளாக அமைந்திருக்க வேண்டும் அது நடக்க வில்லை தமது மனக்குறையைத் தீர்ப்பதற்கு இஸ்றேயில் என்ற யூத நாடு உருவாகும் வரை அவர்கள் காத்திருக்க வேண்டி இருந்தது.

இஸ்ரேயில் நாடு ஆறு மில்லியன் யூதர்களின் சாம்ரில் தோன்றியது சொல்வதற்குக் கடினமாக இருந்தாலும் ஹிற்லரின் இனப்படுகொலை இந்த நாட்டின் தோற்றத்திற்கு மறைமுக உத்வேகம் கொடுத்தது ஜேர்மனி, ருஷ்யா போலாந்து ஆகிய நாடுகளில் நடந்த படுகொலைகளும் பிற வன்முறைகளும் புதிய நாட்டின் தோற்றத்தை உறுதி செய்தன.

யூத மக்களுக்கு வீழ்ந்த மரண அடியை நீதி மன்ற விசாரணை மூலம் விரிவாக ஆராயும் அரிய சந்தர்ப்பத்தை ஹிற்லரின் இன அழிப்புத் திட்டத்தை அமுலாக்கிய ஜேர்மன் அதிகாரி ஆடொல்ப் ஜச்மானின் கைது வழங்கியது.

ஆடொல்ப் ஜச்மான் தென்னமரிக்க நாடான ஆர்கென்ரீனாவில் தலைமறைவு வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தபோது .இஸ்ரேயில் நாட்டு உளவுப் பிரிவினரால் இரகசியமாகக் கடத்திச் செல்லப்பட்டான். மே 23. 1960ல் இஸ்ரேயில் பிரதமர் பெண் கூறியன் ஜச்மான இஸ்ரேயிலுக்கு கொண்டு வரப்பட்டான் என்ற செய்தியை உலகிற்கு அறிவித்தார்.

ஜச்மான் கடத்தல் விவகாரம் ஜநா பாதுகாப்புச் சபையில் விவாதிக்கப்பட்டது தனது இறையாண்;மைக்குப் பங்கம் விளைவிக்கப் பட்டதாக இஸ்ரேயிலுக்கு எதிரான முறைப்பாட்டை ஆர்கென்ரீனா செய்திருந்தது. இஸ்ரேயில் வழங்கிய நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரலுடன் இந்த விவகாரம் முடிவுற்றது.

ஆடொல்ப் ஜச்மானுக்கு எதிரான நீதி மன்ற விசாரணையைத் தனது நாட்டில் தான் இயற்றி சட்டங்களுக்கு அமைவாக நடத்த இஸ்ரேயில் அரசு தீர்மானித்த தோடு அதற்கான நகர்வுகளையும் மேற்கொண்டது.

1945தொடக்கம் 15வருடகாலம் தேடப்பட்ட குற்றவாளி 1960ல் பிடிபட்டான் அவனை விசாரணை செய்வதற்கான இரு முக்கிய குற்றவியல் சட்டங்கள் கினெசெற் (Genocide) எனப்படும் இஸ்ரெயில் பாராளுமன்றத்தில் 1950ல் ஏற்கனவே நிறைவேறியுள்ளன.

இஸ்ரேயில் நாடு மே 14, 1948ல் தோன்றியது. இது தொடர்பான இரு முக்கிய சட்டப் பிரச்சனைகள் இருக்கின்றன. நாடு தோன்ற முன்பு அந்த நாட்டிற்குரிய மக்களுக்கு இழைக்கப்பட்ட குற்றங்களை அந்த நாடு தோன்றிய பின்பு விசாரணை செய்ய முடியுமா?

கவனமாகப் படியுங்கள். இஸ்ரேயில் தோன்ற முன்பு அந்த நாட்டை உருவாக்கிய யூத மக்களுக்கு இழைக்கப்பட்ட இனப் படுகொலைக் குற்றங்களைத் தனது தோற்றத்தின் பிறகு அந்த நாடு விசாரணை செய்ய முடியும் இந்த விடை சர்வதேச சட்டத்தில் பெரும் தாக்கத்தை விளைவிக்கின்றது.

தமிழீழ மக்களும் இதைக் கவனத்தில் எடுக்க வேண்டும் தமிழீழம் சட்டபூர்வமாகத் தோன்ற முன்பு அந்த நாட்டுக்குரிய தமிழ் மக்களுக்கு எதிராகச் சிங்கள நாடு செய்த இனப் படுகொலை குற்றவியல் விசாரணையை தமிழீழம் தோன்றிய பிறகு அதனால் இஸ்ரேயில் பாணியில் செய்ய முடியும்.

சர்வதேசச் சட்டத்தில் ஆடொல்ப்ஐச்மான் விசாரணை இன்னுமோர் புதிய அத்தியாயத்தைத் திறந்துள்ளது. நாடு உருவாவதற்கு முன்பு அந்த நாட்டு மக்களுக்கு எதிராகச் செய்யப்பட்ட போரியல் குற்றங்களை விசாரிப்பதற்கு அந்த நாடு தோன்றிய பிறகு சட்டங்களைக் காலம் பிந்தி இயற்றி வைத்திருக்க முடியுமா? ஆம் முடியும்.

இவை தமிழீழம் பற்றிய உருவாக்கக் கற்கைக்கு முக்கிய எடுகோள்களாக அமைகின்றன. ஐரூசலேம் நகர நீதி மன்றத்தில் ஏப்றல் 11,1961ம் நாள் விசாரணை தொடங்கியது நீதி மன்ற விசாரணைகளை அவதானித்த பிறிட்டிஷ் வழக்கறிஞர் றஷல் பிரபு நீதி மன்ற விசாரணை சரியாக நடக்கிறதா என்பதை உலகின் நீதி அறிஞர்கள் விசாரணை செய்தார்கள் என்று பதிவு செய்திருக்கிறார்.

நீதி விசாரணை வெளிப்படையாக நடத்தப்பட்டது எதிரி தரப்பில் வாதிடுவதற்காக மேற்கு யேர்மனியில் இருந்து மூத்த வழக்கறிஞர் டாக்டர் சேர்வாற்றியூஸ் தலைமையில் ஒரு குழு இஸ்ரேயில் வந்து சேர்ந்தது வெளியுலகிற்கு உடனுக்குடன் அறிவிப்பதற்காகச் சர்வதேசப் பத்திரிகையாளர்கள், தொலைக் காட்சி மற்றும் வானொலிக் குழுவினர் நீதி மன்றத்தில் அமர்ந்திருந்தனர்

எழுநூறு (700) வரையிலான சட்ட வல்லுநர்கள், சட்டப் பேராசிரியர்கள், சட்ட நூலாசிரியர்கள் அவதானிப்பாளர் வரிசையில் நீதி மன்றத்திற்க்குள் வழங்கப்பட்ட பிரத்தியேக இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். மூன்று யூத நீதியரசர்கள் நீதிபதிகளாக வீற்றிருந்தனர் தான் குற்றம் செய்யவில்லை, மேலிடக் கட்டளையை நிறைவேற்றினேன் என்ற நிய+றெம்பேர்க் வாதத்தை குற்றவாளி முன்வைத்தான.;

இந்த வாதம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை ஐச்மானுக்கு வழங்கப்பட்ட குற்றப் பத்திரிக்கையில் பதினைந்து குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன அனைத்தும் நிரூபிக்கப்பட்டதாக நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர் டிசெம்பர் 15,1961ம் நாள் அவனுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.

இந்தத் தீர்ப்புக்கு எதிராக டாக்டர் சேர்வாற்றியூஸ் குழுவினர் மேன்முறையீடு செய்தனர் சட்ட அடிப்படையிலான மறுபரிசீலனை செய்யப்பட்டபின் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது மே 31, 1962ம் நாள் இரவு ஆடொல்ப் ஐச்மான் தூக்கிலிடப்பட்டான்

சாவுக்கு முன்பு அவன்” நான் போர் விதி முறைகளை மதித்து நடக்க வேண்டியவன் ஆனேன் எனது கொடியை நான் மதித்து நடந்தேன் என்று கூறினான் தூக்கில் தொங்கிய உடல் இறக்கப்பட்டு எரியூட்டப்பட்டது அவனுடைய சாம்பர் இஸ்ரேயில் கடற்படைக் கப்பல் மூலம் இஸ்ரேயில் கடல் எல்லைக்கு அப்பால் கொண்டு செல்லப்பட்டுக் கடல் நீரில் கரைக்கப் பட்டது

இன்று நியூறெம் பேர்க் குற்றவியல் நீதி மன்ற விசாரணைகள் போன்றவற்றிற்கு இடமில்லை ஆனால் இஸ்ரேயில் பாணியிலான விசாரணைகள் தடை செய்யப்படவில்லை இஸ்ரேயில் நடத்திய விசாரணைகள் சாத்திய மாவதற்கு அந்த நாடு அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் ஆகியவற்றிடம் பெற்ற ஆதரவு காரணமாகும்.

மேலும் யூதர்களுக்கு எதிராக யேர்மனி புரிந்த இன அழிப்புப் படுகொலை உலகின் மனசாட்சியைத் தட்டியெழுப்பியது. நியூரென்பேர்க் விசாரணைகளில் யூத இன அழிப்பு விவகாரம் முறையாக விசாரிக்கப் படாதது இன்னுமோர் காரணமாகலாம்.

இன்று சர்வதேசச் சட்டம் இருக்கும் நிலையில் சர்வதேச நீதி மன்றத்திற்கு மாத்திரம் போரியல் குற்றங்களை விசாரித்துத் தண்டனை வழங்கும் வலுவும் உரித்தும் இருக்கிறது ரோம் சாசனத்தில் ( International Criminal Court) ஒப்பமிட்ட நாடுகளின் போரியல் குற்றங்களை மாத்திரம் சர்வதேச நீதி மன்றத்தால் விசாரிக்க முடியும.;

சிறிலங்கா ரோம் சாசனத்தில் ஒப்பமிடாத படியால் சர்வதேச நீதி மன்றத்தால் சிறிலங்காவின் போரியல் குற்றங்களை விசாரிக்க முடியாது. ஐநா செயலாளர் நாயகத்தின் பரிந்துரையின் அடிப்படையில் ஐநா பாதுகாப்புச் சபை ஏகோபித்த தீர்மானம் மூலம் அனுமதி வழங்கினால் சர்வதேச நீதி மன்றம் சிறிலங்காவுக்கு எதிரான விசாரணையைத் தொடங்க முடியும்.

ருஷ்யா, சீனா, இந்தியா, ஆகிய மூன்று சிறிலங்காவின் நட்பு நாடுகள் ஐநா பாதுகாப்புச் சபையில் இருப்பதால் சிறிலங்கா மிகவும் பாதுகாப்பான நிலையில் இருக்கிறது இஸ்ரேயில் பாணியில் ஒரு விசாரணை அரங்கேற்றும் காலம் வெகு தூரத்தில் இருப்பது போல் தோன்றுகிறது.

ஆனால் நடக்காது எனபார் நடந்து விடும் என்பதை மறக்க வேண்டாம் போர் குற்றவியல் விசாரண என்பது மிகவும் சிக்கலான அரசியலும் சட்டமும் கலந்த பிரச்சனை சில நாடுகள் இந்த விசாரணைக்கான வசதி இருந்தும் முயற்சி எடுப்பதில்லை.

கேணல் கருணா என்று அழைக்கப்படும் விநாயக மூர்த்தி முரளீதரன் தானாகப் போலிக் கடவுச் சீட்டுடன் இங்கிலாந்திற்குள் நுளைந்தபோதும் அந்த நாட்டினர் சமயோசிதமாக அவரை சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பியுள்ளனர். அவர்களுடைய அரசியல் முதிர்ச்சியை இது எடுத்து காட்டுகிறது .

அகதி அந்தஸ்துக் கோரியுள்ள சில முன்னாள் புலிப் போராளிகளுக்கு எதிராகக் கனடா அரசு போர்குற்ற வாளிகள் என்ற முத்திரை குத்திப் போரியல் குற்ற விசாரணை தொடரப் போவதாகத் தகவல் கிடைத்துள்ளது. இது சர்வதேச சட்டத்தில் புதிய அத்தியாயத்தைத் திறக்கும் என்பது திண்ணம்.

மூலம்: http://www.eelampress.com/2010/11/6048/

========================================

சிறிலங்கா ரோம் சாசனத்தில் ஒப்பமிடாத படியால் சர்வதேச நீதி மன்றத்தால் சிறிலங்காவின் போரியல் குற்றங்களை விசாரிக்க முடியாது. ஐநா செயலாளர் நாயகத்தின் பரிந்துரையின் அடிப்படையில் ஐநா பாதுகாப்புச் சபை ஏகோபித்த தீர்மானம் மூலம் அனுமதி வழங்கினால் சர்வதேச நீதி மன்றம் சிறிலங்காவுக்கு எதிரான விசாரணையைத் தொடங்க முடியும்
.

அவனும் புத்தன் இவனும் புத்தன் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இணைப்பிற்கு நன்றி அகோத.

Edited by KILI TIGER

  • தொடங்கியவர்

சூடானை அமெரிக்க தலைமையிலான மேற்கைத்திய உலகம் இந்த நாட்டை ஒரு பயங்கரவாத நாடாக நீண்டகாலமாக அறிவித்துள்ளன.

தென்பகுதி மக்கள் ஒரு வாக்கெடுப்பு மூலம் பிரிந்து செல்ல அனுமதித்தால் தாம் அந்த தடையை நீக்குவதாக அவர்கள் சொல்லியுருக்கின்றனர். அதற்கேற்ப அடுத்த வருடம் சூடானில் ஒரு வாக்கெடுப்பு நடக்க உள்ளது

இப்படியான ஒரு நிலைமை இந்த போர்க்குற்ற விசாரணை ஊடாக நாமும் பெறவேண்டும்.

U.S. Revises Offer to Take Sudan Off Terror List

"President Obama has told Sudan that if it allows a politically sensitive referendum to go ahead in January, and abides by the results, the United States will move to take the country off its list of state sponsors of terrorism as early as next July, administration officials said Sunday."

http://www.nytimes.com/2010/11/08/world/africa/08sudan.html?_r=1&scp=4&sq=sudan&st=cse

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.