Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்காலில் என் அம்மாவை கொண்டு சென்ற இராணுவத்தினர் இன்னமும் விடுவிக்கவில்லை

Featured Replies

திங்கட்கிழமை, நவம்பர் 15, 2010

ஷெல் வீச்சில் காயமடைந்த எனது அம்மாவுக்கு உதவ வழி தெரியா மல் அழுது புலம்பிய வேளையில் காயப்பட்டவர்களுடன் சேர்த்து அம்மாவையும் இராணுவத்தினர் தனி பஸ்ஸில் ஏற்றிச் சென்றனர்.

ஆனால் இன்றுவரை அம்மாவைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை.

இவ்வாறு தெரிவித்தார் 13 வயதுச் சிறுமி செ.இலக்கியா.

சாவகச்சேரி சிவன் கோயிலுக்கு அருகில் உள்ள தென்மராட்சி கலை, கலாசார மண்டபத்தில் நேற்று முன் தினம் மாலை நல்லிணக்க ஆணைக் குழு அமர்வு இடம்பெற்றது. அங்கு சாட்சியமளிக்கையிலேயே மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயத்தில் தரம்08 இல் கல்வி பயிலும் மாண வியான செல்வதாசன் இலக்கியா இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் எனது அப்பா இறந்து விட்டார். எனது அம்மா கிளிநொச்சி உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் முகாமைத்துவ உதவி யாளராகப் பணியாற்றியவர்.

போரின் இறுதிக் கட்டத்தின் போது நானும் அம்மாவும் வலைஞர் மடம் பகுதிக்கு வந்தவேளை படை யினர் எங்களுடன் வந்தவர்களில் காயப்பட்டவர்களைத் தனியான பஸ்ஸில் ஏற்றினர். அம்மாவும் ஷெல் வீச்சில் காயப்பட்டு இருந்த தால் அவரையும் என்னிடமிருந்து பிரித்து அந்த பஸ்ஸில் ஏற்றிச் சென்றுவிட்டனர்.

நான் சிறுபிள்ளையாக இருந்த தால் காயப்பட்ட அம்மாவுக்கு எவ்வித உதவியும் செய்யமுடியவில்லை.

பின்னர் என்னை வவுனியா முகாமுக்குக் கூட்டிச் சென்றனர். நான் சிறுபிள்ளை என்ற காரணத் தால் 5 மாதத்திலேயே முகாமிலி ருந்து விடுவிக்கப்பட்டேன்.

ஆனால் இதுவரை எனது அம்மா பற்றிய எந்தத் தகவலும் எனக்குக் கிடைக்கவில்லை. தயவுசெய்து எனது அம்மாவை என்னிடம் சேர்க்க உதவுங்கள். இவ்வாறு கதறி அழுதவாறு இலக்கியா சாட்சிய மளித்தார்.

அங்கு சாட்சியமளித்த மட்டுவில் அ.த.க.பாடசாலை ஆசிரியை ஸ்ரீஸ் கரன் பத்மினி தெரிவிக்கையில்:

எனது கணவரை கடந்த 1996 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 10ஆம் திகதி யன்று வீட்டில் வைத்துப் படையி னர் கைது செய்து அழைத்துச் சென் றனர். அவர் கைது செய்யப்பட்டு 9 மாதங்களின் பின்னர் அவர் வலி காமம் பகுதி முகாம் ஒன்றில் உயிரு டன் இருப்பதாக அறிந்தேன்.

கிராம சேவகரின் உதவியுடன் எனது கணவரைப் பார்வையிட அனுமதிப்பதாக உறுதியளித்தனர். எனினும் இன்றுவரை அவர் விடு விக்கப்படவில்லை.

எனது கணவர் கைது செய் யப்பட்டதற்கான அடையாளச் சான் றிதழ் என்னிடம் உள்ளது. அவர் இன்னும் உயிருடன் இருப்பதாகவே நம்புகிறேன். எனக்கு இரு மகன்கள் உள்ளனர். தயவுசெய்து எனது கண வரை மீட்டுத் தாருங்கள் என்று கண் ணீர் மல்கக் கேட்டுக்கொண் டார்.

நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் தென்மராட்சியில் ஆரம்பமான ஆணைக்குழு அமர்வில் சுமார் 60 இற்கும் மேற்பட்டோர் சாட் சியம் அளித்தனர்.

My link

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.