Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனியும் 'சீனா காட்'டை இலங்கை விளையாடப் போகிறதா?

Featured Replies

யுத்தத்தின் முடிவின் பின்னரான புதுடில்லியுடனான சமன்பாட்டில் தொடர்ந்து சீனா காட்டை விளையாட விரும்பும் இலங்கைக்கு நோபாளத்திலிருந்து ஒரு பாடம் கிடைத்திருக்கிறது. நேபாளத்துக்குள்ள இந்தியாவுடனான பிரச்சினையை சீனாவை ஈடுபடுத்தாமல் நேபாளம் தீர்த்துக்கொள்ள வேண்டும் என சீன அரசுத் தலைமை கூறியதாக நேபாளத்தின் மாவோயிஸ்ட் தலைவர் பிரசண்டா கூறியுள்ளார்

நேபாளம் தொடர்பில் இந்தியாவினதும் சீனாவினதும் பாதுகாப்பு தொடர்பான பயங்களை தீர்ப்பதற்கு முத்தரப்பு பேச்சுவார்த்தை உதவும் என்ற பிரசண்டாவின் கருத்துக்கு பதில் கூறுவதாகவே சீனாவின் அறிவுபூர்வமான இந்தக் கருத்துக் கூறப்பட்டது. இந்தியாவினதும் சீனாவினதும் தலையீட்டின் காரணமாகவே நேபாளத்தின் அரசியல் நெருக்கடிக்கான தீர்வு குழப்பப்படுவதாக ஒரு கருத்தும் உள்ளது.

நேபாளத்தின் அரசியலமைப்பு சபையே நாடாளுமன்றம் ஆகும். இந்த அரசியலமைப்பு சபை 16 தடவை வாக்கெடுப்பை நடத்தியும் பிரதம மந்திரியை தெரிவு செய்ய முடியாமல் போயிற்று. பிரசண்டாவிலிருந்து பலர் பிரதமராக முயன்று தோல்வி கண்டனர். இதற்கு தேவையான 50 சதவீத ஆதரவை இவர்களால் பெறமுடியவில்லை.

இந்தியாவை சீண்டுகின்ற அதேவேளை, இந்தியாவை சீனாவுடன் தன்னையும் தன் கட்சியையும் அடையாளப்படுத்தும் மாவோயிஸ்ட்டான பிரசண்டா, இப்போது நேபாளத்தில் அரசியல் ரீதியில் சமாதானம், ஸ்திரத்தன்மை என்பவற்றை கருத்தில் கொண்டு தற்போது மத்திய நிலைப்பாட்டை நோக்கி நகர்ந்துள்ளதாக தெரிகின்றது.

இதன் கருத்து நேபாளத்தில் சீனாவால் செய்ய முடியாமல் போனதை இந்தியா செய்யும் என்பதல்ல. சீனாவின் எல்லையில் இந்தியா என்ன செய்யக் கூடாது என்று சீனா நினைக்கின்றதோ அதை, இந்தியாவின் எல்லையில் சீனா செய்ய விரும்பாது என்பதே அதன் பொருள்.

நடைமுறை விளைவுபற்றிய அதன் அக்கறையுடன், இந்தியாவுடனான இருப்பக்க உறவுகளை, சீனா அணுகுவது இது முதல் தடவையல்ல. முத்துமாலைத் திட்டம் (pearl of strings) என வர்ணிக்கப்படும், சீனாவின் திட்டத்தை சீனா மீள்பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் அல்லது புதுடில்லிக்கு இத்திட்டம் பற்றியுள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டும் என்பது வேறு விடயம்.

சீனாவின் கிழக்கு ஆசிய அயல்நாடுகளுடன், தந்திரோபாய ரீதீயான பேச்சுகளை தொடக்குவதன் மூலம் இந்தியா பதில் நடவடிக்கை எடுத்திருக்குமாயின் தீர்வுக்கான தோற்றுவாயையும் தீர்வையும் தேடி அதிக தூரம் போக வேண்டியிருந்திருக்காது.

இருப்பினும் இந்தியாவின் அயலிலுள்ள சீனாவின் அணியொன்று, அது ஒரு அரசாங்கமாக இருந்தாலென்ன, இல்லாதிருந்தாலென்ன, இந்தியாவோடு தொடர்பை ஏற்படுத்துவது குறித்து இவ்வளவு வெளிப்படையாக பேசுவது இதுவே முதல் தடவை.

சீனா இந்தியாவுக்கு கூற விரும்பியது பிரசண்டா மூலம் கூறப்பட்டதா என்பதுஊகத்துக்குரிய விடயமாகும்.

பொது எதிரியான இந்தியாவுக்கு தொல்லைகொடுப்பதற்கு இந்தியாவின் அயலிலுள்ள சீனாவின் கூட்டு நாடான பாகிஸ்தான், சீனாவை அழைத்தபோதும், கார்கில் யுத்தத்தில் சீனா சம்பந்தப்படவில்லை.

இதற்கு நீண்ட காலத்தின் முன் பனிப்போரின் முடிவுக்கு முன் சீனா தனக்கு அப்போதுதான் புதிதாக கிடைத்திருந்த அமெரிக்க நண்பன், பங்களாதேஷ் யுத்தம் உச்சத்திலிருந்த நேரத்தில் பாகிஸ்தான் உதவி வழங்கும்படி கேட்டதை ஏற்று நடக்கவில்லை.

இவற்றை மீட்டுப்பார்க்கும் போது அந்த நேரத்தில் சீனாவின் தீர்மானம் மூன்றாம் உலக யுத்தத்தை தவிர்ப்பதற்கு உதவியது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

பங்களாதேஷில் இந்தியாவின் இராணுவ முன்னேற்றத்தை நிறுத்துவதற்காக அமெரிக்கா தனது 7 ஆவது கப்பல் அணியை தாமதமாக நகர்த்திய நிலையில் அதே வருடம் 1971 இன் ஆரம்பத்தில் சோவியத் யூனியன் இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தை செய்திருந்த வேளையில் இடம்பெற்ற நிகழ்வுகளை அவதானித்தபோது யுத்தம் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே காணப்பட்டன.

இந்தப் பின்னணியில் பங்களாதேஷ் யுத்தத்தின்போது பாகிஸ்தான் விமானப் படைக்கு எண்ணெய் மீள்நிரப்பும் இலங்கை திரும்பிப் பார்க்க வேண்டிய தேவை உள்ளது. இது இறைமையுள்ள நாடொன்றின் இறைமையான தீர்மானம். ஆனால், இது கொழும்பு எதிர்பார்த்ததைவிட மிக மோசமான விளைவுகளை கொண்டு வந்திருக்கலாம். ஜே.வி.பியின் முதலாவது கிளர்ச்சியை ஒடுக்க இந்தியா விரைந்து போனதைக் கூட கணக்கில் எடுக்காமல் இலங்கை நடந்த முறையை பார்க்கும்போது இந்தியா நன்றி பாராட்டப்படாத வேலையை செய்ததாக இந்திய விமர்சகர்கள் கூறினர்.

நல்லவேளையாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சீனாவிலிருந்து கிடைக்கும் அபிவிருத்தி உதவியையும், இந்தியாவுடனான தந்திரோபாய உறவுகளையும் வித்தியாசப்படுத்திக் காட்டியுள்ளார். இந்தியா எமது உறவு, மற்றெல்லோரும் நண்பர்கள் - இப்படி அடிக்கடி கூறுவது ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு மிகவும் பிடித்த விஷயம். இலங்கையில் உள்ள, எப்போதாகிலும் ஆட்சிக்கு வரக்கூடிய அரசியல் கட்சிகளும் இந்த கருத்தைக் கொண்டுள்ளன.

பிரசண்டாவுக்கு வழங்கிய அதே அறிவுரையை இலங்கையின் தலைமைக்கும் சீனா வழங்கியிருக்குமா என்பது ஊகத்துக்கும் உரியதே.

இந்தியா சம்பந்தப்படும் வல்லரசு சமன்பாடுகளுடன் தொடர்புறும் வேளையில் இலங்கை தனது கடந்த காலத்தை பின்னோக்கிப் பார்த்தாலே போதுமானது.

ஒப்பரேஷன் பூமாலை நடந்த உச்ச காலத்தில், பனிப்போர் சகாப்தத்தில், முதலாளித்துவ இலங்கையின் நட்பு நாடுகள் எனக் கருதப்பட்ட அமெரிக்கா உட்பட்ட மேற்கு நாடுகள், வாயளவில் கூட எதையும் செய்யவில்லை என்பதை மறைந்த ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் அரசாங்கம் கண்டு கொண்டது.

இப்படித்தான் வல்லரசுகளின் செய்லகள் இருக்கும். இதை அமெரிக்கா இலங்கைக்கு செய்தபோது அது ஏற்கனவே வல்லரசாக இருந்தது. இன்று, சீனா வல்லரசாக விரும்பும் நாடு மாத்திரமே, இதுவரை.!

தமிழில்: ந.கிருஷ்ணராசா

மூலம் : http://www.tamilmirror.lk/index.php/2010-07-14-09-13-23/2010-08-31-14-50-37/11429-2010-11-18-16-20-55.html

இதன் கருத்து நேபாளத்தில் சீனாவால் செய்ய முடியாமல் போனதை இந்தியா செய்யும் என்பதல்ல. சீனாவின் எல்லையில் இந்தியா என்ன செய்யக் கூடாது என்று சீனா நினைக்கின்றதோ அதை, இந்தியாவின் எல்லையில் சீனா செய்ய விரும்பாது என்பதே அதன் பொருள்.

இந்திய சீன முறுகலுக்கு காரணம் இரு நாடுகளுக்கிடையிலான எல்லை எது என்பது தானே. உலகத்தில் பிரச்சினைக்கு முழு முதல் காரணமுமே இந்திய - சீன எல்லைப் பிரச்சினை தானே..... இந்தியா தனக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாத அருணாச்சலப் பிரதேசத்தை சீனாவுக்கு கொடுத்து விட்டாலோ இல்லை எதோ ஒரு வகையில் சமாதான உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டாலோ மேற்குலக ராணுவ அணி வகுப்பிற்கு ஆசியப் பிராந்தியத்தில் இடம் இருக்காதே..... ஏன் அதன் வணிகக் கப்பல்கூட இந்து சமுத்திர பிறந்தியத்திட்குள் நுழைய வேண்டிய அவசியம் இல்லையே..... இந்தியாவும் சீனாவும் நண்பர்களாகவிருந்தால் உலகின் பெரும் பிரச்சினைகளான காஷ்மீர், பாகிஸ்தான் ஆப்கனிஸ்தான் இலங்கைப் பிரச்சினைகளுக்கு இடம் இல்லாமல் போகும்.... உண்மை எதுவாக இருப்பினும் இந்திய சீன எல்லைப் பிரச்சினை இது உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 40% (இந்திய சீன மக்கள்தொகை) மக்களின் மானப் பிரச்சினையாகவே கருத இடமுண்டு.

இந்த எல்லைப் பிரச்சினை தீராத வரை, இவர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காதவரை சமரசம் ஆகாத வரை மேற்குலக சகுனிகளின் தலையீடு ஆசிய பிராந்தியத்திற்குள் தொடர்ந்து கொண்டேயிருக்கும்..... ஆசியாவின் சீரழிவு உலகில் அமைதி என்பதற்கு வாய்ப்பே இல்லை..... நாடுகளுக்கிடையிலான போட்டி போரான்மை மீண்டும் மீண்டும் பேரழிவை ஏற்படுத்தக் கூடிய யுத்தத்திற்கே இட்டுச் செல்லும்....

Edited by Rudran

  • தொடங்கியவர்

சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் உள்ள இன்னுமொரு போட்டி- பிரச்சனை : ஒரு கண்டத்தில் (ஊருக்குள்) இரண்டு வல்லரசுகள் ( சண்டியர்கள் ) இருக்க முடியாது என்பதும் அடங்கும்.

இரண்டு நாடுகளும் கிட்டத்தட்ட சம அளவிலான மக்கள் தொகையை கொண்டன ஆனால் பொருளாதார ரீதியாக சீனா பலம் அடைந்து சென்று இன்னும் இருபது வருடங்களில் உலகின் அதி பலம் வாய்ந்த பொருளாதார நாடாகவும் வரலாம் என எதிர்வு கூறப்படுகின்றது. இதை அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் விரும்பவில்லை. அதனால் அவை இந்தியாவை வைத்து சீனாவை அதன் பொருளாதார இராணுவ வளர்ச்சியை கட்டுப்படுத்த நினைக்கின்றன.

இந்தியாவை சுற்றியுள்ள இந்தியாவின் "உறவு" நாடுகளான பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ், சிங்களம் எல்லாமே தொடர்ந்து "உறவை" பேணுவது போல காட்டிவருகின்றன, அதேவேளை சீனாவின் பொருளாதார வளர்ச்சியில் தாமும் பயனடைய எண்ணுகின்றன. இது இந்தியாவுக்கு சங்கடத்தை உருவாக்கியுள்ளது.

"பொருளாதாரம்" வளர்ந்தால் "இராணுவ பலம்" வளரும், "செல்வாக்கு" வளரும். "இராணுவ பலம்" வளர்ந்தால் "பொருளாதாரம்" வளரும், "செல்வாக்கு" வளரும்.

ஆக எந்த நாடு " வல்லரசு (சண்டியன்)" ஆவான் என்பது இந்த சூட்சுமத்துக்குள் தான் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுறதில இந்த இரண்டு பேருக்கும் இணை யாருமில்லை!

இலங்கையிலுள்ள சீன தூதுவராலயம் மூலம் அதி விலை உயர்ந்த அட்டை போன்ற காகிதத்தில் சீன விடுதலை, கொஆளிசன் கவர்மென்ட்,செஞ்சீனா என்று ஏராளமான புத்தகங்களை அச்சிட்டு அதை இலவசமாக கொடுத்தது எதற்கு ?

போர்ட் தனது 4 சில்லு இயக்கமுள்ள வண்டியின் சந்தை படுத்தலை அமெரிக்காவில் இடை நிலை பள்ளிகளிலேயே ஆரம்பித்தது

பதின்ம வயதினரின் முக்கிய பிரச்சனை பெண் தோழிகள் அவர்களை கலக்ட் பண்ண கார் வேணும் 4 ,5 வருடத்தின் பின் பாடசாலையை விட்டு வெளியேறும் பொது அவர்களின் கனவு அந்த வாகனம் தான்.

ஈழத்தமிழர்களின் வீடுகளில் குப்பையாக இருக்கும் இந்த சீனாவின் தொலை நோக்க முதலீடு விடுதலை புலிகளால் வீணாகி விட்டது

  • தொடங்கியவர்

திபெத் - சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் இந்த அபகரிக்கப்பட்ட புத்த புனித நிலத்தில் ஒரு பெரிய விமான படைத்தளத்தை நிறுவி இந்தியாவுக்கு பலத்த எரிச்சலை கொடுத்துள்ளது.

இந்த திபெத்திய பீட பூமி 4500 மீட்டர் உயரத்தில், 1000மீட்டர் x 25000மீட்டர் நிலப்பரப்பை கொண்டது.

நேரு பிரதமாராக இருந்தபோது சீனாவின் பிரதமர் சொன்னாராம் : மில்லியன் சீனர்கள் இந்த திபெத்தில் இருந்து சிறுநீரகம் கழித்தால் அது முழு இந்தியாவையும் இந்து மா சமுத்திரத்தில் கொண்டே விடும் என.

India’s leader, Jawaharlal Nehru, once complained of this danger to China’s Premier Chou Enlai. Chou laughed and retorted, "If I wanted to destroy India, I would march 100 million Chinese to the edge of the Tibetan plateau and order them to piss downhill. We would wash you into the Indian Ocean."

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.