Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்க்குற்ற ஆதாரங்கள் சமர்ப்பிப்பு

Featured Replies

ஈழத் தமிழர்கள் மீது போர் குற்றம் இழைக்கப்பட்டிருக்கின்றது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. அந்த போர்க் குற்றங்களின் நோக்கம் இன அழிப்புத்தான் என்பதனை ஐ.நாவுக்கு அனுப்பும் ஒவ்வொரு கடிதங்களிலும் வலியுறுத்தவேண்டும்.

போர்க்குற்ற விசாரணையை (War Crimes) மட்டும் முன்னிலைப் படுத்தாமல் இனப் படுகொலையையும் (Genocide) முன்னிலைப் படுத்துவதாக அனைத்து செயல் பாடுகளும் அமைய வேண்டும்.

போர்குற்ற விசாரணை என்பது குற்றமிழைத்தவருக்கு தண்டனை என்பதுடன் இருந்துவிடுகின்றது. போர்குற்ற விசாரணை பாதிக்கப்பட்டவர்களின் நலன் காக்கும் நடவடிக்கை அல்ல. அது குற்றவாளிக்கு தண்டனை என்பதனை முதல் நோக்கமாக கொண்ட வடிவமைப்பு.

இதற்கு முற்றிலும் எதிராக இனப்படுகொலை விசாரணை பாதிக்கப்பட்ட இனத்தை, இனப் படுகொலையில் இருந்து பாதுகாக்கும் (தனி நாடாக பிரிந்து செல்லுதலை முன்னிலைப் படுத்தும்) அதே நேரம் குற்றவாளிகளை தண்டிக்கும் நோக்கத்தையும் கொண்டது.

தமிழினத்தின் தேவை மகிந்தரையும் அவர் கூட்டத்தினரையும் தண்டிப்பதாக இருந்தாலும் நோக்கம் நாம் இவர்களுடன் சேர்ந்து வாழ முடியாது என்பதை உலகிற்கு, ஐ. நாவுக்கு எடுத்து சொல்வதே. இதுவே இன்று சூடானில் நடக்கவுள்ளது, எல்லாம் கால அட்டவணைப்படி நடந்தால் ( தை மாதம் 2011) அங்கு தென் சூடான் மக்கள் ஒரு வாக்களிப்பின் ( referendum) மூலம் தமது விருப்பை வெளிப்படுத்த உள்ளார்கள். விடுதலை பெற உள்ளார்கள். அந்த விடுதலை எமது விடுதலைக்கு ஒரு அடிகோலாகும் என நம்புவோம், செயல்படுவோம்.

  • தொடங்கியவர்

இனப்படுகொலை விசாரணை ஏன் சாத்தியம்? எப்படிச் சாத்தியம்?

இனப்படுகொலை விசாரணை என்பது ஐ.நா சட்டங்களுக்கு அமைய ஏதாவது ஒரு உறுப்பு நாட்டினால் ஆரம்பிக்கக் கூடிய விடயம்.

இனப்படுகொலை வழக்கு, 1948 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி எடுக்கப்பட்ட ஐ.நா தீர்மானம் 260(iii) இற்கு அமைய தொடரக் கூடியதாகும்.

260 Resolution 260 (III) A of the United Nations General Assembly on 9 December 1948.

இந்த தீர்மானத்தில் இலங்கையும் கையெழுத்து இட்டு உறுப்பு நாடாக உள்ளது. ஆனால் சர்வதேச குற்ற நீதிமன்றில் ( International Criminal Court - ICC - http://www.icc-cpi.int) இலங்கை உறுப்பு நாடாக இல்லை.

இனப்படுகொலைக்கு எதிரான இந்த சட்டம் 02.10.1950 இல் இலங்கையில் அமுலுக்கு வந்துள்ளது.

இந்த விபரத்தை கீழ் காணும் இணைப்பில் பார்க்கலாம்.

http://www.hrweb.org/legal/genocide.html

இனப்படுகொலை வழக்கை யார் பதிவு செய்யலாம்?

இனப்படுகொலை என்றால் என்ன?

இந்த இரண்டு விடயங்களையும் பாப்போம்.

முதலில், இனப்படுகொலை தொடர்பான வழக்கை யார் பதிவு செய்யலாம்?

இனப் படுகொலை வழக்கை யார் பதிவு செய்யலாம் என்ற கேள்விக்குப் பதில் இனப்படுகொலை தொடர்பான ஐ.நா தீர்மானம் 260 இல் எட்டாவது அங்கத்தில் உள்ளது. அதனை கீழே பிரதி செய்கின்றேன்.

Article 8

Any Contracting Party may call upon the competent organs of the United Nations to take such action under the Charter of the United Nations as they consider appropriate for the prevention and suppression of acts of genocide or any of the other acts enumerated in Article 3.

ஒப்பந்தத்தில் உறுப்புநாடாக உள்ள ஏதாவது ஒரு நாடு அங்கம் எட்டாவதில் குறிக்கப்பட்டது உட்பட இனப் படுகொலை தொடர்பானதும், தடுப்பதற்கான பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐ.நா வின் அதிகாரமளிக்கப்பட்ட நிறுவனத்திடம் கோரலாம்.

மேலே குறிப்பிடப்பட்ட ஐ.நாவின் அதிகாரம் அளிக்கப்பட்ட நீதி நிறுவனம் என்பது என்ன?

இப்போது எம்மிடம், ஐ.நா வின் அதிகாரம் அளிக்கப்பட்ட நிறுவனம் எது என்பது தொடர்பான கேள்வி உள்ளது.

அதற்கான பதில், சர்வதேச நீதிமன்றம் எனப்படும் International Court of Justice (ICJ) என்பதாகும். சர்வதேச நீதிமன்றத்தின் கீழே உள்ள இணைய முகவரியில் பார்த்தால்,

http://www.icj-cij.org/court/index.php?p1=1'>http://www.icj-cij.org/court/index.php?p1=1

இந்தக் கேள்விக்கான பதில் கிடைக்கும். அந்தப் பதிலை அப்படியே கீழே பிரதி செய்கின்றேன்.

The International Court of Justice (ICJ) is the principal judicial organ of the United Nations (UN). It was established in June 1945 by the Charter of the United Nations and began work in April 1946.

சர்வதேச நீதிமன்றம் ஐ.நா வின் பிரதான நீதித்துறை நிறுவனமாகும் என இது தெளிவாகக் குறிப்பிடுகின்றது.

இனி சர்வதேச நீதிமன்ற விதிகளின்படி யார் வழக்கை பதிவு செய்யலாம் எனப் பார்ப்போம் இது நீதிமன்ற இணையத்தில் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. பின்வரும் இணைப்பை பாருங்கள்:

http://www.icj-cij.org/court/index.php

இதில் பின்வருமாறு உள்ளது

Proceedings may be instituted in one of two ways:

by means of an application: the application, which is of a unilateral nature, is submitted by an applicant State against a respondent State.

ஒரு அரசினால் இன்னொரு அரசுக்கு எதிராக தனியாக விண்ணப்பிப்பதன் மூலம் வழக்கை பதிவு செய்யலாம்.

இனப்படுகொலை என்றால் என்ன என்பது தொடர்பான வரையறை எங்கே உள்ளது?

இனப்படுகொலை தொடர்பான வரையறை ஐ.நா வின் இருவேறு சட்டங்களில் காணப்படுகின்றது முதலாவது 1948 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இனப்படுகொலைக்கு எதிரான சட்டம். இரண்டாவது 2007 இல் உருவாகப்பட்ட தொன்முதற்குடி மக்கள் பாதுகாப்பதற்கான சட்டம்.

முதலாவதாக 1948 ஆம் ஆண்டு இயற்றபட்ட இனப்படுகொலைக்கு எதிரான சட்டம் என்ன சொல்கின்றது எனப் பார்ப்போம்.

கீழே உள்ள இணைப்பில் இரண்டாவது சரத்தை பாருங்கள்:

http://www.hrweb.org/legal/genocide.html

Article 2

1) In the present Convention, genocide means any of the following acts committed with intent to destroy, in whole or in part, a national, ethnical, racial or religious group, as such:

(a) Killing members of the group - ஒரு குழுவின் உறுப்பினர்களை கொலை செய்தல்

(b) Causing serious bodily or mental harm to members of the group: ஒரு குழுவின் உறுப்பினர்களுக்கு உடல் அல்லது உள ரீதியான பாதிப்புக்களை ஏற்படுத்துதல்.

© Deliberately inflicting on the group conditions of life calculated to bring about its physical destruction in whole or in part: ஒருகுழுவின் வாழ்வாதாரங்களில் திட்டமிட்ட சூழ்நிலைகளை உருவாக்கி அதனை முழுமையாகவோ பகுதியாகவோ அழித்தல்

(d) Imposing measures intended to prevent births within the group: ஒரு குழுவின் இனப் பெருக்கத்தை தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை எடுத்தல்,

(e) Forcibly transferring children of the group to another group: ஒரு குழுவில் இருந்து மற்ற குழுவுக்கு சிறுவர்களை பலவந்தமாக இடம் மாற்றுதல்.

இரண்டாவதாக 2007 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தொன்முதற்குடி மக்களை பாதுகாக்கும் சட்டம் என்ன சொல்கிறது எனப் பாப்போம்

அது பின் வருமாறு தெரிவிக்கின்றது

Adopted by General Assembly Resolution 61/295 on 13 September 2007

http://www.un.org/esa/socdev/unpfii/en/drip.html

Indigenous peoples and individuals have the right not to be subjected to forced assimilation or destruction of their culture.

நிலத்துக்குரிய தொன்முதற்குடி மக்களை பலவந்தமாக மற்ற இனத்துடன் இணைக்கப்படுதல், பலவந்தமாக கலாச்சாரம் அழிக்கப்படுதல் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கும் உரிமையை இது உறுதிப் படுத்துகின்றது.

2) States shall provide effective mechanisms for prevention of, and redress for:

அரசுகள் பின்வரும் விடயங்களில் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

(a) Any action which has the aim or effect of depriving them of their integrity as distinct peoples, or of their cultural values or ethnic identities: தனித்துவமான இனம், தனித்துவமான கலாச்சாரம், இன அடையாளங்கள் ஆகியவற்றை பாதுகாக்க அரசு கடப்பாடு உடையது.

(b) Any action which has the aim or effect of dispossessing them of their lands, territories or resources: அவர்களின் நிலங்கள், பிரதேசங்கள், மூல வளங்கள் பாதுகாக்கப்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

© Any form of forced population transfer which has the aim or effect of violating or undermining any of their rights: இனக்குழுவை பலவந்தமாக இடம் மாற்றி அவர்களது உரிமைகள் மீறுதல், குறைத்தல்

(d) Any form of forced assimilation or integration: பலவந்தமான இணைப்பு, கலத்தல்

(e) Any form of propaganda designed to promote or incite racial or ethnic discrimination directed against them: இன அடக்குமுறையை தூண்டும் பிரச்சாரம்.

எனவே இனப்படுகொலை சட்டங்கள இரண்டிலும் குறிக்கப்பட்ட இன அழிப்பு விடயங்கள் நீண்ட நெடுங்காலமாக நடைபெற்று வருகின்றன. டி.எஸ் செனநாயக்காவின் கால சிங்கள குடியேற்றம் இன்றும் தொடர்கின்றன. மே 18 2009 இன் பின் நடைபெறும் வடக்கு கிழக்கு பவுத்த விகாரை அமைத்தல், சிங்கள குடியேற்றம் அத்தனையும் இன அழிப்பு நடவடிக்கை தான்.

தமிழர்கள் செய்ய வேண்டியது,

ஐ.நா வின் இன அழிப்புக்கு எதிராக கையெழுத்திட்ட நாடுகளை அணுகி. இனழிப்புக்கு எதிரான வழக்கை சர்வதேச நீதிமன்றத்தில் இனப்படு கொலையை தடுக்க கோரி வழக்குப் பதிவு செய்ய வேண்டும் அத்துடன் அந்தந்த நாடுகள் சிறிலங்காவை பகிஸ்கரிக்க வைக்க வேண்டும்.

போர்க்குற்ற விசாரணையில் மட்டும் நம்பி இருக்க கூடாது. அந்த விசாரணைக் கடிதங்களில் மறக்காமல் இன அழிப்பு நடைபெறுகின்றது அதை தடுக்குமாறு ஐ.நா வை கோரவேண்டும். ஐ.நா தீர்மானம் 260 ஐ யும் 2007 தீர்மானம் 61/295 ஐயும் குறிக்க வேண்டும்.

தண்டனை என்பதை விட எமது இனம் பாதுகாக்கப்பட்டு நாம் சுய நிர்ணய உரிமையுடன் வாழ வழி வகுக்கும் இனப்படுகொலை குற்றச்சாட்டையும் நாம் முன்னிறுத்த தவறக் கூடாது .

சிறிலங்காவில் இனப்படுகொலையின் ஒரு அங்கம் தான் போர்குற்றம்.

(மின்னஞ்சலில் வந்தது )

Edited by akootha

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை அரசு போர் குற்றம் மட்டுமல்ல, மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை புரிந்துள்ளது. அதற்கும் மேலாக பாரிய திட்டமிட்ட இனபடுகொலை கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக நடத்திக்கொண்டு வருகிறது. இன அழிப்பு நடவடிக்கை இன்றும் தொடர்கிறது.

ஒவொரு தமிழனும் தமது இனத்தை காப்பாற்ற செய்யவேண்டிய கடமை, தாம் கண்டது கேட்டது, தமக்கு, அல்லது தமது உறவினருக்கு இலங்கை அரச படை, கூலிப்படை செய்த அட்டூழியத்தை ஐநா சபைக்கு எழுது மூலம் கொடுபதுதான்.

  • தொடங்கியவர்

கொங்கோ நாட்டின் போர்குற்றங்கள் - ஐ.நாவின் அறிக்கை

1. ஐ. நாவின் தளத்தில் இருந்து : http://www.un.org/News/dh/latest/drcongo.htm

2. மனத்தை பிழியும் ஐ.நாவின் அறிக்கை - சி. என். என்

http://articles.cnn.com/2010-10-01/world/congo.atrocities.un.report_1_rwandan-forces-rwandan-genocide-human-rights?_s=PM:WORLD

3. கொங்கோ இனப்படுகொலையில் ருவாண்டாவும் சம்பத்தப்பட்டுள்ளது

http://www.guardian.co.uk/world/2010/oct/01/un-report-rwanda-congo-genocide

4. End of impunity

http://www.rnw.nl/africa/article/un-report-congos-atrocities-end-impunity-1

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அகூதா இணைப்புக்கு.ஐ.நாவுக்கு இலங்கை அரசின் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்துதல் ஒவ்வொருவரின் தலையாய கடமை.

அகூதா! உங்களின் தொடர்ச்சியான அர்த்தமுள்ள செயற்பாடுகளுக்கு மாவீரர் வாரம் ஆரம்பிக்கும் இத் தினத்தில்

நன்றிகள் கோடி.

  • கருத்துக்கள உறவுகள்

கொங்கோ குடியரசு மீதான விசாரணையை ஒத்த நடவடிக்கையை தமிழர்கள் ஐ.நாவிடம் கோரமுடியும்:- பேராசிரியர் பொய்ல்ட்.

[saturday, 2010-11-20 05:50:48]

கொங்கோ குடியரசில் மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான மனித உரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை 550 பக்கங்கள் கொண்ட அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளது. இந்த அறிக்கையில் படுகொலைகள், பாலியல் வன்முறைகள், அழிவுகள் உட்பட பல வன்முறைகள் இடம்பெற்றுள்ளதாகவும், ஆனால் அவை தற்போதும் தொடர்வதாகவும் அமெரிக்காவை தளமாக கொண்ட அனைத்துலக விதிகளுக்கான அமெரிக்க சபை தெரிவித்துள்ளது.

ஆனால் இதனை ஒத்த ஒரு போர்க்குற்ற விசாரணையை சிறீலங்கா அரசு மீது கொண்டுவருமாறு உலகெங்கும் பரந்துவாழும் தமிழ் மக்கள் கோரிக்கைகளை முன்வைக்க முடியும் என அமெரிக்காவின் இலினோய்ஸ் பல்கலைக்கழகத்தின் அனைத்துலக விதிகளுக்கான பேராசிரியர் பொய்ல்ட் தெரிவித்துள்ளார்.

கொங்கோ குடியரசு மேற்கொண்ட போர்க்குற்றங்கள் மீதான விசாரணைகள் 2008 ஆம் ஆண்டு, கனடாவை சேர்ந்த சட்டவியல் நிபுணர் லூக் கோட் தலைமையில் ஆரம்பமாகியிருந்தது. இந்த விசாரணைகளின் போது 1,280 சாட்சிகள் விசாரணை செய்யப்பட்டனர். 1,500 இற்கு மேற்பட்ட ஆவணங்களும் சேகரிக்கப்பட்டன.

இந்த அறிக்கை கடந்த 2009 ஆம் ஆண்டு ஜுன் மாதம் ஐ.நாவின் மனித உரிமை ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டது. எனினும் அதன் இறுதி அறிக்கை கடந்த ஆகஸ்ட் மாதம் பூர்த்தியாக்கப்பட்டது. இந்த அறிக்கையை ஊடகங்கள் விரைவாக வெளியிட்டதை தொடர்ந்து கடந்த மாதம் அது வெளியிடப்பட்டது.

இதனிடையே, சிறீலங்காவில் கடந்த வருடம் நடைபெற்ற போரில் 40,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் சிறீலங்கா அரசு மிக மோசமான மனித உரிமை மீறல்களையும் மேற்கொண்டுள்ளது. இந்த நிகழ்வுகள் கொங்கோவில் நடைபெற்றதற்கு இணையானது அல்லது அதனை விட அதிகமானது. எனவே சிறீலங்கா அரசு மீது போர்க்குற்ற விசாரணைகளை கோருவதற்கு அதிக சாத்தியங்கள் உள்ளது என அமெரிக்காவை தளமாக கொண்ட இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் அமைப்பின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

seithy

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.