Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதியின் பதவியேற்பில் சீனாவுக்கு அதிக முக்கியத்துவம்: இந்தியா அதிருப்தி!

Featured Replies

சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமது இரண்டாவது ஆட்சிக் காலத்துக்காகப் பதவியேற்கும் இன்றைய நிகழ்வில் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவம் இந்தியாவுக்குப் பெரும் அதிருப்தியைக் கொடுத்திருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியொருவர் தலைமையில் 10 உறுப்பினர்களைக் கொண்ட உயர் மட்டக் குழு ஒன்று கொழும்பு வந்துள்ள போதிலும் இந்த நிகழ்வில் இந்தியாவின் விசேட பிரதிநிதிகள் எவரும் கலந்துகொள்ளவில்லை.

ஜனாதிபதியின் விஷேட அழைப்பின் பேரிலேயே சீன ஜனாதிபதியின் பிரதிநிதியாக சென் கூ ஓவே உயர் மட்டக்குழு ஒன்றுடன் கொழும்பு வந்துள்ளார். சீன தேசிய காங்கிரஸின் உபதலைவராக செயற்படும் சென் ஓவே, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சிறப்பு விருந்தினராக இம்மாதம் 20ம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார். நேற்று நடைபெற்ற அம்பாந்தோட்டை துறைமுகத்தின் திறப்பு விழாவிலும் முக்கிய விருந்தினராக அவர் கலந்துகொண்டார்.

அம்பாந்தோட்டை துறைமுகக் கட்டுமானத்தைப் பொறுத்தவரையில் அதற்கான செலவீனத்தில் 85 வீதத்தைப் பொறுப்பேற்ற சீனா அதனை நிர்மாணிக்கும் பணியையும் ஏற்றிருந்தது. அந்தவகையில் சீனப் பிரதிநிதி ஒருவர் அதற்கு பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தாலும், இன்றைய பதவி ஏற்பு வைபவத்தில் சீனாவுக்குக் கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவம் இந்தியாவுக்கு அதிருப்தியைக் கொடுத்திருப்பதாகத் தெரிகின்றது.

கடந்தமாதம் புதுடில்லியில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிக்கு சிறப்பு விருந்தினராக மகிந்த ராஜபக்ச இந்தியாவினால் அழைக்கப்பட்டிருந்தார். அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய இந்தியா, குறிப்பிட்ட சில விடயங்களில் மகிந்த ராஜபக்சவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் செயற்பட்டதாகக் கூறப்படுகின்றது.

இந்தப் பின்னணியில் தன்னுடைய பதவிப்பிரமாண நிகழ்வில் இந்தியாவைப் புறக்கணித்து சீனாவுக்குக் கொடுக்கப்பட்டுள்ள அதிகளவிலான முக்கியத்துவத்தின் மூலமாக புதுடில்லிக்கு முக்கியமானதொரு செய்தியைச் சொல்வதற்கு மகிந்த முற்பட்டிருப்பதைப் புரிந்துகொள்ளக் கூடியதாக இருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளையில், இந்தியப் புலனாய்வுச் சேவையான 'றோ' அமைப்பின் செயற்பாடுகள் தொடர்பாக மிகவும் அவதானத்துடன் இருக்கும் காலம் எழுந்துள்ளதாகவும் முக்கியமாக தனது மற்றும் தனக்கு நெருங்கிய அரசாங்கத்தின் உயர் மட்டத்தினர் சிலரின் பாதுகாப்பு குறித்து கவனமாக இருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அண்மையில் தனக்கு நெருங்கிய அரசியல் ஆலோசகர்கள் சிலரிடம் கூறியுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கின்றது.

'றோ' அமைப்பின் சில நடவடிக்கைகள் குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளதாக கூறிய ஜனாதிபதி, முக்கியமாக வடக்கு கிழக்கை அடிப்படையாகக் கொண்டு றோ அமைப்பு மேற்கொண்டுள்ள சில அரசியல் நடவடிக்கைகள் காரணமாக இந்தச் சந்தேகம் தீவிரமடைந்திருப்பதாகக் கூறியுள்ளார்.

இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என இந்திய அரசாங்கம் கொடுத்துவரும் அழுத்தங்கள் குறித்து தனது அரசியல் ஆலோசகர்களிடம் கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இந்தியாவின் தாளத்திற்கு தான் ஆடாததன் காரணமாகவும், சீனாவுடன் மேற்கொண்டுவரும் இராஜதந்திர தொடர்புகள் குறித்தும் இந்தியா அதிருப்தியடைந்திருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், இதுகுறித்தே உத்தியோகபூர்வமற்ற வகையில் சிறீலங்காவுக்குள் செயற்படும் இந்தியாவின் றோ அமைப்பு தொடர்பாக தமக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மூலம் : http://www.ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={5AAA5D95-4506-4719-BB2F-7846312D07E7}

Edited by akootha

சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமது இரண்டாவது ஆட்சிக் காலத்துக்காகப் பதவியேற்கும் இன்றைய நிகழ்வில் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவம் இந்தியாவுக்குப் பெரும் அதிருப்தியைக் கொடுத்திருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.

'றோ' அமைப்பின் சில நடவடிக்கைகள் குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளதாக கூறிய ஜனாதிபதி, முக்கியமாக வடக்கு கிழக்கை அடிப்படையாகக் கொண்டு றோ அமைப்பு மேற்கொண்டுள்ள சில அரசியல் நடவடிக்கைகள் காரணமாக இந்தச் சந்தேகம் தீவிரமடைந்திருப்பதாகக் கூறியுள்ளார்.

பொதுவாக இந்த மாதிரியான ஆடம்பர விழாப்பிரியர்கள் யாரும் பிச்சைக்காரர்களை அருகில் வைத்திருக்க மாட்டார்கள்.

அதுவும் பௌத்த சிங்கள அரச பயங்கரவாதிகள், பிச்சைக்கார இந்திய அரச பயங்கரவாதிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்று எதிர்பார்ப்பது கூடாது. பொதுநலவாய விளையாட்டு இறுதிப்போட்டிகளில் விலைக்கு போகும் சோனியா மகிந்தவுக்கு முக்கியம் கொடுத்ததுக்காக, பிச்சைக்கார இந்திய இராஜதந்திர பயங்கரவாதிகள் பிரதிபலனை எதிர்பார்ப்பது மாபெரும் தவறு.

பிச்சைக்காரர்கள் கிடைப்பதை வாங்கி பழகவேண்டும்.

  • தொடங்கியவர்

இந்தியாவின் பலத்தையும் பலவீனங்களையும் நன்கறிந்த நாடு சீனா. இரு நாடுகளுமே யுத்தத்திற்கு செல்லும் வாய்ப்புகள் அரிது.

அண்மையில் நேபாளத்திலும் முன்னர் பாகிஸ்தானிலும் இப்பொழுது சிங்களத்திலும் சீனா இந்தியாவின் மீது ஒருவித அழுத்தத்தை பிரயோகித்து பாக்கின்றது. இதன் மூலம் இந்தியாவால் அதன் உளவு அமைப்புக்களால், அவைகளின் "அதிகூடிய" பலத்தை அளந்து பார்க்கின்றது.

இரு நாடுகளுமே யுத்தத்திற்கு செல்லும் வாய்ப்புகள் அரிது.

ஆனாலும் சோவியத் ஒன்றியம் போல இரத்தம் இல்லாமலும் வெற்றி தோல்விகள் நிச்சயிக்கப்படலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.