Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாமல், ரங்கா ஆகியோர்க்கு இற்கு அமைச்சு பதவி இல்லை

Featured Replies

நாமல் ராஜபக்ஷ, ஜே. ஸ்ரீரங்கா, உபேஷ்கா சுவர்ணமாலி மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு அமைச்சு பொறுப்புகள் வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் இரண்டாவது பதவிப் பிரமாணத்தையடுத்து நாளை 10 மணியவில் புதிய அமைச்சரவை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து சத்திய பிரமாணம் செய்து கொள்ளப்படவுள்ளது.

இதன் போது கடந்த நடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜே. ஸ்ரீரங்கா, உபேஷ்கா சுவர்ணமாலி மற்றும் மனுஷ நாணயக்கார.ஆகியோர்க்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படவில்லை.

மூத்த அமைச்சர்களின் மனக்கசப்பு, மற்றும் எதிரணிகளில் இருந்து பிரிந்து மஹிந்தவிடன் இணைந்தவர்கள் ஆகியோரினை திருபதிப்படுத்த வேண்டிய நிலையில் இந்த முடிவினை மஹிந்தவினால் தவிர்க்க முடியாமல் போய்விட்டதாக கூறப்படுகின்றது.

இதே வேளை ரவூப் ஹக்கீம் இற்கு நீதி அமைச்சர் பதவி வழங்கியதில் பல கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளதாம். அமைச்சுப்பதவிக்காக மஹிந்தர் பக்கம் தாவிய ரங்காவிற்கும் மற்றும் பல கட்சிதாவிய எதிரணிகளுக்கும் அமைச்சுப்பதவிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

http://www.eelanatham.net/story/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88

புதிய அமைச்சரவை அமைச்சர்கள்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று நியமனம் பெற்ற புதிய அமைச்சரவையின் விபரங்கள் பின்வருமாறு:

சிரேஷ்ட அமைச்சர்கள்

1.தி.மு.ஜயரட்ன - புத்தசாசன மதவிவகாரம்.

2.ரட்ணசிறி விக்கிரமநாயக்க - நல்லாட்சி மற்றும் உட்கட்டமைப்பு

3.அதாவுட செனவிரட்ன - கிராமிய விவகாரங்கள்

4.டியூ குணசேகர - மனிதவள அமைச்சு

5.பி.தயாரட்ன - உணவு மற்றும் போஷாக்கு

6.ஏ.எச்.எம்.பௌசி - நகர அபிவிருத்தி

7.எஸ்.பி.நாவின்ன - நுகர்வோர் நலன்

8.பியசேன கமகே - தேசியவளம்

9.திஸ்ஸ வித்தாரண - விஞ்ஞான விவகாரம்

10.சரத் அமுனுகம - சர்வதேச நிதி திட்டமிடல்

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள்

1.நிமல்சிறிபாலடி.சில்வா - நீர்ப்பாசன நீர்வளம் மற்றும் முகாமைத்துவம்

2.மைத்திரிபால சிறிசேன - சுகாதாரம்

3.சுசில் பிரேமஜயந்த - பெற்றோலிய வளத்துறை

4.ஆறுமுகம் தொண்டமான் - கால்நடை, கிராம சமூக அபிவிருத்தி

5.தினேஷ் குணவர்த்தன நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு

6.டக்ளஸ் தேவானந்தா-பாரம்பரிய கைத்தொழில், மற்றும் சிறு கைத்தொழில்

7.ஏ.எல்.எம்.அதாவுல்லா - உள்நாட்டு அலுவல்கள் மற்றும் மாகாணசபை

8.ரிஷாட் பதியுதீன் - வர்த்தக மற்றும் முதலீட்டு விவகாரம்

9.பாட்டலி சம்பிக்கரணவக்க - மின்சக்தி மற்றும் எரிசக்தி

10.விமல் வீரவன்ஸ - வீடமைப்பு, பொறியியல் நிர்மாணத்துறை

11.ரவூப் ஹக்கீம் - நீதியமைச்சு

12.பஷில் ராஜபக்ஷ - பொருளாதார அபிவிருத்தி

13.வாசுதேவ நாணயக்கார - தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்கம்

14.எஸ்.பி.திஸாநாயக்க - உயர்கல்வி

15.ஜி.எல்.பீரிஸ் - வெளிவிவகாரம்

16.டபிள்யூ.டி.ஜே.செனவிரட்ன - பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள்

17.சுமித்திரா ஜி.ஜயசேன - நாடாளுமன்ற விவகாரம்

18.ஜீவன் குமாரதுங்க - தபால் சேவைகள்

19.பவித்திரா வன்னியாராய்ச்சி - தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி

20.அநுர பிரியதர்ஷன யாப்பா - சுற்றாடல் விவகாரம்

21.திஸ்ஸ கரலியத்த - சிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள் விவகாரம்

22.காமினி லொக்குகே - தொழில் மற்றும் தொழில் உறவுகள்

23.பந்துல குணவர்த்தன - கல்வி

24.மஹிந்த சமரசிங்க - பெருந்தோட்ட கைத்தொழில்

25.ராஜித சேனாரட்ன - மீன்பிடி மற்றும் நீரியல்வளம்

26.ஜனக பண்டார - தென்னக்கோன்காணி மற்றும் காணி அபிவிருத்தி

27.பீலிக்ஸ் பெரேரா - சமூகசேவைகள்

28.சி.பி.ரத்நாயக்க - தனியார் போக்குவரத்து சேவைகள்

29.மஹிந்த யாப்பா அபயவர்த்தன - விவசாயம்

30.கெஹெலிய ரம்புக்வெல்ல - வெகுஜன ஊடக மற்றும் தகவல்

31.குமார வெல்கம - போக்குவரத்து

32.டலஸ் அழகப்பெரும - இளைஞர் விவகாரங்கள் மற்றும் திறன்; விருத்தி

33.ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ - கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர்;

34.சந்திரஸ்ரீ கஜதீர - புனரமைப்பு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு

35.சலிந்த திஸாநாயக்கசுதேச - மருத்துவம்

36.ரெஜினோல்ட்குரேசிறு - ஏற்றுமதிப்பயிர் ஊக்குவிப்பு

37.டிலான் பெரேரா - வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நலன்புரி சேவைகள்

38.ஜெகத் புஷ்பகுமாரதென்னை அபிவிருத்தி மற்றும் ஜனதா தோட்ட அபிவிருத்தி

39. டீ.பி.ஏக்கநாயக்க - கலாசாரம் மற்றும் கலைகள்

40.மஹிந்த அமரவீர - அனர்த்த முகாமைத்துவம்

41.எஸ்.என்.சந்திரசேன - கமநலசேவைகள் மற்றும் வனவிலங்கு

42.குனரத்ன வீரக்கோன் - மீள்குடியமர்தல்

43.மேர்வின் சில்வா - பொதுசன உறவுகள் மற்றும் பொதுசன விவகாரங்கள்

44.மஹிந்தானந்த அளுத்கமகே - விளையாட்டுத்துறை

45.தயாசிறித்த திசேர - அரச வளங்கள் மற்றும் முயற்சியாண்மை அபிவிருத்தி

46.ரஞ்சித் சியாம்பலப்பிட்டிய - தொலைத்தொடர்புகள் மற்றும் தகவல் தொழில்நுட்பம்

47.டொக்டர் ஜகத் பாலசூரிய - தேசிய மரபுரிமை

48.லக்ஷ்மன் செனவிரத்ன - உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு

49.நவின் திஸாநாயக்க -பொதுமுகாமைத்துவ சீர்திருத்தம்

பிரதியமைச்சர்கள்

1.சுசந்த புஞ்சி நிலமே மீன்பிடி மற்றும் கடல்வள விவகாரம்

2.லக்ஷ்மன் யாப்பா அபயவர்த்தன பொருளாதார அபிவிருத்தி

3.ரோஹித்த அபய குணவர்த்தன துறைமுக மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி

4.பந்து பண்டாரநாயக்க ஆயுர்வேத மருத்துவ விவகாரம்

5.ஜயரத்ன ஹேரத் கைத்தொழில் மற்றும் வர்த்தகம்

6.துமிந்த திஸாநாயக்க இளைஞர் விவகாரம் மற்றும் திறன் அபிவிருத்தி

7.லசந்த அழகியவண்ண வீடமைப்பு, பொறியியல் நிர்மாணத்துறை

8.ரோஹண திஸாநாயக்க போக்குவரத்து விவகாரம்

9.ஏச்.ஆர்.மித்ரபால - கால்நடை, கிராம சமூக அபிவிருத்தி

10.நிர்மல் கொத்தலாவ துறைமுக மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி

11.பிரேமலால் ஜயசேகர மின்சக்தி மற்றும் மின்வலு

12.கீத்தாஞ்சன குணவர்த்தனநிதி திட்டமிடல்

13.விநாயமூர்த்தி முரளிதரன் மீள்குடியேற்றம்

14.பைஸர் முஸ்தபா தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி

15.இந்திக்க பண்டாரநாயக்க உள்நாட்டு அலுவல்கள் மற்றும் மாகாணசபை

16.முத்துசிவலிங்கம் பொருளாதார அபிவிருத்தி

17.சிறிபால கம்லத் காணி அபிவிருத்தி

18.டபிள்யூ.பி.ஏக்கநாயக்க நீர்ப்பாசன நீர்வளம் மற்றும் முகாமைத்துவம்.

19.சந்திரசிறி சூரியாராய்ச்சி சமூக சேவைகள்

20.நந்தமித்த ஏக்கநாயக்க உயர்க்கல்வி

21.நிரூபமா ராஜபக்ஷ நீர்வழங்கல் மற்றும் வடிகால்

22.லலித் திஸாநாயக்க சுகாதாரம்

23.சரண குணவர்த்தனபெற்றோலிய வளம்

24.காமினி விஜித் விஜிதமுனிசொய்சாகல்வி

25.எம்.எல்.ஏ ஹிஸ்புல்லா மகளிர் மற்றும் சிறுவர் விவகார

26.வீரகுமார திஸாநாயக்கபாரம்பரிய கைத்தொழில், மற்றும் சிறுகைத்தொழில்

27.எம்.கே.டி.எஸ்.குணவர்த்தனபுத்தசாசன மதவிவகாரம்.

28.ஏர்ல் குணசேகர பெருந்தோட்ட கைத்தொழில்

29.பஷீர் சேகுதாவூத் உள்நாட்டு வர்த்தகம் கூட்டுறவு

30.அப்துல் காதர் - சுற்றாடல் அபிவிருத்தி

31.துலிப் விஜயசேகர -அனர்த்த முகாமைத்துவம்

6.டக்ளஸ் தேவானந்தா-பாரம்பரிய கைத்தொழில், மற்றும் சிறு கைத்தொழில்

ஆள்க்கடத்தல் கப்பம் கோரல், மிரட்டல், போடல் எல்லாம் அவரின் பாரம்பரிய கைத்தொழில்...

அருமையான தெரிவை தொடர்ந்தும் வைச்சு இருக்கார்... இலங்கைக்கு ஏற்ற அருமையான அமைச்சர்...

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியா நகரில் 90 களின் ஆரம்பத்தில் ரங்கா கங்கா என்று இரு தெருச்சண்டிய சகோதரர்கள் இருந்தார்கள்.இருவருக்கும் படிப்பு ஓடாததால் கொழும்பிற்கு வந்து குப்பை கொட்டலாம் என்று வந்தார்கள். மூத்தவர் ரங்கா உயர் வகுப்பில் வர்த்தகம் படிக்க இளையவர் கங்கா உயர்வகுப்பில் விஞ்ஞானம் படித்துக்கொண்டிருந்தனர். படிப்பிற்கும் தனக்கும் வெகுத்துரம் என்Pஅதை மிக விரைவிலேயே அறிந்துகொண்ட ரங்கா கொழும்பில் வர்த்தகம் படிப்பித்துக்கொண்டிருந்த இன்னொரு வவுனியாவைச் சேர்ந்த தெருச்சண்டியரான சுதாகர் என்பவரை அணுக பெரும்தொகைப் பணம் தருவதாக ரங்கா சொன்னதைக் கேட்டு ஏமாந்து அவருக்காக குதிரையும் ஓடினார் சுதாகர். முடிவில் ரங்காவுக்குப் பலகலிக் கழக அனுமதியும் கிடைக்க சுதாகரை மெதுவாகக் கைகழுவி விட்டார் . படிப்பித்தலை மட்டுமே தொழிலாகக் கொண்டிராமல் அடிதடியும் செய்துவந்த சுதாகர் வாத்தி சிறிதுகாலத்துக்குப் பின்னர் கொட்டமெல்லாம் அடங்கி வவுனியாவிற்கே திருப்பி வந்து இலையான் கலைச்சுக்கொண்டிருக்கிறார் இப்போது.

சரி, நான் ரங்காவின் கதைக்கு வருகிறேன். ஒருவாறு குதிடையோடி கொழும்புப் பலகலைக்கழகம் புகுந்த ரங்கா, எல்லோரையும் போலவே சீ. மா படிக்க ஆசைப்பட்டார். பம்பலப்பீட்டி ஜாயா ரோட்டில தண்டவாலத்துக்கு அருகில இருந்த ஐ. ஏ. எஸ் இல ரங்கா படிக்கச் சேர்ந்தபோது, அங்கே மொறட்டுவைப் பலகலைக் கழகத்தில் பொறியியல் படித்துக்கொண்டிருந்த கொழும்பு மாவட்டத்திலிருந்து பலகலைக் கழகத்துக்குத் தெரிவாகிய சில மாணவர்களின் நட்புக் கிடைத்தது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சீ. மா முடிந்த கையோட்டு இந்த மொறட்டுவைப் பல்கலைக் கழக மாணவர்களுடன் கட்டுப்பெத்தை நோக்கி பஸ் ஏறிவிடுவார் ரங்கா. கட்டுப்பெத்தையில் சிங்களவர்களின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்த அந்த பொறியியல் மாணவர்களின் அறைகளில் இரவிரவாக மல்லிகாக் கடை பிரியாணியும், போத்திலும் அனல் பறக்கும். சூட்டோட சூடா பிரியாணி பரிமாறப்பட, ஓசிச் சாராயத்தை தொண்டைக்குள் ஊத்தியவாறே, ரங்கா அந்த மாணவர்களுடன் "காட்ஸ்" விளையாடுவார். வெறி முத்தி, ஆளாளுக்கு அறிவு இல்லாமல் போக, ஒவ்வொருவரும் ஒரு மூளையில் சுறுண்டுகொள்ள ரங்காவும் படுத்து விடுவார். காலையில் எழும்பி முகம் கூடக் கழுவாமல் ரங்கா கல்கிஸ்ஸை பஸ்ஸுக்காக ரோட்டில நிப்பார்.

உப்பிடியே ஒருமாதிரி கோட்டை விட்டு, கோட்டை விட்டு பலகலைக்கழகத்திலிருந்து வெளியே வந்த கங்காவுக்கு யார் செய்த புண்ணியமோ சக்தி டீ. வீ யில மின்னல் நிகழ்ச்சி நடத்தும் வாய்ப்புக் கிடைத்தது. பெரிய அரசியல் புள்ளிகலைப் பிடித்தெல்லாம் அக்கு வேறு ஆணி வேறாக பேட்டி எடுத்தார். சில அரசியள் புள்ளிகள் இவர்மேல் ஆத்திரப்பட்டதாகவும் சொல்லிக்கொண்டார். அந்த பவுஸை வைச்சுக்கொண்டே புலிகள் - அரசு பேச்சுவார்த்தையில் இவர் வாலாட்ட வெளிக்கிட புலிகள் அதை ஒட்ட நறுக்கி விட்டார்கள்.

தனது திருகுதாளங்கள் தமிழ்ச் சனத்துக்குத் தெரியும் என்பதால் கூட்டணியில் இடமில்லாமல் ஐ. தே. கா வில் மலை நாட்டில் தேர்தலில் நின்றார். இவரை ஏதோ அரசியல் மேதை என்று நம்பிய மலையகத் தமிழர்கள், ஓட்டுப்போட்டு பாராளுமன்றம் அனுப்பிவிட ரங்காவின் அரசியல் வாழ்க்கை ஆரம்பமானது. ஐ. தே. கா விலிருந்தாலும் அரசுக்கு வால்பிடிக்கத் தொடங்கினார் கங்கா. மகிந்த மன்னரின் இளவரசரான நாமலின் நட்புக் கிடைக்க , கட்சித்தாவல் ஒன்றிற்குத் தருணம் பார்த்துக்கொண்டிருந்தார் ரங்கா.

காத்திருந்த தருணமும் வந்தது. 18 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்துக்கொண்டே சுதந்திரக் கட்சிக்குப் பகிரங்கமாகவே வவுனியாவிலிருந்து வந்த ரங்கா தாவினார். எதிர்க்கட்சியிலிருந்து சட்டமூலத்தை எதிர்த்து எதுவும் ஆகப்போவதில்லை. ஆகவேதான் ஆதரித்தேன் என்று மிகவும் சுலமபாகச் சொல்லிக்கொண்டே மகிந்த தனக்கு ஜெயவர்த்தன புறவில் வழங்கிய புத்தம் புதிய 5 கோடி பெறுமதியான மாளிகை வீட்டையும் பார்த்துக்கொன்டுவந்தார் ரங்கா. அதுமட்டுமல்லாமல் மகிந்த மன்னரும், இளவரசர் நாமலும் போகுமிடமெல்லாம் இந்த வவுனியாவைச் சேர்ந்த விசுவாசமான ரங்காவும் வாலாட்டியபடியே போய்வந்தார்.

ஐ. நா, அமெரிக்கா, இங்கிலாந்து என்று ரங்காவின் இளவரசருடனான பயணங்கள் தொடர்கின்றன.

Edited by ragunathan

- மொத்தமாக 60 அமைச்சர்கள். இவர்களில் 10 அமைச்சர்கள் சிரேஸ்ட அமைச்சர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்

- அமைச்சரவையின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 31 பிரதி அமைச்சர்கள். 59 அமைச்சர்கள் என அறிவிக்கப்பட்டிருந்தபோதும் சில மணித்தியாலங்களில் அமைச்சரவையின் எண்ணிக்கை 60 ஆகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

- 60 வது அமைச்சராக பிரியங்கர ஜயரட்ன முன்னர் அமைச்சரவை அந்தஸ்துள்ள சிவில் விமான சேவைகள் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

- ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றிலிருந்து அரசின் பக்கம் தாவியோரும் அமைச்சர்களாக நியமனம் பெற்றுள்ளனர்:

== லக்‌ஷ்மன் செனவிரட்ன – உற்பத்தி மேம்பாட்டு அமைச்சர்

== நவீன் திஸாநாயக்க – பொது நிர்வாக அமைச்சர்

== டிலான் பெரேரா – வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்

== மஹிந்தானந்த அலுத்கமகே – விளையாட்டுத்துறை அமைச்சர்

== ரவூப் ஹக்கீம் – நீதி அமைச்சர்

== வாசிதேவ நாணயக்கார – தேசிய மொழி மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.