Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ மாவீரர் நாள் 2010 ஐந்தாம் நாள் இன்று: விண்ணேறி போனவரே- சீராளன்

Featured Replies

ஈழநாதம்

ஞாயிற்றுகிழமை, நவம்பர் 21, 2010

கற்களாய் உம்மை நட்ட காணிகளில் தேடுகின்றோம், ஒரு புற்களைக்கூட காணோம், நிர் மூலமாய்க் கிடக்கின்றன. நெய்விளக்குப் பந்தங்கள் நின்றெரிந்த திருவிடங்கள் எந்தப் பூதம் விழுங்கியது. எங்கள் கண்மணிகள் பெருநாள் வாரத்தின் ஐந்தாம் நாள் இன்று.

உள்ளுக்குள் ஒரு சுடர் ஏற்றுவோம்!

ஓ.............மாவீரர்களே

கண்ணயரா கண்மணிகளே

விண்ணேறிப்போனவரே

விலாசமின்றிப்போவீரோ?

பனிக்கின்றன விழிகள்

பதைக்கின்றது நெஞ்சம்

நினைக்க நினைக்க

என்னென்னோ எல்லாம் செய்கிறது உடம்பில்

ஆற்றாமல் அழுகின்றோம்

அழுத படி தொழுகின்றோம்: அறிவீரோ?

ஓ............மாவீரச் செல்வங்களே

கற்களாய் உம்மை நட்ட

காணிகளில் தேடுகின்றோம்

ஒரு புற்களைக்கூட காணோம்

நிர் மூலமாய்க் கிடக்கின்றன

நெய்விளக்குப் பந்தங்கள் நின்றெரிந்த திருவிடங்கள்

எந்தப் பூதம் விழுங்கியது

இறந்த ஆத்மாக்களின் இல்லிடங்களை?

சுடலைத் தெய்வங்களை சுக்கு நுhறாக்கிய

சுத்த மடையா; யாராய் இருப்பர்?

விதையாய் நாம் விதைத்த விதைகுழிகள்

முற்றிலுமாய் காணாமல் போயினவே

முகவரிகள் அற்று

என் செய்வேன் இனி?

எத்திசை நோக்கி எப்படித் தொழுவோம்?

மண்துகள்களாய் தானும் வாழ்வதற்கே

உரிமை மறுக்கப்பட்டவரே - உம்மை

கண்டெடுத்து கைதொழுவதெந்நாள்?

கார்த்திகை 27

தவங்கிடந்து வரம் வேண்டும் நாளில்

நினைவுப்படங்களைக்கூட காணோம்

நீர்; நடந்த தடங்கள் மட்டும் கண்களில்

நீர்; செய்த குறும்புத்தனங்கள் மனங்களில்

நிழல் அற்றுப் போகாது உம் நினைவுகள்

உள்ளுக்குள் ஒரு சுடர் ஏற்றுவோம்: உமக்காக

தொலைத்து விடவில்லை எதையும்

உம் நினைவுகளை

உம் கனவுகளை

சுமந்தபடி திரிகின்றோம் எக்கணமும்

காத்திருக்கின்றோம் நம்பிள்ளைகள் வரவுக்காய்!

ஆக்கம்

வன்னியூர்;

சீராளன்

http://www.eelanatham.net/story/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-2010-%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D

உணர்வூட்டியமைக்கு நண்றி...

  • தொடங்கியவர்

உணர்வூட்டியமைக்கு நண்றி...

From Jasan for Eelanatham.info

Fallen Heroes Never Forgotten

A poem dedicated to all the fallen heroes (Maveerar) who forsaking their own dreams and carrying in their hearts the dreams of their Motherland reddened the soil of Tamil Eelam with their supreme sacrifice. For all our tomorrows they gave their today. We honour their memory.

“The thirst of Tamils is the Free Tamil Eelam”

Ultimate_Sacrifice.jpg

The Ultimate Sacrifice

None too noble to offer

To the land of our mother'

Than our soul that do suffer

The indignity of the oppressor.

Against strong winds of terror,

Amidst sufferings of extreme horror,

Torch of non-violence we held higher,

Beyond the racists acts of squalor.

Virulent winds of violence,

Turbulent acts of intolerance,

Turned a nation of spiritual peace,

Into an army of honour-bound resistance.

To spill our blood, enemy did choose us.

To kill our breath, destiny did choose us.

To chill our spirit, tyranny did choose us.

To fulfil our goal, our dreams did choose us.

Worth beyond blood, breath and spirit,

Birth of our dreams to be free. No limit

Of sacrifice we impose or thoughts we endure.

Freedom we crave shall dawn-that's for sure.

Against torrent of abuse and violence,

Against currents of denial and indifference,

Against politics of dishonesty and vengeance,

Fought a nation with death as the ultimate sacrifice.

May the monsoon winds off Vanni,

Be kind to our fallen heroes. As many

Decades to come, may them praise the bonny

Boys and girls who fell to give hope to many.

Eelanatham. English editon

  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்கும் போதே கண்கள் பனிக்கின்றன.மாவீரர் தியாகம் வீண் போகாது.இன்றைக்கும் சிறிலங்கா அரசு பயப்படுவது மாவீர் மீது இழைத்த போர்க்குற்றத்திற்காகவே.நிறிலங்கா அரசைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம்.மாவீரர் இலட்சியம் வெல்வோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.