Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பில் மாவீரர் தினம் பல பகுதிகளில் அனுஷ்டிப்பு

Featured Replies

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று பரவலாக இடம்பெற்ற மாவீரர் தின வைபவங்களில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றிருந்ததாக எமது தகவல் வட்டாரங்கள் ஊர்ஜிதம் செய்கின்றன.

புலிகளை ஒழித்துக் கட்டிவிட்டதாக பெருமெடுப்பிலான பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் இலங்கை அரசாங்கமானது மாவீரர் வாரத்தை முன்னிட்டு படைத்தரப்பை உச்சகட்ட உசார் நிலையில் வைத்திருந்தது.

அதனையும் மீறி நேற்று வடக்கு, கிழக்கின் பல பகுதிகளிலும் பரவலாக மாவீரர் தின வைபவங்கள் நடைபெற்றதுடன், ஏராளம் பொதுமக்களும் அதில் ஆர்வம் காட்டியிருந்தனர்.

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவலான முறையில் இராணுவக் கண்காணிப்பும் படைப்புலனாய்வாளர்களின் கடுமையான அவதானிப்புகளுக்கும் மத்தியில் நேற்று நடைபெற்ற மாவீரர் தின அனுஷ்டானங்கள் இரகசியமான முறையில் பரவலாக நடைபெற்றிருந்ததாக ஊர்ஜிதப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாவீரர் தின வைபவங்களின் முக்கிய அம்சமான ஈகைச்சுடர் ஏற்றும் நிகழ்வும் அதன் போது நடைபெற்றிருந்தது.

வடக்கிலிருந்து கிழக்கு பிரிந்து இருப்பதையே அங்குள்ள மக்கள் விரும்புவதாக ஒரு சில அரசியல் வாதிகள் கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கின்ற போதிலும் நேற்றைய நிகழ்வுகள் அதனைப் பொய்யாக்கியுள்ளன.

உணர்வு பூர்வமான இலட்சியப் பயணத்தில் பங்கேற்க கிழக்கு மாகாண மக்கள் இன்னும் தயாராக இருப்பதையே நேற்றைய நிகழ்வுகள் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.

மிகவும் இறுக்கமான பாதுகாப்புக் கட்டுப்பாடுகளையும் மீறி மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டமையும், பெருமளவான பொதுமக்கள் அதில் ஆர்வம் காட்டியிருந்தமையும் அதனையே பறைசாற்றி நிற்கின்றதாக எமது மட்டக்களப்பு நிருபர் தெரிவிக்கின்றார்.

ஆயினும் பாதுகாப்புக் கருதி மாவீரர் தின வைபவங்கள் நடைபெற்ற இடங்களின் விபரங்களை இங்கே நாம் தவிர்த்துள்ளோம்.

http://www.tamilwin.com/view.php?226IP5203tjoC2e2UG1f4b3D98Ycd382F2dc0Xpi4b4eKQHce2bLLId0

எவ்வளவு தூரம் இதில் உண்மையுண்டு. இவ்வாறு நடைபெற்றிருந்தால் சந்தோஷமே.

எவ்வளவு தூரம் இதில் உண்மையுண்டு. இவ்வாறு நடைபெற்றிருந்தால் சந்தோஷமே.

வட்டக்கச்சியில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டிருக்கின்றது. அங்கிருந்து எனது நண்பர் எனக்கு தொலைபேசியில் கதைக்கும் போது சொன்னார்.

அதே வேளை பாண்டியந்தாள்வு மற்றும் ஆலங்குளம் பகுதிகளில் சுடரேற்றப்பட்டதாகவும் தனக்கு நண்பர்கள் கூறியதாக சொன்னார்.

வெளி நாட்டில் கனக்க சனம் இந்த முரை வந்ததாம் என்று சொல்லி சந்தோசப்பட்டார்.

பெரிசு இருக்கு என்ற உணர்விலேயே நாங்கள் காலத்தை கழிக்கின்றோம் எனவும் சொன்னார்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தி உண்மையாக இருந்தால் சந்தோச‌ம்...ஆனால் யாழில் தமிழ்வின் செய்திகளுக்கு தடை எனப் போட்டிருந்தார்கள் இப்ப இல்லையோ :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தி உண்மையாக இருந்தால் சந்தோச‌ம்...ஆனால் யாழில் தமிழ்வின் செய்திகளுக்கு தடை எனப் போட்டிருந்தார்கள் இப்ப இல்லையோ :D

தமிழ் வின் இப்ப உண்மை செய்திய மட்டும் தான் போடுது ஆனா படியா தடை இல்லை.! :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த செய்தி உண்மையாக இருந்தால் சந்தோச‌ம்...ஆனால் யாழில் தமிழ்வின் செய்திகளுக்கு தடை எனப் போட்டிருந்தார்கள் இப்ப இல்லையோ :D

அக்கா தமிழ் இணையத்தளங்கள் எதிலை பார்த்தாலும் ஒரே செய்தி தான்,ஒரே மாதிரி தான் போடுகிறார்கள் தமிழ்வின் இல்லை என்றால் அதே செய்தி வேறு ஒரு இணையமூலத்தோடை வரப்போகுது. எல்லாம் ஒன்றை ஒன்று வெண்டவை தான் அக்கா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.