Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போர்க்குற்றம் புரிந்த மகிந்தவின் பிரித்தானியா வருகை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி சற்றுமுன் லண்டன் பயணம்

வீரகேசரி இணையம் 11/29/2010 4:17:36 PM

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ சற்று முன் லண்டன் சென்றடைந்தாக விமான நிலைய செய்தியாளர் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி நாளை லண்டனுக்கு விஜயம் செய்வார் என குறிப்பிட்ட போதும் ஜனாதிபதி இன்று மாலை 4.15 மணியளவில் யு.எல்.509 என்ற விஷேட விமானத்தில் சென்றடைந்தாக மேலும் தெரித்தார்.

Edited by கறுப்பி

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் அறிவுஜீவிகள் என்று மார்தட்டுறவ என்ன கிழிக்கினம் பார்க்கலாம்...........??? :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்சே பிரிட்டன் பயணம்... கைது செய்யப்படுவாரா?

திங்கள்கிழமை, நவம்பர் 29, 2010, 16:14[iST]

கொழும்பு: போர்க்குற்றங்களுக்காக கைது செய்யப்படலாம் என்ற எச்சரிக்கையையும் மீறி பிரிட்டன் பயணமானார் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே.

இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் விசேஷ அழைப்பு விடுத்திருந்தது. அதைத் தொடர்ந்து அவர் கடந்த மாதம் லண்டன் செல்வதாக இருந்தது.

ஆனால் போர்க்குற்ற செயல்களின் அடிப்படையில் அவர் கைது செய்யப்படலாம் என அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் தனது பயணத்தை ரத்து செய்துவிட்டார்.

இந்த நிலையில் அவர் 3 நாள் பயணமாக நாளை (30-ந்தேதி) இங்கிலாந்து புறப்பட்டுச் செல்கிறார். அங்கு அவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் சிறப்பரையாற்றுகிறார்.

பின்னர் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் மற்றும் வெளியுறவு செயலாளர் வில்லியம் ஹேக் ஆகியோரை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்துகிறார்.

இத் தகவலை இலங்கையில் இருந்து வெளியாகும் பத்திரிகை தெரிவித்துள்ளது.

இதற்கிடையே இங்கிலாந்து செல்லும் அதிபர் ராஜபக்சே போர் குற்றச் செயல்களின் அடிப்படையில் கைது செய்யப்படக் கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

அவ்வாறு அவர் கைது செய்யப்பட்டால் அதற்கு தாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது என இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் வில்லியம் ஹேக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்ஸ்தமிழ்

பிரித்தானியாவில் வாழும் சிங்களவர்களும், பொன்சேகா மீதான நடவடிக்கை,தொடரும் குடும்ப அரசியல், மாணவர் எதிர்ப்பு கொள்கை

தொடர்பில் மகிந்தா மீதான புலம்பெயர் தமிழ் சமூகத்திற்கான ஆதரவுகளை வழங்கும் நிலையில் உள்ளனர்.

இதையும் தமிழ் சமூகம் பயன்படுத்தவேண்டும்.

Edited by akootha

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது

திங்கட்கிழமை, 29 நவம்பர் 2010 10:43

பிரித்தானியாவில் கைது செய்யப்படலாம் என முன்னர் தனது பயணத்தை ஒத்திவைத்த சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா இந்த வாரம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த பயணமும் நெருக்கடிகளை சந்தித்துள்ளது.

தனிப்பட்ட பயணமாக பிரித்தானியாவுக்கு வரும் மகிந்தா ராஜபக்சாவின் பாதுகாப்புக்களை தம்மால் உறுதிப்படுத்த முடியாது என பிரித்தானியா அதிகாரிகள் பிரித்தானியாவில் உள்ள சிறீலங்கா தூதரகத்திடம் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவின் அழைப்பில் அவர் பயணத்தை மேற்கொண்டால், தம்மால் அவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும், ஆனால் தனிப்பட்ட பயணங்களின் போது அது முடியாது என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதனால் நாளை (30) பிரித்தானியாவுக்கு பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த மகிந்தா தனது பயணத்தை கைவிடலாம் என்ற கருத்துக்கள் எழுந்துள்ளன.

பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் தென்னிலங்கை மாணவர்களின் அழைப்பை தொடர்ந்தே மகிந்தா அங்கு செல்கிறார், ஆனால் பிரித்தானியாவில் தற்போது மாணவர்களின் போராட்டம் நடைபெறுவதால் அங்கு உறுதியற்ற தன்மை ஏற்பட்டுள்ளது.

அதேசமயம், மகிந்தா பிரித்தானியாவுக்குள் நுளைந்த பின்னர் கைது செய்யும் நீதிமன்ற உத்தரவுகளை பெற்று உடனடியாக அவரை கைது செய்வதற்கு புலம்பெயர் தமிழ் சமூகம் காத்திருப்பதாகவும், அதற்கான ஆணை 27 ஆம் நாள் நடைபெற்ற மாவீரர் தின விழாவில் கிடைத்துள்ளதாகவும் கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. மாவீரர் தினத்தில் பெருமளவான தமிழ் மக்கள் கலந்துகொண்டது, பிரித்தானியாவில் அவர்களுக்கு உள்ள ஆளுமையை காட்டுவதாக அது மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் பிரித்தானியாவில் வாழும் சிங்களவர்களும், பொன்சேகா மீதான நடவடிக்கை தொடர்பில் மகிந்தா மீதான புலம்பெயர் தமிழ் சமூகத்திற்கான ஆதரவுகளை வழங்கும் நிலையில் உள்ளனர்.

இதனிடையே, பிரித்தானியா பிரதமரை சந்திப்பதற்கு சிறீலங்கா அரச தலைவர் மேற்கொண்ட முயற்சிகளும் வெற்றிபெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

sankamam.com

அப்ப ஒக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் எந்த போக்கிரியும் வந்து உரையாற்றலாமா?

அது என்ன அவ்வளவு பணத்தால் விளையாடலாமா?

இல்லை என்றால் எப்படி மகிந்த வந்து உரையாற்றுவான்?

பல்கலைகழக நிர்வாகம் பேசுபவரின் பின்புலத்தை ஆராய்வது இல்லையா?

குறைந்தது இனப்படுகொலை பற்றி சனல்4 செய்தியை கூட அறியாத நிர்வாகமா?

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப ஒக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் எந்த போக்கிரியும் வந்து உரையாற்றலாமா?

அது என்ன அவ்வளவு பணத்தால் விளையாடலாமா?

இல்லை என்றால் எப்படி மகிந்த வந்து உரையாற்றுவான்?

பல்கலைகழக நிர்வாகம் பேசுபவரின் பின்புலத்தை ஆராய்வது இல்லையா?

குறைந்தது இனப்படுகொலை பற்றி சனல்4 செய்தியை கூட அறியாத நிர்வாகமா?

நேசன்,

இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க தகுதிவாய்ந்த அமைப்பு அந்த பல்கலைக்கழகமல்லவா? அந்த பல்கலைக்கழக நிர்வாகத்திடம் நீங்கள் கடிதம் மூலம் இந்த கேள்விகளை கேட்டீர்களா? என்ன பதில் கிடைத்தது? பகிர்ந்து கொள்வீர்களா? நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் அறிவுஜீவிகள் என்று மார்தட்டுறவ என்ன கிழிக்கினம் பார்க்கலாம்...........??? :D

விசுகு

இப்படி எழுதுவதனால் என்ன பயன் கிடைக்க போகிறது? உங்கள் கருத்து அறிவுஜீவிகளை ஏதாவது செய்ய தூண்டும் என்று நினைக்கிறீர்களா? பெரும்பாலானவர்கள் இவ்வாறான கருத்துகள் காரணமாக தாம் வசதியாக வாழும் நிலையில் எதற்கு இந்த அவமானம் எல்லாம் என்று ஒதுங்கி கொள்கிறார்கள். தயவு செய்து இவ்வாறான கருத்துகளை தவிர்த்து கொள்ள முயற்சி செய்யுங்கள். நன்றி.

நேசன்,

இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க தகுதிவாய்ந்த அமைப்பு அந்த பல்கலைக்கழகமல்லவா? அந்த பல்கலைக்கழக நிர்வாகத்திடம் நீங்கள் கடிதம் மூலம் இந்த கேள்விகளை கேட்டீர்களா? என்ன பதில் கிடைத்தது? பகிர்ந்து கொள்வீர்களா? நன்றி.

கூப்பிட்டது பல்களைக்களகம் இல்லை... இலங்கை மாணவர்களும், Oxford Union னும் எண்று செய்திக்குறிப்பு ஒண்டு சொல்லுது.... Oxford Union அதாவது அரசியல் அலசல் செய்யும் ஒரு குழுமம்... அங்கு தான் ராஜபக்ச அழைக்கப்பட்டு இருக்கிறார்... தனது அரசியல் நிலப்பாடுகளை விளங்கப்படுத்த...

http://www.oxford-union.org/about_us

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

.

Edited by குமாரசாமி

இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க தகுதிவாய்ந்த அமைப்பு அந்த பல்கலைக்கழகமல்லவா? அந்த பல்கலைக்கழக நிர்வாகத்திடம் நீங்கள் கடிதம் மூலம் இந்த கேள்விகளை கேட்டீர்களா? என்ன பதில் கிடைத்தது? பகிர்ந்து கொள்வீர்களா? நன்றி.

1. இந்த பல்கலைகழகத்திற்கு உங்கள் ஆதங்கத்தை / எதிர்ப்பை எழுத:

http://www.ox.ac.uk/applications/dynamic/contact_us.rm?id=164&area=root&backto=1

2. மேலே உள்ள முகவரியில் உள்ள விண்ணப்பத்தில் ஆயிரம் எழுத்துக்களுக்குள் எழுதவும்

3. " OXFORD should not permit neo Hitler - Sri Lankan leader "

November 29, 2010

I am shocked to learn that the 21st century HITLER, War Criminal, Murderer, Mahinda Rajaapaksha, the President of Sri Lanka is coming to your reputed University to deliver a speech. It is a shame, disgrace to OXFORD University to invite such criminals into your noble premises.

The international leaders including UN, Human Rights Watch, Amnesty International, The Elders Org. and very recently the Prime Minister of England Rt. Hon. Cameron also urged for an Independent International investigation into alleged War Crimes.

If he is still allowed to deliver his speech, please ask justice on behalf of that three years old girl who lost her parents in the so called "safe zone", or Mother of four children who was killed in a hospital or the 40,000 Tamils are still kept in "concentration style camps".

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.