Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தில்- இலங்கை எம்.பிக்கு எதிராக போராட்டம்

Featured Replies

இலங்கை எம்.பிக்கு எதிராக போராட்டம்

கோவை நகரில், சனிக்கிழமையன்று ஜவுளிக் கண்காட்சியைத் திறந்து வைக்க வந்த இலங்கை அரசாங்கத் தரப்பு எம்.பி. ஃபைசல் காசிம் பெரும் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதையடுத்து, கண்காட்சியைத் திறந்து வைக்காமல், அவசர அவசரமாக, அரங்கிலிருந்து அவர் வெளியேறிச் சென்றார்.

விசைத்தறி வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக் குழு சார்பில் விசைத்தறி ஜவுளி கண்காட்சி கோவையில் சனிக்கிழமை துவக்கி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதில், இலங்கை அமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும் ஆளும் கூட்டமைப்பு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி. ஃபைசல் காசிம் ஆகியோர் பங்கேற்பதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் பயணம் ரத்து செய்யப்பட்டது. ஃபைசல் காசிம் மட்டும் கோவை வந்தார்.

கண்காட்சி நடைபெறும் கொடிசியா வளாகத்துக்கு ஃபைசல் காசிம் எம்.பி. வந்தார். அப்போது, அந்த அரங்குக்கு வெளியே, பெரியார் திராவிடர் கழகம், மதிமுக, நாம் தமிழர் இயக்கம், இந்து மக்கள் கட்சி ஆகிய அமைப்புக்களின் தொண்டர்கள் நூற்றுக்கணக்கில் கூடி, அந்த எம்.பி.யி ன் வருகைக்கு எதிராக கோஷமிட்டார்கள். அப்போது, போலீசாரின் தடுப்பையும் மீறி பல தொண்டர்கள், சுற்றுச்சுவரைத் தாண்டிக் குதித்து உள்ளே ஓடினார்கள்.

இதையடுத்து, கண்காட்சி அரங்கிலிருந்து இலங்கை எம்.பி.யை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பாதுகாப்பாக வெளியே கொண்டு சென்றுவிட்டார்கள்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு மாலையில் விடுதலை செய்யப்பட்டார்கள்.

'இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான போராட்டமே'-பெரியார் திராவிடர் கழகம்

இலங்கையில், தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட மனித உரிமை மீறல் குற்றங்களைப் பதிவு செய்யவே, தாங்கள் இந்தப் போராட்டத்தை நடத்தியதாகவும், இது இலங்கை அரசுக்கு எதிரான போராட்டமே தவிர, தனிப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம் அல்ல என்று பிபிசி தமிழோசையிடம் தெரிவி்த்தார் போராட்டதை

முன்னின்று நடத்திய பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கு. ராமகிருஷ்ணன்.

இதற்கிடையில், இலங்கை ஜனாதிபதியின் இரண்டாவது சுற்று ஆட்சி குறித்து சென்னையில் சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.

ஹிந்து பத்திரிகையின் ஆசிரியர் என். ராம், பேசுவதாக இருந்த அந்தக் கருத்தரங்கிற்கு இலங்கைத் தமிழ் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்த காரணத்தால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

http://www.bbc.co.uk/tamil/news/story/2010/12/101204_protestagainstlankanmp.shtml

  • கருத்துக்கள உறவுகள்

covai-silanka-minister-2.jpg

covai-silanka-minister-1.jpg

covai-silanka-minister-4.jpg

கோவையில் ஈழ ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்: தப்பியோடிய இலங்கை அமைச்சர்

கோவை கொடிசியாவில் ஜவுளி கண்காட்சி நடைப்பெற்று வருகிறது. இதில் பங்கேற்க சிறப்பு அழைப்பாளர்களாக இலங்கையைச் சேர்ந்த எம்.பி., காசிம் பைசல், அமைச்சர் ரிஷாத் பத்யூதின் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் கண்காட்சியை திறந்து வைப்பதற்காக அழைக்கப்பட்டிருந்தனர்.

இலங்கை அமைச்சர் வருவதை அறிந்த தமிழின உணர்வாளர்கள் அதிருப்தி அடைந்தனர். மதிமுக, பெரியார் திராவிடர் கழகம், நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த தொண்டர்கள், இலங்கை எம்பி காசிம் பைசல், அமைச்சர் ரிஷாத் பத்யூதின் ஆகியோர் வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்த தயாராக இருந்தனர்.

கோவையில் பெருமளவில் திரண்டிருந்த பெரியார் திராவிட கழகத்தினர், ராஜபக்சே கூட்டாளியே திரும்பி போ, தமிழர்களை கொன்று குவித்த சிங்களனே திரும்பி போ என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்த பதாதைகளை ஏந்திக்கொண்டு நின்றுக்கொண்டிருந்தனர்.

பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணனிடம் வந்த போலீசார், கண்காட்சியில் இலங்கையைச் சேர்ந்த யாரும் பங்கேற்கவில்லை என்று சொன்னதின் பேரில், ஆர்ப்பாட்டத்தை கலைத்தனர்.

திரும்பவும் கொடிசியா கண்காட்சியில் இலங்கை அமைச்சர் காசிம் பைசல், ரிஷாத் பத்யூதின் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டனர் என்ற தகவலை தெரிந்துகொண்டு கொடிசியா முன்பு மதிமுக, பெரியார் திராவிடர் கழகம், நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த தொண்டர்கள் திரண்டனர். வெளியேற்று வெளியேற்று சிங்கள எம்பியை வெளியேற்று என்ற கோஷத்தோடு உள்ளே நுழைந்த அவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

தன் வருகைக்கு எதிர்ப்பு கிளம்பியதால், இலங்கை எம்.பி., காசிம் பைசல், கண்காட்சியில் கலந்து கொள்ளாமல் கொடிசியா வாளத்தின் பின் பக்கம் வழியாக, கோவை விமான நிலைத்துக்குச் சென்று இலங்கை திரும்பினார். எதிர்ப்பு காரணமாக அமைச்சர் ரிஷாத் பத்யூதின் கோவை பயணத்தை முன்கூட்டியே ரத்து செய்தார்.

முன்னதாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த தமிழக அமைச்சர்கள் பொங்கலூர் பழனிச்சாமி மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர், பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணனை சந்தித்து, இலங்கை அமைச்சர் வருவதற்கு அதிருப்தி தெரிவித்து நாங்களும் இந்த கண்காட்சியில் பங்கேற்வில்லை என்று கூறிவிட்டு சென்றனர்.

போலீசார் தடையை மீறி இலங்கை அமைச்சர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கொடிசியா அரங்கில் உள்ளே நுழைய முயன்றதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=44566

----------------

சிறீலங்கா இனப்படுகொலை அரசின் அமைச்சரவையில் உள்ளவர்களுக்கு தமது இன உணர்வலையை இனங்காட்டிய தமிழக உறவுகளுக்கு மிக்க நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் தாயகத்தில் இனப்படுகொலையை மேற்கொண்டும் பல்லாயிரக்கணக்காண போராளிகள், மக்களை சித்ரவதைக்கூடங்களிலும் வைத்துக் கொண்டு உலகை வலம்வர எந்தச் சிங்கள அரசியல்வாதியாலும் இனி முடியாது என்பதை படிப்படியாக உணர்த்தும் இந்நாட்களில் தோள் கொடுக்கும் தமிழக உறவுகளுக்குத் தலை வணங்குகிறோம்.

சிங்கள பயங்கரவாத, இனப்படுகொலை அரசின் கைக்கூலிகளும், இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணப் பணத்தை கொள்ளையிட்ட பதியுதீனுக்கும் தமது இன உணர்வலையை இனங்காட்டிய தமிழக உறவுகளுக்கு நன்றிகள்.

அந்த அரங்குக்கு வெளியே, பெரியார் திராவிடர் கழகம், மதிமுக, நாம் தமிழர் இயக்கம், இந்து மக்கள் கட்சி ஆகிய அமைப்புக்களின் தொண்டர்கள் நூற்றுக்கணக்கில் கூடி, அந்த எம்.பி.யி ன் வருகைக்கு எதிராக கோஷமிட்டார்கள்.

இவர்கள் இருவரும் இணைந்து செயற்பட்டால் மாற்றம் நிச்சயம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.