Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்தக்குற்ற ஆதாரங்களுடன் ... Channel 4

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இறுதிக்கட்டத்தில் கஜபாகு படையின் ஒரு படைப்பிரிவான 53 ல் சிறப்பு படைப்பிரிவான 57 வது படையணியின் G.V ரவிப்பிரியவின் தலைமையிலான TF- 8 இணைக்கப்பட்டு இருக்கிறது... கஜபாகு படைப்பிரிவின் சிறப்பு பிரிவான Air mobile டிவிசன் முழுமையாக சிதறி இருந்த 55 வது படைப்பிரிவுடன் இணைக்க பட்டு இருந்தது...

The deployment

There were three Army Divisions and one Task Force mainly involved in the ground battle. The 53 Division commanded by Major General Kamal Gunrathne, the Task Force 8 commanded by Colonel G.V. Ravipriya, which was again placed under the operational command of the 53 Division and the 58 Division commanded by Brigadier Shavendra Silva were the main offensive elements that fought the End Battle.

The 58 Division marched southwards along the A-35 axis dominating the ground stretching from the road to the coastal belt whereas the 53 Division marched on the same axis, dominating the ground stretching from the A-35 to the lagoon bank.

The 59 Division commanded by Major General Prasanna Silva, though remained defensive at the End Battle, made a vital contribution to the final victory. It was the 59 Division that was holding the defence line south of Vadduvakal causeway for months until the other offensive elements swept down from the North.

Three days before the End Battle, 59 Division troops crossed the Vadduvakal causeway and established their defence immediately south of the no fire zone. It was by this manoeuvre that the Army could rescue majority of the last group of civilians held at hostage by the terrorists.

http://www.defence.lk/new.asp?fname=20090621LastBattleN

யுத்த குற்றங்களில் எந்த எந்த படையணி எங்கு எங்கு பயணித்தார்கள் என்பதை பார்க்க இந்த இணைப்பை நாடுகள்..

http://www.defence.lk/img/20090621_02FinalMap.swf

Edited by தயா

போர்க்குற்ற விசாரணைகளை முன்னெடுக்க சனல் 4 காணொளி போதுமானது! சட்டநிபுணர் கருத்து!

கடந்தவாரம் தமது ஒளிபரப்பில் சிறிலங்காவின் போர்க்குற்றம் தொடர்பான காணொளியில் காண்பிக்கப்பட்ட உடலம் விடுதலைப்புலிகளின் ஊடகப்பிரிவினைச் சேர்ந்த இசைப்பிரியாவினுடையது என்பதனை தாம் உறுதிப்படுத்தியுள்ளதாக பிரித்தானியாவின் சனல் 4 இன்று தெரிவித்துள்ளது.

சனல் 4 இன் இன்றைய மாலை 7மணி செய்தியறிக்கையில் இவ்விடயம் தொடர்பான விவரணம் ஒன்று ஒளிபரப்புச் செய்யப்பட்டதுடன், இது தொடர்பில் Matrix Chambers எனும் பிரித்தானிய சட்ட நிறுவனத்தினைச் சேர்ந்த முன்னணி குற்றவியல் சட்டவாளர் ஜுலியன் நோலஸ் அவர்கள் தெரிவித்த கருத்தும் இணைக்கப்பட்டிருந்தது.

கடந்தவாரம் தமது செய்தியறிக்கையில் ஒளிபரப்பிய காணொளியில் காணப்பட்ட உடலம் இசைப்பிரியாவினது என்பதனை விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஊடகப்பிரிவில் பணியாற்றிய முன்னாள் போராளியான, தற்பொழுது லண்டனில் வசித்துவரும் கல்பனா உறுதி செய்துள்ளார் என இச்செய்தி அறிக்கை தெரிவித்துள்ளது.

சனல் 4 இன் செய்தி அறிக்கையை பின்வரும் இணைப்பில் பார்வையிடலாம்:

http://www.channel4.com/news/sri-lanka-war-crimes-video-womans-body-identified">http://www.channel4.com/news/sri-lanka-war-crimes-video-womans-body-identified

சோபா என்ற இயற்பெயருடைய இசைப்பிரியாவை தனக்கு ஒன்பது வருடமாக தெரியும் எனவும் இருதய நோயாளியான அவர் ஒரு ஊடகவியலாளராக எப்போதும் பேனா, குறிப்புப்புத்தகம் ஆகியவற்றுடனேயே காணப்பட்டதாகவும், ஆயதப் பயிற்சியினை அவர் பெற்றிருக்கவில்லை எனவும் கல்பனா தெரிவித்தார். காண்பிக்கப்பட்டது அவரது உடலம் என்பதை தன்னால் நூறுவீதம் உறுதியாகக் கூறமுடியும் எனவும் கல்பனா தெரிவித்துள்ளார். அதனை இசைப்பிரியாவின் குடும்பத்தினரும், நண்பர்களும் உறுதி செய்துள்ளதாகவும் சனல் 4 தெரிவித்துள்ளது.

மேற்படி காணொளிக் காட்சி போர்க்குற்றம் தொடர்பான விசாரணைகளுக்கு வலுவான சாட்சியமாக அமையும் எனக் கருத்து வெளியிட்ட சட்ட வல்லுனர் ஜுலியன் நோலஸ், அதன் மூலம் இக்குற்றங்களைப் புரிந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கமுடியும் எனவும் தெரிவித்தார்.

27வது வயதான இசைப்பிரியா 2009 ஆண்டு மே மாதம் பதினெட்டு அல்லது 19 திகதியளவில் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் இக்கொலையில் மேஜர் ஜெனரல் கமால் குணரத்தின தலைமையிலான சிறிலங்கா இராணுவத்தின் 53 பிரிவினர் சம்பந்தப்பட்டிருக்கலாம் எனவும் சனல் 4 தெரிவித்துள்ளது.

இவர் நேரடிச் சண்டையிலே தம்மால் கொல்லப்பட்டதாகவும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் கடந்த மே மாதம் செய்தி வெளியிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டும் இந்தத் தொலைக்காட்சியின் வெளிவிவகாரச் செய்தியாளர் ஜொனதன் மில்லர், அவ்வாறு போரிடும்போது கொல்லப்பட்டிருந்தால், ஏன் இசைப்பிரியாவின் கைகள் பின்புறம் கட்டப்படுள்ளது என கேள்வி எழுப்பியுள்ளார்.

எட்டு நிமிடங்கள் காண்பிக்கப்பட்ட இவ்விவரணத்தில் இசைப்பிரியா தமிழீழ தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பது, இசைக்கருவியின் துணையுடன் பாடல் ஒன்றை பாடுவது போன்ற முன்னைய பதிவுகளும் இணைக்கப்பட்டிருந்தன.

பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சி வெளியிடும் இவ்வாறான காணொளிச் சாட்சிகளை சிறிலங்கா அரசு தொடர்ச்சியாக மறுத்து வருகின்ற போதிலும், கடந்த பல மாதங்களிற்கு முன்னர் தாம் வெளியிட்ட இளைஞர்கள் வரிசையாகச் சுட்டுக்கொல்லப்படும் காட்சியை ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புத் தூதுவர் பிலிப் அல்ஸ்ரன் ஆய்வு செய்து, அது உண்மையான காணொளி எனக் கூறியிருந்ததையும் இந்தத் தொலைக்காட்சி அடிக்கடி நினைவூட்டுவதுடன், ஏனைய பல சட்ட மற்றும் போர்க்குற்ற வல்லுனர்களின் ஆய்வுக் கருத்துக்களையும் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றது.

http://www.ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={D2481CDF-B679-4C1B-8FC1-DFD08F3B2D6C}

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இசைப்பிரியா அடையாளம் காணப்பட்டார், சிறீலங்கா அரசு மீதான போர்க்குற்ற விசாரணைக்கான கோரிக்கை வலுப்பெறுகின்றது – பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சி

சிறீலங்கா அரசு மீதான சுயாதீன போர்க்குற்ற விசாரணைக்கான கோரிக்கை வலுப்பெறும் வகையில் தாம் வெளியிட்டுள்ள காணொளிக் காட்சி அமைந்துள்ளதாக, முன்னணி போர்க்குற்ற சட்ட வல்லுனரின் ஆய்வுதவியுடன் பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

இன்று (புதன்கிழமை) இரவு 7:00 மணிச் செய்தியறிக்கையில் 8 நிமிடங்கள்வரை ஆய்வுச் செய்தியை வெளியிட்டுள்ள இந்தத் தொலைக்காட்சி, கடந்த வாரமும், அதற்கு முன்னரும் தாம் வெளியிட்ட காணொளிக் காட்சிகள் போர்க்குற்ற ஆதாரங்களாக அமையும் எனவும் கூறியிருக்கின்றது.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போரின்போது கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கானோரில் கடந்த வாரம் தாம் வெளியிட்ட காணொளியில் உள்ள இசைப்பிரியா என அழைக்கப்படும் (கொல்லப்பட்டபோது) 27 அகவுடைய சோபாவும் உள்ளடங்குவதாகவும், அதனை அவரது தோழிகளில் (9 வருடங்கள்) ஒருவரும், முன்னாள் போராளியும், தற்பொழுது லண்டனில் வசித்துவரும் கல்பனா உறுதிப்படுத்தியுள்ளதையும் கல்பனாவின் முகம் மறைக்கப்பட்ட செவ்வியுடன் இந்தத் தொலைக்காட்சி வெளிக்கொண்டு வந்திருக்கின்றது.

பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சி வெளியிடும் இவ்வாறான காணொளிச் சாட்சிகளை சிறீலங்கா அரசு தொடர்ச்சியாக மறுத்து வருகின்ற போதிலும், கடந்த பல மாதங்களிற்கு முன்னர் தாம் வெளியிட்ட இளைஞர்கள் வரிசையாகச் சுட்டுக்கொல்லப்படும் காட்சியை ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புத் தூதுவர் பிலிப் அல்ஸ்ரன் ஆய்வு செய்து, அது உண்மையான காணொளி எனக் கூறியிருந்ததையும் இந்தத் தொலைக்காட்சி அடிக்கடி நினைவூட்டுவதுடன், ஏனைய பல சட்ட மற்றும் போர்க்குற்ற வல்லுனர்களின் ஆய்வுக் கருத்துக்களையும் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றது.

இசைப்பிரியா தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகம், மற்றும் தொடர்பாடல் பிரிவில் பணியாற்றிய ஒரு முக்கிய போராளி எனவும், இவர் போரிடும் படைப் பிரிவை சார்ந்தவர் அல்ல எனவும் சுட்டிக்காட்டும் இந்தத் தொலைக்காட்சி, அதற்கு அவரது நண்பியான நேரடிச்சாட்சி கல்பனாவின் கருத்துப் பகிர்வையும் அளித்திருக்கின்றது.

இதேவேளை, லெப்ரினன்ட் கேணல் தரத்திலுள்ள இசைப்பிரியா என்பவர் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தலைமையிலான 53வது படையணியினால் கடந்த மே மாதம் 18ஆம் நாள் கொல்லப்பட்டிருப்பதாகவும், இவர் நேரடிச் சண்டையிலே தம்மால் கொல்லப்பட்டதாகவும் சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் கடந்த மே மாதம் செய்தி வெளியிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டும் இந்தத் தொலைக்காட்சியின் வெளிவிவகாரச் செய்தியாளர் ஜொனதன் மில்லர், அவ்வாறு போரிடும்போது கொல்லப்பட்டிருந்தால், ஏன் இசைப்பிரியாவின் கைகள் பின்புறம் கட்டப்படுள்ளது எனவும், நிர்வாணப்படுத்தப்பட்ட நிலையில் அவரது உடலம் காணப்படுவதையும் குறிப்பிடுகின்றார்.

இருதய நோய் காரணமாக மருத்துவ ஆலோசனைக்கு இணங்க இசைப்பிரியா போரிற்கு செல்வதில்லை எனவும், அவர் விடுதலைப் புலிகளின் ஊடகங்களில் பணியாற்றியவர் எனவும், ஊடகவியலாளரான இவர் நடனம், நாடகம், பாட்டு போன்ற பல்துறை வல்லுனர் எனவும் அவரது நண்பியை ஆதாரம்காட்டி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன், இசைப்பிரியா தமிழீழ தேசிய தொலைக்காட்சியில் செய்தி வாசித்த காணொளிக் காட்சியையும் ஒளிபரப்பியுள்ள சனல்-4, அவர் கரும்புலிகள் பற்றிய பாடலுக்கு நடிக்கும் காட்சியையும் தனது செய்தியறிக்கையில் இணைத்துள்ளது.

கடந்த வாரம் காணொளி வெளியிடப்பட்டது போன்று இவ்வாரமும் முன்னணி போர்க்குற்ற சட்ட வல்லுனரின் கருத்தைப் பதிவு செய்துள்ள பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சி, மெட்றிக் சம்பேர்ஸ் எனப்படும் அமைப்பின் போர்க்குற்ற சட்ட வல்லுனர் ஜீலியன் நொவெல்ஸிற்கு இந்தக் காணொளிகளைக் காண்பித்தபோது, அவை மிக முக்கிய போர்க்குற்ற ஆதாரங்கள் எனவும், இந்தப் போர்க் குற்றம் புரிந்தவர்கள் நிச்சயம் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியதையும் ஒளிபரப்பி இருக்கின்றது.

போராளியான இசைப்பிரியா விடுதலைப் புலிகளின் தளபதி ஒருவரை திருமணம் முடித்திருந்தார். இவர்களது 6 மாதக் குழந்தையையும் வன்னியில் இடம்பெற்ற இறுதிப்போரில் பறிகொடுத்திருந்த நிலையில், இசைப்பிரியாவை சிறீலங்கா படையினர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி மிகக்கொடுரமாகப் படுகொலை செய்திருப்பதாக நம்பப்படுகின்றது.

http://meenakam.com/2010/12/09/15635.html

  • கருத்துக்கள உறவுகள்

65274567.jpg

15.12.10 தலையங்கம்

ஈழத்தில் போர் சமயத்தில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ காட்சியை இங்கிலாந்து தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.அதில் சிங்கள ராணுவத்தினர் தமிழர்களை நிர்வாணமாக்கி பின்னால் கைகளைக் கட்டி பின்னந்தலையில் சுட்டுக் கொல்லுகிறார்கள்.தமிழ்ப் பெண்கள் கற்பழிக்-கப்பட்டு கொல்லப்படும் காட்சியும் இருக்கிறது. இவற்றை ஒரு கொடூர சிங்களவன் படம் பிடிக்கிறான். ஈவு இரக்கமில்லா அரக்க கொடுமை.

இந்தக் காட்சிகளைப் பார்த்து அதிர்ந்து போன ஐ.நா. அமைப்பு, இலங்கை ராணுவத்தின் போர்க் குற்றங்களை, மனித உரிமை மீறல்களை விசாரிக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியிருக்கிறது.

அமெரிக்க அரசாங்கத்தின் ரகசியங்களை அம்பலப்படுத்தியிருக்கும் விக்கிலீக்ஸ் இணையதளமும்,‘ராஜபக்ஷேயும் அவரது சகோதரர்களும் ஈழத் தமிழர்களுக்கு எதிராக போர்க் குற்றங்களைச் செய்திருக்கிறார்கள்’ என்று அமெரிக்க அதிகாரிகள் சொல்லியிருப்பதாகத் தகவல் தருகிறது.

இந்தக் கொடூரச் செய்திகளைக் கேள்விப்படும் நேரத்தில் லேசாக ஆறுதல் தரும் செய்தியும் வந்திருக்கிறது.தமிழ் இனத்தை அழித்துக் கொண்டிருக்கும் இந்த நூற்றாண்டின் ஹிட்லர் ராஜபக்ஷேவுக்கு ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் மூக்குடைப்பு நடந்திருக்கிறது. அமைதியின் காவலன் போல் முகமூடி போட்டுக் கொண்டு அங்கு பேசப் போன ராஜபக்ஷே,ஈழத் தமிழரின் போராட்டத்தால் திருப்பி அனுப்பப்-பட்டார்.விடுதலைப் புலிகளை அழித்தாலும் அது தற்காலிகமானதுதான், இலங்கைத் தமிழர்கள் அதே வீரத்துடன் தான் இருக்கிறார்கள் என்பதை ராஜபக்ஷே புரிந்திருப்பார்.

உலகம் இப்படி இருக்க,நமது மத்திய அரசு மட்டும் இன்னும் ராஜபக்ஷேவுக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருப்பது என்ன ராஜதந்திரம் என்று புரியவில்லை. போர் முடிந்த பின்னும் தமிழர்களுக்கு உருப்படியாக எதுவும் செய்யாத ராஜபக்ஷேவை இன்னும் தமிழர்களுக்கு உதவச்-சொல்லி கெஞ்சிக் கொண்டிருக்க வேண்டுமா?மத்திய அரசு சிந்திக்க வேண்டும்..

- குமுதம் ஆசிரியர் தலையங்கம்

02a0.jpg

இசைப்பிரியாவுடனுள்ள பெண் போராளி இனம் காணப்பட்டுள்ளார்

மல்லாவியை சொந்த இடமாக கொண்ட குணலிங்கம் - உசாளினி (இயக்க பெயர் - அகல்விழி. வயது 19 ) இவர் ஒரு புதிய போராளியாவார் ..இராணுவ கொடுமைகள் காரணமாக 2008 / 05 ம் மாதமளவிலே போராளியாக இணைந்தவர் . தமிழீழ தொலை காட்சி செய்தி சேகரிப்பாளராக பணி புரிந்துள்ளார் என உறவினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

http://uyirambukal.blogspot.com/2010/12/blog-post_5570.html

===================================================

எம்மிடம் உள்ள நேரத்தையும் வசதியையும் பயன்படுத்தி, கொல்லப்பட்ட - காணமல் போன எமது உறவுகளின் தூதர்களாக அதிகளவு கடிதங்களை நாம் எழுதுவோம்.

===================================================

to: panelofexpertsregistry@un.org

To: Mr. Marzuki Darusman, Chairman

To: Mr. Steven Ratner, Panel Member

To: Ms.Yasmin Sooka, Panel Member

December 9th, 2010

Subject : Submission of War Crimes Evidence in Sri Lanka and an appeal to the U.N. to investigate Sri Lanka for its 'war crimes', 'crimes against humanity' and 'Genocide' of Tamils during the Sri Lankan Security Forces conflict with Tamil rebels

My Name : John Doe

My Contact : 1 New Street, New City, New Country. HOH OHO

My Telephone : XX - XXX - XXX - XXXX

My Email : xxxxxx@xxxxxx.xxx

Person missing and presumed killed : Usalini Kunalingam

Her age at the time (in 2009) : unknown

Her native place : Mallavi, Killinochi

Date of the disappearance/presumed death : January, 2009

Usalini was a member of Tamil Tigers who served as a journalist for the organization, namely Tamileelam TV.

I have herewith attached a photo of her with another journalist where both were killed after being blindfolded and their hands being tied in the back. ( photo and video attached)

Thanks.

John Doe

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • தொடங்கியவர்

உலகை மீண்டும் சிங்களம் ஏமாற்றுமா??? ...

http://www.channel4.com/news/sri-lanka-we-are-investigating-the-war

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள் 60 சிங்கள இராணுவத்தை சித்திரை செய்து கொலை செய்துள்ளார்கள் என்று இப்பொழுது சிறிலங்கா உலகைத் திருப்ப கதைவிடத்தொடங்கிவிட்டது.

Meanwhile the Sri Lankan prime minister has made new allegations of war crimes by the Tamil Tigers.

He said four hardcore Tiger members in detention had confessed to executing 60 soldiers towards the close of the war.

Last month the army said it had uncovered a mass grave with the bodies of 26 troops.

http://www.bbc.co.uk/news/world-south-asia-11959932

"உலகம் இப்படி இருக்க,நமது மத்திய அரசு மட்டும் இன்னும் ராஜபக்ஷேவுக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருப்பது என்ன ராஜதந்திரம் என்று புரியவில்லை. போர் முடிந்த பின்னும் தமிழர்களுக்கு உருப்படியாக எதுவும் செய்யாத ராஜபக்ஷேவை இன்னும் தமிழர்களுக்கு உதவச்-சொல்லி கெஞ்சிக் கொண்டிருக்க வேண்டுமா?மத்திய அரசு சிந்திக்க வேண்டும்.."

கருணாநிதி அண்ணரை ஒரு கடிதம் எழுதச் சொல்லுங்கோ. எல்லாம் சரிவரும். :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.