Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பு-லண்டன் இராஜதந்திர உறவில் முறுகல்நிலை அதிகரிப்பு

Featured Replies

"ஒக்ஸ்போர்ட்டுக்குச் சென்றவர் நாட்டின் தலைவரே, நாட்டாமை அல்ல" கெஹகலிய சீற்றம்

லண்டன் ஒக்ஸ்போர்ட் யூனியனில் உரையாற்றுவதற்கு கொழும்பிலிருந்து நாட்டாமையை அனுப்பவில்லை எனவும் பொது நலவாய அமைப்பில் அங்கம் வகிக்கும் நாட்டின் தலைவரேசென்றதாகத் தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளரும், தகவல், ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல, புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பென தடை செய்த பிரிட்டிஷ் அரசு அதன் ஆதரவாளர்களை ஜனாதிபதிக்கு எதிர்ப்புத்தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்ய எப்படி அனுமதித்தது எனவும் கேள்வி எழுப்பினார்.இந்த விவகாரத்தில் பிரிட்டிஷ் சாக்குப் போக்குக் கூறி தப்பித்துக்கொள்ள முடியாதெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்தச் செய்தியாளர் மாநாடு நேற்று வியாழக்கிழமை அரசாங்க தகவல் திணைக்களக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் ரம்புக்வெல மேற்கண்டவாறு தெரிவித்தார்.இவ்விடயம் தொடர்பில் அமைச்சர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமென்பது உலகின் மிகப் பிரசித்தி பெற்ற உயர்கல்வி நிறுவனமாகும். அந்த அமைப்பின் அழைப்பை கௌரவமாக ஏற்றுக் கொண்டே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அங்கு உரையாற்றச் சென்றார். அந்த நிகழ்ச்சி நடக்கும்போது ஜனாதிபதிக்கு எதிராக புலி ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தவிருந்ததை பிரிட்டிஷ் அரசாங்கம் முன்கூட்டியே அறிந்த நிலையிலும் அதனைத் தடுப்பதற்கு எந்த விதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. ஒரு விருந்துக்கு முக்கிய பிரமுகரை அழைத்துவிட்டு அவர் வரும்போது கதவை மூடும் பண்பு யாரிடமாவது இருக்கமுடியுமா?

முதற்றடவையாக உலகப்புகழ் மிக்க கல்வி நிறுவனத்தில் நடந்துள்ளது. இதனால் அபகீர்த்திக்குள்ளாவதும் வெட்கப்பட வேண்டியது நாமல்ல பிரிட்டிஷ் அரசும் ஒக்ஸ்போர்ட் யூனியனும்தான்.விடுதலைப்புலிகளை பயங்கரவாத அமைப்பென்று பிரகடனப்படுத்தி தடை விதித்த நாடுகளில் பிரிட்டிஷ் முன்னணியில் இருக்கின்றது. அவ்வாறு தடைவிதித்த நாடு பொது நலவாய அமைப்பில் அங்கம் வகிக்கும் ஒரு நாட்டின் தலைவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்கமுடியுமா எனக் கேட்க விரும்புகின்றோம். ஜனாதிபதி இந்த வைபவத்தில் தனிப்பட்ட ரீதியில் பங்கேற்கச் செல்லவில்லை. ஒக்ஸ்போர்ட் யூனியனின் அழைப்பின் பேரில் பிரதான உரையொன்றை ஆற்றுவதற்கே சென்றார். ஜனாதிபதிக்கு அங்கு தனிப்பட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் கூட்டம் நடைபெறும் ஒக்ஸ்போர்ட் யூனியன் வளாகத்தில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஜனாதிபதி ஆற்றவிருந்த உரை இரத்துச் செய்யப்பட்டதன் மூலம் ஜனநாயகம்பேசும், பயங்கரவாத ஒழிப்புக்குக் குரல் கொடுக்கும் நாடுகளின் மறைமுக நடவடிக்கைகள் உலகுக்கு வெளிச்சம்போட்டுக்காட்டப்பட்டுள்ளது. இலங்கையில் கொடிய யுத்தம் நடைபெற்ற காலத்தில் கூட இங்கு விஜயம் செய்த வெளிநாட்டுத் தலைவர்களுக்கு போதியளவு உச்சக்கட்டப்பாதுகாப்பு வழங்கப்பட்டது. அவர்கள் விரும்பிய இடங்களுக்குச் சென்று வரவும் அரசு உரிய பாதுகாப்பை பெற்றுக் கொடுத்தது. உலகிலேயே உன்னதமான கல்வி நிறுவனமாகிய ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் விடுத்த அழைப்பின் பேரிலேயே ஜனாதிபதி அங்கு சென்றார். அதற்கேற்ற வகையில் பிரிட்டிஷ் அரசு இராஜதந்திர மட்டத்தில் செயற்படத் தவறிவிட்டது. இதனை அந்த நாட்டின் திட்டமிட்ட செயற்பாட்டின் வெளிப்பாடாகவே நாம் நோக்குகின்றோம்.

பயங்கரவாதத்துக்கு எதிராக குரல் கொடுக்கும் பிரித்தானியா பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்பட்ட புலிகளுக்கு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதித்தது போன்று அல்ஹைதா அமைப்புக்கும் ஆர்ப்பாட்டம் நடத்த இடமளிக்குமா எனக் கேட்க விரும்புகின்றோம். ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றுவதற்கு கொழும்பிலிருந்து நாட்டாமை ஒருவர் அனுப்பப்படவில்லை. பொது நலவாய அமைப்பில் அங்கம் வகிக்கும் கௌரவமான தொரு நாட்டின் தலைவரே அங்கு சென்றார். இதற்கு முன்னரும் உலகத் தலைவர்கள் பலரும் இங்கு உரையாற்ற அழைக்கப்பட்டுள்ளனர்.

ஒரு காலகட்டத்தில் இந்த ஒக்ஸ்போர்ட் யூனியனின் செயலாளராக முன்னாள் பிரதமர் எஸ். டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்காவும் தலைவராக முன்னாள் அமைச்சர் லலித் அத்துலத் முதலியும் பதவிவகித்துள்ளனர். அவ்வாறு உயர்வான தரத்தையுடைய ஒரு உலகப் புகழ் மிக்க கல்வி நிறுவனத்துக்கு இன்று மாசு கற்பிக்கப்பட்டுள்ளது. இந்த விரும்பத்தகாத செயற்பாடு குறித்து உரிய நடவடிக்கை எடுப்பது தொடர்பாக வெளிவிவகார அமைச்சு ஆராய்ந்து வருகின்றது. அத்துடன் சம்பவம் நடைபெற்ற காலப்பகுதியில் யூனியனின் தலைவராக பதவி வகித்தவர் தனது பதவியை இராஜினாமாச் செய்துள்ளார். புதிதாக தலைமைப்பதவியை ஏற்றிருப்பவர் ஜனாதிபதி லண்டனில் அடுத்த சில தினங்களுக்கு தங்கியிருப்பாரானால் அங்கு உரையாற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்ய முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால் ஜனாதிபதி அதற்கு ஆர்வம் காட்டவில்லை. மற்றொரு சந்தர்ப்பம் வரும்போது பங்கேற்பதாகத் தெரிவித்து விட்டு நாடு திரும்பிவிட்டார் எனவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

http://www.thinakkural.com/beta/index.php?option=com_content&view=article&id=2992:2010-12-10-01-22-22&catid=34:hotn-news&Itemid=99

  • கருத்துக்கள உறவுகள்

"ஒக்ஸ்போர்ட்டுக்குச் சென்றவர் நாட்டின் தலைவரே, நாட்டாமை அல்ல" கெஹகலிய சீற்றம்

எமது நாட்டாமையே நாட்டின் தலைவர் அல்ல

e_1_43.gif

Edited by Nellaiyan

  • தொடங்கியவர்

லண்டன் தரையில் கால் பதித்தும் பதியாமலும் மறைந்து திரிந்த மகிந்த

பிரித்தானியாவிற்கு பயணம் செய்து அங்கு பல வழிகளிலும் தனது பெயரை தக்கவைத்துக் கொள்ளும் முயற்சியில் இறங்கிய இலங்கை ஜனாதிபதிக்கு அங்கு கிடைத்த “வரவேற்பு” பற்றிய விபரங்கள், உலகம் முழுவதும் பரவிவிட்டன.

பெரிதான எதிர்பார்ப்போடும், சவால்களை எதிர்கொள்ளும் மனதோடும் சகாக்கள் பலரோடு அங்கு சென்ற ஜனாதிபதி மகிந்த அந்த மண்ணில் காலடி எடுத்து வைக்கும் முன்னரேயே சந்தோசத்தை இழக்கத் தொடங்கியிருப்பார் என்றே நாம் கருதலாம்.

அவர் பயணித்த விமானம் தரையைத் தொடும் முன்னமே அவரை “வரவேற்க” விமான நிலையத்தில் தமிழர் கூட்டம் தயாராக இருப்பது பற்றிய தகவல் அவருக்கு கிடைத்திருக்கலாம். இதனால் அவரது சந்தோசம் பறக்கத் தொடங்கியிருக்கலாம்.

ஆனாலும் நம்பிக்கைகளோடு லண்டன் தரையில் கால் பதித்தும் பதியாமலும் அவர் பறந்து திரிந்த (மறைந்து திரிந்த) சில நாட்களில் அவரது சந்தோசம் அவரோடு இல்லாமல் போய்விட்டது. அதனைப் பறித்தவர்கள் நமது பிரித்தானியா வாழ் தமிழ் உறவுகள். பல்வேறு அரசியல் காரணங்களுக்காக மகிந்தாவையும் அவரது அரசாங்கத்தையும் வெறுத்த சில சிங்கள அன்பர்களும் தமிழ் அன்பர்களின் பக்கம் நின்று அவர்களது பலத்தை அதிகரித்தது பற்றி இலங்கை அமைச்சரே கொழும்பில் கூறியுள்ளார்.

பிரித்தானியா வாழ் தமிழ் உறவுகளின் இந்த நேர்த்தியான ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்தவர்களின் பக்குவமும் பலமும் உலகெங்கும் உள்ளவர்களால் ஆச்சரியம் கலந்த வகையில் பார்க்கப்படுகின்றன. இந்த ஆர்ப்பாட்டங்கள்(போராட்டங்கள்) வெற்றியடைவதற்கு பின்புலமாக இருந்த தமிழர் தரப்பும் அதற்கு மேலாக பிரித்தானியாவின் மறைமுகமான ஆதரவும் உலகெங்கும் உள்ள தமிழ் மக்களால் மரியாதையோடு போற்றப்படுகின்றன.

இது இவ்வாறு இருக்க இலங்கை திரும்பிச் சென்ற மகிந்தவின் முகத்தில் சிறிதேனும் மகிழ்ச்சியை வரவழைக்கவும் அதன் மூலம் அவரது பாராட்டைப் பெறவும் கொழும்பில் அவரது ஆதரவாளர்கள் ஏற்பாடுகளைச் செய்தார்கள். அங்கு அரசாங்கம் அவர்கள் கையில் எதையுமே செய்யும் “பலம்” அவர்களுக்கு.

அரசாங்க அமைச்சர்கள், எம்பிக்கள் ஏராளமானவர்கள் சிங்கள மொழி பேசுகின்றவர்கள். அதுவும் மகிந்தவின் எடுபிடிகள். ஆனாலும் அவர்கள் மத்தியில் விரல் விட்டு எண்ணக் கூடிய தமிழர்களும் அடங்கியிருந்தார்கள். அவர்களில் அண்மையில் கட்சி தாவிய தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களான பிரபா கணேசன் மற்றும் திகாம்பரம் போன்ற மலையக அரசியல்வாதிகள். அவர்களோடு மதகுருமார்கள். பாபு சர்மா போன்ற நமது தமிழ் பேசும் சிவாச்சாரியார்கள் மகிந்தவை வரவேற்க விமான நிலையம் வரை சென்றார்கள்.

மகிந்தவும் இலங்கை இராணுவமும் வன்னி மண்ணில் நிகழ்த்திய படுகொலைகளின் குருதி இன்னும் காயாமல் இருக்க… அங்கு அழுகுரல்கள் இன்னமும் கேட்டுக் கொண்டிருக்க… ஐக்கிய நாடுகள் சபையானது ஜனாதிபதியும் அவரது கொடிய இராணுவமும் செய்த போர்க் குற்றங்களை ஆராய தயாராக உள்ள வேளையில் மரத்தை வெட்டித்தள்ளும் கோடரிக் காம்புகள் போல கொழும்பிலும் கல்நெஞ்சக் காரர்களாக நமது தமிழர்கள் சிலர். மகிந்தவின் இழந்த சந்தோசத்தை மீண்டும் பெற்றுக் கொடுக்க முயலும் அதேவேளை ஜனாதிபதியிடமிருந்து மேலும் மேலும் சலுகைகளைப் பெற மேலும் மேலும் காட்டிக்கொடுப்புகளில் ஈடுபட நாங்கள் தயார் என்று அவருக்கு தெரிவிக்கும் அவர்கள் மகிந்தவை இன்னும் பாராட்டிய படியும் புலம் பெயர்ந்த தமிழர்களை திட்டியபடியும் உள்ளார்கள் அவர்கள்.

முன்னர் எப்போதும் இல்லாத வகையில் தமிழர் பகுதிகளில் மகிந்தவிற்கு ஆதரவாக பல ஊர்வலங்களும் கூட்டங்களும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. ஆங்காங்கே திடீரெனத் தோன்றியுள்ள கட்சி அமைப்பாளர்களும் தரகர்களும் அங்குள்ள மக்களுக்கு பொய்யான தகவல்களைக் கூறி அவர்களை ஊர்வலங்களுக்கு அழைத்துவந்து கோசமிட வைத்துள்ளார்கள். பாவம் நமது தமிழ் மக்கள் அடக்கு முறை முன்னர் ஆட்சியாளர்களிமிருந்து ஆரம்பித்தது. இன்று ஆட்சியாளர்களின் ஏவலாளர்களிமிருந்து தோன்றியிருக்கின்றது. எல்லாச் சுமைகளையும் அனுபவிக்கும் பாவிகளாக நமது மக்கள்.

இலங்கையில் பல பிர்ச்சனைகள் உள்ளன. விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், உயிரபாயம், வெள்ளப்பெருக்கு, வீடில்லாதவர்களின் விரக்தி. இவ்வாறு பல. ஆனால் அவற்றை எல்லாம் மறந்துவிடுங்கள். நமது மகிந்தவின் மகிழ்ச்சியை மீண்டும் பெற்றுக்கொடுக்க வாருங்கள். எங்களோடு இணைந்து கொள்ளுங்கள் என்று அழைக்கின்றார்கள் அந்த சுயநலவாதிகள். அவர்களில் அரசியல்வாதிகளும் உள்ளார்கள். மதவாதிகளும் உள்ளார்கள். இவ்வாறானவர்களால் ஜனாதிபதி மகிந்த பிரித்தானியாவில் இழந்த மகிழ்ச்சியை மீண்டும் பெறுவாரா? அல்லது இன்னும் மரியாதையை இழப்பாரா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

http://www.eelampress.com/2010/12/8581/

பொது நலவாய அமைப்பில் அங்கம் வகிக்கும் கௌரவமான தொரு நாட்டின் தலைவரே அங்கு சென்றார்.

சிங்கள அமைச்சர்களே! மற்றும் சிங்கள பத்திரிகையாளர்களே! வாக்கியத்தை மாத்துங்கள் வெளி நாட்டில் வசிப்பவர்கள் புலி ஆதரவாளர்கள் மட்டுமல்ல,அவர்கள் இலங்கையில் பாதிக்கபட்ட இனம்,ஆகவே இனிமேல் அழகாக இலங்கைத்தமிழரின் ஆர்பாட்டம் என்றுரைப்பது சாலச்சிறந்தது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.