Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொக்கிஷம்

Featured Replies

என் பிரியமான தோழிக்கு, நான் நலம். நீயும் நலமுடன் இருப்பாய் என்று நம்புகிறேன்.

குழந்தைகள் நலமாய் இருக்கிறார்கள். என்னுடன் குப்பை கொட்ட வந்தவளும் நலமாய் இருக்கிறாள். என்ன, உங்களை கட்டி எனனாத்தை கண்டேன் என்று இடைக்கிடை சொல்லி வெறுப்பேத்துகிறாள். இது உங்கள் பெண் குலத்துக்கே உரிய புராணம் என்று என்னால் புறக்கணிக்க முடியவில்லை.

இன்று ஒரு படம் பார்த்தேன். அதன் பலன் தான் இந்த கடிதம். செரனின் போக்கிசம். நேரம் இருந்தால் நீயும் எடுத்து பார். நான் தனிமையில் இருந்த போது, நீ அனுப்பும் கடிதங்களும், இன்று என்ன கறி என்ற கிண்டலும், என் வருசங்களை நிமிடங்கள் ஆக்கின. அவற்றில் சிலவற்றை நான் இன்னமும் பொக்கிசமாய் வைத்திருக்கிறேன். சில வேளை எடுத்து மீண்டும் படிப்பது உண்டு. என்னை அறியாமலே சிரிப்பு வரும். வருடங்கள் பல கடந்து விட்டாலும், நினைவுகள் என்னமும் பசுமையாகவே இருக்கிறது. எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாத நட்பு.

உன் அக்கா கோயில் அடியால் போகும் போது உன் பெயரை உரக்க கத்தி அவரை வெறுப்பேத்த எண்ணிய நாட்கள். அந்த சைக்கிள். ஒரே காற் சட்டை. ஒரே சேட். அம்மா அது இரண்டையும் எடுத்து ஒழித்து வைத்த நாட்கள். எல்லாவற்றையும் தொலைத்தது போல ஒரு ஏக்கம்.

காலப் பரபரப்பு. வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற ஆணித்தரம், ஊர்ப்பிரச்சனை, எங்களை எல்லாம் கண்டத்துக்கு கண்டம் அலைய விட்டு விட்டது. உன் வீடு வந்த நாள், இன்னமும் நல்ல ஞாபகமாய் இருக்கிறது. தரையில் இருந்து எமது பழைய நாட்களை அசை போட்டது ஒரு இனிய அனுபவம். அப்படியான ஒரு நாள் இனி எப்ப வரும் என்ற ஏக்கமும் இருக்கிறது. நீ கொழும்பு வந்த போழுது உன்னை சரியாக கவனிக்கவில்லை என்ற ஒரு குற்ற உணர்வு இன்னமும் இருக்கிறது. அன்றைய சூழ் நிலை.அதற்காக நீ என்னை மன்னித்து இருப்பாய் என்று நம்புகிறேன்.

நன்றி, உனது 25 வருட கால நட்புக்கு. என்னை செதுக்கிய உளிகளில் நீயும் ஒருத்தி!

பிரியமுடன் பொன்னி.

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடன் குப்பை கொட்ட வந்தவளும் நலமாய் இருக்கிறாள்

பழைய நினைவுகளை இப்ப குப்பை கொட்ட வந்தவளுடன் "கொப்பி பேஸ்ட்" செய்யவேண்டியது தானே

உன் அக்கா கோயில் அடியால் போகும் போது உன் பெயரை உரக்க கத்தி அவரை வெறுப்பேத்த எண்ணிய நாட்கள்

அது சரி சைட் அடிச்சது அக்காவையோ தங்கைச்சியையோ

  • தொடங்கியவர்

அது சரி சைட் அடிச்சது அக்காவையோ தங்கைச்சியையோ

இது புனிதமான நட்பு,

  • 1 month later...
  • தொடங்கியவர்

என் அரூயிர் நண்பனுக்கு,

நான் நலம். உன் நலம அறிய ஆவல் இருந்தாலும், இங்க நடக்கிற இளுபடியாளால், நீண்ட நாட்களாக கடிதம் போட முடியவில்லை. மன்னிக்கவும்.

வளத்த கடா எல்லாம் முட்ட வருகுது. இரத்தத்தில் சீனியும், கொளுப்பும் வேண்டா விருத்தாளிகளாக வந்து குடியெறிவிட்டுது. சமைக்கிற பஞ்சியில உங்களுக்கு சுகர், உந்த பாணை போட்டு சாப்பிடுங்கோ, என்ற குரல் சுப்பிரபாதம் ஆகிவிட்டது. துரித உணவுகள், அன்றடா அத்தியவாசியம் ஆகிவிட்டது. அவசர வாழ்க்கையில், பிள்ளைகளின் குறும் செய்தி மட்டுமே கிடைக்கிறது.

எனிந்த வாழ்க்கை என்று எண்ணும் போதெல்லாம், நாமடித்த லூட்டிகள் கொஞ்சம் மனசை பலமூட்டுகிறது. உனக்கு ஞாபகம் இருக்கிறதா, ஜயர் வீட்டுக்கு புது மீன் காரனை அனுப்பினோம். அம்மா மீன் கொண்டராட்டாம், நான் காசு மாத்திக்கொண்டு வாரன் எண்டு நான் நழுவ, மீன் காரன், ஜயர் அம்மாவிடம் கிழி வேண்டி போட்டு, எம்மை தேட.. அது ஒரு சுகம்.

நாகலிங்க மாஸ்டர் வீட்டுக்கு இழனி புடுங்க போய், நான் மரத்தில் எறி இழனி புடுங்கி போட, மாஸ்டர் சத்ததில் எளும்பி வந்து பத்தைக்குள் பம் அடிக்க, நீ பத்தைக்குள் இருந்து கோமய அபிசேகம் வெண்டினாயே என்னை காட்டி கொடுக்கமால். நீ நண்பன்டா...!

இராசயன வாத்தி சாமுக்கு வெறுப்பேத்த, விடிய நாலு மணிக்கு வெடி கொண்ட போட்டமே அவர் வீட்டு முன்னாலே. அடுத்த நாள் வகுப்பில், அவர் ரென்சனில கத்த, நாம் நல்ல பிள்ளைகள் ஆட்டம் இருந்தோமே. அதெல்லாம் ஒரு காலம்.

பன்னிராண்டாம் சோதினையை மூன்று முறை எடுத்து, நீ ஒரு மாதிரி பல்கலை களகம் போனாய், நானும் சீமை படிப்புக்கு பீளேன் ஏறினேன். அதன் பிறகு கொஞ்சம் அறிவு வந்து, கஸ்டப்பட்டு படித்து, உனக்கு கேம்பிறிச்சில டாக்டர் பட்டம், எனக்கு அமெரிக்காவில் டீன் லிஸ்ட். இதெல்லாம் ஒரு இமாயலய வெற்றியாக வெளியுலக்குக்கு தெரிந்தாலும், ஏதோ தொலைத்தது போல ஒரு ஏக்கம். ஆடிய ஆட்டத்துக்கு ஆண்டவன் தண்டனையோ என்று எண்ணத் தோன்றுகிறது.

உன் புராணங்களையும் கொஞ்சம் சொல்லு, நெரம் இருந்தால். மீண்டும் சந்திப்போம், கலந்து சிந்திப்போம்.

பொன்னி

எனிந்த வாழ்க்கை என்று எண்ணும் போதெல்லாம், நாமடித்த லூட்டிகள் கொஞ்சம் மனசை பலமூட்டுகிறது.
:

அதே லூட்டிகளை தொடர்ந்து செய்ய வேண்டியதுதானே இன்ன்னும் நல்ல பலமாக இருக்கும்

மீசைக்கும்,தலைக்கும் "டை" அடிச்சு போட்டு லூட்டிகளை தொடர வேண்டியது.....மார்க்கண்டேயர் அப்படித்தான் இளமையாக இருந்தவராம்

உந்த டாக்குத்தர் மாரிடம் போகும் பொழுது மனிசிமாரை கூட்டிக்கொண்டு போககூடாது பாருங்கோ....உவளையள் சிரிச்சு கதைக்க டாக்குதரும் மனுசனுக்கு அந்த வருத்தம் இந்த வருத்தம் என்று பில்டப் பண்ணுறான்கள் :D:D

சில முரண்பாடுகள்.

முதல் கடிதம் - பொன்னியால் எழுதப்பட்டுள்ளது. பொன்னி - ஆணா ? ஏனென்றால், என்னுடன் குப்பை கொட்ட வந்ததவள் என்றுள்ளது.

மேலும் சைட் அடிக்கவில்லை என்றால், அவர் அக்கா போகும் போது உங்கள் நண்பியின் பெயரை உரக்கச்சொல்வதேன்?

Edited by Eas

  • தொடங்கியவர்

ஆனானப்பட்ட ஜயரே போறர், அரைக்குடுமிக்கு அழுவுது ஈஸ்...

ஆனானப்பட்ட ஜயரே போறர், அரைக்குடுமிக்கு அழுவுது ஈஸ்...

புரியவில்லை. :mellow:

  • 1 year later...
  • தொடங்கியவர்

இது மீண்டும் படிக்க நல்லாய் இருக்கே...

  • கருத்துக்கள உறவுகள்

புராணங்களையும் கொஞ்சம் சொல்லு, நெரம் இருந்தால். மீண்டும் சந்திப்போம், கலந்து சிந்திப்போம்.

பொன்னி

புதிய புராணங்களை எடுத்து விட வேண்டியதுதானே .... பொன்னி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]தொடருங்கள்[/size]

  • கருத்துக்கள உறவுகள்

இன்னிக்குதான் படித்தேன்...கண்கலங்கவைத்துவிட்டது...ஏனோ என் நினைவுகளையும் தூசி தட்டவைத்துவிட்டது...அந்தி நேரத்து சூரியன்போல வெம்மையற்ற கணங்களாய் நினைவுகளில் குளிர்ச்சியுடன் வந்துபோகின்றன அன்றைய நினைவுகள்...ஒரு மழை இருட்டு நாளில் மனதைக்கடந்துபோன மண்ணின் வாசனைகள் இன்னமும் நாசித்துவாரங்களில் தங்கி இருப்பதைப்போலவே நினைவுகளில் நட்புகளும் நாங்கள் அடித்த லூட்டிகளும் அப்படியே வண்ணமிழக்காமல் வாசனையோடு ஒட்டி இருக்கின்றன...திசைக்கொன்றாய் சிதறிவிட்ட மேக்கக்கூட்டங்களாய் விதிக்காற்றின் சிறகுகளில் சிக்குண்டு அலைந்தளிகிறது வாழ்க்கை...வானுயர்ந்த செயற்கைகட்டிடங்களின் பின்னே எம் இயல்பான புன்னகைகள் புதைக்கப்பட்டு இயந்திரங்களால் கட்டி இழுக்கப்படுகிறது எங்கள் மணித்துளிகள்...உறக்கத்துக்குப் போகும் பின்னிரவுகளும் உறங்கி எழும் அதிகாலைகளும் மட்டுமே நினைவில் இருக்கின்றன..இடையில் அக்கப்பட்ட எம் நாட்களுக்கு என்ன நடக்கிறதென்ற உணர்தலின்றியே வேலை இடங்களில் நாட்கள் அமிழ்ந்தளிந்தழிந்துபோகின்றன...ஊரில் நண்பர்களுடன் பாடித்திரிந்த நாட்கள் மட்டுமே நான் வாழ்ந்த நாட்களாக என் நினைவுகளில் தங்கி இருக்கின்றன...இங்கு புலம்பெயர்ந்து வந்த பின்னால் ஊரில் விட்டு வந்த அந்த நாளிலிருந்து என் வாழ்க்கை நகர்ந்ததாக நான் உணரவே இல்லை.. இன்னொரு வாழ்வு தேடி வந்த நாங்கள் இருந்த வாழ்வைத்தொலைத்து விட்டு இடை நடுவில் நிற்கிறோம்...ஒட்டவும் முடியாமல் விலகவும் முடியாமல் ஒடிந்துபோகும் சுள்ளிகளாய் பனிதேசத்தின் நாகரீகத் தெருக்களில் நடைபிணமாய் அலைகிறோம்...நன்றி பொன்னி..தொடர்ந்தெழுதுங்கள்..கொஞ்ச நேரமாவது கண்ணீரில் கரைந்துபோவோம்... :(

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

எனது அன்பு மகனுக்கு,

உன் அப்பா எழுதிக் கொள்ளவது, நான் நலமாக இல்லை. என் நலத்தில் உனக்கு அக்கறை உள்ளதா என்பதுதான் இந்த இரண்டு வருட காலத்தில் எனக்கு தினமும் எழும் கேள்வி. இரண்டு வருடதக்கு முதல் இங்கு கொண்டு வந்து விடும் போது, ஒவ்வொரு கிழமையும் வந்து பார்ப்பதாக வாக்கு கொடுத்தாய். நானும் உன் வரவை பார்த்து வழி மேல் விழி வைத்து இருக்கிறேன். தினமும் ஏமாற்றம் தான். இங்கு கொண்டு வந்து விடும் போது உன் மனைவி கூட கண்ணீர் வடித்தாளே, அது ஆனந்த கண்ணீரோ என்று இன்று தோன்றுகிறது,

நான் உன்னை வகுப்பறையில் விட்டு விட்டு, என் முதுகுக் பின்னால் நீ கதற கதற, நான் என் கண்ணீரை மறைத்த படி நான் சென்ற காட்சி நாபகத்துக்கு வருகிறது. அதுக்கு தான் நீ இப்ப பழி வாங்குகிறையோ இன்று என்று எண்ண தோன்றுகிறது. உனக்கு பொருத்தமான பள்ளி தேடி நான் அலைந்த அலைச்சலில் ஒரு பத்து விழுக்காடு ஆவது எனது முதியோர் இல்லத்தை தேட நீ செலவளித்திருந்தால், எனது கடைசி நாட்கள் இவ்வளவு கனமாக இருந்திருக்காது.

நீ என்னை ஒரு முறையேனும் பார்க்க வராவிட்டலும் மாதமாதம் எனது பாரபரிப்பு பணத்தை தவறாமல் அனுப்பி வைக்கிறையாம் . அது என்னை இங்கேயே கட்டி வைக்க நீ கொடுக்கும் காணிக்கையோ என்று எண்ண தோன்றுகிறது. நீ விடுதியில் தங்கி படித்த போது, உன்னை பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் உன் படிப்பை குழப்ப வேண்டாம், என்று மனதைக் கல்லாகியதுக்கு தான் இந்த தண்டனையோ? ஒவ்வொரு கோயில் திரு விழாவுக்கும், என் தோளில் இருந்து நீ பார்த்த உலகம், எனக்கு நீ காட்ட வேண்டாம். இன்று என் உலகமான என் பேரப்பிள்ளைகளை கொண்டு வந்து காட்ட மாட்டியா?

கொழும்பில் இருக்கும் வீட்டை வித்து காசு தந்தால், இங்கு ஒரு வீடு கட்டி, உங்களுக்கு தனி அறையும், சேர்ந்தே கழிவறையும் கட்டி தருவாய் என்று சொன்னாய். எல்லாம் உனக்கு தானே தம்பி என்று சொல்லி வீட்டை வித்து காசை அப்படியே தந்தேன். வீட்டை காட்டினாய், சிறப்பாக வீடு குடி புரலும் கொண்டாடினாய் என்று கேள்வி. எனக்கு தான் அழைப்பிதழ் தர மறந்து விட்டாய்.

நான் உனக்கு கற்று கொடுத்தேன் வாழ்க்கை இது தான் என்று. இன்று, நீ எனக்கு கற்று தருகிறாய் உறவுகள் இப்படி தான் என்று.

உனது வீட்டு சோறு தான் எனக்கு இல்லை என்று ஆகிவிட்டது. எனக்கு எப்பாவது கடிதம் போட்டால், கடிதத்தை சோற்று பருக்கையால் ஒட்டு. அதை எடுத்து என் ஆத்ம பசியை தீர்த்து கொள்கிறேன்.

இப்படிக்கு கனத்த இதையத்தொடு உன் அப்பா.

  • கருத்துக்கள உறவுகள்

பொன்னி ....வெளிநாட்டில இந்த காலத்தில இதெல்லாம் சகஜம்:D

  • தொடங்கியவர்

இதாலெதான், நான் புது புராணங்கள் எழுதுவது இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

:

மீசைக்கும்,தலைக்கும் "டை" அடிச்சு போட்டு லூட்டிகளை தொடர வேண்டியது.....மார்க்கண்டேயர் அப்படித்தான் இளமையாக இருந்தவராம்

:lol:

:lol:

:wub::rolleyes: :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.