Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெளிவடைந்த இலட்சிய உறுதியை தலைமேல் சுமந்து பணி செய்தவரே எமது தலைவரும், மாவீரர்களும்: கலாநிதி எஸ் யே இம்மானுவேல்

Featured Replies

தெளிவடைந்த இலட்சிய உறுதியை தலைமேல் சுமந்து பணி செய்தவரே எமது தலைவரும், மாவீரர்களும். அதேபோல் நாமும் இலட்சியத் தெளிவையும், உறுதியையும் வளர்த்து அதில்தான் உண்மையான ஒற்றுமையைத் தேடவேண்டும் என உலகத் தமிழர் பேரவையின் தலைவர் கலாநிதி எஸ் யே இம்மானுவேல் அவர்கள் புலம்பெயர்ந்த ஈழத் தமிழருக்கு நேற்று (28) விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு வருமாறு:

உலக சமாதான தினத்தில் புலம்பெயர்ந்த ஈழத் தமிழருக்கு ஒரு புத்தாண்டு வாழ்த்துச் செய்தி.

புலம்பெயர்ந்த ஈழத் தமிழருக்கு அன்பும், பண்பும் கலந்த எமது புதுவருட வாழ்த்துக்கள் உரித்தாகுக. ஆன்ம வளங்கள், உடல் வளங்கள், சமூக வளங்கள் உங்களை அன்பிலும், ஒற்றுமையிலும், சமாதானத்திலும் வளர்ப்பதாக.

உங்கள் உள்ளத்திலும், இல்லத்திலும், உங்கள் வாழ்விட சூழலிலும் இயற்கையோடு இசைந்த சமாதானம் மலரட்டும். எங்கள் உள்ளத்தில் இருக்கும் இருளும், பகமைகளும் அகன்று உலக சமாதானத்திற்கும் வழிசமைப்பதாக.

பிறக்கும் புதிய ஆண்டு ஈழத்தமிழராகிய எமக்கும், ஒரு நல்ல விடிவைக்கொண்டுவரும் புதிய ஆண்டாக மலரவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை உங்களுடன் சேர்ந்து நானும் வேண்டுகின்றேன்.

மனிதர்களாகிய நாங்கள் தாகிக்கும் ஆசிக்கும் இலட்சியத்தை அடைய இறைவனை வேண்டுவதும் சாதாரணமானது. ஆனால் அது போதாது. எமக்குரிய சகல திறமைகளையும், சக்திகளையும் பயன்படுத்தி எம்மை அதற்காக அர்ப்பணித்து பணிபுரிவது இன்றியமையாதது.

கடந்த ஆறு பத்து ஆண்டுகளாக, ஈழத் தமிழர் அனுபவிக்கும் துன்பம் தொகையிலும், வகையிலும் கணக்கிடமுடியாதவை. மனிதத்தையே வெட்கிக்க வைக்கும் கொடூரங்களை ஈழத் தமிழர்கள் மேல் சர்வதேச ஒத்துழைப்புக்களுடன் சிறிலங்கா அரசு சுமத்துகின்றது.

இவைகள் வியப்பையும், அதிர்ச்சியையும், விரக்தியையும் கொடுக்கின்றன. ஆனால் சிருட்டிப்பின் கர்த்தாவுக்கும், காலத்தை கடந்த இறைவனுக்கும் நடந்தவை, நடக்கின்றவை, நடக்கப்போகின்றவை அனைத்தும் மனித பகுத்தறிவைக் கடந்த இறைத் – திட்டத்தில் அடங்கியுள்ளன.

நிகழ்காலத்தில் வாழ்ந்து செயல்படும் எமக்கு எல்லாம் புரிய முடியாது. புரிய வேண்டிய தேவையுமில்லை. சிருட்டிப்பின் சிக்கலான சித்திரத்தை சிறு தூரத்திலோ, நேரத்திலோ புரிய முடியாது. அதற்கு தெய்வீகத்தின் தூரப் பார்வை வேண்டும்.

ஒர் பக்கத்தில் இயற்கை அனர்த்தங்கள், அணுசக்தி அழிவுகள், பொருளாதார வீழ்ச்சிகள், இன ஒழிப்புக்கள் போன்ற கொடூரங்களும், மறு பக்கத்தில் மனித குலத்திற்கு பெருமை கொடுக்கும் வளர்ச்சிகள். மனிதனுக்குப் புரியாது ஆனால் இவைகளே இறைத்திட்டத்தின் மர்மம்.

இறைப் பரிமாணங்களுக்கும் மனித எல்லைகளுக்குமுள்ளேயே எமது விடுதலைக்கான போராட்ட முயற்சிகளை முன்னெடுக்கின்றோம். இந்துக்களாகவோ, இஸ்லாமியர்களாகவோ, கிறிஸ்த்தவர்களாகவோ இருந்தாலும் இறைத் திட்டத்திற்கு பணிந்து, மனித முயற்சிகளை முன்னெடுப்போம்.

ஆகையால் எமக்கு நடந்தவற்றையும், இன்று நடப்பவற்றையும் எமது பகுத்தறிவின் திறமைகளினால் உய்த்துணர்ந்து, ஆன்ம சுத்தியுடனும், மனி உறுதியுடனும், பூரண அர்ப்பணிப்புடனும், செயற்படுவதே எமது தலையான கடமையும், பொறுப்புமாகும்.

முதலில் எமது ஆன்ம சுத்தியை நாமே பொறுப்பேற்க வேண்டும். நம் உள்ளத்தில் ஊறியிருக்கும் அடிமைத் தனங்களான சாதி, மத, படிப்பு, பட்டம், பண வேற்றுமைகளைக் களைந்து சுய விடுதலையைத் தேடுபவரே விடுதலைப்போராட்டத்தில் ஈடுபடலாம்.

23nlookஇரண்டாவது தெளிவடைந்த இலட்சிய உறுதியை தலைமேல் சுமந்து பணி செய்தவரே எமது தலைவரும், மாவீரர்களும். அதேபோல் நாமும் இலட்சியத் தெளிவையும், உறுதியையும் வளர்த்து அதில்தான் உண்மையான ஒற்றுமையைத் தேடவேண்டும்.

மூன்றாவது, இப் புனித இலட்சியத்திற்கான உகந்த பணி ஒரு பொழுதுபோக்கு அல்லது சுய இலாபம் தேடும் பணியாகாது. பூரண அர்ப்பணிப்புடன் செய்யும் பணியாக இருந்தால் தான் நாம் ஆசிக்கின்ற விடுதலை இறைத் திட்டத்துடன் இசைவாகும்.

ஆகவே உண்மையான நீதியான அரசியல் தீர்வும், சமாதானமும் தாயகத்தில் மலர வேண்டுமென்று பிரார்த்திப்பதுடன், செயல்படுவோம்.

பணியாளன் எஸ் யே இம்மானுவேல்

28.12.2010, யேர்மனி.

http://meenakam.com/2010/12/30/17425.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.