Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூடமைப்பு - அரச குழுக்கள் திங்கள் சந்திப்பு : அரசியல் தீர்வு குறித்து பேசப்போகின்றார்களாம்

Featured Replies

சனிக்கிழமை , ஜனவரி 8, 2011

அரசியல் தீர்வு தொடர்பில் ஆராய்வதற்காக அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் அமைக்கப்பட்ட பிரதிநிதிகள் குழு எதிர்வரும் 10 ஆம் திகதி திங்கட்கிழமை சந்திக்கவுள்ளது.

அலரி மாளிகையில் இந்தக் குழுக் கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அரசியல் தீர்வு தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட இக்குழுவின் அங்கத்தவர்களை 10 ஆம் திகதி கூட்டத்துக்கு வருமாறு ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

இந்தக்குழுவில் அரசாங்கத்தின் சார்பில் முன்னாள் பிரதமரும் அமைச்சருமான ரட்னசிறி விக்கிரமநாயக்க, அமைச்சர்களான ஜி.எல். பீரிஸ், நிமல் சிறிபால டி சில்வா, ஆகியோர் இடம்பெற்றுள்ள அதன் தலைவர் இரா. சம்பந்தன், எம்.பி.க்களான மாவை சேனாதிராஜா, எம்.சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர்.

திங்கட்கிழமை நடைபெறும் இந்தக்கூட்டத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கலந்து கொள்ள மாட்டார். இருதய சுகவீனம காரணமாக அவர் இந்தியாவில் சிகிச்சை பெற்று வருவதனால் ஏனைய மூன்று எம்.பிக்களுமே இக்கூட்டத்தில் பங்கேற்பார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்கள் சந்தித்து பேசியிருந்தனர்.இந்தச் சந்திப்பின்போதே அரசியல் தீர்வு குறித்து ஆராய்வதற்கு இருதரப்பு பிரதிநிதிகளை உள்ளடக்கிய குழு அமைப்பது என முடிவு செய்யப்பட்டது. இதன்படியே இக்குழுவுக்கான பிரதிநிதிகள் பெயரிடப்பட்டிருந்தனர்.

இதேவேளை அரசியல் தீர்வு தொடர்பில் ஒருமித்த கருத்தைப் பெறுவதற்காக தமிழ்க் கட்சிகளின் அரங்கமும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் இணைந்து அமைத்துள்ள உபகுழுவும் விரைவில் கூடவுள்ளது.இக்குழுவில் அரசாங்கத்தின் சார்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி. ஆனந்த சங்கரி, புளொட் அமைப்பின் சித்தார்த்தன், ஈ.பி.டி.பி.யின் முன்னாள் எம்.பி. இராசமாணிக்கம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், எம். சுமந்திரன் ஆகியோர் இடம்பெற்றிருக்கின்றனர். இக்குழுவும் இன்னும் சில தினங்களுக்குள் கூடவுள்ளது.வடக்கு கிழக்கில் சகல சபைகளுக்கும் போட்டியிடத் தீர்மானம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு நேற்று கொழும்பில் கூடி உள்ளூராட்சித் தேர்தல்தொடர்பில் விரிவாக ஆராய்ந்துள்ளது. கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனதிராஜாவின் தலமையில் நடைபெற்ற இந்தக் குழுக் கூட்டத்தில் வடக்கு கிழக்கு பகுதிகளில் சகல இடங்களிலும் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனைவிட தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் உள்ளூராட்சித் தேர்தலில் இணைந்து போட்டியிட விரும்பினால் கூட்டமைப்பின் அடிப்படைக்கொள்கைகளை ஏற்று வரவேண்டுமென்றும் அதன்பின்னர் அரங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு முயற்சிக்கக் கூடாது என்று அறிவிப்பது எனவும் இக்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

உள்ளூராட்சித் தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிடுவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுமென்று தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கும் சில கட்சித் தலைவர்கள் தெரிவித்துவரும் கருத்துக்கள் தொடர்பாக நேற்றைய கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது. இதன்போதே மேற்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக பெயர் குறிப்பிட விரும்பாத கூட்டமைப்பு எம்.பி. ஒருவர் தெரிவித்தார்.

Add new comment

My link

Edited by உமை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், சிறிலங்கா அரசும் இன்று சந்தித்துக்கொண்டன!

சிறிலங்கா அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுக்கள் இன்று நடைபெற்றது.

இன்று இடம்பெற்ற பேச்சுக்களில் அரச தரப்பில் மூத்த அமைச்சர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர் கலந்து கொண்டனர்.

தேசியக் கூட்டமைப்பின் சார்பில், அதன் துணைத் தலைவர் மாவை சேனாதிராஜா, யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுமந்திரன் ஆகியோர் பங்குபற்றினர்.

சுமார் ஒரு மணி நேரமாக நடைபெற்ற இன்றைய சந்திப்பில், மீள்குடியேற்றம் நிவாரண உதவிகள் போன்ற விடயங்கள் ஆராயப்பட்டதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இரண்டு தரப்பினரும் தொடர்ச்சியாக சந்தித்து பேசுவதற்கு இணக்கம் இன்றைய சந்திப்பில் இணக்கம் காணப்பட்டிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் மூலம் அறியக்கூடியதாக இருக்கிறது.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் தற்போது தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் ஆட்கடத்தல்கள், கொலைகள், கொள்கைள்ள போன்ற வன்முறைச் சம்வங்கள் குறித்து இன்றைய சந்திப்பில் எதுவும் பேசப்படவில்லை எனத் தெரியவருகிறது.

யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் வன்முறை சம்வங்களுக்கு அரசாங்கம் பதில் கூற வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் கடுமையாக வலியுறுத்தி வந்த நிலையில் இன்றைய சந்திப்பு இடம்பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இன்றைய சந்திப்புக் குறித்து அரசாங்கமோ, தமிழ்த் தேசயிக் கூட்டமைப்போ ஊடகங்களுக்கு சந்திப்பு குறித்து கருத்து எதனையும் இதுவரை தெரிவிக்கவில்லை.

- தமிழ் கனேடியன் Jan 10, 2011 19:19:46 GMT

இந்திய தேர்தலை முன்னிட்டு இந்த நடவடிக்கைகள் அமையாவிட்டால் சரி. அல்லது இந்திய தேர்தலின் முன்னர் பேசப்படும் தீர்வு சட்டமாக்கப்பட்டு அமுல் நடத்தப்படல் வேண்டும். தமிழின படுகொலைகளை அரங்கேற்றிய இந்திய பயங்கரவாதிகளின் முகம் வெளிப்பட்டு வருவதால், தேர்தலை முன்னிட்டு சில அழுத்தங்களை அவர்கள் பிரயோகிப்பதும், அவர்களுக்கு உதவுவது போல சிங்கள அரசியல் பயங்கரவாதிகள் நடிப்பதும் வரலாறு கற்றுத்தந்த பாடங்களாகும்.

இது இறுதித் தீர்வு என்ற தோற்றத்தை சுரேஷ் பிரேமச்சந்திரன் ஏற்படுத்தாமல் இருக்கவேண்டும். சட்டத்தரணிகள், பல்கலைக்கழக மற்றும் ஏனைய புத்தி ஜீவிகள், போன்றவர்களுடன் விவாதிப்பதும் அவசியம். இந்திய அடிவருடித்தனத்தின் விளைவா அல்லது உண்மையான அக்கறையா இது என்பதை மக்கள் கூர்ந்து அவதானித்து வருகின்றனர்.

இது இறுதித் தீர்வு என்ற தோற்றத்தை சுரேஷ் பிரேமச்சந்திரன் ஏற்படுத்தாமல் இருக்கவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.