Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சரணடையும்போது இருந்த மனநிலையைச் சொல்ல முடியாது..!

Featured Replies

நிழலையும் நம்பாத தலமை எங்கனம் நம்பிக் கெட்டது? பலவீனமான நிலை ஏன் ஏற்பட்டது? இராணுவச் சம நிலை மாறி வருவதை ஏன் அவதானிக்கவில்லை? காலம் தாழ்த்தியது எதற்காக? ஒரு பலமான சர்வதேச பின் புலத்தில் போரிடும் அரசிற்க்கு அவகாசம் என்பது நிச்சயமான வெற்றியைத் தரும் என்று தெரிந்தும் காலம் தாழ்த்தியது யாரின் தவறு?

என்னால் அறிந்து கொள்ளப்பட்டவைகளில் சில...

இனியும் தனித்த போர் வெற்றியை தராது என்பதை புலிகள் புரிந்து கொண்டதினால் தான் எல்லாமே தவிர்க்கப்பட்டது... அதானால் தான் 2000 ம் ஆண்டுகளில் தனித்த போர் நிறுத்தம் 2009 ம் ஆண்டு வரை நடை பெற்றது...

இலங்கையில் அதுவரை நடந்தது போரே இல்லை... வெறும் ஆயுத போட்டியே என்பதுதான் தலைமையில் முக்கிய புரிதலாக இருந்தது... நாங்கள் ஒரு ஆயுதத்தை கொண்டு வாறதும்... அதுக்கு இராணுவம் அதை விட பெரிய ஆயுத்தை கொண்டு வாறதும் தான் போராக நடந்தது... அதை விட மிக முக்கியமாக ஆள் தொகையிலும் பணபலத்திலும் பக்க பலத்திலும் எங்களை விட பலமான இராணுவத்தை மனோபலம் மூலமும் தியாகங்கள் மூலமே நாங்கள் வெற்றி கொண்டு வந்து இருக்கின்றோம்... அந்த வெற்றிகளை தக்க வைப்பதுக்கு தனித்து நிண்டு ஏதும் செய்ய முடியாது என்பதை தலைமை நன்கு புரிந்து கொண்டதின் விளைவுதான் போராட்டம் சர்வதேச மயப்படுத்தலும் போர் நிறுத்தமும்...

தமிழீழம் அமைய வேண்டும் எண்றால் ஆதரவுகள் பல தேவை என்பதையும் புரிந்து கொண்டதின் விளைவுதான் சர்வதேசத்தை அனுசரித்து போதல்... இதனால் தான் சிங்களம் போரை மிக வேகமாக பல்வேறு காரணங்களை கொண்டு ஆரம்பித்தது...

புலிகள் அதில் இந்தியாவையும் அனுசரித்து போக விரும்பினர்...

இதில் போரை பற்றி விட்டு விடுவோம்... காரணம் புலிகள் போரை ஆரம்பித்து இருந்தால் இப்ப இருக்கும் மேற்க்கின் எதிர்ப்புக்கூட சிங்களத்துக்கு இல்லாமல் போய் இருக்கும்.. காரணம் அதை தான் சிங்களம் அதிகமாக எதிர்ப்பார்த்தது...

இதை நானாக புரிந்து கொள்ளவில்லை என்பதையும் சொல்லிக்கொள்கின்றேன்...

Edited by தயா

  • Replies 109
  • Views 8.9k
  • Created
  • Last Reply

[ஃஉஒடெ நமெ='ஈ.V.ஸசி' டிமெச்டம்ப்='1295789931' பொச்ட்='635467']

நீங்கள் ஊகத்தின் அடிப்படையில் எழுதினாலும் இது தான் நடந்துஇருக்க சந்தர்பம் இருக்கு ஆனால் கேபியின் ஆதிக்கத்தை விருப்பாத ஒரு பகுதி தலைவர் கூட ஒட்டிகொண்டு இருந்தது.

[/ஃஉஒடெ]

எல்லாருக்கும் ஒரு நோக்கம் இருக்கும் போது ஆதிக்கப் போட்டிகள் நிலவி இருக்க வேண்டியதில்லை.கேபி ஒரு ஆயுத முகவரே அவர் ஒரு போராளியாகப் போரிடவில்லை.அவரின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்ட படியால் தான் அவர் ஒதிக்கி இருக்க வைக்கப்பட்டார்.கேபியினூடாகவே இந்தியா வேலை செய்தது.இந்தியா மாத்தையாவையும் அவ்வாறு தான் பாவிக்க எத்தனித்தது.கேபி தாய்லாந்தில் எவர் தயவில் சுதந்திரமாக இயங்கினார்? அவரால் எலோரையும் ஒருங்கிணைக்க முடியாமல் போன போதே அவர் சிறிலங்காவிற்க்குச் சென்றார்.கேப்பி தாய்லாந்தில் இருந்து வெளியிட்ட அறிக்கைகள் எல்லாவற்றிலும் இந்தியாவின் தயவைக் கோரி நின்றார்.இந்தியாவுடன் தான் நடாத்திய பேச்சுக்கள் பற்றியோ அதில் இந்தியா தெருவித்த கருதுக்கள் பற்றியோ சரணடைவு நாடகத்தில் இந்தியா ஆற்றிய பங்கு பற்றியோ பின்னர் அமெரிக்கப் படை வருகையை இந்தியா தடுத்தது பற்றியோ கேப்பி எதுவும் கூறவில்லை ஏன்?

கேபி விலை( காசுக்காக) போனார் என்பது ப்பொய் ஆனால் கேபியும் ஏமற்றப்பட்டு தவறாக இந்தியாவால் வழிநடத்தப்பட்டு இருக்காலாம் ஆனால் உங்களுக்கு இருக்கும் க்கேள்வ்வியும் சந்தேகமும் தான் எனக்கும்

தலைவர் ஏமாந்தாரா அல்லது ஏமாற்றப்பட்டாரா? இல்லை தானாக நம்பிக்கையிழ்ந்தார்ரா? போராட்ட்டத்தின் மேல்?

சரி நடந்தது நடாந்த போல ஆகட்டும்,, கருணா தூரோகி , டக்கிளஸ் துரோகி, பிள்ளையாஅன் துரோகி, ஆனந்தா சங்கரி துரோக். கேபி துரோகி இவை எல்லாம் கண்ணால் கண்டதும் நடந்து கொண்டு இருப்பபையும் ஆனால் புலத்தில் ஒற்றுமை இல்லததுக்கு யார் காரணம்? இங்கு யார்ர் துரோகி???

Edited by I.V.Sasi

புலத்தில் எல்லோருக்கும் எல்லார் மீதும் சந்தேகம்.உங்களைப் போல் சிலர் கேபி ஏமாற்றினாரா? அப்படியாயின் அவர் சொல்வதி நாம் ஏன் கேட்க்க வேண்டும் என்று சிலருக்குச் சந்தேகம்.ருத்திர குமாரன் அமெரிக்கா சொல்வதைக் கேட்டு நடக்கிறார், அவர் மற்றவர்களைக் ஆலோசித்து நடப்பதில்லை, நாடு கடந்த அரசு மக்களைச் சாராமல் அரசுகளை அதிலும் அமெரிக்க அர்சைச் சார்ந்து இயங்க முற்படுகிறது என்று ஒரு சாரார் குற்றம் சாட்டுகின்றனர்.இன்னொருசாரார் தாங்கள் புலிகளின் சொத்துக்களை அவர்களிடம் மட்டுமே கொடுப்போம் என்று.இவ்வாறு எல்லமுமே வன்னியில் இருந்து நெறிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் அவர் தமக்குச் சரி எனப்பட்டதைச் செய்கின்றனர்.இதில் யார் சரி யார் பிழை என்பதை களத்தில் நின்றவர்கள் உண்மையில் யார் ஏமாற்றினர் என்று தெரிந்தவர்கள் நம்பகமானவர்கள் வந்து சொன்னால் தான் இந்தக் குழப்பம் தீரும்.அதுவரை பொறுத்து இருந்து அவர் அவர் மற்றவரைத் துரோகி என்று சொல்லாமல் அவர் அவர் பாதையில் இலக்கு நோக்கிப் பயணிப்பதே நல்லது.இங்கே ஒற்றுமை என்பது இலக்கு நோக்கியதாக இருந்தால் போதுமானது.இடையில் புகுந்து குழப்பும் நிர்மலன்,டிபிஎஸ் போன்றோரை இனம் கண்டால் போதுமானது.அறிவார்ந்த நடை முறை இவ்வாறாகத் தான் இருக்க முடியும்.

போர் வெற்றியைத் தராது என்று புரிந்து கொண்டிருந்ததாக இருந்தால் புலிகள் ஏன் இராஜபக்சவை ஆதரித்தனர்,இராணுவத் தாக்குதல்களை நடாத்தினர்? டோக்கியோ மானாட்டைப் புறக்கணித்தனர்? சர்வதேசம் என்பது எம்மைப் பொறுத்தவரை இந்தியா தான்.இந்தியா என்றுமே தமீழத்திற்க்கு ஆதாரவாகச் செயற்படப் போவதில்லை.புலிகள் என்றுமே தமீழீழக் கோரிக்கையைக் கைவிடப் போவதில்லை என்று இந்தியாவுக்கு நன்கு தெரியும்.இந்த நிலையில் புலிகள் எந்த வகையில் சர்வதேசம் தம்மை ஆதரிக்கும் என்று நம்பினார்கள்.புலிகள் தாம் தமீழக் கோரிக்கையைக் கைவிடுவதாக அறிவித்தால் அதனை ஏற்றுக் கொண்டு வேறு எதாவது செய்திருப்பார்கள்.ஆனால் பாலசிங்கம் நோர்வேயில் உள்ளக சுய நிர்னயம் என்றும் அதிகாரப் பரவலாக்கலை தாம் பரிசீலிக்கத் தயார் என்றும் அறிக்கையில் கைஒப்பம் இட்டதே , அவர் பேச்சுவார்த்தையில் இருந்தும் ஒதுக்கி வைக்கப்பட்டதற்கான் காரணம்.இதனையும் சர்வதேசம் அறியும்.இந்த நிலையில் எங்கனம் புலிகள் , சர்வதேசம் அதாவது இந்தியா எம்மை நம்பும் என்று நினைத்திருக்க முடியும்?

போரைத் தொடர்ந்தால் தானே இவ்வளவு அழிவும் வந்தாகச் சொல்லப்படுகிறது.இந்த அழிவை இந்தியா/சர்வதேசம் தடுக்கும் என்று புலிகள் எதிர்பார்த்தனரா?

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் தலைவரை எவரும் ஏமாற்றலீங்க. ஏனெனில் அவர்தானே எந்தவொருவருக்கும் ஏமாறாதவரும் அடிபணியாதவரும் ஆச்சே. அப்ப எப்படிங்க அவர் ஏமாறியிருப்பார்?

அவர் கவிண்டு விழுந்ததுக்கு எல்லாம் காரணம் தன்னை அவர் சுயமதிப்பீடு செய்யலீங்க.

உலகின் போக்கிற்கு ஏற்ப அவர் போராட்டத்தினை நடத்தலீங்க.

இந்தியாதான் உங்கள் தலைவர் கவிழக் காரணம் என்று சிலர் இங்கே கூவுகிறீர்கள்.

ஏனாம் அப்ப உங்கள் தலைவர் 2008 ஆம் ஆண்டு மாவீரர் நாள் உரையில் இந்தியாவை நோக்கி நேசக்கரம் நீட்டினார்?

உங்கள் தலைவரின் போதாக்காலம் மும்பாய் நகரம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் உலகம் அந்தப்பக்கம் தலைவைத்துப் படுத்ததும் இந்தியாவும் தனது நாட்டுப் பிரச்சினையில் மூழ்கியிருந்ததுமே காரணம்.

கிளிநொச்சி விழுந்தவுடனே தனது இருப்பு இனி கேள்விக்குறியாகிவிட்டது என்பது உங்கள் தலைவருக்கு நன்கு தெரிந்துவிட்டது.

ஆனால், புலத்தில் உள்ள விசிலடிச்சான் குஞ்சுகள்தான் அவர் ஏதோ தீர்க்கதரிசி மாதிரி இன்றும் போற்றிக்கொண்டிருக்கின்றீர்கள்.

நடக்கட்டும் நடக்கட்டும். உங்கள் தலைவர் சாகவில்லை. மக்களை அம்போ என்று விட்டுவிட்டு தானும் சில போராளிகளும் மக்களை அம்போ என்று விட்டுவிட்டு தென்னாபிரிக்காவில் பதுங்கியிருக்கின்றாரோ?

ஐந்தாம் கட்ட ஈழப் போருக்கு யாழ். களத்தில் வாய்வீச்சுக் காட்டுபவர்களையே தளபதிகளாக நியமித்து அவர்கள் எழுதுபவற்றை நம்பி வாசிக்கும் சில ஏமாறும் பேர்வழிகளை போராளிகளாகத் திரட்டிக்கொண்டு தென்னாபிரிக்காவில் பதுங்கியிருக்கின்றார் என்று கூறப்படுகின்ற தலைவரோடு கிளம்புங்கப்பா. (ஒரு விடயம். முதலில் வடக்கு கிழக்கில் உள்ள சனங்களிட்ட கேளுங்க இன்னும் சாகவும் சொத்துக்களை இழக்கவும் தயாரோ என்று)

Edited by nirmalan

சுயவிமரிசனம் என்றால் என்ன என்று தெரியாமால் எழுதிக் கொட்டி இருக்கீறீர்.உம்மை நீரே விமரிசிப்பது தான் சுய விமர்சினம். நீர் மற்றவனைப் பார்த்து விமர்சிப்பது உமது அரிப்பே தவிர சுய விமரிசனம் இல்லை. நீரும் நானும் பார்வையாளார்கள் தான் ,போராடுபவர்கள் தான் போராட்ட வழியைத் தீர்மானிக்க முடியும்.இதனைத் தான் நாங்கள் அன்றில் இருந்து இன்று வரை புலத்தில் இருந்து கூவிக் கொண்டிருக்கும் உங்களுக்குச் சொல்லிக் கொண்டு இருக்கிறோம்.

உலகின் போக்கு என்றால் என்ன்ன , அது யாரின் போக்கு.மேற்கா இந்தியாவா? சீனாவா? இவர்களின் போக்குக்களுக்கு போராட நாம் ஏன் உயிர் துறக்க வேண்டும்?

பிரச்சினை இருப்பவர்கள் தங்களின் பிரச்சினைக்குத் தீர்வாக உயிரிக் கொடுத்துப் போராடி தமது உரிமைகளைப் பெற்றது தான் உலகின் போக்கு.ஈழத் தமிழருக்கும் அது தான் போராட்ட வரலாறு.இன்னொருவனுக்காக எவனும் போராடுவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

புலத்தில் எல்லோருக்கும் எல்லார் மீதும் சந்தேகம்.உங்களைப் போல் சிலர் கேபி ஏமாற்றினாரா?

அப்படியாயின் அவர் சொல்வதி நாம் ஏன் கேட்க்க வேண்டும் என்று சிலருக்குச் சந்தேகம்.

ருத்திர குமாரன் அமெரிக்கா சொல்வதைக் கேட்டு நடக்கிறார், அவர் மற்றவர்களைக் ஆலோசித்து நடப்பதில்லை,

நாடு கடந்த அரசு மக்களைச் சாராமல் அரசுகளை அதிலும் அமெரிக்க அர்சைச் சார்ந்து இயங்க முற்படுகிறது என்று ஒரு சாரார் குற்றம் சாட்டுகின்றனர்.இன்னொருசாரார் தாங்கள் புலிகளின் சொத்துக்களை அவர்களிடம் மட்டுமே கொடுப்போம் என்று.

இவ்வாறு எல்லமுமே வன்னியில் இருந்து நெறிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் அவர் தமக்குச் சரி எனப்பட்டதைச் செய்கின்றனர்.

இதில் யார் சரி யார் பிழை என்பதை களத்தில் நின்றவர்கள் உண்மையில் யார் ஏமாற்றினர் என்று தெரிந்தவர்கள் நம்பகமானவர்கள் வந்து சொன்னால் தான் இந்தக் குழப்பம் தீரும்.

அதுவரை பொறுத்து இருந்து அவர் அவர் மற்றவரைத் துரோகி என்று சொல்லாமல் அவர் அவர் பாதையில் இலக்கு நோக்கிப் பயணிப்பதே நல்லது.

இங்கே ஒற்றுமை என்பது இலக்கு நோக்கியதாக இருந்தால் போதுமானது.

இடையில் புகுந்து குழப்பும் நிர்மலன்,டிபிஎஸ் போன்றோரை இனம் கண்டால் போதுமானது.

அறிவார்ந்த நடை முறை இவ்வாறாகத் தான் இருக்க முடியும்.

இவற்றிற்கான தெளிவுக்கு முன்னதாரணமாக போராட்டத்தை புலிகளுக்குள் சிலர் ஒழித்துவிளையாடுவதை புரிந்து கொள்ளணும். போராட்டத்தில் புலிகளின் பங்கு முக்கியமானதுதான் ஆனால் புலிகளே போராட்டமல்ல.

அதாவது புலிகள் இல்லையென்றாலும் தலைவர் இல்லையென்றாலும் போராட்டம் தனது குறிக்கோளை நோக்கி பாயணும்.

இதை ஏற்காதவருக்கே சிக்கல் இங்கு. தலைவர் தான் மக்களுக்குள் நிற்கவேணும் என்ற முடிவை எடுத்திருப்பாராயின் மக்கள் தமது குறிக்கோளை விட்டுவிட்டு இது போல் அடிபடுவர் என நினைத்திருக்கமாட்டார். எனவே இந்த அவரது பார்வையை புரிந்து கொள்ளாதவர் இன்னும் புலிகள் என்பதில்தான் சிக்கல் இருக்கிறது

தனிப்பட்ட என்னால் மக்களவையுடனும் கே.பியினுடைய ஆட்களுடனும் தாயகத்து மக்களுடனும் தமிழக உறவுகளுடனும் ரிசிசியுடனும் இளைஞர் அணியுடனும் நாடுகடந்தஅரசுடனும் சேர்ந்து பேசி ஒருபாதையில் வர முடியுமெனின் இவர்களுக்கு ஏன் முடியாது. எனவே சிக்கல் இவர்களாக உருவாக்குவது தான். நித்திரை கொள்பவனை எழுப்பலாம். நடிப்பவனை.....?

உங்களின் தலைவரை எவரும் ஏமாற்றலீங்க. ஏனெனில் அவர்தானே எந்தவொருவருக்கும் ஏமாறாதவரும் அடிபணியாதவரும் ஆச்சே. அப்ப எப்படிங்க அவர் ஏமாறியிருப்பார்? அவர் கவிண்டு விழுந்ததுக்கு எல்லாம் காரணம் தன்னை அவர் சுயமதிப்பீடு செய்யலீங்க. உலகின் போக்கிற்கு ஏற்ப அவர் போராட்டத்தினை நடத்தலீங்க. இந்தியாதான் உங்கள் தலைவர் கவிழக் காரணம் என்று சிலர் இங்கே கூவுகிறீர்கள். ஏனாம் அப்ப உங்கள் தலைவர் 2008 ஆம் ஆண்டு மாவீரர் நாள் உரையில் இந்தியாவை நோக்கி நேசக்கரம் நீட்டினார்?

உங்கள் தலைவரின் போதாக்காலம் மும்பாய் நகரம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் உலகம் அந்தப்பக்கம் தலைவைத்துப் படுத்ததும் இந்தியாவும் தனது நாட்டுப் பிரச்சினையில் மூழ்கியிருந்ததுமே காரணம்.

கிளிநொச்சி விழுந்தவுடனே தெரிந்துவிட்டது தனது இருப்பு இனி கேள்விக்குறியாகிவிட்டது என்பது உங்கள் தலைவருக்கு நன்கு தெரிந்துவிட்டது.

அவருக்கு புரியல என்கிறீர்கள்

புரிந்தது என்கிறீர்கள்

உங்கட காய்ச்சலுக்கு மருந்து இருக்குங்கோ..

தொடர்ந்து எழுதுங்கோ

முத்தி தானாக முட்டிமோதி முடியும்.

போர் வெற்றியைத் தராது என்று புரிந்து கொண்டிருந்ததாக இருந்தால் புலிகள் ஏன் இராஜபக்சவை ஆதரித்தனர்,இராணுவத் தாக்குதல்களை நடாத்தினர்? டோக்கியோ மானாட்டைப் புறக்கணித்தனர்? சர்வதேசம் என்பது எம்மைப் பொறுத்தவரை இந்தியா தான்.இந்தியா என்றுமே தமீழத்திற்க்கு ஆதாரவாகச் செயற்படப் போவதில்லை.புலிகள் என்றுமே தமீழீழக் கோரிக்கையைக் கைவிடப் போவதில்லை என்று இந்தியாவுக்கு நன்கு தெரியும்.இந்த நிலையில் புலிகள் எந்த வகையில் சர்வதேசம் தம்மை ஆதரிக்கும் என்று நம்பினார்கள்.புலிகள் தாம் தமீழக் கோரிக்கையைக் கைவிடுவதாக அறிவித்தால் அதனை ஏற்றுக் கொண்டு வேறு எதாவது செய்திருப்பார்கள்.ஆனால் பாலசிங்கம் நோர்வேயில் உள்ளக சுய நிர்னயம் என்றும் அதிகாரப் பரவலாக்கலை தாம் பரிசீலிக்கத் தயார் என்றும் அறிக்கையில் கைஒப்பம் இட்டதே , அவர் பேச்சுவார்த்தையில் இருந்தும் ஒதுக்கி வைக்கப்பட்டதற்கான் காரணம்.இதனையும் சர்வதேசம் அறியும்.இந்த நிலையில் எங்கனம் புலிகள் , சர்வதேசம் அதாவது இந்தியா எம்மை நம்பும் என்று நினைத்திருக்க முடியும்?

போரைத் தொடர்ந்தால் தானே இவ்வளவு அழிவும் வந்தாகச் சொல்லப்படுகிறது.இந்த அழிவை இந்தியா/சர்வதேசம் தடுக்கும் என்று புலிகள் எதிர்பார்த்தனரா?

போரை புலிகள் ஆரம்பிக்க இல்லை... இலங்கை அரசுதான் ஆரம்பித்தது... புலிகளை வலுச்சண்டைக்கு இழுப்பதும் அதுக்கு காரணம் தேடுவதுமே அரசின் குறியாக இருந்தது....

2005 ம் ஆண்டின் இறுதியில் அரசியல் ரீதியில் புலிகள் பலமாகவே இருந்தனர்... மகிந்தா ஆட்ச்சிக்கு வந்த போது பலமாக தான் இருந்தார்கள்... 2006 ம் ஆண்டின் ஆரம்பத்தில் புலிகள் தமிழீழ பிரகடனம் செய்வார்கள் எனும் நிலை கூட இருந்தது....! வைப்புகள், சொத்துக்கள், வாக்கெடுப்பு, அங்கீகாரம் கூட சாத்தியமாக இருந்தது... ஏன் தலைவர் சாதகமான முடிவை எடுக்கவில்லை எண்று யாருக்கும் தெரியவில்லை....

ஆனால் 2007 ம் ஆண்டு அந்த நிலை இருக்க இல்லை... எல்லாம் தலைகீழாக மாறி இருந்தது... இடையில் என்ன நடந்தது என்ன காரணம் என்பது எல்லாம் தெரியவில்லை...!

2005 - 2007 க்கு இடைப்பட யாழ்களத்தில் வந்த செய்திகளை படிச்சு பாருங்கோ ஏதாவது புரிகிறதா எண்று...

கீழை இருப்பது எனது அனுமானம் மட்டுமே... உறுதியாக அதுதான் காரணமோ தெரியவில்லை..

போர் ஆய்வு செய்வதில் எனக்கு உடன்பாடுகள் இல்லை எண்டாலும் இன்னும் ஒருவிசயத்தை சொல்ல விரும்புகின்றேன்... ஜயசிக்குறுவை போல இந்த முன்னேற்றத்தையும் தேக்கி ஓரிரு வருடங்கள் நிறுத்திவிட்டால் , ஆயுத படைபலத்தில் இலங்கையால் ஏதும் செய்ய முடியாத நிலையில் இலங்கை அரசின் மேல் நலன்கள் சார்ந்து நம்பிக்கையை சர்வதேசம் வைக்க காரணமும் இல்லை... ஆகவே அரசியல் ஆதரவு சம நிலை கூட மாறும் சந்தர்ப்பம் வந்திருக்கும்...

ஆனால் இந்தியாவால் இரஸ்யாவில் இருந்து தருவிக்க பட்ட வாயு எரிபொருள் குண்டுகள், கொத்துக்குண்டுகள் அதை காவிவந்து துல்லியமாக தாக்கும் MIG 29 விமானம் , வெள்ளை பொஸ்பரஸ் குண்டுகள் , இரசாயண குண்டுகள், அதை செலுத்தும் T-72 (அர்ஜூன் வகை ) தாங்கிகள் எல்லாம் இராணுவ சம நிலையை குழப்பி இருக்கலாம்.... அதோடு அவைகளின் இணைப்பாளராக இந்திய மலையாளி சதீஸ் நம்பியாரும் இருந்தால்...

இராஜதந்திர வகையில் சுரேஸ் நம்பியார், மேனன் , நாராயணன் என்பவர்கள் இலங்கைக்கு எதிரான அழுத்தங்களை முகம் கொடுத்தனர்...

Edited by தயா

//இதைப் பற்றி இஞ்ச இப்ப கதைக்க விரும்பேல்ல. அதுக்கு காலம் இருக்கு. அல்லது அதை நான் கதைக்க விரும்பேல்ல. அதில கன பக்கங்களிருக்கு. பல காரணங்களும் அந்தக் காரணங்களோட தொடர்பான கன தரப்பும் இருக்கு. எல்லாத்தையும் சரியாக அறியாமல் கதைக்கவும் முடியாது.

ஆனால், ஏதோ நடந்திருக்கு எண்டது மட்டும் உண்மை. இல்லையெண்டால், இந்த பெரிய அமைப்பும் போராட்டமும் இப்பிடிச் சட்டெண்டு முடிஞ்சு போகுமா?

இதையெல்லாம் ஆரோ ஒரு நாளைக்கு வெளியில சொல்லத்தான் போகினம். சிலர் – பல விசயங்களையும் அறிஞ்ச ஆட்கள் - இதையெல்லாம் எழுதக் கூடும்//

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களின் தலைவரை எவரும் ஏமாற்றலீங்க. ஏனெனில் அவர்தானே எந்தவொருவருக்கும் ஏமாறாதவரும் அடிபணியாதவரும் ஆச்சே. அப்ப எப்படிங்க அவர் ஏமாறியிருப்பார்?

அவர் கவிண்டு விழுந்ததுக்கு எல்லாம் காரணம் தன்னை அவர் சுயமதிப்பீடு செய்யலீங்க.

உலகின் போக்கிற்கு ஏற்ப அவர் போராட்டத்தினை நடத்தலீங்க.

இந்தியாதான் உங்கள் தலைவர் கவிழக் காரணம் என்று சிலர் இங்கே கூவுகிறீர்கள்.

ஏனாம் அப்ப உங்கள் தலைவர் 2008 ஆம் ஆண்டு மாவீரர் நாள் உரையில் இந்தியாவை நோக்கி நேசக்கரம் நீட்டினார்?

உங்கள் தலைவரின் போதாக்காலம் மும்பாய் நகரம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் உலகம் அந்தப்பக்கம் தலைவைத்துப் படுத்ததும் இந்தியாவும் தனது நாட்டுப் பிரச்சினையில் மூழ்கியிருந்ததுமே காரணம்.

கிளிநொச்சி விழுந்தவுடனே தனது இருப்பு இனி கேள்விக்குறியாகிவிட்டது என்பது உங்கள் தலைவருக்கு நன்கு தெரிந்துவிட்டது.

ஆனால், புலத்தில் உள்ள விசிலடிச்சான் குஞ்சுகள்தான் அவர் ஏதோ தீர்க்கதரிசி மாதிரி இன்றும் போற்றிக்கொண்டிருக்கின்றீர்கள்.

நடக்கட்டும் நடக்கட்டும். உங்கள் தலைவர் சாகவில்லை. மக்களை அம்போ என்று விட்டுவிட்டு தானும் சில போராளிகளும் மக்களை அம்போ என்று விட்டுவிட்டு தென்னாபிரிக்காவில் பதுங்கியிருக்கின்றாரோ?

ஐந்தாம் கட்ட ஈழப் போருக்கு யாழ். களத்தில் வாய்வீச்சுக் காட்டுபவர்களையே தளபதிகளாக நியமித்து அவர்கள் எழுதுபவற்றை நம்பி வாசிக்கும் சில ஏமாறும் பேர்வழிகளை போராளிகளாகத் திரட்டிக்கொண்டு தென்னாபிரிக்காவில் பதுங்கியிருக்கின்றார் என்று கூறப்படுகின்ற தலைவரோடு கிளம்புங்கப்பா. (ஒரு விடயம். முதலில் வடக்கு கிழக்கில் உள்ள சனங்களிட்ட கேளுங்க இன்னும் சாகவும் சொத்துக்களை இழக்கவும் தயாரோ என்று)

நிர்மலா! பத்துவரியாவது புலியைப் பற்றி குதறிப் பதிவிடாவிட்டால், "உமது உணவு செரிமானமாகாதிருக்க கடவாய்!" என்று உம்மை தாடிமாம சபித்துவைத்து விட்டான?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.