Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் தொடர்பான சாதிப் பூச்சாண்டி அல்லது புரளிகள்

Featured Replies

கீற்று இணையத்தளத்தில் மினர்வாவால் எழுதப்பட்ட கட்டுரை புதிய உரையாடல்களை முன்னெடுப்பதாக அமைந்திருப்பது குறித்து மகிழ்ச்சி. விடுதலைப் புலிகளை பாசிசவாதிகள், சாதி வெறியர்கள், பிள்ளை பிடிகாரர்கள், பயங்கரவாதிகள் என்றெல்லாம் சித்தரிப்பதில் புலியெதிர்ப்பாளர்கள் வெகுவாக முயன்று அதில் ஓரளவு வெற்றியுங் கண்டிருக்கும் இக்காலகட்டத்தில் இத்தகைய உரையாடல்கள் அவசியமாகின்றன. புலிகள் தங்கள் மீதான விமர்சனங்களை எதேச்சாதிகாரப் போக்குடன் எதிர்கொள்கிறார்கள் என்ற குற்றச்சாட்டினை முன்வைத்து புலியெதிர்ப்புத் திருவிழாவை கோலாகலமாகக் கொண்டாடி வந்த புலம்பெயர்ந்த, பெயராத “அறிவுஜீவிகள்” புலிகளின் வீழ்ச்சியுடன் அதை நிறுத்திக்கொண்டிருக்க வேண்டும். ஆனால், ”ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்கமாட்டா”என்பதற்கிணங்க, அவர்களால் திடுதிப்பென்று திரையை இழுத்து மூடிவிட்டுப் போகமுடியவில்லை. ஆட்களற்ற வெட்டவெளியைப் பார்த்து தொடர்பேச்சை நிகழ்த்திக்கொண்டிருப்பதன் பின்னாலுள்ள வன்மத்தை, காழ்ப்புணர்ச்சியை, குரோதத்தை என்னவென்பது...? மணிமேகலையின் அட்சயபாத்திரம்போலும் அள்ள அள்ளக் குறையாத கோபம் அதுவெனக் கொள்ளலாகுமா? மக்களை அழித்து, அவர்தம் வாழ்வாதாரங்களை அழித்து, சிறைப்படுத்தி சித்திரவதைப்படுத்தியும் தீர்ந்துவிடாத இனவெறியால் உன்மத்தம் கொண்டு மாவீரர்களின் கல்லறைகளைச் சிதைத்து வேரும் இருக்கலாகாதென ஆழ உழுது கல்லி எறிந்த பேரினவாதிகளுக்கும் இவர்களுக்கும் இடையில் என்ன பெரிய வித்தியாசம் இருந்துவிடப்போகிறது?

புலிகள் போரிட்டார்கள். அவர்களே மாண்டுபோனார்கள். வெளியிலிருந்தபடி மக்களுக்காகப் பேசிய, “புலிகளிடமிருந்து மக்களைக் காப்பாற்றுங்கள்“ என்று பதறிய அந்த உதடுகளால் அதே வீச்சோடு இலங்கை அரசாங்கத்தைப் பார்த்து அந்தக் கேள்விகளைக் கேட்க முடியாமற் போனது ஏன்? ஆக, அதிகாரங்களை எதிர்ப்பது என்பது, “புலியதிகாரத்தை எதிர்ப்பது“என்பதனோடு முடிந்துபோகிறதா?

புலிகள் வன்னிப் பகுதியைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தபோது (இங்கு கட்டுப்பாடு என்பதற்கு,இராணுவ மயப்படுத்தலிருந்து விலக்கி எனப் பொருள் கொள்க।) பல தடவை நான் அங்கு போயிருக்கிறேன். நள்ளிரவிலும் பெண்கள் பயமற்றுத் திரியக்கூடிய பாதுகாப்பான ஒரு பிரதேசமாக அந்த நிலம் ஒளிர்ந்துகொண்டிருந்தது.அங்கு சாதியின் அடையாளங்கள் எதையும் நாங்கள் பார்க்கவில்லை. இயக்கத்துக்குள் இருந்த இதர போராளிகள் என்ன சாதியினர் என்பதைப் பற்றி யாரும் கேட்பதுகூட குற்றமாகக் கருதப்பட்டது. எனக்குத் தெரிந்த (சாதியும் தெரிந்த) பல போராளிகள் இருந்தார்கள். அவர்களில் அநேகமானோர் இறுதிப் போரில் மாவீரர்கள் ஆகிவிட்டார்கள். அவர்களுடைய வாழ்வு உன்னதமானது. அவர்களுக்கிடையில் இருந்த பந்தம் கண்ணீரை வரவழைக்க வைக்குமளவிற்கு நெருக்கமானது. தோழர்களை, தோழியரை தாக்க சீறிப் பாய்ந்து வந்த துப்பாக்கிக் குண்டை கணமும் தாமதியாது தங்கள் மார்பில் ஏந்தி மடிந்த துாய்மையான போராளிகள் வாழ்ந்த புனிதமான மண் அது. இவர்கள் தமிழ் திரைப்படங்களில் காட்டப்படுவதுபோன்ற, கண்ணீரை பிழிந்து கறக்க எத்தனிக்கும் பொய்மைகளல்ல. இதை நான் எவருடைய மனமாற்றத்தைக் கருதியும் எழுதவில்லை. நண்பர்களோடு ஒரு அறைக்குள் இருந்து உரையாடிக்கொண்டிருக்கும்போது, “கிரனைட்“இன் “கிளிப்“தற்செயலாக விடுபட்டுப் போக, அந்தக் கணத்தின் பயங்கரத்தை உணர்ந்து சடுதியான முடிவெடுத்து அதைத் தன் வயிற்றுப் பகுதியுள் வைத்து அதன் மீது கவிழ்ந்து வெடித்துத் துண்டு துண்டான அன்பு என்ற போராளி போன்ற பல்லாயிரம் போராளிகளால் ஆன அமைப்பு அது. அத்தகைய அன்பாளர்களுக்கிடையில் சாதி வேறுபாடுகள் நிலவியது என்பது நகைப்பிற்குரியது. இயக்கத்தில் பெரிய பொறுப்புகளை வகித்த தமிழ்ச்செல்வன், அவரது அண்ணா மூர்த்தி இவர்கள் எல்லாம் வெள்ளாளர்களா?

மேலும், வெள்ளாளர்கள் எல்லோரும் புலியெதிர்ப்பாளர்கள் அல்ல. புலியெதிர்ப்பாளர்கள் அனைவரும் தலித்துகளும் அல்ல என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். மீனவ சமூகத்தைச் சேர்ந்தவராக தலைவர் பிரபாகரன் இருந்தபோதிலும், இயக்கத்தில் விரல்வி்ட்டு எண்ணக்கூடிய அளவு பிராமண சமூகத்தினரும் இருந்தார்கள். வெள்ளாளர்கள் இருந்தார்கள். இந்தச் சாதி என்ற மண்ணாங்கட்டிச் சீரழிவு கீழிறக்கிச் சொல்கிற பள்ளரும் பறையரும் சலவைத் தொழில் செய்கிறரும், நாவித சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இருந்தார்கள். மலையகத்தைச் சேர்ந்தவர்களும் முஸ்லிம்களும் கூட இருந்ததாகச் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

“சோஸ்“என்று அழைக்கப்பட்ட, இயக்க உறுப்பினர்கள் சென்று உணவருந்திய, தொலைதுார ஊர்களிலிருந்து வந்த போராளிகள் தமது வீடுகள் போல சென்று புழங்கும் பல வீடுகளில் யாரும் சாதி பாராட்டியதாக நான் அறியேன். “யார் யாரோ பெற்றெடுத்த பிள்ளைகள்“ஒரே வீட்டுக்குள் படுத்து உறங்கிக் கொண்டிருக்க, வெளியில் இருளில் இராணுவ அசுமாத்தங்கள் தென்படுகிறதாவென காவலுக்கு இருந்த யாரோ ஒருவனின் தாயை நான் அறிவேன். அந்த இரவுகள் சாதியால் களங்கப்படுத்தப்பட முடியாதன.

அதிகம் போவானேன்? எங்கள் வீடு வெள்ளாளர், கோவியர், சாண்டார், பறையர் என பல்சாதியினரும் மணம்முடித்த வீடுதான். திண்ணியமும் வெண்மணியும் அங்கு இல்லை. இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் மனோபாவத்தை விடுதலைப் போராட்டமன்றி வேறேது அளித்திருக்க இயலும்?

”பறைச்சி ஆவதேதடா... பணத்தி ஆவதேதடா

இறைச்சி தோல் எலும்பினும் இலக்கம் இட்டிருக்குதோ...”

என்று மேடைகளில் மேற்கோள் காட்டிக் கூவிவிட்டு கீழிறங்கி சாதித் துண்டைத் தோளில் போட்டு நடக்கும் பொய்மையாளர்கள் அல்ல விடுதலைப் புலிகள். கூட்டு வல்லாதிக்கச் சதிகளால் அவர்கள் புதையுண்டு போயிருக்கலாம். பல்லாண்டு கழிந்த பின்பு மண்ணை முட்டி மோதி ஒரு முளை தள்ளும். சா விழுந்த முற்றங்களில் மீண்டும் பூ மலரும். மறுபடியும் எங்கள் மண்ணில் மாவீரர்கள் கல்லறைகளை எழுப்பி வணங்குவோம். கோயில்கள் என்று தனியாக வேண்டியதில்லை.

http://tamilnathy.blogspot.com/2011/01/blog-post.html

கீற்று இணையத்தளத்தில் மினர்வாவால் எழுதப்பட்ட கட்டுரை

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=12472&Itemid=263

ஆகா ஆட்டை கடிச்சி மாட்டைகடிச்சி கடைசியில அவங்க சாதியை பற்றி பேசுறாங்க இவங்க பேசுறாங்க என்டு சொல்லி சொல்லி நீயே அதை செய்யிறியேடா வென்னை.. எத்தினை பிரபாகரன் வந்தாலும் தமிழினம் உருப்படாது உருப்படாது உருப்படாது, இப்படியே பேசி பேசி அழியப்போறம் பார்ங்கடா நாய்***ளே.

http://tamilnathy.bl.../blog-post.html

கீற்று இணையத்தளத்தில் மினர்வாவால் எழுதப்பட்ட கட்டுரை

http://www.keetru.co...2472&Itemid=263

வற் த கெல் திஸ் இஸ்? எங்களுக்கு சாதியும் தெரியாது ஒரு மண்ணும் தெரியாது..அதெல்லாம் மக்கிப்போய் பலகாலம் ஆச்சு..அதுவளை கிண்டி கிளறி நாத்தத்தை மணந்து அந்தமணத்தில சுய இன்பம்காணுதுவள் சில நன்னாரியள்..மூதேவிகள் வெளிநாடுகளுக்கு வந்தும் மற்றைய இனங்களைப் பார்த்து திருந்தி, நாகரிக மனிதராக, பண்பான மனிதராக வாழ்கையில் முன்னேற யோசிக்கவில்லை....தமிழினம் தமிழர்களால் வீழவில்லை....... தமிழர்களால் வீழ்த்தப்பட்டது என்பதே நியம ஆகும்............

இங்கு பிறந்த நம் பிள்ளைகளால் இதற்கு ஒரு முடிவு கட்டப்படும் . இந்தப் பெருசுகளின் எலும்புகள் மயானத்தில் அடுக்கப்பட்டிருக்கும்போது.

  • கருத்துக்கள உறவுகள்

என்று மேடைகளில் மேற்கோள் காட்டிக் கூவிவிட்டு கீழிறங்கி சாதித் துண்டைத் தோளில் போட்டு நடக்கும் பொய்மையாளர்கள் அல்ல விடுதலைப் புலிகள். கூட்டு வல்லாதிக்கச் சதிகளால் அவர்கள் புதையுண்டு போயிருக்கலாம். பல்லாண்டு கழிந்த பின்பு மண்ணை முட்டி மோதி ஒரு முளை தள்ளும். சா விழுந்த முற்றங்களில் மீண்டும் பூ மலரும். மறுபடியும் எங்கள் மண்ணில் மாவீரர்கள் கல்லறைகளை எழுப்பி வணங்குவோம். கோயில்கள் என்று தனியாக வேண்டியதில்லை.

யாழ்களத்தில், புலிகள் தானாம் எல்லாப்பிரச்சனைக்கும் காரணம் என முழங்க ஒரு கூட்டமே உள்ளது. இனி அவர்கள் கட்டி எழுப்பிய சமுதாயத்தை கனவில் கூட தமிழர்கள் காணமாட்டார்கள் என்பதை 2009 க்கு பின் கண்கூடாக கண்டிருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா ஆட்டை கடிச்சி மாட்டைகடிச்சி கடைசியில அவங்க சாதியை பற்றி பேசுறாங்க இவங்க பேசுறாங்க என்டு சொல்லி சொல்லி நீயே அதை செய்யிறியேடா வென்னை.. எத்தினை பிரபாகரன் வந்தாலும் தமிழினம் உருப்படாது உருப்படாது உருப்படாது, இப்படியே பேசி பேசி அழியப்போறம் பார்ங்கடா நாய்***ளே.

இதைத்தான் நானும் புரிந்துகொண்டேன் இந்த கட்டுரையிலுருந்து.... :(

புலிகள் காலத்தில் சாதி ஒழிந்தது என்பது பொய் ஆனால் பகமை இல்லாத ஒரு சுமுகமான உறவு மக்களிடையே இருந்தது ஆனால் புலிகள் அமைப்புக்குள்ளே சாதி வேறுபாடு இல்லை என்பது உண்மை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.