Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிகிச்சையின் போது தவறுதலாக மார்பு அகற்றப்பட்ட கொடுமை...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மார்பின் விலை 42,150 டொலர்!

வியாழன், 20 ஜனவரி 2011 14:23

ஒரு பெண்ணின் முலை 42,150 அமெரிக்க டொலர் வரை விலை போய் உள்ளது. மலேசியாவை சேர்ந்த 56 வயதுப் பெண் ரி.செல்வராணி.

இரு பிள்ளைகளில் தாய். இவர் 2005 ஆம் ஆண்டு ஒரு வகையான வயிற்று நோயால் பீடிக்கப்பட்டு உள்ளார். Raja Permaisuri Bainun hospital என்கிற வைத்தியசாலையில் சிகிச்சை பெறச் சென்று உள்ளார்.

இவருக்கு மார்பு புற்றுநோய் என்று சொல்லி இருக்கின்றனர். ஒரு மார்பகத்தை சத்திர சிகிச்சை மூலம் வெட்டி அகற்றி விட்டனர்.

ஆனால் இவருக்கு உண்மையில் மார்புப் புற்று நோய் கிடையாது என்று பின்னர் மருத்துவ நிபுணர் ஒருவர் உறுதிப்படுத்தினார்.

இந்நிலையில் இப்பெண் Raja Permaisuri Bainun வைத்தியசாலையின் முகாமையாளரான Dr L. Vasu Pillai , மலேசிய அரசு, மலேசியாவின் சுகாதார அமைச்சர் ஆகியோருக்கு எதிராக 2008 ஆம் ஆண்டு வழக்குத் தாக்கல் செய்தார்.

அந்நாட்டு மேல்நீதிமன்றம் ஒன்றில் இவ்வழக்கு சில நாட்களுக்கு முன் இடம்பெற்றது.

வழக்காளி மற்றும் எதிராளி தரப்பினர் இணக்கப்பாட்டுக்கு வந்தனர். வைத்தியசாலையின் முகாமையாளர் 42,150 டொலர் நட்டஈடு கொடுக்க சம்மதித்தார். இதற்கு செல்வராணியும் இணங்கினார்.

tamilcnn.com

Edited by இணையவன்
அநாகரீகமான சொல் மாற்றப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

வைத்தியத்துறையில் முலை என்ற பதத்தை பாவிப்பது குறைவு. மார்பகம் அல்லது முலைச்சுரப்பி என்ற பதம் அதிகம் பாவிக்கப்படும். முலையூட்டிகள் என்ற பதம் கூட பாலூட்டிகள் என்ற பதத்தால் பிரதியீடு செய்யப்படுவதும் அதிகம்.

முலைச்சுரப்பிகளை செய்திக் கவர்ச்சிக்காக.. இப்படி தலைப்பிடுவதை ஊடகங்கள் தவிர்த்துக் கொள்வது அவசியம்.

கெளரவம் மிக்க பதங்களை பயன்படுத்துவது உடலறுப்புக்களை வைத்து பால் பிரிவினரை ஏளனம் செய்வதை தடுக்க உதவும்..!

அண்மைய காலமாக இணையத் தமிழ் ஊடகங்களில் பெண்கள் பற்றிய செய்திகள் கிலுகிலுப்புப் பூட்டும் செய்திகள் வடிவில் இடம்பெறுவது வருத்தமளிக்கிறது.

ஒரு பக்கம் எமது இனத்தின் விலைமதிப்பற்ற சொத்துக்களான பெண்களை சிங்களம் கருவறுத்து கொலை செய்து போட்டு வரும் நிலையில் இன்னொரு பக்கம் பெண்களை இழக்காரமாகக் காட்டி அவர்களை போகப் பொருளாக விமர்சிப்பதுவும் நடந்து வருகிறது.

பெண்கள் பற்றிய செய்திகளை அவர்கள் விடும் தவறுகளை சமூகச் சீர்திருத்தம் வேண்டி வெளிக்கொணருவதிலும் ஒரு கெளரவ நிலை அவசியம். குறிப்பாக இப்படியான மருத்துவம் சார்ந்த செய்திகளிலாவது கொஞ்சம் கெளரவ சொற்பதங்களைப் பாவிப்பது அழகு.

முலை என்றால் கெளரவமான பதம் இல்லையா என்ற கேள்வியை விட அந்தப் பதத்திற்கு சமூகத்தில் உள்ள நிலை குறித்து பரிசீலித்துக் கொண்டு அதன் பின்னர் தான் இப்படியான விதண்டாவாதங்களில் இறங்க வேண்டும்.

ஆங்கிலத்திலும் கூட breasts or Mammary glands போன்ற பதங்கள் Tits என்ற பதத்தை விட கெளரவமாக நோக்கப்படுகின்றன.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"முலை"எனும் சொல் பேச்சுதமிழாக இருந்திருக்கலாம் அல்லது கிராமியமக்களால் அதிகமாக பேசப்பட்டிருக்கலாம்.

அதற்க்காக அச்சொல்லை கவர்ச்சிசொல்லாகவோ....கௌரவத்தை பாதிக்கும் சொல்லாகவோ...ஏளனம் செய்யும் சொல்லாகவோ...அல்லது கிளுகிளுப்பூட்டும் சொல்லாகவோ கணிப்பிடக்கூடாது. சில ஊர்களில் பெண்களின் மார்பகத்தை அல்லது முலைச்சுரப்பிகளை "பால்ச்சி"என்றும் சொல்வார்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்

"முலை"எனும் சொல் பேச்சுதமிழாக இருந்திருக்கலாம் அல்லது கிராமியமக்களால் அதிகமாக பேசப்பட்டிருக்கலாம்.

அதற்க்காக அச்சொல்லை கவர்ச்சிசொல்லாகவோ....கௌரவத்தை பாதிக்கும் சொல்லாகவோ...ஏளனம் செய்யும் சொல்லாகவோ...அல்லது கிளுகிளுப்பூட்டும் சொல்லாகவோ கணிப்பிடக்கூடாது. சில ஊர்களில் பெண்களின் மார்பகத்தை அல்லது முலைச்சுரப்பிகளை "பால்ச்சி"என்றும் சொல்வார்கள். :)

நான் நினைக்கிறேன் முலை என்ற பதத்தை மூன்றாம் தர எழுத்துக்களிலும் பாவிப்பதால் அதற்கு அப்படி ஒரு நிலை ஏற்பட்டிருக்கலாம். ஆகவே அதற்குப் பதிலாக உயர் தகமை உடைய அதிகம் பொருள் உணர்த்தக் கூடிய கலைச் சொற்களை இதில் பாவிப்பது குறிப்பாக செய்திகளில் பாவிப்பது அழகு என்று நினைக்கிறேன்.

பால்ச்சி மட்டுமில்ல.. வேறு பல கேவலமான சொற்களும் இருக்கின்றன. அது இடத்துக்கு இடம் மாறுபடும். எனக்கு அவற்றை உச்சரிப்பதில் உடன்பாடில்லை. நான் அவற்றை கேள்விப்பட்டிருக்கிறேன்.. ஆனால் உச்சரிப்பதில்லை..! :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பால்ச்சி என்பது கேவலமான சொல் அல்ல. :D

  • கருத்துக்கள உறவுகள்

பால்ச்சி என்பது கேவலமான சொல் அல்ல. :D

இது தமிழில் குழூக்குறி என அழைக்கப்படும். ஒரு குழுவினர் உச்சரிக்கும் இவை பொதுவான பதம் என்பதாக கொள்ளத் தக்கனவா என்பது பற்றி தமிழிலக்கணம் எதுவும் சொல்கிறதா என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை. அதுமட்டுமன்றி இச்சொல் கலைச் சொல்லாக இருக்கக் கூடிய அளவுக்கு காரணச் சொல்லாகவும் தெரியவில்லை. அதுமட்டுமன்றி தமிழுக்கே சிறப்பான சரியான சொற்புணர்ச்சியும் இந்தச் சொல்லில் இல்லை.

இடக்கரடக்கல் என்ற ஒரு தமிழ் இலக்கண பதப் பயன்பாடும் உண்டு. அதாவது வெளியில் சொல்லத் தகாதது என்பதாக உணரப்படுவதை சொல்ல பயன்படுவது. உ+ம்: பீ என்பதை பவ்வி என்பதாக அழைத்தல். பீ.. என்பது கூடாத பதம் என்றில்லை. அர்த்தமற்ற பதம் என்பதாகக் கொள்ளலாம். ஆங்கிலத்தில்.. shit..! போல..!

மேலுள்ள இரண்டும் பொதுவான தமிழ் இலக்கண முறைக்கு விதிவிலக்கானவை. :D:)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பகுதிக்கான தலையங்கத்தை வன்மையாக் கண்டிக்கிறேன்.............பெண்மையை ஏளனப் படுத்தும் செயலாகும். . எல்லோரும் தாயின் மார்பில் பால் குடித்த் பின் தான் மனிதனாய் வாழ்கிறீர்கள். இந்த செய்தி கவர்ச்சிக்காக இவ்வாறு தலைப்பு இடப்பட்டு இருக்கிறது. மார்பகம் அகற்ற பட்டது மருத்துவ மணியில் நடந்த தவறு ... அதற்கு தான் விலை ..42,150.Dollers.................பாதிக்க்பட்ட் பெண் போராடி வென்று இருக்கிறார். பத்திரிகை துறையில் தமிழுக்கு பஞ்சமா? ......

இந்த பகுதிக்கான தலையங்கத்தை வன்மையாக் கண்டிக்கிறேன்.............பெண்மையை ஏளனப் படுத்தும் செயலாகும். . எல்லோரும் தாயின் மார்பில் பால் குடித்த் பின் தான் மனிதனாய் வாழ்கிறீர்கள். இந்த செய்தி கவர்ச்சிக்காக இவ்வாறு தலைப்பு இடப்பட்டு இருக்கிறது. மார்பகம் அகற்ற பட்டது மருத்துவ மணியில் நடந்த தவறு ... அதற்கு தான் விலை ..42,150.Dollers.................பாதிக்க்பட்ட் பெண் போராடி வென்று இருக்கிறார். பத்திரிகை துறையில் தமிழுக்கு பஞ்சமா? ......

தலைப்பை மாற்றி உள்ளேன்

இத்தகைய விடயங்களை report button இனை அழுத்தி நிர்வாகத்துக்கு அறியத் தருவது பெரும் உதவியாக இருக்கும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேரமின்மையால் வாசித்து விட்டு போய் விடு வதுண்டு ..எனக்கும் முன்னிய தலையங்கத்தில் அசெளகரியமாய் இருந்தது.

மாற்றிய நிர்வாகத்துக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தலைப்பில் அல்ல, மற்றய பகுதிகளிலும் பெண்களின் அங்கங்களை அசிங்கமாகவும், அருவருப்பாகவும் எழுதுகின்ற ஆக்கங்களை நீக்க வேண்டும் நிழலி. சிங்களவன் மரணித்த உடலில் இன்பம் கண்டான். சிலர் எழுத்தில் எழுதி இன்பம் காண்கின்றார்கள்...

இந்தத் தலைப்பில் அல்ல, மற்றய பகுதிகளிலும் பெண்களின் அங்கங்களை அசிங்கமாகவும், அருவருப்பாகவும் எழுதுகின்ற ஆக்கங்களை நீக்க வேண்டும் நிழலி. சிங்களவன் மரணித்த உடலில் இன்பம் கண்டான். சிலர் எழுத்தில் எழுதி இன்பம் காண்கின்றார்கள்...

நிச்சயம் தூயவன்,

நிர்வாகத்தில் இருப்பவர்கள் எல்லா திரிகளையும், எல்லாப் பதில்களையும் வாசித்து பார்ப்பது நடை முறை சாத்தியம் இல்லை என்பதால் தயவு செய்து, இத்தகைய திரிகளை/ பதில்களை கண்டால் "report button " இனை அழுத்தி மட்டுக்களின் கவனத்துக்கு கொண்டு வாருங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.