Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உருத்திரகுமாரன் ஈழத் தமிழர் வரலாற்றில் இன்னொரு பிரபாகரனாகப் பதிவாகப் போகிறாரா, இல்லையா? என்பதை அவர்தான் தீர்மானிக்க வேண்டும்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழத்தின் விடுதலைக்கும், தமிழீழ மக்களது விடிவுக்கும் தற்போது அவசியமானது தமிழினத்தின் ஒன்றுபடுதல் மட்டுமே. தமிழினம் என்று இங்கே குறிப்பிடுவது உலக நாடுகள் எங்கும் பரந்து வாழும் எட்டுக் கோடிக்கும் மேலான தமிழ் உறவுகளையே. இந்த ஒன்றுபடுதல் மட்டுமே ஈழத் தமிழர்களுக்கான வாழ்வையும், உலகத் தமிழர்களுக்கான ஒரு நாட்டையும் உருவாக்கும் வல்லமையைக் கொடுக்கும்.

தமிழினத்தின் ஒன்று படுதலின் மையப் புள்ளியாகத் தற்போது பூதாகரமாகி இருக்கும் ஈழத் தமிழர்களின் அவலங்களே உள்ளது. எனவே, இந்த ஒன்றுபடுதல் ஈழத் தமிழினத்தின் மத்தியில் உருவாக்கப்பட்டு, தாய்த் தமிழகத்தால் முன் நகர்த்தப்பட வேண்டிய பணியாகவே உள்ளது.

விடுதலைப் போரின் ஆரம்ப காலத்தில், விடுதலைப் புலிகளின் நகர்வுகள் தமிழீழத்தின் ஒன்றுபடுதலையும், தமிழகத்தின் ஆதரவுத் தளத்தையும் சம காலத்தில் உருவாக்கியும் இருந்தார்கள். தளத்தில், தமது அர்ப்பணிப்புக்களாலும், போர் வெற்றிகளாலும் தமிழீழ மக்களை ஓரணியில் திரட்ட முடிந்த விடுதலைப் புலிகளுக்கு, தமிழகத்தின் முதல்வராக இருந்த அமரர் எம்.ஜி.ஆர். அவர்களது அன்பும், புரிந்துணர்வும் பெரும் ஆதரவுத் தளத்தை தாய்த் தமிழகத்தில் உருவாக்கியிருந்தது.

ஆனாலும், காலம் செய்த சதியால் அந்த ஆதரவுத் தளம் எம்.ஜி.ஆர். அவாகளுடனேயே மண்ணினுள் புதைந்து போனது. அதன் பின்னரான அத்தனை நிகழ்வுகளும் ஈழத் தமிழர்களை அநாதரவான நிலைக்கே தள்ளியது. இந்திய அமைதிப்படையின் வருகையுடன், இந்திய அரசின் கபடத்தனம் அம்பலமாகியது. ராஜீவ் காந்தியின் படுகொலை தாய்த் தமிழகத்தின் ஈழத் தமிழர்களுடனான உறவைச் சிதைத்தது. அதன் பின்னர் தமிழகத்தை ஆட்சி செய்த தலைவர்கள் இருவருமே, தாம் நடாத்திய ஊழல்களிலிருந்து தம்மைக் காப்பாற்ற அவ்வப்போது தமிழீழத்தை ரணகளமாக்கினார்கள். இறுதியாக, தமிழினத்தின் தலைவராக அறிவித்துக் கொண்ட முத்துவேலர் கருணாநிதி தனது ஆட்சி அதிகாரத்தையும், தேடிய சொத்துக்களையும் காப்பாற்றுவதற்காகவே இலட்சக்கணக்கான ஈழத் தமிழாகளது படுகொலையை மௌனமாக இருந்தே அங்கீகரித்தார். அவரது சாணக்கியத்தனமான இரண்டு மணி நேர உண்ணாவிரத்ததுடன் முத்துக்குமாரால் மூட்டப்பட்ட தமிழின விடுதலைத் தீ முடக்கத்துக்கு வந்தது.

இவை எல்லாம், முடிந்து விட்ட நிகழ்வு அல்ல… இன்றும் தொடரும் கதையாகவே உள்ளது. தமிழகத்தின் ஆறு கோடி தமிழர்களின் கண் முன்னாலேயே ஈழத் தமிழர்கள் அழிக்கப்படுகிறார்கள், கொல்லப்படுகிறாhகள், கற்பழிக்கப்படுகிறார்கள், கடத்தப்படுகின்றாhகள், காணாமல் ஆக்கப்படுகிறார்கள். அவர்கள் நிலம் அவர்களிடமிருந்து பலவந்தமாகப் பிடுங்கப்படுகின்றது. அவர்கள் வளம் அவர்களிடமிருந்து அபகரிக்கப்படுகின்றது. அவர்கள் வாழ்வு அவர்களிடமிருந்து பறித்தெடுக்கப்படுகின்றது. இன்றும், அவர்களது வாழ்வு அவலங்களுடனேயே தொடர்கின்றது. ஈழத் தமிழர்களது துயரம் மட்டுமல்ல, தமிழக மீனவர்கள் படுகொலைகளும் தொடர் கதையாகவே, யாரும் தட்டிக் கேட்க முடியாதபடி தொடர்ந்து செல்கின்றது.

தமிழகத்தில் ஈழத் தமிழர்களுக்கான ஆதரவுத் தளம் உருவாகாதவரை இந்திய வல்லாதிக்கச் சதியில் ஈழத் தமிழர்களது அழிவு தடுத்து நிறுத்த முடியாததாகவே இருக்கும். அதற்கான தலைமைகள் தமிழகத்தில் உருவாக வேண்டும். பேரறிஞர் அண்ணா போல், பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். போல் ஈழத் தமிழர்களுக்காக எதையும் செய்யக்கூடிய நல்ல தலைவர்கள் ஆட்சி பீடத்தில் அமர்ந்தார் மட்டுமே ஈழத் தமிழர்களது வாழ்வுரிமை மீட்கப்படும் சாத்தியம் உருவாகும். அத்தகைய புறநிலைச் சாத்திப்பாடு உருவாகுவதற்கு ஈழத் தமிழர்களது அகநிலைச் சாத்தியப்பாடு தெளிவு பெற வேண்டும்.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர், புலம்பெயர் தமிழர்கள் திட்டமிட்ட வகையில் பிளவு படுத்தப்பட்டு வருகின்றார்கள். களமுனைப் பேரழிவுகளால் கலங்கி நின்ற தமிழர்களிடம், தேசியத் தலைவர் அவர்களது இருப்புக் குறித்த கருத்துக்களுடன் உருவாக்கப்பட்ட பிளவு முயற்சிகள் படிப்படியாக விரிவு படுத்தப்பட்டு வருகின்றது. ‘கே.பி.’ என்ற சந்தேகத்திற்குரிய மையப்புள்ளியில் இருந்து உருவான சிறு புயல் பல்வேறு தளங்களிலும், பல்வேறு வடிவங்களிலும் புலம்பெயர் தமிழ்த் தேசிய கட்டமைப்புக்கள் மீது தாக்குதல் நடாத்த ஆரம்பித்துள்ளன.

கே.பி. சிங்கள தேசத்திடம் சரணாகதி அடைவதற்கு முன்னர் அவரால் உருவாக்கப்பட்ட இரண்டு தளங்கள் புலம்பெயர் தமிழ் மக்களின் ஒன்றுபடுதலுக்கு ஊறு விளைவிக்கும் முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றன. ஒன்று நிழல் யுத்தத்தைத் தொடுத்து, புலம்பெயர் தமிழ்த் தேசிய கட்டமைப்புக்களைச் சிதைக்க முயலும் அதே வேளை, மற்றொன்று புலம்பெயர் தமிழ் மக்களிடையே மாற்றுத் தலைமை ஒன்றை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாகச் செயற்படுகின்றது.

புலம்பெயர் தமிழ்த் தேசிய கட்டமைப்புக்கள்மீது நிகழ்த்தப்படும் நிழல் யுத்தம், வெற்றிக்கான வாய்ப்பே இல்லாமல் தட்டுத் தடுமாறிக்கொண்டிருப்பதால், அதனை இப்போது ஆராய்வது பொருத்தமாக இருக்காது என்பதனால், புலம்பெயர் தமிழர்களது ஒன்றுபடுதலைக் குறிவைத்து தாக்குதல் நாத்தும் அடுத்த தளம் குறித்த ஆய்வு தற்போது அவசியமானதாகவே நாம் கருதுகின்றோம்.

‘நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்’ என்ற கருத்தாக்கத்தை யார் முன்மொழிவு செய்திருந்தாலும், அதன் அர்த்தத்தையும், அதன் அனுகூலங்களை யாரும் மறுதலித்துவிட முடியாது. ஈழத் தமிழர்களது நியாயமான விடுதலைப் போராட்டத்தை ‘பயங்கரவாதம்’ என்ற ஒற்றை அர்த்தப்படுத்தலுடன் அழித்து முடித்த அனைத்துலக தீர்மானத்திற்கான சவாலாக ‘நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்’ உருவாகுவது காலத்தின் கட்டாயம் என தமிழ்த் தேசிய விடுதலைக்கான அத்தனை தளங்களும் ஒப்புக் கொள்கின்றன. அதனாலேயே, அதை நிர்மாணிப்பதிலும், ஜனநாயகப் படுத்துவதிலும் புலம்பெயர் தமிழ்த் தேசியக் கட்டமைப்புக்கள் அக்கறையுடன் செயலாற்றின. அதன் வெற்றிக்காகப் பாடு பட்டன.

எந்தவொரு ஆயுதத்தையும் யார் கையில் எடுக்கிறார் என்பதில்தான் அதன் பயன்பாடு தங்கியிருக்கின்றது. கொள்ளைக்காரன் கையில் கிடைத்தால், அது அவனது கொள்ளைக்குப் பயன்படுத்தப்படும். கொலைகாரன் கையில் கிடைத்தால், அது அவனது கொலைகளுக்குப் பயன்படும். அதே ஆயுதம், ஒரு காவலன் கையில் கிடைத்தால், அத்தனை அதர்மங்களையும் தடுக்கப் பயன்படும். ‘நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்’ என்ற ஈழத் தமிழர்களது ஆயுதம் சரியானவர்கள் கையில் கிடைத்துள்ளதா? என்ற சந்தேகம் புலம்பெயர் தமிழர்களிடம் இதுவரை தீர்த்து வைக்கப்படாமலேயே உள்ளது.

நாடு கடந்த அரசாங்கத்தின் பிரதமர் திரு. உருத்திரகுமாரன் அவர்களிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு அவர் ஒருபோதும் பதில் தருவதற்குத் தயாராக இருந்ததில்லை. அதனால், அவர் சரியான தேர்வு அல்ல என்ற அர்த்தத்தைக் கொள்ள முடியாது. ஆனால், ‘சதி வலை ஒன்றினுள் சிக்க வைக்கப்பட்டுள்ளார்’ என்ற தமிழ்த் தேசிய உணர்வாளாகளது சந்தேகத்தையும் நிராகரித்து விட முடியாது. குறிப்பாக, திரு. உருத்திரகுமாரன் அவர்கள் ‘கே.பி.’ குழுவினரால் சிறைபடுத்தப்பட்டுள்ளார் என்ற தமிழ்த் தேசிய கட்டமைப்புக்களது குற்றச்சாட்டில் உண்மை இல்லாமலும் இல்லை.

நாடு கடந்த தமிழீழ அரசுக்கான நாடுகள் தழுவிய தேர்தல்களை நடாத்தி முடிக்கப்படும்வரை, தமிழ்த் தேசியக் கட்டமைப்புக்களுடன் நல்லுறவைக் கொண்டிருந்த திரு. உருத்திரகுமாரன் அவர்கள், தேர்தலின் பின்னர் பெரும்பாலும் மோதல் போக்கையே மேற்கொண்டு வருகின்றார் அல்லது, புலம்பெயர் தமிழ்த் தேசியக் கட்டமைப்புக்களை சிதைக்கும் நோக்கில் செயல்படும் ‘கே.பி.’ குழுவினருக்கு ஊக்கம் கொடுத்து வருகின்றார் என்பது வெளிப்படையான உண்மை.

கனடாவில், தமது நிகழ்ச்சி நிரலுடன் ஒத்து வராதவாகள்மீது கே.பி. குழுவினர் நடாத்தும் அசிங்கமான சுவரொட்டி, விளம்பரத் தாக்குதல்கள், நேரடி, தொலைபேசி அச்சுறுத்தல்கள் குறித்த முறைப்பாடு பிரு. உருத்திரகுமாரன் அவர்களது கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட போதும், அவரால் அது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. பிரித்தானியாவில், கே.பி. குழுவினர் இருவரைப் பதவிக்குக் கொண்டு வருவதற்காக, நீண்டகால தமிழ்த் தேசியப் பணியாளர்கள் இருவர் அச்சுறுத்தப்பட்டு, அவர்களது இராஜினாமா கடிதங்கள் பெறப்பட்டது. பிரான்சில், கே.பி. குழுவின் தலைவரது விருப்பத்தினை நிறைவேற்றுவதற்காக, மக்களால் தெரிவு செய்யப்பட்ட மூன்று மக்கள் பிரதிநிதிகளது தெரிவு இடை நிறுத்தி வைக்கப்பட்டது. ஜெர்மனியிலும், இத்தாலியிலும், அவுஸ்திரேலியாவிலும் தெரிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டு, இரண்டாவது அமர்வில் எழுப்பப்படக் கூடிய கேள்விகளுக்காக அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆக மொத்தத்தில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ‘கே.பி.’ குழுவின் நிகழ்ச்சி நிரலுடன் ஒரு சிறு குழுவாகச் சிதைந்து போகும் அபாயம் அதிகமாகவே உள்ளதை மறுக்க முடியாது.

எனவே, நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் திரு. உருத்திரகுமாரன் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை மக்கள் மயப்படுத்த முன்வரவேண்டும். புலம்பெயர் நாடுகளில், விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டு, தேசியத் தலைவர் அவர்களால் நெறிப்படத்தப்பட்ட கட்டமைப்புக்கள் இன்றும் புலம்பெயர் தமிழர்களிடமிருந்து பிரித்தெடுக்க முடியாத பலம் கொண்டவையாகவே உள்ளன. யுத்த காலங்களில் உருவான நெருக்கடி நிலைகளில் புலம்பெயர் தமிழ்த் தேசியக் கட்டமைப்புக்களது நிதி சேகரிப்பு பல நாடுகளில் சட்டச் சிக்கல்களை உருவாக்கி. கைதுகளும் இடம்பெற்றாலும் மக்கள் மத்தியில் அவர்கள் இப்போதும் பலமாகவே உள்ளனர். இந்த மக்கள் சக்திகளின்மீது திரு. உருத்திரகுமாரன் அவர்கள் முரண்பாடுகளையும், எதிர் நிலையையும் மேற்கொள்வது நாடு கடந்த தமிழீழ அரசினைப் பலப்படுத்துவதற்கு உதவாது என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டிய யதார்த்தம்.

அண்மையில், பிரான்சின் ‘கே.பி.’ குழுவினரால் உருவாக்கப்பட்ட ‘தமிழர் நடுவம்’ என்ற எதிர்ப் புரட்சிக் குழுவின் செயற்பாடுகளில் நாடு கடந்த தமிழீழ அரசுக்கான மக்கள் பிரதிநிதிகள் மூவர் கலந்து கொண்டு. அவர்களை உற்சாகப்படுத்தியதையும், தமிழர் நடுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட ‘கேர்ணல் கிட்டு’ நினைவு நிகழ்ச்சியில் நாடு கடந்த தமிழீழ அரசின் முதலாவது அடையாள அட்டை விநியோகிக்கப்பட்டதையும் நாடு கடந்த தமிழீழ அரசுக்கான ஆதரவுத் தளத்தைச் சிதைப்பதாகவே அமைந்தது என்பதை திரு உருத்திரகுமாரன் அவர்கள் புரிந்துணர முற்பட வேண்டும்.

சிங்கள தேசத்தால் வேகமாக முன்னெடுக்கப்படும் தமிழின அழிவு, தமிழர் நில ஆக்கிரமிப்பு, தமிழர் மீதான பொருளாதார முடக்கல், சிங்கள – பௌத்த மயமாக்கல் போன்ற கொடூர நிகழ்வுகளிலிருந்து ஈழத் தமிழர்களை மீட்க வேண்டிய அவசரமான காலத்தில், புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் முரண்பாடுகளையும், பிளவுகளையும் உருவாக்குவதற்கு முயல்வது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத தமிழினத் துரோகமாகவே வரலாற்றில் பதிவாகும்.

உருத்திரகுமாரன் வரலாற்றில் இன்னொரு பிரபாகரனாகப் பதிவாகப் போகிறாரா? என்பதை அவர்தான் தீர்மானிக்க வேண்டும்!

- சுவிசிலிருந்து கதிரவன்

  • கருத்துக்கள உறவுகள்

தம்மைத் தமிழ்த் தேசியவாதிகளாக இனம் காணுபவர்கள் இதுவரையில் என்ன செய்திருக்கிறார்கள்?? செய்ததெல்லாம் நாடுகடந்த அரசின் மீதும், அதன் தலைவர் உருத்திரகுமாரன்மீதும் சேற்றை அள்ளி வீசியதுதானே?? உங்களுக்கு உண்மையிலேயே தேசியத்தின் மீதும், தேசியத் தலமை மீது நம்பிக்கையிருந்தால் உங்கள் வறட்டுக் கவுரங்களைத் தூர எறிந்துவிட்டு சேர்ந்து செயாற்படுங்கள். வெறுமனே இருட்டினுள் இருந்துகொண்டு புழுதி வாரித் தூற்றுவதில் யாருக்கும் எந்தப் பயனுமில்லை.

தென்சூடானில் இடம்பெற்ற சர்வசன வாக்கெடுப்பிற்கு நாடுகடந்த தமிழீழ அரசுக்கு அழைப்புக் கிடைத்திருக்கிறது. இதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு மேலும் அங்கீகாரங்களைப் பெறப் போராட வேண்டும். அதை விடுத்து மேலே எழுந்துவருபவனை கிழே இழுத்து விழுத்தும் கைங்கரியங்கள் இனியும் வேண்டாம்.

தமிழ் தேசியப்பற்றாளர்களை குளப்பும் நடவடிக்கையில்

புலம் பெயர்ந்தநாட்டில் எத்தனை பேர்வழிகள் தோன்றி உள்ளார்களே?

கனடாவில், தமது நிகழ்ச்சி நிரலுடன் ஒத்து வராதவாகள்மீது கே.பி. குழுவினர் நடாத்தும் அசிங்கமான சுவரொட்டி, விளம்பரத் தாக்குதல்கள், நேரடி, தொலைபேசி அச்சுறுத்தல்கள் குறித்த முறைப்பாடு பிரு. உருத்திரகுமாரன் அவர்களது கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட போதும், அவரால் அது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.

நீங்கள்தானே தொடங்கி வைத்தீர்கள். நாடு கடந்த தமிழீழ அரசிற்கான அழைப்பு விடுக்கப்பட்டு, கேபி கைதாகி சில காலத்திலேயே நாடு கடந்த தமிழீழ அரசு மீதான தாக்குதல்களை சங்கதி-பதிவு-தமிழ்கதிர் இணையத்தளங்கள் தொடங்கி விட்டனவே. தேர்தல் வரும் வரை அனைத்துலக தொடர்பகத்தினால் இயக்கப்படும் அனைத்து ஊடகங்களுமே நாடு கடந்த அரசு மீதும், உருத்திரகுமாரன் மீதும், மதியுரையுஞர் குழு மீதும் அவதூறுகளை அள்ளி வீசி வந்தனவே. நாடு கடந்த தமிழீழ அரசிற்கு ஆதரவான கருத்துக்கள் எப்போவதாவது சங்கதி-பதிவு-தமிழ்கதிர் இணையத்தளங்களில் வந்திருக்கிறதா? இல்லையே.

தேர்தல் வந்தபோது நாடு கடந்த அரசினை உங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக அதற்கு ஆதரவு வழங்குவதைப் போன்று நடித்து பல அரைவேக்காடுகளை தேசியத்தின் வேட்பாளர்கள் என்று பரப்புரை செய்து பொதுத் தளத்திலிருந்து வந்த சில அறிஞர்களின் வெற்றியைப் பறித்தீர்கள். பல இடங்களில் தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டீர்கள். அது உங்களால் களமிறக்கப்பட்டவர்களின் வெற்றிகளிற்கு நன்றாக உதவியது.

என்னதான் முயன்றும் நாடு கடந்த அரசு உருத்திரகுமாரன் தலைமையில் அமைக்கப்பட்டு விட்டது. அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் உங்களால் களமிறக்கப்பட்டவர்கள் புறக்கணிப்புக்கள், வெளிநடப்புக்களைச் செய்தபோதும் நாடு கடந்த தமிழீழ அரசு தற்போது ஒரு செயல்நிலைக்கு வந்துவிட்டது.

உங்களால் களமிறக்கப்பட்டவர்கள் அனைவரும் தன்னலமற்ற தேசிய பற்றார்கள்.

உருத்திரகுமாரன் அவர்களும் கேபியின் ஆள், பொதுத் தளதிலிருந்து தமிழீழ விடுதலைக்காக உழைக்கவேண்டுமென்று போட்டியிட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களும் கேபி ஆட்கள் என்று பரப்புரை செய்கிறீர்கள்.

நீங்கள் நா.க.த.அரசு மற்றும் உருத்திரகுமாரன் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் தேசத்துரோகம், கேபி குழு என்று மீது சேறு பூச தொடங்கி பல காலத்திற்கு பின்னரேயே அனைத்துலக தொடர்பகத்தினர் மீதான அசிங்கப் பரப்புரைகள் தொடங்கப்பட்டன. அனைத்துலக தொடர்பகத்துடன் பணியாற்றி ஒதுக்கப்பட்டவர்கள், தவறிழைத்து ஒதுக்கப்பட்டவர்கள் மற்றும் சிறிலங்கா அரசின் கைக்கூலிகள் என பலர் தமதுக்கு விரும்பியவாறு எழுதித் தள்ளினார்கள்.

நீங்கள் தொடங்கி வைத்த அசிங்கம் உங்களை வழிநடத்திய ஒரு உன்னதமான பொறுப்பாளரின் மீதே ஒரு கட்டத்தில் தூக்கி வீசப்பட்டது.

கனடாவில் செயற்படும் சிலர் மீது அவதூறுகள் பரப்பப்படுகின்றன. அவதூறுகள் மட்டும். ஆனால் அதற்கு முன்னர் நீங்கள் காட்டிக் கொடுக்கும் வேலையைச் செய்தீர்களே? தலைமைச் செயலகத்தில் செயற்படும் அனைவரையும், பெயர் விபரங்கள் மற்றும் அவர்கள் வாழும் இடங்கள் என்பவற்றை வெளியிட்டு காட்டிக் கொடுத்தீர்களே!!!

இது என்ன போராட்டத்தை ஒற்றுமையாக முன்னெடுக்கிற செயற்பாடா?

முதலில் நீங்கள் நிறுத்துங்கள். பின்னர் மற்றவர்களைத் திருத்தலாம்.

நீங்கள் என்னதான் உருத்திரகுமாரன் மீது அவதூறுகளை அள்ளி வீசியபோதும், அவர் ஒருபோதுமே உங்கள் மீது அவதூறையோ அல்லது தமிழரின் ஒற்றுமையைக் குலைக்கும் விதமாகவே எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.

உங்களின் ஆட்களின் கட்டுப்பாட்டிற்குள் நாடு கடந்த தமிழீழ அரசு வரவில்லை என்பதால் நீங்கள் சனநாயக விரோதம் ஒன்று ஒற்றுமையாக முன்னெடுக்க வேண்டிய செயற்பாட்டைக் குழப்பி வெளியேறியபோதும், உங்களின் செயற்பாட்டை சனநாயகத்தின் ஒரு அங்கம் என்றே திரு.உருத்திரகுமாரன் தெரிவித்திருந்தார்.

எனவே, நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் திரு. உருத்திரகுமாரன் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை மக்கள் மயப்படுத்த முன்வரவேண்டும். புலம்பெயர் நாடுகளில், விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டு, தேசியத் தலைவர் அவர்களால் நெறிப்படத்தப்பட்ட கட்டமைப்புக்கள் இன்றும் புலம்பெயர் தமிழர்களிடமிருந்து பிரித்தெடுக்க முடியாத பலம் கொண்டவையாகவே உள்ளன.

நாடு கடந்த தமிழீழ அரசு மக்கள் மயப்படுத்தப்பட்டுத்தான் இருக்கிறது. இன்று போராட்டத்தை பன்னாட்டு அரங்கில் கொண்டு செல்வதற்கு அவ்வாறான கட்டமைப்பே தேவை. விடுதலைப் புலிகளின் கட்டமைப்புக்கள் அல்ல. தேசியத் தலைவரால் நெறிப்படுத்தப்பட்ட கட்டமைப்புக்கள் பலமாக இருந்து கொண்டு மக்கள் மயப்படுத்தப்பட்ட அமைப்புக்களை இலட்சியத்தை நோக்கிப் பயணிக்க உந்தித்தள்ள வேண்டும். அவர்கள் இலட்சியத்திலிருந்து விலகிவிடாது பார்த்துக் கொள்ளவேண்டும். ஆனால் அனைத்துலக தொடர்பகத்தின் செயற்பாடு இவ்வாறான கட்டமைப்புக்களைச் சிதைத்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முள்ளிவாய்காலோடு முடக்கி விடும் வகையிலேயே இருக்கிறது.

தயவு செய்து இவ்வாறான கட்டுரைகளை அனைத்துலக தொடர்பகத்தினை வழிநடத்துவர்களை நோக்கி எழுதுங்கள். அவர்கள் விடுதலைப் புலிகளின் உறுப்பினராக இருந்தவர்கள் என்றால் தினமும் விடுதலைப் புலிகளின் உறுதிப்பிரமாணத்தை சொல்லிவிட்டு அவர்களின் அன்றாட தொடங்கச் சொல்லி வேண்டுகோள் விடுங்கள். அதன் மூலமாவது ஏதாவது மனமாற்றம் வரலாம்.

அண்மையில், பிரான்சின் ‘கே.பி.’ குழுவினரால் உருவாக்கப்பட்ட ‘தமிழர் நடுவம்’ என்ற எதிர்ப் புரட்சிக் குழுவின் செயற்பாடுகளில் நாடு கடந்த தமிழீழ அரசுக்கான மக்கள் பிரதிநிதிகள் மூவர் கலந்து கொண்டு. அவர்களை உற்சாகப்படுத்தியதையும், தமிழர் நடுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட ‘கேர்ணல் கிட்டு’ நினைவு நிகழ்ச்சியில் நாடு கடந்த தமிழீழ அரசின் முதலாவது அடையாள அட்டை விநியோகிக்கப்பட்டதையும் நாடு கடந்த தமிழீழ அரசுக்கான ஆதரவுத் தளத்தைச் சிதைப்பதாகவே அமைந்தது என்பதை திரு உருத்திரகுமாரன் அவர்கள் புரிந்துணர முற்பட வேண்டும்.

நீங்கள் ஏன் அதைப்பற்றியெல்லாம் கவலைப் பட வேணும். அடையாள அட்டை வழங்கிறதெல்லாம். தகவல்களைத் திரட்டி சிறிலங்கா அரசிற்குக் கொடுக்கிறதுக்கு எண்டு விமர்சிக்கும் நீங்கள் ஏன் அதைப்பற்றி கவலைப் படுகிறீர்கள்.

சரி நாடு கடந்த தமிழீழ அரசின் அடையாள அட்டையை அனைத்துலக தொடர்பகத்தினால் முன்னெடுக்கப்படும் எந்த நிகழ்விலாவது வழங்குவதற்கு நீங்கள் அனுமதிப்பீர்களா?

நாடு கடந்த தமிழீழ அரசு கேபி குழுவால் இயக்கப்படுகிறது

தமிழர் நடுவம் கேபி குழுவால் இயக்கப்படுகிறது

இப்படியே துரோக முத்திரை குத்தல்களை தொடர்ந்து கொண்டே இருந்தீர்கள் என்றால் உண்மையில் சிறிலங்கா அரசினால் இயக்கப்படும் அமைப்புக்களைக் கூட மக்கள் இனங்காணமுடியாத நிலைக்கு இட்டுச்செல்வீர்கள்.

சிங்கள தேசத்தால் வேகமாக முன்னெடுக்கப்படும் தமிழின அழிவு, தமிழர் நில ஆக்கிரமிப்பு, தமிழர் மீதான பொருளாதார முடக்கல், சிங்கள – பௌத்த மயமாக்கல் போன்ற கொடூர நிகழ்வுகளிலிருந்து ஈழத் தமிழர்களை மீட்க வேண்டிய அவசரமான காலத்தில், புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் முரண்பாடுகளையும், பிளவுகளையும் உருவாக்குவதற்கு முயல்வது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத தமிழினத் துரோகமாகவே வரலாற்றில் பதிவாகும்.

நாடு கடந்த தமிழீழ அரசு நீங்கள் சொன்ன இந்த விடயங்களை செய்ய மிக மெதுவாகவே செயற்படுகிறார்கள். அவர்களின் மந்தகதியான செயற்பாடு விமர்சிக்கப்பட வேண்டியது. ஆனால் தமிழர்கள் மத்தியில் முரண்பாட்டை ஏற்படுத்துவது அவர்களல்ல. நீங்கள்தான். நீங்கள் சொன்ன விடயங்களில் உங்களின் செயற்பாடு பூச்சியம். ஆனால் நாடு கடந்த அரசினை முடக்குவதற்கான உங்களின் செயற்பாடு சிறிலங்கா அரசினைவிட பல மடங்கு அதிகம். இது என்ன வரலாற்றில் நீங்கள் செய்யும் தியாகமாகவே பதியப்படுமா?

உருத்திரகுமாரன் வரலாற்றில் இன்னொரு பிரபாகரனாகப் பதிவாகப் போகிறாரா? என்பதை அவர்தான் தீர்மானிக்க வேண்டும்!

உருத்திரகுமாரன் தலைவர் பிரபாகரன் அவர்களும், அவர் காட்டிய வழியில் சென்று தமது இன்னுயிர்களை ஈந்தவர்களும் சுமந்து சென்ற இலட்சியத்தை அடைவதற்காகவே உழைக்கிறார். அவர் தன்னை இன்னொரு பிரபாகரனாக கருதமாட்டார். பிரபாகரன் அவர்களின் இடத்திற்கு யாரும் வரப்போவதில்லை. பிரபாகரன் அவர்களின் இடத்தில் யாரையும் வைத்துப் பார்க்க நாம் தயாரில்லை. விடுதலையை நோக்கிய செயற்பாட்டை உருத்திரகுமாரன் அவர்கள் நேர்மையாகவும், வெற்றிகரமாகவும் முன்னெடுத்தால் பிரபாகரன் அவர்களின் இடத்திற்கு கீழே தமது நெஞ்சத்தில் மக்கள் இடம் கொடுப்பார்கள்.

ஆனால்

பெரு விருட்சமாக இருந்த எமது விடுதலை நெருப்பு முள்ளிவாய்காலில் அணைக்கப்பட்டுவிட்டது. கருணா, டக்கிளஸ் என்று பெருமளவான தமிழினத் துரோகிகளின் பங்களிப்புடனேயே எதிரியால் அந்த நெருப்பு அணைக்கப்பட்டது. இ.ன்று எஞ்சியிருப்பது புலத்தில் இருக்கும் சில குப்பி விளக்குகளே!. அந்த அந்த விளக்குகளே வைத்தே எமது விடுதலைத் தீயை வளர்க்க வேண்டும். அதனையும் அழித்துவிட்டால் உலகப்பந்தில் தமிழினம் வாழ்ந்ததென்ற ஒரு வரலாறு கூட அடுத்த நூற்றாண்டில் இல்லாமல் போய்விடும். எனவே அந்த நிலையை தமிழீழ தேசியத் தலைவரால் உருவாக்கப்பட்ட அனைத்துலக தொடர்பகம் ஏற்படுத்தி தூரோகிகளின் உச்சமாக நீங்கள் இருந்துவிடாதீர்கள் என்று உங்களை வேண்டுகிறோம்.

தமிழ் தேசியப்பற்றாளர்களை குளப்பும் நடவடிக்கையில்

புலம் பெயர்ந்தநாட்டில் எத்தனை பேர்வழிகள் தோன்றி உள்ளார்களே?

இந்தக் கதிரவன் என்பவர் சுவீசிலிருந்து எழுதவில்லை பாரிசிலிருந்தே எழுதுகின்றார். பாரிசிலிருந்து செயற்படும் கோத்பாய நந்கோபன் கும்பலின் முக்கியமான உளவாளி இவர்.இவரது நோக்கம் விடுதலைப்புலிகளின் தடையை நீக்க போராடும் தமிழர் நடுவத்தை முடக்குவதும் நாடுகடந்த அரசை உடைப்பதும் தான்.

இந்த நபரும் இவருக்கு உடந்தையாக இருப்பவர்களும் போடும் தேசிய தூண்டிலில் சிக்கி தமிழ் தேசியத்துக்காக நீங்கள் உழைத்த உண்மையான உழைப்பை கோத்தபாயவுக்கு ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்தவிடாதீர்கள

தமிழீழத்தின் விடுதலைக்கும், தமிழீழ மக்களது விடிவுக்கும் தற்போது அவசியமானது தமிழினத்தின் ஒன்றுபடுதல் மட்டுமே. தமிழினம் என்று இங்கே குறிப்பிடுவது உலக நாடுகள் எங்கும் பரந்து வாழும் எட்டுக் கோடிக்கும் மேலான தமிழ் உறவுகளையே. இந்த ஒன்றுபடுதல் மட்டுமே ஈழத் தமிழர்களுக்கான வாழ்வையும், உலகத் தமிழர்களுக்கான ஒரு நாட்டையும் உருவாக்கும் வல்லமையைக் கொடுக்கும்.

தமிழினத்தின் ஒன்று படுதலின் மையப் புள்ளியாகத் தற்போது பூதாகரமாகி இருக்கும் ஈழத் தமிழர்களின் அவலங்களே உள்ளது. எனவே, இந்த ஒன்றுபடுதல் ஈழத் தமிழினத்தின் மத்தியில் உருவாக்கப்பட்டு, தாய்த் தமிழகத்தால் முன் நகர்த்தப்பட வேண்டிய பணியாகவே உள்ளது.

விடுதலைப் போரின் ஆரம்ப காலத்தில், விடுதலைப் புலிகளின் நகர்வுகள் தமிழீழத்தின் ஒன்றுபடுதலையும், தமிழகத்தின் ஆதரவுத் தளத்தையும் சம காலத்தில் உருவாக்கியும் இருந்தார்கள். தளத்தில், தமது அர்ப்பணிப்புக்களாலும், போர் வெற்றிகளாலும் தமிழீழ மக்களை ஓரணியில் திரட்ட முடிந்த விடுதலைப் புலிகளுக்கு, தமிழகத்தின் முதல்வராக இருந்த அமரர் எம்.ஜி.ஆர். அவர்களது அன்பும், புரிந்துணர்வும் பெரும் ஆதரவுத் தளத்தை தாய்த் தமிழகத்தில் உருவாக்கியிருந்தது.

ஆனாலும், காலம் செய்த சதியால் அந்த ஆதரவுத் தளம் எம்.ஜி.ஆர். அவாகளுடனேயே மண்ணினுள் புதைந்து போனது. அதன் பின்னரான அத்தனை நிகழ்வுகளும் ஈழத் தமிழர்களை அநாதரவான நிலைக்கே தள்ளியது. இந்திய அமைதிப்படையின் வருகையுடன், இந்திய அரசின் கபடத்தனம் அம்பலமாகியது. ராஜீவ் காந்தியின் படுகொலை தாய்த் தமிழகத்தின் ஈழத் தமிழர்களுடனான உறவைச் சிதைத்தது. அதன் பின்னர் தமிழகத்தை ஆட்சி செய்த தலைவர்கள் இருவருமே, தாம் நடாத்திய ஊழல்களிலிருந்து தம்மைக் காப்பாற்ற அவ்வப்போது தமிழீழத்தை ரணகளமாக்கினார்கள். இறுதியாக, தமிழினத்தின் தலைவராக அறிவித்துக் கொண்ட முத்துவேலர் கருணாநிதி தனது ஆட்சி அதிகாரத்தையும், தேடிய சொத்துக்களையும் காப்பாற்றுவதற்காகவே இலட்சக்கணக்கான ஈழத் தமிழாகளது படுகொலையை மௌனமாக இருந்தே அங்கீகரித்தார். அவரது சாணக்கியத்தனமான இரண்டு மணி நேர உண்ணாவிரத்ததுடன் முத்துக்குமாரால் மூட்டப்பட்ட தமிழின விடுதலைத் தீ முடக்கத்துக்கு வந்தது.

இவை எல்லாம், முடிந்து விட்ட நிகழ்வு அல்ல… இன்றும் தொடரும் கதையாகவே உள்ளது. தமிழகத்தின் ஆறு கோடி தமிழர்களின் கண் முன்னாலேயே ஈழத் தமிழர்கள் அழிக்கப்படுகிறார்கள், கொல்லப்படுகிறாhகள், கற்பழிக்கப்படுகிறார்கள், கடத்தப்படுகின்றாhகள், காணாமல் ஆக்கப்படுகிறார்கள். அவர்கள் நிலம் அவர்களிடமிருந்து பலவந்தமாகப் பிடுங்கப்படுகின்றது. அவர்கள் வளம் அவர்களிடமிருந்து அபகரிக்கப்படுகின்றது. அவர்கள் வாழ்வு அவர்களிடமிருந்து பறித்தெடுக்கப்படுகின்றது. இன்றும், அவர்களது வாழ்வு அவலங்களுடனேயே தொடர்கின்றது. ஈழத் தமிழர்களது துயரம் மட்டுமல்ல, தமிழக மீனவர்கள் படுகொலைகளும் தொடர் கதையாகவே, யாரும் தட்டிக் கேட்க முடியாதபடி தொடர்ந்து செல்கின்றது.

தமிழகத்தில் ஈழத் தமிழர்களுக்கான ஆதரவுத் தளம் உருவாகாதவரை இந்திய வல்லாதிக்கச் சதியில் ஈழத் தமிழர்களது அழிவு தடுத்து நிறுத்த முடியாததாகவே இருக்கும். அதற்கான தலைமைகள் தமிழகத்தில் உருவாக வேண்டும். பேரறிஞர் அண்ணா போல், பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். போல் ஈழத் தமிழர்களுக்காக எதையும் செய்யக்கூடிய நல்ல தலைவர்கள் ஆட்சி பீடத்தில் அமர்ந்தார் மட்டுமே ஈழத் தமிழர்களது வாழ்வுரிமை மீட்கப்படும் சாத்தியம் உருவாகும். அத்தகைய புறநிலைச் சாத்திப்பாடு உருவாகுவதற்கு ஈழத் தமிழர்களது அகநிலைச் சாத்தியப்பாடு தெளிவு பெற வேண்டும்.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர், புலம்பெயர் தமிழர்கள் திட்டமிட்ட வகையில் பிளவு படுத்தப்பட்டு வருகின்றார்கள். களமுனைப் பேரழிவுகளால் கலங்கி நின்ற தமிழர்களிடம், தேசியத் தலைவர் அவர்களது இருப்புக் குறித்த கருத்துக்களுடன் உருவாக்கப்பட்ட பிளவு முயற்சிகள் படிப்படியாக விரிவு படுத்தப்பட்டு வருகின்றது. ‘கே.பி.’ என்ற சந்தேகத்திற்குரிய மையப்புள்ளியில் இருந்து உருவான சிறு புயல் பல்வேறு தளங்களிலும், பல்வேறு வடிவங்களிலும் புலம்பெயர் தமிழ்த் தேசிய கட்டமைப்புக்கள் மீது தாக்குதல் நடாத்த ஆரம்பித்துள்ளன.

கே.பி. சிங்கள தேசத்திடம் சரணாகதி அடைவதற்கு முன்னர் அவரால் உருவாக்கப்பட்ட இரண்டு தளங்கள் புலம்பெயர் தமிழ் மக்களின் ஒன்றுபடுதலுக்கு ஊறு விளைவிக்கும் முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றன. ஒன்று நிழல் யுத்தத்தைத் தொடுத்து, புலம்பெயர் தமிழ்த் தேசிய கட்டமைப்புக்களைச் சிதைக்க முயலும் அதே வேளை, மற்றொன்று புலம்பெயர் தமிழ் மக்களிடையே மாற்றுத் தலைமை ஒன்றை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாகச் செயற்படுகின்றது.

புலம்பெயர் தமிழ்த் தேசிய கட்டமைப்புக்கள்மீது நிகழ்த்தப்படும் நிழல் யுத்தம், வெற்றிக்கான வாய்ப்பே இல்லாமல் தட்டுத் தடுமாறிக்கொண்டிருப்பதால், அதனை இப்போது ஆராய்வது பொருத்தமாக இருக்காது என்பதனால், புலம்பெயர் தமிழர்களது ஒன்றுபடுதலைக் குறிவைத்து தாக்குதல் நாத்தும் அடுத்த தளம் குறித்த ஆய்வு தற்போது அவசியமானதாகவே நாம் கருதுகின்றோம்.

‘நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்’ என்ற கருத்தாக்கத்தை யார் முன்மொழிவு செய்திருந்தாலும், அதன் அர்த்தத்தையும், அதன் அனுகூலங்களை யாரும் மறுதலித்துவிட முடியாது. ஈழத் தமிழர்களது நியாயமான விடுதலைப் போராட்டத்தை ‘பயங்கரவாதம்’ என்ற ஒற்றை அர்த்தப்படுத்தலுடன் அழித்து முடித்த அனைத்துலக தீர்மானத்திற்கான சவாலாக ‘நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்’ உருவாகுவது காலத்தின் கட்டாயம் என தமிழ்த் தேசிய விடுதலைக்கான அத்தனை தளங்களும் ஒப்புக் கொள்கின்றன. அதனாலேயே, அதை நிர்மாணிப்பதிலும், ஜனநாயகப் படுத்துவதிலும் புலம்பெயர் தமிழ்த் தேசியக் கட்டமைப்புக்கள் அக்கறையுடன் செயலாற்றின. அதன் வெற்றிக்காகப் பாடு பட்டன.

எந்தவொரு ஆயுதத்தையும் யார் கையில் எடுக்கிறார் என்பதில்தான் அதன் பயன்பாடு தங்கியிருக்கின்றது. கொள்ளைக்காரன் கையில் கிடைத்தால், அது அவனது கொள்ளைக்குப் பயன்படுத்தப்படும். கொலைகாரன் கையில் கிடைத்தால், அது அவனது கொலைகளுக்குப் பயன்படும். அதே ஆயுதம், ஒரு காவலன் கையில் கிடைத்தால், அத்தனை அதர்மங்களையும் தடுக்கப் பயன்படும். ‘நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்’ என்ற ஈழத் தமிழர்களது ஆயுதம் சரியானவர்கள் கையில் கிடைத்துள்ளதா? என்ற சந்தேகம் புலம்பெயர் தமிழர்களிடம் இதுவரை தீர்த்து வைக்கப்படாமலேயே உள்ளது.

நாடு கடந்த அரசாங்கத்தின் பிரதமர் திரு. உருத்திரகுமாரன் அவர்களிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு அவர் ஒருபோதும் பதில் தருவதற்குத் தயாராக இருந்ததில்லை. அதனால், அவர் சரியான தேர்வு அல்ல என்ற அர்த்தத்தைக் கொள்ள முடியாது. ஆனால், ‘சதி வலை ஒன்றினுள் சிக்க வைக்கப்பட்டுள்ளார்’ என்ற தமிழ்த் தேசிய உணர்வாளாகளது சந்தேகத்தையும் நிராகரித்து விட முடியாது. குறிப்பாக, திரு. உருத்திரகுமாரன் அவர்கள் ‘கே.பி.’ குழுவினரால் சிறைபடுத்தப்பட்டுள்ளார் என்ற தமிழ்த் தேசிய கட்டமைப்புக்களது குற்றச்சாட்டில் உண்மை இல்லாமலும் இல்லை.

நாடு கடந்த தமிழீழ அரசுக்கான நாடுகள் தழுவிய தேர்தல்களை நடாத்தி முடிக்கப்படும்வரை, தமிழ்த் தேசியக் கட்டமைப்புக்களுடன் நல்லுறவைக் கொண்டிருந்த திரு. உருத்திரகுமாரன் அவர்கள், தேர்தலின் பின்னர் பெரும்பாலும் மோதல் போக்கையே மேற்கொண்டு வருகின்றார் அல்லது, புலம்பெயர் தமிழ்த் தேசியக் கட்டமைப்புக்களை சிதைக்கும் நோக்கில் செயல்படும் ‘கே.பி.’ குழுவினருக்கு ஊக்கம் கொடுத்து வருகின்றார் என்பது வெளிப்படையான உண்மை.

கனடாவில், தமது நிகழ்ச்சி நிரலுடன் ஒத்து வராதவாகள்மீது கே.பி. குழுவினர் நடாத்தும் அசிங்கமான சுவரொட்டி, விளம்பரத் தாக்குதல்கள், நேரடி, தொலைபேசி அச்சுறுத்தல்கள் குறித்த முறைப்பாடு பிரு. உருத்திரகுமாரன் அவர்களது கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட போதும், அவரால் அது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. பிரித்தானியாவில், கே.பி. குழுவினர் இருவரைப் பதவிக்குக் கொண்டு வருவதற்காக, நீண்டகால தமிழ்த் தேசியப் பணியாளர்கள் இருவர் அச்சுறுத்தப்பட்டு, அவர்களது இராஜினாமா கடிதங்கள் பெறப்பட்டது. பிரான்சில், கே.பி. குழுவின் தலைவரது விருப்பத்தினை நிறைவேற்றுவதற்காக, மக்களால் தெரிவு செய்யப்பட்ட மூன்று மக்கள் பிரதிநிதிகளது தெரிவு இடை நிறுத்தி வைக்கப்பட்டது. ஜெர்மனியிலும், இத்தாலியிலும், அவுஸ்திரேலியாவிலும் தெரிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டு, இரண்டாவது அமர்வில் எழுப்பப்படக் கூடிய கேள்விகளுக்காக அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆக மொத்தத்தில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ‘கே.பி.’ குழுவின் நிகழ்ச்சி நிரலுடன் ஒரு சிறு குழுவாகச் சிதைந்து போகும் அபாயம் அதிகமாகவே உள்ளதை மறுக்க முடியாது.

எனவே, நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் திரு. உருத்திரகுமாரன் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை மக்கள் மயப்படுத்த முன்வரவேண்டும். புலம்பெயர் நாடுகளில், விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டு, தேசியத் தலைவர் அவர்களால் நெறிப்படத்தப்பட்ட கட்டமைப்புக்கள் இன்றும் புலம்பெயர் தமிழர்களிடமிருந்து பிரித்தெடுக்க முடியாத பலம் கொண்டவையாகவே உள்ளன. யுத்த காலங்களில் உருவான நெருக்கடி நிலைகளில் புலம்பெயர் தமிழ்த் தேசியக் கட்டமைப்புக்களது நிதி சேகரிப்பு பல நாடுகளில் சட்டச் சிக்கல்களை உருவாக்கி. கைதுகளும் இடம்பெற்றாலும் மக்கள் மத்தியில் அவர்கள் இப்போதும் பலமாகவே உள்ளனர். இந்த மக்கள் சக்திகளின்மீது திரு. உருத்திரகுமாரன் அவர்கள் முரண்பாடுகளையும், எதிர் நிலையையும் மேற்கொள்வது நாடு கடந்த தமிழீழ அரசினைப் பலப்படுத்துவதற்கு உதவாது என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டிய யதார்த்தம்.

அண்மையில், பிரான்சின் ‘கே.பி.’ குழுவினரால் உருவாக்கப்பட்ட ‘தமிழர் நடுவம்’ என்ற எதிர்ப் புரட்சிக் குழுவின் செயற்பாடுகளில் நாடு கடந்த தமிழீழ அரசுக்கான மக்கள் பிரதிநிதிகள் மூவர் கலந்து கொண்டு. அவர்களை உற்சாகப்படுத்தியதையும், தமிழர் நடுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட ‘கேர்ணல் கிட்டு’ நினைவு நிகழ்ச்சியில் நாடு கடந்த தமிழீழ அரசின் முதலாவது அடையாள அட்டை விநியோகிக்கப்பட்டதையும் நாடு கடந்த தமிழீழ அரசுக்கான ஆதரவுத் தளத்தைச் சிதைப்பதாகவே அமைந்தது என்பதை திரு உருத்திரகுமாரன் அவர்கள் புரிந்துணர முற்பட வேண்டும்.

சிங்கள தேசத்தால் வேகமாக முன்னெடுக்கப்படும் தமிழின அழிவு, தமிழர் நில ஆக்கிரமிப்பு, தமிழர் மீதான பொருளாதார முடக்கல், சிங்கள – பௌத்த மயமாக்கல் போன்ற கொடூர நிகழ்வுகளிலிருந்து ஈழத் தமிழர்களை மீட்க வேண்டிய அவசரமான காலத்தில், புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் முரண்பாடுகளையும், பிளவுகளையும் உருவாக்குவதற்கு முயல்வது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத தமிழினத் துரோகமாகவே வரலாற்றில் பதிவாகும்.

உருத்திரகுமாரன் வரலாற்றில் இன்னொரு பிரபாகரனாகப் பதிவாகப் போகிறாரா? என்பதை அவர்தான் தீர்மானிக்க வேண்டும்!

- சுவிசிலிருந்து கதிரவன்

நாடுகடந்த அரசு விடுதலைப்புலிகளின் பினாமி அமைப்பு. ணேல் கிட்டு நிகழ்வில் அது தனது அடையாள அட்டையை விநியாகித்திருக்கிறது அதற்கு சாட்சி என்று இந்த உளவாளி பிரான்ஸ் அரசுக்கு முறைப்படுசெய்திருக்கிறார்.

விடுதலைப்புலிகள் வேறு தமிழ் மக்கள் வேறு அல்ல. தமிழ் மக்களால் நேசிக்கப்பட்ட ஒரு தேசிய வீரனின் நிகழ்வில் அடையாள அட்டை வழங்குவது தறவல்ல என்று நாடுகடந்த அரசு பிரான்ஸ் அரசுக்கு அறிவித்திருப்பதாகவும் அறிய முடிந்தது.

இந்தக் கதிரவன் என்பவர் சுவீசிலிருந்து எழுதவில்லை பாரிசிலிருந்தே எழுதுகின்றார். பாரிசிலிருந்து செயற்படும் கோத்பாய நந்கோபன் கும்பலின் முக்கியமான உளவாளி இவர்.இவரது நோக்கம் விடுதலைப்புலிகளின் தடையை நீக்க போராடும் தமிழர் நடுவத்தை முடக்குவதும் நாடுகடந்த அரசை உடைப்பதும் தான்.

இந்த நபரும் இவருக்கு உடந்தையாக இருப்பவர்களும் போடும் தேசிய தூண்டிலில் சிக்கி தமிழ் தேசியத்துக்காக நீங்கள் உழைத்த உண்மையான உழைப்பை கோத்தபாயவுக்கு ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்தவிடாதீர்கள

பரிசில இருக்கிற ஈழநாடு பாலச்சந்திரன் எண்டவர்தான் இதை எழுதியிருக்கிறார்.

இது என்ன புதிசான கேள்வி பிறக்குது?

இன்னொரு பிரபாகரனால் யாரும் வரமுடியாது.. சுபாஸ் சந்திரபோஸ் இந்திய சுதந்திர போராட்ட வீரர் அவரின் இராணுவ அழுத்தங்கள் பிரித்தானியர்களுக்கு எதிரான சக்திகளுடன் கூட்டு சேர்ந்து ஆயுத படைகளை உருவாக்கியமை, இந்தியா நாட்டை சுதந்திர நாடாக பிரகடனம் செய்தமை போன்ற பெருமளவு அழுத்தங்கள் இந்திய விடுதலைக்கு வித்திட்டது. இதுபோல்தான் விடுதலைப்புலிகளின், தலைவரின் போராட்டமும். அதற்காக யாரும் தலைவர் பிரபாகரன் போலவோ அல்லது சுபாஸ் சந்திரபோஸ் போலவோ ஆகவேண்டும் என்றோ ஆக்கவேண்டும் என்றோ திணிக்க முடியாது.

பிரபாகரன் போல யாரும் எதிர்காலத்தில் அடக்குமுறைக்குள்ளாகி இருக்கும் நிலத்தில் பிறக்கலாம்.

அதுவரை பொறுத்து இருக்காமல் வேறு வழியில் எமது சுதந்திரத்தினை பெற முயற்சி செய்யவேண்டும்.

சுருக்கமாக சொல்லப்போனால் ஒரு தலைவன் வழிகாட்டி இருக்கின்றான் அந்த வழியில் எல்லோரும் ஒருங்கிணைந்து போராடவேண்டும். அதனைத்தான் பலர் செய்ய முற்படும் வேளை தலைவர் மாதிரியே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது.

யாரையும் யாருடன் ஒப்பீடு செய்ய வேண்டிய அவசியம் இல்லை மாறாக நாட்டிற்காக செய்ய வேண்டியதை உணர்ந்து செய்யுங்கள்.

தம்மைத் தமிழ்த் தேசியவாதிகளாக இனம் காணுபவர்கள் இதுவரையில் என்ன செய்திருக்கிறார்கள்?? செய்ததெல்லாம் நாடுகடந்த அரசின் மீதும், அதன் தலைவர் உருத்திரகுமாரன்மீதும் சேற்றை அள்ளி வீசியதுதானே?? உங்களுக்கு உண்மையிலேயே தேசியத்தின் மீதும், தேசியத் தலமை மீது நம்பிக்கையிருந்தால் உங்கள் வறட்டுக் கவுரங்களைத் தூர எறிந்துவிட்டு சேர்ந்து செயாற்படுங்கள். வெறுமனே இருட்டினுள் இருந்துகொண்டு புழுதி வாரித் தூற்றுவதில் யாருக்கும் எந்தப் பயனுமில்லை.

தென்சூடானில் இடம்பெற்ற சர்வசன வாக்கெடுப்பிற்கு நாடுகடந்த தமிழீழ அரசுக்கு அழைப்புக் கிடைத்திருக்கிறது. இதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு மேலும் அங்கீகாரங்களைப் பெறப் போராட வேண்டும். அதை விடுத்து மேலே எழுந்துவருபவனை கிழே இழுத்து விழுத்தும் கைங்கரியங்கள் இனியும் வேண்டாம்.

... இவற்றை புரியும் நிலையிலா, புலத்தில் ஏகபோகத்துக்கு தமிழ்த்தேசியத்தை குத்தகைக்கு எடுத்த தண்டச்சோறுகள் இருக்கிறார்கள்?????? ... எவ்வளவு சேற்றை அள்ளி வீச முடியுமோ, அவ்வளவற்றையும் வீசுகிறார்கள்!! ...

.... இவர்களுக்கு சொல்லி திருந்தும் நிலையில் இவர்கள் இல்லை!!!! .. ஒன்றில் இவர்கள் தம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்/திருந்த வேண்டும் .... இல்லையேல் இவர்களை தூக்கி எறிய வேண்டும் ... அது எவ்வழியாகிலும் .....

குறை சொல்வதும் குற்றம் பிடிப்பதும் மிக இலகுவான விடயங்கள்... ! ஆனால் செய்து பார்ப்பது கடினமானது...

ஓரிருவர் மீது இருக்கும் சந்தேகத்துக்காக ஒட்டுமொத்தமாக எல்லாரையும் ஒதுக்கி வைப்பது சரியானதாக எனக்கு படவில்லை... அதுவும் KP தன்னை தானே தோலுரித்து காட்டியதின் பின்னர் அவருக்கு தங்களுக்கும் சம்பந்தமே இல்லை எண்று அமைப்புக்கள் வெளிப்படையாக காட்டிய பின்னரும், சிங்கள அடக்கு முறைக்கு எதிராக செயற்படும் தமிழர்களை குறை கூறுவது எதையும் முன்னோக்கி நகர்த்தாது...

KP எனும் குழப்பவாதம் அடையாளம் காணப்பட்ட பிறகு இப்ப வேண்டுவது பரஸ்பரம் நம்பிக்கையை வளர்ப்பது மட்டுமே...!

உங்களுக்கு ஒரு அமைப்புக்குள் இருக்கும் ஓரிருவர் மீது சந்தேகம் இருந்தால் சொல்லலாம் ஆனால் அமைப்புக்களை சாடாதீர்கள்... அவர்களும் எங்களவர்களே...

Edited by தயா

அண்மையில் வெளிப்பட்ட பெரும்பாலான இந்திய ராஜதந்திரிகளின் தமிழ் மக்கள் மீதான போலிக் கரிசனைகளையும், இந்திய - இலங்கை உடன்படிக்கையின் பலவீனத்தையும், இந்திய அரச பயங்கரவாத குழுக்களின் தாளத்துக்கு ஆடும் கூட்டங்களையும், கருணாநிதியின் உண்மை சொரூபத்தையும், சமாதான ஒப்பந்தத்தின் பின்னர் கூட்டமைப்பிற்காக தெரிவுசெய்த கட்சிகளும் (கப்பம், கடத்தல், கொள்ளை, கொலைகளில் கைந்தேர்ந்த கூட்டத்தை ஒதுக்கியமையும்) பிரபாகரன் அவர்களது தீர்க்க தரிசனமான முடிவுகளில் சில. இவற்றில் சிலவற்றை புரிந்துகொள்ள பலருக்கு 20 வருடங்கள் தேவைப்பட்டது.

அப்படிப்பட்ட ஒரு மாபெரும் தலைவரின் இடத்தை தனியொருவர் நிரப்புவது முடியாத காரியம் என்பது தெளிந்த சித்தமுடைய தமிழர்கள் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பரந்திருக்கும் தலைசிறந்த ராஜதந்திரிகளின் கருத்தாகவும் உள்ளது.

தமிழினத்தின் மீது உண்மையான அக்கறை உடையவர்கள், குழுக்கள் இதனை உணர்ந்து அவரை பலப்படுத்தியிருப்பார்கள். ஆனால் அது தேவையான அளவில் நடக்கவில்லை.

பின்னடைவுக்கு காரணம் சதிகாரர்கள் பலர் இணைந்து செய்த வஞ்சனைகளும், சாதாரண தமிழ் மக்களின் சுயநலமுமே முக்கிய காரணம் எனலாம்.

பலவருடகளில் கட்டி முடிக்கப்பட்ட அமெரிக்காவின் சர்வதேச வர்த்தக மையம் 90 நிமிடங்களில் தரைமட்டமாகியது. இதனால் அமெரிக்காவின் வல்லமையை யாரும் குறைத்து மதிப்பிட்டுவிடவில்லை.

இந்த பின்னணியில், அவருடன் இன்னொருவரை ஒப்பிடும் முயற்சியில் கடைந்தெடுத்த மடையர்களே ஈடுபடுவர்.

பிரபாகரன் அவர்களது வாழ்கையில் இருந்து அர்த்தமுடைய வகையில் சில பாடங்களைக் கற்றுக் கொண்டாலே ஒருவர் தமிழினத்தை தொடர்ந்து நடத்தும் பலத்தை பெற்றுவிடலாம்.

அதை திரு. உருத்திரகுமார் மெதுவாக செய்து வருகிறார், வெற்றிபெறுவார் என்ற நம்பிக்கையும் உள்ளது.

அர்த்தமுள்ள விமர்சனங்கள் வரவேற்கப்பட வேண்டியது தான்.

ஆனால், விமர்சனப் பாதைகள் மாறி மறைமுகமாக புதுக்கதைகளை புகுத்தி, குழப்பங்களை ஏற்படுத்த முனைபவர்களை தமிழ் மக்கள் அடையாளம் கண்டு ஒதுக்கிவிடுவார்.

  • கருத்துக்கள உறவுகள்

தேசியத்தலைவர் ஒருவர்தான்

அவரது இடத்தை யாரும் நிரப்பமுடியாது. நிரப்பவும்கூடாது.

ஆனால் அதற்கு அடுத்து தமிழரது போராட்டத்தை நகர்த்துவது யார் என்பதைப்பொறுத்து தமிழருக்கான அடுத்த தலைவர் வேண்டுமானால் தெரிவு செய்யப்படலாம். அவர் திரு. உருத்திரகுமார் அவர்களாகக்கூட இருக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.