Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாங்கள் தினந்தோறும் தாலி அறுப்பதை வேடிக்கை பார்க்க நினைக்கிறாரா ப.சிதம்பரம்-மீனவப் பெண்கள் ஆவேசம்

Featured Replies

சென்னை: சென்னையில் உள்ள மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த முயன்ற மீனவ சமுதாய பெண்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தினந்தோறும் மீனவர்கள் கொலை செய்யப்படுவதைத் தடுக்காமல், நாங்கள் தாலி அறுப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் ப.சிதம்பரம் என்று அவர்கள் ஆவேசமாக குற்றம் சாட்டினர்.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 100 பெண்களைப் போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

இலங்கை கடற்படை தொடர்ந்து தமிழக மீனவர்களை கொன்று குவித்து வருகிறது. கடலுக்குள் போகும் மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த செயலைக் கண்டித்தும், தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கத் தவறிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தைக் கண்டித்தும் அவரது வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த பல்வேறு அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. இதையடுத்து அவரது சென்னை வீட்டுக்குப் பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னை காசிமேட்டைச் சேர்ந்த மீனவப் பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிதம்பரம் வீட்டை நோக்கி திடீரென திரண்டு வந்ததனர்.

இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கையில் பூ, பழம், புடவை உள்ளிட்டவற்றுடன் ஆவேசமாக வந்த அவர்கள் ப.சிதம்பரம் நோட்டை முற்றுகையிடும் நோக்கில் அவரது வீடு உள்ள சாஸ்திரி பவன் பகுதியில் வந்தபோது போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்திக் கைது செய்த வேனில் ஏற்றிச் சென்றனர்.

மீனவர் வாழ்வுரிமை இயக்கம், இந்து மக்கள் கட்சி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவற்றைச் சேர்ந்தவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இந்தப் போராட்டம் தொடர்பாக மீனவர் வாழ்வுரிமை இயக்கத்தைச் சேர்ந்த சமுத்திரா தேவி கூறுகையில், தினந்தோறும் ஒரு மீனவர் கொல்லப்பட ஒரு பெண் தாலி அறுக்கிறார். இதை ப.சிதம்பரம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். எங்களுக்குப் பாதுகாப்பு இல்லை.

ஒரு உயிருக்கு 5 லட்சம் ரூபாய் தருவதாக கூறுகிறார்கள். அது எங்களது கணவர்களாக மாறுமா, எங்களது பிள்ளைகளாக மாறுமா, எங்களது பறிபோன வாழ்க்கை திரும்ப வருமா என்று ஆவேசமாக கேட்டார்.

இன்னொரு பெண் கூறுகையில், எங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும். இல்லாவிட்டால் மிகத் தீவிரமான முறையில் தினசரி போராட்டத்தை நடத்தத் தயங்க மாட்டோம் என்றார்.

இந்தப் போராட்டம் காரணமாக ப.சிதம்பரம் வீட்டுக்குக் கூடுதல் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

இதேபோல காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன், இலங்கை துணைத் தூதரகம் ஆகியவற்றுக்கும் பாதுகாப்பு போட்டுள்ளனர்.

காங்கிரஸ் கட்சி பயங்கரவாதிகள் தமிழகத்தில் மட்டுமல்ல தென் இந்தியாவில் இருந்து விரட்டியட்டிக்கப்பட வேண்டும்.

பல நாட்டு சர்வாதிகள் விரட்டப்பட்டது போல, இந்த சோனியா குடும்பமும் இத்தாலிக்கோ இல்லை வேறு எங்காவதோ கொள்ளையடித்த பணத்துடன் விரட்டியடிக்கப்படுவார்கள் என்றால் அது இந்தியாவுக்கு மீண்டும் ஒரு சுதந்திரம் பெறுவது போன்றது.

ஐஞ்சு லச்சமும் அரசாங்க வேலையுமாம்முங்கோ..

நானாயிருந்தா சிலோனுக்கு ரெஜிபோம் மட்டையில் ஒன்வெ போயிருப்பேன்...

பல நாட்டு சர்வாதிகள் விரட்டப்பட்டது போல, இந்த சோனியா குடும்பமும் இத்தாலிக்கோ இல்லை வேறு எங்காவதோ கொள்ளையடித்த பணத்துடன் விரட்டியடிக்கப்படுவார்கள் என்றால் அது இந்தியாவுக்கு மீண்டும் ஒரு சுதந்திரம் பெறுவது போன்றது.

சிதம்பரம் வென்றதே ஓட்டு மெசினை செற் ப்ண்ணி வெற்றி என்று கடைசி நேரத்தில் அறிவித்தார்கள். இந்திக்காரனுக்கு அந்த விசுவாசத்தை காட்டனுமே

மண் மோகனின் டவுசரும் ,சோனியா பண்ணியின் பாவாடையும்,இத்தாலி எருமைக்கு தப்பாது தாளமிடும் சப்பாணி கழுதைகள் கருணையில்லாத நீதி, சிதம்பரம், எல்லா மலையாள சதிகாரர்கள் இவர்களின் வேட்டிகளும் உருவப்படுவது எப்போ....? பொன்சேகாவை அரை டிராயரோட பார்க்கேக்கே கடவுள் இருக்காரு இதெல்லம் விரைவில நடக்கும்போல தான் படுது.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.