Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உப்புக்கும் தண்ணீருக்கும் கூட நாதியில்லாமல் போய்விட்ட யாழ்ப்பாணம்

Featured Replies

கடும் யுத்த காலமாக இருந்த கடந்த 30 ஆண்டுகளில் கூட யாழ்ப்பாணம் குடிநீருக்காக கொழும்பை நம்பி இருந்ததில்லை. ஆனால் தற்போது டசின், டசினாக தண்ணீர் போத்தல்களை வெளிமாவட்டங்களில் இருந்து இறக்குமதி செய்யும் நாதியற்ற நிலையினை யாழ்ப்பாணம் அடைந்து வருகின்றது என்று தெரிவித்தார் யாழ். வர்த்தக கைத்தொழில் சங்கத்தின் தலைவர் பூரணச்சந்திரன்.

யாழ். நகரில் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச வர்த்தகக் கண்காட்சியினை முன்னிட்டு யாழ் பொதுநூலக கேட்போர் கூடத்தில் 'வடக்கு மாகணத்தில் பொருளாதார வர்த்தகச் சூழல்' எனும் தலைப்பில் கருத்தரங்கு இடம்பெற்றது.

இதனை யாழ். வர்த்தக கைத்தொழில் சங்கத்தின் தலைவர் புவனேந்திரன் ஆரம்பித்து வைத்தார்.

"ஆனையிறவில் உற்பத்தி செய்யபட்ட உப்பினை இலங்கையின் எல்லா மாவட்டங்களிற்கும் விநியோகித்து வந்த யாழ்ப்பாணம், தற்போது இந்தியாவில் இருந்து உப்பை இறக்குமதி செய்து நுகருகின்ற நிலைக்கு வந்துள்ளது. இது யாழ்ப்பாணத்தின் நாதியற்ற நிலையினை வெளிப்படுத்துகின்றது" என்று தெரிவித்தார் புவனேந்திரன்.

இலங்கையில் முதலீடு செய்ய திட்டமிடுவோர் யாழ்ப்பாணத்தை விரும்புவது வரவேற்கத் தக்கது என்று தெரிவித்த அவர், "எடுத்துக்காட்டாக பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெறும் சர்வதேச வர்த்தக கண்காட்சியில் கூட சுமார் 150 காட்சி கூடங்கள் வரையிலேயே அமைக்கப்படும். ஆனால் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றும் வர்த்தகக் கண்காட்சியில் சுமார் 300 வரையான காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளமை முதலீட்டாளர் கவனம் யாழ்ப்பாணத்தை நோக்கி திரும்பியிருப்பதைக் காட்டுகின்றது" என்றார்.

தனது உரையில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்கள் யாழ்ப்பாண உற்பத்திகைள அதிகமாக விரும்புகின்றனர். அரிசிமா, பழவகைகள் போன்றவற்றை சிறப்பான உணவுப் பதனிடல் தொழில் நுட்பத்தை கையாண்டு இந்நாடுகளிற்கு ஏற்றுமதி செய்ய முடியும்.

ஆனால் அதற்கான சிறந்த வசதிகள் இன்னும் கிடைக்கவில்லை. யாழ்ப்பாணத்தில் உள்கட்டுமானங்களில் அரசின் அவதானம் போதாமலே உள்ளது. பிரதானமாக யாழ்ப்பாணத்திற்குள் நுழைவதற்காக காணப்படும் வீதியின் தரம் பருவகால மாற்றங்களிற்கு ஏற்ப மாறும் தன்மையுடையதாக இருப்பது முதலீட்டாளரின் ஆர்வத்தை பாதிக்கின்றது - என்றார்.

http://www.onlineuthayan.com/News_More.php?id=85

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பிரதேசத்தின் பொருளாதார அபிவிருத்தி என்பது முதலீட்டாளர்களை கவர்ந்திழுப்பதில் மட்டும் தங்கி இருக்கவில்லை.

அந்த நிலத்தின் பாதுகாப்பு.. அரசியல் ஸ்ரத்தன்மை.. உட்கட்டமைப்பு வசதிகள்.. போக்குவரத்து.. வெளி உலகத்துடனான தொடர்பாடல்கள்.. வர்த்தக ஏற்றுமதிக்கான வாய்ப்புக்கள். உள்ளூர் வெளியூர் சந்தை நிலவரங்கள்.. மக்களின் வருவாய்.. மக்களின் வாழ்க்கைத் தரம்.. மக்களின் தேவைகள்.. மக்களின் கல்வி அறிவு.. இப்படி பல காரணிகளில் தங்கி இருக்கின்றன.

தற்போதைய இந்தக் கண்காட்சி முதலீட்டாளர்களை ஊக்குவிக்குதோ இல்லையோ.. யாழ்ப்பாணம் உட்பட போரால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களின் தாயகத்தில் இயல்பு நிலையும் அரசியல் ஸ்ரத்தன்மையும்.. உட்கட்டுமான வசதிகள் மற்றும் போக்குவரத்து மேம்பாடும் அவசியம் என்பதை உணர்த்துகிறது.

முன்னர் இல்லாத அளவிற்கு ஐரோப்பிய.. அமெரிக்க.. அவுஸ்திரேலிய ஏற்றுமதிகளுக்கான வாய்ப்பு கூடி இருக்கிறது என்பது உண்மை. ஆனால் அதற்கான தரத்தை எட்டுமளவிற்கு யாழ்ப்பாணத்தில் உட்கட்டுமானமும் இல்லை தொழில்நுட்ப வளர்ச்சியும் இல்லை அதற்குரிய கல்வி அறிவு தொழில் அனுபவம் பெற்ற மக்களும் போதியளவுக்கு இல்லை. அதுமட்டுமன்றி யாழ்ப்பாணத்தில் இருந்தான நேரடி வர்த்தக ரீதியான விமான மற்றும் கப்பல் போக்குவரத்து செய்து தரப்படும் போதே யாழ்ப்பாணத்து உற்பத்திகளை நுகர்வதற்கான நாட்டமும் அதிகரிக்கும்.

யாழ்ப்பாணம் இராணுவ ஆக்கிரமிப்புக்குள் வந்து 16 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும்.. போர் ஓய்ந்து கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் எட்டப்பட்டுள்ள நிலையிலும்.. யாழ்ப்பாணம் எந்த ஒரு அபிவிருத்தியையும் சந்திக்கவில்லை. உள்ளூர் இரயில் போக்குவரத்தையாவது மீளமைச்சிருக்கலாம். உள்ளூர் மின்சார வசதிகளை உறுதிநிலைக்கு கொண்டு வர முயன்றிருக்கலாம். துறைமுகங்களை அபிவிருத்தி செய்திருக்கலாம். உள்ளூர் வீதிகளை தரமுயற்சி திருக்கலாம். தொழிற்சாலை கட்டிடங்களுக்கான பிரதேசங்களை தேர்வு செய்திருக்கலாம். இது எதனையும் செய்யாமல் 16 ஆண்டுகளை கடத்திவிட்டு.. போர் போர் எல்லாம் புலிகளால் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றல்ல. இதே நிலை கிழக்கில் மட்டக்களப்பு.. திருமலை நகரங்களிலும். அவை 1990 இல் இருந்து இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றன. அங்கும் புலி போரா..???!

யாழ்ப்பாணத்துக்கு என்றான ஒரே ஒரு விமான நிலையம்.. இராணுவ தேவைகளை கருதி எழுந்து நிற்கிறது. யாழ்ப்பாணத்திற்கான கப்பல் துறைமுகங்கள் அடிப்படை வசதிகள் இன்றி சிறீலங்கா கடற்படை கப்பல்கள் படகுகள் ஓடி விளையாடும் இடங்களாக உள்ளன.

இந்த நிலையில் யாழ்ப்பாண உற்பத்திகளை கொழும்பு வியாபாரிகளுக்கு மலிவு விலையில் விற்று அவர்கள் கொள்ளை இலாபம் அடிக்க அனுமதிப்பதால்.. யாழ்ப்பாண உற்பத்தியாளர்களோ முதலீட்டாளர்களோ பெரிய நன்மைகளைப் பெறப் போவதில்லை.

அடிப்படையில் இராணுவ மயமாக்கம் உள்ள நிலையில்.. யாழ்ப்பாண மக்கள் விரும்பும் வகையில் அரசியல் ஸ்ரத்தன்மை அற்ற சூழலில்.. பெரிய முதலீடுகளையோ உட்கட்டுமான வசதிகளுக்கான முதலீடுகளையோ முதலீட்டாளர்கள் செய்ய வாய்ப்பில்லை.

யாழ்ப்பாணம் தொடர்ந்தும்.. இன்றைய சிங்கள இராணுவ மயப்படுத்தப்பட்ட நிர்வாகத்தின் கீழ் இருப்பின்.. டக்கிளஸ்.. மற்றும் இராணுவ முகவர் மயப்படுத்தப்பட்ட வர்த்தக மையமாகவே அது இருக்கும். வேறு உருப்படியான அபிவிருத்தியை அது காண முடியாது. இதுதான் யதார்த்தம். இதுவே வடக்குக் கிழக்கு எங்கனும் உள்ள நிலை.

முதலில் இராணுவ வெளியேற்றம். உயர் பாதுகாப்பு வலைய நீக்கம். பாதுகாப்பு உத்தரவாதம். அரசியல் ஸ்ரத்தன்மை. இவற்றை கட்டி எழுப்பி விட்டுத்தான் இந்தக் கண்காட்சியையே நடத்தி இருக்க வேண்டும். யாழ் பல்கலைக் கழக சமூகத்திற்கு அந்த பிரதேசத்தின் தொழில்நுட்ப வர்த்தக உட்கட்டுமான வசதிகளை பெருக்குவது அபிவிருத்தி செய்வது தொடர்பான அக்கறை இருக்க வேண்டும். அவர்களோ குத்தாட்டமும்.. அரசியல் வால்பிடியிலும் ஈடுபட்டுள்ளனரே தவிர சமூகத்தை எதிர்காலம் நோக்கி தயார்படுத்த முயல்பவர்களாக இல்லை. அந்த வகையில் இந்தக் கண்காட்சி காலத்துக்கு முந்தைய அவசரத்தனம் அல்லது ஏதோ தேவைக்காகக் கூட்டிய கண்காட்சி போன்றே இருக்கிறது. :rolleyes::o

Edited by nedukkalapoovan

ஐயா பூரண சந்திரன் அவர்களே

நீங்கள் யாழில் ஒரு தொழில் நுட்ப முன்னோடி பல கைத்தொழில்களை 1990 களில் செய்தீர்கள்.

இப்போ நிங்கள் கூறுவது போன்று ROAD பிரச்சினை மட்டும் முதலீடுகளை கவர பிரச்சினையாக இல்லை. ROAD MAP ம் பிரச்சனையே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.