Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனித் தமிழ் ஈழத்துக்கான சர்வதேச ஆதரவென்பது சாத்தியமற்றதென்ற நிலப்பாட்டுடன் மத்தியஸ்த்தத்தில் ஈடுபட்ட எரிக் சொகெயிம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தனித் தமிழ் ஈழத்துக்கான சர்வதேச ஆதரவென்பது சாத்தியமற்றதென்ற நிலப்பாட்டுடன் மத்தியஸ்த்தத்தில் ஈடுபட்ட எரிக் சொகெயிம்

தனி நாட்டிற்கான சர்வதேச ஆதரவு ஒருபோதுமே வரப்போவதில்லை என்கிற மனநிலையோடுதான் தான் தான் மத்தியஸ்த்தத்தில் ஈடுபட்டதாகச் சொல்லியிருக்கும் எரிக் சொல்கெயிம் அவர்கள், மீளவும் தான் அரசுக்கும், புலம்பெயர் தமிழர்கள் உற்பட்ட தமிழ் மக்களுக்குமிடையில் மத்தியஸ்த்தம் செய்யத் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

இது இவ்வாறிருக்க மறைந்த முன்னால் தமிழீழ அரசியல்ப்பிரிவுப் பொறுப்பாளர் திரு. தமிழ்ச்செல்வனுக்கும் நோர்வே சமாதன ஏற்பாட்டாளர்க் குழுவுக்குமிடையில் நடைபெற்ற பேச்சுக்களுக்களின்போது அவர்கள் சூடானைப் போன்று இலங்கையிலும் தனிநாட்டிற்கான சாத்தியம் உள்ளதாக கூறியதாக அப்பேச்சுவார்த்தைகளை ஆதாரம் காட்டி புலம்பெயர் தமிழ் வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன. இதைத் தமிழ்ச்செல்வன் அவர்களே தமிழ்நெட் இணையத் தளத்திற்கு நேரடியாக உறுதிப்படுத்தியிருந்தார்.

சமாதானப் பேச்சுவார்த்தைகளின்போது தாம் பக்கச் சார்பாக நடந்துகொள்ளவில்லை என்று இன்று சொல்லிவரும் சொல்கெயிம் அவர்கள் உண்மையிலேயே பக்கச் சார்பாகத்தான் நடந்து வந்திருக்கிறார் என்பது தற்போது தெளிவாகிறது. ஒரே காலப்பகுதியில் சூடானிலும் இலங்கையிலும் மத்தியச்த்த முயற்சிகளில் ஈடுபட்ட நோர்வே நாடு இலங்கை விவகாரத்தில் மட்டும் "பக்கச் சார்பாக" நடந்துகொண்டதன் மர்மம், இந்தியாவா அல்லது எண்ணெய் வளமா, அல்லது கிறீஸ்த்தவ - முஸ்லீம் வெறுபாடுகளா அல்லது தமிழீழம் தேவையற்றது எனக்கருதிய சில புலம்பெயர் ஈழ ஆதரவாளர்களா என்பதை தமிழர் இனி ஆராய்ந்து பார்ப்பது நல்லது.

போர் முடிந்த கையோடு தனித்தமிழ் நாட்டிற்கான சர்வதேச ஆதரவு ஒருபோதுமே இருந்திருக்கவில்லை என்கிற புதுக்கதையுடன் சொல்கெயிம் அவர்கள் களமிறங்கியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் புலம்பெயர் தமிழ்ச் சமூகம் அப்போது செய்துவந்த தனிநாடுநோக்கிய அரசியல் செயற்பாடுகளை மழுங்கடிக்கும் நடவடிக்கைகளும் இவர்களால் அவ்வப்போது எடுக்கப்பட்டு வந்திருக்கின்றன. இதன் ஒரு விளைவாக வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் வாக்களித்த சில தமிழர்கள் ஆம் - இல்லை என்று வாக்களிக்கவே தயங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நோர்வேயில் நடைபெற்ற வட்டுக்கோட்டாஇத் தீர்மானத்தில் உதவுவதாகக் கூறியிருந்த நோர்வே தேர்தல் நிறுவனமொன்று "ஆம் - இல்லை" வாக்கட்டையையைப் பார்த்த பின்னர் அந்த நடவடிக்கையிலிருந்து விலகியிருந்ததென்பதும், அவுஸ்த்திரேலியாவில் முதலில் தமது ஆர்வத்தை வெளியிட்டிருந்த அவுஸ்த்திரேலிய தேர்தல் திணைக்களம், பின்னர் "வெளிவிவகார அமைச்சின் ஆலோசனைப்படி" விலகிக்கொண்டதையும் இங்கே நினைவுபடுத்துவது நல்லது.

ஆனால் இன்று சூடானியர்கள் "ஆம் - இல்லை " வாக்குகளை எந்தவித தடங்கலோ இடையூறுகளோ இன்றி அளிக்கப்போகிறார்கள். நோர்வேயின் சமாதான ஏற்பாடுகலை நியாயப்படுத்திவரும் சில வட்டாரங்கள் சூடானியர்கள் சமாதான ஒப்பந்தத்தை எந்தத் தறுவாயிலும் விட்டு விலகவில்லை என்றும் ஆனால் புலிகள் தொடர்ந்தும் யுத்தத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறி வருகிறார்கள்.

அண்மையில் நோர்வேயில் தமிழ்வட்டாரங்களுடன் பேசிய சொல்கெயிம் அவர்கள் "புலிகள் சரணடைந்திருந்தால் பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பாதுகாத்திருக்க முடியும்" என்று கூறியிருக்கிறார். "போரின் இறுத்திப்பகுதி நடந்த விதம் விதம் மிகவும் வருந்தத் தக்கது. போரின் முடிவு என்னவாக இருக்கும் என்பது ஏற்கனவே தெரிந்து விட்ட நிலையில் புலிகள் வேறுவகையான முடிவொன்றை எடுத்திருப்பார்கள் என்று நிச்சயமாக ந்மபியிருந்தேன், அதுவே நான் அவர்களுக்கு முன்வைத்த ஆலோசனையாகவும் இருந்தது" என்றும் கூறியிருக்கிறார்.

கொழும்பைத் தொடர்ந்து ஆதரித்துக்கொண்டும், புலிகளைச் சரணடையுமாறும் தொடர்ந்தும் கோரி வந்த நோர்வேயும், இணைத்தலமை நாடுகலும் சுதந்திரமான மூன்றாவது அமைப்பொன்றின்மூலமான சரண்டைதலை இறுதிவரையிலும் மேற்கொள்ள ஏன் தயாராக இருக்கவில்லை என்பதை அவர்களே விளங்கப்படுத்துவது நல்லது. சிலவேளை "தவிர்க்கமுடியாதது " என்று அவர்களே நினைத்திருந்த முடிவு நடக்கும் என்கிற நம்பிக்கையில் அவர்கள் அப்படி இருந்திருக்கலாமோ என்னவோ??!!

சரி, இவர்கள் சொல்வதுபோல கொழும்பிடம் சரணடைந்திருதால் என்ன நடந்திருக்கும் என்பதை சரணடைந்து ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் போராளிகளைப் பார்த்து ஒருவர் இலகுவாகப் புரிந்துகொள்ள முடியும்.

புலிகளுக்கு ஆயுதம் வாங்க சொல்கெயிம் உதவினார் என்கிற கருணாவின் குற்றச்சாட்டை உடனடியாக மறுத்திருந்த சொல்கெயிம் அவர்கள், தானும், இணைத்தலமை நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியமும், அமெரிக்காவும் சேர்ந்து கே.பீ ஊடாக முன்வைத்த சரணடைதல் திட்டத்தைப் பிரபாகரன் அவர்கள் ஏன் புறக்கணித்தார் என்பதை இதுவரை சொல்லவில்லை.

கே.பீ இன் கூற்றுப்படி இவர்களால் முன்வைக்கப்பட்ட முதலாவது சரணடைதல் திட்டத்தின்படி எந்தவித வெளியார் அணுசரணையுமில்லாமல் கொழும்பிடம் நேரடியாகச் சரணடய வேண்டுமென்று கேட்கப்பட்டிருந்தது. அதுமட்டுமில்லாமல் மக்களை அடைத்துவைத்தல், விசாரணைக்கு உட்படுத்துதல், உயர் மட்டத் தலைவர்களை நாடுகடத்துதல், இடைநிலைத் தலைவர்களுக்கெதிராக கொழும்பு நீதிமன்ற விசாரணைகள் என்கிற சரத்துக்களும் சேர்க்கப்பட்டிருந்தன.

இந்திய பத்திரிக்கையாளரான நாராயண ஸ்வாமியை ஆதாரம் காட்டி நோர்வே செய்தித்தாளொன்று வெளியிட்ட அறிக்கையில் போரின் முடிவின்போது இந்திய உளவுப்பிரிவான ரோவுடன் சேர்ந்து செயற்பட்டிருந்த நோர்வே சமாதானக் குழு ஒன்று பற்றிய செய்திகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்த நோர்வேக் குழுவினர் பற்றிய தகவல்களை வழங்க அந்த இந்திய பத்திரிக்கையாளர் மறுத்துவிட்டதாக நோர்வே செய்தித்தாள் மேலும் தெரிவித்தது.

இதே செய்தி நிறுவனத்துக்கு 2010 இல் செவ்வியொன்றை வழங்கிய சொல்கெயிம் அவர்கள் தமக்கும் இந்திய உளவுப் பிரிவுக்கும் போரின் இறுதிக்கட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளை ஒத்துக்கொண்டிருந்ததோடு, அவை பற்றிய தகவல்களை வழங்க முடியாதெனவும் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்களை ஜனனாயக வழிமுறைகளைப் பின்பற்றி செயற்படுமாறு இன்று கோரிவரும் சொல்கெயிம் அவர்கள், இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உற்பட்ட வகையில் இந்த நடவடிக்கைகள் அமைக்கப்படல் வேண்டும் என்றும் கேட்டு வருகிறார். ஆனால் ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைத்து விட்டு பயங்கரவாத ஆட்சி புரியும் ஒரு நாட்டில் சனனாயக முறைப்படி தமிழர் செயற்படுவதென்பது எப்படிச் சாத்தியமென்பதை அவர்தான் விளங்கப்படுத்த வேன்டும்.

பிந்திய செய்திகளின்படி இலங்கையில் தமிழர் தாயகப் பகுதிகளில் உள்ளூராட்சித் தேர்தலில் கூட தமிழ் வேட்பாளர்கள் பங்குபற்றத் தயங்கிவரும் இவ்வேளையில், சிங்களப் பயங்கரவாதமானது தனது ராணுவக் கூலிப்படைகளின் மூலம் வேட்பாளர்களைக் கடத்தி வற்புறுத்திவருகிறதென்பது தெளிவாகிறது.

அண்மையில் புலம்பெயர் தமிழர்களுடன் உரையாடிய சொல்கெயிம் அவர்கள், தமிழர் தாயகத்தில் சிங்களம் திட்டமிட்ட குடியேற்றத்தில் ஈடுபடுவதற்கான ஆதாரங்களை உங்களால் நிரூபிக்க முடியுமா என்று வினவியிருக்கிறார். தமிழர் பிரச்சனை பற்றி எந்தவைகையான அடிப்படை அறிவுமற்ற ஒருவர் மீண்டும் எப்படி புலம்பெயர் தமிழர்களுடன் சமாதானம் பற்றிப் பேசப்போகிறார் என்கிற கேள்வியும் எழுகிறது.

ஆனாலும் சொல்கெயிமின் இந்த மாற்றத்திற்கான அடிப்படையும் இல்லாமலில்லை. தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு அமெரிக்கா போன மகிந்தவை அமெரிக்காவின் ரிச்சார்ட் ஆமிட்டேஜ் சந்தித்ததும், வடக்குக் - கிழக்கு இணைப்புக் கோரிக்கையை தமிழர் கூட்டமைப்பு இனிக் கைவிட வேண்டும் என்கிற இந்தியாவின் கோரிக்கையும் சொல்கெயிமின் புதிய போக்கின் பின்புலங்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்தப் பின்புலங்கல்தான் கொழும்புப் பயங்கரவாத அரசை மேலும் மேலும் இனவழிப்பில் ஈடுபடவும், குடியேற்றங்களைத் தீவிரப்படுத்தவும் ஊக்குவித்து வருகின்றன.

இலங்கையில் நடந்துவரும் இனவழிப்பைத் தடுத்து நிறுத்தி தமிழர்கான தீர்வொன்று வழங்கப்பட வேண்டுமென்றால் அது சுதந்திரம், இறையாண்மை, சுய நிர்ணய உரிமை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட வேண்டுமே ஒழிய சாத்தியமில்லை என்பதை இலங்கையில் சமாதான நடவடிக்கைகளில் ஈடுபட விரும்பும் தனிநபர்களோ அல்லது அமைப்புகளோ விளங்கிக்கொள்வது அவசியம். அத்துடன் இவற்றை அடைவதி புலம்பெயர் தமிழர் சமூகமும், தமிழ்நாட்டுத் தமிழர்களும் கடுமையாக உழைக்க வேண்டுமென்பதும் அவசியமாகிறது.

தமிழ்நெட்டிலிருந்து........

தமிழாக்கத்துக்கு நண்றி ரகு...

இன்னும் எங்கட ஆக்கள் புரிந்து கொள்ள நிறைய இருக்கிறது... அதோடு இப்படியான ஆக்கங்கள் படிக்கப்படாமல்

போவதோடு வெறும் கட்டுக்கதைகள் மட்டும் ஆதாரப்படுத்தப்படுவதோடு நடுநிலை எனும் பெயரில் எம்மவர்களால் இன்னும் காவப்படுகிறது...

Edited by தயா

உலகத்தமிழினத்தையே அழிக்க மற்றும் அடிமையாக்க எம்மில் உள்ள பலவீனங்களை பல எதிரிகளும் தொடர்ந்து முயன்ற வண்ணமே உள்ளனர். தமிழகத்தில் தொடர்ந்த வண்ணம் உள்ள (சிறு அளவில் என்றாலும்) இன உணர்வும், புலம் பெயர் தமிழரும் அவர்கள் இலக்காக உள்ளன.

தமிழாக்கத்துக்கு நண்றி ரகு...

இன்னும் எங்கட ஆக்கள் புரிந்து கொள்ள நிறைய இருக்கிறது... அதோடு இப்படியான ஆக்கங்கள் படிக்கப்படாமல்

போவதோடு வெறும் கட்டுக்கதைகள் மட்டும் ஆதாரப்படுத்தப்படுவதோடு நடுநிலை எனும் பெயரில் எம்மவர்களால் இன்னும் காவப்படுகிறது...

எங்கட ஆக்கள் உதை எல்லாம் வாசிக்க மாட்டீனம், பெட்டிக்கடை ரேஞ்சுக்கு தளம் வைத்து கண்ட கற்பனையெல்லம் எழுதுவான், அதை மட்டும் வாசிப்பீனம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.