Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா வின் பரிந்துரைகளை ஏற்க மறுப்பின் சிறிலங்காமீது நடவடிக்கை எடுக்கும் நிலை வரும்

Featured Replies

மகிந்த ராஜபக்க அரசால் மேற்கொள்ளப்பட்டதாகக் கருதப்படும் போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான இரண்டு அறிக்கைகளை அமெரிக்க வெளியுறவுத்துறை செனட் சபைக்கு அனுப்பி வைத்ததாக சிறிலங்காவிற்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவரும் தற்போதைய தெற்காசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலருமான றொபேட் ஓ. பிளேக் உறுதிப்படுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் மக்ஸ்வெல் கல்லூரியில் சிறப்புரையாற்றிய றொபேட் ஓ. பிளேக், சிறிலங்கா தொடர்பான ஐக்கியநாடுகள் சபையினதும் அமெரிக்காவினதும் பரிந்துரைகளை கவனத்திற் கொள்ளத் தவறின் சிறிலங்காமீது அமெரிக்காவும் சர்வதேச சமூகமும் நடடிவக்கை எடுக்க வேண்டிவரும் எனவும் எச்சரித்துள்ளார்.

போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக பதில் சொல்ல வேண்டிய கடமைப்பாடு சிறிலங்கா அரசாங்கத்திற்கு உண்டென்பதை வலியுறுத்திய அவர் தமிழ் மக்கள் தொடர்பான மனிதவுரிமை விடயங்களை மேம்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

றொபேட் ஓ. பிளேக் மக்ஸ்வெல் கல்லூரியில் நிகழ்த்திய உரையினை பின்வரும் இணைப்பில் பார்வையிடலாம்;

http://www.maxwell.syr.edu/video_player.aspx?id=77309413923

இதேவேளை றொபேட் ஓ. பிளேக் நியூயோர்க் வானொலி ஒன்றில் இடம்பெற்ற பிறிதொரு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கருத்து தெரிவிக்கும்போது 'விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடிக்கும் சிறிலங்காவின் முடிவு சாத்தியமில்லை எனச் சொன்னர்களின் கூற்றை சிறிலங்கா பொய்ப்பித்துள்ளபோதும், மிகப் பாரிய அளவிலான பொதுமக்களின் உயிர் விலைகள் ஊடாகவே அது சாத்தியப்பட்டிருக்கின்றது எனத் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா விடுதலைப்புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளிலிருந்து முழு அளவிலான போருக்குள் சென்ற சூழலில், சிறிலங்காவில் தன்னுடைய பணிக்காலம், மிகவும் பதட்டம் சூழ்ந்த காலமாக இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், 'இன்றைய நிலையில் மிகவும் காத்திரமான நல்லிணக்கத்திற்குரியதும், போர்க்கால பொறுப்புகளுக்குரிய தேவைகள் பற்றி சுட்டிக்காட்டப்படுவதோடு, சிறிலங்கா அளித்து வந்த வாக்குறுதிகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்' எனவும் குறிப்பிட்டார்.

இவ்வானொலி நிகழ்ச்சியில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடிக்க முடியுமென்பதை பலர் நம்பவில்லை. ஆனால் பாரிய மனித உயிர் விலைகளுக்கு ஊடாக சிறிலங்கா அரசாங்கம் அவர்களின் கருத்தை பொய்யாக்கியது.

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான முன்மாதிரியாக சிறிலங்காவின் இராணுவ மூலோபாயம் சில அரசாங்கங்களால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது என்பது தொடர்பான விவாதத்தின் போது கருத்துரைத்த பிளேக், பொதுமக்களின் இழப்பிற்கு விடுதலைப் புலிகளே பெருமளவில் காரணம் என்றார்.

முன்னேறிய படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் அகப்பட்ட மக்களை முற்றுகைக்குள்ளான பகுதியிலிருந்து வெளியேறவிடாது தடுத்ததன் மூலம், புலிகள் அனைத்துலக சட்டத்தை மீறினர். புலிகள், மக்களை வெளியேற அனுமதித்திருப்பின், முதற்கட்டமாக நடந்தேறிய இழப்புக்கள் அனைத்தையும் தடுத்திருக்கலாம்.

புலிகள் வேண்டுமென்று கனரக ஆட்லறிகளை பொதுமக்களின் முகாம்களுக்குள் நிறுத்தி வைத்து, அரச படைகளைத் தாக்குதல் நடாத்தத் தூண்டினர். அதனால் ஏற்படும் பொதுமக்களின் உயிரிழப்பை வைத்து அனைத்துலக சமூகத்தின் கோபத்தை அரசாங்கத்தின் பக்கம் திருப்புவதன் மூலம் அரசாங்கத்தின் தாக்குதல்களை நிறுத்தலாம் என அவர்கள் நம்பினர்.

மேற்குலகிற்கு இது ஒரு இக்கட்டான நிலையை ஏற்படுத்தியது. பயங்கரவாத அமைப்பின் தோல்வியை மேற்குலகம் விரும்பியது. ஆனால் பொதுமக்களின் உயிரிழப்பை தடுக்க நினைத்தது.

பெரும் எண்ணிக்கையிலான பொது மக்கள் இழப்பை ஏற்படுத்திய பாரிய அளவிலான மனித உரிமை மீறல்களுக்கு இரண்டு தரப்புமே பொறுப்பானவர்கள்.

இந்த அனுபவங்கள் மூலம் சிறிலங்காவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையிலான செயற்பாடுகளும் பொறுப்புகளைக் கண்டறியும் பொறிமுறையும் அவசியமாகும். பொதுமக்களின் இழப்புகளுக்குப் காரணமானவர்கள் உரிய முறையில் பொறுப்புகளை எதிர்கொள்வதன் மூலம் கடந்த கால நிகழ்வுகளை நாட்டு மக்கள் மறப்பதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும். அத்துடன் வடக்கில் தேர்தலை நடத்துவதன் மூலம் புதிய தலைமையை ஏற்படுத்த வேண்டுமெனவும் பிளேக் சிறிலங்காவிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

http://www.ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={F5E5D449-496E-4873-AFD9-BEEF2EAE6A26}

  • தொடங்கியவர்

Blake plays ‘hide and seek’ on SL war crimes

  • In 2009 October, when the former chief of defense staff of SL , Sarath Fonseka visited the US and the Department of Homeland security of that country questioned him in connection with the SL war crimes., Fonseka fled America and returned to the Island
  • When Mahinda went to Texas, America , the US state Dept. Assist. Secretary Robert Blake was also in Texas
  • According to Govt. sources both have met unofficially
  • There are also reports that when defense Secretary Gotabaya Rajapaksa went to America last year , he too had met Blake unofficially
  • Blake has declared that there are no terrorist indictments against Rudrakumaran. It is also known that Blake is in constant touch with Rudrakumaran
  • why US and Blake are playing ‘hide and seek’ ` pertaining to SL war crime charges is clouded in mystery

http://print.dailymirror.lk/opinion1/34620.html

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் பொதுமக்களின் உயிரிழப்பை தடுக்க நினைத்தது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று எங்களுக்கு தெரியும். தமிழ் மக்களின் இடத்தில் வெள்ளை இன மக்களாக இருந்து இருந்தால் பாய்த்து விழுந்து காப்பாற்றி இருப்பீர்கள்.

இரண்டு வருடமாகியும் இலங்கை அரசின் போர்குற்றங்களை சற்றலைட் படம் மூலம் ஆதாரமாக வைத்திருக்கும் நீங்கள் உண்மையானவர்கள் எனில் அதனை உலகுக்கு அம்பலப்படுத்தி மகிந்தவையும் அவரது குழாமையும் சட்டத்தின் முன் நிறுத்தி இருக்க வேண்டும்.

இராணுவம் மக்கள் மீது கொட்டிய குண்டுகள் பற்றியோ அல்லது இரசாயன ஆயுதங்களை அரசு பாவித்தது பற்றியோ ஒரு வரி கூட கூறாதது ஏன்? தெரிந்தும் கூறாமல் விட்டது தான் உண்மை.

உந்த உளறல்களை விட்டுவிட்டு உடனடியாக புலிகள் மீதான தடைகளை நீக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்திகளின் மடியில் படுத்துகிடந்து கொண்டே பிளேக்கு விட்ட இந்த அறிக்கையால் நிற்சயம் வழக்கு விசாரணைக்கு வரும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.