Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னியில் அரிசிக்கு தட்டுப்பாடு, அவசர உதவி கோருகின்றார் சாள்ஸ்

Featured Replies

செவ்வாய்க்கிழமை, பெப்ரவரி 8, 2011

இலங்கைக்கே சோறு போட்ட வன்னி மாவட்டங்களில் அரிசிக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது.வவுனியா மாவட்டத்தில் வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகளுக்காக ஜனாதிபதி செயலகத்தோடும், நிதி அமைச்சுடனும் தொடர்பு கொண்டுள்ளதாக வவுனியா அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ளஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் :-

காலநிலை சீரற்று காணப்படுகின்றமையால் வவுனியா மாவட்டத்திலே பயிர்ச் செய்கை பாதிப்படைந்துள்ளது. உழுந்து பயிர்ச் செய்கை 13700 ஏக்கரும், நெற்பயிர்ச் செய்கை 14000 ஏக்கருக்கும் இவ்வாறு பாதிப்படைந்துள்ளது. கால்நடைகள் மழைக் குளிரினால் இறந்துள்ளதாக எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலே போக்குவரத்துக்கான பல வீதிகள் சேதமடைந்துள்ளன. அதேபோன்று குளங்கள் உடைப்பெடுத்துள்ளன. மக்களுக்கு தேவையான பொருட்களை நாங்கள் அனர்த்த முகாமைத்து அமைச்சின் உதவியோடு மக்களுக்கு வழங்கி வருகிறோம். அரச சார்பற்ற நிறுவனங்களும் பலதரப்பட்ட நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றன.

மேலும், நிவாரண உதவிகளுக்காக நான் ஜனாதிபதி செயலகத்தோடும், நிதி அமைச்சுடனும் தொடர்பு கொண்டுள்ளேன். தற்போது வவுனியாவில் நிலவும் உணவு தட்டுபாட்டினை நாங்கள் சமாளித்துள்ளோம். இருகட்டமாக வவுனியாவிற்கு எரிபொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மாற்று வழியினூடாக உணவுப் பொருட்களை பெற்றுள்ளோம். இருந்த போதும் எதிர்காலத்தில் ஏற்படும் அரிசி தட்டுப்பாட்டின் கருத்திற் கொண்டு நான் உணவு ஆணையாளரிடம் மேலதிக அரிசிகளை அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளேன். என்றார்

இலங்கைக்கு சோறுபோட்ட வன்னியில் இன்று அரிசிக்கு தட்டுப்பாடு

http://www.eelanatham.net/story/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D

அடுத்தடுத்து வந்த இயற்கை அனர்த்தங்கள் மிகவும் கடுமையாக எம்மக்களை பாதித்துள்ளன.

  • தமது அரசு மூலமே புலம்பெயர் மக்கள் உதவ வேண்டும் என்னும் சிங்களம்

  • கொடுத்த வெளிநாட்டு உதவிகளை சுருட்டும், அவற்றை அரசியல் நோக்கத்துடன் பகிர்ந்தளிக்கும் அரசு

  • ஏதோ வெளிநாட்டுக்கு உதவி கேட்பது போன்று தொலைநகல் அனுப்பும் அரச அதிபர்

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.