Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகப்பொருளாதாரம்

Featured Replies

  • தொடங்கியவர்

- 'தேசிய வேலைக்கு அமர்த்தும் நாள்' அன்று மக்டோனால்ட் அமெரிக்காவில் 50000 பேரையும் கனடாவில் 4000 பேரையும் வேலைக்கு அமர்த்த உத்தேசித்துள்ளதாக அறிவித்துள்ளது

- விண்ணப்பங்கள் மின்வலை ஊடாக கோரப்படுகின்றது

McDonald's Canada plans to hire 4,000 new staff as part of its April 19 "national hire day.

McDonald's American will hire 50,000 new employees on that same date.

Currently, there are more than 14,000 American locations with a combined 400,000 staff. The American corporation has allotted US$518 million in wages for its new employees.

http://www.canadianbusinessjournal.ca/business_news/canadian_business_news/060411_mcdonald_s_canada_to_hire_4_000_in_one_day.html

Edited by akootha

  • Replies 57
  • Views 6.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

சர்வதேச தங்க விலையின் உயர்வு

ஐரோப்பிய கடன் நெருக்கடி, மத்தியக் கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவின் கொந்தளிப்பான நிலைமை முதலியவை மீதான முதலீட்டாளர்களின் கவலை, இடைவிடாமல் அதிகரிக்கிறது. அத்துடன், ஆபத்து நிகழாமல் தவிர்க்க பயன்படுத்தப்படும் தொகை, 5ம் நாள் சர்வதேச தங்க விலையை உயர்த்துவதில் வரலாற்றுப் பதிவை மீண்டும் உருவாக்கியுள்ளது. ஜூன் திங்களில் தங்க பரிமாற்ற வியபாரத்தில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1452.5 அமெரிக்க டாலராகும். இது வரலாற்றில் மிக உயர்வாகும்.

வட்டியை அதிகரிப்பது உள்ளிட்ட இறுக்கமான நிதிக் கொள்கைகளினால் ஏற்பட்ட நலன்களை விட, உலகப் பண வீக்கம் மீதான முதலீட்டாளர்களின் கவலை மிகவும் அதிகரிப்பதை, வரலாற்றில் தங்க விலையின் இந்த உயர்வு காட்டுகிறது என்று Peregrine நாணயக் குழுமத்தின் மூத்த தங்க ஆய்வாளர் ஒருவர் கருத்து தெரிவித்தார்.

http://tamil.cri.cn/121/2011/04/06/101s106712.htm

http://www.resourceintelligence.net/prodigy-gold-live-pdac/16947

Gold Prices Hit Record High: Concerns About Middle Eastern Tumult, April 6, 2011 4:27 PM

Gold prices have hit a record high of $1,458.50 an ounce, stemming from concerns over the continuing tumult in the Middle East and North Africa. After hitting new highs, the gold price closed in London at $1,462.93, up $26, while silver ended the day up $1.21 at $39.71.This is the highest price it has reached in more than three decades, reports the WSJ.

http://www.thirdage.com/news/gold-prices-hit-record-high-concerns-about-middle-eastern-tumult_4-6-2011

  • தொடங்கியவர்

எப்படி கோடீஸ்வரன் ஆவது? செய்ய வேண்டியதும் / செய்ய கூடாததும்

Becoming a billionaire seems like a great goal, but unfortunately it's only a dream for most of us. The thing is, many billionaires didn't start out as such. Some certainly had economic and educational advantages, but even without those, their smart decisions and business choices, plus a few characteristics that can't be overlooked, led them from Point A to Point B (Billionaire). So, what can we learn about our own real-life options for becoming billionaires? (More than 70 years after his death, this man remains one of the great figures of Wall Street. See J.D. Rockefeller: From Oil Baron To Billionaire.)

First things first: find a way to make money. Four of the most oft-methods of money making in the world of billionaires are inventing, investing, innovating and being an entrepreneur, but remember that how you pursue your billions is just as important as what you do to get them.

Do This: Invent

Inventing is a tough road to take, but if you've got the smarts to successfully create, patent, produce and market a product that people need (and thus, will buy in droves), you can build your future billionaire life on it. Successful inventions aren't necessarily complicated or high-tech items, either; James Dyson invented a better vacuum cleaner, and Gianfranco Zaccai invented a better mop, the Swiffer. Seems like things that help people clean more efficiently might be a good market to pursue.

Do This: Innovate

Innovation is the fine art of considering a current mainstream market and finding a creative way to improve the current offering. Successful innovators will identify the real needs behind customer demands, and will meet them with a smarter, better, more efficient product, or with a service that provides more than its competitors, or with a business that works in a way just different enough to stand out from the rest. IKEA founder is a great example of innovation leading to billions; furniture doesn't seem like a very exciting market, but his approach of providing modular, economical pieces with a modern flair from Sweden and other European designers and manufacturers to a global market has taken him all the way.

Don't Do This: Think You Know It All

The moment you think you have nothing left to learn is the moment you kill your potential for becoming a billionaire. Especially if you're interested in building your wealth through inventing or innovating, you have to be curious, open-minded and always learning. Those qualities allow you to look at old things in a new way, to see the potential for change and profit where others see only what already had been done.

Do This: Invest

Warren Buffett, the self-made billionaire, is famous for his frugal ways and for his smart investments. Investing, of course, requires a little seed money and some accurate insight into what investments are smart and what are a waste of money. If you can follow in the footsteps of billionaire investors like Buffett, then this might be the route for you.

Don't Do This: Make Flashy Investments

The latest and greatest is always fun to talk about, and one of the pitfalls of would-be billionaires is to jump in on the "next big thing" which doesn't always turn out to be so big. Investors who make billions from their investments avoid flashy, fun and high-risk picks and instead choose those with long-term potential to provide great returns. Real estate, energy, steel, telecommunications, pharmaceuticals and energy are among the picks, while high-tech and intriguing but risky options may go either way.

Do This: Be an Entrepreneur

The third option for becoming a billionaire is in the time-honored tradition of entrepreneurial pursuits. Starting a business and taking it to success isn't always easy, but for those with good business sense and the ability to spot start-ups that have potential to be great, entrepreneurship can be the vehicle to great wealth. Billionaire entrepreneurs might work in one of two ways: either by coming up with a great idea and taking it all the way, as in the case of Bill Gates and Microsoft. Or by spotting someone else's good idea and investing in it early on, helping to carry it to huge success. Both are viable ways to reach success that can get you into the billions of dollars when it comes to your own net worth. (Quit your job; be your own boss and earn a paycheck. Find out what to do to make it happen, in Start Your Own Small Business.)

Don't Do This: Quit Too Soon

Entrepreneurial types who succeed must realize that success rarely comes overnight. One business idea might not pay off, but the next might. Or your company might hit a low point, and you have to make the choice to hang on with it and bring it back or let your dream die and your debt increase. It's not easy to build something from scratch, especially when your something is a fortune of billions. Time is on your side, if you don't rush it.

The Bottom Line

Of course, luck has something to do with success; it helps to be in the right place at the right time. However, if you don't know what to do when you're there, luck won't help you out much. Smart choices, smart investments and long-term learning and growing will however; once you hit that first billion, remember you heard it here.

http://ca.finance.yahoo.com/news/7-real-life-ways-become-investopediawp-1154926782.h

tml?x=0

  • தொடங்கியவர்

உலக வங்கி கொள்கை மாற்றம்

உலகின் கால்வாசி மக்கள் மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் வாழுகின்ற நிலையில், கல்வி மற்றும் சுகாதாரத்தை விட ஸ்திரமான அரசாங்கங்களை உருவாக்குவதிலும், நீதித்துறையிலும், காவல் துறையிலும் அதிக நிதி செலவிடப்பட வேண்டும் என்று உலக வங்கி கூறுகிறது.

நீதி மறுசீரமைப்பு என்பது மிலேனியம் அபிவிருத்தியின் இலக்குகளில் ஒன்றாக இல்லாத போதிலும், அந்தத் திசையில் உதவிகளை திருப்புவதில் முக்கிய கவனம் செலுத்தப்படாவிட்டால், வறுமை ஒழிப்பின் ஏனைய இலக்குகளான சுகாதாரம், மற்றும் கல்வி ஆகியன குறித்த இலக்கை எட்டமுடியாமல் போய்விடும் என்று உலக வங்கியின் அறிக்கை கூறுகிறது.

மோதல்களால் ஏற்படும் பாதிப்புக்களை ஒழிப்பதற்காக அதிகம் செலவு செய்வதை விட, அத்தகைய மோதல்கள் வெடிக்காமல் தடுப்பதற்கும், அத்தகைய மோதல்கள் மீண்டும் ஏற்படுவதை தடுக்கவும், அதிக செலவு செய்யப்பட வேண்டும்.

அண்மைக்கால உள்நாட்டுப் போர்களில் 90 வீதமானவை, ஏற்கனவே கடந்த 30 வருடங்களாக உள்நாட்டுப் போர் இடம்பெற்ற நாடுகளிலேயே நடந்திருக்கின்றன. இந்த வன்செயல்களின் சுழற்சியை நிறுத்துவது மிகவும் கடினம் என்று அந்த அறிக்கை கூறுகின்றது. இதற்கு உதாரணமாக அது தென்னாப்பிரிக்காவையும், மத்திய அமெரிக்காவையும் சுட்டிக்காட்டுகின்றது.

குவாதீமாலாவைப் பொறுத்தவரை 1980 களில் அங்கு நடந்த உள்நாட்டுப் போரில் கொல்லப்பட்டவர்களைவிட இரண்டு மடங்குக்கும் அதிகமானோர், தற்போது அங்குள்ள குற்றக் குழுக்களின் கைகளால் இறக்கிறார்கள். வன்செயல்களால் பாதிக்கப்பட்ட நாடுகளில் வறுமை 20 வீதம் அதிகமாக காணப்படுகின்றது.

ஆனால், இன்றுவரை ஊழலை ஒழிப்பதிலும், அரச நிறுவனங்களையும், நீதித்துறையையும் மறுசீரமைப்பதிலும், மிகக்குறைவான கவனமே செலுத்தப்பட்டுள்ளதாக உலக வங்கி கூறுகிறது. உலகம் எதிர்கொள்கின்ற மிகவும் பெரிய அபிவிருத்திச் சவால் இது என்று இந்த அறிக்கையை எழுதிய சாரா கிளிஃப் கூறுகிறார்.

இதில் பல விடயங்கள் புதியவை அல்ல. பிரிட்டன் ஏற்கனவே தனது உதவிகளை மோதல்கள் இடம்பெற்ற நாடுககளை நோக்கி திருப்பியுள்ளது. ஏனைய நாடுகளும் இதனை செய்தால், நல்ல மருத்துவமனைகளுக்கும், பள்ளிக்கூடங்களுக்கும் செலவு செய்யும் நிதியை விட நல்ல பாதுகாப்பை உருவாக்குவதற்கு செலவு செய்யும் நிதி அதிகமாக இருக்கக்கூடிய ஒரு பெரிய அடிப்படை மாற்றமாக இது கருதப்படும்.

ஆனால், உலக வங்கியின் இந்த கொள்கை மாற்றத்தை, உகண்டாவில், தகவல்களின் ஊடாக அபிவிருத்தி என்ற இலக்கைக் கொண்டு செயற்படுகின்ற பனோஸ் என்னும் அமைப்பின் பிராந்திய இயக்குனரான, பீட்டர் ஒக்கபால் எதிர்க்கின்றார்.

அபிவிருத்திக்கு ஸ்திரமான அரசாங்கமும், நீதித்துறையும், சட்டம் ஒழுங்கும் மிகவும் முக்கியந்தான் என்ற போதிலும், அவையெல்லாம், தானாக பொதுமக்களின் மிகுந்த ஆதரவுடன் வரவேண்டும் என்று அவர் கூறுகிறார்.

வறுமை ஒழிப்புக்கான தனது உதவிகளை உலக வங்கி, ஸ்திரமான அரசாங்கத்துக்கும், நீதியையும் சமாதானத்தையயும் ஊக்குவிக்கவும் திருப்பிவிட்டால், அது தவறாகத்தான் முடியும் என்று கூறும் அவர், அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுப்பதற்கும், இந்த மக்களின் இயலாமையை ஒழிப்பதற்கும், அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

http://www.bbc.co.uk/tamil/news/story/2011/04/110411_wbreport.shtml

  • 1 month later...
  • தொடங்கியவர்

பணக்காரர்கள் எப்படி பணக்காரர்களாகவே இருக்கிறார்கள்?

அடிப்படை சம்பளம் வாங்கும் நமக்கே பத்தாயிரம் பிக்கல் பிடுங்கல்கள். அப்படியிருக்கையில் ஒரு பணக்காரனுக்கு எவ்வளவு இருக்கும் ? அரசியல்வாதிக்கு, நடிகனுக்கு, தொழிலதிபர்களுக்கு, தனவந்தர்களுக்கு, அதிகாரிகளுக்கு மட்டும் எப்படி பணம் சடாலென வளர்கிறது ?

நேர்மையான முறையில் பணத்தினைப் பெருக்க, வளர்க்க நாயடி, பேயடி படவேண்டுமென்பதுதான் நிதர்சனம். ஆனால், நியாயமாய் சம்பாதிக்காத பணத்தினை எப்படி நியாயமான வருமானமாகக் காட்டுவீர்கள்? அங்கே தான் இந்த “வரிகளற்ற சொர்க்கங்கள்” தன் வாசற்கதவை பெரும்பணக்காரர்களுக்கும், நிறுவனங்களுக்கும், அரசியல் / சர்வாதிகாரிகளும் திறந்து காட்டி ரத்தினக் கம்பளம் விரிக்கிறது.

வரிகளற்ற சொர்க்கங்கள் என்றால்?

இவை ஒரு நாடாகவோ, மாநிலமாகவோ, ஒரு கட்டமைப்பின் கீழ் வரும் பகுதியாகவோ இருக்கலாம். வரிகளற்ற இடங்களைக் கண்டறிவது சுலபம்.

◦இங்கே வரிகள் குறைவாக அல்லது பூஜ்யமாக இருக்கும்

◦அன்னிய நாட்டு வரித் துறையோடு பெரும்பாலும் தொடர்புகள் இருக்காது

◦அந்த ஊரில் இருக்கவேண்டுமென்கிற கட்டாயங்கள் இருக்காது

சட்டங்கள், அரசு, பரிவர்த்தனைகள், ஆளுமை எதுவுமே “வெளிப்படையாக” இருக்காது

◦தங்கள் இருப்பிடத்தை Offshore Financial Center என்று பெருமிதமாகச் சொல்லிக் கொள்வார்கள்

இந்த வரிகளற்ற சொர்க்கத்தின் தலைமையகம் – லண்டன். சூரியன் அஸ்தமிக்காத பரம்பரைதான் தன்னுடைய ‘காலனி’ நாற்றினை உலகமெங்கும் நட்டு அது இப்போது வளர்ந்து செழித்தோங்கி குட்டி சொர்க்கங்களாக மாறியிருக்கின்றன. இரண்டாம் உலகப் போர் முடிந்த காலக்கட்டத்தில் பிரிட்டன் பல நாடுகளிலிருந்து வெளியேறினாலும், இன்னமும் பல நாடுகள், தீவுகள் ஆஸ்திரேலியா உட்பட “மாட்சிமை தாங்கிய ராணியை” தலையில் வைத்துக் கொண்டு நிர்வாகம் செய்யும் தேசங்கள்.

லண்டன் – பிரிட்டனின் தலைநகரமென்பது மூணாம் வகுப்பு பாப்பா கூட சொல்லும். சொல்லாதது, லண்டன் வைத்திருக்கும் வரிகளற்ற சொர்க்கங்களின் மறை மூடிய சிலந்தி வலைப்பின்னல். இதை இரண்டாகப் பிரிக்கலாம். உள்வட்ட அதிகாரத்தின் கீழ் இருப்பவை; வெளிவட்டத்தில் இருப்பவை – சுருக்கமாய் உள்வீடு / வெளிவாசல்.

உள்வீட்டில், பிரிட்டனுக்கு பக்கத்திலேயே இருந்துகொண்டு – ஆனால் கொஞ்சம் “சுயமாகவும்” நிதிக்கான சட்டதிட்டங்களைப் போட்டுக் கொண்டிருக்கும் பிரதேசங்கள்; ஜெர்ஸி (Jersey), க்வர்ன்சே (Guernsey) மற்றும் ஐஸல் ஆப் மேன் (Isle of Man)- இவை அனைத்தும் பிரிட்டனின் ராஜபரம்பரையினை அண்டி வாழும் மாகாணங்கள். இது தவிர கேமென் தீவுகள் (Cayman Islands), பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள் (British Virgin Islands – BVI). வெளியே இருந்தாலும், இன்னமும் உள்வீட்டு காலனி தான். வெளி வாசலில், ஹாங்காங், ஒரளவுக்கு சிங்கப்பூர், துபாய் எல்லாம் ஒரு காலத்தில் பிரிட்டிஷ் காலனி தேசமாய் இருந்து, விடுதலைப் பெற்று இன்னமும் பிக்பென் பார்த்து ராகு காலம், எம கண்டம் குறிக்கும் தேசங்கள்.

அமெரிக்காவிற்குப் பக்கத்தில் இருக்கும் பெர்மூடா, ஹவாய் போன்ற தேசங்களிலும் பிரிட்டனின் மகத்துவம் பெரிது. லண்டன் உலக நிதி வர்த்தகத்தின் தலைநகரம் [இதை கொஞ்சநாள் நியுயார்க் வைத்திருந்தது. 2008 பொருளாதார சீர்குலைவிற்கு பின், அந்த நிலை மாறிவிட்டது] இங்கே தான் எல்லா முக்கிய முடிவுகளும், மாற்றங்களும் நடக்கும். பக்கத்து ஊரான அயர்லாந்து பொருளாதார மந்தத்தில் மோசமாய் அடிப்பட்ட நாடு. காரணம் ஊரான் பணத்தில் வாழ்ந்த நாடது.

எதற்காக லண்டன் இந்த மாதிரியான ஒரு கட்டமைப்பினைக் கையில் வைத்துக் கொண்டு, ஆனால் உலக நிதி உத்தமர் என்று போஸ் கொடுக்க வேண்டும்? சூட்சுமமே அங்கு தான் இருக்கிறது. லண்டனிலிருந்து ஆட்கள் எல்லா கால, நேர சூழல்களிலும் வணிகம் செய்யமுடியும். இந்த பக்கம் சிங்கப்பூர், ஹாங்காங், துபாய், மொரிஷியஸ். அந்த பக்கம் ஜெர்ஸி, கேமென் தீவுகள், பெர்முடா – இது 24 மணி நேரமும் பணம். பணம். பணம். பணத்தினை எப்படிக் கொண்டு வருவது, எப்படி சேர்ப்பது, எப்படி கைமாற்றுவது, எந்த நாட்டுக்கு அனுப்புவது மட்டுமே. இதில் நல்ல, கெட்ட, யோக்கிய, அயோக்கிய, நியாமான, அநியாயமான, அதர்மமான எல்லாவிதமான பணமும் அடங்கும்.

எத்தியோப்பியாவில் சர்வாதிகாரத்தால் ஆபத்து என்று நினைக்கும் தொழிலதிபரும், ம.பி, உ.பி, இ.பி யில் அரசியல்வாதிகள் குவிக்கும் பணமும் ஒரே மாதிரி தான் பார்க்கப்படும். ஒரே மாதிரி ஹவாலா + மாற்று வழிகளில் ஏதேனும் ஒரு நாட்டுக்கு போய் அங்கிருந்து இன்னொன்று, அங்கிருந்தும் வேறு என்று ஊர் உலகம் சுற்றி பின் அந்த நாட்டுக்கே “அன்னிய நேரடி முதலீடாக” (Foreign Direct Investment)போய்ச் சேரும். எல்லா அன்னிய முதலீடுகளும் மோசமானவை கிடையாது. ஆனால், இது தான் ரூட்.

எப்படி இந்தியாவில் கிளம்பி, சிங்கப்பூரிலோ, துபாயிலோ கொடுக்கப்பட்டு, அங்கிருந்து கேமென் தீவுகளுக்கோ, பிரிட்டிஷ் விரிஜின் தீவுகளுக்கோ போய், அமெரிக்க முகம், பிரிட்டிஷ் பாஸ்போர்ட் சகிதம் மொரிஷியஸிற்கு வந்து கம்பெனி நிறுவி, டெல்லி ஹில்டனில் ரூம் போட்டு, கோட்-சூட் மனிதர்களோடு கை குலுக்கி, போட்டோ எடுத்து, மறுநாள் எகனாமிக் டைம்ஸில் இன்னார் நிறுவனம், இந்த துறையில் 2000 கோடி முதலீடு செய்ய இந்தியாவில் உத்தேசித்து இருக்கிறது என்பதற்கு பின்னிருக்கும் கதையினை, திரில்லராக எழுத முடியும். சரி போகட்டும்.

2ஜி அலைக்கற்றை ஊழல் வெளிவந்தவுடன் அடிக்கடி எல்லாரும் உச்சரிக்கும் ஒரு பெயர் மொரிஷியஸ். என்ன இருக்கிறது மொரிஷியஸில்?

மொரிஷியஸ்

நம்பர் 1, கேதீட்ரல் ஸ்கொயர், போர்ட் லூயிஸ் என்பது மிக முக்கியமான முகவரி. மொரிஷியஸிற்கு போகும் பெரும் தனவந்தர்கள், இன்வெஸ்ட்மெண்ட் பேங்கர்கள், ஹெட்ஜ் பண்ட் ஆட்கள், இன்ன பிற தரகர்களின் மெக்கா இந்த இடம் தான். இங்கிருக்கும் கியுபிக்கிள்களில் தான் தினமும், பல மில்லியன் டாலர்கள் உள்வந்து, வெளியேறுகின்றன. மொரிஷியஸ் இந்திய கருப்பு / வெள்ளை மற்றும் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்குக் கொண்டு வரப்படும் “வெள்ளையான” பணத்தின் தாயகம்.

மொரிஷியஸ் எப்படி இந்தியாவின் செல்லப்பிள்ளையானது ?

அதற்கும் ஒரு வரலாறு இருக்கிறது. இளையராஜா தமிழில் கோலோச்சிய 80களில் ஆரம்பிக்கக் கூடிய கதை. சரியாய் 1983. மொரிஷியஸிற்கும் இந்தியாவுக்கும் ஓர் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. அதன்படி மொரிஷியஸில் நிறுவனங்கள் வைத்து, இந்தியாவில் முதலீடு செய்யும் நிறுவனங்களின் வருமானத்தினை மொரிஷியஸ் அரசாங்கம் வரி விதிக்கும். ஒரு வேளை இந்தியாவில் வரி விதிக்கப்பட்டிருந்தால், அவை மொரிஷியஸில் வரி விதிக்கப்படாது. இதற்கு இரட்டை வரி நிறுத்த உறவு (Double Taxation Avoidance Treaty) என்று பெயர். இந்திரா காந்தி செத்துப் போவதற்கு ஒரு வருடத்திற்கு முன் வந்த இந்த உறவு தான் நம் மொரிஷியஸ் கனவுகளுக்கு ஆரம்பம்.

இப்போது சிபிஐ குடாய்ந்தெடுக்கும் 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் மொரிஷியஸுக்கு தான் பெரிய பங்கு. அங்கிருந்து தான் பல “கைகளுக்கு” பல “டம்மி” நிறுவனங்கள் மூலம் பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டிருக்கிறது என்பது சிபிஐயின் வாதம். மொரிஷியஸ் என்றவுடனேயே எல்லாமே கருப்பு என்பதும் கிடையாது. இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான வென்ச்சர் கேபிடல் நிறுவனங்கள் தங்கள் நிதியினை மொரிஷியஸ் வழியாகவே கொண்டு வருகின்றன. கொஞ்சம் கூர்ந்து எகனாமிக் டைம்ஸ் படித்தால், இந்தியாவில் நடக்கும் பெரும்பாலான கையகப்படுத்துதல், நிறுவனங்களை வாங்குதல், விற்றல், லாபத்தினைப் பங்கு போடல் என எல்லா சங்கதிகளிலும் மொரிஷியஸிற்கு ஏதாவது ஒரு பங்கு இருக்கும்.

மொரிஷியஸிலிருந்து மட்டும் 40% அன்னிய முதலீடு நமக்கு வந்திருக்கிறது என்று ரிசர்வ் வங்கியின் அறிக்கையொன்று சொல்கிறது. மொரிஷியஸ், கேமென் தீவுகள், பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், பெர்மூடா என்கிற குட்டித் தீவுகள் தான் இந்தியாவின் அன்னிய முதலீட்டில் கிட்டத்திட்ட 75-80% வரைக்கும் கொண்டு வந்து கொட்டுகின்றன. இந்தியாவின் பிரச்னை, நாம் பெரும்பாலான குட்டித் தேசங்களோடும், இரட்டை வரி நிறுத்த உறவினை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். இது தான் சிக்கலின் ஆரம்பம். வெறும் அன்னிய முதலீடுகளுக்காக ஏற்படுத்தப்பட்ட வசதியானது, பின்னாளில் இங்கே லஞ்சம், ஊழல், வரி ஏய்ப்பு, ஏமாற்றுதல், கமிஷன் வாங்கிய ஆட்கள் எல்லாம் தங்களுடைய பணத்தினை வெவ்வேறு வழிகளில் இம்மாதிரியான குட்டித் தீவுகளுக்கு கொண்டு போய், நாம்கேவாஸுக்கு பேப்பர் நிறுவனங்களை அமைத்து அதன் மூலம், மீண்டும் இந்தியாவிற்கு அரசு மரியாதையோடு பணத்தினை தங்களுடைய பினாமி நிறுவனங்களிலேயே முதலீடு செய்கிறார்கள் என்பதுதான் கருப்புப் பண சுழற்சியின் மிக முக்கியமான தொழில்முறை ரகசியம்.

சுலபமாய் அறிந்துகொள்ள உங்கள் ட்ராவல் ஏஜெண்டிடம் சிங்கப்பூர், துபாய், லண்டன், ஹாங்காங் இந்த நான்கு நகரங்களுக்கும் ஒரு நாளில் இந்தியாவிலிருந்து எத்தனை விமானங்கள் போகின்றன என்று கேளுங்கள். அவர் சொல்லும் விடைக்கும் மேலே படித்தவற்றுக்கும் இருக்கும் சம்பந்தத்தினை இதழோரம் தவழும் புன்னகை சொல்லும்.

So now what?

இரண்டு உலகளாவிய நிறுவனங்கள் இந்த வரிகளற்ற சொர்க்கங்களைப் பயன்படுத்தி எப்படி வரிகளை ஏய்க்கின்றன, அதன் மூலம் அரசுக்குச் சேர வேண்டிய பணம் எப்படி தனியார் நிறுவனங்களுக்குப் போய்ச் சேருகிறது என்று பார்ப்போம்.

கூகிள். இணையத்தின் நெ.1 நிறுவனம். கூகிள் உலகெங்கிலும் கிளை பரப்பிய ஆலமரம். அதன் விழுதுகள் வீழாத இடங்கள் அட்லஸில் இல்லை என்று சொல்லலாம். ஒரு வருடத்திற்கு $30 பில்லியன் டாலர்கள். ஐரோப்பா அதன் மிகப் பெரிய சந்தை. இத்தனை கோடானுகோடி தொகையும் அதன் விளம்பர வருவாயிலிருந்து வருவது. ஐரோப்பாவில் நிறுவன வரி விதிப்பு அதிகம். ஆனால் சாமர்த்தியமாய் கூகிள், தன்னுடைய ஐரோப்பிய வருமானம் அனைத்தையும் அயர்லாந்து > நெதர்லாந்து > பெர்மூடா என்கிற வழிகளைக் கொண்டு, அந்த நாடுகளின் வரி சட்டங்களில் இருக்கக்கூடிய ஓட்டைகளைப் பயன்படுத்தி வெறும் 2.4% மட்டுமே வரியாகக் கட்டுகிறது. மொத்த ஐரோப்பாவும் இதைக் கசப்பாகப் பார்க்கிறது. இதன் மூலம் கூகிள் வருடத்திற்கு கிட்டத்திட்ட $3.1 பில்லியன் வருமானத்தினை (ரூ.13,950 கோடிகள்)“வரிகளற்று” நேரடியாய் தன்னுடைய பாலன்ஸ் ஷீட்டில் கேஷாக வைத்திருக்கிறது. “Don’t be Evil” என்பது கூகிளின் கொள்கை என்பதறிக.

முதலில் ஹட்ச் நாய், பின் சூசூக்கள் என்று இந்தியாவில் கொண்டாடப்படும் வோடாஃபோன். ஹட்சினை கையகப்படுத்திய வோடஃபோன் ஒரு பன்னாட்டு நிறுவனம். அதற்கும், இந்திய வருமான வரித்துறைக்கும் நான்கு வருடங்களாக டக்கப்-வார் மும்பை நீதிமன்றத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. காரணம்: வோடஃபோன் இந்தியாவில் வரியாக செலுத்த வேண்டிய $1.7பில்லியன் ( ரூ.7,650 கோடிகள்). வருமான வரித்துறை அது இந்தியாவை சார்ந்தது என்கிறது. வோடாஃபோனோ, அதன் மொரிஷிய நிறுவனங்களின் வழியே இந்தியாவில் முதலீடு செய்யப்பட்ட தொகையின் லாப ஈட்டுத்தொகையின் வரியைத் தான் மொரிஷியிஸில் தான் கட்டுவேன் என்கிறது. மொரிஷியஸில் கிட்டத்திட்ட 0% என்பதறிக.

மேலே சொன்ன இரண்டு உதாரணங்கள் தான் ஆரம்பம். வரி ஏய்ப்பு இப்படி தான் உலகளாவிய அளவில் இன்றைக்கு நடக்கிறது. இதன் மூலம் போகும் பணம், நிறுவனங்களுக்கு, தனி நபர்களுக்கு, அரசாங்களுக்கு என பங்கு பிரிக்கப்பட்டு பின்னர் வேறு வழியாக மீண்டும் தன்னுடைய நாட்டுக்கே whiter than white ஆக வரும்.

இந்தப் பணம் எப்படி இந்த வரிகளற்ற சொர்க்கங்களுக்குக் கொண்டு போகப் படுகிறது என்பது அடுத்த வாரம்.

[கல்லா நிரம்பும்]

◦நரேன்

http://www.tamilpaper.net/?cat=272

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

வெளிநாட்டுத் திறமைசாலிகளை உட்புகுத்தும் சீனா ( Reverse Migration)

http://tamil.cri.cn/121/2011/05/30/27s107941.htm

கடந்த ஆண்டின் இறுதி வரை, 318 வெளிநாட்டு திறமைசாலிகள், ஐந்தாவது தொகுதி "ஆயிரம் பேர் திட்டத்தில்" தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இது வரை ஐந்து தொகுதிகளாக 1143 வெளிநாட்டு நிபுணர்கள் சீனாவில் உட்புகுத்தப்பட்டுள்ளனர் என்று சீன மத்திய திறமைசாலி பணி ஒருங்கிணைப்பு குழுவின் அலுவலகம் 30ம் நாள் தெரிவித்தது.

2008ஆம் ஆண்டு ஆயிரம் பேர் திட்டத்தை சீனா நடைமுறைப்படுத்த துவங்கியது. வெளிநாடுகளில் கல்வி பயிலும் சீன மாணவர்கள் இத்திட்டத்தை வரவேற்று, இதில் ஆக்கப்பூர்வ பங்கெடுத்துள்ளனர். மேலும் அவர்கள் முக்கியத் தொழில் நுட்பங்கள், புதிய உயர் தொழில் நுட்ப தொழில்கள், புதிதாக வளர்ந்து வரும் கல்வியியல் துறைகள் முதலியவற்றில் முக்கிய பங்காற்றியுள்ளனர்.

சீனாவின் வெளிநாட்டு நாணயச் சொத்து

http://tamil.cri.cn/121/2011/05/30/23s107942.htm

2010ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வெளிநாட்டு நாணயச் சொத்து 4 இலட்சத்து 12 ஆயிரத்து 600 கோடி அமெரிக்க டாலராகும். 2009ம் ஆண்டில் இருந்ததை விட இது 19 விழுக்காடு அதிகமாகும். சீனத் தேசிய அந்நிய செலாவணி மேலாண்மை பணியகம் 30ம் நாள் வெளியிட்ட தரவுகள் இதைக் காட்டுகின்றன.

அதில் நேரடி வெளிநாட்டு முதலீட்டுத் தொகை 31 ஆயிரத்து 80 கோடி அமெரிக்க டாலராகும். பங்கு பத்திர முதலீட்டுத் தொகை 25 ஆயிரத்து 710 கோடி டாலராகும். இதர துறைகளிலான முதலீட்டுத் தொகை 64 ஆயிரத்து 390 கோடி டாலராகும். கையிருப்பு தொகை 2 இலட்சத்து 91 ஆயிரத்து 420 டாலராகும்.

இதனிடையில், 2010ம் ஆண்டின் இறுதி வரை, சீனாவின் வெளிநாட்டு கடன் தொகை 2 இலட்சத்து 33 ஆயிரத்து 540 கோடி அமெரிக்க டாலராகும். இது 2009ம் ஆண்டில் இருந்ததை விட 20 விழுக்காடு அதிகமாகும்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

அமெரிக்க பொருளாதாரம் பாதிப்பு அதிபர் ஒபாமா செல்வாக்கு சரிவு

பாகிஸ்தானில், பயங்கரவாதி ஒசாமா பின்லாடன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பின், அமெரிக்க அதிபர் ஒபாமா செல்வாக்கு அதிகரித்தது. ஆனால், அமெரிக்க பொருளாதார நிலை சீராக இல்லை என்பதாலும், வேலைவாய்ப்பு குறைந்து வரும் போக்கும், அவரது செல்வாக்கை தற்போது கணிசமாக குறைத்து விட்டது.அமெரிக்காவில், அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடக்கிறது.

அதிபர் ஒபாமாவும், அவரது குடியரசு கட்சிப் பிரமுகர்களும் மீண்டும் போட்டியிடும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மாசாசூயட்ஸ் மாநில கவர்னர் மிட் ரோனி, அதிபர் தேர்தலில் போட்டியிட ஆயத்தங்களை மேற்கொண்டிருக்கிறார்.அதிக வேலைவாய்ப்புகள், அதிக அளவு பொருளாதார வளர்ச்சி எட்டப்படுவதே தன் லட்சியம் என அவர் பிரசாரம் செய்வதால், அவருக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.

ஒபாமா கட்சியிலேயே அவரை முறியடிக்கும் வாய்ப்பாளராக அவர் உருவெடுக்கிறார். முன்பு சாராபாலின் அதிபர் பதவிக்கு போட்டியிடும் வாய்ப்பு என்ற பேச்சு இருந்தது. இப்போது அப்படி இல்லை.தற்போது, அதிபர் ஒபாமா செல்வாக்கு எப்படி இருக்கிறது என்பதை, “வாஷிங்டன் போஸ்ட்- ஏபிசி ‘ இணைந்து நடத்திய சர்வே, ஒபாமா முக்கியத்துவம் குறைந்து வருவதைக் காட்டுகிறது. பெட்ரோலியப் பொருட்கள் விலையேற்றம், வீடுகள் விலை மதிப்பு குறைவு, வேலை வாய்ப்புகள் குறைந்து வரும் போக்கு ஆகியவை,

மக்கள் மனதில், ஒபாமா அரசு மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கின்றன.அமெரிக்கா, தன் வளர்ச்சிப் பாதையில் இருந்து எதிர்மறையாகச் செல்கிறது என, 90 சதவீதம் பேர் தெரிவித்திருக்கின்றனர். தேசிய அளவில் நடந்த கருத்துக் கணிப்பில், ஒபாமாவின் செல்வாக்கு சரிந்திருக்கிறது.சமீபத்தில், பாகிஸ்தானின் அபோதாபாத்தில், பயங்கரவாதி ஒசாமா பின்லாடனை அமெரிக்க ராணுவம் வீழ்த்திய செயலால், ஒபாமா செல்வாக்கு, அபாரமாக உயர்ந்தது. தற்போது, முற்றிலும் மாறாக அவர் செல்வாக்கு சரிந்திருப்பதை சர்வே முடிவுகள் காட்டுகின்றன.

http://www.alaikal.com/news/?p=73140

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

கிறேக்கத்திற்குப் புதிய கடன் வழங்குவது குறித்த முடிவை, ஐரோப்பிய நாடுகள் பிற்போட்டன.

கிறேக்கத்திற்கு கடன் வழங்குவது குறித்த முடிவை எடுப்பதை ய+றோவை பொது நாணயமாகக் கொண்ட ஐரோப்பிய நாடுகள் தாமதம் செய்துள்ளன.

புதிதாக 110 பில்லியன் டொலர் பெறுமதியான கடன் உதவியை வழங்குவது குறித்து அந்த நாடுகள் ஆராய்ந்து வருகின்றன. புதிய கடன் குறித்த உறுதிமொழியை வழங்குவதற்கு முன்பு, கிறேக்கம் சிக்கன நடவடிக்கைகளை உறுதி செய்யவேண்டுமென அந்த நாடுகளின் நிதியமைச்சர்கள் தெரிவித்தார்கள்.

28 பில்லியன் ய+றோ பெறுமதியான செலவினக் குறைப்பு நடவடிக்கைகளை கிறேக்கம் அங்கிகரித்த பின்னர் புதிய கடன் வழங்குவது குறித்து அவர்கள் அறிவிப்பார்களென எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே 110 பில்லியன் ய+றோ கடனின் இறுதிப் பங்கான, 12 பில்லியன் யூறோவை, எதிர்வரும் ஜூலை மாதத்தின் இறுதிக்கு முன்னராக வழங்கலாமென்ற எதிர்பார்ப்பை அவர்கள் வெளியிட்டார்கள்.

மேலதிக செலவினக் குறைப்புக்கள் மேற்கொள்ளப்படுவதற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் கிறேக்கத்தில் தொடர்ந்து வருகின்றன.

இதேவேளை, பிரதம மந்திரி ஜோர்ஜ் பாபன்றோ (George Papandreou), கடந்த வாரம் புதிதாக அமைத்த அமைச்சரவை மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=8274

  • கருத்துக்கள உறவுகள்

551970-tn_jobs115.gif

உலக பொருளாதாரம் .. சென்செக்சு ..அன்னிய செலவாணிகள் மதிப்பு.. அன்னிய களவாணிகள்(ரஸ்யா சீனா கிந்தியா ஈரான் ) மதிப்பு.. அனைத்தையும் பிட்டு பிட்டு வைக்கும் தோழர் அகூதா அவர்களுக்கு முதற்கண் நன்றிகள்.. :) :)

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

சிக்கன நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தும் கிறேக்கத்தின் முடிவை ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்றது.

கிறேக்க நாடாளுமன்றம், மிகக் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை அங்கிகரித்துள்ளதை ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்றது.

பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத மிகவும் மோசமான நிலை ஏற்படுவதைத் தடுப்பதில் இதுவொரு முக்கியமான நடவடிக்கையென ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்தது. இந்த நடவடிக்கைகள் அங்கிகரிக்கப்பட்டால்தான், கிறேக்கத்திற்குக் கடன் வழங்க முடியுமென ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனை விதித்தமை குறிப்பிடத்தக்கது.

நேற்றைய தினம், இடம்பெற்ற வாக்கெடுப்பில், 155 க்கு 138 வாக்குகள் என்ற அடிப்படையில் 28 பில்லியன் ய+றோ சிக்கன நடவடிக்கைகளை கிறேக்க நாடாளுமன்றம் அங்கிகரித்தது.

எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில், வரிகளை அதிகரிப்பதன் மூலமும், அரச செலவினத்தைக் குறைப்பதன் மூலமும் அந்தப் பணம் மீதப்படுத்தப்படும். சிக்கன நடவடிக்கைகளை எப்படி நடைமுறைப்படுத்துவதென்று இன்று கிறேக்க நாடாளுமன்றம் முடிவெடுக்கும்.

கடந்த சில நாட்களாக கிறேக்கத்தில் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டங்களும், அவற்றின்போது மோதல்களும் இடம்பெற்று வருகின்றன. மோதல்கள் இன்றும் இடம்பெறுகின்றன.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=8402

  • தொடங்கியவர்

சொத்து மதிப்பில் 3வது இடத்தில் Mark Zuckerberg!

Facebook‘s Mark Zuckerberg is now richer than the Google’s pair. At the age of 27 Facebook major shareholder, finds himself under a mountain of gold or cash actually.

With the Goldman Sachs share sale in January, Facebook received a valuation of $50 billion but yesterday another huge sale of shares was made. A new investment from GSV Capital has now pushed the social server worth up from 50 to 70 billion dollars.

The group has just bought 225,000 shares at a price of $29.28 per share for a total spend of $6,587,500 and if you convert that into all of Facebook’s stock you get the $70 billion figure.

Mark Zuckerberg’s fortune is now estimated to exceed $18 billion. This puts the Facebook founder on the third step as richest tech titan after the unshakable Bill Gates from Microsoft that holds a record $56 billion followed by Larry Ellison from Oracle which is valued at $39.5 billion. On the forth place are the Google’s guys, Larry Page and Sergey Brin, that have an estimated fortune of $17 billion, down from $19.8 billion from March 2011.

With the increasing number of investors joining Facebook’s board, it won’t be long before the company goes public; only then we’ll see the true value of Facebook.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=8420

  • தொடங்கியவர்

'வெளிநாட்டு தொழிலாளர் வேண்டாம்'

பிரிட்டனில் குடியேறி வருபவர்களின் விவகாரம் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வராவிட்டால், இங்கு அடுத்த ஒரு தலைமுறையும் முற்றிலும் சமூகநல உதவித் திட்டங்களில் தங்கியிருக்கும் நிலைமை உருவாகிவிடும் என்று பிரிட்டனின் மூத்த அரசாங்க அமைச்சர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

பிரிட்டனில் உள்ள வணிக நிறுவனங்கள் கூட தொழிலாளர்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை விட, பிரிட்டிஷ் இளைஞர்களுக்கு சந்தர்ப்பங்களை வழங்குவதன் மூலம், உதவ முடியும் என்று நல உதவிகள் மற்றும் ஓய்வூதியத் துறைக்கான அமைச்சர் இயான் டங்கன் ஸ்மித் கூறியுள்ளார்.

நல உதவித் திட்டங்களும், குடியேறிகளின் பிரச்சினையும் பிரிட்டிஷ் அரசியல் எதிர்கொள்ளும் இரண்டு முக்கிய விவகாரங்களாகும். இங்கு அளவுக்கு அதிகமாக ஆட்கள் குடியேறுவதாகவும், நல உதவித் திட்டங்கள் மிகவும் தாராளமாக இருப்பதாகவும் பெருமளவில் வாக்காளர்கள் உணருவதாக கருத்தறியும் வாக்கெடுப்புக்கள் கூறுகின்றன.

தற்போது இந்த விவாதத்துக்குள் நுழைந்திருக்கும் அமைச்சர் இயான் டங்கன் ஸ்மித், பிரிட்டனை நோக்கிய குடியேற்றங்கள் தடுக்கப்படாவிட்டால், பல இளைஞர்கள், தமது பெற்றோரைப் போல, தமது தாத்தா பாட்டியைப் போல வேலையில்லாமல், நல உதவிகளையே நம்பி வாழும் நிலை பரம்பரை பரம்பரையாக தொடர்ந்து உருவாகும் என்று எச்சரித்துள்ளார்.

ஐரோப்பாவுக்கு வெளியே இருந்து பிரிட்டனுக்கு குடியேறுபவர்கள் விடயத்தில் புதிய மட்டுப்பாடுகளைக் கொண்டு வருவதன் மூலமும், வேலை மூலந்தான் வருமானம் கிடைக்கும் என்பதை உறுதி செய்யும் நோக்கில் நல உதவித் திட்டங்களில் மறுசீரமைப்பைச் செய்வதன் மூலமும் அரசாங்கம் இந்த விடயத்தில் தனது பங்கைச் செய்யும் என்றும் டங்கன் ஸ்மித் கூறியுள்ளார்.

கடந்த 14 வருடங்களில் உருவாக்கப்பட்ட முப்பது லட்சம் புதிய தொழில் வாய்ப்புக்களில் 80 வீதமானவை குடியேறிகளால் நிரப்பப்பட்டதாகவும், அதில் அரைவாசிப்பேர் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியே இருந்து வந்தவர்கள் என்றும் அதிகாரபூர்வ தகவல்கள் கூறுகின்றன.http://www.bbc.co.uk/tamil/news/story/2011/07/110701_ukimmigration.shtml

  • தொடங்கியவர்

புலம்பெயர் நாடுகளில் குடியேறிய பின்னர் எமது அடுத்த தலைமுறைக்கு நாம் முக்கியமாக கற்றுக்கொடுக்க வேண்டிய விடயங்களில் ஒன்று 'எவ்வாறு பணத்தை நிர்வகிப்பது?' என்பது.

இங்கு பலரும் பணத்தின் பெறுமதி தெரியாமல் தமது பிள்ளைகளை வளர்க்கின்றார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. அதனால் பலரும் கடனாளியாகி கடினப்படக்கூடும்.

கீழே உள்ள கட்டுரை/அனுபவம் பல விடயங்களை அனுபவரீதியாக முன்வைக்கின்றது.

I was down to my last $20: Who eats today?

I learned about good money management the hard way.

I’m a 29-year-old electrician who lives just outside of Barrie and growing up in the 80’s and 90’s I never really understood money. I watched my parents go out for dinner, buy new cars, go on trips and spoil me, so I always thought money was just there, would always be there and was meant to be spent.

I got my first credit card when I was 18 with a $5,000 limit. I used up the entire amount within the first two years and was only paying the minimum amount each month. I enrolled in financial planning at George Brown College and paid for most of it with a student line of credit. I got that from the bank without having any assets. Once I realized how easy it was to get credit, I started to abuse it. I would use it for vacations, clothes and nights out on the town.

I bought my first house eight years ago in Sudbury for $72,000 when I was 21. I needed a place to live while I was in school, and the mortgage payment was cheaper than rent. When I applied for my mortgage, the agent said I should apply for a line of credit that was secured by the house. My bank was happy to do that and they raised my credit card limit from $5,000 to $10,000.

It was then that I started to question the bank’s willingness to lend me money. At this point I had a credit card with a $10,000 limit, a credit line with a $10,000 limit and a mortgage for $55,000. Minimum payments left me with no disposable income. I also questioned my money education or lack of it. When I had to change jobs because the hours were conflicting with school, my pay went down substantially. I started falling behind on my credit card payments, and ended up using my credit line to pay my credit card and mortgage. It all fell apart when I had $20 for groceries and I had to choose between getting food for my dog, or something for me.

It was then that I decided to start my money education. I began to talk to people about money. Anyone who I felt had money, or seemed to be good about not spending it, I would talk to. I would read articles and buy magazines to help learn about money from all different angles.

Since then, I have paid down my consumer debt, increased my mortgage payments to pay it off faster, and begun to invest. I was able to accomplish this by working hard to make a living and learning the difference between and want and need. I married and have two children who aren’t going to learn about money the hard way.

It is hard for parents to teach their kids about money, probably because a lot of parents aren’t good with money themselves. We are teaching our daughter at an early age. We gave her an allowance starting her 3rd birthday.

One dollar for every year she is old, but there’s a catch. Our daughter has three piggy banks. Each piggy bank has a label on it. There’s spending money, short-term savings and long-term savings. Every Friday we take three loonies and she puts one in each piggy bank. The spending money can be spent at any time on anything she chooses. Short term savings can be used for big games, toys or movies, but long term can’t be spent. We are going to put one third of her allowance in savings until she is 18. If we teach her that 33 per cent of the money she makes, isn’t really hers, she will be well on her way to a successful life with money.

http://www.moneyville.ca/article/1019675--i-was-down-to-my-last-20-who-eats-today

  • தொடங்கியவர்

அமெரிக்க பொருளாதாரம் மீண்டும் சரிவை நோக்கி?

கடந்த இரண்டு வருடங்களாக மிகப்பெரிய பொருளாதார சரிவில் இருந்து மீண்டு வரும் அமேரிக்கா மீண்டும் பொருளாதார மந்த நிலையை (recession) அடையுமா?

- மே மாதம் 25000 புதிய வேலைகளை உருவாக்கிய அமேரிக்கா ஜூன் மாதம் 180000 வேலைகளை உருவாக்கி உள்ளது

- அமெரிக்காவின் வேலையில்லாதிண்டாட சுட்டி 9.1 இலிருந்து 9.2 ஆக உயர்ந்துள்ளது

- கிட்டத்தட்ட 14.1 மில்லியன் மக்கள் வேலை தேடிய வண்ணம் உள்ளனர்

http://www.nytimes.com/2011/07/09/business/economy/job-growth-falters-badly-clouding-hope-for-recovery.html?_r=1&hp

http://money.cnn.com/2011/07/08/news/economy/june_jobs_report_unemployment/index.htm?hpt=hp_t2

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

இன்று தொடரும் உலகின் ஒரு நிரந்தரமற்ற பொருளாதார நிலை காரணமாக தங்கம் ஒரு உச்சவிலையை தொட்டது, 1,605.00 - per ounce.

ஒன்று கிரீஸ் மற்றையது அமெரிக்கா.

ஆகஸ்ட் இரண்டாம் திகதி அமேரிக்கா தனது 14, 000,000,000,000 USD கடனுக்கு (காசை அடித்து) வட்டி கட்டியாக வேண்டும்.

இரண்டு கட்சிகளுக்கும் இடையில், குயரசு - ஜனநாயக, அரசியல் இழுபறி தொடர்கின்றது. இதனால் தங்கம் ஏறுகின்றது. இவர்கள் தமது கடனை கட்டாவிட்டால் தங்கம் ஒரு அவுன்சுக்கு 5000 USD வரை கூட செல்லலாம் என்கிறார்கள்.

ஆனால் அது நடக்காது. ஒரு தீர்வை அமெரிக்கா எட்டியே ஆகும்.

ஆனால், கிரேஸ் பிரச்சனையோ இருபத்தியேழு நாடுகள் சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவு. கிரீசை கைவிட்டால் அதன் தாக்கம் மற்றைய நாடுகளில் உணரப்பட்டு முழு ஐரோப்பாவையும் பலவீனமாக்கும் என நம்பப்படுகின்றது.

  • தொடங்கியவர்

9 Ideas That Made $100 Million

1.Sara Blakely, Spanx

2.Brian Scudamore, 1-800-GOT-JUNK

3. Jennifer Telfer, Pillow Pets

4. Bert and John Jacobs, Life is good

5. Steve Ells, Chipotle

6. Adam Lowry and Eric Ryan, Method

7. Roxanne Quimby and Burt Shavitz, Burt's Bees

8. Jim McCann, 1-800-FLOWERS.COM

9. Gary and Diane Heavin, Curves

http://finance.yahoo.com/career-work/article/113152/9-100-million-dollar-ideas-cnbc

  • தொடங்கியவர்

ஆப்பிள் நிறுவன காலாண்டு நிகரலாபம் இருமடங்கு உயர்வு

நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டு முடிவில் ஐபோன் மற்றும் ஐபேட் விற்பனையின் மூலம் ஆப்பிள் நிறுவனத்தின் நிகரலாபம் இரு மடங்காக அதிகரித்துள்ளது.

இந்த காலாண்டில் இந்நிறுவனம் பெற்ற லாபம் 7.31 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.

இதற்கு முந்தைய ஆண்டில் ஐபோன் விற்பனை மூலம் இந்நிறுவனம் பெற்ற லாபம் 3.25 பில்லியன் டலார்கள் மட்டுமே. ஜூன் 25ம் தேதியுடன் முடிவடைந்த 3வது காலாண்டில் ஆப்பிள் நிறுவனம் பெற்ற மொத்த வருமானம் 28.57 பில்லியன் டாலர்களாகும். இது முந்தைய ஆண்டை விட 82 சதவீதம் அதிகமாகும். இந்த காலாண்டில் ஆப்பிள் நிறுவனம் 20.34 மில்லியன் ஐபோன்களை விற்பனை செய்துள்ளது. இது 142 சதவீதம் வளர்ச்சியாகும். இதே போன்று 9.25 மில்லியன் ஐபேட்கள் விற்பனை செய்துள்ளது.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=279119

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

85 மில்லியன் வேலையிடங்கள் சீனாவிலிருந்து..

ஏழை நாடுகளின் பொருளாதாரத்தில் புதியதோர் வாய்ப்பு..

சீனாவில் உள்ள சுமார் 85 மில்லியன் வேலையிடங்கள் உலகின் மற்றைய ஏழை நாடுகளுக்கு நகர்த்தப்படவுள்ளன. தற்போது சீனாவில் உள்ள ஊழியர்களுக்கு உயர்ந்த சம்பளத்தை சீனா வழங்குவதில்லை, இருப்பினும் அதைவிட அடிமாட்டு விலையில் ஊழியர்களை தேடுகிறது சீனா. பெரும்பாலும் மிகவும் ஏழை நாடுகளுக்கு இந்த வேலைகளை நகர்த்தி பயன்பெற சீனா முயன்றுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக சீனாவின் பொருளாதார வளர்ச்சி 10 வீதம் அதிகரித்துள்ளது. ஆனால் பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மலிவு விலை ஊழியர்களைத் தேடிப் புறப்படுகிறது சீனா.

சீனா எந்த நாடுகளை நோக்கி தனது தொழிற்சாலைகளை நகர்த்துகிறது என்று தெளிவாகக் கூறப்படவில்லை. ஆனால் ஆபிரிக்கக் கண்டத்தை நோக்கி அதனுடைய கூடுதல் நகர்வு இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. ஏற்கெனவே வியட்நாம், கம்போடியா போன்ற நாடுகளில் சீனாவின் தொழிற்சாலைகள் இருந்துள்ளன. இந்த நாடுகளில் தற்போது சம்பள விகிதம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சீனா அதைவிட குறைந்த சம்பளமுள்ள நாடுகளை தேடுகிறது. இந்த வாய்ப்புக்களை சிறீலங்காவும் பெறுவதற்கு வழியுள்ளது.

http://www.alaikal.com/news/?p=77479

  • தொடங்கியவர்

கட்டற்ற வர்த்தக மண்டலங்கள்

சவரம் செய்யக் கூடிய ரேசர் எவ்வளவு இருக்கும்? $30 [ரூ.1320] இல்லை ஒரு டெலிபோன்? – $2,400 [ரூ.1,05,600] ஒரு பாட்டில் தேங்காய் எண்ணெய்? – $180 [ரூ.7,920] இதெல்லாம் பணவீக்கம் தறிகெட்டு ஒடிக் கொண்டிருக்கும் ஜிம்பாப்வேயில் இல்லை. சோற்றுக்கு அல்லாடும் சோமாலியாவில் இல்லை. இவை 1992லிருந்து இன்று வரைக்கும் உலகமெங்கும் கட்டற்ற வர்த்தக மண்டலங்கள் மூலம் ஏற்றுமதி/இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களின் இன்வாய்ஸ்கள்.

135 நாடுகளில், கிட்டத்திட்ட 3,000 கட்டற்ற வர்த்தக மண்டலங்கள் (Free Trade Zone – FTZ) இருக்கிறது. 2007-இல் இதன் மூலம் பரிவர்த்தனை செய்யப்பட்ட வர்த்தகம் US $400 பில்லியன் ( ரூ. 17,60,000 கோடிகள்). பனாமாவிலுள்ள கொலான் தான் உலகின் இரண்டாவது பெரிய கட்டற்ற வர்த்தக மண்டலம். 2008ல் கொலான் செய்த பரிவர்த்தனைகள் மட்டுமே US$8.6பில்லியன் (ரூ.37,840 கோடிகள்)

கட்டற்ற வர்த்தக மண்டலங்கள் என்றால் என்ன?

கடலுக்கு பக்கமாகவோ, விமான தளங்களுக்கு பக்கமாகவோ, ஒரு நாட்டின் நிறுவனம் நடத்தும் விதிகளிலிருந்து விலக்குகள் அளிக்கப்பட்டு வர்த்தகத்தினை ஊக்குவிக்க அமைக்கப்படும் பிராந்தியம் தான் கட்டற்ற வர்த்தக மண்டலங்கள். சுருக்கமாய் மண்டலங்கள். மண்டலங்களில் வரி குறைவாக இருக்கும். பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு சிறப்பு சலுகைகள், விலக்குகள், வரி குறைப்பு, சுங்கத் தீர்வை குறைப்பு என சலுகைகள் நீளும்.

உதாரணத்திற்கு சீனாவின் ஷென்சென் ஒரு பெரிய சிறப்புப் பொருளாதார மையம் (Special Economic Zone). அங்கே 15 கட்டற்ற வர்த்தக மண்டலங்கள், 17 ஏற்றுமதி செயல்பாட்டு மையங்கள், 5 தொழில்நுட்பம், பொருளாதார மையங்கள், 53 அதிநவீன நுட்ப உருவாக்க கேந்திரங்கள் மற்றும் 15 எல்லையடங்கிய பொருளாதார கூட்டுறவு மையங்கள் இருக்கின்றன.

பெரும்பாலான மண்டலங்களில் ஒரு நிறுவனம் துவக்குவது என்பது பரம சுலபம். அந்த ஊர் கார்ப்பரேட், நிறுவன விதிகளிலிருந்து பல விலக்குகள் மண்டலங்களில் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு கிடைக்கும். உதாரணத்திற்கு துபாயில் நிறுவனம் தொடங்க ஒரு உள்ளூர் ஆள் கண்டிப்பாகத் தேவை. இதையே ரஸ்-அல்-கைமா, புஜைரா, ஜெபல் அலி மண்டலங்களில் தொடங்க உள்ளூர் ஆள் தேவையில்லை. இந்தியாவிலேயே அமீரகத்தின் வெவ்வேறு குடியரசின் பிரதிநிதிகள், அவர்கள் சார்ந்த மண்டலங்களில் நிறுவனத்தினை துவக்க எல்லா வேலைகளையும் செய்வார்கள். உதாரணத்திற்கு ரஸ்-அல்-கைமாவினுள் ஒரு நிறுவனம் தொடங்க ஆகும் மொத்த செலவு வெறும் ரூ.மூன்று இலட்சம்.

பிரச்சனை இந்த மண்டலங்கள் எதுவும் முழுமையான உள்ளூர் சட்டத்துக்குள் வராது. மண்டலங்கள் போடுவதே வரிகளுக்கு ‘கட்’ அடித்து விட்டு, வெளியே போவதற்கு தான். இது ஒரு இரு முனை கத்தி மாதிரியான பொருளாதார ‘மாடல்’. வரிகள், சுங்கத் தீர்வைகள் இருந்தாலே நம்மாட்கள் அதை ஏமாற்ற வழி கண்டுபிடிப்பார்கள். இல்லையென்றால் கேட்கவா வேண்டும்.

வர்த்தகம் சார்ந்த கருப்புப் பணப் பரிமாற்றம் என்பது கப்பலோட்ட துவங்கிய காலத்தில் ஆரம்பித்தது. எல்லா நாடுகளிலும் கடலுக்கு ஒட்டிய இடம் தான் பின்னாளில் மண்டலங்களாக மாறத் தொடங்கியது. இவைதான் சிங்கப்பூராகவும், துபாயாகவும், ஜிப்ரால்டராகவும், கபானாகவும், அயர்லாந்தாகவும், பனாமாவாகவும் மாறி உலக வர்த்தகத்தின் பெரும்பான்மை வர்த்தகத்தை தங்களுடைய மண்டலங்கள் வழியே ரூட் செய்ய ஆரம்பித்தன.

விலை குறைத்து/அதிகரித்து போடுதல்(under/over invoicing) என்பது உலகின் புராதனத் தொழிலுக்கு அடுத்ததாக நடந்து வரும் தொழில். மண்டலங்களில் இது இன்னமும் அதிகம். ஏனெனில் அங்கே கட்டுப்பாடுகள் குறைவு. நிறுவனம் நடத்துபவர்கள் பற்றி குறைவான தகவல்களே இருக்கும். பெரிய அளவிற்கு செக்கிங் நடக்காது. வெறும் பேப்பர்கள். இன்வாய்ஸ்கள் எல்லாம் வெற்றுப் பேப்பர்கள். அதில் இருப்பதை யாரும் பெரும் கவனமெடுத்து பார்க்க மாட்டார்கள்.

ஒரு வருடம் முன்பு வரை, உபயோகப் படுத்திய பெரிய க்ரேன்களை இந்தியாவில் உபயோகமற்றது (scrap) என்று சொல்லி இலட்சத்தில் வாங்கி கோடிகளில் விற்று, ஒட்டுமொத்த தூத்துக்குடி, திருநெல்வேலி ஏரியாக்களில் மண் அள்ளுகிறார்கள். இது எல்லாமே இப்படி மெனக்கெடாமல்,மண்டலங்களில் சுலபம்.

ரீ-பேக்கேஜிங், ரீ-லேபிலிங் மாதிரியான சமாச்சாரங்களில் தான் பெரும்பணம் கைமாறும். உதாரணத்திற்கு நானொரு ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியாளன். எனக்கு வரும் ஆர்டர் – ஜெபல் அலியில் சரக்கு இறக்கிவிட்டு காசு வாங்கிக் கொள்ளுங்கள். நானும் சரக்கினை அனுப்பி காசு வாங்கிவிடுவேன். ஆட்டம் ஜெபல் அலியில் ஆரம்பிக்கும்.

ஜெபல் அலியில் இறங்கிய சரக்கின் லேபிள்கள் மாற்றப்படும். பேக்கேஜிங் மாறும். நான் உதாரணத்திற்கு ஒரு சட்டை $10 என்று விற்றிருந்தால், விலை வெறும் லேபிள், பேக்கேஜிங் மாற்றியதால் சடாலென $40 என்று மாறும். உண்மையில் என்னிடமிருந்து வாங்கிய அமீரகத்தில் வாங்கிய ஆளின் குறிக்கோள் ஆயத்த ஆடைகள் அல்ல. சிரியா / லெபனானில் இவர் யாருக்காவது ‘வேலைகள்’ செய்திருப்பார். அதற்கான கூலி தான் இது. நான் ஒரு லட்சம் சட்டைகள் அனுப்பியிருந்தால், அது என்னைப் பொறுத்தவரை $1 மில்லியன். ஆனால், வெறும் லேபிள்/பேக்கேஜிங் மாற்றி, விலை அதிகரித்து மாற்றி, அதுவே சிரியா / லெபனானில் $4 மில்லியனுக்கு போகும். எனக்கு சேர வேண்டிய ஒரு மில்லியன் போக, மீதம் இருக்கிற $3 மில்லியன் வெள்ளையாகிவிட்டது. ஏனெனில் இது ஏற்றுமதியில் சம்பாதித்தப் பணம்.

துபாயில் வரிகள் கிடையாது. நேரடியாக அதை வங்கியிலிருந்து காசாய் மாற்றி யாருக்கு வேண்டுமானாலும் தரலாம். $3 மில்லியன், முப்பது வழிகளில், முன்னூறு பேர்களுக்கு வெறும் 30 நிமிஷத்தில் போய்விடும். மேலே சொன்னது ஒரு சின்ன சாம்பிள். ஒரு வருடத்தில் துபாய் மண்டலங்கள் மட்டும் குறைந்தப் பட்சம் பல பில்லியன் டாலர்கள் பரிவர்த்தனை செய்யும். அதில் 10-20% இந்த மாதிரி வெளுப்பாக்கி, இஸ்திரி போடும் வேலை என்று கொண்டால், அதுவே குறைந்தப்பட்சம் $200 மில்லியன் டாலர்கள் ஒரு பில்லியனுக்கு. கிட்டத்திட்ட ரூ.880 கோடிகள். போதாதா.

போன வாரம் எழுதிய மென்பொருளுக்கும், மண்டலங்களுக்கும் பெரிய வித்தியாசங்கள் கிடையாது. மென்பொருளில் ஒரளவிற்கு மேல் கை வைக்க முடியாது. ஆனால் மண்டலங்களில் அதை செய்ய முடியும். வருடத்திற்கு $400 பில்லியன் பரிவர்த்தனை நடக்கும் இடத்தில் சில பல பில்லியன் டாலர்கள் வெளுக்கப்பட்டால் யார் கவலைப்படப் போகிறார்கள்?

இந்தியாவில் பொருளாதார சுதந்திரம் என்று வலதுசாரி அறிவுஜீவிகள் கோஷம் போட்டு, கட்டற்ற வர்த்தக மண்டலங்களையும், சிறப்புப் பொருளாதார மையங்களையும் வளர்க்க நினைக்கிறார்கள். இதன் முழுமையான ஆழம தெரியாமல் காலைவிட்டால், பின்னாளில் தொப்பலாய் கரை ஒதுங்குவோம். ஒரே மகிழ்ச்சி, போன பட்ஜெட்டில் பிரணாப் முகர்ஜி சிறப்புப் பொருளாதார மையங்களுக்கும் வரி உண்டு என்று சொன்னது தான்.

மண்டலங்கள், மையங்கள், சிறப்பு சலுகை இடங்கள் என நாட்டின் பொருளாதாரத்தினைப் பெருக்க செய்யும் எல்லா விஷயங்களிலும் உள்ளூர ஒரு அபாயமிருக்கிறது என்பதை உணர வேண்டும். கராச்சி, பாகிஸ்தான் ஒரு முக்கியமான இடம். அமெரிக்காவில் இதை ஹார்வேர்டில் முதல் வகுப்பில் பாஸ் பண்ணிய ஆட்கள் பனாமா வழியாக விளையாடிய கதை கூகிளிட்டால் ஊர் சிரிக்கும்.

அடிப்படையில் கட்டற்றது என்று சொல்லும் எல்லா விஷயங்களின் உள்ளிருக்கும், கட்டற்ற சுதந்திரமும், எல்லைகளற்ற செளகர்யங்களும் பெரும்பாலான சமயங்களில் தவறாகவே பயன்படுத்தப் படுகிறது. பெரும்பாலான உலகளாவிய மண்டலங்களில் கருப்புப் பண கண்டறிதல், தணிக்கை, செயல்முறைகள், விதிகள் என எதுவும் தெளிவாக செய்யப்படுவதில்லை.

இன்னொரு அடிப்படைப் பிரச்சனை, ஒரு மண்டலம் தங்களின் தணிக்கையினை கடுமையாக்கினால், நிறுவனங்கள் உடனடியாக அடுத்த மண்டலத்துக்கு தாவி விடும். மண்டலங்களுக்கு இது பெரிய வாடிக்கையாளன், லாபம், சர்வைவல் பிரச்சனை. ஆக, எந்த மண்டலமும் வெளியே தாங்கள் எல்லாம் கடுமையாக கண்காணித்துக் கொண்டிருக்கிறோம் என்று சொன்னாலும், உள்ளுக்குள் விட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் நிதர்சனம்.

கரன்சிகள் இன்னொரு பிரச்சனை. பெரும்பாலான மண்டலங்களில் நடக்கும் பரிவர்த்தனைகள் உள்ளூர் கரன்சிகளில் நடப்பதில்லை. அது அமெரிக்க டாலர், யூரோ, சீன ரென்பி, ஜப்பானிய யென், ஸ்விஸ் ப்ராங்க் என நீளும். இது பல்வேறு வங்கிகளுக்கு அல்வா. ஒவ்வொரு கரன்சி மாற்றத்திற்கும் வரும் கமிஷனில் தான் பல டெஸ்குகளில் மேனேஜர்கள், தரகர்கள் தங்களின் சொத்தினை பெருக்குகிறார்கள். அவர்களுக்கு பணம் எப்படி வருகிறது, போகிறது என்கிற கவலையில்லை. பரிவர்த்தனைகள் தான் முக்கியம். இந்த கரன்சிகளை அடிக்கும் நாடுகளுக்கும் இது முக்கியம். ஆக உலக வர்த்தகத்தினூடே கருப்புப் பணப் பரிமாற்றம், வர்த்தகமும் நடக்கும். இதை தடுத்தாட்கொள்வது கடினம்.

கட்டற்ற வர்த்தகமே தவறு என்று சொல்லுதல் முட்டாள்தனம். ஆனால் கட்டற்ற வர்த்தக மண்டலங்கள் தெரிந்தும், தெரியாமலும் உலகின் மிகப்பெரிய கருப்புப் பண வாய்க்காலாக இருக்கிறார்கள் என்பது தான் உண்மை.

http://www.tamilpaper.net/?p=3845&utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+tamilpaper%2FQQvv+%28TamilPaper%29

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

வெளிநாடுகளில் உள்ள நாட்டின் தங்கக் கையிருப்பை கொண்டுவரவுள்ளதாக வெனிசுவேலாவின் ஜனாதிபதி கூறினார்

வெளிநாடுகளில் உள்ள தமது நாட்டின் தங்கக் கையிருப்பை தமது நாட்டிற்குக் கொண்டுவரவுள்ளதாக வெனிசுவேலாவின் ஜனாதிபதி ஊகோ சாவேஸ் கூறினார்.

நாட்டின் தங்கம் அகழும் தொழிற்துறையை தேசிய மயப்படுத்தவுள்ளதாகவும் நேற்றுத் தேசிய தொலைக்காட்சியில் அவர் அறிவித்தார்.

அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்சினைகளில் இருந்து, தமது நாட்டைப் பாதுகாக்கும் நோக்குடன் இந்த நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக சாவேஸ் கூறினார்.

எண்ணை உற்பத்தி செய்யும் வெனிசுவேலாவிடம், 17.9 பில்லியன் டொலர் பெறுமதியான தங்கம் உட்பட 28.6 பில்லியன் டொலர் வெளிநாட்டு இருப்பாக உள்ளது.

பதினொரு பில்லியன் டொலர் பெறுமதியான வெனிசுவேலாவின் தங்கம் வெளிநாடுகளில் உள்ளதாக சாவேஸ் கூறினார்.

அதேவேளை, தங்கம் தவிர்ந்த ஏனைய வெளிநாட்டு நிதி கையிருப்பை, பலமான பொருளாதாரங்களில் முதலிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் வெனிசுவேலாவின் அரசு அறிவித்தது.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=8990

பெருமளவானோர் பணியில் இருந்து ஒய்வுபெறவுள்ளதால், கனடாவின் பொருளாதாரம் பாதிக்கப்படுமென அறிவிக்கப்படுகிறது.

இரண்டாம் உலகப் போர் முடிவடைந்தவுடன் பிறந்த baby boomers என அழைக்கப்படும் கனேடியர்கள் பணியில் இருந்து ஓய்வுபெறுவதன் காரணமாக, கனடாவின் பொருளாதாரம் பிரச்சினைகளை எதிர் கொள்ளுமென கனடா புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவிக்கிறது.

கடந்த காலங்களில் கனடாவில் பணிபுரிவதற்குத் தயாரானவர்களின் எண்ணிக்கை நீண்ட கால அடிப்படையில் சராசரியாக 3 சதவீதத்தால் அதிகரித்து வருகிறது.

ஆனால், baby boomers பணியில் இருந்து அதிக அளவில் ஓய்வுபெற ஆரம்பிப்பதால், பணிபுரிவதற்குத் தயாராக உள்ளவர்களின் எண்ணிக்கை அடுத்த பல ஆண்டுகளில் 2 சதவீதம் என்ற அளவால் மட்டும் அதிகரிக்குமெனத் தெரிவிக்கப்படுகிறது.

அடுத்த இருபது ஆண்டுகளில் கனடாவில் உள்ள முதியோரின் எண்ணிக்கை, இரண்டு மடங்காக அதிகரிக்குமென எதிர்வுகூறப்படுகிறது. அதன் காரணமாக அரச செலவினம் அதிகரிக்கும்.

ஆனால், பணியாளர்களின் எண்ணிக்கை குறைவடைவதன் காரணமாக, அரச வரி வருமானம் குறைவடையும். பற்றாக்குறையை எதிர்கொள்ளும் அரசுகளுக்கு இது நெருக்கடியை ஏற்படுத்துமென தெரிவிக்கப்படுகிறது.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=8993

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அகூதா, உலக பொருளாதாரத்தை பற்றி இவ்வளவு தகவல்கள் தருவதிற்கு,

  • தொடங்கியவர்

ஐரோப்பிய நாடுகளின் கடன் பிரச்சினை கனடாவையும் பாதிக்கலாமென Bank of Canada குறிப்பிடுகின்றது.

முக்கியமான ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் ஏற்பட்டுள்ள கடன் பிரச்சினை, சர்வதேச பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய முக்கியமான காரணி என, டீயமெ ழக ஊயயெனயஇன் ஆளுனர் மார்க் கார்னி தெரிவித்திருக்கின்றார்.

ஆகவே கனடா வர்த்தகத் தொடர்புகளைக் கொண்டுளு;ள ஐரோப்பிய நாடுகளுடன் பேச்சுக்களை நடத்தி, பொருளாதார நிலைமையை சீர்செய்வது குறித்து ஆராய்வது முக்கியமென, கனேடிய நாடாளுமன்றக் குழுவுடன் நடத்திய சந்திப்பின்போது மார்க் கார்னி கூறினார்.

கனடாவின் பொருளாதாரத்திற்குப் பாரிய சவாலாக இருப்பது, ஏனைய சர்வதேச நாடுகளின் பொருளாதார நிலைமை என்றும், ஆகவே அவற்றை சீர்செய்வது முக்கியத்துவம் பெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

சர்வதேச பொருளாதாரம் சரிவுநிலையை அடைந்துள்ளபோது, ஐரோப்பிய நாடுகளிலும் இவ்வாறு கடன்பிரச்சினை ஏற்பட்டிருப்பது, நிலைமையை மேலும் மோசமாக்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை எதிர்வரும் காலங்களில் பாரிய பொருளாதார சவால்கள் ஏற்படும் எனவும் அதனை எதிர்நோக்கத் தயார் எனவும் கனடா அறிவித்துள்ளது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைவடைந்து செல்வதாக கனேடிய பொருளாதாரத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். உலகப் பொருளாதார நெருக்கடி ஏற்படக் கூடிய சாத்தியம் காணப்படுகின்ற போதிலும் கனடாவிற்கு பாரிய பாதிப்புக்கள் ஏற்படக் கூடிய வாய்ப்பு கிடையாது எனவும் குறிப்பிட்டுள்ளனர். சகல துறையினரும் இணைந்து செயற்படுவதன் மூலம் சவால்களை வெற்றிகொள்ள முடியும் என்று நிதி அமைச்சர ஜிம் பிலாகெர்ரீ தெரிவித்துள்ளார்.

வலுவான முதலீடுகளின் மூலம் பொருளாதாரச் சரிவுகளை ஈடு செய்ய முடியும் என்று குறிப்பிட்டுள்ளார். உலக நாடுகளுக்கு முன்னுதாரணமான நிதிக் கொள்கைகள் பின்பற்றப்பட்டு வருவதாகவும் தொடர்ந்தும் அந்த நிலைமை நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

http://thamilfm.com/...il.aspx?ID=9018

Edited by akootha

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

ஒபாமா அடுத்த அதிபராக வருவது தொடர் கடினமாகிறது

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கருத்துக் கணிப்பில் மிகப்பெரிய முன்னேற்றத்தை பின்லாடன் படுகொலையின்போது பெற்றிருந்தார். இப்போது அந்த நிலை முற்றாக மாற்றமடைந்துள்ளது. இன்று உருவாகியுள்ள அமெரிக்கப் பொருளாதாரப் பிரச்சனை, டாலரின் அடிமட்ட வீழ்ச்சி யாவும் ஒபாமாவை ஒரு செல்லாக்காசு தலைவர் என்ற நிலைக்கு தள்ளிக் கொண்டிருக்கிறது.

சமீபகாலமாக வீழ்ச்சியடைந்த ஒபாமாவின் செல்வாக்கு இந்த வாரம் அதல பாதாளத்திற்கு போயுள்ளது. இந்த வீழ்ச்சியை தடுத்து நிறுத்த உடனடியாக எதையாவது செய்ய வேண்டிய தேவை ஒபாமாவுக்கு இருக்கிறது. இல்லையேல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் ஒபாமா மண் கவ்வுவதை மற்றவர்களால் தடுக்க இயலாது என்று அமெரிக்க தேர்தல் ஆய்வு வல்லுநர் பீற்றர் கராற் தெரிவித்துள்ளதாக இன்றைய டேனிஸ் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனால் ஒபாமாவின் வீழ்ச்சியும், அமெரிக்க பொருளாதாரத்தின் வீழ்ச்சியும் ஒன்றோடு ஒன்று பின்னி நிற்பது கவனிக்கத்தக்கது. அமெரிக்க பொருளாதாரத்தை உயர்த்த எதாவது அதிசயங்கள் உலகில் நடந்தால் மட்டுமே உண்டு.

http://www.alaikal.com/news/?p=81535

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

அக்டோபர் 1ம் தேதி முதல் இரண்டாம் உலகத்தமிழர் பொருளாதார மாநாடு; துபாயில் 4 நாள் நடக்கிறது

இரண்டாம் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு மற்றும் கண்காட்சி துபாயில் உள்ள உலக வர்த்தக மையத்தில், அக்டோபர் 1ம் தேதி முதல் 4 நாள் நடக்கிறது.

உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் கலாசாரம் மற்றும் பொருளாதார நிலை குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. தற்போதைய உலகத் தமிழர் நிலை, முதலீட்டு வாய்ப்புகள், தொழில்நுட்பம் ஆகியவை குறித்து பல நிபுணர்கள் உரையாற்றுகின்றனர். உலகம் முழுவதிலுமிருந்து தமிழர்கள் இதில் பங்கேற்று, தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள உள்ளனர். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் வாய்ப்புகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தனி நபர் மற்றும் குழுவாக ஒன்றிணைந்து சமுதாய வளர்ச்சிக்கு பாடுபடவும் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

தொழில் வாய்ப்புகள்- நிதி திரட்டுதல் : இந்த மாநாட்டில் இந்தியா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள், நீதிபதிகள், அதிகாரிகள், கல்வியாளர்கள், தொழில் அதிபர்கள் பலரும் பங்கேற்கின்றனர். மாநாட்டின் முதல் நாளான 1ம் தேதி காலை 9 மணி முதல் 5 மணி வரை பிரதிநிதிகள் பதிவு நடைபெறும். 2ம் தேதி காலை 09:30 மணிக்கு துவக்க விழா; 12 மணிக்கு உருவாகி வரும் தொழில் வாய்ப்புகள்; பகல் 02:30 மணிக்கு திட்டங்களுக்கான நிதி திரட்டுதல், மாலை04:30 மணிக்கு வளர்ச்சிக்கான திட்டங்கள் மற்றும் புதிய கருத்துக்கள் குறித்த உரைகள் இடம் பெறும்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=313912

  • தொடங்கியவர்

கனடாவின் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைவடையுமென சர்வதேச நாணய நிதியம் கூறுகிறது.

கனடாவின் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைவடையுமெனவும், வேலையற்றோரின் சதவீதம் அதிகரிக்குமெனவும் சர்வதேச நாணய நிதியம் எதிர்வுகூறியது.

இவ்வாண்டு கனடாவின் பொருளாதார வளர்ச்சி, 2.1 சதவீதமாகவும், அடுத்த ஆண்டு அது 1.9 சதவீதமாகவும் இருக்குமென நாணய நிதியம் தெரிவித்தது. இவ்வாண்டு வளர்ச்சி, 2.8 சதவீதமாகவும், அடுத்த ஆண்டு அது 2.6 சதவீதமாகவும் இருக்குமென நிதியம் முன்னர் தெரிவித்திருந்தது.

அதேவேளை, கனடாவில் வேலை வாய்ப்பு அற்றவர்களின் சதவீதம், தற்போதுள்ள 7.3 சதவீதம் என்ற அளவில் இருந்து, 7.6 சதவீதமாக அதிகரிக்குமெனவும், அடுத்த ஆண்டு அது 7.7 சதவீதமாக இருக்குமெனவும் சர்வதேச நாணய நிதியம் குறிப்பிடுகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை வெளியாகியதைத் தொடர்ந்து, சமஷ்டி அரசு பொருளாதார நெருக்கடி ஏற்படுவதைத் தடுப்பதற்கு போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லையெனவும், தவறான முடிவுகளை எடுப்பதாகவும் எதிர்க்கட்சியான என்டீபீ யின் இடைக்காலத் தலைவி நிகோல் ட்றமெல் குறை கூறினார்.

ஆனால், 2009 ஆம் ஆண்டு ஜூலையின் பின்னர், ஆறு லட்சம் வேலை வாய்ப்புக்களை உருவாக்கியுள்ளதாக தொழிற்துறை அமைச்சர் கிறிஸ்ரியன் பறடி (Christian Paradis) பதிலளித்தார்.

http://www.cmr.fm/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=9332

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.