Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எகிப்தின் பாணியில் லிபியாவிலும் தொடர் போராட்டங்கள்

Featured Replies

கேணல் கடாபிபற்றி அவருடைய மருத்துவத்தாதி உண்மைத் தகவல் !

கேணல் கடாபிக்கு மருத்துவ சிகிச்சை செய்வதற்காக லிபியா சென்றிருந்த 24 வயது ஒஸானா பெலின்ஸ்காயா என்ற உக்ரேனிய பெண்மணி அங்கிருந்து திரும்பியுள்ளார். அப்பெண்மணி கடாபி பற்றி தான் அறிந்த உண்மைகளை நியூஸ்வீக் சஞ்சிகைக்கு வழங்கியுள்ளார். கடாபிக்கு அழகி பெண்கள் அருகில் இருப்பது எப்போதும் பிடிக்கும். அதுபோல சின்னச்சின்ன அழகான பொருட்களை எல்லாம் அவர் விரும்புவார். ஒரு நாளைக்கு பல தடவைகள் புதிய புதிய உடைகளை மாற்றிக் கொள்வார்.

கடாபிக்கு மருத்துவ உதவிகளை செய்ய லிபியா சென்றபோது இரண்டு அறைகள் கொண்ட வீடும், காரும் தரப்பட்டது. ஆனால் தனது தொலைபேசி உரையாடல்கள் உட்பட அன்றாட வாழ்வும் கண்காணிக்கப்பட்டது என்று கூறிய அவர். கடாபியை தாமெல்லாம் சித்தப்பா ( பப்பிக் ) என்று அழைப்போம் என்று தெரிவித்தார். கடாபி இளம் பெண்களை விரும்பினாலும் அவருடைய பொறாமை மிக்க மனைவி சோபியா பெண்களை நெருங்க விடாது கண்காணித்துக் கொண்டே இருப்பார். இதனால் கடாபிக்கு பல பெண்களுடன் தொடர்பு ஏற்பட யாதொரு வாய்ப்பும் இருக்கவில்லை. வெளிப்படைக்கு ஒரு சர்வாதிகாரி போல தெரிந்தாலும் அவருடைய வாழ்வு ஒரு பயனற்ற வாழ்வுதான் என்றும் அப்பெண்மணி கூறினார்.

ஆபிரிக்க நாடுகளுக்கு போகும்போதும், வெளியில் போகும்போதும் கைக்கு உறை அணிந்து செல்வார். மற்றவர்களுடைய கிருமி தன்னில் தொற்றிவிடும் என்ற அச்சம் அவருக்கு இருந்தது. ஏழை மக்களின் அருகில் செல்ல விரும்பமாட்டார். காரில் போகும்போது வீதியில் பணத்தை கடதாசிபோல எறிந்தபடி போவார். அதை மற்றவர் பொறுக்குவதைப் பார்ப்பதில் அவருக்கு எல்லையில்லாத மகிழ்ச்சி வரும்.

கடாபிக்கு பாரிய சுகயீனங்கள் இல்லை, அவருக்கான நீண்ட உடற்பயிற்சி ஆலோசனைகள் உண்டு, தினசரி அதிக தூரம் நடப்பது அவருடைய இயல்பு. அவருக்கு எண்ணற்ற வெளிநாட்டு மருத்துவத்தாதிகள் வைப்பாட்டிகளாக இருக்கிறார்கள் என்ற பழைய செய்தி தவறானது என்றும் கூறினார். இரத்தப் பரிசோதனைக்கு மட்டுமே தாம் அவருடைய கையை தொட்டுள்ளோம் என்றும் கூறினார். பல தடவைகள் உடை மாற்றினாலும் இறுதியில் திடீரென ஏதோ ஓர் உடையை தெரிவு செய்வார். அது 1980 களில் வந்த ஒரு றொக் பாடகனின் உடையைப்போல இருக்கும் என்றும் தெரிவிக்கிறார்.

http://www.alaikal.com/news/?p=64951

Edited by akootha

  • Replies 207
  • Views 13.4k
  • Created
  • Last Reply

கடாஃபியின் மீது இராணுவ அழுத்தத்தை அதிகரிக்க பிறான்ஸ், பிரித்தானியா இணக்கம்

லிபியத் தலைவர் மோமர் கடாஃபியின் மீது இராணுவ அழுத்தத்தை அதிகரிப்பதற்கு, பிறான்ஸ் மற்றும் பிரித்தானியா என்பன இணக்கம் கண்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

நேற்றிரவு பரிசில் சந்தித்த பிறான்ஸ் ஜனாதிபதி நிக்கொலா சார்கோசியும், பிரித்தானிய பிரதம மந்திரி டேவிட் கமறோனும் இது குறித்து இணக்கம் கண்டதாக பிறான்ஸ் ஜனாதிபதி செயலக வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

இன்றைய தினம், பேர்ளினில் இடம்பெறவுள்ள நேற்றோ அமைப்பின் வெளியுறவு அமைச்சர்களின் மகாநாட்டில், ஏனைய நாடுகளும், லிபியா மீது தாக்குதல்களை அதிகரிக்கவேண்டுமென பிரித்தானியாவும் பிறான்சும் கோரிக்கை விடுக்கவுள்ளதாகத் தெரிகிறது.

28 நாடுகளைக் கொண்ட நேற்றோ அமைப்பின் ஆறு நாடுகள் மட்டும் மோமர் கடாஃபியின் படைகள் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

ஆரம்பத்தில் தலைமையேற்றுத் தாக்குதல்களை நடத்திய அமெரிக்கப் படைகள் தற்போது தாக்குதல்களைக் குறைத்துள்ளபோதிலும், தற்போதும் தாக்குதல்களை நடத்தி வருவதாக அமெரிக்க அதிகாரிகள் கூறினார்கள்.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=7415

NATO Nations Commit to Ending Gadhafi Rule

asmussen said he was confident NATO would get them, although there have been no firm pledges to date. The United States, which has such aircraft, has reduced its role in the campaign although Rasmussen says it continues to contribute to the mission.

He said all participants in the Libyan mission agreed on a set of objectives, including that Libyan soldiers, mercenaries and snipers must withdraw and that the regime allow for safe and unhindered humanitarian access.

http://www.voanews.com/english/news/europe/NATO-Nations-Commit-to-Ending-Gadhafi-Rule-119852514.html

  • கருத்துக்கள உறவுகள்

லிபிய முற்றுகை: ஐ.நா உடனடி நடவடிக்கைக்கு பிரிட்டன் அவசரம்

லிபியாவில் போராட்டக்காரர்கள் வசம் உள்ள மிஸ்ரட்டா பகுதியில் பொது மக்களுக்கு எந்த வசதியும் கிடைக்காத வகையில் லிபிய அரசு முற்றுகையிட்டுள்ளது.

மிஸ்ரட்டா மக்கள் சுத்தமற்ற தண்ணீர் குடிக்கிறார்கள். இதனால் தண்ணீர் சார்ந்த நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. உரிய மருத்துவ நிவாரண பொருட்களும் கொண்டு செல்ல முடியவில்லை.

போராட்டப் பகுதியில் முற்றுகை நடவடிக்கை குறித்து ஐ.நா உடனடி தீர்வு காண வேண்டும் என பிரிட்டன் அவசரப்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சர்வதேச மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆண்ட்ரூ மிட்செல் நியூயார்க்கிற்கு அவசரமாக செல்கிறார். அங்கு பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பது தொடர்பாக விவாதிக்கிறார்.

மிஸ்ரட்டா பகுதியிலும் இதர நகரங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கி உள்ளனர். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து வரும் மோதல் காரணமாக 300க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர்.

குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் காயம் அடைந்துள்ளனர். இந்தப் போராட்டத்தில் கடாபியின் லிபிய ராணுவத்திற்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே போர் உச்ச கட்டமாகி உள்ளது. இந்தத் தாக்குதலில் காயமடைந்துள்ள மக்கள் மருத்துவ சிகிச்சைக்கு கூட வெளியேற முடியவில்லை.

மருத்துவமனைகளில் மின்வசதி இல்லை. அங்குள்ள மக்கள் வீட்டுக்குள்ளேயே பல நாட்கள் இருக்க வேண்டி உள்ளது. அவர்களுக்கு சிறிய அளவு மட்டுமே உணவு உள்ளது. இன்னும் பலர் உணவுக்காக பரிதவித்து உள்ளனர்.

லிபியாவில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பிரிட்டன் ஏற்கனவே அவசர நிலை கூடாரங்கள் அமைப்பது, மருந்துப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் அனுப்பி உள்ளது. லிபியாவில் நேட்டோ படைகள் ராணுவ தாக்குதலை ஐ.நா கட்டுப்படுத்தி உள்ளது. இதனால் லிபியா ராணுவம் தொடர்ந்து தாக்குகிறது.

http://www.newsonews.com/view.php?22cQ08Sc202znBZb4e2cIOl7acb2eCAA0dde44MCC0bcedlOK3e4dnBnB4303dq80C42

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு லிபியாவில் கடாபியின் படையினர் உக்கிர ஷெல் தாக்குதல்; 6 பேர் பலி _

வீரகேசரி இணையம் 4/18/2011 5:38:10 PM Share

லிபியாவின் மிஸ்ரடா நகரில் மோதல்களால் பெப்ரவரி இறுதியில் இருந்து 300 பொதுமக்கள் பலி; 1000 பேர் காயம்

லிபியாவில் போராளிகளின் கட்டுப்பாட்டிலுள்ள மிஸ்ரடா நகரில் அரசாங்கப்படையினருக்கும் கிளர்ச்சியாளருக்குமிடையே தொடர்ந்து உக்கிர மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.

ஞாயிற்றுக்கிழமை அங்கு இடம்பெற்ற ஏவுகணைத் தாக்குதலில் சுமார் 6 பேர் பலியானதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை நகரில் லிபிய ஜனாதிபதி கடாபி ஆதரவு படையினர் நடத்திய ஷெல் தாக்குதல்களில் குறைந்தது 47 பேர் காயமடைந்துள்ளதாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்தனர். லிபியாவின் கிழக்கேயுள்ள அஜ்டாபியா நகரிலும் கடாபியின் மிஸ்ரடா நகரில் பெப்ரவரி இறுதியில் இருந்து சுமார் 300 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 1000 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேசமயம் லிபிய அரசாங்கம் தாக்குதல் நடவடிக்கைகளுக்காக "கிளஸ்டர்' குண்டுகளைப் பயன்படுத்தி வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றஞ்சாட்டியுள்ளது. _

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Apr 21, 2011 / பகுதி: செய்தி /

கடாபியின் கொத்துக் குண்டுப் பாவனை

தடைசெய்யப்பட்ட கொத்துக் குண்டுகளை (Cluster) கடாபிக்கு ஆதரவான லிபியப் படைகள் தொடர்ச்சியாகப் பாவிப்பதாகக் குற்றச் சாட்டுக்கள் எழுந்துள்ளன. மிஸ்றாட்டா (Misrata) நகரம் எதிராளிகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மிஸ்றாட்டாவைச் சுற்றி வளைத்துள்ள அரச படைகள் விமானக் குண்டு வீச்சையும் கொத்துக் குண்டுகளையும் பயன்படுத்துகின்றன.

நியூ யோர்க் நகரைத் தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமைக் காப்பகம் (Human Rights Watch) என்ற தொண்டு நிறுவனம் செய்த கள ஆய்வுகள் கொத்துக் குண்டுத் தாக்குதலை உறுதி செய்கின்றன. மேற்கு லிபியாவின் முக்கிய நகரமான மிஸ்றாட்டாவைக் கைப்பற்றுவதற்கு முயற்சி செய்யும் அரச படைகள் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்துவதால் பொது மக்கள் உயிரிழப்பு அதிகரித்துள்ளதாக இந்த நிறுவனம் கூறுகிறது.

அரச பேச்சாளர் குற்றச் சாட்டுக்களை மறுத்துள்ளார். மூசா இப்பிரகிம் (Moosa Ibrahim) என்ற அந்த அதிகாரி “சட்டபடி இப்படியான ஆயுதங்களை எம்மால் பாவிக்க முடியாது “ என்று சொன்னார். உயரத்தில் வெடித்துச் சிதறும் கொத்துக் குண்டுகள் மழைபோல் நிலத்தில் கொட்டுகின்றன என்று ஆயததாரியான ஒரு பொது மகன் கூறுகிறார்.

நியூ யோர்க் ரைம்ஸ் பத்திரிகையின் செய்தியாளர்களின் ஆய்வுகளின்படி ஸ்பேயின் நாட்டில் தயாரிக்கப்பட்ட கொத்துக் குண்டுகளை லிபிய அரசுப் படைகள் பயன்படுத்துவதாக அறியப்படுகிறது. இந்தச் செய்தியை முதன் முதலாக வெளியிட்ட பத்திரிகை இது தான்.

ஐநா பாதுகாப்புச் சபையின் 1973ம் இலக்கத் தீர்மானம்; (18.03.2011) லிபியத் தலைவர் முவமர் கடாபியைப் போர்க் குற்றவாளியாகக் காண்பதோடு அவரைச் சர்வதேசக் குற்றவியல் நீதி மன்றத்தில் முன்நிலைப்படுத்தும் படியும் கூறுகிறது. இந்தத் தீர்மானத்திற்கு அமைவாக நேற்ரோ படைகள் கடாபியின் இராணுவ நிலைகள மீது வான் தாக்குதல் நடத்துகின்றன.

மத்திய கிழக்கின் டூனீசியா (Tunisia) நாட்டில் தொடங்கிய மக்கள் உரிமைப் போர் எகிப்து நாட்டிற்குப் பரவி அங்கிருந்து யேமன் லிபியா போன்ற நாடுகளுக்கும் பரவியுள்ளது. எகிப்தின் சர்வாதிகாரி முபராக் ஆட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதிறிஸ் மன்னரை (King Idris) ஆட்சிக் கவிழ்ப்பு மூலம் பதவியிறக்கிய கேணல் முவமார் கடாபி கடந்த 41 வருடமாக லிபியாவை ஆட்சி செய்கிறார். அவருக்கு எதிரான மக்கள் கிளர்ச்சி பெரும் உள்நாட்டுப் போராக வெடித்துள்ளது. கடாபிக்குச் சார்பான அரச படைகளும் ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த கூலிப் படைகளும் அரசை விழவிடாமல் காத்து நிற்கின்றன.

எதிர்ப்பு நடத்துவோரின் முயற்சிகள் வெற்றி அளிக்கும் என்று இப்போதைக்குச் சொல்ல முடியாது. அவர்களை அழிவிலிருந்து காப்பாற்றுவது நேற்ரோ படைகளின் விமானத் தாக்குதல் மாத்திரமே.

லிபியா எண்ணை வளம் நிறைந்த நாடு. கடுஞ் சிரம்ப்பட்டுச் சுத்தகரிப்புச் செய்ய வேண்டிய தேவையற்ற மிகவும் தரமான கச்சா எண்ணை என்று லிபிய எண்ணை பற்றிக் குறிப்பிடப்படுகிறது. எண்ணை ஈட்டும் செல்வம் அடித்தட்டு மக்கள் வரை செல்லாதது கிளர்ச்சியின் முக்கிய காரணம்.

மேற்கு நாடுகளின் தந்திரோபாய இரகசியம் இது வரை புலப்படவில்லை. விமானத் தாக்குதல் மாத்திரம் லிபியத் தலைவர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் அவரை நாடு கடத்துவதற்கும் போதுமானது என்று சொல்ல முடியாது. அரச படைகள் தரையில் பலமாக இருக்கின்றன. கிளர்ச்சிப் படைகளின் வலு கேள்விக் குறியாக இருக்கிறது.

pathivu.com

லிபியாவில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்

  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஞாயிற்றுக்கிழமை, 24, ஏப்ரல் 2011 (8:53 IST)

லிபியா மீது தாக்குதல் நடத்த ஒபாமா அனுமதி

லிபியா நாட்டில் உள்ள 3-வது பெரிய நகரான மிஸ்ராட்டா வை கிளர்ச்சிக்காரர்கள் கைப்பற்றி இருந்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த ராணுவம் அந்த நகரத்தை மீண்டும் கைப்பற்றுவதற்காக அப்பாவி மக்கள் மீதும், கிளர்ச்கிக்காரர்கள் மீதும் குண்டுகளையும், ராக்கெட்டுகளையும் வீசி தாக்குதல் நடத்தியது. இதில் பலர் பலியானார்கள். அதோடு அந்த நகரத்தை ராணுவம் முற்றுகையிட்டு இருந்தது.

இந்த நிலையில் கடாபி எதிர்ப்பாளர்களான கிளர்ச்சிக்காரர்களுக்கு உதவுவதற்காக லிபியா நாட்டின் மீது அமெரிக்க ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அனுமதி அளித்து இருக்கிறார்.

ஆள் இல்லாத விமானம் மூலம் ஏவுகணைகள் வீசப்படுகின்றன. இதற்கிடையில் கிளர்ச்சிக்காரர்களின் பிடியில் உள்ள மிஸ்ராட்டா நகரில் இருந்து வெளியேறுவது என்று ராணுவம் தீர்மானித்து உள்ளது.

nakkheeran

லிபிய அதிபர் மாளிகை மீது குண்டுவீச்சு

திரிபோலியில் லிபிய தலைவர் முவாம்மர் கடாஃபியின் அலுவலகம் அமைந்துள்ள கட்டடத்தை இன்று காலை போர் விமானங்கள் குண்டுவீசி சேதப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த குண்டுவீச்சில் பொதுமக்களில் 45 பேர் காயமடைந்ததாகவும், 15 பேர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் லிபிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் கட்டட இடிபாடுகளில் யாராவது சிக்கி உள்ளார்களா என்பது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றார் அவர்.

கடாஃபியைக் கொல்ல நடந்த முயற்சி இது என அவர் உறுதியாகக் கூறினார். இந்த குண்டுவீச்சில் கடாஃபியின் அலுவலகத்தில் உள்ள வரவேற்பறை பலத்த சேதமடைந்தது.

லிபிய அதிபர் மாளிகை அமைந்துள்ள பாப் அல்-அஸிஸியா மாவட்டத்தில் நேட்டோ போர்விமானங்கள் ஏற்கனவே வெள்ளிக்கிழமையன்று குண்டுவீசித் தாக்குதல் நடத்தின.

இன்று அதிகாலை போர்விமானங்களின் குண்டுவீச்சால் திரிபோலியின் மத்தியப் பகுதியில் கடும் அதிர்வு ஏற்பட்டது. திரிபோலியின் பல்வேறு மாவட்டங்களில் நள்ளிரவு 12.10 மணியளவில் குண்டுகள் வீசப்பட்டதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81&artid=409537&SectionID=164&MainSectionID=164&SEO=&SectionName=Latest

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேட்டோ படைகள் தாக்குதலில் கடாபி தப்பினார்-மகன் பலி

ஞாயிற்றுக்கிழமை, மே 1, 2011, 10:20[iST]

திரிபோலி: நேட்டோ படையினர் நடத்திய தாக்குதலில் லிபிய அதிபர் மும்மர் கடாபி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அதேசமயம், அவரது இளைய மகனும், 3 பேரப் பிள்ளைகளும் பலியாகி விட்டனர்.

லிபிய அரசு செய்தித் தொடர்பாளர் மூஸா இப்ராகிம் இதுகுறித்துக் கூறுகையில், லிபியாவில் உள்ள மக்களுக்கு ஆதிக்கப்படையினரால் எந்தவிதப் பாதுகாப்பும் இல்லை என்பதை இந்த சம்பவம் நிரூபிப்பதாக உள்ளது. அப்பாவி மக்களை நேட்டோ படையினர் வேட்டையாடி வருகின்றனர்.

திரிபோலியில் உள்ள ஒரு வீட்டைக் குறி வைத்து நேட்டோ படையினர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். இதில் அந்த வீடு தரைமட்டமானது. அந்த வீட்டில் அதிபர் கடாபியின் 29 வயது மகன் சைப் அல் அராப் தங்கியிருந்தார். இவர் ஜெர்மனியில் படித்தவராவார். தாக்குதலில் அராப் பலியாகி விட்டார். அதேபோல கடாபியின் 3 பேரப் பிள்ளைகளும் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு நாங்கள் பழிவாங்குவோம் என்றார் இப்ராகிம்.

கடாபியின் அதிகம் அறியப்படாத மகன் அராப். இவர், தனது தந்தையின் அதிகார மையத்திற்குள் ஒருபோதும் இருந்ததில்லை. அரசியலிலும் ஆர்வம் இல்லாமல் ஒதுங்கியே இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தாக்குதல் நடந்த வீட்டுக்கு பத்திரிக்கையாளர்களை லிபிய அரசு அதிகாரிகள் அழைத்துச்சென்று காட்டினர். மூன்று ஏவுகணைகள் வீட்டைத் தாக்கி அழித்திருந்தன. வீட்டின் மேற்கூரை முழுமையாக காலியாகி விட்டது.

இந்த தாக்குதலின்போது அப்பகுதியில் கடாபி இருந்ததாக தெரிகிறது. ஆனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டார்.

thatstamil

கடாபியின் நாட்கள் எண்ணப்பட்டுவிட்டதாகவே தெரிகின்றது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடாபியின் இளைய மகனது மரணச் சடங்கில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

வீரகேசரி இணையம் 5/3/2011 4:19:33 PM

லிபியாவில் நேட்டோ படைகளின் விமானத்தாக்குதல்களில் கொல்லப்பட்ட கடாபியின் இளையமகனான சயிப் அல்-அராபின் இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு தங்களது அஞ்சலியை செலுத்தியுள்ளனர்.

இந்த ஊர்வலத்தில் கடாபி கலந்து கொள்ளாத போதிலும் அவரது மற்றைய மகன்களான சயிப் அல்-இஸ்லாம் மற்றும் ஹனிபல் ஆகியோர் கலந்து கொண்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடாபியின் ஆதரவாளர்கள் 2000 பேர் வரை இதில் பங்குபற்றி இருந்ததாகவும் பலர் தமது துப்பாக்கியால் வானத்தை நோக்கிச் சுட்டதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நேட்டோ படைகள் நடத்திய விமானத்தாகுதலில் கடந்த சனிக்கிழமை கடாபியின் மகன் உட்பட அவரது மூன்று பேரக்குழந்தைகளும் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

லிபியாவில் மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள் புரியப்பட்டமைக்குச் ஆதாரம் உள்ளதென சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்தது.

லிபியாவில், மோமர் கடாஃபிக்கு ஆதரவான படைகள், மனித இனத்துக்கு எதிரான குற்றங்களைப் புரிந்தமைக்குப் போதுமான ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வழக்குத் தொடுநர் லூயிஸ் மொரினனோ ஒகம்போ (Luis Moreno-Ocampo) தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையிடம் இன்று தமது நிலைப்பாடு குறித்து விளக்கமளிக்கவுள்ள அவர், நேற்றுத் தமது முடிவு குறித்து அறிவித்தார். ஐந்து வழக்குகளை நடத்துவதற்குத் தேவையான அளவு சான்றுகள் கிடைத்துள்ளதாக மொரினோ ஒகம்போ தெரிவித்தார்.

அரசுக்கு விசுவாசம் இல்லாதவர்களெனக் கருதப்படும் ஆயிரக்கணக்கானவரக்ள் கைது செய்யப்படுவதாகவும், சித்திரவதை செய்யப்படுவதாகவும் பொதுமக்கள் மீது படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்வதாகவும் அவர் கூறினார். பாலியல் வல்லுறவை, ஒரு ஆயுதமாகப் பாவிப்பதாக லிபிய அதிகாரிகள் மீது அவர் குற்றம் சாட்டினார்.

குற்றங்களுக்கு யார் பொறுப்பென்பது குறித்து ஆராய்ந்து வருவதாகவும், வழக்குகளை நடத்துவதற்குத் தயாராக இருப்பதாகப் பாதுகாப்புச் சபையிடம் தெரிவிக்கவுள்ளதாகவும் மொரினோ ஒகம்போ கூறினார்.

http://www.cmr.fm/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=7695

  • கருத்துக்கள உறவுகள்

லிபிய அதிபர் மொமர் கடாபிக்கெதிராக கைது ஆணை பிறப்பிக்கப்படவுள்ளது.

லிபியத் தலைவர்; மொமர் கடாபிக்கெதிராக கைது ஆணை பிறப்பிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணைகளுக்கமைவாக, மோமர் கடாபி உட்பட, பொதுமக்களுக்கெதிராக திட்டமிட்ட தாக்குதலைத் தொடுத்த மூவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுதங்களின்றி போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது தமது படைகளை ஏவிவிட்டு தாக்குதலை நடாத்தியமை, சட்டத்திற்குப் புறம்பாக இரகசியத் தடுப்பு, விசாரணை, துன்புறுத்தல், பொதுமக்கள் மீது ஆகாயத்திலிருந்து தாக்குதல் போன்றவற்றிற்கு எதிராக, இந்த கைது ஆணை வழங்கப்படவுள்ளது.

ஒரு நாட்டிற்குள் நடைபெறும் சண்டைகளின்போது, அதே காலப்பகுதியில் விசாரணைகளை நடத்தி தண்டனை வழங்கும் நடைமுறை, முதற்தடவையாக சர்வதேச நீதிமன்றினால் கடாபிக்கு எதிராக கொண்டுவரப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

http://www.cmr.fm/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=7828

ICC prosecutor 'almost ready' for Libya abuse trial

THE HAGUE — The ICC chief prosecutor said Sunday he was 'almost ready' for a Libyan rights abuse trial, as he prepared to apply for arrest warrants with Moamer Kadhafi believed likely to head his list.

Luis Moreno-Ocampo is expected to ask International Criminal Court (ICC) judges in The Hague to issue three arrest warrants on Monday, when the names of the accused could be revealed.

Diplomats have said veteran Libyan leader Kadhafi would likely head the list.

"We are almost ready for trial," Moreno-Ocampo said in a statement. "The Office collected good and solid evidence to identify (those) who bear the greatest responsibility," he said.

The allegations are linked to a crackdown on pro-reform protests that started mid-February and has left hundreds dead.

The warrants would not be based on "political responsibilities, but rather individual criminal responsibility for crimes committed in Libya," Moreno-Ocampo said.

The Argentinian prosecutor said a five-person team from his office was finalising a 74-page document for his application to the court, which tries the most serious international crimes.

His Libya team's lawyers on Friday incorporated details from new witnesses.

"During the last week, the Office of the Prosecutor received several calls from high level officials in Kadhafi's regime willing to provide information," Moreno-Ocampo said.

More than 2,000 documents including video and pictures were reviewed in the investigation and more than 50 interviews conducted or individuals screened to be interviewed.

The probe took the prosecutor's office on 30 missions to 11 states, but its spokeswoman Florence Olara said last week Libya itself was not visited.

"We did not go to Libya because we did not want to put any witnesses at risk in Libya," she told AFP.

The speed at which the investigation was concluded, since its launch was announced on March 3, was due to consensus by countries in the UN Security Council, Moreno-Ocampo said.

During a May 4 briefing "all the members of the Council expressed the importance of justice for this case," including France and Britain who spearheaded the effort.

"Remarkably, India, Russia, China, Lebanon and the US, who are non-States Parties, reiterated this support," he said.

"The Security Council was unanimous in its decision to refer the case to the ICC. The Arab League and African Union also fully supported the need to investigate crimes committed in Libya," he said.

Moreno-Ocampo's request for the arrest warrants is due as the revolt against Libya's regime enters its fourth month with the head of Britain's armed forces urging NATO Sunday to widen its bombing campaign and the UN's special envoy travelling to Tripoli.

http://www.google.com/hostednews/afp/article/ALeqM5iKbQJeulW2yCEVrSIJpoG0gPDGfg?docId=CNG.dd035276a74a1dfc4910aded0e7a6b3b.221

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

Gaddafi's wife, daughter in Tunisia - source

TUNIS, May 18 (Reuters) - The wife and daughter of Libyan leader Muammar Gaddafi crossed over the border into Tunisia several days ago, a Tunisian security source said on Wednesday.

Gaddafi's wife Safia and his daughter Aisha came to Tunisia with a Libyan delegation on May 14 and are on the island of Djerba in the south, the source told Reuters.

"It was expected that they would leave yesterday but they are still at Djerba," the source added.

It did not appear that the two women had been travelling with Shokri Ghanem, Libya's top oil official, who is believed to have also crossed into Tunisia and appears to have defected.

Libyan officials in Tripoli were not immediately available for comment.

Since the revolt began in February against Gaddafi's rule, Aisha Gaddafi has made several public appearances backing her father and attacking the rebels and Western powers trying to overthrow him.

A month ago she appeared at her father's Bab al-Aziziyah compound in Tripoli and addressed cheering crowds of supporters in an event broadcast live on Libyan state television.

"Talk about Gaddafi stepping down is an insult to all Libyans because Gaddafi is not in Libya, but in the hearts of all Libyans," she said.

A lawyer by training, Gaddafi's daughter runs a charitable foundation and in 2004 joined a team of lawyers defending former Iraqi leader Saddam Hussein. (Additional reporting by Christian Lowe, Writing by Sylvia Westall; Editing by Maria Golovnina)

  • கருத்துக்கள உறவுகள்

  • 2 weeks later...

கடாபியுடன் தென் ஆப்ரிக்க அதிபர் சந்திப்பு

லிபிய அதிபர் கடாபியை தென் ஆப்ரிக்க அதிபர் ஜாக்கப் ஜூமா சந்தித்துப் பேசினார். லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் லிபியாவில் அமைதியை நிலைநாட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் தென் ஆப்ரிக்க அதிபர் ஜாக்கப் ஜூமா. லிபியாவில் கலவரம் மூண்ட பிறகு ஜூமா அங்கு செல்வது இது இரண்டாவது முறையாகும். ஜேக்கப் ஜூமாவுக்கு கடாபியின் ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=249705

லிபியாவிற்கு பிரிட்டன் அமைச்சரின் திடீர் பயணம்

42 ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்சி செய்து வரும் கர்னல் கடாபிக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதால் நேட்டோ படைகள் களத்தில் இறங்கி உள்ளன.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகளை சேர்ந்த துருப்புகள் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக லிபிய ராணுவத்தை எதிர்க்கின்றன. தற்போது நேட்டோ படைகள் தலைநகர் திரிபோலியில் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளார்கள்.

திரிபோலியில் 6 வெடிகுண்டு தாக்குதல் சத்தம் கேட்டது. இந்த நிலையில் பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் வில்லியம் ஹாக் போராட்டக்காரர்களின் மையப்பகுதியான பெங்காசிக்கு திடீரென சென்றார். அங்கு போராட்டக்குழு தலைவர்களை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.

பிரிட்டிஷ் நேரம் மாலை 5 மணி அளவில் திரிபோலியில் சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தன. லிபியாவில் பிரிட்டனின் அபேச்சே ஹெலிகொப்டர்கள் களத்தில் இறங்கிய மறுநாளே இந்த பயங்கர வெடிகுண்டுகள் திரிபோலியில் விழுந்தன.

வெள்ளிக்கிழமை இரவு எண்ணெய் நகரமான பிரகாவில் நடந்த வான்வழித் தாக்குதலில் 2 குண்டுகள் வெடித்தன. இதற்கிடையே பிரிட்டன் அமைச்சர் ஹாக் அறிவிக்கப்படாத லிபியா பயணத்தை மேற்கொண்டு லிபியாவின் கிழக்குப்பகுதியல் உள்ள போராட்டக்காரர்களின் பெங்காசிக்கு வந்தார்.

இந்த சந்திப்பு குறித்து அமைச்சர் டுவிட்டரில் எழுதுகையில்,"போராட்டக்காரர்கள் சுதந்திரத்திற்காக போராடுகிறார்கள்" என்றார். ஹாக் லிபியாவில் இடைக்கால தேசிய மாற்றக் கவுன்சில் தலைவர் அப்துல் ஜலீலுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார்.

http://www.newsonews.com/view.php?203608E220eZnBd34eaomOl34cbdQCAAcddc4oMQKdbc4nlOmae43dBnZ3e033E80602

மோமர் கடாஃபி பதவியில் இல்லாத காலத்திற்கான திட்டமிடலை மேற்கொள்ள இன்று நாடுகளுக்கிடையிலான சந்திப்பு

மோமர் கடாஃபி பதவியில் இல்லாத காலத்திற்கான திட்டமிடலை மேற்கொள்வதற்கு, மேற்கு நாடுகளும், அரபு நாடுகளும் இன்று சந்திப்பொன்றை மேற்கொள்ளவுள்ளன.

ஐக்கிய அரபு இராச்சியத்தில், லிபியா தொடர்பான தொடர்புக் குழுவென்று அறியப்படும் இந்த நாடுகளின் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

லிபியக் கிளர்ச்சியாளர்களுக்கு உதவி வழங்குவதற்கு நிதியம் ஒன்றை அமைக்கவுள்ளதாக முன்னர் அறிவித்த தொடர்புக் குழு, அந்த உறுதிமொழியைப் பலப்படுத்துவதற்கு இன்றைய சந்திப்பைப் பயன்படுத்தும்.

மோமர் கடாஃபி, பதவியில் இருந்து வெளியேறும் வரை, அல்லது வெளியேற்றப்படும் வரை, லபியா மீது ராஜதந்திர, பொருளாதார, மற்றும் இராணுவ அழுத்தம் தொடர்ந்து அதிகரிக்கப்படுமென பிரித்தானிய வெளியுறவு செயலாளர் அலிஸ்ரர் பேர்ட் குறிப்பிட்டார்.

அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலறி கிளின்ரன் இன்றை பேச்சுக்களில் கலந்து கொள்வதற்காக அங்கு ஏற்கனவே சென்றடைந்துள்ளார்.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் கூட்டத்தொடரிலும், லிபியாவில் இரண்டு தரப்பினரும் புரிந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பான அறிக்கை ஒன்று விவாதிக்கப்படவுள்ளது.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=8139

Edited by akootha

NATO official: Gadhafi a legitimate target ( வரும் நாட்களில் கடாபி கொல்லப்படுவாரா? )

A U.N. resolution justifies the targeting of Libyan leader Moammar Gadhafi, a senior NATO military official with operational knowledge of the Libya mission told CNN Thursday.

Asked by CNN whether Gadhafi was being targeted, the NATO official declined to give a direct answer. The resolution applies to Gadhafi because, as head of the military, he is part of the control and command structure and therefore a legitimate target, the official said.

NATO has been ramping up pressure on the regime, employing helicopters last weekend for the first time against Gadhafi's forces. Explosions are heard often in Tripoli, evidence of allied air strikes.

http://www.cnn.com/2011/WORLD/africa/06/09/libya.gadhafi/index.html

லிபியா மீது நேட்டோ ராணுவ விமானங்கள் குண்டு வீச்சு

லிபியா நாட்டின் தலைநகரான திரிபோலி மீது நேட்டோ ராணுவ விமானங்கள் விடிய விடிய குண்டு வீசின.

நேற்றும் பகலில் 40-க்கும் மேற்பட்ட முறை குண்டுகள் வீசப்பட்டன. இதனால் எழுந்த கரும்புகை வானத்தை மறைத்தது. நேற்று பிற்பகல் தொடங்கிய நேட்டோ தாக்குதல் விடிய விடிய தொடர்ந்தது. இந்த தாக்குதலில் ஏற்பட்ட சேதம் உயிர் இழப்பு ஆகியவை பற்றிய விவரங்கள் கிடைக்கவில்லை. இதற்கிடையில் லிபியா டி.வி. சேனல் கடாபியின் பேச்சு அடங்கிய ஆடியோவை வெளியிட்டது. இதில் பேசி இருந்த கடாபி, கடைசி வரை போராடுவோம். யாருக்கும் அடிபணிய மாட்டோம் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

http://www.koodal.com/news/world.asp?id=63754&title=nato-cranks-up-air-campaign-in-libya-world-news-headlines-in-tamil

  • கருத்துக்கள உறவுகள்

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.