Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இரட்டைக் குடியுரிமை வழங்கும் நடைமுறை தற்காலிகமாக இடைநிறுத்தம்:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இரட்டைக் குடியுரிமை வழங்கும் நடைமுறை தற்காலிகமாக இடைநிறுத்தம்:

18 பெப்ரவரி 2011

மறு அறிவித்தல் வரையில் இரட்டைக் குடியுரிமை வழங்கும் நடைமுறை..

இரட்டைக் குடியுரிமை வழங்கும் நடைமுறை தற்காலிகமாக இடைநிறுத்தம்:

இலங்கையில் இரட்டைக் குடியுரிமை வழங்கும் நடைமுறை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மறு அறிவித்தல் வரையில் இரட்டைக் குடியுரிமை வழங்கும் நடைமுறை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகழ்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் சூளானந்த சில்வா தெரிவித்துள்ளார்.

இரட்டைக் குடியுரிமை வழங்கும் நடைமுறையில் மாற்றம் கொண்டு வரும் நோக்கில் ஜனாதிபதி இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

இதன்படி, இரட்டைக் குடியுரிமைப் பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும், வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றுக் கொண்ட இலங்கையர்கள் இலங்கையில் ஏதேனும் சொத்துக்களை பேணினால் இரட்டைக் குடியுரிமைப் பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பிக்க முடியும் என சுட்டிக்காட்டப்படுகிறது.

gtn

புலம் பெயர் தமிழர்களின் வர்த்தக, பொருளாதார முயற்சிகளை தடுக்கும் முயற்சி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழர்களை பழிவாங்கும் இலங்கை அரசு?

சனிக்கிழமை, 19 பிப்ரவரி 2011 04:23

இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கும் செயற்பாட்டை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்க இலங்கை அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன் பிரகாரம் இதுவரை இரட்டைப் பிரஜாவுரிமை வழங்குவதற்காக அங்கீகாரம் வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் அங்கீகாரத்துக்காக காத்திருந்த விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக்கப்படவுள்ளதாக அத்தகவல் வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.

பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவுத் திணைக்கள அதிகாரியொருவர் எமது செய்தியாளரிடம் கருத்துத் தெரிவித்துள்ளார்.

வேறொரு நாட்டில் குடியுரிமை பெற்ற இலங்கையர் ஒருவருக்கு இலங்கையினுள்ளும் சொத்துக்கள் ஏதாவது இருக்கும் பட்சத்தில் அவர் இரட்டைப் பிரஜாவுரிமை பெற வேண்டுமென்பது இதுவரை கால விதியாக இருந்து வந்தது.

அதன் கீழ் இரட்டைப் பிரஜாவுரிமை பெறும் ஒருவரிடமிருந்து இலங்கை அரசாங்கம் இரண்டு இலட்சம் ரூபாவைக் கட்டணமாக அறவிட்டு வந்தது. அவ்வாறான கட்டணங்கள் இலங்கைக்கு பொருளாதார நலனைத் தரும் என்பதால் கடந்த காலங்களில் இரட்டைப் பிரஜாவுரிமை பெறும் விடயத்தில் புலம்பெயர் தமிழர்கள் ஊக்குவிக்கப்பட்டார்கள்.

அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, பிரிட்டன், பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து, இத்தாலி, ஸ்வீடன், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் பிரஜாவுரிமைகளைப் பெற்றுள்ள இலங்கைத் தமிழர்களுக்கே இரட்டைப் பிரஜாவுரிமை திட்டத்தின் கீழ் இதுவரை இலங்கையிலும் பிரஜாவுரிமை வழங்கப்பட்டு வந்தது.

ஆயினும் அண்மையில் ஜனாதிபதி மஹிந்தவுக்கெதிராக லண்டன், அமெரிக்கா போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக புலம்பெயர் தமிழர்களைப் பழிவாங்கும் ஒரு நடவடிக்கையாகவே தற்போது இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கும் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

ஆனாலும் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களான பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோர் அமெரிக்காவிலும் பிரஜாவுரிமை பெற்ற இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

sanganam

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த பிச்சைகாறனின் நசனால்டி இல்லை என்று யார் இங்க அழுதாங்கள். :D

  • கருத்துக்கள உறவுகள்

உந்த பிச்சைகாறனின் நசனால்டி இல்லை என்று யார் இங்க அழுதாங்கள். :D

அதே.. அதே.. :D

புலம்பெயர் தமிழர்களை பழிவாங்கும் இலங்கை அரசு?

பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவுத் திணைக்கள அதிகாரியொருவர் எமது செய்தியாளரிடம் கருத்துத் தெரிவித்துள்ளார்.

அதன் கீழ் இரட்டைப் பிரஜாவுரிமை பெறும் ஒருவரிடமிருந்து இலங்கை அரசாங்கம் இரண்டு இலட்சம் ரூபாவைக் கட்டணமாக அறவிட்டு வந்தது. அவ்வாறான கட்டணங்கள் இலங்கைக்கு பொருளாதார நலனைத் தரும் என்பதால் கடந்த காலங்களில் இரட்டைப் பிரஜாவுரிமை பெறும் விடயத்தில் புலம்பெயர் தமிழர்கள் ஊக்குவிக்கப்பட்டார்கள்.

இந்தியா இரட்டை பிரசாவுரிமையை அனுமதிக்க யோசிக்கின்றது, காரணம், புலம்பெயர்ந்தவர்களின் முதலீடு/அறிவுசார் உதவிகளை வரவேற்பதற்கும் அதன் மூலம் மேலான வரிச்சலுகைகளை வழங்கவும்.

சிங்களமோ மறுபக்கமாக போவது போல உள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இருதேச பிரஜாவுரிமை வழங்கும் நடைமுறை இடைநிறுத்தம் சலுகையைப் பயன்படுத்தி இலங்கைக்கு துரோகம் இழைக்கும் சதிகளில் ஈடுபட லாம் என்ற சந்தேகமே காரணம் என்கிறார் ஜனாதிபதி

[Wednesday, 2011-02-23 04:09:28]

இருதேச பிரஜா வுரிமை வழங்கும் நடைமுறையைத் தற்போது அரசாங்கம் இடை நிறுத்தி வைத்திருக்கிறது என்று தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், சிலர் இந்த சலுகையைப் பயன்படுத்தி இலங்கைக்கு துரோகம் இழைக்கும் சதிகளில் ஈடுபடலாம் என்ற சந்தேகம் எழுந்திருப்பத னால் இருதேச பிரஜாவுரிமை கோரி விண்ணப்பிப்பவர்கள் பற்றி நன்கு விசாரணை செய்த பின்னரே அவர்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படும் என்று கூறினார்.

இது பற்றி ஒரு தீர்க்க மான முடிவை எடுப்பதற்காக அமைச்சர்கள் மட்டத்திலான குழுவொன்று இப்போது நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் அறிக்கையை பரிசீலனை செய்த பின்னரே இருதேச பிரஜாவுரிமையை வழங்கும் நடவடிக்கையை அரசாங்கம் மீண்டும் ஆரம்பிக்கும் என்று ஜனாதிபதி கூறினார்.

பத்திரிகை ஆசிரியர்கள், வானொலி, தொலைக்காட்சி பொறுப்பதிகாரிகளை நேற்று அலரி மாளிகையில் சந்தித்த போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர்ந்த மக்களை இலங்கைக்குத் திரும்பி இங்கு குடியிருங்கள் என்று நாம் திறந்த மனத்துடன் அவர்களை அழைக்கிறோம். ஆனால், அவர்கள் அதற்குச் செவிமடுக்கத் தயங்கி வெளிநாடுகளிலிருந்து இலங்கை அரசாங்கத்துக்கும், நாட்டுக்கும் எதிராக போலிப் பிரசாரங்களை செய்து வருவது எங்களுக்கு வேதனை அளிக்கிறது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு ஆங்கில வாரப் பத்திரிகையின் ஆசிரியை இலங்கைக் கடற்படையினர் 70 இந்திய மீனவர்களை சுட்டுக்கொன்றுள்ளனர் என்று ஒரு இணையத்தளம் செய்தி வெளியிட்டிருக்கிறது என்று சுட்டிக்காட்டி இதன் உண்மை நிலை என்னவென்று வினவினார்.

அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி , செய்மதி புகைப்படங்களிலிருந்து கூட இதற்கான எவ்வித ஆதாரங்களும் கொடுக்கப்படவில்லை. இரண்டு மீனவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் பற்றியே புகார் கிடைத்துள்ளது என்றும் அதற்கு அரசாங்கம் தக்க நடவடிக்கை எடுத்துவருகிறது என்றும் கூறினார்.

இப்போது இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்திருக்கிறது. இதனால் தேர்தல் தந்திரமாக இத்தகைய போலி வதந்திகளை சிலர் கிளப்பிவிடுவதைப் பார்த்து நாம் அநாவசியமாக பதற்றமடைவது அவசியமில்லையென்று ஜனாதிபதி பதிலளித்தார்.

இன்னுமொரு பத்திரிகை ஆசிரியர், லங்கா ஈ-நியூஸ் இணையத்தளம் தாக்கப்பட்டமை குறித்து கேள்வியெழுப்பி இந்தக் குற்றச் செயல்களுக்குப் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதா என்று கேட்டார். அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி அவர்கள், விசாரணைகள் நடந்துகொண்டிருப்பதாகவும், �பூத்தையா� தான் (பேய்) இதனை செய்ததாகப் புலன்விசாரணைகள் மூலம் வெளிவந்துள்ளது. இந்த பூத்தையாவுக்குப் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது எங்களுக்கு இப்போது ஓரளவுக்குத் தெரியும்.

அவர்கள் யார் என்பதை நான் இப்போது இங்கு வெளியிட்டால் பத்திரிகை சுதந்திரத்தில் நான் தலையிடுகிறேன் என்று சிலர் குறை கூறுவார்கள் அதனால் மெளனமாக இருப்பது நல்லது என நான் நினைக்கிறேன் என்று ஜனாதிபதி கூறினார்.

செய்தி.கொம்

யுத்த குற்றங்களை தவிர்க்கவா இரண்டு நாட்டு பிரசாவுரிமை நிற்பாட்டப்பட்டது?

Dual citizenship gone - to avoid war crime charges?

பல பிரபல்யங்கள் இரண்டு நாட்டு பிரசாவுரிமை கொண்டுள்ளனர். புலம்பெயர் தமிழர்களும் சிங்கள பிரசாவுரிமையில் நாட்டம் இழந்து வந்துள்ளனர்.

Some key positions of this government have been filled by dual citizens:

Gotabaya Rajapaksa - the powerful Defence Secretary is a dual citizen of Sri Lanka and the USA.

Basil Rajapaksa - Investment Development Minister has a US Green Card in addition to his Sri Lankan citizenship.

Sarath Fonseka, the now incarcerated former army commander is also a Green Card holder.

Palitha Kohona, Sri Lanka’s Permanent Representative to the United Nations also holds his Australian citizenship in addition to his Sri Lankan citizenship.

And, there are other explanations, as advanced by diaspora Tamils on the discontinuance of the applications for dual citizenship.

http://www.lakbimanews.lk/index.php?option=com_content&view=article&id=661:-dual-citizenship-gone-to-avoid-war-crime-charges&catid=35:news-features&Itemid=37

  • கருத்துக்கள உறவுகள்

உந்த பிச்சைகாறனின் நசனால்டி இல்லை என்று யார் இங்க அழுதாங்கள். :D

எடு என்று சொன்னபோது யாரும் ஆர்வமாக எடுத்தாக தெரியவில்லை...............

எடுக்காதே என்று சொன்னால் யாராவது எடுக்க முயற்சி செய்கிறார்களா என்று ஒரு நப்பாசையோ என்னவோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.