Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் நடப்பது காட்டாட்சியா? கி.வீரமணி ஆவேசம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வாய்க்கிழமை, 22, பிப்ரவரி 2011 (22:23 IST)

இலங்கையில் நடப்பது காட்டாட்சியா? கி.வீரமணி ஆவேசம்

பிரபாகரன் தாயார் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவனைத் தடுப்பதா? இலங்கையில் நடப்பது காட்டாட்சியா? என்று கேள்வி எழுப்பியுள்ள திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, துக்கம் விசாரிக்க அவருக்கு மீண்டும் அனுமதி பெற்றுத் தரவேண்டும் என மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் இலங்கை யாழ்ப்பாணத்தில் காலமானதையொட்டி, மனிதநேயத்துடன் அவர்களுக்கு இறுதிமரியாதை செலுத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இலங்கைக்கு புறப்பட்டு சென்று, அவர் விமான நிலையத்தில் இறங்கியபோது, அவருக்கு இலங்கைச் சிங்கள ராஜபக்சே அரசு உள்ளே செல்ல அனுமதி மறுத்து, அவரை வந்த விமானத்திலேயே திரும்பிச் செல்லுமாறு பிடிவாதம் காட்டி, சிங்கள அரசின் அதிகாரிகள் அவரை சென்னை திரும்பும்படிச் செய்து விட்ட கொடுமையைக் கேட்டு உணர்ச்சியும், மனிதநேயமும் உள்ள நமது நெஞ்சங்கள் குமுறுகின்றன.

தொல்.திருமாவளவன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மட்டுமல்ல. இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும்கூட.

ஏற்கனவே இந்திய அரசு அனுப்பிய தூதுக் குழுவில் சென்று, ராஜபக்சேவிடமே நேரில் விவாதித்துத் திரும்பிய குழுவினரில் ஒருவர் - அவரை ஒரு இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளக் .கூடாது என்று திரும்பி அனுப்புவது பச்சை பாசிசப் போக்கு அல்லவா?

காரணத்தைக் கூறுங்கள் என்று பலமுறை அவர் வலியுறுத்தி அதிகாரிகளிடம் வாதாடியும் பலனில்லை.

அவர் அரசியல் நிகழ்வுக்குப் போகவில்லை. துக்க நிகழ்ச்சி - மரண வீட்டுக்குச் செல்வதுகூட கூடாது என்றால், அங்கு காட்டாட்சியா நடக்கிறது?

இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி வேறுபாடு இன்றி இலங்கை அரசின் போக்குக்குக் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.

தனிப்பட்ட தொல்.திருமாவளவனுக்கு ஏற்பட்ட அவமானமோ, பின்னடைவோ அல்ல இது. இந்திய பேரரசுக்கு ஏற்பட்ட அவமானம் என்ற நிலைப்பாட்டுடன், கொதிப்புடன் மத்திய அரசின் வெளியுறவுத்துறை இதனை எண்ணிப் பரிகாரம் தேட வேண்டும்.

ஏற்கனவே பிரபாகரனின் தந்தையார் வேலுப்பிள்ளை மறைந்தபோது செல்ல அனுமதித்துவிட்டு, இப்போது மட்டும் மறுப்பதேன்? தமிழக மீனவர்களை இலங்கை அரசு காக்கை குருவிகளைப் போல சுட்டுக்கொல்லுவது, சிறைப்பிடிப்பது, மத்திய அரசு தலையிடுவது, பிறகு விடுதலை எனும் நாடகம் நடத்துவது - ஒரு வாடிக்கையான வேடிக்கைக் கூத்தாகிவிட்டது.

மத்திய அரசு இதுகுறித்து இலங்கைத் தூதரிடம் பேசித் தனது கண்டனத்தைத் தெரிவிப்பதும், மீண்டும் அவருக்கு அனுமதி வழங்கி துக்கம் விசாரிக்க உதவுவதும் அதன் முக்கியக் கடமையாகக் கருத வேண்டும் என்று வற்புறுத்துகிறோம். இவ்வாறு கி.வீரமணி கூறியுள்ளார்.

nakkheeran

  • கருத்துக்கள உறவுகள்
<_< திருமாவை இந்தியப் பாராளுமன்ற உறுப்பினரென்றோ அல்லது இந்தியாவில் வாழும் ஒரு மனிதனென்றோ சோனியாவோ அல்லது காங்கிரஸோ நினைப்பதில்லை, அந்த லட்சணத்தில் சிங்களவன் திருப்பியனுப்பியவுடன் மட்டும் ரோஷம் பொத்துக்கொண்டு வந்து விடுகிறதாக்கும், முள்ளிவாய்க்கால் படுகொலையில் சோனியாவுக்கு முட்டுக்குடுத்துக்கொண்டிருந்தபோது மட்டும் இந்த ரோஷத்தையும் மானத்தையும் எங்கே கொண்டு போய்த் தொலைத்தீர்கள். உங்கள் போன்ற மனிதர்களுக்கெல்லாம் ரோஷமும், மானமும் ஒரு கேடா??

விட்டிருந்தா கருநாநிதிக்கு இன்னும் 2 சீட் கூட கிடைச்சிருக்கும்,

அந்த கவலையிலதான் ஜயா கத்துறார்.

  • கருத்துக்கள உறவுகள்

கண்ட கஸ்மாலங்களின் அறிக்கை பேட்டியெல்லாம் போட்டு இவர்களுக்கு பில்டப்பு கொடுக்க கூடாது.. :o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.