Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு எதிரான தென்னிந்திய ஆர்ப்பாட்டங்கள் ஆரோக்கியமான தீர்வுகளுக்கு வழிவகுக்குமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு எதிரான தென்னிந்திய ஆர்ப்பாட்டங்கள் ஆரோக்கியமான தீர்வுகளுக்கு வழிவகுக்குமா?

வீரகேசரி இணையம் 2/23/2011 5:10:59 PM

இலங்கைக்கு எதிராக தென்னிந்தியாவில் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்களும் கண்டனப் பேரணிகளும் இடம்பெற்றுவருகின்றன.

மீனவப் பிரச்சினை தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் பேசப்படும் கருப்பொருளாக தற்போது உருவெடுத்துள்ளது.

யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் கட்சிக்குக் கட்சி, ஆளுக்கு ஆள் என முண்டியடித்துக்கொண்டு இலங்கைக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் களமிறங்கினார்கள்.

‘கொதித்தெழுந்தது தமிழகம்’, ‘இறுதிவரைப் போராடுவோம் என உறுதிமொழி’, போன்ற தலைப்புகளில் அடிக்கடி செய்திகள் வெளியாயின. இலங்கைப் பிரச்சினை, தமிழக அரசியலில் தீர்மானிக்கும் ஒரு சக்தியாகவும் மாறியிருந்தது.

எனினும் அந்தப் போராட்டங்கள் அனைத்தும் எந்த வகையில் சாதகமான தீர்மானத்துக்கு வித்திட்டன என்பதைத் தமிழ் மக்கள் நன்கறிவார்கள்.

யுத்தம் முடிவடைந்த பின்னர் முகாம்களிலுள்ள மக்கள் விரைவில் மீள்குடியமர்த்தப்பட வேண்டும் எனக்கோரி போராட்டங்கள் நடைபெற்றன.

கவனயீர்ப்புப் போராட்டம், சங்கிலிப் போராட்டம், முற்றுகைப் போராட்டம், உண்ணாவிரதப் போராட்டம், தந்திப்போராட்டம், கண்டன ஆர்ப்பாட்டம் என வகைப்படுத்தப்பட்டு எதிர்ப்புகள் வெளிப்படுத்தப்பட்டன.

முகாம்களிலுள்ள மக்களும் முடிந்தவரையில் மீள்குடியமர்த்தப்பட்டார்கள். அதன் பின்னர் குறுகிய காலத்திற்குள் மீண்டும் வெடித்தது மீனவர் பிரச்சினை.

தமிழக மீனவர்கள், தாம் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதாகவும் தமது வலைகளை வெட்டிவீசி மீன்களை படையினர் வசப்படுத்துவதாகவும் குற்றம் சுமத்தியிருந்தனர்.

இக்குற்றச்சாட்டுகளுக்கு முற்றாக மறுப்புத் தெரிவித்த இலங்கை கடற்படையினர் மூன்றாம் நபர்களின் சதியாக இருக்கலாம் எனவும் தெரிவித்திருந்தது.

எனினும் மீனவர்கள் கொல்லப்பட்டதன் பின்பு போராட்டங்களும் உக்கிரமடையத் தொடங்கின. அதன்பின்னர் நிலைமை தொடர்பாக பேசுவதற்கு இந்திய வெளியுறவுச் செயலர் நிரூபமா ராவ் கொழும்புக்கு வந்தார்.

இருதரப்பும் புரிந்துணர்வுடன் இந்த விடயத்தைக் கையாள்வதாக அதன்போது தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும ஓய்ந்தபாடாக இல்லை.

இலங்கை அரசாங்கத்துக்குக் கண்டனம் தெரிவித்து நடிகர் விஜய் நேற்று போராட்டம் நடத்தி ஆவேசமாகக் குரல்கொடுத்தார்.

இவ்வாறு நாளுக்கு நாள் ஏதோ ஒருவகையில் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்க அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கருத்து தெரிவித்திருக்கின்றார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுடன் ஒப்பிடுகையில் மீனவர் விவகாரம் ஒரு சிறு விடயம் தான் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் என்னதான் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றாலும் இருநாடுகளுக்கிடையிலான உறவுகளுக்கு மத்தியில் எந்தவொரு அழுத்தமும் சாத்தியப்படாது என்பது சில தலைமைகளின் வெளிப்படையற்ற தன்மைகளிலிருந்து புலனாகிறது.

கலைஞர் கருணாநிதியின் மாநில அரசாங்கத்தின் மீதும்; மத்திய அரசாங்கத்தின் மீதும் குற்றம் சுமத்தி வெறும் ஆர்ப்பாட்டம் நடத்துவது வழமையாகிவிட்டதால் அதனை மேல்தரப்பு ஒரு பொருட்டாகவே கொள்வதில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.

இது குறித்து நாம் தமிழர் இயக்கத்தின் தலைவரும் இயக்குநருமான சீமானிடம் நாம் கேட்ட போது, “ஜெயலலிதாவையோ, கருணாநிதியையோ நம்பி தமிழ் மக்கள் இல்லை. அவர்களைவிட மக்கள் சக்தியொன்றை நாம் உருவாக்க வேண்டும். இவ்வாறான எழுச்சி ஆர்ப்பாட்டங்கள் மக்களை விழிப்புணர்வு கொள்ள வைக்கும். இலங்கைத் தமிழ் மக்கள் சுயமாக வாழும் நாள் வரும் வரை எமது போராட்டம் தொடரும்” எனக் கூறினார்.

அதேவேளை, போராட்டங்களின் உண்மைத் தன்மை குறித்துச் சிந்திக்கையில் பெரும்பாலான அரசியல் பிரமுகர்கள் இலங்கைத் தொடர்பான பிரச்சினைகளைத் தேர்தல் வெற்றியின் துரும்பாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

அழுத்தங்கள் பிரயோகிக்கப்பது என்பது சரியான நடைமுறைகளில் ஒன்றுதான். ஆயினும் அதனால் காத்திரமான தீர்வுகள் எட்டப்படுகின்றனவா என்பதையும் நோக்க வேண்டும்.

யுத்தத்தின்போதும் யுத்தத்தின் பின்னரும் பலப்படுத்தப்பட்டுள்ள இந்திய - இலங்கை உறவுக்கு மத்தியில் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் ஓரளவேயன்றி, நிறைவான தீர்வினை இதுவரை பெற்றுத் தரவில்லை.

ஆசியாவின் வல்லரசு என்பதனை பாதுகாத்துக் கொள்ள விரும்பும் இந்தியா, மறுபுறத்தில் ஏனைய நாடுகளை விட இலங்கைத் தீவுடனான உறவை பலப்படுத்திக்கொள்வதிலும் அக்கறை காட்டுகிறது.

ஆதலால் பிரச்சினைகள் குறித்து உரிய தரப்பினரோடு நேரடியாகப் பேசி சரியான முடிவுகளை எடுப்பதே சாலச்சிறந்ததாகும். ஒருவரையொருவர் குற்றம் சுமத்துவதை விடுத்து பிரச்சினை என்ன, அதற்கான மூல காரணம் என்ன, அதற்கான தீர்வுகள் என்ன என்பது குறித்துப் பேச முடியும்.

இந்திய அதிகாரிகள், இலங்கை அதிகாரிகளுடன் இருநாட்டு மீனவப் பிரதிநிதிகள் ஆகிய தரப்பினர் ஓரிடத்தில் இணைந்து,மேலோட்டமாகப் பேசாது, நெஞ்சுறுதியுடன் பேசுவார்களேயானால், சிறந்த தீர்வினை நிச்சயம் எட்டக்கூடியதாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

ஆர்ப்பாட்டங்கள் அரசியல்ரீதியானவை என்ற குற்றச்சாட்டையும் இதன்மூலம் மறுக்கக் கூடியதாக இருக்குமல்லவா?

-இராமானுஜம் நிர்ஷன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுடன் ஒப்பிடுகையில் மீனவர் விவகாரம் ஒரு சிறு விடயம் தான் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

om_bot_cup.jpg

P1100045.JPG

:( :( :( :( :( :( :( :( :( :(

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.