Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடுகடந்த தமிழீழ அரசை குழப்ப முயலும் அனைவருக்கும் ஓர் அன்பான வேண்டுகோள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சித்தன் மற்றும் JUDE

உங்களிடம் ஒரு கேள்வி

நாடு கடந்த அரசின் பிறப்பிலிருந்து அதனை ஆதரிப்பவன் என்பதை முதலில் சொல்லிக்கொண்டு,

எனக்கு சில சந்தேகங்கள் உண்டு

அதனை இங்கு விவாதத்துக்காக அல்ல விளக்கத்துக்காக முன் வைக்கின்றேன்.

நாடு கடந்த அரசின் முன் பல செயற்பாடுகள் தேங்கிக்கிடந்தும் பல வேலைகளைச்செய்ய வேண்டியும் உள்ளநிலையில்..........

அவர்கள் புலம் பெயர் தேசங்களிலுள்ள மற்றய சங்கங்கள் அவைகள் விளையாட்டுக்கழகங்கள்............... போன்றவற்றை தங்களுக்குள் கொண்டுவர ஏன் முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள் . அத்துடன் புலிகளிலிருந்து விலகி செயற்படவிரும்புவதாக கூறிக்கொண்டு மாவீரர்கள் மற்றும் மாவீரர்தினம் போன்றவற்றை தமது கைக்குள் கொண்டுவர ஏன் முண்டியடிக்கின்றார்கள். அவை முன்புபோல் செயற்பட அனுமதித்துவிட்டு தமது ஏனைய வேலைகளைக்கவனிக்கலாம் தானே.

எல்லாம் தமிழர்களுக்கு ஏக பிரதிநிதிகளாகத் தாங்களே இருக்கவேண்டும் என்று "ஜனநாயக" ரீதியில் சிந்திக்கும் தமிழருக்கேயுரிய தனித்துவக் குணம்தான்.

என்னதான் பசு மாதிரி வேடம் போட்டாலும் உள்ளுக்குள் மற்றதுகளைப் பிடித்துக் கொன்று தின்னும் குணம்தான் உள்ளது. இதற்குள் பன்மைத்துவம், தேசியம், தாயகம், சுதந்திரம் என்று பல சொற்களைக் கலந்து குண்டுச் சட்டிக்குள் குதிரையோட்டலாம்.

அவர்கள் புலம் பெயர் தேசங்களிலுள்ள மற்றய சங்கங்கள் அவைகள் விளையாட்டுக்கழகங்கள்............... போன்றவற்றை தங்களுக்குள் கொண்டுவர ஏன் முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள் .

விசுகு,

நாடு கடந்த அரசில் விளையாட்டு கழகங்கள், சங்கங்கள், அவைகள் அங்கத்துவம் பெற்றிருப்பது பற்றிய தகவல்களை தருவீர்களா? நான் அறிந்த அளவில் நாடுகடந்த அரசு பிரதமர் செயலகத்தையும் அமைச்சுகளையும் கொண்டிருக்கிறது. விளையாட்டு துறைக்கு பொறுப்பான அமைச்சு இவ்வாறான முயற்சியில் ஈடுபட்டு, அது மக்களின் விருப்புக்கு மாறாக இருந்தால் அதை நாடுகடந்த அரசின் அங்கத்தவர்கள் பாராளுமன்ற அமர்வில் விவாதிக்க வேண்டும் என்பது எனது கருத்து.

அத்துடன் புலிகளிலிருந்து விலகி செயற்படவிரும்புவதாக கூறிக்கொண்டு மாவீரர்கள் மற்றும் மாவீரர்தினம் போன்றவற்றை தமது கைக்குள் கொண்டுவர ஏன் முண்டியடிக்கின்றார்கள். அவை முன்புபோல் செயற்பட அனுமதித்துவிட்டு தமது ஏனைய வேலைகளைக்கவனிக்கலாம் தானே.

நாடுகடந்த அரசு மாவீரர்களுக்கு ஒரு அமைச்சை கொண்டிருக்கிறது. அந்த அமைச்சு மாவீரர்களுக்கு உதவுவதற்கான திட்டங்களை செயற்படுத்த ஆரம்பித்திருக்கலாம். ஆனால் மாவீரருக்கு உதவும் அமைப்புகளை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் மக்களின் விருப்புக்கும் அந்த அமைப்புகளின் விருப்புக்கும் மாறாக ஈடுபட்டு வந்தால், அடுத்த அமர்வில் அங்கத்தவர்கள் விவாதிப்பது சரியான பாதையில் செல்ல உதவும்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் தமிழர்களுக்கு ஏக பிரதிநிதிகளாகத் தாங்களே இருக்கவேண்டும் என்று "ஜனநாயக" ரீதியில் சிந்திக்கும் தமிழருக்கேயுரிய தனித்துவக் குணம்தான்.

என்னதான் பசு மாதிரி வேடம் போட்டாலும் உள்ளுக்குள் மற்றதுகளைப் பிடித்துக் கொன்று தின்னும் குணம்தான் உள்ளது. இதற்குள் பன்மைத்துவம், தேசியம், தாயகம், சுதந்திரம் என்று பல சொற்களைக் கலந்து குண்டுச் சட்டிக்குள் குதிரையோட்டலாம்.

கிருபன்,

நீங்கள் சொல்வது எவ்வளவுக்கு உண்மையானது என்பது கேள்விக்குரியது.

  1. இந்த திரியின் ஆரம்பமே, நாடுகடந்த அரசின் அங்கத்தவர்களுக்குள்ளேயே இரு பிரிவுகள் இயங்கும் நிலை பற்றியதே.
  2. அது தவிர, மக்கள் அவை நாடு கடந்த அரசு போலவே தேர்தல்களை உலகெங்கும் நடத்தி பலமிக்க அமைப்பாக எழுந்து இருக்கிறது. கனடாவிலே ஆளும் கட்சியுடன் கூட்டுவைத்து இருக்கிறது.
  3. உலகத்தமிழர் பேரவை நாடு கடந்த அரசிற்கு அப்பாற்பட்ட அமைப்பாக செயற்படுகிறது.
  4. அது தவிர, ஈழத்தமிழருக்கு எதிரான பல தமிழர் அமைப்புகள் பல நாடுகளிலும் இயங்குகின்றன.
  5. இந்த யாழ் களத்தையே எடுத்து கொள்ளுங்கள். நாடு கடந்த அரசு யாழ் களத்தை கட்டுப்படுத்தவில்லை. அப்படியான நோக்கமும் நாடுகடந்த அரசுக்கு இருப்பதாக தெரியவில்லை.

நீங்கள் இவ்வாறாக எழுமாற்றாக, உண்மைக்கு புறம்பான கருத்தை தெரிவிப்பது தவறானது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

//கேபி யை சர்வதேச பொறுப்பாளராக இறுதிநாட்களில் நியமித்தவர் தேசியதலைவர். அந்த அதிகாரத்தில் தான் கேபி உருத்திரகுமாரை நியமித்தார். உருத்திரகுமாரனை தமது சட்ட ஆலோசகராக நியமித்தவர் தேசியதலைவரே. நீங்கள் தேசிய தலைவரின் முடிவை இங்கு சந்தேகத்துக்கு உள்ளாக்குகிறீர்கள் அல்லவா? //

கேபிஎன்பவர் நியமிக்க படாமல் இருந்திருந்தால் அவருக்குள் படுத்து உறங்கி கொண்டிருந்த பூனை வெளியில் வந்து இருக்காது, எம்மத்தியில் வந்திருந்தே இலங்கைஅரசு சார்ந்த தனது அரசியலை செய்து கொண்டு இருந்திருப்பார். கேபியை வெளிக்காட்டியமையே அவரது உண்மை நிலைப்பாட்டை மக்கள் அறிய ஏதுவாக அமைந்தது. இப்போது பிரச்சினை என்னவென்றால் கேபியால் நியமிக்க பட்ட காரனத்தினால் உருத்திர குமாரை நம்புவதா விடுவதா என்பதே, அவர் உண்மையானவராக இருந்து வீன் சந்தேகத்தினால் அவரை இழந்து விடப்போகிறோமா? அல்லது உன்மையானவராக இராது அவரை நம்பி ஒட்டு மொத்த புலம்பெயர் சக்தியையும் இலங்கை அரசிடம் பலியிடப்போகிறோமா என்பதுதான், ஏன் என்றால் எந்த கேள்விகளுக்கும் அவர் பதில் சொல்லும் பழக்கம் இல்லாமையே, பதில் சொல்லாமல் இருப்பது அவரது பிம்பம் உடையாது காப்பாற்றபடும், பதில்சொல்ல வெளிக்கிட்டுதான் கேபி தன்னை இனம்காட்டி கொண்டார். வரது தேர்தல்கால நடவடிக்கைகளை உற்று நோக்கும் ஒருவர் எளிதாக கண்டு பிடித்து விடுவர், பிரான்சிலும்,ஜேர்மனியிலும்,சுவிசிலும் தேர்தல் ஆணையாளர்களாக நியமிக்க பட்டவர்கள், விடுதலை புலிகளால் ஒழுங்காற்றல் நடவடிக்கைகாரணமாக ஒதுக்க பட்டவர்களே. இந்த விடயத்தில் மக்கள்தான் விழிப்பக இருக்க வேண்டும், நம்ப நடக்க வேண்டும் நம்பி நடந்து விடுதல் கூடாது.

//தேசியதலைவர் ஒருவர் அல்லவா? அவரை நம்பி மக்கள் முழுவிடயத்தையும் ஒப்படைத்தது தவறு என்று சொல்கிறீர்களா? அப்படியானால் ஈபிடிபி, ஈபிஆர்எல்எப் போன்ற அமைப்புகளுடனும் மக்கள் பகுதி பகுதியாக பிரிந்து செயற்பட்டு இருந்திருக்க வேண்டும் என்று கருதுகிறீர்களா?

தேசிய தலைவர் காரணங்களுடன் தான் ஒரு தலைமையின் கீழ் விடுதலை போரட்டத்தை ஒழுங்கு படுத்தினார். நாடுகள் ஒரு தலைவனை கொண்டு இயங்குவதற்கும் அதே காரணங்களே காட்டப்படுகின்றன. பல தலைமைகளின் கீழ் எந்த ஒரு வெற்றிகரமான அமைப்போ முயற்சிகளோ இடம் பெறுவதில்லை.//

இதற்கான பதில் அந்த பந்தியின் அடுத்த பந்தியில் ஏற்கனவே நான் சொல்லி இருகிறேன், எடுத்த எடுப்பில் தேசிய தலைவரை ஒட்டு மொத்த மக்களும் நப்பவில்லை, அப்படி நம்பி இருந்தால், அத்தனை பேரும் விடுதலைபுலிகள் இயக்கத்தில்தான் சேர்ந்து இருப்பார்கள், இத்தனை இயக்கங்கள் தோண்றி இராது. அவர் தனது செயல்களினால் அப்படி தன்னை நிரூபித்து காட்டினார், அப்படி ஒரு தலைவர் 1000 வருடங்களில் ஒருவர்தான் உருவாகுவார்கள், அவர் தலைமையில், அவரதுகாலத்தில் நாம் எம்மை விடுவித்து கொள்ளாதது எமது துர்அதிஸ்டமே. ஒரு நாட்டுக்கு ஒரு தலைவர் என்பது பொருத்தமானதுதான் நாடு இழந்து நிற்கும் நாம் ஒரு தலைமையில் ஒன்று சேர்வது ஆபத்தானது, உதாரணத்துக்கு உருத்திர குமாரின் பின்னால் அனைத்து தமிழர்களும் ஒன்றுசேர்ந்து போராடும் போது, அவர் உண்மையிலேயே இலங்கை அரசுக்கு விலை போய்விட்டார் என்றால், போரட்டத்தை தொடர்ந்து நடாத்துவது யார், அதனால்தான் சொல்கிறோம்,நாடுகடந்த அரசும் வேணும், மக்கள் அவையும் வேணும்,உலகத்தமிழர் பேரவையும்வேணும், கிளைகளும் வேணும். ஒன்று விலை போனாலும், எமது இறுதி லட்சியத்தை அடையும் வரையும் போராடட்டம் தொடரத்தான் வேணும்.

//தேசிய தலைவர் இறந்து விட்டார் என்று நீங்கள் நம்பலாம், ஆனால் மற்றவர்களையும் அப்படி நம்புமாறு கேட்பதற்கு என்ன ஆதாரங்களை நீங்கள் தரக்கூடியதாக இருக்கிறது? //

இருக்கின்றார் என்பதும் இல்லை என்பதும் அவர் அவர் விருப்பம், ஆனால் அனைவரையும் இயக்கும் உந்து சக்தி தேசியத்தலைவர் ஒருவர் மட்டுமே.

//இன்று தமிழ் மக்கள் தேர்ந்து கொண்ட தலைமை நாடுகடந்த அரசாக இருக்கிறது. அது தேசிய தலைவரால் உருவாக்கப்பட்டு கேபியால் நடைமுறைப்படுத்தப்பட்டதாக தெரிகிறது. அதற்காகவே இறுதிநாட்களில் பகிரங்க கடிதம் மூலமாக தேசியதலைவரால் கேபி பொறுப்பாக நியமிக்கப்பட்டார். கேபி இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்பும், இன்று ஏற்கனவே தேசிய தலைவருடன் ஏற்றுக்கொள்ளப்பட்டபடி உருத்திரகுமாரன் தலைமையில் நாடுகடந்த அரசு இயங்குகிறது. இறுதிநாட்களில் இனி//

அது உண்மையானதாக இருக்க வேண்டும் என்பதே எமது அவா, கேபி என்ற ஒரு தவறான தலைவரால் தேர்ந்து எடுக்க பட்ட உருத்திர குமாரும் ஒரு தவறானவராக இருந்து விடக்கூடாது என்பதே எமது வேண்டுதல், அதற்காக அவர்கள் செய்யும் எல்லாசெயல்களையும் ஆதரிக்கும் நிலையில் மக்கள் இல்லை, மக்கள் ஆதரிப்பதும் விடுவதும் அவர்களது செயற்பாடுகளிலேயே தங்கி இருக்கிறது, காலத்தை வீணடித்தால் காலச்சூழலில் அவர்களும் மக்கள் மனதில் இருந்து கரைந்து போய்விடுவார்கள்.

// என்று விடுதலைபுலிகள் அறிவித்தது இதற்கு ஆதாரம். யாருமே எதிர்பார்க்காத விதமாக சிறிலங்கா பல்லாயிரக்கணக்கில் இனப்படுகொலை செய்தது என்றும் ஒபாமா அரசு மன்னிக்க முடியாத ஒன்று என்பதை அமெரிக்க அரசின் உறுதியான நிலைப்பாடு இன்று காட்டுகிறது. உருத்திரகுமாரன் தலைமையிலான நாடு கடந்த அரசே அன்று விடுதலைப்புலிகள் அறிவித்தபடியான நாடுகடந்த மக்கள் வழங்கும் தலைமை.//

விடுதலைப்புலிகள் நாடுகடந்த அரசை தலைமை பொறுப்பை ஏற்கும்படி கூறியதாக நான் அறியவில்லை, தலைமைதாங்க அனைவருக்கும் ஆசை இருக்கலாம் , ஆனால் சொல்லுக்கு முதல் செயல் இருக்க வேண்டும், அதற்கான வேலை திட்டங்களில் அவர்கள் ஈடுபடவேணும், செயல்கள் நடைபெறும் போது மக்கள் தாங்களாகவே தமது தலைமையை தேர்ந்து எடுப்பார்கள், யாரும் தலைமையை ஏற்று கொள்ளும் படி கேட்க வேண்டிய தேள்வை இராது, வீணே காலத்தை இழுதடித்தால் காலச்சக்கரத்தில் கரைந்தே போவார்கள்.

Edited by சித்தன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சித்தன் மற்றும் JUDE

உங்களிடம் ஒரு கேள்வி

நாடு கடந்த அரசின் பிறப்பிலிருந்து அதனை ஆதரிப்பவன் என்பதை முதலில் சொல்லிக்கொண்டு,

எனக்கு சில சந்தேகங்கள் உண்டு

அதனை இங்கு விவாதத்துக்காக அல்ல விளக்கத்துக்காக முன் வைக்கின்றேன்.

நாடு கடந்த அரசின் முன் பல செயற்பாடுகள் தேங்கிக்கிடந்தும் பல வேலைகளைச்செய்ய வேண்டியும் உள்ளநிலையில்..........

அவர்கள் புலம் பெயர் தேசங்களிலுள்ள மற்றய சங்கங்கள் அவைகள் விளையாட்டுக்கழகங்கள்............... போன்றவற்றை தங்களுக்குள் கொண்டுவர ஏன் முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள் . அத்துடன் புலிகளிலிருந்து விலகி செயற்படவிரும்புவதாக கூறிக்கொண்டு மாவீரர்கள் மற்றும் மாவீரர்தினம் போன்றவற்றை தமது கைக்குள் கொண்டுவர ஏன் முண்டியடிக்கின்றார்கள். அவை முன்புபோல் செயற்பட அனுமதித்துவிட்டு தமது ஏனைய வேலைகளைக்கவனிக்கலாம் தானே.

தமிழர்களுக்காக உண்மையாக போராட வரும் அனைவரையும் நாம் ஆதரிப்போம், அதற்காக கண்மூடிதனமாக அனைத்துக்கும் ஆமாம் போட மாட்டோம், எமக்குள் எழும் சந்தேகங்களை நாம் தொடர்ந்து கேட்டு கொண்டுதான் இருப்போம்.

மாவீரர்களை யார் நினைவில் வைத்து அவர்களை பூசிக்கிறார்களோ, அவர்கள் பக்கம்தான் மக்கள் இருப்பார்கள், இருக்கும் வேலைகளை செய்வதை விட்டுவிட்டு, தேள்வையில்லாத வேலைகள் செய்து காலத்தை வீணடிப்பதை மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.

உருத்திரகுமாரனை ஆறு வருடங்களாக பொறுப்புக்களில் இல்லாத கே. பி. என்ற பச்சோந்தி நியமித்தார் என்று ஒருசில விசமிகள் புதிய கதை புனைய முற்பட்டுள்ளனர்.

உருத்திரகுமாரனை நியமித்தது கே. பி. இல்லை.

சித்தன் மற்றும் JUDE

உங்களிடம் ஒரு கேள்வி

நாடு கடந்த அரசின் பிறப்பிலிருந்து அதனை ஆதரிப்பவன் என்பதை முதலில் சொல்லிக்கொண்டு,

எனக்கு சில சந்தேகங்கள் உண்டு

அதனை இங்கு விவாதத்துக்காக அல்ல விளக்கத்துக்காக முன் வைக்கின்றேன்.

நாடு கடந்த அரசின் முன் பல செயற்பாடுகள் தேங்கிக்கிடந்தும் பல வேலைகளைச்செய்ய வேண்டியும் உள்ளநிலையில்..........

அவர்கள் புலம் பெயர் தேசங்களிலுள்ள மற்றய சங்கங்கள் அவைகள் விளையாட்டுக்கழகங்கள்............... போன்றவற்றை தங்களுக்குள் கொண்டுவர ஏன் முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள் . அத்துடன் புலிகளிலிருந்து விலகி செயற்படவிரும்புவதாக கூறிக்கொண்டு மாவீரர்கள் மற்றும் மாவீரர்தினம் போன்றவற்றை தமது கைக்குள் கொண்டுவர ஏன் முண்டியடிக்கின்றார்கள். அவை முன்புபோல் செயற்பட அனுமதித்துவிட்டு தமது ஏனைய வேலைகளைக்கவனிக்கலாம் தானே.

சிறந்த எதிர்காலத்துக்கு விசுகுவின் கருத்துக்கள் முக்கியமானவை. எனது கருத்துக்களும் அதுதான்.

அதுபோல சித்தன் எழுதிய "வேலைகளை செய்வதை விட்டுவிட்டு, தேவையில்லாத வேலைகள் செய்து காலத்தை வீணடிப்பதை மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்" என்ற கருத்தும் முக்கியமானது.

நல்ல சிந்தனா சக்தியுள்ள புலம்பெயர் தமிழர் நா. க. த. ஈ. அரசினர் "தேவையில்லாத வேலைகள் செய்து காலத்தை வீணடிப்பதை" கண்டித்து, எதிர்காலத்துக்கு அவசியமான, தேவையில்லாத பிரச்சனைகளை தராத, பாதையில் செல்வதை உறுதிப்படுத்தவேண்டும்.

மேலும் நா. க. த. ஈ. அரசினர் தம்முள் புகுந்துள்ள ஒருசில புல்லுருவிகளை திருத்த முயலவேண்டும். அது முடியாது போகின், அவர்களை ஓரம் கட்டி, நாசுக்காக களை எடுத்துவிட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன்,

நீங்கள் சொல்வது எவ்வளவுக்கு உண்மையானது என்பது கேள்விக்குரியது.

  1. இந்த திரியின் ஆரம்பமே, நாடுகடந்த அரசின் அங்கத்தவர்களுக்குள்ளேயே இரு பிரிவுகள் இயங்கும் நிலை பற்றியதே.
  2. அது தவிர, மக்கள் அவை நாடு கடந்த அரசு போலவே தேர்தல்களை உலகெங்கும் நடத்தி பலமிக்க அமைப்பாக எழுந்து இருக்கிறது. கனடாவிலே ஆளும் கட்சியுடன் கூட்டுவைத்து இருக்கிறது.
  3. உலகத்தமிழர் பேரவை நாடு கடந்த அரசிற்கு அப்பாற்பட்ட அமைப்பாக செயற்படுகிறது.
  4. அது தவிர, ஈழத்தமிழருக்கு எதிரான பல தமிழர் அமைப்புகள் பல நாடுகளிலும் இயங்குகின்றன.
  5. இந்த யாழ் களத்தையே எடுத்து கொள்ளுங்கள். நாடு கடந்த அரசு யாழ் களத்தை கட்டுப்படுத்தவில்லை. அப்படியான நோக்கமும் நாடுகடந்த அரசுக்கு இருப்பதாக தெரியவில்லை.

நீங்கள் இவ்வாறாக எழுமாற்றாக, உண்மைக்கு புறம்பான கருத்தை தெரிவிப்பது தவறானது.

நீங்கள் குறிப்பிட்ட குழுக்கள் அனைத்தும் தமிழர்களின் அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதாகக் கூறிக்கொண்டு தமக்குள்ளே தமிழர்க்ளைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்திற்காகத்தான் போட்டியிட்டுக்கொண்டிருக்கின்றன. அதிகாரப்போட்டிதான் தற்போது அவர்களுக்கு முக்கியம், தமிழர்களைது அரசியல் உரிமைகள் அல்ல என்பது தற்போதைய நடவடிக்கைகளில் இருந்தே தெளிவாகின்றது. உண்மையில் பன்மைத்துவப் பண்புகள் இருந்தால் ஏகபிரதிநிதித்துவதற்காக ஆளையாள் கடித்துத் தின்னப் பார்க்காமல் ஆரோக்கியமாக் எல்லோரும் ஒரே நோக்கத்திற்காகச் செயற்படவேண்டும். பல்வேறு வகையான அரசியல் வழிகளைத் தேர்ந்தெடுப்போரை அனுசரித்துப் போகத் தெரியவேண்டும்.

நாடு கடந்த தமிழீழ அரசு என்பதை ஒரு நகைப்பிற்கிடமான அமைப்பாக மாற்ற அதற்குள் இருப்பவர்களே முயலும்போது, எப்படி இவர்களால் மக்களை ஒன்றிணைத்து தமிழ்த் தேசியத்தை முன்னகர்த்த முடியும்? இவர்கள் பின் சுயமாகச் சிந்திக்கும் தமிழர்கள் வரமாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இதில் நடத்தப்படுகின்ற அரசியல் என்பது எம்மைப் பிளவுபடுத்தவும், சிதைக்கவுமே உபயோகிக்கப்படுகின்றது. நாடுகடந்த அரசு மட்டுமல்ல, அதன் எதிரணி கூடச் சிறிலங்கா அரசின் கைப்பாவைகளா எனச் சந்தேகிக்கும் வகையில் தான் எல்லோரும் நடந்து கொள்கின்றார்கள். ஒரு சமூகம் அழிந்து போய் இருக்கின்றது. அந்தச் சமூகத்தில் ஒரு உயிருக்குக் கூட மதிப்பில்லாத நிலமை. இந்த சமயத்தில் நடத்தப்படுகின்ற இக் கேவலம் கெட்ட சண்டை என்பது எந்த வகையில் எம்மைப் பலப்படுத்துகின்றது??

மே 19தற்குப் பின்னர் என்ன கிழித்தார்கள் என்று இத்தனை தூரம் பிரச்சனைப்படுகின்றார்கள்? ஒரு சிறு தீர்வையாவது, அல்லது அரசியல் மாற்றத்தையாவது இவர்களால் ஏற்படுத்த முடிந்ததா?? ஒருவனைத் தாக்குவதும், இனங்காட்டுவதும், எவ்வகைத் துரோகமான செயல். 90களில் மாற்று இயங்கங்கள் செய்த துரோகத்தனத்துக்கும், இதற்கும் எவ்வகையான வேறுபாடு இருக்கின்றது. அன்றைக்குப் புலிகள் மீது இருந்த கோபத்தால், தாங்கள் எதற்காக, யாரை எதிர்த்துப் போராடுகின்றோம் என்பது எல்லாம் மறந்து, எதிரியோடு சேர்ந்து நின்று நிலை மாறி நின்றார்கள். இதைத் தானே இங்கே நாங்கள் செய்து கொண்டிருக்கின்றோம்.

உருத்திரகுமாரனை நம்பி எதுவும் முழுமையாக ஒப்படைக்கக்கூடாது என்கின்றீர்கள். அப்படி ஒப்படைக்க எம்மிடம் என்ன இருக்கின்றது என்ற கேள்வி இருப்பினும், அவரை ஏன் காலை வார முயல்கின்றீர்கள்.அவருக்கு மேலாக எம்மை வளர்க்க வேண்டியது தானே. அவ்வாறே, நாடுகடந்த அரசும், காலை வாருகின்ற செயலைச் செய்யாமல் இல்லை. ஒரு ஒற்றுமைப்படுத்தல் என்ற கோட்பாட்டினுள் அவர்களும் வரத் தயாராக இல்லை. தேசிய அவையே, அல்லது உ.த வையோ போட்டுத் தாக்கும் கட்டுரைகள் வருகின்ற போது, அவர் அமையாக வேடிக்கை பார்ப்பது கூட, அவர் அப்படித் தாக்குவதை மறைமுகமாக அனுமதிக்கின்றார் என்றே தோன்றுகின்றது.

உண்மையில் மக்களிடம் கருத்துக்கள் எடுபட வேண்டுமானால், நியாயத்தோடு, கூடிய விளக்கங்களை முன்வைத்தும், பதில் தாக்குதல் அற்ற கருத்துக்களை எழுதும்போது அது எடுபடுமே அன்றி, மற்றவர்கள் மீது சேறை வாரித் தூற்றுதல் என்பது காலத் தொடச்சியில் அழிந்து போகவே உதவும். இன்றைக்குச் சரியோ, பிழையோ செலவளிக்கின்ற ஒவ்வொரு தனிமனிதனின் உழைப்பும், வீணாகிப் போய் விடும்.

இவர்கள் ஏன் சிறிலங்கா அரசின் செயற்பாட்டில் இயங்குகின்றார்கள் என்பதைச் சந்தேகிக்க வைக்கின்றது என்றால், அவர்களின் செயற்திட்டங்களில் இவர்கள் ஒத்துப் போகின்றார்கள் என்பதாலேயே!

1. மக்களை குறித்த அமைப்பு மீது கவனத்தைக் குவிய வைத்தல். சாத்தியமான மாற்று வழிகளைத் தேடாமல் செய்து கொள்ளுதல்.

2. செயற்பாடின்மை. தேசிய அவையோ, அல்லது நாடு கடந்த அரசோ தனது அடுத்த நிலை பற்றி இதுவரை தெளிவுபடுத்தியதில்லை. செயற்பட்டதுமில்லை. இது கால இழுத்தடிப்புச் செய்கின்ற சிங்கள அரசின் மற்றுமொரு வடிவமாகும்.

3. மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி, வெறுப்பினை உண்டாக்க வைத்தல். இப்படிச் செய்வதன் மூலம் போராட்டம் பற்றிய சிந்தனையை மழுங்கடிக்க முயல்கின்றது.

ஒரு விடுதலைப் போராட்டம் கொண்டு செல்லப் பங்களித்தவர்கள் இவர்களே. ஆனால் அது தலைவர் மீது கொண்ட மதிப்பால் அல்ல, பயத்தால் தான் என்ற மாதிரித் தான் நடந்து கொள்கின்றார்கள். எம் விடுதலைப் போராட்டத்துக்காக போராடிய தளபதிகள், போராளிகள் யாருமே உங்களின் நினைவுக்கு வரவில்லையா??

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த அரசு தேர்த்தலின் போது கனடாவில் ஒரு குழு மிக மிக தீவிரமாக வேட்பாளர்களை நியமித்து படங்களுடன் ஒரு மட்டையில் அடித்து மக்களுக்கு வீடு வீடாக அனுப்பியும் கடைகளில் ஒட்டியும் போதாதற்கு தேர்த்தல் நாளில் வாக்கு சாவடியின் முன்னால் நின்று உள்ளே வாக்களிக்க செல்பவர்களிடம் தங்கள் குழுவில் உள்ளவர்களுக்கு வாக்களிக்கும் படி பெயர் பட்டியலை சிறு துண்டில் எழுதி கொடுத்துக் கொண்டிருந்தார்களாம்.இது தேர்த்தல் முறைக்கு எதிரானது என காவல் துறையினரால் கலைக்கப் பட்ட சம்பவங்களும் உண்டு. முடிவில் இவர்களில் பலர் தேர்த்தலில் வென்றிருந்தார்கள்.

கவலையான சம்பவம் இதே குழு தான் இன்று நாடுகடந்த அரசை குழப்புபவர்களாக உள்ளார்கள்.ஆகவே இச்சம்பவம் முதலில் இருந்தே திட்டமிட்டே செய்யப்பட்டது என்று நிறுவப்படுகிறது.

Edited by nunavilan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.