Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்மேற்குப் பருவக்காற்று

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தென்மேற்குப் பருவக்காற்று -- விமர்சனம்

”கள்ளிக்காட்டில் பெறந்த தாயே என்ன கல்லுடைச்சி வளர்த்த நீயே….” என்று தொடங்கும் வைரமுத்துவின் வைரவரிகளோடு அம்மாவை வணங்கி பாடும் பாடலோடு தென்மேற்குப் பருவக்காற்று நம்மை இதமாக வருடத் தொடங்குகிறது. தாயை வணங்கிப்பாடும் பாடலை விட சிறந்த இறைவணக்கம் வேறு ஏது..?

நாயகனில் கதாநாயகியாக ஆரம்பித்த சரண்யாவின் பயணம் இன்று 100 வது படமான தென்மேற்குப் பருவக்காற்று –ல் அம்மாவாகத் தொடர்ந்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. அவ்வளவு சுலபத்தில் அம்மாவாக ”நடிக்க” முடியாது. தாய்க்கே உண்டான ஒரு பரிவு,பாசம்,செல்லக் கோபம்,மகனின் எதிர்காலத்தினைப் பற்றிய பயம், அவன் நல்ல நிலைக்கு வந்து விட்டாலோ எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாத மகிழ்ச்சி இப்படி பல உணர்வுகளை அழகாக வெளிப்படுத்த வேண்டும். சேரனுக்கு,பரத்துக்கு,கருணாஸ்க்கு இதோ இன்று விஜய் சேதுபதிக்கு என்று பலபேருக்கு அம்மாவாக நடித்திருக்கும் சரண்யா அம்மா கதாபாத்திரம் மூலம் தான் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கிறார். இந்தப்படத்திலும் திருட்டுத்தொழில் புரியும் தன் கணவனை ஆரம்பத்திலேயே பறிகொடுத்து விட்டு மகனை மார்பிலும் தோளிலும் தூக்கி வளர்த்து ஆளாக்கி திருமணமும் செய்து வைத்து விட்டு கடமை முடிந்த மகிழ்ச்சியில் கண்ணைமூடிவிடுகிறார்.

சரண்யாவிற்கு அடுத்து குறிப்பிட வேண்டுமானால் விஜயசேதுபதியின் மாமன் மகளாக வரும் ஹேமலதா. கிராமத்துக்கே உண்டான கருப்பு வசீகரம். மகிழ்ச்சியோ,துன்பமோ வாழ்க்கையை யதார்த்தமாக எடுத்துக் கொள்ளும் முகபாவனைகள். டாடி ம்ம்மி வீட்டில் இல்லைன்னா காதலனையோ,பாய் ஃப்ரெண்டையோ அழைத்துக் கும்மாளம் போடும் மேற்கத்திய மோகம் கொண்ட இளம்பெண்களின் மத்தியில் தான் தனியாக இருக்கும் போது வீட்டுக்கு வந்த, இன்னும் சில நாட்களில் திருமணம் செய்துகொள்ளப்போகும் தன் அத்தை மகனை அடுத்த வீட்டுக்கார அக்காவின் துணை கொண்டு விரட்டாமல் விரட்டும் அந்த கலாச்சாரம் அழகு, அது நமக்கே உரியது. நம்முடைய கலாச்சாரத்தின் மீதும் பாரம்பரியத்தின் மீதும் நாம் நம்பிக்கை வைக்க வேண்டும்.இயக்குனர் சீனு ராமசாமி மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார். இன்றைய தமிழ் சினிமாவில் ஹேமலதா போன்ற துணைக்கதாபாத்திர(Supporting character Artist) நடிகைகள் மிக அதிக அளவில் தேவை.

விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் முதல்படம். குசும்பும், கோபமும்,காதலும் கொண்ட கிராமத்து இளைஞனாக வாழ்ந்து காட்டியிருக்கிறார். உணர்வுகளைப் பிரதிபலிக்கும் போது அவரது மெனக்கெடல்கள் தெரிகிறது. சேதுபதி என்பது வைகை நதிக்கரையோரம் ஆட்சிசெய்த இராமநாதபுரத்து ராஜாக்களின் பெயர். வைகைக்குப் பல ஜாம்பவான்களை ஈன்ற பெருமை இருக்கிறது. திட்டமிட்டு முயன்றால் விஜய்சேதுபதியும் வைகைக்குப் பெருமை சேர்க்கலாம்.

நகரப்பெண்ணாகவே பார்த்து பழக்கப்பட்ட வசுந்தராவா அது..? எண்ணெய் தேய்த்து சீவிய கூந்தலும் மஞசள் தேய்த்த முகமும் அப்படியே தேனி மாவட்ட கிராமப்பெண்ணாகவேஎ மாறி விடுகிறார்.

ஒரு சிம்கார்டு வாங்கினா ஆடம் கார்டு என்று சொல்லப்படுகிற இன்னொரு சிம்கார்டு இலவசமாக வாங்கி இரவு நேர இலவச டாக் டைம் மற்றும் SMS என்றுகாதலை வளர்க்கும் காதலர்கள் மத்தியில் “மனது” என்கிற ஒரே சிம்கார்டு மூலம் காதலிக்கும் விஜய்சேதுபதிக்கும் வசுந்தராவுக்க்குமான கிராமக்காதல் அழகு மற்றும் புதிது. மற்ற சிம்கார்டில் தன் காதலன்/காதலி நம்பர் போக 99 நம்பர்களாவது கூடுதலாக சேமித்து வைத்துக் கொள்ள முடியும். அதனால ஏற்படும் Traffic / (Call )Diversion/Call waiting/Not reachable etc போன்றவற்றினால் அந்தக் காதல் வலுவிழந்து தோற்றுப்போய் விடுகிறது. ஆனால் மனது மட்டும் தொடர்புகொள்ளும் கிராமக்காதலில் மேற்கண்ட பிரச்சினைகள் ஏதும் இல்லாமல் தடைகளைத் தாண்டி ஜெயிக்கிறது.

வசுந்தரா குடும்பத்தில் ஒரு பாட்டி தன் மக்கள் திருட்டு வழக்கில் மாட்டி ஜெயிலுக்குப் போகும்போது போது “பயப்படாதீங்க 6 மாசம்தான.. போறதே தெரியாது” என்று ஆசீர்வதித்து அனுப்பும் போது என்னடா இது திருட்டுக்கெழவியா இருக்கே என்று நினைக்கத் தோன்றவில்லை மாறாக அந்தக் கிழவியின் “வாழ்க்கையை அப்படியே அந்த நிலையிலேயே ஏற்றுக் கொள்ளும் (Acceptance of life as it is) இயலாமை நிலையுடன் கூடிய ஒரு மனப்பக்குவம்” நமக்குப்புரிகிறது. இந்த வித்தையை கற்றுக் கொள்வதற்கு ஆயிரக்கணக்குல செலவு செய்தும் ஆசிரமங்களுக்குப்போகும் போதும் தான் வீண் பிரச்சினைகளும் ஏற்படுகின்றன.

கங்கை முதலான புண்ணியதீர்த்தங்களை விட தாயின் வியர்வை அதிக புண்ணியம் வாய்ந்தது, அத்தகைய வியர்வை சிந்திய விளை நிலத்தை விட தாயின் அஸ்தியினை கரைக்க வேறு இடம் எதற்கு…? அவளது அஸ்தி தெரிக்கப்பட்ட அந்த விளை நிலம் இன்னும் அதிகப்பேரின் பசியினைப்போக்கும்.

பருவ நிலை கோளாறினால் ஏற்படும் வறட்சியின் காரணமாக வாழ்வாதாரத்திற்காக திருட்டுத் தொழில் புரிவதை நியாயப்படுத்துவதா..? என்று கேட்கத் தோன்றுகிறது ஆனால் வசதியாக வாழ்ந்து கொண்டும் இண்டர் நெட்டிலும் திருட்டு வி.சி.டி யிலும் அடுத்தவன் உழைப்பினை திருடி படம் பார்த்துக் கொண்டிருக்கும் ”நாகரீகம்” முன்பு கிராமத்தான் பசிக்காத் திருடுவது நல்ல செயல் ஆகிப்போகின்றது. DVD available ah இருக்கு Internet ல படம் வருது அந்த வசதிகள் எப்படி பயன்படுத்தாம இருக்கமுடியும்? என்று நாகரீக மனிதன் கேட்கிறான் ஆனால் ஆட்டுகொட்டடில சும்மா அடைச்சு வைச்சிருந்த ஆட்டைத்தானே திருடினேன் என்று கிராமத்தான் சொல்ல முடியாது, சொல்லவும் இல்லை, திருடினதற்காகத் தண்டனையை அனுபவிக்கிறான்.

செழியனின் ஒளிப்பதிவு வறட்சிப்பிரதேசங்களைக் கூட அழகாகக் காட்டுகிறது. கிராமத்துப் புழுதியினைக் கூட கொடைக்கானல் மேகமூட்டமாகக் காட்டுகிறது. சில இடங்களில் மிகவும் நேர்த்தியான Wide angle shots பிரமிக்க வைக்கிறது.

தேவையற்ற காமமும், வன்முறைகளும் கலந்த மாசு நிறைந்த காற்றினை சுவாசித்துக் கொண்டு இருக்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மாசு இல்லாத உயிர்சத்து அதிகம் நிறைந்த தென்மேற்குப்பருவக்காற்றினை இயக்குனர் சீனுராமசாமி வழங்கியிருக்கிறார். முடிந்த மட்டும் சுவாசித்துக் கொள்வது ரசிகர்கள் கைகளில்.

-K.விஜய் ஆன்ந்த்

http://www.mysixer.com/?p=1182

ஆட்டாம் புழுக்கைகளும், காட்டாமணக்குகளும் மலிந்து கிடக்கும் தமிழ்சினிமாவில் நேர்மையாகவும், கூர்மையாகவும் ஒரு படம்! கூடல் நகரில் கோட்டை விட்டாலும், தென்மேற்கை மட்டுமல்ல, தமிழ் பேசும் அத்தனை ஊரையும் தன் வசப்படுத்தியிருக்கிறார் சீனு ராமசாமி. நமது அதிகபட்ச வேண்டுகோள் ஒன்றே ஒன்றுதான். 'இந்த படத்தை ஓட வைங்க மக்களே...'

ஒரு பக்கம் கடும் வறட்சி. அதே ஊரின் இன்னொரு பக்கம் பசுமையின் திரட்சி. இந்த பூகோள அதிசயத்திற்குள் ஒரு புதையலையும் செருகி கதை சொல்லியிருக்கிற விதம் ஆஹா..! அந்த புதையல்தான் அம்மா சரண்யாவின் அழகான பாசம், உழைப்பு, கோபம் எல்லாமே!

கிடையிலிருந்து ஆடுகளை திருடும் கும்பல் ஒன்றை, ஆட்டுக்கு சொந்தக்காரனான ஹீரோ விரட்டுகிறான். கையில் சிக்கிய அந்த ஒருவன், திருடனல்ல... திருடி! ஆட்டை திருட வந்தவள், இவனின் மனசையும் ஆட்டையை போட்டுவிட்டு ஓடுகிறாள். ஆடு தேடுகிற சாக்கில் அடுத்த நாள் அவளையே தேடிப்போகும் அவன் மெல்ல மெல்ல அவளை தன் வசப்படுத்த, காதல் கைகூடுகிற நேரத்தில் கத்தி, குத்து, ரத்தம் என்று தேனிக்கே உரிய சம்பிரதாயங்களில் அரைபடுகிறது காதல். தமிழ்சினிமா இதுவரை பார்க்காத ஒரு அம்மா சென்ட்டிமென்டுடன் கதை முடிய, விழியோரத்தில் துளிர்க்கும் ஒற்றை துளி கண்ணீர் அவரவர் அம்மாவை நினைவுபடுத்தும்!

இந்த படம் ஆயிரம்கால் மண்டபம் எனில், அதில் தொள்ளாயிரம் கால்களின் பலத்தை உள்ளடக்கியது சரண்யாவின் நடிப்பு. அந்த கரிசல் மண்ணில் அவர் ஏர் ஓட்டுவதை கண்டால் ஆண் விவசாயிகளே ஆச்சர்யப்படுவார்கள். "ஏய்... கருவாச்சி. நில்லுடி. வாழத்தானே வந்தே? உள்ள போ" என்று சரண்யா கோபப்படுகிறாரே, என்ன ஒரு திருப்பம்! வெகு இயல்பாக மகனுக்கு பெண் பார்ப்பதும், வரதட்சணை பேசுவதும், வெற்றிலை மாற்றிக் கொள்வதும், சரண்யாவுக்கு தேனி பகுதியில் ஒரு ரேஷன் கார்டே போட்டுக் கொடுக்கலாம்.

படிய வாரிய தலை. பளிச்சென்ற விபூதி. கிராமத்து ஹீரோன்னா பரட்டையாதான் திரியணுமா? இலக்கணத்தை உடைத்திருக்கிறார் புதுமுகம் விஜய் சேதுபதி. அம்மாவா, காதலியா என்ற தடுமாற்றத்தை அப்படியே உணர வைக்கிறார். தனக்கு சொல்லாமலே ஊரைவிட்டு கிளம்பும் வசுந்தாராவுக்கு இவர் டாடா காட்டுவதெல்லாம் ரொம்பவே புதுசு. இனிமேல் ஊர்ல பாதிபேர் சட்டையை கழட்டிட்டு திரிஞ்சா ஆச்சர்யமில்லை!

பேருதான் பேச்சி. ஆனால் படத்தில் வசுந்தரா பேசுகிற வசனங்களை உள்ளங்கையில் எழுதி ஒரே மூச்சில் ஒப்பித்து விடலாம். அதனாலென்ன. இவர் கண்கள் பேசுகிற பேச்சு இருக்கே, அது பக்கம் பக்கமாக எழுத வேண்டியதை பளிச் பளிச்சென்று புரிய வைக்கிறது. வசுந்தரா மேல் அடிவிழக் கூடாது என்று சேதுபதி தடுக்க, அவன் போகிற திசையெல்லாம் வசுந்தராவின் கண்கள் அலைபாய்வது அற்புதமான விஷ§வல் கவிதை! (இந்த காட்சிக்காக ஒளிப்பதிவாளர் செழியனுக்கு தனி சபாஷ்)

திருட்டு கல்யாணத்திற்கு தயாராகும் ஹீரோ, ஒவ்வொரு பஸ்சாக ஏறி இவரை தேடிக் கொண்டிருக்க, இவரோ அவன் வீட்டுக்கே போய் வருங்கால மாமியாரிடம் 'உன் புள்ளைய நீயே வச்சுக்கோ. எனக்கு அவன் உசிரு ரொம்ப முக்கியம்' என்று பின்வாங்குவது அதிரடியான திருப்பம்!

தண்ணி பாக்கெட்டும் ஒரு ரூவா. ஒண்ணுக்கு அடிக்கவும் ஒரு ரூவாவா? என்று சதாய்க்கும் தீப்பெட்டி கணேசன் நாட்டு நடப்பை புட்டு புட்டு வைப்பதெல்லாம் வெடிச்சிரிப்பு. எங்க தலைவர் கமல்ஹாசன் ஓட்டை வேற யாரோ போட்டுட்டு போயிட்டானாம்ல? என்று கேட்கிற தீப்பெட்டியின் பொறி ரொம்பவே எக்குதப்பு!

வில்லனாக நடித்திருக்கும் அருள்தாஸ், குமார், "நமக்காகதான்யா செயிலு கட்டி போட்டுருக்கான். சந்தோஷமா போயிட்டு வாய்யா..." என்று வாழ்த்தி அனுப்பும் அந்த கிழவி இப்படி எல்லாருமே அவரவரர் பங்குக்கு அல்டிமேட் ஆகியிருக்கிறார்கள்.

தென்மேற்கு பருவக்காற்றையும், அந்த சிலுசிலுப்பையும் தியேட்டருக்குள் பரவ செய்கிறது செழியனின் மிக மிக இயல்பான ஒளிப்பதிவு. இருட்டில் ஆடு திருடுகிற காட்சிகள் அப்படியே நேரில் பார்ப்பது போன்ற லைட்டிங்! காட்சிகளை நீட்டி கலவரப்படுத்தாமல் பொருத்தமான இடத்தில் மட்டும் கத்தரிக்கு வேலை கொடுத்திருக்கிறார் எடிட்டர் காசி.விஸ்வநாதன். அளவான கச்சிதமான பின்னணி இசை. ஏண்டி கள்ளச்சி என்னை தெரியலையா, கள்ளிக்காட்டில் பிறந்த தாயே என்று எந்நேரமும் முணுமுணுக்க வைக்கிற பாடல்கள், இந்த ஆண்டின் மிக முக்கியமான புதுவரவு இசையமைப்பாளர் என்.ஆர்.ரஹ்நந்தன். ஒவ்வொரு வரியையும் ஆத்மாவின் ஓசையாக இறக்கி வைத்திருக்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து.

வருஷ கடைசியில் கிடைத்த பரிசாக ஜொலிக்கிறார் இப்படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி. கமர்ஷியல் குப்பைகள் இவர் மேல் படியாமல் பார்த்துக் கொள்வது இப்படத்தின் வெற்றியில்தான் இருக்கிறது! செய்வீர்களா ஜனங்களே...

http://www.tamilbase.com/index.php?option=com_content&view=article&id=21837:2010-12-30-11-52-40&catid=2:chine-news&Itemid=318

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்

தென்மேற்குப் பருவக்காற்று இந்த படத்தை எங்கே பார்க்கலாம்

சாதாரணமான மிக அழகிய கிராமியப்படம்.பாரதிராஜாவின் புதிய வார்ப்புகள் மாதிரி

படம் முழுக்க தேனியில்.அழகோ அழகு.(புளொட்டின் முதல் காம்ப் அங்குதான்.அதுதான் இணைய தளத்திற்கு பெயரே தேனி.பலருக்கு தெரியாத விடயம்)கம்பம்,தேனி மறக்கமுடியுமா?

டீ.வீ.டீ ஒரிஜினலே இப்போது எங்கும் கிடைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாதாரணமான மிக அழகிய கிராமியப்படம்.பாரதிராஜாவின் புதிய வார்ப்புகள் மாதிரி

படம் முழுக்க தேனியில்.அழகோ அழகு.(புளொட்டின் முதல் காம்ப் அங்குதான்.அதுதான் இணைய தளத்திற்கு பெயரே தேனி.பலருக்கு தெரியாத விடயம்)கம்பம்,தேனி மறக்கமுடியுமா?

டீ.வீ.டீ ஒரிஜினலே இப்போது எங்கும் கிடைக்கும்.

ஐயனே!

இப்பூமிப்பந்தில் தங்கள் பொற்பாதங்கள் பதிக்காத இடமே இல்லையா?

எனக்கும் பல நண்பர்கள் 80 களில் ஜெர்மன்,பிரான்ஸ் என்று வெளிக்கிட்டு நல்லா உழைக்து பின் லண்டன் கனடா கார், வீடு,பிள்ளைகுட்டியின் படிப்பென்று இருந்துவிட்டு இப்ப ஒரு இடமும் போகவில்லை என கவலைப்படுகினம்.அண்ணையும் அந்த லிஸ்ட் போல் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பாட்டு அந்த படத்திலா. தெருயாமலே போயிட்டுது. அழகான பாட்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.