Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க ஐரோப்பிய ஒன்றயமும் ஆயுத உற்பத்தியும்

Featured Replies

அனைத்துலக ரீதியில் காணப்படும் முதன்மையான 100 படைத்தளபாட உற்பத்தி நிறுவனங்களில் வருடாந்த ஆயுத விற்பனையில் 247 பில்லியன் டொலர் விற்பனையினை அமெரிக்க நிறுவனங்களே மேற்கொள்கின்றன. இது மொத்த ஆயுத விற்பனைத் தொகையில் 61.5 சதவீதமாகும்.

இவ்வாறு Inter Press Service - IPS இணைய ஊடகத்தில் அதன் ஆசிரியபீடத்தை சேர்ந்த Thalif Deen எழுதியுள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி.

அதன் முழுவிபரமாவது,

அனைத்துலக ரீதியிலான படைத்தளபாட உற்பத்தியாளர்களை எடுத்துக்கொண்டால் ஐக்கிய அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பாவினைச் சேர்ந்த நிறுவனங்களே உலக சந்தையில் அதிக இடத்தினைப் பிடித்திருக்கின்றன. அதேநேரம் சீனா, இந்தியா, யப்பான், சிங்கப்பூர், தென்கொரியா, இஸ்ரேல், துருக்கி மற்றும் குவைத் ஆகிய நாடுகளைச் சேர்ந்த படைத்தளபாட உற்பத்தி நிறுவனங்களைப் பொறுத்தவரையில் அவைகளும் வேகமான வளர்ச்சியினைக் கண்டிருக்கின்றன.

அண்மையில் ஸ்ரொக்கொம்மினைத் தளமாகக் கொண்டு இயங்கும் அனைத்துலக அமைதி ஆராய்ச்சி நிறுவனம் [stockholm International Peace Research Institute - SIPRI] வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கையின் பிரகாரம், உலகிலுள்ள முதன்மையான 100 படைத்தளபாட உற்பத்தியாளர்களில் வெறும் 10 உற்பத்தியாளர்கள் மாத்திரமே மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளைத் தளமாகக் கொண்டிருக்கிறார்கள். அதேநேரம் இலத்தீன் அமெரிக்கா மற்றும் ஆபிரிக்காவில் எந்தவொரு படைத்தளபாட உற்பத்தியாளரும் இல்லை என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.

இந்துஸ்தான் வான்பொறியியல் மற்றும் பாரத் இலத்திரனியல் நிறுவனம் [இந்திய], இஸ்ரேல் வான்வெளித் தொழில்துறை மற்றும் றிபீல் நிறுவனம் [இஸ்ரேல்], மிற்ஸ்சுபிசி கனரக தொழில்துறை மற்றும் கவுசிங்கி கனரக நிறுவனம் [யப்பான்], சாம்சங் [தென்கொறியா], எஸ்.ரி பொறியியல் நிறுவனம் [சிங்கப்பூர்] மற்றும் அசெல்சன் நிறுவனம் [துருக்கி] ஆகிய நிறுவனங்களும் இந்த ஆய்வில் பட்டியலிடப்பட்டிருக்கின்றன.

போர் விமானங்கள், உலங்கு வானூர்திகள், பயிற்சி விமானங்கள், ஆளற்ற வேவு விமானங்கள், விரைவுத் தாக்குதல் கலங்கள், ஏவுகணைகள், யுத்த டாங்கிகள் மற்றும் இலத்திரனியல் போர் உபகரணங்கள் போன்ற படைத்தளபாடங்களை மேற்குறித்த இந்த நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றன.

ஆனால் ஐக்கிய அமெரிக்காவிலோ அன்றி ஐரோப்பிய நாடுகளிலோ உள்ள படைத்தளபாட உற்பத்தி நிறுவனங்களுடன் இணைந்துதான் மேலே குறிப்பிட்ட பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது உற்பத்திகளை மேற்கொள்கின்றன. கூட்டுத் தயாரிப்பாகவோ அன்றில் தொழிநுட்பத் தகவல்களைப் பெற்று மேற்கொள்ளப்படும் உற்பத்திகளாகவோ இவை அமைகின்றன.

அதேநேரம் சீனா தனக்கெனத் தனியான படைத் தளபாட உற்பத்தி நிறுவனங்களைக் கொண்டிருக்கிறது. நொறின்கோ என அறியப்படும் சீனாவின் வட தொழில்துறைக் கூட்டுத்தாபனம், சீன வான் தொழில்துறைக் கூட்டுத்தாபனம், சீன கப்பல் கட்டும் தொழில்துறைக் கூட்டுத்தாபனம் போன்ற சீன நிறுவனங்கள் யுத்த விமானங்கள், உலங்குவானூர்திகள், போர்க்கப்பல்கள் மற்றும் ஆட்லெறி எறிகணைகள் போன்ற பரந்துபட்ட படைத்தளபாடங்களை உற்பத்தி செய்கின்றன.

இருப்பினும் படைத்துறைத் தளபாட உற்பத்தியில் முன்னணியில் இருப்பது ஐக்கிய அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளிலுள்ள நிறுவனங்கள்தான். லுக்கெட் மாட்டின், நோத்றொப் குறுமன், போயின், றேதியொன், அமெரிக்காவின் யுனைற்றெட் ரெக்னோலொஜிஸ், பிரித்தானியாவின் ஏறோஸ்பேஸ் சிஸ்டம் மற்றும் ஐரோப்பிய வான்வழிப் பாதுகாப்பு மற்றும் விண்வெளி நிறுவனம் போன்ற படைத்துறை உற்பத்தி நிறுவனங்கள் இதற்குள் அடங்கும்.

ஆசிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த படைத்தளபாட உற்பத்தி நிறுவனங்கள் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் இத்தகைய நிறுவனங்களை முந்திச்செல்லுமா என ஆயுதத் தொழில்துறை வல்லுநரான கலாநிதி சூசன் ஜக்சனிடம் கேட்டபோது, "குறிப்பிட்ட இந்த விடயத்தில் எதிர்வுகூற முடியாது" என்றார்.

இருப்பினும், 10 ஆண்டுகளின் பின்னர் இந்த நிறுவனங்கள் எவ்வாறிருக்கும் என்பதை எதிர்வு கூறுவது கடினம். குறிப்பிட்ட இந்த நாடுகளில் நிச்சயமற்றநிலைமை தொடர்வதால் இது உண்மையில் கடினமானது என்றார் அவர்.

ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவினைச் சேர்ந்த படைத்தளபாட உற்பத்தியாளர்களுடன் போட்டிபோடும் ஏனைய நிறுவனங்கள் இவர்களுக்கு இணையாக படைத்தளபாட உற்பத்திகளை வெளியிடுவது என்பது சாவல்நிறைந்தது என ஜக்சன் கூறுகிறார்.

"ஐக்கிய அமெரிக்காவினைப் பொறுத்தவரையில் அது அளவில்பெரிய ஆயுத சந்தையினைக் கொண்டிருப்பதோடு தொடர் கொள்வனவிலும் ஈடுபடுகிறது. ஆதலினால் ஏனைய படைத்தளபாட உற்பத்தி நிறுவனங்கள் தங்களது ஆயுத தளபாட விற்பனையினை அதிகரித்தாலும் கூட அவர்கள் அமெரிக்க ஆயுதச் சந்தையினைத் தமதாக்காவிட்டால் முன்னேறமுடியாது" என ஜக்சன் கூறுகிறர்.

2009ம் ஆண்டு உலகப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோதும், உலகின் முன்னணியிலுள்ள 100 ஆயுத உற்பத்தி நிறுவனங்களின் ஆயுத விற்பனை குறிப்பிட்ட ஆண்டில் 14.8 பில்லியன் அதிகரித்து 401 பில்லினைத் தொட்டிருந்தது. ஸ்ரொக்கொம்மைத் தளமாகக் கொண்ட இந்த நிறுவனத்தினால் தற்போது வெளியிடப்பட்டிருக்கும் புள்ளி விபரங்களின் அடிப்படையில், 2009ம் ஆண்டில் ஆயுத தளபாட விற்பனையானது எட்டு சதவீதத்தினால் அதிகரித்திருக்கிறது.

அமெரிக்கா படைத்துறைசார் தளபாடங்களுக்காகவும் படைத்துறைசார் சேவைகளுக்காகவும் அதிக நிதியினை ஒதுக்குவதுதான் இதுபோல ஐக்கிய அமெரிக்காவில் அயுத விற்பனை அதிகரித்துச் செல்வதற்கான பிரதான காரணம். ஐக்கிய அமெரிக்காவினது படைத்தளபாட மற்றும் படைத்துறைசார் சேவைகளுக்கான சந்தையில் ஐரோப்பிய நாடுகள் சில காலூன்றியிருக்கின்றன. குறிப்பிட்ட இந்த நாடுகள் அமெரிக்காவின் பாதுகாப்புச் செலவீனத்தினை அதிகரிப்பதன் ஊடாக ஆதாயம் தேடிக்கொள்கின்றன.

தற்போது வெளியிடப்பட்டிருக்கும் இந்த ஆய்வு அறிக்கையின் பிரகாரம் உலகில் முதன்மையான 100 படைத்தளபாட உற்பத்தி நிறுவனங்களில் 45 அமெரிக்காவினைத் தளமாகக் கொண்டு செயற்படுகின்றன.

அனைத்துலக ரீதியில் காணப்படும் முதன்மையான 100 படைத்தளபாட உற்பத்தி நிறுவனங்களில் வருடாந்த ஆயுத விற்பனையில் 247 பில்லியன் டொலர் விற்பனையினை அமெரிக்க நிறுவனங்களே மேற்கொள்கின்றன. இது மொத்த ஆயுத விற்பனைத் தொகையில் 61.5 சதவீதமாகும்.

முதன்மையாகவுள்ள இந்த 100 நிறுவனங்களில் 33 நிறுவனங்கள் பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நோர்வே, ஸ்பெயின், சுவீடன், சுவிஸ்லாந்து மற்றும் பிரித்தானியா ஆகிய ஐரோப்பிய நாடுகளிலேயே உள்ளன. வருடாந்தம் 120 பில்லியன் பெறுமதியான ஆயுத விற்பனையில் ஈடுபடுகின்றன. இது அனைத்துலகின் மொத்த ஆயுத விற்பனைத் தொகையில் 30 சதவீதமாகும். மேற்கு ஐரோப்பிய ஆயுத உற்பத்தி நிறுவனங்களில் முதன்மையான 26 நிறுவனங்கள் ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளிலேயே இருக்கின்றன.

இந்திய வான்வெளி நிறுவனத்திற்கும் அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கும் இடையிலான கூட்டு ஒப்பந்தம் எத்தனை நாளைக்குத்தான் இருக்கும் என்பது தொடர்பான சந்தேகத்தினை அமெரிக்கா வெளியிட்டிருப்பதாக கடந்த வாரம் லண்டனிலிருந்து வெளிவரும் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. 11 பில்லியன் டொலர் பெறுமதியான இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் இந்தியா 126 தாங்குதல் வானூர்திகளைப் பெறவுள்ளது.

ஐக்கிய அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் தவிர்ந்த ஏனைய நாடுகள் தொடர்பாக ஜக்சனிடம் கருத்துக்கேட்டபோது, இஸ்ரேலின் படைத்தளபாடத் தொழில்துறையானது அதிகம் அமெரிக்கச் சந்தையிலேயே தங்கியிருக்கிறது என்றார்.

இருப்பினும் ஆளற்ற வேவு விமானங்கள் விற்பனையில் இஸ்ரேல் அனைத்துலக ரீதியில் தனக்கென ஒரு இடத்தினைத் தக்கவைத்திருக்கிறது எனத் தொடர்ந்தார் ஜக்சன்.

"இஸ்ரேல் பலதரப்பட்ட படைத்தளபாடங்களை உற்பத்தி செய்துவருகின்ற போதும் அனைத்துலக ஆயுத சந்தையில் அதனது ஆளற்ற வேவு விமானங்கள்தான் அதிக இடத்தினைப் பிடித்திருக்கின்றன" என அவர் சுட்டிக்காட்டினார்.

நன்றி புதினப்பலகை

http://www.puthinappalakai.com/view.php?20110307103343

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்துலக ரீதியிலான படைத்தளபாட உற்பத்தியாளர்களை எடுத்துக்கொண்டால் ஐக்கிய அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பாவினைச் சேர்ந்த நிறுவனங்களே உலக சந்தையில் அதிக இடத்தினைப் பிடித்திருக்கின்றன. அதேநேரம் சீனா, இந்தியா, யப்பான், சிங்கப்பூர், தென்கொரியா, இஸ்ரேல், துருக்கி மற்றும் குவைத் ஆகிய நாடுகளைச் சேர்ந்த படைத்தளபாட உற்பத்தி நிறுவனங்களைப் பொறுத்தவரையில் அவைகளும் வேகமான வளர்ச்சியினைக் கண்டிருக்கின்றன.

இது ஒரு விசித்திரமான உலகம், கோமகன். உலகின் ஆயுத உற்பத்தியில் 70% ஆயுதங்கள் இங்கு உற்பத்தியாகின்றன. ஆனால் இந்த ஆயுதங்கள் ஒன்றும் இங்கு பயன்படுத்தப்படுவதில்லை.சீனாவிலோ அல்லது இந்தியாவிலோ கூடப் பயன் படுத்தப் படுவதில்லை.(காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியல்ல என்பது எனது கருத்து. நேருவுக்கு ஒரு களியாட்ட விளையாட்டு மைதானம் தேவைப்பட்டது.)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.