Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகத் தமிழர் பேரவை-அமெரிக்கத் துணைச் செயலாளர் றொபேட் பிளேக் சந்திப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலகத் தமிழர் பேரவை-அமெரிக்கத் துணைச் செயலாளர் றொபேட் பிளேக் சந்திப்பு!(Att;Photo)

Published on March 30, 2011-7:56 am

globalc.jpg

உலகத் தமிழர் பேரவை அமெரிக்கத் துணைச்செயலாளர் றொபேட் பிளேக்கை வொஷிங்டனில் உள்ள அரசதிணைக்களத்தில் கடந்த திங்கட்கிழமை சந்தித்து இலங்கை தமிழ் மக்களின் பிரச்சினை குறித்து விளக்கியுள்ளனர்.

உலகத் தமிழர் பேரவைத் தலைவர் வண. சீ.யோ.இமானுவேல் அடிகளாரின் தலைமையில், அமெரிக்கத் தமிழ் அரசியற் செயலவைத் தலைவர் டாக்டர் எலயஸ் ஜெயராசா, திருமதி கிறேஸ் விலியம்ஸ், சுரேன் சுரேந்திரன் ஆகியோர் உலகத் தமிழர் பேரவையின் குழுவில் பங்குபற்றினர்.

இச்சந்திப்பை அமெரிக்கத் தமிழ்அரசியற் செயலவை ஒழுங்கு செய்திருந்தது.

உலகத் தமிழர் பேரவையானது, வடகிழக்கில் வாழும் தமிழ் மக்களின் இன்றைய இன்னல்களைச்சுட்டிக் காட்டியதாகவும் தமிழ் மக்களின் முக்கிய குறைகள் பற்றியும் அவர்களின் மனக்குறைகளைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாகவும் உலக தமிழர் பேரவை இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழர் தேசியக்கூட்டமைப்பிடமிருந்து வந்த அண்மைய அறிக்கை பற்றியும் துணைச்செயலாளருடனும் தாம் கலந்துரையாடியதாக உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

நன்றி - தினக்கதிர்

  • கருத்துக்கள உறவுகள்

உலகத் தமிழர் பேரவை அமெரிக்கத் துணைச்செயலாளர் றொபேட் பிளேக்கை வொஷிங்டனில் உள்ள அரசதிணைக்களத்தில் கடந்த திங்கட்கிழமை சந்தித்து இலங்கை தமிழ் மக்களின் பிரச்சினை குறித்து விளக்கியுள்ளனர்.

'அவரிற்கு இவர்கள் விளக்கியுள்ளனர்'.

'யார் குத்தினாலும் அரிசியானால் சரி'

பாராட்டுக்கள் இந்த சந்திப்பை மேற்கொண்ட உலகத்தமிழர் பேரவைக்கு. சோனியாவை சந்தித்த பின்னர் மேற்கொண்ட சந்திப்பு என்ற வகையில் ஒருவித முக்கியம் பெறுகின்றது.

புலம் பெயர் தமிழர்கள் என்ன நிலைப்பாட்டில் உள்ளனர் என நாடி பிடித்திருக்கும் அமெரிக்கா . நிச்சயம் அமெரிக்கா தனக்கு சாதகமாக எதை செய்யலாம் எனப்பார்க்கும். அவர்களுக்கு இந்திய நிலைப்பாடும் தெரியும். சீனாவின் நகர்வுகளும் தெரியும்.

இந்த அரசியல் நிலைப்பாடுகளுக்குள் தமிழர் தரப்பும் சிங்களத்தின் மீது ஒருவித அழுத்தம் கொடுக்க இந்த சந்திப்புக்கள் உதவும் என்ற எதிர்பார்ப்பு எமக்கு உள்ளது. அதன் மூலம் அடைபட்டுள்ள மக்கள் - போராளிகள் விடுதலையில் இருந்து நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் என நம்புவோம்.

உடனடி வெளியீட்டுக்குரியது

அறிக்கை

உலகத் தமிழர் பேரவை அமெரிக்கத் துணைச் செயலாளர் பிளேக்கைச் சந்தித்தது

சிறீலங்காவின் இனச்சிக்கலுக்குத் தீர்வு காண்பது தொடர்பாக உலகச் சமூகத்தின் கவனக்குவிப்பை ஈர்க்கும் பொருட்டு உலகத் தமிழர் பேரவை (உ.த.பே) தொடர்ந்தும் ஈடுபட்டுவருகின்றது. இதன் தொடர்ச்சியாக உலகத் தமிழர் பேரவையானது அமெரிக்கத் துணைச் செயலாளர் பிளேக்கைச் சந்தித்தது. உலகத் தமிழர் பேரவைத் தலைவர் வண. சீ.யோ. இமானுவேல் அடிகளாரின் (ஜேர்மனி) தலைமையில், அமெரிக்கத் தமிழ் அரசியற் செயலவைத் தலைவர் டாக்டர் எலயஸ் ஜெயராசா, திருமதி கிறேஸ் விலியம்ஸ் (அமெரிக்கா), சுரேன் சுரேந்திரன் (ஐக்கிய இராச்சியம்) ஆகியோர் உலகத் தமிழர் பேரவையின் பேராளர் குழுவில் பங்குபற்றினர்.

உலகத் தமிழர் பேராளர் குழுவானது தெற்கு மற்றும் நடு ஆசியாவுக்கான ஐக்கிய அமெரிக்காவின் துணை அரசுச் செயலாளர் மாண்புமிகு றொபேட் பிளேக் அவர்களை 2011 மார்ச் 28, திங்கட்கிழமை அன்று வாசிங்ரன் நகரில் அமைந்துள்ள அரச திணைக்களத்தில் சந்தித்தது. துணைச் செயலாளருக்கும் உலகத் தமிழர் பேரவைக்குமிடையிலான இச்சந்திப்பை அமெரிக்கத் தமிழ் அரசியற் செயலவை ஒழுங்கு செய்திருந்தது.

உலகத் தமிழர் பேரவையானது, வடகிழக்கில் வாழும் தமிழ் மக்களின் இன்றைய இன்னல்களைச் சுட்டிக் காட்டியது. தமிழ் மக்களின் முக்கிய குறைகள் பற்றியும் அவர்களின் மனக்குறைகளைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. தமிழர் தேசியக் கூட்டமைப்பிடமிருந்து வந்த அண்மைய அறிக்கை பற்றியும் துணைச்செயலாளருடனும் அவரது குழுவினரோடும் கலந்துரையாடப்பட்டது.

-முற்றுப் பெற்றது-

===================

Issued for Immediate Release

STATEMENT

March 30th 2011

Global Tamil Forum meets with US Assistant Secretary Blake

Global Tamil Forum met with US Assistant Secretary Blake as it continues to engage the Global community to bring focus to the resolution of the ethnic conflict in Sri Lanka. The GTF delegation lead by its President, Rev. Father S.J.Emmanuel (Germany) included President of the USTPAC, Dr. Elias Jeyarajah, Mrs. Grace Williams (USA) and Suren Surendiran (UK).

Representatives of the Global Tamil Forum, met with the United States Assistant Secretary of State for South and Central Asia, Honourable Robert Blake on Monday, 28 March 2011 at the U.S. State Department in Washington. The meeting between the Assistant Secretary and the GTF was organised by the United States Tamil Political Action Council (USTPAC).

The GTF highlighted the current plight of the Tamil people in the North-East. Key concerns of the Tamil people and ways of addressing their grievances were discussed at length. The recent communication from the Tamil National Alliance (TNA) was also shared with Assistant Secretary Blake and his team.

-ENDS-

http://globaltamilforum.org/gtf/content/media-coverage

Please help GTF initiatives...

http://globaltamilforum.org/gtf/content/donate

Edited by akootha

புதிய நம்பிக்கை ஒளியைத் தோற்றுவித்துள்ள உலகத் தமிழர் பேரவை!

கடந்த திங்கட்கிழமை, உலகத் தமிழர் பேரவை அமெரிக்கத் துணைச்செயலாளர் றொர்பேட் பிளேக்கை சந்தித்துப் பேசியது, ஈழத் தமிழர்கள் மத்தியில் புதியதொரு நம்பிக்கை ஒளியைத் தோற்றுவித்துள்ளது. இந்தச் சந்திப்பு, அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் உள்ள அரசதிணைக்களத்தில் இடம்பெற்றுள்ளது.

உலகத் தமிழர் பேரவைத் தலைவர் வண. சீ.யோ. இமானுவேல் அடிகளாரின் தலைமையிலான குழுவில் அதன் பேச்சாளர் திரு. சுரேன் சுரேந்திரன் மற்றும் அமெரிக்கத் தமிழ் அரசியற் செயலவைத் தலைவர் டாக்டர் எலியாஸ் ஜெயராஜா, திருமதி கிறேஸ் விலியம்ஸ் ஆகியோர் பங்குபற்றினர்.

இச்சந்திப்பை அமெரிக்கத் தமிழ்அரசியற் செயலவை ஒழுங்கு செய்திருந்தது.

திரு. றொபேர்ட் பிளேக் அவாகளுடனான இந்தச் சந்திப்பின்போது, உலகத் தமிழர் பேரவையினர் தமிழீழ மக்கள் எதிர்கொண்ட பெரழிவுகள், சிங்கள அரசு மேற்கொண்ட போர்க் குற்றம், தற்போதும் தொடரும் ஈழத் தமிழர்களது அவலங்கள், படுகொலைகள், அச்சுறுத்தல்கள், தமிழர்களது பிரதேசம் மீதான சிங்கள அக்கிரமிப்பு போன்ற பல்வேறு விடயங்களும் எடுத்துக் கூறப்பட்டது. இதுவரை வெளிவராத சிங்கள தேசத்தின் போர்க் குற்ற சாட்சியங்களும் திரு. றொபேர்ட் பிளேக் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

அமெரிக்கத் துணைச்செயலாளர் றொர்பேட் பிளேக்குடனான சந்திப்பின் பின்னர் உலகத் தமிழர் பேரவையினர் ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளனர். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயல் திறனற்ற நடவடிக்கைகளினாலும், பிளவுகளாலும் மன்ச் சோர்வுக்குள் தள்ளப்பட்டிருந்த புலம்பெயர் தமிழர்களுக்கு உலகத் தமிழர் பேரவையின் தற்போதைய வேகமான நகர்வுகள் புதிய நம்பிக்கைகளை உருவாக்கியுள்ளது.

http://www.eutamil.com/?p=23449

தனிநாட்டுக் கோரிக்கையை வலியுறுத்தவில்லை – எஸ்.ஜே. இம்மானுவேல் அடிகளார்

அமெரிக்காவின் மத்திய-தெற்காசிய விவகாரங்களுக்கான துணை இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ.பிளேக்கிடம் தனிநாட்டுக் கோரிக்கை முன்வைக்கவில்லை என, உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வணக்கத்திற்குரிய எஸ்.ஜே. இம்மானுவேல் அடிகளார் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவைத் தளமாகக்கொண்ட ஊடகம் ஒன்றிற்கு செவ்வி வழங்கிய அடிகளார், தனிநாட்டுக் கோரிக்கை என்ற முழக்கத்தை முன்வைத்தே தமிழ் மக்களின் உரிமை பற்றிய பேச்சுக்களை மேற்குலகம் நிராகரித்து வந்திருப்பதால், அதனை இந்தப் பேச்சில் தவிர்த்தாகக் கூறினார்.

மாறாக தமிழ் மக்களிற்கான தீர்வுகள் அனைத்தையும் மேசையில் வைத்து, அது பற்றி ஆராய்வோம் என்ற முன்மொழிவை தாம் கூறியதாகவும், உலகத் தமிழர் பேரவை கூறிய கருத்துக்களை பிளேக் நீண்ட நேரம் செவி மடுத்ததாகவும் கூறினார். அதேநேரம், ஆசியாவின் புவிசார் அரசியல் சூழலை அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் தமிழ் மக்களை மையமாக வைத்து நகர்த்த முற்படும் அபாயம் காணப்படுவதை ஏற்றுக்கொண்ட அடிகளார், தமிழ் மக்கள் தமது அடிப்படைக் கோட்பாடுகளை மனதில் வைத்து மிக அவதானமாக வழிநடக்க வேண்டும் எனக் கூறினார்.

இந்தியா பற்றி தெரிவித்த அவர், முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் எமது உறவுகள் பலர் படுகொலை செய்யப்பட்டதன் அடிப்படையில் இந்தியா மீது சாதாரண தமிழ் மக்கள் போன்று தனக்கும் கோபம் இருக்கின்ற போதிலும், இந்தியாவை மீறி, இந்தியாவுடன் பேசாது தமிழ் மக்களிற்கான தீர்வு பற்றி வலியுறுத்துவது கடினம் எனவும் கூறினார். உலகத் தமிழர் பேரவை உட்பட புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள் அனைத்தும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டிய அவசியத்தை வலியுறுத்திய இம்மானுவேல் அடிகளார், தாயகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் அடிப்படைக் கோட்பாடுகளை மனதில் வைத்து, அதேநேரம் மிக அவதானமாக நடந்துகொள்ளும் நிலை காணப்படுவதையும் சுட்டிக்காட்டினார்.

சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்சவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் நேருக்குநேர் அமர்ந்து அரசியல் தீர்வு பற்றிய பேச்சில் ஈடுபட்டால் மட்டுமே ஆக்கபூர்வமான முடிவுகள் எட்டப்படும் என அவர் கூறினார். இதேவேளை, அனைத்தும் முடிந்து விட்டது என்ற அடிபணிவு மனநிலையில் இருந்து புலம்பெயர்ந்த மக்கள் விடுபட்டு, தமிழ் மக்களின் இலக்குகள் நோக்கிச் செல்ல, அனைவரும் பங்காளிகளாகி பணியாற்ற வேண்டும் எனவும் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வணக்கத்திற்குரிய எஸ்.ஜே.இம்மானுவேல் அடிகளார் வலியுறுத்தினார்.

http://www.eelamdaily.com/news/366/57//d,full_news.aspx

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதி மற்றும் ஆயுத பரம்பலை கட்டுப்படுத்தும் சர்வதேச நடவடிக்கைகள், கடந்த 2006ம் ஆண்டே ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாக த ஹிந்து பத்திரிகை தெரிவித்துள்ளது.

சமாதான உடன்படிக்கை மீறப்பட்டு, ஏறத்தாழ யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட காலப்பகுதியில், அமெரிக்காவுடன் இலங்கை கூட்டிணைந்து, விடுதலைப் புலிகளின் நிதி சேகரிப்பு மற்றும் ஆயுதக் கொள்வனவுகளை இடைநிறுத்தும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

த ஹிந்து பத்திரிகையின் ஊடாக விக்கிலீக்ஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இதற்காக அமெரிக்க சர்வதேச தொடர்பு குழுக்கள் இரண்டை நியமித்திருந்ததாகவும், அந்த குழுக்கள் இரண்டு நோக்கங்களின் பொருட்டு செயற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஒன்று விடுதலைப் புலிகளின் நிதி சேகரிப்பை முழுமையாக கட்டுப்படுத்துவது, மற்றொன்று விடுதலைப் புலிகள் ஆயுதக் கொள்வனவில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது என்பதே அந்த நோக்கங்களாகும்.

இந்த யோசனையை வரவேற்ற இலங்கை அரசாங்கம், இதன் செயற்படுத்துனராக இந்தியா செயல்படுவதை விரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் இந்த யோசனையில் இணைந்துக் கொள்ள இந்தியாவுக்கு அமெரிக்க அழுத்தம் கொடுக்க வேண்டும் என மகிந்த ராஜபக்ஷ் அரசாங்கம் அமெரிக்காவை கோரியிருந்தது

முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை இலக்கு வைத்து விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தற்கொலைத் தாக்குதலைத் தொடர்ந்து, அமெரிக்க தூதுவர் லன்ஸ்டீட், அமெரிக்க ராஜாங்க திணைக்களத்துக்கு அனுப்பிய ரகசிய தகவல் தந்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தந்தி 2006ம் ஆண்டு மே மாதம் 3ம் திகதி அனுப்பப்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளதாக த ஹிந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

.. ஓகோ! ... அப்ப அமெரிக்காவுடனும் கதைக்ககூடாது????? ... அப்ப யாருடன் கதைக்கலாம்???????????? ...... யார்தான் எம்மை அழிக்க சிங்களத்துடன் கை கோர்க்கவில்லை??????????

.. ஓகோ! ... அப்ப அமெரிக்காவுடனும் கதைக்ககூடாது????? ... அப்ப யாருடன் கதைக்கலாம்???????????? ...... யார்தான் எம்மை அழிக்க சிங்களத்துடன் கை கோர்க்கவில்லை??????????

அண்ணா… கொள்கையை விட்டுக் கொடுக்காமல் எல்லோருடனும் பேசலாம். அதில் எந்தத் தவறும் இல்லை. இவர்கள் முதலில் நோர்வேயோடு பேசி அதன் பிறகு இந்தியாவோடு பேசி அதன்பிறகு தான் அமெரிக்காவுடன் பேசியிருக்கிறார்கள்.அண்மையில் சோனியா காந்தியுடன் பிரித்தானியாவில் நடந்த சந்திப்பு தற்செயலானது அல்ல. அது பல நீண்ட சந்திப்புக்களின் தொடர்ச்சியாகும்.புலம்பெயாந்த தமிழர்களின் றியாச்சனை பார்ப்பற்காகத் தான் இந்தச் சந்திப்பு பற்றிய செய்தி ஊடகங்களில் முதன்மை படுத்தப்பட்டது.இந்த சந்திப்பை மக்கள் குறை கூறியவுடன் அதை சந்தித்தவரின் தனிப்பட்ட தவறாக காட்டி முடிமறைக்க முயற்பட்டது தான் ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.

அதேபோல யுத்த குற்ற விசாரணையை முன்னெடுக்கும் விடயத்தை தாங்கள் முதன்மைப்படுத்தமாட்டோம். அவ்வாறு செய்தால் அது சிறீலங்கா அரசுடன் தாங்கள் இணைந்து பணியாற்ற தடையாக இருக்கும் என்று அமெரிக்கா தெரிவித்ததையும் இவர்கள் பகிரங்கப்படுத்தியிருக்க வேண்டும்

இந்தியா தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் புலம்பெயர்ந்த தமிழர் அமைப்பு ஆகியொரை இணைத்து அமெரிக்காவின் உதவியோடு தான் விரும்பிய தீர்வுத் திட்டத்தை இலங்கையில் கொண்டுவர முயற்சிக்கிறது.

அது சரியா பிழையா அல்லதல்ல பிரச்சனை. மக்களுக்கு இனியும் பொய் சொல்லக் கூடாது என்பது தான் முக்கியம்

- எம்மினத்தை பொறுத்தவரையில், தாயகத்தில் உள்ள மக்களுக்கும், எமக்காக குரல் கொடுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் ஆதரவு தர வேண்டியது புலம் பெயர் மக்களின் இன்றைய கடமையாக உள்ளது

- தாயகத்தில் இருந்து கொண்டு சர்வதேச உறவுகளை ஏற்படுத்துவது என்பது முடியாத நிலையில் புலம் பெயர் அமைப்புக்கள் அதை செய்யவேண்டும்

- அந்த வகையில் மக்களால் தெரிவி செய்யப்பட்ட நாடு கடந்த அரசும், பன்னாட்டு மக்கள் அமைப்பை கொண்ட உலகத்தமிழர் பேரவையும் முன்னெடுக்கின்றன

- இன்றைய எமது நிலையில், ஒன்றுக்கு மேற்பட்ட அமைப்பு ஈடுபடுவது பல வழிகளில் நன்மை என தெரிகின்றது

நாம் அவர்களுடன் தொடர்பு ஏற்படுத்துவது என்பது முதலில் ஒரு கடினமான விடயம். அமெரிக்க பிரதிநிதிகளுடன் கதைப்பது என்பது நாம் எனது கொள்கைகளை முற்றாக விட்டுக்கொடுப்பது என ஆகாது. சிங்களம், இந்தியா என்பன நிச்சயம் எதிர்ப்புக்களை தெரிவித்திருக்கும். அதனுடன், இந்த இரு நாடுகளும் "என்ன இவர்கள் உண்மையில் கதைத்திருப்பார்கள்" என நிச்சயம் "கவலைப்படும்". இந்த உறவுகளை முடியடிக்க முயலும்.

- மேலும் கதைத்தவர்கள் புலிகளின் தடையை ( சுரேன் சுரேந்திரன் புலி என சிங்களம் சொல்லிவருகின்றது) நீக்கச்சொல்லி கேட்டிருக்கலாம்

- இல்லை அமெரிக்கா சிங்களத்தின் மீது, அதன் சீன உறவை குறைக்க சில தேவைகளை எம்மை நாடி வந்திருக்கலாம்

அமெரிக்காவின் தேவைகளுக்கு ஏற்ப நாம் எமது தேவைகளை பெற வேண்டியது இன்றைய இராசதந்திரமாக களத்தின் தேவையாக உள்ளது.

இவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம், ஆதரவு கொடுப்பது எமது கடமை. எமது மக்களுக்கு ஒரு விடிவை பெற்றுத்தர இதயசுத்தியுடன் கடமையாற்றுவது இந்த பிரதிநிகளின் கடமை.

அமெரிக்க வெளியுறவுத்துறையின் உதவிச் செயலர் ராபர்ட் பிளேக்குடன் உலகத் தமிழர் பேரவை மற்றும் பிரிட்டன் தமிழர் பேரவையைச் சேர்ந்த பிரதிநிதிகள் சந்தித்துப் பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இச்சந்திப்பின்போது, போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு இலங்கையை சம்மதிக்க வைக்க முயற்சிகள் எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்காக, ஐநா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கை விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், சர்வதேச விசாரணை தொடர்பாக அமெரிக்க உதவிச் செயலரை தமிழர் அமைப்பினர் சந்தித்துப் பேசியுள்ளது இலங்கை அரசு தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக இணையதளத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.alaikal.com/news/?p=63587

சர்வதேச அரசியல் நகர்வில் உலகத்தமிழர் பேரவை – இதயச்சந்திரன்

உலகத் தமிழர் பேரவையின் (GTF) பேராளர்கள், தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான துணை இராஜாங்கச் செயலாளர் றொபேர்ட் ஓ பிளேக்குடன் அமெரிக்காவில் சந்திப்பொன்றினை நடத்தியுள்ளனர் எனத் தெரியவருகிறது.

சென்ற மாதம் 28 ஆம் திகதி, அமெரிக்காவிலுள்ள பொடெஸ்ரா குழுமத்தின் (The Podesta group) பரப்புரைக் காரியாலயத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் இச்சந்திப்பில், உலகத்தமிழர் பேரவையின் சார்பில் அதன் தலைவர் வண. பிதா சீ.யோ. இம்மானுவெல் அடிகளார், அமெரிக்க தமிழ் அரசியல் செயலவை தலைவர் எலியஸ் ஜெயராசா, திருமதி கிறேஸ் புஸ்பராணி வில்லியம்ஸ் மற்றும் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஏ.ஈ.ஐ. (American Enterprise Institute) என்கிற அமைப்பின் உப தலைவியும் தூர கிழக்கு மற்றும் தெற்கு ஆசிய வெளியுறவுக் கொள்கைக்கான அமெரிக்க செனட் குழுவில் 10 வருடங்களாக அங்கம் வகித்த டானியேல் ப்ளேட்கா [DANIELLE PLETKA] அம்மையாரால் ஜீ.ரி.எவ் - பிளேக் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இக்கலந்துரையாடலில் இலங்கையின் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் வாழும் மக்களின் அவல நிலை மற்றும் தமிழ்த் தேசியக கூட்டமைப்பு வட்டாரங்களிலிருந்து கிடைக்கப் பெற்ற அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டதாக உலகத் தமிழர் பேரவையின் ஊடக அறிக்கை தெரிவிக்கின்றது. இது குறித்து, தொலைக்காட்சி நேர்காணலொன்றில் கருத்துத் தெரிவித்த பேரவையின் தலைவர் இம்மானுவல் அடிகளார், துணை இராஜாங்கச் செயலர் றொபேர்ட் ஓ பிளேக்கை சந்திக்கு முன்பாக, கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோருடன் தாம் கலந்துரையாடியதாகக் கூறியிருந்தார்.

மக்களின் அவலநிலை, கூட்டமைப்பின் அறிக்கை என்பதற்கும் அப்பால், ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூனால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய போர் குற்ற விசõரணைக்கான ஆலோசனைக் குழுவின் செயற்பாடுகள் பற்றியும் பேசப்பட்டுள்ளது.

இலங்கை அரசால் உருவாக்கப்பட்டுள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடுகள், சர்வதேச மனித உரிமை மற்றும் நீதி குறித்த நியமங்களுக்கு இசைவாகவும் பொருந்தக் கூடிய வகையிலும் அமையாவிட்டால், சுயாதீன அனைத்துலக விசாரணையொன்றின் அவசியம் வலியுறுத்தப்படுமென றொபேர்ட் ஓ பிளேக் அண்மையில் வெளிப்படுத்திய கருத்தினை கவனிக்க வேண்டும். காத்திரமான புதிய போர்க் குற்ற ஆவணங்கள் தமக்குக் கிடைத்திருக்கின்றன என்கிற செய்தியும், பிளேக்கிடம் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் நெருங்கும் இவ்வேளையில் புதிய சான்றுகளும் உலகின் முன் பார்வைக்கு வைக்கப்படக் கூடிய சாத்தியப்பாடுகள் அதிகமிருப்பதை அமெரிக்காவும் புரிந்து கொள்ளும்.

விமர்சனத்திற்குள்ளான, இந்திய காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி உடனான உலகத் தமிழர் பேரவையினரின் சந்திப்பும் அதையடுத்து அமெரிக்க அரசின் உயர் நிலை அதிகாரியான றொபேர்ட் ஓ பிளேக்குடன் நடத்திய பிரத்தியேக சந்திப்பும் ஒரே நிகழ்ச்சி நிரலிற்குள் உள்ளடக்கப்பட்ட சம்பவங்கள் போல் தோன்றுகின்றன.

பிரித்தானியாவில் நடைபெற்ற உலக தமிழர் பேரவையின் அறிமுக நிகழ்வில் அன்றைய பிரதமர் கோடன் பிறவுண் கலந்து கொண்டமையும் [?], நீண்ட கால இடைவெளியின் பின்னர் இந்திய அரசியலின் முதன்மைச் சக்தியாக விளங்கும் சோனியா காந்தி உடன் மேற்கொள்ளப்பட்ட உத்தியோகபூர்வமற்ற 11 நிமிட சந்திப்பும், இன்னமும் மத்திய கிழக்கில் ஐரோப்பாவில் தென் கிழக்கு ஆசியாவில் படைத்துறை மற்றும் பொருண்மிய ஆதிக்கத்தில் தீர்மானகரமான இயங்கு சக்தியாக நீடிக்கும் அமெரிக்காவின் ஆசியாவிற்கான பிரதிநிதி றொபேர்ட் ஓ பிளேக்குடன் அண்மையில் சந்தித்த விவகாரமும், உற்று நோக்கப்பட வேண்டும்.

தெற்காசிய அரசியலில் இந்தியாவின் வகி பாகத்தை நிராகரிக்க விரும்பாத மேற்குலகம், இலங்கை விவகாரத்தில் அக்கறை செலுத்தும் சக்திகள், அப்பிராந்தியம் குறித்தான இந்திய அமெரிக்க பொதுத் தளத்தினுள் இசைந்து பயணிக்க வேண்டுமென விரும்புகிறது.

புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழ் மக்களைப் பொறுத்தவரை, ஐ.நா. சபையால் முன்னெடுக்கப்படும் போர்க் குற்ற விசாரணை பற்றி அதிக கரிசனை கொள்வதோடு, போரினால் பாதிப்புற்ற தாயக மக்களின் இயல்பு வாழ்க்கை மீட்சி குறித்து சர்வதேச அழுத்தமொன்றினை எதிர்பார்க்கின்றார்கள். இருப்பினும் மேற்குலகும் இந்தியாவும் இறுதிப் போரில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பாக, சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டுமென்பதில் நழுவல் போக்கினைக் கடைப்பிடித்து விடுமோவென்கிற சந்தேகமும் புலம்பெயர் சமூகத்திடம் உள்ளது.

2005 இல் உருவாக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றிணைந்த பாதுகாப்பு சங்கத்தினால் [European Corporate Security Association] கடந்த மார்ச் 23 ஆம் திகதியன்று பிரசில்ஸ் இல் கூட்டப்பட்ட கருத்தரங்கில் உரையாற்றிய ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கைத் தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க அவர்கள், புலம்பெயர் ஈழத் தமிழ் அமைப்புக்கள் மீது பலத்த கண்டனங்களை முன்வைத்துள்ளார்.

அதாவது இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பில் பிரிவினையை விரும்பும் புலம்பெயர் தமிழ் சமூகமா அல்லது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வசிக்கும் அரசுடன் இணைந்து செயலாற்றும் தமிழர்களா, தாயக மக்களுக்காக பேசும் உரித்துடையவர்கள் என்பது தொடர்பாக மேற்குலகம் முடிவெடுக்கும் காலம் அண்மித்து விட்டதாக ரவி நாத் ஆரியசிங்கா அக் கருத்தரங்கில் கேள்வி எழுப்பியுள்ளார். உலகத் தமிழர் பேரவையை புலம்பெயர் ஈழத் தமிழ் மக்களின் சார்பாகப் பேசும் வல்லமை கொண்ட தலைமைச் சக்தியாக மேற்குலகம் ஏற்றுக் கொண்டு விட்டதென சிங்களம் கணிப்பிடுவதை ஆரியசிங்கவின் சீற்றம் எடுத்துக் காட்டுகிறது.

இவை தவிர புலம்பெயர் தேசத்தில் விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்புக்களை வழி நடத்தும் நெடியவன் அதன் பிரசாரப் பொறுப்பாளர் ஜெயச்சந்திரன் (தமிழ் நெற் ஆசிரியரைக் குறிப்பிடுகின்றார்) மற்றும் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இம்மானுவல் அடிகளார் ஆகியோர், ஐரோப்பாவில் இருந்து செயற்படுவதாக குறிப்பிடும் தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க, நாடு

கடந்த தமிழீழ அரசாங்கம் இரண்டு அணிகளாக பிளவுற்று இருப்பதாகவும் கூறுகின்றார்.

தமிழ் மக்களின் பரப்புரைகளால் இலங்கையின் அபிவிருத்திக்கான பொருளõதார உதவிகளை ஐரோப்பிய நாடுகள் இடை நிறுத்தி இருப்பதோடு, விடுதலைப் புலிகளுக்குச் சார்பான புலம்பெயர் முன்னணி அமைப்புக்கள், இலங்கையின் அரசியல் ஸ்திரத்தன்மையில் சிதைவினை ஏற்படுத்துவதாகவும் குற்றம் சுமத்துகின்றார்.

ஆகவே ஈழத்தமிழர்களுக்கும் மேற்குலக அரசுகளுக்குமிடையே பாரிய இடைவெளியை உருவாக்க ஆரியசிங்க பெரிய அளவில் முயன்றிருக்கிறார் என்பதையே இப் பேச்சுக்கள் உணர்த்துகின்றன.ரவிநாத் ஆரியசிங்க போன்று, சர்வதேச விவகாரம் மற்றும் பயங்கரவாத தடுப்பு தொடர்பான ஆய்வுகளில் ஈடுபடும் விரிவுரையாளர் றோகான் குணரெட்னாவும் புதிய அறிவுரைகளை இலங்கை அரசிற்கு வழங்கி வருவதையும் கவனிக்க வேண்டும்.

மேற்கு நாடுகளிலுள்ள ஈழத் தமிழர் அமைப்புக்களைக் கட்டுபபடுத்தும் படி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை ரவிநாத் ஆரியசிங்க வலியுறுத்தும் அதேவேளை, உலகளவில் அதிகளவான அரச சார்பற்ற நிறுவனங்களை உருவாக்கி, மனித உரிமை அமைப்புக்களினூடாக புலம்பெயர் ஈழத்தமிழ் அமைப்புக்கள் மேற்கொள்ளும் அரசிற்கெதிரான போராட்டங்களை முறியடிக்கவேண்டுமென இலங்கை ஆட்சியாளர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றார் றோகான் குணரட்ன.

அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் (NGO) என்கிற போர்வையில் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களுக்குள் ஊடுருவ முடியுமென்பதையே இவர் சுட்டிக் காட்டுகின்றார். இலங்கையில் நடைபெற்ற இன அழிப்பு மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து காட்டமான விமர்சனங்களை முன்வைக்கும் அனைத்துலக மன்னிப்புச் சபை, மனித உரிமைக் கண்காணிப்பகம், சர்வதேச நெருக்கடிக் குழு (International Crisis Group) போன்றவற்றையே றோகான் குணரெட்ன குறி வைக்கிறார் என்பதைப் புரிந்து கொள்வது இலகுவானது.

இவை தவிர, புலம்பெயர் தமிழ் மக்களுடன் தொடர்பினை ஏற்படுத்த வேறொரு தரப்புத் தேவையில்லையென நோர்வே அபிவிருத்தி அமைச்சர் எரிக்சொல்ஹெய்ம் அவர்களை மறைமுகமாகச் சாடும் ஜாதிக ஹெல உறுமையைச் சார்ந்த பிரதியமைச்சர் சம்பிக்க ரணவக்க, வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழ் மக்களுக்கும் அரசிற்குமிடையே ஏற்கனவே சந்திப்புக்களும் பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்று வருவதாகக் கூறுகின்றார்.

ஆகவே அரச தரப்பினர் முன்னெடுக்கும் இவ்வாறான பரப்புரைகள், ஈழத்தமிழ்ச் சமூகத்தை சர்வதேச அரங்கிலிருந்து தனிமைப்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சியாகவே பார்க்க வேண்டும். சிங்களத்தின் பார்வை, தற்போது உலகத் தமிழ் பேரவையின் செயற்பாடுகளை நோக்கிக் குவிந்திருப்பதைக் காணலாம்.

போர்க் குற்ற விசாரணைகளைத் தீவிரப்படுத்த பேரவை மேற்கொள்ளும் நகர்வுகள் யாவும், ஆட்சியாளர்களின் அதிகார இருப்பிற்கு சவாலாக இருக்கப் போகிறது. புவிசார் அரசியலில் ஏற்படும் சடுதியான மாற்றங்களை உள்வாங்கி, சரியான இராஜதந்திர நகர்வுகளை பேரவை மேற்கொள்ளுமாவென்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

நன்றி: வீரகேசரி.

தனிநாட்டுக் கோரிக்கையை வலியுறுத்தவில்லை – எஸ்.ஜே. இம்மானுவேல் அடிகளார்

அமெரிக்காவின் மத்திய-தெற்காசிய விவகாரங்களுக்கான துணை இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ.பிளேக்கிடம் தனிநாட்டுக் கோரிக்கை முன்வைக்கவில்லை என, உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வணக்கத்திற்குரிய எஸ்.ஜே. இம்மானுவேல் அடிகளார் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவைத் தளமாகக்கொண்ட ஊடகம் ஒன்றிற்கு செவ்வி வழங்கிய அடிகளார், தனிநாட்டுக் கோரிக்கை என்ற முழக்கத்தை முன்வைத்தே தமிழ் மக்களின் உரிமை பற்றிய பேச்சுக்களை மேற்குலகம் நிராகரித்து வந்திருப்பதால், அதனை இந்தப் பேச்சில் தவிர்த்தாகக் கூறினார்.

மாறாக தமிழ் மக்களிற்கான தீர்வுகள் அனைத்தையும் மேசையில் வைத்து, அது பற்றி ஆராய்வோம் என்ற முன்மொழிவை தாம் கூறியதாகவும், உலகத் தமிழர் பேரவை கூறிய கருத்துக்களை பிளேக் நீண்ட நேரம் செவி மடுத்ததாகவும் கூறினார். அதேநேரம், ஆசியாவின் புவிசார் அரசியல் சூழலை அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் தமிழ் மக்களை மையமாக வைத்து நகர்த்த முற்படும் அபாயம் காணப்படுவதை ஏற்றுக்கொண்ட அடிகளார், தமிழ் மக்கள் தமது அடிப்படைக் கோட்பாடுகளை மனதில் வைத்து மிக அவதானமாக வழிநடக்க வேண்டும் எனக் கூறினார்.

இந்தியா பற்றி தெரிவித்த அவர், முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் எமது உறவுகள் பலர் படுகொலை செய்யப்பட்டதன் அடிப்படையில் இந்தியா மீது சாதாரண தமிழ் மக்கள் போன்று தனக்கும் கோபம் இருக்கின்ற போதிலும், இந்தியாவை மீறி, இந்தியாவுடன் பேசாது தமிழ் மக்களிற்கான தீர்வு பற்றி வலியுறுத்துவது கடினம் எனவும் கூறினார். உலகத் தமிழர் பேரவை உட்பட புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள் அனைத்தும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டிய அவசியத்தை வலியுறுத்திய இம்மானுவேல் அடிகளார், தாயகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் அடிப்படைக் கோட்பாடுகளை மனதில் வைத்து, அதேநேரம் மிக அவதானமாக நடந்துகொள்ளும் நிலை காணப்படுவதையும் சுட்டிக்காட்டினார்.

சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்சவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் நேருக்குநேர் அமர்ந்து அரசியல் தீர்வு பற்றிய பேச்சில் ஈடுபட்டால் மட்டுமே ஆக்கபூர்வமான முடிவுகள் எட்டப்படும் என அவர் கூறினார். இதேவேளை, அனைத்தும் முடிந்து விட்டது என்ற அடிபணிவு மனநிலையில் இருந்து புலம்பெயர்ந்த மக்கள் விடுபட்டு, தமிழ் மக்களின் இலக்குகள் நோக்கிச் செல்ல, அனைவரும் பங்காளிகளாகி பணியாற்ற வேண்டும் எனவும் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வணக்கத்திற்குரிய எஸ்.ஜே.இம்மானுவேல் அடிகளார் வலியுறுத்தினார்.

http://www.eelamdaily.com/news/366/57//d,full_news.aspx

இம்மானுவேல் அடிகளாரின் கருத்துக்கள் பலருக்கு கோபத்தை வரவைக்கப் போகின்றதே. இந்திய அணி விளையாடும் கிரிக்கட்டையே பார்க்க விரும்பாத பலரால் இந்தியாவுடன் பேசாமல் எதுவும் நடக்காது என அடிகளார் கூறியிருப்பதை எப்படி எடுத்துக்கொள்ள முடியும்?

தவிர, ஸ்ரீலங்கா ஜனாதிபதியும் கூட்டமைப்பின் சம்மந்தரும் நேருக்குநேர் அமர்ந்து அரசியல் பேசினால்தான் ஆக்கபூர்வமான முடிவுகள் எட்டப்படும் என்றுவேறு கூறியிருக்கிறார்.

சம்மந்தரோ, புலிகளுக்கும் எமக்கும் ஒட்டுமில்லை உறவுமில்லை என்று வெளிப்படையாக அறிக்கை விடுகிறார். ஸ்ரீலங்கா அரசுடன் இணைந்து அபிவிருத்தித் திட்டங்களைத் தமது கட்சி முன்னெடுக்கும் என்றும் கூறுகின்றார். அவரது கட்சி எம்.பி.க்கள் சிங்கள அமைச்சர்கள் மற்றும் டக்ளஸ் தேவானந்தாவுடன் ஒரே மேடையில் தோன்றி அபிவிருத்தித் திட்டங்களைத் தொடக்கி வைக்கின்றனர்!!

இதை இணக்க அரசியல் என்று கூறலாமா? அல்லது, கிட்டத்தட்ட இணக்க அரசியல் என்று கூறலாமா? (இணக்க அரசியல் என்ற சொல்லை யார் அன்றுமுதல் உச்சரிப்பது?)

அல்லது இப்படியும் கூறலாமா? ”உஷ்... வெளியே சொல்லிப்போடாதைங்கோ... சிங்களவனை ஏமாற்ற வேலை நடக்குது. எல்லாம் கிடைத்த பிறகு... ஹையா, நாங்கள் முன்பு சொன்னது சும்ம்ம்மா!”

எப்படியோ... அடிகளார் கூறுவது பலருக்குப் பிடிக்கப் போவதில்லை. ஈழமுரசு ஏற்கனவே உலகத் தமிழர் பேரவைக்கு எதிராகக் கட்டுரை போட்டுவிட்டது. இனி என்னவெல்லாம் வரப்போகிறதோ!

தமிழர் பேரவையின் சந்திப்பின் எதிரொலி - ஒபாமாவின் செய்தியுடன் இலங்கை வருகிறார் பிளேக்

இலங்கைக்கு இம்மாத இறுதியில் வரும் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் துணை வெளிவிவகாரச் செய லாளர் றொபேர்ட் ஓ பிளேக், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் கருத்தொனியிலான கடிதத்துடன் மகிந்த ராஜபக்சவைச் சந்திப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த வாரத்தில் மிக முக்கிய நிகழ்வாக உலகத் தமிழர் பேரவைக்கும் அமெரிக்க அரசுக்குமிடையில் சந்திப்பு இடம்பெற்றது. தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் துணை வெளிவிவகாரச் செயலாளர் றொபேர்ட் ஓ பிளேக் உலகத் தமிழர் பேரவையின் உயர்மட்ட உறுப்பினர்களை சந்தித்திருந்தார். 75 நிமிடங்கள் நீடித்த இந் சந்திப்பில் வடக்குக் கிழக்கில் தமிழ் மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள், போருக்குப் பின்னரான நிலை போன்றன தொடர்பில் ஆராயப்பட்டதாக உலகத் தமிழர் பேரவை தனது அறிக் கையில் தெரிவித்துள்ளது.

தமிழ்க் கட்சிகளுடன் இலங்கை அரசு மேற்கொண்டுவரும் பேச்சுக்கள் தொடர்பிலும் அங்கு விவாதிக்கப்பட்டிருந்தது. எனினும் போர் நிறைவடைந்த பின்னரும் அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி வருவது, அதனால் தமிழ் மக்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.போரின் போதும் அதன் பின்னரும் தமிழ் மக்கள் சந்தித்துவரும் பிரச்சினைகள் தொடர்பான தகவல்கள் அடங்கிய ஆவணங்களையும் உலகத் தமிழர் பேரவை பிளேக்கிடம் சமர்ப்பித்துள்ளது.

இச் சந்திப்பின் பின்னர் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் பிளேக் சில விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசுடன் பேச்சுக்கள் மேற்கொள்ளலாம் என எதிர்பார்க் கப்படுகிறது. ஒபாமா அரசின் மிகவும் காத்திரமான செய்தியை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு பிளேக் கொண்டு வரலாம். இந்த மாதம் இலங்கை வருவதாகவும் பிளேக் தெரிவித்துள்ளார். இரு வாரங்களுக்கு முன்னர் நியூயோர்க்கில் நடைபெற்ற ஆசிய அமைப்பினரின் கூட்டத்தில் பேசி பிளேக், இலங்கை தொடர்பில் கடும் தொனியில் பேசியிருந்ததாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=17884

America issues signals to SL via Wikileaks cables

There were reports in the media that the Sri Lanka (SL) Govt. was very concerned about the meeting that took place with the participation of the US State Dept. Assist. Secretary of the Bureau of South and Central Asian affairs ,Robert Blake, the Global Tamil Forum and the British Tamil forum. The principal reason for this concern was, this meeting was being convened in the interim while the report of the UN Panel appointed by UN Secretary Gen. Ban Ki Moon to investigate the SL war crime charges is about to be released.

It is reported that the Heads of the Global Tamil Forum prior to meeting Robert Blake had met Sonia Gandhi in London. At the discussions with Sonia, the Global Tamil forum has emphatically made a singular request: that is not to impede or obstruct the international investigation into the SL war crime charges. India is of course equipped with a number of devices to obstruct the investigation if it so desires. One of them is the closed door Diplomacy, exerting pressure on the Western countries including America not to launch the war crime investigations. The other is , India by its own intervention can defeat the resolution to decide upon whether war crime charges against SL shall be tried or not, when it is taken up at the UN security Council or at the UN human rights Council. The Global Tamil Forum specifically requested Sonia Gandhi not to stand in the way of such an investigation. If it is the policy decision of India not to support the war crime charges which are being levelled against SL, the Global Tamil Forum urged Sonia to remain silent. What was Sonia’s response to this request is unknown.

However, the view of the representatives of the Global Tamil Forum was, their meeting with Sonia was a success. At the meeting, Sonia had expressed that she is very concerned about the situation in Sri Lanka. When replying to evidence of breach of international law and crime against humanity , Sonia Gandhi had said, ‘ I have myself seen that video and we are very concerned’.

Whether the SL Govt. focused its attention on the meeting between Sonia Gandhi and the representatives of the Global Tamil Forum is obscure. Whether the SL President Mahinda Rajapaksa when he toured India to witness the world cup cricket match planned to meet Manmohan Singh, the Indian Prime Minister and hold discussions regarding the UN panel report and the war crime charges is also unclear. But , according to informed sources , there had been no Mahinda- Manmohan Singh meeting . The war crime report going to be released at about the time the Tamil Nadu State elections is close at hand has aggravated further SL’s concern and apprehensions. The UN panel report is also about to emerge out at the time of the Indian State elections when the Indian Opposition party is earnestly waiting to grab the opportunity to mount charges against Sonia Gandhi and her Govt. that they extended support to the SL Govt. to go ahead with the war . In case the report recommends an international investigation into the SL war crimes ,what policy decision India will take in that event will have a direct impact on the Tamil Nadu State elections. Presumably , Sonia stood by the SL Tamil people when she met the Global Tamil forum in London bearing in mind that the Tamil Nadu elections is round the corner.

When the Heads of the Global Tamil Forum and the British Tamil Forum met with Blake subsequent to their meeting with Sonia Gandhi , ‘The Hindu’ newspaper made a disclosure based on the Wikileaks cables which story none other had been able to reveal; that is , America with India’s support was engaged in an operation to dismantle and destroy the Int. chain which supplied arms to the Tamil Tigers. ‘The Hindu’ reported that via the Wikileaks cables it became known that this operation was commenced by America when the SL war broke out in 2006, and India had approved this operation.

‘The Hindu’ carried the following report in this regard :

‘Two International contact groups to check LTTE fund raising and arms purchases were initiated by the US concerted International action to curb fund raising and weapons procurement by the LTTE started in the first half of 2006 , around the time Sri Lanka ‘s fragile ceasefire broke down and all out war started . It was the United States that unveiled and initiated the plan to create two international contact groups , one each to move against fund raising and weapons procurement by the LTTE…..’

It is discernible from this that the prime reason for ‘The Hindu’ to publish this Wikileaks cable message at this point of time is probably to remind the SL Govt. that America and India contributed immensely to eradicate the Tamil Tiger terrorism. Through this cable message it is also evinced that but for America and India’s assistance, the SL Govt. could not have ever wiped out the Tamil Tiger terrorism. Likewise, that disclosure also reminds the SL Govt. that America and India supported SL because the latter promised to formulate a political solution to the Tamil people.

Hence, does this carry the implication that because SL Govt. has still not furnished a political solution as promised, it is creating room to deem the international war crime investigation clamored for by the Tamil Tiger Diaspora as fair and justifiable?

At any rate, Robert Blake is due to visit SL. The strong message, if any America is going to deliver to SL can be known after Blake’s visit.

http://print.dailymirror.lk/opinion1/40417.html

Testimony before the House Foreign Affairs Committee, Subcommittee on the Middle East and South Asia

Testimony

Robert O. Blake, Jr.

Assistant Secretary, Bureau of South and Central Asian AffairsWashington, DC

April 5, 2011

Chairman Chabot, members of the committee: Thank you for inviting me here to speak with you today about U.S. foreign policy priorities and needs in South Asia. I welcome this opportunity to share with you the breadth and importance of our strategic engagement in this ever-crucial part of the world.

The South Asia region that I cover consists of India, Nepal, Bangladesh, Sri Lanka, Bhutan and Maldives; Special Representative for Afghanistan and Pakistan Marc Grossman has primary responsibility for those two critical countries.

South Asia holds more than 1.4 billion people, nearly a quarter of the world’s population, and yet only about 2.5 percent of the world’s GDP. More than 50 percent of South Asians are under 25, and nearly three-quarters of them live on less than $2 per day.

This burgeoning, multi-ethnic, multi-religious region, anchored by the growing prosperity and global reach of India, plays an instrumental role in world affairs, international commerce, and global peace and security. Moreover, since 2008, democratically elected leaders govern all South Asian countries, an indication that India’s thriving democracy has served as a useful model in the region.

The United States seeks to deepen its strategic partnership with India, highlighted by President Obama’s recent visit to Mumbai and New Delhi in November 2010. Mirroring India’s economic and political dynamism, the entire region is in the midst of a positive trajectory towards prosperity and peace. The United States aims to bolster this regional progress by promoting greater integration, which can build ties that will reinforce democratic institutions, build economies, and enhance security.

I will first discuss our strategic partnership with India. I will then delve into India’s neighbors: Bangladesh’s economic and social growth, Sri Lanka’s recovery from a devastating civil war, Nepal’s attempt to bring its ongoing peace process to a successful conclusion, and the peaceful democratic transitions in Maldives and Bhutan.

Sri Lanka

Off the coast of southern India sits Sri Lanka, still recovering from the 26-year conflict with the LTTE.

Positioned directly on the shipping routes that carry petroleum products and other trade from the Gulf to East Asia, Sri Lanka remains of strategic interest to the U.S. An important contributor to global peacekeeping operations, Sri Lanka stands poised to be a capable and willing partner to effectively combat violent extremism, trafficking and piracy, and thereby help to ensure the maritime security of the region.

But the Government’s worrisome record on human rights, weakening of democratic institutions and practices, and the way in which it conducted the final months of its conflict against the Tamil Tigers hamper our ability to fully engage.

The Administration believes – and Congressional Appropriations language specifies – that our security cooperation, in many forms, should remain limited until progress has been made on fundamental human rights, democracy and governance issues, and the concrete steps necessary for a true and lasting national reconciliation.

The United States welcomed Sri Lanka’s establishment of their Lessons Learnt and Reconciliation Commission and its implementing body – the Inter Agency Advisory Committee. Sri Lanka also has taken some steps forward on reconciliation such as resettling the vast majority of the nearly 300,000 internally displaced persons at the end of the conflict, demining 5 million square meters, reducing the reach of High Security Zones, and hiring 335 Tamil-speaking police, and beginning a dialogue with the Tamil National Alliance but more needs to be done. We have urged Sri Lanka to take credible and meaningful steps towards accountability and have warned that a failure to do so is likely to generate pressure for an international commission.

Our assistance programs aim to increase post-conflict stability in the North of Sri Lanka by promoting reconciliation, enhancing local governance, building civil society capacity, increasing economic opportunities to those affected by conflict, and assisting the continued resettlement and reintegration of displaced persons.

http://www.state.gov/p/sca/rls/rmks/2011/160020.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.